Thursday, September 22, 2011

நிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. !

நிச்சயம் உங்களுக்கு சித்த தரிசனம் பெற வைக்கும் , ஒரு எளிய பயிற்சி முறை.. !

Posted On Sep 22, 2011,By Muthukumar


http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR5d0QpF7unkduc1BAn0BKpv5rukTa6mYJkkkxAHjGLA1tf9_H3E2_eD3fc

வாசக அன்பர்களுக்கு வணக்கம். இன்னைக்கு நாம கொஞ்சம் உருப்படியான விஷயத்தைப் பார்க்கப் போறோம். நம்மில் எல்லோருக்குமே ஒரு பழக்கம் இருக்கிறது. எதையுமே நாம உணர்ந்து , அனுபவிக்காதவரை - எந்த ஒரு விஷயத்தையும், நம்புறது கிடையாது. ரொம்ப நல்ல விஷயம்தான். சந்தேகமே இல்லை. கடவுள் விஷயத்திலும், நமக்கு இந்த எண்ணம் இருக்கு.


இந்த உலகத்திலே இன்னைக்கு இருக்கிற இரண்டு மாபெரும் கேள்விகள் என்ன தெரியுமா? உயிர் பிரிந்த பின் என்ன ஆகிறது? கடவுள் உண்மையா இல்லை பொய்யா? இந்த இரண்டு விஷயங்களையும் உறுதியாக கூற , எந்த விஞ்ஞானிகளும்  தயாராக இல்லை. அதனால் நாமும் , ஒரு பெரிய , குழப்பத்திலேயே இருந்து உழண்டு கிட்டு வர்றோம். அதே நேரத்தில் , இதைப் பற்றிய எந்த சிந்தனையும் இல்லாமல், நிம்மதியாக அவர் அவர் வேலையைப் பார்த்துக்கொண்டு , வாழ்க்கையை முடித்துக் கொள்பவர்களும் உண்டு. நல்ல விதமாக போறவரைக்கும் பிரச்னை இல்லை. எப்போ, நாம் நம்மோட வாழ்க்கையை முழுசா கண்ட்ரோல் பண்ண முடியும்னு தோணுதோ , அப்போ கடவுள் இருந்தா என்ன.. இல்லைனா என்ன..? நாம பாட்டுக்கு , நம்ம வேலையை பார்த்துக்கிட்டு போக வேண்டியதுதானே...


ஆனால், அப்படி இருக்க முடியுதா? முடியலை.. ! ஏன் ? நாம ஆசைப்படுறோம்.. நம்மாலே முடிஞ்சதுக்கும் தாண்டி, முடியாததுக்கும் சேர்த்து ஆசைப்படுறோம்.. ! அடுத்தவங்களைப் பார்த்து அவங்க கூட நம்ம நிலைமையை ஒப்பிட்டுப் பார்க்குறோம்.. அவங்க மாதிரி நாம ஆகணும்னு ஆசைப்படுறோம். நமக்கு இருக்கிற தகுதிக்கு , இன்னும் கொஞ்சம் பெட்டரா , நமக்கு கிடைச்சு இருக்கலாம்னு, எல்லா விஷயத்துலேயும் - பீல் பண்றோம். பொன், பொருள் கூட ஒரு பெரிய விஷயமா தெரியலைனா கூட, பெண் விஷயத்தில் அப்படியே கிளீன் போல்ட் ஆகிடுறோம். நல்லவன்கிற முக மூடி போட்டுக்கிட்டு ,  தப்பான விசயங்களுக்கு எப்போ வாய்ப்பு கிடைக்கும்னு ஏங்குறதே வாழ்க்கைன்னு ஆகிடுச்சு.  இதிலே ஆன்மீக போர்வைலே உலவுற ஆளுங்கதான் அதிகம். எங்கேயுமே போலித்தனம் !
பெரிய, பெரிய யோகி , துறவி, மடாதிபதிகளே இதுலே ஒன்னும் கிடையாது. நமக்கு வேற பாவம், விஸ்வாமித்திரர் பற்றி வேற அறிமுகப் படுத்தி விட்டாங்க. காமத்தைக் கட்டுபடுத்திட்டா அதை விட பெரிய விஷயம் எதுவுமே இல்லை.  ஆனா, ரொம்ப கஷ்டமான விஷயம்தான். முயற்சி பண்ணுவோம். மனுஷனுக்கும், மிருகங்களுக்கும் வித்தியாசம் இருக்கணும்னு நெனைச்சா, தனி மனித ஒழுக்கம் முக்கியம் தான். கடைசி , ஒரு நிமிட சபலம் கட்டுப் படுத்திட்டா கூட போதும். பின்னாலே வரக் கூடிய கேவலத்தை , அவமானத்தை வர விடாம பண்ணிடலாம். 


