Sunday, August 12, 2012

சும்மாவா சொன்னார்கள் ‘வாக்கிற்கு அருணகிரி’ என்று !

எளியார்க்கு எளியவனாகவே முருகன் கருதப்படுகிறான். அன்பு ஒன்றே அவனை வழிபடுவதற்கு உரிய சடங்கும் மந்திரமும் ஆகும். அருணகிரி நாதப்பெருமான் முருகனைப்பாடும் அன்பைப் பாருங்க ள்:
“இத மொழி பகரினும் பத மொழி பகரினும்
ஏழைக்கிரங்கும் பெருமாளே !”
“ஆதிக்கு மைந்தனென்று நீதிக்குள் நின்று அன்பர்
ஆபத்தில் அஞ்சல் என்ற பெருமாளே !”
 
சும்மாவா சொன்னார்கள் ‘வாக்கிற்கு அருணகிரி‘ என்று !

Saturday, August 11, 2012

சதுரகிரிக்கு எப்போதெல்லாம் செல்லலாம்?

Posted On Aug 12,2012,By Muthukumar

சதுராசலம், சித்தர்கள் தேசம், சிவன்மலை, மூலிகைவனம் என்று பெரியோர்களால் போற்றப்படும் சதுரகிரி மலையில் கோயில் கொண்டுள்ளார், சுந்தர மகாலிங்கப் பெருமானார். மேற்குத் தொடர்ச்சி மலையின் தென் கோடியருகே மேற்பகுதி தட்டையான, சதுர வடிவிலான நான்கு மலைகள் உண்டு. நான்கு வேதங்களே சிவகிரி, விஷ்ணுகிரி, பிரம்மகிரி, சித்தர்கிரி என்ற பெயர்களில் மலைகளாகி நிற்க, அவற்றின் நடுவில் கம்பீரமாக அமைந்திருக்கிறது, சஞ்சீவிகிரி. இம்மலையே சதுரகிரி என்றனர் முன்னோர்கள். மூலிகைகள் நிரம்பிய மலையின் மேல் சிவபெருமான் வீற்றிருக்கிறார். சதுரகிரியை அகஸ்தியர் உள்ளிட்ட சித்தர்கள், ‘பஞ்சபூத லிங்கம்’ என்பர். இந்த மகாலிங்க மலையை ‘சித்தர்கள் வாழும் பூமி’ என்றனர் ஆன்றோர்.

 சிவன், அம்மையப்பர் உரு எடுத்தது இந்த தலத்தில்தான். அன்னை பார்வதி தேவி சந்தனக் குழம்பில் பரிஸ்தான லிங்கமதனை ஆக்கி, தவம் செய்து, சிவனுடன் இடப்புறம் அமர்ந்த தலமிது. ‘கல் லாலமரம்’ என்ற விருட்சத்தின் அடியில் சந்தன மகாலிங்கத்தை ஸ்தாபித்து அன்னை பார்வதி விரதம் இருந்த நாள் ஆடி அமாவாசை. இன்றும் சட்ட நாதமுனி, கோரக்க முனிவர் உள்ளிட்ட பதினெட்டு சித்தர்களும் தபசை கலைத்து, ஒவ்வோர் ஆடி அமாவாசையிலும் இங்குள்ள புனித ஆகாய கங்கை தீர்த்தம், கௌண்டின்ய தீர்த்தம், சந்திர தீர்த்தங்களில் உஷத் காலத்தில் நீராடி சந்தன மகாலிங்கத்தை சேவித்து இன்புறுகின்றனர் என்கிறது, அகஸ்தியர் நாடி.

‘‘ஆடி அமாவாசை திதியில் இந்த சந்தன லிங்கேஸ்வரரை தொழுதார்க்கு உறுதியாய் ‘காம்யலோகம்’ கிட்டும்’’ என்கிறார், அகஸ்தியர். காய கல்ப மூலிகைகள் நிறைந்த  வனப்பகுதியில், சுந்தர மகாலிங்க மூர்த்தியும் மலை உச்சியில் பெரிய மகாலிங்க மூர்த்தியும் கோயில் கொண்டுள்ளனர். சந்தன மகாதேவி சமேத சந்தன மகாலிங்கேஸ்வரரை தொழுதால், அனைத்து அபிலாஷைகளும் வாழ்வில் நிறைவேறும் என்கின்றனர் கோரக்கர் உள்ளிட்ட அனைத்து சித்தர்களும். 

கொல்லி மலையில் உள்ள கொல்லிப்பாவையை இந்தப் பெரிய மகாலிங்கேஸ்வரர் வீற்றிருக்கும் வனத்தில் வைத்தே கோரக்கர் என்ற புகழ்மிக்க சித்தர் உருவாக்கினார். பின் சிவனின் உத்தரவுப்படி, கொல்லி மலையில் தேவியை கோரக்கர் பிரதிஷ்டை செய்தார். கோரக்கர் தங்கி தவமியற்றிய குகை, இன்றும் கோரக்கர் குகை என விளங்குகிறது. இங்கு உறைகின்ற தாணிப்பாறை கணேசன், ராஜகாளி அம்மன், பேச்சி அம்மன் மூவரும் எப்படிப்பட்ட பேய் பிசாசுகளையும் விரட்டும் ஆற்றல் கொண்டவர்கள். பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் ‘ஜலஸ்நானம்’ செய்வது மிகவும் புண்ணியம் என்கிறது நாடி. ‘‘8 ஆடி அமாவாசை தொடர்ந்து வனதுர்க்கைக்கும் சங்கர நாராயண லிங்கமான இரட்டை லிங்கத்திற்கும், பிலாவடி கருப்பசாமிக்கும் அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தால், செல்வம் கொழிக்கும்; தொழில் விருத்தி அடையும். வம்சாவளியாக வரக்கூடிய சர்க்கரை நோய் கண்டிப்பாக குணம் ஆவதுடன், அந்த வம்சத்தினருக்கே இதய நோய், காமாலை போன்ற கொடிய நோய்கள் பாதிக்காது’’ என்கிறார், அகஸ்தியர். 

‘‘இங்குள்ள நடுக்காட்டு நாகரையும் வெள்ளை விநாயகரையும் ஞாயிற்றுக்கிழமையன்று வரும் சங்கடஹர சதுர்த்தியில் அஸ்தமன வேளையில், வெண்பட்டு சாத்தி கொழுக்கட்டை நிவேதனம் செய்து எருக்கம்பூவினால் ஹோமம் செய்பவருக்கு சித்தர்கள் காட்சி கிடைப்பதுடன், கண் நோய், சிறுநீரக கோளாறு, உயர் ரத்த அழுத்தம் போன்றவையும் நீங்கும்’’ என்கிறார், கோரக்கர்.

நாக கன்னி தவம் செய்யும் இடம் தற்போது நாக கன்னி காவு என்று இன்றும் அழைக்கப் பெறுகிறது. இங்கு ஆதிசேஷன் மனைவி சிவனை குறித்து தவம் செய்து, இந்த பூமியை தாங்கும் ஆதிசேஷனுக்கு பலமும், உற்சாகமும் தருகிறார். இந்த ஸ்தலத்தில் திருமணத் தடையான நாகதோஷம், காலசர்ப்ப தோஷம், கிரஹண தோஷம், சந்தான தோஷம் போன்றவையும் விஷ ஜந்துக்களினால் ஏற்படும் உபாதையும் விலகும் என்கிறது சித்தர் வாக்கு. 

மலைச் சாரலில் உள்ள தவசிகள் குகையில் சித்தர்கள் இன்றும் தவம் செய்து வருகின்றனர். மிகுந்த ஒல்லியான உடல் கொண்டவர் உள்ளே சென்றால், சுமார் எழுநூறு மீட்டர் தூரம் சென்ற உடன் கூட்டல் குறிபோல நான்கு வழிகள் பிரியும். இதில் பூமியை நோக்கி சரியும் வழியில் 200 மீட்டர் சென்றால் ஒளி வடிவ உடல் தாங்கி, நிர்வாண கோலத்தில் தவபுருஷர்களும் சித்தர்களும் தவம் செய்வதை காணலாம். இவர்களின் தவத்திற்கு யாரும் இடையூறு செய்யாதபடி சித்தர் பரிவாரங்களும் வனதேவதைகளும் வண்டு, கரடி, புலி போன்ற வடிவங்களில் பாதுகாப்பு தருகின்றனர்.

உண்மையான பக்தியும் விசுவாசமும் திடமான மனமும் கொண்டு குகைக்குள் சென்றால், சித்தர்களை சேவிக்கலாம் என்கிறது நாடி. இதனை பின்பற்றி சித்தர்களை தரிசித்தவர்கள் உண்டு. அவர்களை நான் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் சந்தித்தும் இருக்கின்றேன்.

‘‘ஊழிற் பெருவழி யாதுள’’ என்கிறார், ஒருவர். ‘‘விதி வழி மதி செல்லும்’’ என்கின்றார் இன்னொரு சித்தர். ‘விதி வலிது’ என்கிறது ஜோதிடம். ஆனால், விதியையே திகைக்க வைக்கும் ஆற்றல் பக்திக்கு உண்டு. சதுரகிரி சென்று அங்கு கல்லால விருட்சமடியில் கொலுவிருக்கும் சிவனுடன் ஏனைய இறையையும் பெரியோர் ஆலோசனையுடன், தொழுதால், கோள் என்ன செய்யும், விதி என்ன செய்யும்? தோற்று ஓடி ஒளியும்.

சுண்ணாம்பு காளவாயில் இட்டு ஒரு நாயன்மாரை அரசன் கொடுமைபடுத்துகின்றான். அவருடன் கல்லை கட்டி கடலில் தள்ளுகிறான். ஆனால் அவரோ ஆனந்தமாய் பாடுகின்றார். ஈசன் திருவடியை எண்ணி, அப்பர் அப்படி பாடியது மகாலிங்க நாதனை எண்ணித் தான் என்கிறார் குதம்பை சித்தர்.

சதுரகிரி என்பது திருக்கைலாயத்தை விட புனிதமானது எனப் போற்றுகிறார் நாரதர். பிரம்ம கிரி நின்று சரஸ்வதி மாதாவும் தெய்வீக லிங்கனாம், மகாலிங்கானாம், சுந்தர மகாலிங்கனை வீணை மீட்டி அவர் ஆராதனை செய்து வருகிறார். 

ஆடி அமாவாசை, சித்திரை மாத பௌர்ணமி தினம், மார்கழி திருவாதிரை நட்சத்திரத்திலும் இந்த சதுரகிரி ஈசனை தொழ, ‘விண்ணோர் பலரும் வரக்கண்டேன்’ என்கின்றார் அகஸ்தியர். ராவணேஸ்வரன், கும்பகர்ணன், ராமன், தசரதன், இக்ஷ்வாகு, யயாதி போன்ற பெரியோர்களும் வருணன், குபேரன் போன்ற தேவர்களும், நாராயணன், திருமகள், யமன் உள்ளிட்ட நித்ய சூரிகளும் குழுமி நிற்கின்றனர் என்றால், சதுரகிரி நாதனை தொழ நாம் ஏன் காலந் தாழ்த்த வேண்டும்?

உடலுக்கு ஆரோக்கியம் தரும் வழிபாட்டு முறைகள்!

ஆலயத்திற்கு நாம் உடலை சுத்தம் செய்து தூய்மையான ஆடைய ணிந்து செல்லும் போது உடலும் உள்ளமும் உற்சாகமாக இருப்பதுட  ன் மனமும் இறை நாட்டத்தில் இருக்கும். பின் ஆலயத்திற்குள்  செல்லும் முன் கோபுர தரிசனம் செய்ய வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என் பர். கோபுர தரிசனம் செய்ய மேல்நோக்கி பார்க்கும்போது தலைக்கான பயிற்சி ஆர ம்பிக்கின்றது. மூன்றுமுறை கீழிருந்து மே லாக பார்த்து வணங்கும் போது தலைக் கான இரத் தோட்டம் சீராகும்.
ஆலயம் உள் சென்ற உடன் முதலில் செய் வது விநாயகர் வழிபாடு. விநாயகருக்கு தோப்புக்கரணம் போட்டு புருவப் பொட்டி ல் மூன்று முறை குட்டி வழிபடுவது வழக் கம், இவ்வாறு குட்டுகின்றபோது புத்தியை ச் செயல்படுத்தும் நரம்பு சுருங்கி விரியும் இதனால்இரத் தோட்டம் அதிகரிக்கும் செவிகள் இரண்டையும் இழுக்கும் போது நரம்பு கீழ்நோக்கி இழுபடும் இதனால் மூளையில் சிந்திப்பதற்கான பகுதி செயல்படும். அடுத்து ஆ லயத்தை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை வலம்வருவர்.வலம் வரு ம்போது நடப்பது ஓர் சிற ந்த உடல் பயிற்சி என்பர். சிலர் பிரதட்ணம் பண் ணுவர். இதனால் குடல் தொடர்பான நோய்களு க்கும் இரத்தோட்ட சீரக்கத்துக்கும் சிறந்த உடல் பயிற்சி என்பர்.  அடுத்து ஆண்கள் அஷ்டாங்க நமஸ்காரமும் பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரமு ம் செய்கின்றனர். அஷ்டாங்க நமஸ்காரம் என் னும் போது அஷ்டாங்கம் என்பது தலை கையிரண்டு செவியிரண்டுமோ வாய் புஜங்களிரண்டு என்னும் எட்டவயங்களும் நிலத்தில் பொருந் தும்படி வலக்கையை முன்னா ல் நீட்டியும் இடது கையை பின்னும் நேரே நீட்டியபின் அம்முறையே மடக்கி வல புயமும் இட புயமும் மண்னிலே பொருந்தும் படி கைகளை அரையை நோக்கி நீட்டி வலக் காதை முன்னும் இடக் காதை பின்னும் மண்னிலே பொருந்தச் செய்வதா கும். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற் றைப்படையில் செய்வர் இது சிறந்த ஆண்க ளுக்கான உடல் பயிற்சியாகும். இது போன்று பெண்கள் பஞ்சாங்க நமஸ்காரம் செய்வர் பஞ்சாங்க என்பது தலை கையிரண் டு முழந்தாளிரண்டு என்னுதைந் தவயவங்களும் நிலத்தில் பொருந் தும்படி வணங்குவதாம். இதை மூன்று ஐந்து அல்லது ஏழு முறை என ஒற்றைப் படையில் செய்வர் இது சிறந்த பெண் களுக்கான உடல் பயிற்சியாகும். இவ்வாறு வழி பாட்டு முறைகளில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் முறைகளை வைத்துள்ளனர் முன் னோர்கள்.

யோக இரகசியங்கள் - சகஸ்ரார சக்கரத்தின் செயல் முறை

Posted On Aug 12,2012,By Muthukumar


மனிதன் சூட்சுமத் தன்மைகளை அறியும் ஆற்றல் உள்ளவன் என்பது பற்றி கடந்த பதிவுகளில் பார்த்தோம். இந்த பதிவில் மனிதனது சூட்சும தன்மை எப்படி செயற்படுகிறது என்று பார்ப்போம். பொதுவாக யோகம், சித்தர்கள் பற்றி அறிந்தவர்களுக்கு மனிதனில் ஆறு ஆதாரங்கள், குண்டலினி என்பன இருப்பது பற்றி அறிந்திருப்பார்கள். இது பற்றி விரிவாக நாம் இந்த பதிவில் கூறப்போவதில்லை, அது இதன் நோக்கத்திற்கு அமைவானது இல்லை. சூட்சும பார்வையுடன் நேரடியாக தொடர்புடைய சக்கரம் சகஸ்ராரமும் ஆக்ஞா சக்கரமும் ஆகும். 

இதுபற்றிய ஒரு யோக இரகசியத்தினை குருவருளால் கூறுவோம். 

இதில் சகஸ்ரார சக்கரம் என்பது உடலில் தலை உச்சியிற்கு மேல் பரவியுள்ள சூஷ்ம உடலில் காணப்படும் சக்கரமாகும். இதுவே மனிதனில் ஆன்ம ஒளியினை பிரகாசிக்க செய்யும் சக்கரமாகும். பொதுவாக கீழ் சக்கரங்கள் செயற்படும் வாழ்க்கை வாழ்பவர்களுக்கு சகஸ்ராரத்தின் ஒளி குறைந்த அளவிலும், ஒழுக்கம், தெய்வ உபாசனை செய்பவர்களுக்கு அதிகளவிலும் காணப்படும். தன்னை அறிந்து இறைவனை அறிந்தவர்களுக்கு இது வெளிப்படையாகவே தெரியும். இதனை குறிக்கவே சித்தியடைந்த மகான் களின் தலையின் பின்னால் ஒளிவடிவம் குறிக்கப்படுகிறது. இந்த மனிதனின் எண்ணங்களுக்கு தக்க வலிமையானதாக இருக்கம். தெய்வ உபாசனை செய்பவர்களுக்கு தெய்வ சக்தியுடையதாக இருக்கும். ஒருவன் தனது இச்சா சக்தியினை பிரயோகிக்கும் போது அந்த இடத்தை நோக்கி பாயும் தன்மையுடையது இந்த ஒளி. மனதினை ஏகாக்கிரப்படுத்தி ஒரு இடத்தில் பாய்ச்சினால் சலனிக்காமல் வலிமையுடையதாகும். தியான சாதனையின் போது இந்த ஒளி அசையாத சுடர் போல் சகஸ்ரார சக்கரத்தில் ஒன்றி மன இயக்கத்தினை கட்டுப்படுத்தும். இந்த ஒளி பிராண சக்தியுடன் கலந்து மற்றைய சக்கரங்களினூடாக பௌதீக உடலில் பாயும் போது உடல் சரிவர வேலை செய்கிறது.  அதேபோல் இந்த ஒளியினை எமது சூஷ்ம உடலினை தாக்கி விழிப்படையவைத்தால் சூஷ்ம உலகங்களை காணலாம். இதை எப்படி செய்வது?

முதலில் மனதின் இயக்கத்தில் செலவழியும் இந்த சகஸ்ரார ஒளியினை தியான சாதனையினால் ஒடுங்கச் செய்ய வேண்டும். பின் ஒடுங்கிய ஒளியினை இச்சா சக்தியினால் மன உடலிலும், பிராண உடலிலும் செலுத்த அந்தந்த கவசங்க்களுக்கு ஏற்ப சூட்சும பார்வை ஏற்படும். மனதின் உணர்வு இந்த சகஸ்ரார சக்கர ஒளியில்தான் உள்ளது. இந்த ஒளி பௌதீக கவசங்களை தாக்கும் போது பௌதீக உணர்வினை பெறுவது போல் சூட்சும கவசங்களை தாக்கும் போது சூட்சும உணர்வுகளை பெறலாம் என்பதே இதன் அடிப்படை. பௌதீகத்தில் தெய்வ சக்தி உறையும் இடம் சகஸ்ராரமாகும். 


சூஷ்ம பார்வையில் ஆக்ஞா சக்கரத்தின் செயல் முறை

Posted On Aug 12,2012,By Muthukumar


சென்ற பதிவில் தெய்வ ஜோதி வடிவாக காணப்படும் சகஸ்ரார சக்கரம் பற்றிப் பார்த்தோம். இந்த சக்கரமே சக்தியின் மூலம். இந்த பதிவில் இந்த சக்கரத்தின் ஒளி பரவுவதன் மூலம் சூட்சும பார்வையினை மனிதனிற்கு வழங்கும் சக்கரமான ஆக்ஞா சக்கரம் பற்றி பார்ப்போம். சகஸ்ரார ஒளி ஒவ்வொரு சக்கரங்களில் பாயும் போதும் அந்த சக்கரத்திற்குரிய சூஷ்ம சக்திகளை பெறுவோம் என்பதே இதன் அடிப்படை. அந்த வகையில் ஆக்ஞா சக்கரம் சூஷ்ம பார்வையினைத் தரக்கூடியது. 

இது மனிதனின் இரு புருவங்களுக்கு நடுவே நெற்றியில் இருக்கிறது. மனிதனது மன எண்ணங்களின் வேகங்களுக்கு உத்வேகங்களுக்கு ஆதாரமாக உள்ளது இந்த சக்கரமே. ஒருவன் ஆழ்ந்து சிந்திக்கும்போது புருவமத்தி சுருங்கி மடிவதனை அவதானிக்கலாம். ஒருவன் மனதினை ஏகாக்கிரப்படுத்தும் போது இந்த சக்கரம் செயல்படவேண்டும். அதன் மறுதலையாக இந்த சக்கரத்தினை செயற்படுத்தினால் மனம் ஏகாக்கிரமடையும். ஒருவன் தனது கண்களை உட்புறமாக திருப்பு புருவத்தினை நோக்கு செலுத்தி ஒரு விடயத்தினை சிந்திக்கும் போது ஆழமாக சிந்திக்கலாம். இதனை நீங்கள் உங்கள் அனுபத்திலேயே உணரலாம். ஆழ்ந்து சிந்திப்பவர்களுக்கு நெற்றிப்பொட்டில் சிறிது நம நமப்பு உணர்ச்சி தோன்றும். இந்த சக்கரத்தின் மீது ஒருவர் கவனிப்பதன் மூலம் ஒருவர் தனது மனதின் மீது பரிபூரண கட்டுப்பாட்டினை அடையலாம். 

யோக சாதனையிலும் யோக நூற்களிலும் புருவ மத்தியில் பார்வையினை செலுத்தி தியான, ஏகாக்கிர சாதனைகள் செய்யும் படி கூறப்படுவதன் காரணம் இதுதான். 

கண்களை உள்முகப்படுத்தி (அதாவது கண்ணை மூடி, விழிகளை )ஆக்ஞா சக்கரத்தின் பால் செலுத்தி நெற்றிக்குள் இருக்கும் இருட்டை கவனிக்கத்தொடங்கினால் சற்று நேரத்தில் இருள் நீங்கி ஒளி தோன்றத்தொடங்கும். மேலும் சற்று நேரம் அவதானிக்க படிப்படியாக காட்சிகள் தோன்றத்தொடங்கும். எங்கிருந்து இந்த ஒளி வருகிறது. சகஸ்ரார சக்கரத்திலுள்ள ஒளி மனதினை ஆக்ஞா சக்கரத்தில் ஒருமுகப்படுத்தும் போது வருகிறது. இந்த நிலையினால் சகஸ்ரார சக்கரத்திற்கும் ஆக்ஞா சக்கரத்திற்கும் தோடர்பு ஏற்பட்டு ஆக்ஞா சக்கரம் செயற்படத்தொடங்குகிறது. இந்த மன ஏகாக்கிரம் கூட கூட இந்த ஜோதி ஆக்ஞா சக்கரத்தினூடாக எமது இச்சா சக்தி கொண்டு வெளிப்படுத்தினால் எம்மைச் சுற்றியுள்ள சூஷ்ம உலகம் அந்த ஒளிப்பிரவாகத்தில் தோன்றத் தொடங்கும். இதன் பின் எமது இச்சா சக்தி மூலம் எந்த சூஷ்ம விடயங்களை காணவேண்டும் என சங்கல்பிக்கின்றோமோ அந்த விடயம் நேரடியாக நடப்பது போல் காட்சிகளாக தோன்றும்.  

இதுவே சூஷ்ம திருஷ்டி எப்படி செயற்படுறது என்பதற்கு விளக்கமாகும், வாசகர்கள் புரிந்து கொள்வதற்காக இதன் சுருக்கத்தினை கீழே தந்துள்ளோம். 

மனிதனின் சூஷ்ம உடலில் உள்ள சக்கரங்களை விழிப்பித்து சூஷ்ம சக்திகளை அடைலாம்.

இந்த சூஷ்ம் சக்திகளுக்கு ஆதாரம் சகஸ்ரார சக்கரத்தில் உள்ள தெய்வ ஒளியில் உள்ளது.  அந்த தெய்வ ஒளியினை குறித்த சக்கரத்தில் எமது இச்சா சக்தி மூலம் பரவச் செய்தால் சூஷ்ம புலனறிவுகளையும் சக்திகளையும் பெறலாம்.

அந்த அடிப்படையில் சூஷ்ம பார்வையிற்கு ஆக்ஞா சக்கரத்தினை செயற்படுத்துவதன் மூலம் சாதிக்கலாம். 

இந்த பதிவின் இறுதியில் வாசிக்கும் அன்பர்களுக்கு ஓர் பணிவான வேண்டுகோள் இந்த குறிப்புகள் யோகசாதனையின் வழி சாதனை புரிபவர்களுக்கானது. சக்கரங்கள், சூஷ்ம உடல், சூஷ்ம உலகம் பற்றி நன்கு கற்றறிந்து அனுபவமுடைய குருவின் வழி அனுமதி பெற்றே இதனை செய்தல் வேண்டும். இந்த பதிவு தகவலுக்கு மட்டுமே. முயற்சித்து பலனடைய வேண்டுபவர்கள் தக்க குருவை அடைந்து முயற்சிகவும். நாம் இருக்கும் சூழல், வாழ்க்கை முறைக்கு அமைய இந்த ஆற்றல் ஆன்ம வாழ்க்கைக்கும், உலக வாழ்க்கையும் இடையூறானதாக கூட அமையலாம். 