இதுக்கு , நீங்க என்ன பண்ணனும்? கடவுள் இருக்கிறாரா , இல்லையா னு ஒரு  நாம யோசிக்கும்போது - இரண்டு விஷயங்கள் யோசிக்க வேண்டியிருக்கு.  ஒன்னு , கடவுள் ஒருத்தர் இல்லைன்னு இருந்தா, தப்பு செய்யறவங்க எந்த காலத்துலேயும் அதை நிறுத்த வேண்டியதே இல்லை . அவங்க பாட்டுக்கு அதை தொடர்ந்து செஞ்சுக்கிட்டுத்தான் இருப்பாங்க. இல்லையா, கடவுள்னு ஒருத்தர் இருக்கிறார்னு வைச்சுப்போம். நாம செய்யற தப்புக்கு எல்லாம், தண்டனை உண்டுன்னு நெனைச்சா, மறுஜென்மம் உண்டுன்னு நம்புனா - தப்பு செய்யாமலாவது இருப்போம்.  இல்லை குறைச்சுப்போம்.. அதனாலே , இந்த இரண்டும் இருந்தா நல்லது. இருக்கிறதா நம்பிட்டுத்தான் போகலாமே.. அதனாலே உங்களுக்கு என்ன பெரிசா நஷ்டம்? ஒருவேளை , இருந்தா - நாம பண்ற புண்ணியத்துக்கு , பெரிய அளவுலே லாபம் தானே..!
சரி, இப்போ - இந்த ஜென்மத்துலே, நாம் பண்ணின பாவ புண்ணியத்துக்கு ஏற்ப , நமக்கு ஒரு சில விஷயங்கள் நடக்குது. இல்லை தவறுது. போன ஜென்மத்துலே நாம என்ன செஞ்சோம்னு தெரியாது, இல்லையா? ஐயா, சரி - நான் ஏதோ தப்பு செஞ்சுட்டேன் , அதை எப்படி சரி செய்றது? எப்படி தெரிஞ்சுக்கிறது..


அதுக்குத் தான் உங்களுக்கு - கடவுள் தேவைப்படுகிறார். அல்லது ஒரு குரு தேவைப்படுகிறார். ஆனா, நல்ல குரு கிடைக்கணும். இப்போ குரு ஸ்தானத்துலே இருக்கிற பெரிய, பெரிய மடாதிபதிகள் எல்லோருமே நல்லவங்களா  இருக்கிறது இல்லை. எதோ ஒரு சில சித்து வேலைகள் தெரிஞ்சு வைச்சுக்கிட்டு , நம்மளை ஆச்சரியப் படுத்தினாலும்,  அவங்களோட இன்னொரு முகம் பார்க்கிறப்போ - நாம அவங்களை விட எத்தனையோ மடங்கு மேல்னு தான் தோணுது இல்லையா?  நம்மளோட சொந்த அனுபவங்கள்னு பார்க்கிறப்போ - பெரிய பெரிய ஜோதிட மேதைகள், பிரசன்னம், ஆரூடம், நாடி ஜோதிடம், ஜீவ நாடி எல்லாமே ஒரு கட்டத்துலே - நம்பகத்தன்மை இல்லாமே,  சலிப்பு ஏற்படுத்தி விடுகிறது.  பல பேருக்கு அது பொருந்தி வந்தாக் கூட , நமக்குன்னு வர்றப்போ.. ??