ஸத்குரு பாதம் போற்றி!

Thursday, August 9, 2012

யோக சாதனையாளர்களுக்கு வழிகாட்டும் அரிய நூற்கள்

Posted On Aug 9,2012,By Muthukumar
எமது பதிவுகளைப்படிக்கும் பலர் ஆர்வத்துடன் யோக, மன, சித்த ரகசியங்களை பதிவிடும்படியும் மேலதிக விபரங்களைதரும்படியும் மின்னஞ்சல் அனுப்பிய வண்ணம் உள்ளனர். அவர்கள் அனைவரது ஆவலையும் தாகத்தினையும் தீர்க்கும் வண்ணம் எம்மால் எழுதுவதற்கு காலதேவனும், எமது நாளந்த கடமைகளும் அனுமதிப்பதில்லை. இந்தபதிவுகளில் வரும் விடயங்கள் அனைத்தும் எமது தேடலிலும் குருநாதரிடம் பயின்றவற்றையும் சுருக்கு இந்த துறையில் ஆர்வம் உடைய அனைவருக்கும் பயன்படவேண்டும் என்ற எண்ணத்தில் பதிவிடப்படுகிறது. ஆர்வம் உடையவர்களுக்கு சரியான பாதை தெளிவு எமது பதிவுகளால் கிடைக்குமானால் குருஅருள் எனக்கொள்க!

எமது நேரக்குறைவு காரணமாக மிகச்சொற்பமான அளவே எம்மால் இதற்காக அர்ப்பணிக்க முடிகிறது என்பதில் மனவருத்தமே! யோக வித்தையில், சித்த வித்தையில் ஆர்வம் உடையவர்களுக்கு பயன்படக் கூடிய அரிய நூல்கள் சிலவற்றை அறிமுகப்படுத்தலாம் என எண்ணியுள்ளேன்.

அந்த வரிசையில் முதலாவது நூல் 

மானச யோகம்

ஆசிரியர்: டாக்டர். பண்டிட். ஜீ. கண்ணைய யோகி.


ஆசிரியர் பற்றிய அறிமுகம்

கண்ணைய யோகியார் ஐந்தாவது வயதிலேயே அகஸ்திய மகரிஷியால் ஆட்கொள்ளப்பட்டு பொதிகை, நீலகிரிப்பகுதிகளில் உள்ள சூஷ்ம சித்தாஸ்ரமத்தில் ஆன்ம, யோக, ஞான, மானச, சித்த பயிற்சிகள், மந்திர, யந்திர, சாஸ்திரங்கள், மூலிகை மர்மர், சித்த வைத்தியம், இரசவாதங்கள் என்பன பயிற்று வித்து தனது கர்ம பலனை அனுபவித்து தீர்த்து வரும்படி குரு உத்தரவிட்டதன் பெயரில் தன்னை வெளிக்காட்டிக்கொள்ளாமல் சாதாரண பாமரன் போல் சென்னை அம்பத்தூர் பகுதியில் வாழ்ந்து வந்தவர், அவர் எக்காரணம் கொண்டும் தந்து ஆற்றலை, சித்திகளை தனது பெயரிற்கோ, புகழிற்காகவோ வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. அகஸ்திய மகரிஷியின் உத்தரவின் பெயரில் புலிப்பாணிச் சித்தரிடமும் வித்தை பயின்றவர். குரு நாதரின் ஆணையில் தனது கர்மவினையினை அனுபவித்து வந்த அதே வேளை உண்மையான சித்தர் வழி சாதனை புரிபவர்களுக்காக இக்கால மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் சித்தர்களின் கலைகளை சிறு சிறு பாடங்களாக தமது கைப்பட எழுதி தம்மை அண்டி வந்த மாணவர்களுக்கு கற்பித்து வந்தார். அவரது மாணவர்கள் மிகச்சிலரே! அதைக்கொண்டே உண்மை யோகியின் இலட்சணம் அறியலாம்! இன்று ஒரு சில புத்தகங்களை படித்து விட்டு தங்களை யோகி எனக் கூறிக்கொள்பவர்கள் இருக்கையில் தமது மாணவர்களுக்காக மிக எளிய முறையில் எழுதி அவற்றை பயிற்சி செய்ய வைத்து இடையில் வரும் சந்தேகங்களை தீர்த்து அவர்களையும் உன்னத இறை நிலைக்கு அடைய வைக்கும் உண்மை குருவாக திகழ்ந்தவர்கள். "நூறாண்டு காலம் வாழ வழி" என மாணவர்களுக்கு கற்பித்த வாரே 108 ஆண்டுகள் பூவுலகில் வாழ்ந்து காட்டியவர். கற்பிக்கும் அனைத்து வித்தைகளையும் ஆதாரப்பூர்வமாக விஞ்ஞான விளக்கங்களுடன் கற்பித்தவர். 

மேலும் கண்ணைய யோகியார் பற்றி வேறு பதிவுகளில் பார்ப்போம். 

கண்ணைய யோகியாரின் மாணவர்களில் முதன்மையானவரும் குரு பணிக்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர் எமது குரு நாதர் காயத்ரி சித்தர் முருகேசு சுவாமிகள், காயத்ரி சித்தர் இலங்கையில் சாதாரண தொழிலாளி ஒருவரின் மகனாக பிறந்து, குருவருளால் அகஸ்தியமகரிஷியின் தொடர்பு பெற்று அவர் வழிகாட்டலில் கண்ணைய யோகியரிடம் சென்று கிட்டத்தட்ட 44 வருடங்கள் குரு சேவை செய்து கண்ணைய யோகியாரின் பரிபூரண ஞான அருள் பெற்றவர். கண்ணைய யோகியாரிடம் பெற்ற காயத்ரி குப்த விஞ்ஞான சாதனை பயிற்சி மூலம் அருள் நிலை அடைந்தவர். 

மற்றவர் தமிழ் நாடு இரயில் திணைக்களத்தின் உயர் பதவி வகித்து, தந்து இல்வாழ்க்கையினையையே யோக வாழ்க்கை ஆக்கி கண்ணைய யோகியாரிடம் இராஜ யோக பயிற்சி (அக்காலத்தில் ஜனக மஹாராஜா வாழ்ந்த நிலையே உண்மையான இராஜ யோகம்) என்னும் உயர் பயிற்சி பெற்ற அருட் திரு. இராஜமோகன் அவர்கள். இராஜ மோகன் ஐயா அவர்கள் தமது பணி ஓய்வின் பின் தமது குரு நாதர் தமக்கு கற்பித்த ஞானத்தினை ஆர்வமுள்ள மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அத்துடன் குரு நாதர் கையெழுத்துப்பிரதிகளாக கற்பித்த வித்தைகளை புத்தகங்களாக வெளியிட்டு வருகிறார்கள். அத்தகைய ஒரு பாடமே மானச யோகம் எனும் இந்த நூலாகும். 

மானச யோகம் ஏன் வெளியிடப்பட்டது?

யோகம், ஞானம், பக்தி, கர்மம், நாத்திகம், விஞ்ஞானம் மற்றும் எந்த கொள்கையாயினும், சமயம், வழிபாடு அரசியல் என்று இந்த உலகத்தில் நடைபெறும் அனைத்தும் மனதின் வழியாகவே செயற்படுகிறது. மனதின் வழியில்லாமல் மனிதனிற்கு இகவாழ்வுமில்லை பரவாழ்வுமில்லை. இன்ப துன்பங்கள் அனைத்திற்கும் காரணம் மனமே! மனதினை கட்டுப்படுத்தினால் எல்லாவற்றையும் சாதிக்கலாம். இதுவே அகத்திய மகரிஷியின் மூல உபதேசம். 

இதை எப்படி செயல்முறையில் செய்வது என்பதனைக் கூறுவதுதான் மானச யோகம். 

குரு நாதர் கீழ்வரும் தலைப்புகளில் மனதின் செயல் முறையினை மிக எளிய முறையில் நுண்மையாக விளக்கியுள்ளார். இந்த நூலினை கற்ற பின் (முழுமையாக புரிந்து கொள்ள பல முறை வாசிப்பு தேவை) ஒருவன் மனம் பற்றியும் அதன் செயல்முறை, அதனால் ஏற்படும் விளைவிகள் என்பவற்றை தெளிவாக அறிந்து கொள்ளலாம். 

பொருளடக்கம்
 1. வாழ்க்கையின் குறிக்கோள்
 2. வாழ்க்கையின் வேற்றுமைகள்
 3. மனமும் வாழ்க்கையும்
 4. மனதின் இலக்கணம்
 5. மனதின் இயக்கம்
 6. சங்கற்ப விகற்பங்கள்
 7. மனமும் உடலும்
 8. மனமும் கர்மாவும்
 9. மனமும் சித்தமும்
 10. மனமும் சோதிடமும்
 11. மனமும் கடவுளும்
 12. மனமும் ஒழுக்கமும்
 13. மனமும் சூழ் நிலைகளும்
 14. மனசிருஷ்டி விஞ்ஞானம்
 15. மன சக்தி
 16. மன அலையின் தத்தும்
 17. மனமும் தெய்வ ஞானமும்
 18. மானத தந்தி விஞ்ஞானம்
 19. சூஷ்ம திருஷ்டி விஞ்ஞானம்
 20. சூஷ்ம யாத்திரை
 21. சூஷ்ம தரிசனம்
 22. மனமும் பேய் பிசாசுகளும்
 23. மனமும் ஏகாக்கிரமும்
 24. மனமும் தியானமும்
 25. மனமும் அட்டமாசித்திகளும்
 26. மனமும் ஹிப்னாடிசமும்
 27. எளிய மனச் சாதனைகள்
 28. மனமும் முக்தியும் 
 29. முடிவுரை 

அனைத்து அத்தியாயங்களும் இரத்தின சுருக்கமாக விடயத்தினை தெளிவாக கூறி அதனை செயன் முறைப்படுத்தும் வழியினையும் கூறுகிறது. 

மனதினைப்பற்றி அறிந்து கொள்ளவிரும்புபவர்கள், யோக சாதனை செய்பவர்கள் எந்த மார்க்கத்தினை சேர்ந்தவர்களாயிருந்தாலும் இந்த நூலினை வாசித்தல் அவர்களது வாழ்வினை மாற்றும் என்பதற்கு நாம் உறுதி கூறிகிறோம். 

பெற விரும்புபவர்கள் கீழ்வரும் முகவரியில் தொடபு கொண்டு விபரங்களை பெறமுடியும்:
 • ஆத்ம ஞான யோகசபை, சென்னை : 044-26531166/09840987338/09383531166
 • ஆத்ம ஞான யோக சபை, கொழும்பு: 0094-75-7287151/0094-77-6271292

படிப்பில் கவனம் மாணவர்களே…(ஆக., 10 – ஆடிக்கிருத்திகை)