அப்போ வேற வழி.. ஒரு வழி இருக்கு... முயற்சி பண்ணுங்க..


ஐயா , மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் - சுமார் நாற்பது ஆண்டு காலம் ஆன்மீக ஆராய்ச்சி செஞ்சு , ஒரு சில முறைகளை செஞ்சு பார்க்க சொல்றார். அது சம்பந்தமா , நாம நிறைய பகிர்ந்துக்கப் போறோம்.. அதுலே , ஒரு விஷயம் இன்னைக்கு முக்கியமா... !


சித்தர்களை நாம எல்லோருமே நம்புறோம்.. சில விஷயங்கள் நாம் கேளிவிப்பட்டவரையில்  மிகைப் படுத்துதல் போல தோன்றினாலும், அவங்க  இருந்தாங்க.. இன்னும் பலப்பல வகையில், தன்னை நம்பியவர்களுக்கு சித்தர்கள் உதவி செய்யறாங்க. இதை நாமே எல்லோருமே ஓரளவுக்கு ஒப்புக்கொள்கிறோம். அவங்கள்ளே யாரையாவது நமக்கு தொடர்பு ஏற்படுத்திக்கிட்டா, நமக்கு கர்ம வினைகள் சுத்தமா அழிஞ்சிடுமே.. அவங்களோட வழிகாட்டுதல் பெற , அவங்களை சந்திச்சு தொடர்பு ஏற்படுத்திகிட ஒரு அற்புதமான முறையை சொல்லியிருக்கிறார்.
 
பதினெட்டு சித்தர்கள்ளே ஒருவர், நம் முன்னோர்களில் ஒருவராக இருக்க கூடும். இயல்பாக , உங்களுக்கு யார் மேல் ஈடுபாடு வருகிறது என்று பாருங்கள். இவர்தான் நீங்கள் சந்திக்கவிருக்கிற சித்தர். தியானத்தில் ஒரு நிலையை அடைந்த பிறகு, உங்களுக்கு இது தெரிய வரும். ஞானக் கோவை என்னும் சித்தர்கள் பாடலைப் படித்தால், உங்களுக்கு யாரேனும் ஒரு சித்தர் மேல் ஈடுபாடு வரும். அவர்தான் , உங்கள் ஜென்ம விமோச்சகர் .

 

பதினெட்டு வயதுக்கு மேல் ஆனவர்கள் மட்டும், இந்த பயிற்சியை செய்யவும்.
ஒரு திருவிளக்கை எட்டடி தூரத்தில் வைக்க வேண்டும். தாமரை நூல் திரியிட்டு , பசு நெய் ஊற்றி விளக்கேற்றுங்கள்.  ஒரு சிறிய காசி செம்பில், சுத்தமான தண்ணீர் எடுத்து விளக்கு முன் வைக்கவும். 


ஆசனப் பலகை அல்லது , தரையில் - மஞ்சள் துணி விரிப்பு விரித்து , விளக்கு ஒளி எட்டு அடி தூரத்தில் - உங்கள் புருவ மத்திக்கு நேர் கோட்டில் இருக்கும்படி, அமர்ந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சந்திக்க விரும்பும் சித்தர் பெயரை , மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள்.  பின்பு,


ஓம் சிங் ரங் அங் சிங்


என்ற மந்திரத்தை திருவிளக்கைப் பார்த்தபடி , மனதுக்குள் ஜெபித்து வாருங்கள். இந்த மந்திரம் தான் , விண்வெளியில் இருக்கும் சித்தரை , உங்கள் பக்கம் ஈர்க்க தேவையான அலைவரிசை ட்யூனர். 


நீங்கள் ஆரம்பிக்கும் தினம், அமாவாசை தினமாக இருக்கட்டும். தினமும் இடைவிடாமல் - தொண்ணூறு நாட்களுக்கு ஜெபிக்கவேண்டும். நீங்கள் பயிற்சி மேற்கொள்ளவேண்டிய நேரம் - இரவு எட்டிலிருந்து , ஒன்பது மணி வரை.  இந்த ஒரு மணி நேரத்தில் உங்களால் எவ்வளவு ஜெபிக்க முடியுமோ, ஜெபிக்கவும். எண்ணிக்கை முக்கியமில்லை.

 ஜெபம் முடிந்த பிறகு, இரவு உணவாக படையல் செய்த பழங்களை  உண்டு , பின் காசி செம்பிலுள்ள நீரை அருந்தவும். இரவு உணவாக பால் சாதம் சாப்பிடலாம். பயிற்சி மேற்கொள்ளும் மொத்த நாட்களில் - உப்பு ,புளி , காரம் குறைத்துக் கொள்வது நல்லது. அசைவ உணவு, புகை, மது கண்டிப்பாக தவிர்க்கப்பட வேண்டும். இதனால் ,  உங்களுக்குமனபலம் கூடும்.


கண்டிப்பாக , தொண்ணூறு நாட்களுக்குள் உங்களுக்கு சித்தர் தரிசனம் கிட்டும்.

எதையோ, எங்கெங்கோ தேடி - முயற்சிகள் வீணடிப்பதைவிட, நேரடியாக சித்தரையே தரிசனம் செய்து விடுதல் நலம் இல்லையா...?

ஒரு சாதாரண செடி வளர்வதே - அந்த இடத்தின், சூழல் , மண் வளம் என்று வேறுபடும்போது , நம் அனுபவும் இந்த பயிற்சியில் ஒருவருக்கொருவர் வேறுபடலாம்.  நம் உடல் அமைப்பு, கிரக அமைப்பு எல்லாம் நமக்கு ஒத்துழைக்க வேண்டும் இந்த பயிற்சிக்கு. விடா முயற்சியுடன், முயன்றால் , ஒரு அளப்பரிய தெய்வீக அனுபவம் கிட்டும்...


எதெதையோ பேசிக்கொண்டு , விதண்டாவாதம் செய்வதைவிட - நாமே ஒரு சாதனை செய்ய முயன்று பார்ப்பதில் அர்த்தமுள்ளது.. நம்பிக்கையுடன் செயல்படுங்கள்....!  
மிக பிரமாதமான அனுபவம் உங்களுக்கு காத்திருக்கிறது..!
பயிற்சி நாட்களில் ஏற்படும் அனுபவங்களை மனதில் நன்றாக பதிய வைத்துக் கொள்ளுங்கள்...

இதைப் போன்ற , பல அபூர்வமான தகவல்களை அவ்வப்போது  முடிந்தவரை பகிர்ந்து கொள்கிறேன்.. ஆனால், வெறுமனே தெரிந்து கொள்வதில் அர்த்தமில்லை.  சின்சியரா , இந்த ஒரே ஒரு பயிற்சி பண்ணிப் பார்த்துடலாம்.. என்ன சொல்றீங்க.. இப்போ இருந்தே தயாராகுங்கள்...  
 
குருவருள் நம் அனைவருக்கும் துணை நிற்கட்டும்.. ! இந்த அமாவாசையிலிருந்தே ஒரு நல்ல முயற்சியை ஆரம்பிப்போம்.. இந்த கட்டுரையை படிக்கும் அனைவரும், பின்னூட்டத்தில் உங்கள் கருத்துக்களை எழுதினால் , மேற்கொண்டு புதிதாக படிக்கும் அனைவருக்கும் , ஒரு புது உத்வேகம் பிறக்கும். உங்கள் , சொந்தம் , சுற்றம்,  நண்பர்களில் தகுதி உள்ளோருக்கு இதை தெரியப்படுத்துங்கள்.. !  ஒரு நிம்மதியான, பரிபூரண ஆனந்தம் எல்லோருக்கும் கிடைக்க மனமார பிரார்த்திக்கிறேன்... ! 


7 comments:

 1. நல்ல தகவல் திரு.முத்து குமார்...மிக்க நன்றி...