Posted On Aug 9,2012,By Muthukumar
முருகப்பெருமானுக்குரிய விரதங்களில், கார்த்திகை விரதம், நட்சத்திர அடிப்படையில் அனுஷ்டிக்கப்படுவதாகும். ஒவ்வொரு மாதமும், கார்த்திகை நட்சத்திரத்தில் இவ்விரதம் மேற் கொள்ளப்பட்டாலும், சூரியன் தெற்கு நோக்கி தன் பயணத்தை துவங்கும், தட்சிணாயண துவக்க மாதமான ஆடியில் கொண்டாடப்படுவது மிகவும் சிறப்பு. கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில், தந்தையான சிவபெருமானுக்கு திருவண்ணாமலையில் தீபத்திருவிழா கொண்டாடப்படுகிறது. அதுபோல, மகனுக்கு ஆடி மாத கார்த்திகையன்று விழா எடுக்கின்றனர்.
முருகப்பெருமான், சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து உருவான தீப்பொறியில் பிறந்தவர். ஆறு குழந்தைகளாகப் பிறந்த அவரை, ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்தனர். அவர்களுக்கு சிவபெருமான் நட்சத்திர அந்தஸ்தை அளித்தார். அவர்கள் இணைந்து, கார்த்திகை நட்சத்திரமாக வான மண்டலத்தில் ஜொலிக் கின்றனர். அவர்கள் இந்தப் பதவி பெற்ற வரலாறை கேளுங் கள்.
ஒரு சமயம் சிவ பெருமான், பிருங்கி முனிவர், நந்தி தேவர் உள்ளிட்ட சிலருக்கு, அஷ்டமா சித்திகள் அடைவது பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அச்சமயம் நிதர்த்தனி, அப்ரகேந்தி, மேகேந்தி, வர்தயேந்தி, அம்பா, துலா ஆகிய ஆறு பெண்கள் அங்கு வந்தனர். தங்களுக்கும் அஷ்டமா சித்தியை உபதேசித்தருளுமாறு வேண்டினர். இறைவனுக்கு அதில் உடன் பாடில்லை. ஆனால், அருகில் இருந்த உமையவள் இரக்கம் கொண்டு, அவர்களுக்கும் உபதேசிக்கும் படி சிவனிடம் பரிந்துரைத்தாள்.
இதை ஏற்ற சிவன், அவர்களுக்கும் அஷ்டமா சித்திகளை அடைய, பஞ்சாட்சர மந்திரமான, "சிவாயநம' என்று உள்ளன்புடன் ஜெபிக்க வேண்டும் என்றும், அந்த மந்திரத்தின் பெருமை குறித்தும் உபதேசித்துக் கொண்டிருந்தார். ஆனால், கிடைத்த வாய்ப்பை அந்தப் பெண்கள் தவற விட்டனர். அவர்கள் பாடத்தைக் கவனிக்காமல், கவனத்தை சிதற விட்டனர். இதை கண்ட சிவனுக்கு கோபம் வந்து விட்டது...
"பாடம் நடக்கும் போது கவனிக்காமல் கவனம் சிதறிய நீங்கள், பட்ட மரத்திற்கு ஒப்பாவீர்கள். பட்ட மங்கைகளான நீங்கள், கற்பாறைகளாக மாறுவீர்கள்' என்று சாபம் அளித்தார். அதிர்ந்து போன அந்த மங்கையர், தங்களுக்கு விதிக்கப்பட்ட சாபத்திற்கு விமோசனம் வேண்டினர். சிவன் அவர்களிடம், "நீங்கள் கருங்கற்பாறைகளாய் ஆயிரம் ஆண்டுகள் பூமியில் இருங்கள். அதன்பின், குரு வடிவில் காட்சியளித்து, உங்களுக்கு சாப விமோசனம் அளிக் கிறேன்' என்றார்.
அவ்வாறே சிவன் எழுந்தருளி, கார்த்திகை பெண்களுக்கு சாப விமோசனம் அளித்தார். அத்தலமே, சிவகங்கை மாவட்டத்திலுள்ள பட்டமங்கலம் ஆகும். "பட்டமங்கை' என்ற பெயரே பட்டமங்கலம் ஆனதாகக் கூறப்படுகிறது. இங்குள்ள சிவாலயத்தில், கார்த்திகை பெண்களை தரிசிக்கலாம். இதன்பின், முருகனை வளர்க்கும் பாக்கியம் பெற்ற இவர்கள், வான மண்டலத்தில் கார்த்திகை நட்சத்திரமாகும் அந்தஸ்தை பெற்றனர். கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்ட முருகனுக்கு, "கார்த்திகேயன்' என்ற பெயர் வந்தது.
ஆடிக்கிருத்திகை விரதம் மேற்கொள்வோர், மேலான பதவிகளை அடைவர். நாரத மகரிஷி, 12 ஆண்டுகள் இவ்விரதம் இருந்து, எல்லா முனிவர்களுக்கும் மேலாக, நினைத்தவுடன் சர்வ லோகங்களுக்கும் சஞ்சாரம் செய்யும் பதவி பெற்றார். இந்நாளில், முருகனுக்குரிய கந்த சஷ்டிக் கவசம், சண்முகக் கவசம் படிப்பதும், கந்த புராணம் கேட்பதும் நல்லது. இந்நாளில் முருகனுக்கு அபிஷேகம் செய்து, வழிபட வேண்டும்.
ஆசிரியர்கள் வகுப்பு நடத்தும் போது, பாடத்தை கவனமாகக் கேட்க வேண்டும் மாணவர்கள். இல்லாவிட்டால், வீட்டில் வந்து எவ்வளவு தான் படித்தாலும், மனதில் ஏறாது. இறுதியில் தோல்வியைத் தழுவி, காலம், பணத்தை வீணாக்க நேரிடும். பெற்றவர்களின் வெறுப்புக்கு ஆளாகி மனக்கசப்பு ஏற்படும். வெற்றி பெற்றவர்கள் மத்தியில், அவமானமாகவும் இருக்கும். கார்த்திகை பெண்களின் வரலாறு, இதைத் தெளிவாக மாணவர்களுக்கு எடுத்துரைக்கிறது.
ஆடிக்கிருத்திகையன்று முருகனை, மாணவர்கள் அவசியம் வணங்க வேண்டும். ஒருமித்த மன நிலையைத் தருமாறு அவரிடம் கேட்க வேண்டும். ஒருமனப்பட்ட மனதுடன் வகுப்பை கவனிப்பவர்களும், படிப்பவர்களும், முருகன் அருளால் வெற்றி வாகை சூடுவர்.