  ReplyDelete
 2. migaum payan ulla nalla visayam thanks

  ReplyDelete
 3. நிச்சயமாக இது கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கு முன் என்னைக் காப்பற்றிய மந்திரமே...அப்போது எனக்கு வயது 20 அல்லது 21 தானிருக்கும். ஒரு துறவி எனக்கு ஒரு சிறிய நூலைக்கொடுத்துப் படித்துவிட்டு அவசியம் திருப்பித் தரும்படி கேட்டு வாங்கிக் கொண்டார்கள். அதில் இம்மந்திரம் இருந்தது. ஒரு குத்துமதிப்பாக புருவமத்தியில் ஒளிச்சுடரை உருவகம் செய்து உச்சரித்தால் சித்த தரிசனம் கிட்டும் என்று அதில் கூறியபடி செய்து வந்தேன். மாலைக் காட்சி சினிமாவுக்குச் சென்றிருந்தபோது ஊரில் ஒரு சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டு போலீஸ் பாரா செய்து ரோட்டில் சென்ற அனைவருக்கும் அடி விழுந்தது. நானோ வழக்கம்போல் படம் முடிய 5 நிமிடம் முன்பே கிளம்பி வந்துவிடுவேன். அப்படி வரும்போதும் தியேட்டரிலும் அந்த மந்திரத்தை நிறைய முறை சொல்லிக் கொண்டிருந்தேன். அன்று கலவர பூமியில் பரம அமைதியில் வீட்டின் தெரு முனையில் தெருவாசிகளாலும், வீட்டாராலும் வரவேற்கப்பட்டு பல கேள்விகளால் துளைத்தெடுக்கப்பட்டேன். காரணம் கண்டவுடன் சுட உத்தரவு இருந்த நிலையில் நான் பாரா வந்த காவலர்கள் பார்வையில் படாமலிருப்பது முடியாது என்று சொன்னதோடு அன்னையால் ஆச்சரியமுடன் வரவேற்கப்பட்டேன். எனக்கும் வரும்வழியில் ஆச்சரியம். காரணம் ரோடெங்கும் கண்ணாடிச் சிதறல்கள்..கட்டைகள்..கற்கள் என்று சிதறிக்கிடந்தன. ஒரு அமானுஷ்ய அசாதாரண அமைதியில் சைக்கிளில் கேள்வியுடன் வீடு வந்து விஷயம் கேள்விப்பட்டு அதிர்ந்து போனேன். பிறகு அம்மந்திரம் மெல்ல மறந்து விட்டது . இதில் படித்தவுடன் பழையவை யாவும் ஞாபகம் வந்து விட்டன. மிஸ்டிக் ஐயா என்றதும் இதில் எனது அனுபவத்தை பதிவு செய்கிறேன். காரணம் அவர் எனது மானசீக ஆசான் ஆவார். நன்றி...

  ReplyDelete
 4. please send me more like this i want to practice this mantra to hramuthan@gmail.com
  Thanks & Regards
  V.amuthan