Wednesday, August 8, 2012

கடவுள் மனிதனாக

Posted On Aug 8,2012,By Muthukumar

`கடவுளுடைய திருநாமம் பேசப்படும் இடமெல்லாம் புண்ணியத் தலங்களே'.
இவ்வாறு இருக்க, அவர் திருநாமத்தைக் கூறுகிறவர் எவ்வளவு புண்ணிய வடிவாய் இருக்க வேண்டும்?
தெய்விக உண்மையைப் புலப்படுத்தும் அவரிடம் நாம் எவ்வளவு பக்தியுடன் இருக்க வேண்டும்?
ஆனால், உலகத்தில் ஆன்மிக உண்மையை அளிக்கும் மகான்கள் மிகவும் குறைவானவர்களே. அவர்கள் இல்லாமல் உலகம் ஒருமிக்க வாழவும் இயலாது. மானிட வாழ்க்கையின் அழகுமிக்க மலர்கள் அவர்கள்; `தமக்கென்று நோக்கமெதுவுமில்லாத கருணா சமுத்திரம்!'.
`குருவை நான் என்று அறி' என்று கிருஷ்ண பகவான் பாகவதத்தில் பகருகிறார். இத்தகையோர்கள் எந்தக் கணம் முதல் இல்லாமல் போகிறார்களோ அப்பொழுதே உலகம் பயங்கரமான நரகமாகி அதன் அழிவை நோக்கித் துரிதமாகச் செல்லத் தொடங்குகிறது. இவர்களை விட உயர்வும் மகிமையும் உள்ள ஆசாரியர்கள் உலகில் தோன்றுகிறார்கள். அவர்களே ஈஸ்வர அவதாரங்கள்.
அவர்கள் தங்கள் விருப்பத்தாலேயே, ஒரு முறை தொடுவதாலேயே ஆன்மிக அறிவைப் பிறரிடம் பாய்ச்சுவார்கள். அவர்கள் கட்டளையினால் மிக இழிந்தவர்களும் ஒரு விநாடியிலே பெரிய ஞானிகள் ஆகிவிடக் கூடும். அவர்கள் ஆசாரியர்களுக்கும் ஆசாரியர்கள்; கடவுள் மனித உருவத்தில் தம்மைத் தெரிவித்துக் கொள்ளும் பெரிய அவதாரங்களே அவர்கள். அவர்கள் மூலமாகவன்றிக் கடவுளை நாம் காண முடியாது. அவர்களை நாம் பூஜிக்காமல் இருக்க இயலாது. உண்மையாக அவர்களே நம் பூஜைக்கு உரியவர்கள்.
இந்த மானிட உருவத்தில் அளிக்கப்படும் தோற்றங்களிலன்றி இறைவனை வேறு விதத்தில் எவரும் காண இயலாது. வேறு வழியில் நாம் அவரைக் காண முயலும் போது அவரே வெறுக்கத்தக்க ஒரு போலியை உருவாக்கி, அதுவே அவர் என்று நம்புகிறோம்.
இதை விளக்கும் ஒரு கதை உண்டு.
ஒருவனைச் சிவபிரான் உருவத்தைச் செய்யச் சொன்னார்கள். அவன் நெடுநாள் முயன்று ஒரு குரங்கு உருவத்தைப் படைத்தானாம். ஆகவே, கடவுளை அவரது பரிபூரண நிலையிலிருத்திப் பார்க்க முயலும் போதெல்லாம் நமக்குத் தோல்வியே உண்டாகிறது. நாம் மனிதராய் இருக்குமட்டும், மனித நிலையை விட்டு வேறாக நாம் அவரைக் கருத இயலாது. நாம் நம் மானிட நிலையைத் தாண்டி மேலேறுவோமானால், அவரை அவர் உள்ளபடி நாம் உணரக் கூடும்.
ஆனால், நாம் மனிதராய் இருக்கும் மட்டும் அவரை மனிதரில் வைத்து மனிதராகவே பூஜிக்க வேண்டும். நீ எதை வேண்டுமானாலும் பேசலாம். எப்படி வேண்டுமானாலும் முயலலாம். ஆனால், கடவுளை மனிதராக அல்லாமல் வேறு எந்த வகையிலும் உன்னால் நினைக்க முடியாது. இதைத் தவிர வேறு வழியில்லை.
இறைவனையும், நானிலத்துள்ள பொருள்கள் அனைத்தையும் பற்றி அறிவொளி மிக்க பெருஞ் சொற்பொழிவாற்றலாம். தருக்க நிபுணராய்த் திகழ்ந்து இறைவனின் மனித அவதாரங்களைப் பற்றிய நிகழ்ச்சிகள் யாவும் பேதைமையென்று திருப்தியுற நீர் மெய்ப்பிக்கலாம். ஆனால், செயல் முறைக்கு உதவும் பொது அறிவு நிலைக்குச் சற்றே செல்வோம்.
இத்தகைய அறிவுப் பொலிவின் பின்னுள்ளது யாது? சூனியமே! ஒன்றுமின்மையே! அவ்வளவும் நுரை மட்டுமே! கடவுளின் அவதார வழிபாட்டை எதிர்த்து ஒருவர் அறிவு நலம் மிக்க சொற்
பொழிவை நீர் அடுத்த முறை கேட்குங்கால், அவரைப் பற்றி இழுத்து, `கடவுளைப் பற்றி நீர் கொண்ட கருத்து யாது? ஸர்வ சக்தித்துவம்.' `ஸர்வ வியாகபத்துவம்' என்பவற்றிற்கும் இவை போன்ற பிற மொழிகட்கும் அவற்றின் எழுத்துகளுக்கு அப்பால் நீர் கண்ட பொருள்கள் எவை?' என்று வினவுவீராக.
அவற்றால் அவர் அறிந்தது யாதுமில்லை என்பதே உண்மை. அவரது சொந்த மனித இயற்கையால் பாதிக்கப்படாத எக்கருத்தையேனும் அவற்றின் பொருளாக அவர்க்கு வரையறுத்துக் கூற இயலாது. இது பற்றிப் பேசின், ஒரு நூலையும் வாசித்திராதொரு மனிதன் அமைதியாய் இருப்பான். உலக அமைதியைக் குலைக்காதிருப்பான். ஆனால், இப்பெரிய பேச்சாளரோ மன்னுயிருக்குத் தொந்தரவையும், துயரத்தையும் படைத்தளிப்பார். யாது கூறினாலும் சமயம் என்பது அனுபூதியே, பேச்சுக்கு. அனுபூதி ஞானத்திற்கும் மிகச் செவ்வனே வரையறுக்கப்பட்டுள்ள வேறுபாட்டைக் காண வேண்டும்.
நாம் ஆன்மாவிற்குள் ஆழத்தைப் பெறும் அனுபவமே மெய்யுணர்வாகும். இப் பொருள் பற்றியவரை பொது அறிவைப் போன்ற அத்துணை அசாதாரணமானது உண்மையிற் பிறிதொன்றில்லை.
நமது இப்போதைய அமைப்பால் நாம் வரையறையுற்றவர் ஆதலின், இறைவனை மனிதனாகக் காணும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாவோம். உதாரணமாக எருமைகள் இறைவனை வணங்க விரும்புமாயின், அவை தமது சொந்த இயற்கைக் கேற்ப, அவரை ஒரு பேரெருமையாகவே காணும். ஒரு மீன் இறைவனை வழிபட விரும்புமாயின், அவரைப் பற்றிய ஒரு கருத்து ஒரு பெரும் மீனாகவே அமைய வேண்டியதாகும். மனிதனும் அவரை மனிதனாகவே நினைக்க வேண்டியவனாவான்.
இப் பல்வகைக் கருத்துகளும் நோயினால் விரைவுற்ற கற்பனையில் எழுந்தவையல்ல. மனிதனும், எருமையும், மீனும் யாவும் அத்தனை வேறு வேறான கலங்களைக் குறிப்பதாகக் கருதலாம். இத்தனைக் கலங்களும் தத்தம் சுய வடிவிற்கும், கொள்ளும் அளவிற்கும் ஏற்ப நீரை நிரப்பிக் கொள்ளும் பொருட்டு இறைவன் என்னும் கடலுக்குச் செல்லுகின்றன. மனித கலத்தில் நீர் மனித வடிவையும், எருமைக் கலத்தில் எருமை வடிவையும், மீன் கலத்தில் மீன் வடிவையும் பெறுகிறது. இக்கலங்கள் ஒவ்வொன்றிலும் இறைவன் என்னும் கடலிலுள்ள இதே நீர் உள்ளது. மனிதர் இறைவனைக் காணும் போது, அவனை மனிதனாகக் காண்கின்றனர். விலங்குகளிடம் இறைவனைப் பற்றிய கருத்து இம்மியேனும் உண்டாயின் ஒவ்வொன்றும் அதன் தன் சொந்த இலட்சயத்திற்கு ஏற்ப அந்தந்த விலங்காகத்தான் அவரை கண்டு தீர வேண்டும். ஆதலால் இறைவனை மனிதனாகக் காணுதல் நமக்கு தடுக்க வொண்ணாதது. ஆதலால் அவரை மனிதனாக வழிபடும் கட்டுப்பாட்டுக்கு உள்ளாகிஇருக்கிறோம்.
கடவுளை மனிதனாக வழிபடாதவர் இரு வகையினர். அவருள் மதம் என்பதில்லாத காட்டுமிராண்டிகள் ஒரு வகையினர்; மானிட எளிமைகளெல்லாம் தாண்டி அப்பாற் சென்றவர்களும், தங்களுக்கு இயல்பான மானிட சுபாவத்தின் எல்லையைக் கடந்தவர்களுமான பரமஹம்சர்கள் மற்றொரு வகையினர். அவர்களுக்கு `பிருகிருதி' எல்லாம் தாமே ஆகிவிடுகின்றன. அவர்களே கடவுளை அவருடைய உண்மை நிலையில் வைத்துப் பூஜிக்கக் கூடும். பிற விஷயங்களில் போல இரண்டு ஓரங்களும் மடமையின் எல்லையும், ஞானத்தின் எல்லையும் ஒன்று கூடுகின்றன.
இவ்விருவரும் பூஜை புரிய வேண்டியதில்லை. காட்டுமிராண்டி, தன் அஞ்ஞானத்தால் பூஜை செய்வதில்லை. ஜீவன் முக்தர்கள் (வீடு பெற்றவர்கள்) கடவுளைத் தம்மிடத்தில் காண்பதால் பூஜை செய்வதில்லை. இவ்விரு நிலைகளுக்கும் இடையிலே நிற்கும் எவனேனும் கடவுளைத் தான் பூஜை செய்யப் போவதில்லை என்று கூறுவானானால் அவனிடம் விழிப்பாயிரு. மரியாதையாகச் சொல்லுவோமானால், அவன் பொறுப்பற்றுப் பேசுகிறவன். அவன் மதம் நேர்மையற்றது; அறிவற்றவர்களுக்கே ஏற்றது எனலாம்.
மானிடர்க்குரிய குறைகளைக் கடவுள் அறிகிறார். மானிட இனத்திற்கு நன்மை புரியும் பொருட்டு அவர் ஒரு மனிதராகிறார். `தர்மம் குறைந்து அதர்மம் தலையெடுக்கும் போதெல்லாம் நான் அவதரிக்கிறேன்; யுகந்தோறும் அறத்தை நிலை நிறுத்தவும், மறத்தை அழிக்கவும், நல்லோர்களைக் காக்கவும் நான் வருகிறேன்.'
`முரடர்கள் மானிட உருவெடுத்து என்னை, நான் சர்வ லோகங்களுக்கும் பிரபு என்பதை உணராமல் இகழ்கிறார்கள்'. இதுவரை அவதாரங்களைப் பற்றி கீதையில் சொல்லப்பட்டவை, `பெரும் புயல் வரும் போதே சிறிய வாய்க்கால்களும், சாக்கடைகளும் தாம் அறியாமலே வெள்ளத்தால் நிரம்பி விடுகின்றன. அப்படியே அவதாரம் என்று உலகில் ஏற்படும் போது, பெரியதோர் ஆன்மிக வெள்ளம் உலகத்தில் பரவ, மக்கள் யாவரும் வானமெல்லாம் ஆன்மிகம் நிறைந்துள்ளதை உணர்கிறார்கள்!' என்று பகவான் இராமகிருஷ்ணர் கூறுகிறார்.
மேலே நான் குறிப்பிட்டிருப்பது சுவாமி விவேகானந்தரின் சொற்பொழிவில் ஒரு பகுதியாகும்.
கீதையை உபதேசித்த கண்ணன் யார்? அவன் மனிதனா, கடவுளா? கடவுளை மனிதனாகக் காண்பது சாத்தியமா?
இந்தக் கேள்விகளுக்குத்தான் சுவாமி விவேகானந்தர் மேலே கண்டபடி பதில் அளிக்கிறார்.
மற்ற மதங்கள், கடவுளை மனிதரின் தூதுவராகக் காண்கின்றன.
இந்துக்கள் கடவுளையே மனிதராகக் காண்கிறார்கள்.
சுவாமி விவேகானந்தர் சொல்வது போல், எருமையின் கண்ணுக்குக் கடவுள் ஒரு பெரிய எருமை என்றால், மனிதனின் கண்ணுக்குக் கடவுள் ஒரு மனிதர் தான்.
அதனால்தான், அவதார புருஷர்களை நாம் வழிபடுகிறோம்.
இராமாவதாரத்தையும், கிருஷ்ணாவதாரத்தையும் மனிதர்கள் என்றே வைத்துக் கொண்டாலும் கூட, அந்த இருவரும் வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்த அவதாரங்கள்.
அவர்களிலே கிருஷ்ணன் ஒரு ஞானாசிரியன்; இராமன் ஒழுக்கத்துக்கு இலக்கணமான பேராசிரியன்.
கடவுளை மனிதனாகப் பார்ப்பதால் தான் அவனைக் காதலியாக, காதலனாகப் பாவிக்கிறோம்.
இந்த பாவனையில் தெய்வத்தின் ஸ்வரூபமல்லாது, விஸ்வரூபம் வெளியாகிறது.
தாயைப் பார்க்கும் மகனைப் போல ஆண்டவனை நாம் பார்க்கிறோம்.
மனிதர்கள் அணியும் ஆடைகளையே அவனுக்கும் அணிவிக்கிறோம்.
மனிதர்கள் சூடிக் கொள்ளும் மலர்களையே இறைவனுக்கும் சூட்டுகிறோம்.
அந்த மனித பாவத்தில், நம்முடைய அறிவு லயித்து விடுகிறது.
தெய்வம் என்பது எல்லாவற்றையும் கடந்தது என்ற நிலைபோய், அது நம்மோடுஇருக்கும் ஒன்று என்ற நிலை வந்து விடுகிறது.
மனிதனுடைய பகுத்தறிவு, தெய்வத்தைப் பக்கத்தில் காணவே விரும்பி இருக்கிறது. அந்த விருப்பத்தின் உருவங்களே அவதாரங்கள்.
அத்தகைய அவதார புருஷர்கள் பிற்காலத்தில் பிறக்கவே இல்லையா என்றால், இன்றும் பிறந்திருக்கிறார்கள் என்பதே பதிலாகும்.
ஆடி, ஓடி, அலுத்துக் களைத்து, நோய்வாய்ப்பட்டுச் சாகும் மனிதனுக்குக் காட்டுக்கு நடுவே இருக்கும் ரோட்டைக் காட்டுவது போல், ஞானத்தை ஊட்டும் நல்லாசிரியர்கள் இன்னும் இருக்கிறார்கள்.
அவர்களில் பலர், தங்களைக் கடவுளின் அவதாரங்கள் என்று அழைத்துக் கொள்வதில்லை. ஆனால், அவதாரங்களாகவே வாழ்கிறார்கள்.
உயர்தர மருத்துவர்களே, `என் விதி முடிந்து விட்டது' என்று சொல்லும் போது, உள்ளூர் மருத்துவர்கள் ஏன் கையைப் பிடித்துப் பார்க்க வேண்டும் என்பது போல, ரமண மகரிஷி இறைவன் திருவடிகளை அடைந்தார்.
சில சட்டதிட்டங்கள் கட்டுப்பாடுகளுக்கு அவர்கள் தங்களை ஒப்புக் கொடுத்து விடுகிறார்கள். அந்த இடத்திலேயே நிலையாக நின்று விடுகிறார்கள்.
அவர்களில் ஒருவரை நாடி, உபதேசம் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பால வயதில் இருந்து குருசிஷ்ய பாவத்தில் ஈடுபடாதவர்கள் நடுத்தர வயதில் அப்படியொருவரை அணுகுவதே நிம்மதிக்கு வழி.
வெறும் புத்தகங்களைப் படிப்பதின் மூலமே ஞானம் பெற்றுவிட முடியாது.
யாராவது ஒருவர் ஆறுதல் சொன்னால் தான் அழுகை அடங்குகிறது.
யாராவது ஒரு ஞானாசிரியரிடம் உபதேசம் கேட்டுக் கொண்ட பின்னாலே தான், ஏற்கெனவே இருந்த மனோபாவம் மாற முடியும்.
வாழ்க்கை வெறும் கேள்விக் குறிகளாலே ஆனது.
சிக்கல் விழுந்துவிட்ட அந்த நூலை அறுந்து விடாமல் ஜாக்கிரதையாகப் பிரிக்க வேண்டும்.
அந்த வேலை தையல்காரருக்குத் தெரிந்த அளவு நமக்குத் தெரியாது.
நாமே நமக்குள் பெற்றுக் கொள்ளக் கூடிய நிம்மதியை நூறு மடங்காக ஆக்கத் தெரிந்தவர்கள் ஞானிகள் மட்டுமே.
அவர்களை அண்டி, மிச்சக் கால வாழ்க்கையை மேன்மைப்படுத்திக் கொள்ள முயல்வதே நிம்மதிக்கு ஒரே வழி.

ஆடிமாத தேய்பிறை அஷ்டமி

Posted On Aug 8,2012,By Muthukumar


நம் ஒவ்வொருவருக்கும் செல்வ வளத்தை வழங்குபவர்கள் அஷ்ட லட்சுமிகள் ஆவர்.இவர்கள் நமது பிறந்த ஜாதகப்படி,நாம் செய்யும் தொழில்,வேலை,சேவையைப் பொறுத்து வெவ்வேறு விதங்களில் செல்வவளத்தைத் தந்து வருகின்றனர்.இருப்பினும்,நாம் கடந்த ஐந்து பிறவிகளில் செய்த பாவ மற்றும் கர்மவினைகளும்,நாம் இந்த பிறவியில் பிறந்துள்ள வழிவம்சத்தில் கடந்த ஐந்து தலைமுறையினர் செய்த தவறுகளின் விளைவாகவும் நாம் ஆசைப்படும் வசதியான,செல்வச் செழிப்பை அடையமுடியாமல் தவிக்கிறோம்.
பெரும்பாலான மனித உறவுகள் சிதைவதற்கும்,மனக்கசப்பு வருவதற்கும் பண ரீதியான பிரச்னைகளே காரணம்.இந்த பிரச்னைகளால் பலர் எப்படி நாம் சம்பாதித்தாலும்,வசதியாக வாழ்ந்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.அதனாலேயே பலரை மனம் நோக வைத்தும்,ஏமாற்றியும் பணம் சம்பாதிக்கின்றனர்.ஆனால்,அப்படி வாழ்வதும் மாபெரும் தவறு என்று நியாயமாக சம்பாதித்து,தினசரிவாழ்க்கையை கஷ்டங்களோடு ஓட்டிக்கொண்டிருப்பவர்களும் பல கோடி பேர்கள் இருக்கின்றனர்.தர்மத்தை மதித்து,தனது வாழ்க்கையையும்,தனது குடும்பத்தினரையும் கஷ்டப்படுத்துபவர்களுக்காகவே ஒரு சிறந்த வழிபாடு இங்கே சொல்லப்படுகிறது.
ஆம்,நேர்மையான வழியில் செல்வச் செழிப்பை அடைய உதவுவதே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷணபைரவர் வழிபாடு ஆகும்.
ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமி நாளன்று நம் ஒவ்வொருவருக்கும் செல்வச் செழிப்பை அள்ளித்தரும் அஷ்ட லட்சுமிகளும் பூமியில் இருக்கும்   ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்கு வந்து அவரை வழிபடுகின்றனர்.அப்படி வழிபடக் காரணம் என்ன?
பூமியில் வாழும் 700 கோடி மனிதர்களுக்கும் அஷ்ட லட்சுமிகள் செல்வச் செழிப்பை தினமும் அள்ளித் தருவதால்,அவர்களில் “செல்வ வள சக்தி” குறைகிறது;அந்த செல்வ வள சக்தியை அதிகமாகப் பெறுவதற்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட வருகின்றனர்.அதே தேய்பிறை அஷ்டமி நாளில் வரும் ராகு காலத்தில் நாமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால், செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்;அதனால்,நமது ஏழு ஜன்மங்கள் மற்றும் ஏழு தலைமுறை முன்னோர்களில் பாவ வினைகள் தீரத் துவங்கும்;அப்படி பாவ வினைகள் தீரத்துவங்கிய மறு நொடியே நமது செல்வச் செழிப்பும் அதிகரிக்கத் துவங்கும்;
அப்போ, செல்வத்துக்கு அதிபதி மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் கிடையாதா? யார் சொன்னது.இவர்களே செல்வத்துக்கு அதிபதி.மஹா விஷ்ணு,மஹா லட்சுமி,குபேரன் இந்த மூவருக்கும் செல்வத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்படைத்தவரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார்.இந்த தெய்வீக ரகசியம் பல நூற்றாண்டுகளாக மறைக்கப்பட்டு இருந்தது;கடந்த 50 ஆண்டுகளாக இந்த ரகசியம் மனித குல நன்மைக்காக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் அல்லது சன்னதிகள் இருக்குமிடங்கள் வருமாறு:
1.சென்னை அருகே படப்பையில் உள்ள ஸ்ரீஜெய துர்கா பீடம்,
2.சென்னை அருகே இருக்கும் வானகரம்
3.சென்னை பள்ளிக்கரணையில் பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அலுவலகம் அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் என்னும்  திருமண மண்டபத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இருக்கிறது. 

 4.சென்னையில் இருக்கும் ஐ.சி.எஃப் பேருந்து நிலையத்துக்கு அருகில் கமலவிநாயகர் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் உள்ளே ஒரு சன்னதி இருக்கிறது.              
5.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கி
6.சிதம்பரம் கோவில்
7.திரு அண்ணாமலையில் மூலவர் சன்னதியை ஒட்டி இருக்கும் உட்பிரகாரம்
8.திரு அண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) 
செல்லும் சாலையில் 12 கி.மீ.தொலைவில் இருக்கும் காகா ஆஸ்ரமம்(சித்தர் வழிபாட்டு முறைப்படி நிறுவப்பட்ட ஒரே ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் இதுதான்!!!)
9.திருச்சி அருகில் புதுக்கோட்டை செல்லும் வழியில் இருக்கும் தபசு மலை
10.திருச்சி மலைக்கோட்டையை ஒட்டி இருக்கும் தெருவில் ஒரு கோவில்
11.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவ சமாதி இங்கே இருக்கிறது)
12.பிள்ளையார்பட்டி அருகிலிருக்கும் வயிரவன்பட்டி
13.திண்டுக்கலில் இருந்து கரூர் செல்லும் வழியில் 10 கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு அருள்மிகு சவுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஸ்ரீசொர்ண பைரவர் இருந்து அருளாட்சி செய்து வருகிறார்.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் இங்கே சிறப்பான பூஜை மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றுவருகின்றன.
14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் சன்னதி,
   ரத்தின வேல் முருகன் உடையார் திருக்கோவில்,
   ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,
   நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6.
15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் திருக்கோவில்,
ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்
வழித்தடம்:கரூரிலிருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்.அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்.நடந்து செல்வது கடினம்.                   (பூசாரி செல் எண்:92451 69455)
16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,     பாண்டிச்சேரி.
நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்
வழித்தடம்:பாண்டிச்சேரியிலிருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இந்த நிறுத்தத்தில் இருந்து 1 கி.மீ.தூரத்தில்  இருக்கிறது.
இங்கே ஸ்ரீசொர்ண பைரவரின் இடுப்பில் ஸ்ரீசொர்ணதா தேவி கைவைத்தபடி இருக்கிறார்.எனவே,இங்கே வழிபடுவோர்களுக்கு விரைவான பலன்கள் கிடைத்துவருகிறது.
17.அறந்தாங்கியிலிருந்து 30 கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தியில் அருள்மிகு பவானீஸ்வரர் கோவிலில் பைரவ சித்தர் நிறுவிய ஸ்ரீசொர்ண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்.
18.நாகப்பட்டிணம் நகருக்குள்ளே இருக்கும் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்
19.விரைவில் பெரம்பலூரில்!!
இந்த ஆடி மாதத்து தேய்பிறை அஷ்டமியானது 9.8.12 வியாழக்கிழமை மதியம் 12.42க்குத் துவங்கி,10.8.12 வெள்ளிக்கிழமை மதியம் 2.37க்கு நிறைவடைகிறது.
இதில் ராகு காலங்கள் வியாழக்கிழமை மதியம் 1.30 முதல் 3 மணி வரையிலும்,வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணி வரையிலும் இருப்பதால் இந்த இரண்டு நாட்களிலும் இரண்டு ராகு கால வேளைகளிலும் ஸ்ரீசொர்ண பைரவரை வழிபட்டுவரலாம்.இந்தக்  கோவில்களில் ஒருசிலவற்றில் இலவச பானங்கள் வழங்குகிறார்கள்.அவைகளை கண்டிப்பாகத் தவிர்க்கவும்.கோவிலுக்குள் செல்லும்போதும்,கோவிலில் வழிபட்டுவிட்டு வெளியேறும்போதும் இந்த இலவச பானங்களை ஒருபோதும் அருந்தக் கூடாது.
இந்த ராகு கால நேரத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரது மூலமந்திரத்தை 330 தடவை ஜபிக்க வேண்டும்.அவ்வாறு ஜபித்தால்,பின்வரும் நன்மைகளில் ஏதாவது ஒன்று நமக்குக் கிட்டும் என்பது அனுபவ உண்மை ஆகும்.
1.வர வேண்டிய பணம் வந்துவிடும்.
2.தர வேண்டிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கும் சூழ்நிலை  உருவாகிவிடும்;எவ்வளவு பெரிய கடன்களாக இருந்தாலும் தீர்ந்துவிடும்.
3.வயதானவர்களுக்கு நோயினால் உண்டான உபாதைகள் தீரும்;வலியும்,வேதனையும் பெருமளவு குறையும்;
4.சனியின் தாக்கம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி) தீரும்;
5.வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும்;தொழில் செய்பவர்களுக்கு வருமான அளவு அதிகரித்துக்கொண்டே செல்லும்;
6.அரசியலில் இருப்பவர்களுக்கு அரசியல் வெற்றிகள் உண்டாகும்.
7.பணம் சார்ந்த எப்பேர்ப்பட்ட பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.
8.நமது கடுமையான கர்மவினைகள் தீரத்துவங்கும்.
ஸ்ரீசொர்ண பைரவரின் மூலமந்திரம்:
ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம் சகவம்ஸ
ஆபதுத்தோரணாய அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷண பைரவாய மமதாரித்ரிய வித்வேஷணாய
ஓம் ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம்சிவசிவஓம்

Monday, August 6, 2012

ஐங்கரனும், எண் ஐந்தும்…

Posted On Aug 6,2012,By Muthukumar

முழுமுதற்கடவுளான விநாயகருக்கும் ஐந்தாம் எண்ணிற்கும் ஒரு விசேஷ தொடர்பு உள்ளது.
`சுக்லாம்பரதரம் விஷ்ணும்' எனும் கணேச மந்திரத்தில் அவரைப் பற்றிய அடைமொழிகள் ஐந்து உள்ளதால், இம்மந்திரத்தைச் சொல்லும்போது, நாம் நமது நெற்றிப் பொட்டில் ஐந்துமுறை கொட்டிக்கொள்ள வேண்டும். (3 முறை அல்ல)
விநாயகருக்கு மகிழ்ச்சி தரும் `கணானாம் த்வா' என்ற மந்திரத்திலும் இவருடைய 5 திருநாமங்கள் கூறப்பட்டுள்ளன.
பிரம்மா, விஷ்ணு, ருத்ரர், சூரியன், சக்தி என உலகம் புகழும் ஐந்து தெய்வங்களும் மகா கணபதியின் அங்கங்களிலிருந்து உதித்ததாக நம்பப்படுகிறது.
அகாரம், உகாரம், மகாரம், நாதம், பிந்து இவைகளை உள்ளடக்கியவர் பஞ்சாட்சரமாகிய ஓங்கார சொரூபர் கணபதி. பஞ்ச பூதங்களும் முதன்முதலாக இவரிடமிருந்தே தோன்றியதாக முக்கல மகரிஷி தெரிவிக்கிறார்.
ஸ்வானந்தபுவனம், ஸ்வர்கம், கைவாளம், பாதாளம், மயூரேசம் ஆகிய ஐந்து இடங்களிலும் மகா கணபதி மகிழ்வுடன் வாழ்கிறார்.
ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், அனுக்ரஹம், திரோதானம் எனப்படும் ஐம்பெரும் தொழில்களையும் செய்யும் விநாயகரை பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், சக்தி, சூரியன் ஆகிய ஐந்து தெய்வங்களுக்கும் `பதி' என்கிறார்கள்.
பஞ்சாஸ்ய கணபதியை, பஞ்சமுக கணபதி என்கிறோம். பஞ்முக கணபதியை ஹேரம்ப கணபதி என்பார்கள். `ஹே' என்றால் எளியவர், `ரம்ப' என்பதற்கு `நாயகன்' என்று பொருள். ஆகவே ஹேரம்பர் என்றால் `எளியவருக்கு நாயகன்' என்றாகும்.
ஹேரம்ப கணபதிக்கு ஐந்து யானை முகம் உண்டு. இந்த ஐந்து யானை முகங்களும் முத்து, தங்கம், நீலம், குந்த புஷ்பம், குங்குமப்பூ ஆகிய ஐந்து நிறங்களுடன் பிரகாசிக்கின்றான். நான்கு கைகளுடன் தும்பிக்கையையும் சேர்ந்து கணபதியை ஐங்கரன் என்கிறோம்.

Sunday, August 5, 2012

ஆடி மாத பவுர்ணமி பூஜை,பத்திரகாளியம்மன்

Posted On Aug 5,2012,By Muthukumar

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் சிவகாசி ரோட்டில் ஸ்ரீவில்லிபுத்தூரின் ஊருக்குள்ளேயே அமைந்திருக்கிறது முதலியார்பட்டித் தெரு.பேச்சுவழக்கில் தெற்குப்பட்டித் தெரு என்று அழைப்பார்கள்.நெசவுத் தொழில் செய்யும் சாலியர் சமுதாய மக்கள் வாழ்ந்து வரும் இந்தத் தெருவின் நடுவில் அமைந்திருக்கும் கோவிலே அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவில்.
சுமார் 40 ஆண்டுகளாக ஒவ்வொரு சிவராத்திரியன்றும் இரவில் ஒரு பாட்டி இந்தக்கோவிலில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு(கரண்டி இல்லாமல்) எடுப்பார்;அப்படி எடுக்கப்பட்ட அப்பத்தை அருள்நிறை பத்திரகாளியம்மாளுக்குப் படையலிட்டு,வந்திருக்கும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவது வழக்கம் ஆகும்.
தொடர்ந்து 12 பவுர்ணமிகளுக்கு இந்தக் கோவிலுக்கு வருகை தந்து பவுர்ணமி பூஜையில் கலந்து கொண்டால்,தீராத பிரச்னைகள் தீரும்.இரவு 10 மணிக்குத் துவங்கும் பவுர்ணமிபூஜை நள்ளிரவு 1 மணிக்கு நிறைவடையும்.இந்த பவுர்ணமி பூஜையைக் காண பூர்வபுண்ணியம் செய்திருக்க வேண்டும்.பவுர்ணமி பூஜை நாட்களை அறிய பூசாரி செல் எண்:9003353286(பூசாரி சுந்தரமகாலிங்கம்,துணைப்பூசாரி முருகன் MCA.,)
சுமார் 2000 சாலியர்  குடும்பங்களின் குலதெய்வமாக விளங்கும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மனை ‘கையால் பணியாரம் சுடும் பத்திரகாளி கோவில்’ என்று இப்பகுதி மக்கள் அழைப்பார்கள்.