  ReplyDelete
  Replies
  1. எனக்கு ஒரு சித்தர் அடிக்கடி காட்சி தருகிறார்,,சிலவேளைகளில் திடீரென வழிகாட்டுதல்களும் கிடைக்கிறது,,,ஆனால் அவர் பதினெண் சித்தர்களில் ஒருவராக தெரியவில்லை,,குமரிமலைச் சித்தரென கூறுகிறார்,,பத்தாயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்தவராம்,,நீங்கள் கூறிய மந்திரத்தை நான் சிறுவயதிலே அகத்தியர் பூரணகாவியம்,மாந்திரீக காவியம் போன்றவற்றைப் படிக்கையிலே அடிக்கடி உச்சரித்திருக்கிறேன்,,அதன் காரணமோ என்னவோ தெரியவில்லை,,சிறுவயதிலேயே அந்த சித்தரின் காட்சி கிட்டியது,,முதலில் தியானம் இருக்கும்போது மட்டும் தோன்றியவர் இப்ப அடிக்கடி வருகிறார்,,எப்ப பார்த்தாலும் நிழல்போல என்பின்னாடியே வாரமாதிரி ஒரு அனுபவம்,,அவரால் என்வாழ்வில் நடந்த பல சம்பவல்களுள் ஒன்றை மட்டும் கூறுகிறேன்,,,
   என்னை வெளிநாடு அனுப்புவதாக கூறி ஒரு குருக்களும் மகனும் ஏமாற்றிநார்கள்,,அப்போது அந்த சித்தர் இவன் உன்னை ஏமாற்றுவான்,,தலைவிதியை மாற்றமுடியுமா,,ஆனால் அது உனக்கு பல அனுபவங்களை கொடுக்கும் என கூறினார்,,நானும் அவங்க ஏமாத்துவாங்களெண்டு எவ்வளவு கூறயும் வீட்டில் யாரும் கேட்கவில்லை,,தலைவிதியென நானும்வெளிக்கிட்டேன்,,அவங்க என்னை அப்புத்தளை மலை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுட்டாங்க,,,அதில விளுந்த யாரும் உயிர் தப்புவது கிடையாது,,நான் மலையிலிருந்து விழுந்துகொண்டிருந்தபோது முதன்முதலாக எனது அப்பாவின் குருநாதருடைய குருவாகிய கிரியா பாபாசியை தரிசித்தேன்,,ஒளிவெள்ளமென எனக்குமேலே வானத்தில் குமிளிட்டு என்னைநோக்கி மிதந்து வந்தார்,,என்னை அப்படியே தூக்கிவந்து தைரையிலே இறக்கிவிட்டார்,,எனக்கு நடப்பது கனவா நனவா என்று புரியவில்லை,,நான் இறந்துவிட்டேனோ என்ற சந்தேகத்தில் கால்களையுந் நிலத்தையும் தொட்டுப்பார்த்தேன்,,கிரியா பாபாசி எனது தலையில் கைவைத்தார்,, ஏதோ ஒரு மகாசக்தி எனக்குள் இறங்கியது,,உலகில் மாற்றத்தை ஏற்படுத்தும் ஒருவனாக உன்னையும் நியமித்துள்ளோம்,,உனது வாழ்வில் ஏற்படும் அந்த திருப்பத்தின்போது சித்தர் கணங்களுடன் உன்னை சந்திக்க வருவேன் என்று கூறியபடி மறைந்துவிட்டார்

   அதன்பிறகு ஒரு சிங்களவர் பலாங்கொடை பொலிஸ்டேசனில் என்னை ஒப்படைத்துவிட்டார்,,அவர்களும் என்னை விசாரித்துவிட்டு ஸ்டேசனில் அடைத்துவிட்டார்கள்,,நான்கு நாட்களாக தண்ணீர்,சாப்பாடுஏதுமின்றி இருந்தேன்,,,ஐந்தாம் நாள் அது நடந்தது,,மூன்று சாப்பாட்டுப்பாசலை போட்டுவிட்டு சாப்பிடு என்று ஒரு பொலிசுக்காரன் அடிக்கவந்தான்,,அப்போது கமரிமலைச்சித்தர் வந்து ஒரு சாப்பாட்டுப்பாசலை தூக்கிக்கொண்டுபோய் அங்கிருந்த ஒரு மூலையில் வைத்தார்,,பொலிசுக்காரனுக்கு சித்தர் கண்ணுக்கு தெரியவில்லைபோல,,
   சாப்பாட்டுப்பாசல் நகர்வதை பார்துவிட்டு பயத்திலே அனைவருக்கும் கூற அவர்கள் என்ன நினைத்தார்களோ தெரியவில்லை உடனே என்னை வணங்கி வெளியில் விட்டுவிட்டார்கள்,,,பிறகு நடந்ததெல்லாம் ஒரு பெரிய கதை,,உங்கள் பதிவை வாசித்தபோது கூறவேண்டுமென்று தோன்றியது,,கூறிவிட்டேன்.....

   Delete
 5. As u told i started this thaianam before,once posted in Facebook account really fruitful...now making some correction as u told i mgoing to start good.... Thanq

  ReplyDelete