மருந்து பிரசாதம் தரும் கோவில்! by vayal

Posted On Aug 5,2012,By Muthukumar
கோவிலுக்கு சென்றால் விபூதி, குங்குமம், சந்தனம் பிரசாதமாக வாங்குவோம். கேரளாவில் உள்ள ஒரு கிராமத்தில், பழமையான நம்பூதிரி குடும்பத்து கோவிலில், மருந்தையே பிரசாதமாக தருகின்றனர். "குழந்தைகளுக்கு படிப்பு நன்றாக அமைகிறது, ஞாபக சக்தி கூடுகிறது, நோய் எதிர்ப்பு சக்தி கூடுகிறது, மன அமைதி ஏற்படுகிறது' என்ற நம்பிக்கையோடு, இங்கு அம்மனை கும்பிட்டு, மருந்து பிரசாதம் வாங்கிச் செல்பவர்கள் ஏராளம்.
எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளத்தில் உள்ளது நெல்லிக்காட்டு பகவதி கோவில். எர்ணாகுளத்தில் இருந்து, 48 கி.மீ., தூரத்தில் உள்ள, கோட்டயத்தில் இருந்து அங்கமாலி செல்லும் பாதையில், 37வது கி.மீ.,தொலைவில் இக்கோவில் உள்ளது. கல்விக்கு சரஸ்வதி போன்று, "மருத்துவத்திற்கான தெய்வம்' என வணங்கப்படும் தன்வந்திரிமூர்த்திக்கும், பகவதி அம்மனுக்கும் தனித்தனி கோவில்கள் இங்கு உள்ளன. ஆடி மாதத்தில், இக்கோவிலில் வலம் வந்து, நேர்ச்சைகள் நடத்தி, மனமுருக பிரார்த்தனை செய்து அம்மனை வழிபட்டால், முன்ஜென்ம பாவம் போய், நம் நோய்கள் எல்லாம் தீரும் என்பது ஐதீகம்.
"இறைவன் தரும் நோய்கள், இறைவன் அருளால் தான் நீங்கும்' என்ற நம்பிக்கையின் அடிப்படையில், மந்திரங்கள் ஓதி, பிரார்த்தனை நடத்தி, அம்மன் முன்னிலையில், பல்வேறு ஆயுர்வேத, பாரம்பரிய மருந்து பொருட்கள் எல்லாம் கலந்து இந்த, "அபூர்வ மருந்து' தயார் செய்யப் படுகிறது. இதை, 41 நாட்கள் அம்மன் கருவறையில் வைத்து, பூஜை செய்வர். ஆடி மாதம் முதல் தேதியிலிருந்து பக்தர்களுக்கு இலவசமாக வழங்குகின்றனர். இந்தாண்டு ஆக., 16ம் தேதி வரை, காலை 6.00 மணி முதல் 11.00 மணி வரை, மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 வரை நடை திறந்திருக்கும் போது பிரசாதம் வழங்கப்படுகிறது.
கோவில் நிர்வாகி என்.பி.நாராயணன் நம்பூதிரி கூறுகையில்,""இந்த ஒரு மாதம் மட்டுமே, ஒரு லட்சம் பக்தர்கள் வரை வருவர் என எதிர்பார்க்கப் படுகிறது. ஆக.,11 ம் தேதி நடக்கும், "மருந்து பொங்கல்' நிகழ்ச்சி இங்கு விசேஷமானது. அன்று பொங்கலிட வரும் பக்தர்களுக்கு, பொங்கலுக்கான மருந்தை நாங்கள் தருவோம். அரிசி, சர்க்கரை அவர்கள் எடுத்து வர வேண்டும். கோவிலில் இருந்து தரும் மருந்து பிரசாதத்தை, அம்மன் முன் சாப்பிட வேண்டும். வர இயலாத நோயாளிகளின் உறவினர்கள் குறைந்த கட்டணம் செலுத்தி, மருந்து பிரசாதத்தை வாங்கிச் செல்லலாம். கோவிலில் உள்ள பாரம்பரிய, அரிய சுவடிகளில் கூறப்பட்டுள்ளவாறு பொருட்கள் சேர்த்து மருந்து தயாரிக்கப்படுகிறது,'' என்றார்.
அம்மன் அருள் மழை பொழியும் இந்த கோவில் பற்றி, மேலும் தெரிந்து கொள்ள, 09447 875067ல், தொடர்பு கொள்ளலாம்.

Thursday, August 2, 2012

பிறந்த வீடா, புகுந்த வீடா?-ஆக., 1 – ஆடித்தபசு

Posted On Aug 2,2012,By Muthukumar

 

சமுதாயத்தில் பெரும் பிரச்னை, பிறந்த வீடு பெரியதா, புகுந்த வீடு பெரியதா என்பது தான். பல்லாண்டுகளாக, இந்தக் கேள்விக்கு விடை கிடைக்காமல், நாம் தான் திண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், பார்வதி தேவி, இரண்டு வீடுகளும் சம உரிமை கொண்டவையே என, புராண காலத்திலேயே நிரூபித்து விட்டாள்.
தபசு என்றால் தவம். திருநெல்வேலி மாவட்டத்தில் சமையல்காரரை தபசுப்பிள்ளை என்பர். சமையல் கூட ஒரு வகையான தவம் தான். தவத்திற்கு தேவை, மனதை ஒருமுகப்படுத்துவது. சமையலுக்கு தேவையும் அதுவே. சற்று கவனம் சிதறினாலும், உப்போ, காரமோ கூடி விடும். அதனால் தான், மனதை ஒருமுகப்படுத்தி, சமையல் செய்பவரை, தபசுப்பிள்ளை என்றனர்.
பார்வதிதேவியும், சிவனும் இணைந்து, அர்த்தநாரியாகக் காட்சி தந்துள்ளனர். அர்த்தம் என்றால் பாதி. நாரி என்றால் பெண். பாதி பெண்ணும், பாதி ஆணும் கொண்ட வடிவம் இது. இதே போல, அம்பாளுக்கு தன் கணவரையும், அண்ணனையும் ஒருசேரக் காணும் எண்ணம் ஏற்பட்டது. இந்தக் காட்சி, சாதாரணமாக கிடைத்து விடுமா? அதற்காக, பூலோகம் வந்து தவம் செய்தாள். அவளுடன் தேவர்கள், பசு வடிவில் வந்தனர். பசுக்களை, "கோ' என்றும், "ஆ' என்றும் சொல்வதும் வழக்கம். அம்பாள், அவர்கள் மத்தியில் நிலவை போல் பளிச்சென நின்றாள். இதனால், அவள், "ஆ'க்களை உ<டையவள் என்ற பொருளில் ஆவுடையம்மாள் என்றும், "கோ'க்களின் மத்தியில் பிரகாசமாக நின்றவள் என்ற பொருளில், கோமதி என்றும் பெயர் பெற்றாள்.
ஆடிமாத பவுர்ணமியன்று, சிவனும், நாராயணனும் இணைந்து, சங்கரநாராயணராக கோமதிக்கு காட்சி தந்தனர். இவ்வூரே, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சங்கரநாராயணர் கோவில் ஆனது. அது@வ, சங்கரன்கோவில் என பெயர் மாற்றம் பெற்றது.
திருநெல்வேலியில் இருந்து, 35 கி.மீ., தூரத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சென்று, அங்கிருந்து, 6 கி.மீ., தூரத்திலுள்ள கோடரங்குளம் கிராமத்திலும் ஒரு சங்கரன்கோவில் உள்ளது. இதை, தெற்கு சங்கரன்கோவில் என்பர். தாமிரபரணியும்,
மணிமுத்தாறும் கலக்குமிடத்திலுள்ள இந்த கோவிலிலும், ஆடித் தபசு விழா பிரசித்தம். ஆடித்தபசு திருவிழாவின் போது, தாமிரபரணி நதிக்கரையில் தபசு மண்டபத்தில் அம்பாள் எழுந்தருளுகிறாள். சிவன் சங்கரநாராயணராகவும், சங்கரலிங்கமாகவும் காட்சி தருகிறார்.
இங்கு சிவன், சுயம்பு மூர்த்தியாக ராகு, கேது அம்சமாக உள்ளார். எனவே, ஜாதக ரீதியாக இந்த தோஷம் உள்ளவர்கள், திருமணத் தடைக்கு ஆளாவர். அவர்கள் ஆடித் தபசு விழாவில், கோமதிக்கு மாவிளக்கு தீபம் ஏற்றி வழிபட்டால், தடை நீங்கும் என்பது ஐதீகம். வீடுகளில் பல்லி, பூரான் உள்ளிட்ட பூச்சித்தொல்லை அதிகமாக இருந்தால், அது குறைய, இந்தக் கோவிலில் விற்கப்படும் பூச்சி உருவங்களை உண்டியலில் இடுகின்றனர். முகப்பரு உள்ளவர்கள், உப்பு, மிளகு காணிக்கை செலுத்துவது வழக்கம்.
விவசாயிகளுக்கு இது முக்கியத் திருவிழா. "ஆடிப்பட்டம் தேடி விதை' என்பர். ஆடியில் துவங்கும் விவசாயப் பணிகள், தங்குதடையின்றி நடந்து, விளைச்சல் பெருக, அம்பாளை வேண்டி வரலாம். அம்பாளுக்கு காணிக்கையாக, விளை பொருட்களை அளிப்பதும், இங்கு மரபாக உள்ளது. அம்பாளின் தபசுக் காட்சி காணும் பக்தர்கள், பிறந்த வீடு, புகுந்த வீடு சண்டையை மறந்து, ஒற்றுமையாக வாழ உறுதியெடுக்க வேண்டும்.

நாமம் போடுதல்

 Posted On Aug 2,2012,By Muthukumar
வராஹ அவதாரத்தின் போது, மகாவிஷ்ணு வெள்ளை வெளேரென்று உள்ள தன் பற்களால் உலகையே தூக்கி நிறுத்தினார். அவருடைய பற்கள் பட்ட இடங்களில் `ச்வேத மிருத்திகை' எனும் வெள்ளை மண்கட்டிகள் உருவானதாம். அதைப் போன்ற வெள்ளை மண்ணை, `திருமண்' என்று வைணவர்கள் நாமமாகப் போட்டுக் கொள்கிறார்கள்.
வைணவர், சைவர், மாத்வர் அனைவருமே நெற்றியில் மட்டுமின்றி, மார்பு, வயிறு, புஜங்கள், மணிக்கட்டு முதலிய இடங்களில், நாமமோ, விபூதியோ, சந்தனமோ, இட்டுக் கொள்வார்கள்.
கேசவ, நாராயண, மாதவ, கோவிந்த, விஷ்ணு, மதுசூதன, திரிவிக்ரம், வாமன, ஸ்ரீதர, ஹ்ருஷிகேச, பத்மநாப, தாமோதர, ஆகிய 12 பெயர்களும் திருமாலுக்கு விசேஷமானவை.
பெருமாளின் இந்த 12 பெயர்களை, அதாவது நாமாக்களை கூறிக்கொண்டே, வைணவர்கள் தங்கள் உடலில் 12 இடங்களில் திருமண் இட்டு கொள்வார்கள். நாமாக்களை சொல்லி அணிவதால், `நாமம் போடுதல்' என்று ஆயிற்று

இச்சா பத்தியம்

Posted On Aug 2,2012,By Muthukumar

யோகப் பயிற்சிகளில் ஒரு வகையான பயிற்சி உண்டு. உடல் வலிமையுள்ள ஒரு ஆடவன், தனியான ஒரு இடத்தில் ஒரு பெண்ணின் பக்கத்தில் படுத்திருந்தாலும், அவளைத் தொடாமலேயே இருக்கும் பயிற்சி அது.
`இல்லறத்தில் பிரம்மசரியம்' என்று இதனைக் காந்தியடிகள் விவரித்தார்கள்.
இப்போது அமெரிக்காவில் இந்து ஞானிகளைச் சுற்றிலும் அமெரிக்கர்கள் கூட்டமே அதிகமாக இருக்கிறது என்பதும் நமக்குத் தெரியும்.
அங்கே ஒரு இந்து ஞானி, ஒரு யோகப் பயிற்சியைத் தொடங்கி வைத்திருப்பதாக `டைம்' பத்திரிகையில் படித்தேன். அதன் புகைப்படத்தையும் அதில் பார்த்தேன்.
ஆறு ஆண்களும் ஆறு பெண்களுமாகப் பன்னிரண்டு பேர் நிர்வாணமாக நிற்கிறார்கள். அவர்கள் ஒரு வட்டவடிவத்தில் நின்று கொள்கிறார்கள். அதிலும் ஒரு ஏரியில் இடுப்பளவு தண்ணீரில் நிற்கிறார்கள். ஒருவர் தோள் மீது ஒருவர் கை போட்டுக் கொள்கிறார்கள். எல்லோருடைய அங்கங்களும் திறந்திருக்கின்றன. இந்த நிலையில் ஒருவர் மீது மற்றவருக்கு ஆசை ஏற்படாதவாறு பயிற்சி செய்கிறார்கள்.
நான் பல இடங்களில் குறிப்பிட்டது போல, `இயக்கத்தில் இயலாமை', `இருந்தும் இல்லாமை', `கிடைத்தும் ஏற்றுக் கொள்ளாமை' என்பது இதுவே.
இதை யோகாசனம், என்பதைவிட `மோகாசனம்' என்பது பொருந்தும்.
மனிதனது உணர்ச்சிகளில் சீக்கிரம் தூண்டப்படக்கூடியது. `பாலுணர்வு' ஒன்றே.
பசியும் ஒரு உணர்ச்சிதான்; அதிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
மனிதனுடைய தன்னடக்கத்தை மீறி எந்த உணர்ச்சியும் எழுந்து விடுவதில்லை.
ஆனால், காமம் எந்த மேதையையும் முட்டாளாக்கிக் கொழுந்து விட்டு எரியத் தொடங்கும்.
கிடைக்காத பெண்ணுக்கே ஏங்குகின்ற உலகத்தில், கிடைத்து விட்ட பெண்ணை அனுபவிக்காமல் இருக்கப் பயிற்சி பெற வேண்டும்.
அதன் பெயரே, `இல்லறத்தில் பிரம்மசரியம்!'
சித்தர்கள் இதனை, `இச்சா பத்தியம்' என்பார்கள்.
காந்தியடிகள் பிற்காலங்களில் அப்படி வாழ்ந்து காட்டினார்.
அவருக்கு முன்னால் பரமஹம்சர் வாழ்ந்து காட்டினார்.
செயலற்ற நிலையில் பலவீனமான மனிதன், `நான் என் மனைவியைச் சகோதரியாகப் பாவிக்கிறேன்' என்றால், அது `திராணி' இல்லாததால் வந்த தத்துவம்.
உடல் கெடாமல் உள்ளத்தில் உணர்ச்சி மேலோங்கிய நிலையில், அந்த அடக்கம் தோன்றிவிடுமானால், அதுவே ஆன்மாவைப் புடம் போட்ட
ஞானம்.தேகம் ஆன்மாவை வென்றுவிடும். தறிகெட்டு ஓடும்.
ஆன்மா அதை வெல்ல முடியுமானால் அதுவே அற்புதமான யோகம்.
விவேகானந்தரைப் போன்ற இளம் துறவிகளை இன்னும் இந்து மதத்தில் காண்கிறோம். கிறிஸ்துவ மதத்திலும் அப்படிப்பட்ட சகோதரர் கள் இருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் மனத்தால் உடம்பை அடக்கியவர்கள்.
அடக்க முடியாமல் கெட்டுப்போய் ஞானிகளானவர்கள் எல்லாம், `உடம்பு என்னை ஆட்டிப் படைக் கிறதே' என்றுதான்
எழுதியிருக்கிறார்கள்.எனக்குத் தெரிந்தவரை தமிழகத்தில் இருந்த பிரம்மசாரிகளில் மிக முக்கியமானவர், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள். பெண் வாடையே இல்லாமல் வாழ்ந்தவர் அவர்.
உடம்பின் சுக்கிலத்தை உடம்புக்குள்ளேயே வைத்திருந்து மீண்டும் ரத்தத்திலேயே கலந்து விடுமாறு செய்யும் யோகத்தை அவர்
மேற்கொண்டிருந்தார்.அவரது உடம்பின் பளபளப்புக்குக் காரணம் அது தான் என்று சொல்வார்கள்.
ஆனால், அப்படிப்பட்ட நைஷ்டிக பிரம்மசாரிகள் நீண்ட நாள் வாழ்வதில்லை.


ஒரு குறிப்பிட்ட காலம் வரை இல்லறத்தில் வாழ்ந்த பிறகு, அனுபவித்த மனைவியையே சகோதரியாகப் பாவிக்கும் பாவனையையே நான், `இச்சா பத்தியம்' என்று குறிப்பிடுகிறேன்.
காம உணர்ச்சி ஒருவனுக்கு இல்லாவிட்டாலும் கூட, அவனுடைய உணவு முறையின் மூலம் தூக்கம் பிடிக்காத நிலை ஒன்று ஏற்படும். விபரீத சிந்தனைகள் தோன்றும்.
அதனால் தான் இந்துக்கள், `தனியாக இருக்கும் ஆடவர்கள் குப்புறப் படுக்கக் கூடாது' என்றும், `பெண்கள் மல்லாந்து படுக்கக்கூடாது' என்றும் கூறுவார்கள்.
இதனை அறிந்துள்ள எந்த இந்துப் பெண்ணுமே மல்லாந்து படுப்பதில்லை. ஒருக்கணித்துதான் படுப்பாள்.
இந்துமதத்தின் சாது சந்நியாசிகள் அந்நாளில் தலைக்குத் தலையணை வைக்கக்கூடாது என்ற விதி இருந்தது.
சாதாரணமாகச் செதுக்கப்பட்ட மரக்கட்டையைத்தான் தலைக்கு வைத்துக் கொண்டு படுப்பார்கள்.
ஒரு வகை மரத்தில் செய்யப்பட்ட கட்டையைத்தான் செருப்பாகப் பயன்படுத்துவார்கள். மெத்தென்ற தோல் செருப்பு அணிய மாட்டார்கள்.ராமகிருஷ்ண பரமஹம்சரும், காந்தியடிகளும் உணவைக் குறைத்ததற்குக் காரணமே, `இல்லறத்தில் பிரமசரிய'த்தை அனுஷ்டிப்பதற்குத்தான்.
இதைக் காந்தியடிகளே ஒரு முறை கூறி இருக்கிறார்.
ஒரு முறை பரமஹம்சரின் சீடர்கள் அவரைப் பார்ப்பதற்காக அவர் தங்கும் இடத்திற்கு வந்தார்கள்.
அப்பொழுது நள்ளிரவு.
பகவான் தேவியாரோடு உள்ளே இருந்தார். `ஐயோ! இந்த நேரத்தில் வந்து விட்டோமே, அவரது சந்தோஷத்தைக் கெடுத்து விட்டோமே' என்று அந்த இளம் உள்ளங்கள் பயந்தன.
அவர்களுடைய நினைப்பு, பகவான் தேவியாரோடு சல்லாபித்துக் கொண்டிருப்பதாக.
திடீரென்று வெளியே வந்தார் பரமஹம்சர். அவர்கள் சொல்லாமலே அவர்களது பயத்தை உணர்ந்தார்.
மெல்லச் சிரித்துக் கொண்டே, `நான் தேவியின் அருகே இருந்தாலும் தெய்வத்தின் அருகில் தான் இருக்கிறேன்' என்றார்.
சீடர்களுக்குக் குளிர் விட்டதுபோல் இருந்தது.
காம லயத்தை விட்டு விட்டவனுக்கு மரத்தைத் தொடுவதும், மனைவியைத் தொடுவதும் ஒன்றுதான்.
`துறவு' என்பதற்கே `நிர்வாணம்' என்று பெயர்.
ஒரு பெண்ணின் நிர்வாணத்தில் கூட அவன் தெய்வீகத்தையே காணுகிறான்.
கண்ணகி கற்புக்கரசி என்றார்கள்; அதில் அவளுக்கென்ன புதுப் பெருமை?
அவள் கற்போடு இருந்து தீர வேண்டிய குலமகள்.
மதுரையை அவள் எரித்ததை வேண்டுமானால், `மறக்கற்பு' என்று கூறலாம்.
ஆனால், மாதவி கற்போடு இருந்தாளே, அதுதான் பெருமை.
மாதவி வீட்டுக்குப் பத்துப்பேர் வந்துபோனால் அதைப்பற்றி யாரும் பேசப் போவதில்லை. அவள் அதற்கென்றே நிர்ணயிக்கப்பட்டவள்.
வசதி இருந்தும், நியாயம் இருந்தும், அதை அவள் பயன்படுத்திக் கொள்ளாமல் கற்போடு வாழ்ந்தாள்.
அதைப் போன்றதுதான் இல்லறத்தில் பிரம்மசரியம்.
கெட்டுப் போய் ஞானிகள் ஆனவர்கள், பெண்களைக் கேவலமாகத் திட்டி இருக்கிறார்கள்.
`நாற்றச் சரீரம்' என்றும், `ஊத்தைச் சரீரம்' என்றும் `மலசலம் நிறைந்த மண்பாண்டம்' என்றும், `ஆறாத புண்' என்றும், `வெட்டுண்ட காயம்' என்றும் அவர்கள் பலவாறாகப் பெண்களை ஏசி இருக்கிறார்கள்.
இவையெல்லாம் செயலற்ற காலத்துத் தரிசனங்கள்.
அவர்கள் உடம்பு நன்றாக இருந்தபோது, `குவளை மலர்' என்றும், `முல்லைமலர்' என்றும், பெண்ணை, அவர்களே தான் வருணித்திருக்கிறார்கள்.ஞானிகள் நிலை அதுவல்ல.
உடம்பு நன்றாக இருக்கும் போதே உள்ளத்தில் தோன்றும் ஒளி, காம லயத்தில் இருந்து அவர்களைப் பிரித்து விடுகிறது.
சுவேதகேதுவின் காலத்திலிருந்து, பல வகையான ஞானிகள், இதை ஒரு பயிற்சியாக மேற்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட காலம்வரை, பிள்ளைப் பேறுக்காகவே மனைவியோடு உடலுறவு வைத்திருக்கிறார்கள்.
காம வயப்பட்ட மனிதர்கள் உடலுறவு கொள்ளும் போது சில விநாடிகளிலேயே உடல் தளர்ந்து விடும்.
ஆனால், மனதைப் புடம் போட்டவர்கள் உடலுறவு கொள்ளும் போது, மனைவி எவ்வளவு நேரம் மகிழ்ச்சியை எதிர்பார்க்கிறாளோ, அவ்வளவு நேரம் நீடிக்கும்.
காரணம் அவர்களிடம் வெறி உணர்வு இல்லை.
பொற்கொல்லர்கள் சங்கிலி செய்வது போலவும், விவசாயிகள் ஏரோட்டுவது போலவும், கண்ணை மூடிக்கொண்டு அவர்கள் கடமை புரிவதினால் கால வரம்பு நீடிக்கிறது. அதிலே மிருகத்தனம் இல்லை; தெய்விகம் இருக்கிறது. காமம் இல்லை; யோகம் இருக்கிறது. வெறும் விளையாட்டு இல்லை; ஒரு தவம் நடக்கிறது. பற்றற்ற கருமமாகவே அது பாவிக்கப்படுகிறது.
சிட்டுக் குருவியைப்போல், அந்தி பகல் எந்நேரமும் அதையே நினைத்துக் கொண்டிருப்பவன், அந்தச் சிந்தனையினாலேயே பலம் இழந்து விடுகிறான்.
உடம்பு செயலாற்றுவதால் ஏற்படும் உஷ்ணத்தைவிட சிந்தனையினால் ஏற்படும் உஷ்ணம் பத்து மடங்கு அதிகம்.
அதுவும் காமச் சிந்தனையாக இருந்தால், அந்தப் பத்து மடங்கு உஷ்ணமும் உடனே ஏறிவிடுகிறது.
அதன் பிறகு அவன் செயலாற்றத் தொடங்கும் போது மனைவியின் கண்ணுக்கே நபும்சகனாகக் காட்சியளிக்கிறான்.
அதனால்தான் இந்துக்கள், தியான முறையைக் கையாண்டார்கள்.
ஈஸ்வர தியானத்தினால் உடம்பில் உள்ள உஷ்ணம் இறங்கி விடுகிறது.
மனத்தின் சிந்தனைப் போக்கு உணர்ச்சி வயப்படாத ஒன்றில் ஐக்கியமாவதால், உடம்பு சம சீதோஷ்ணத்துக்கு வந்து விடுகிறது.
இல்லறத்தில் பிரம்மசரியம் தொடங்கிய பிறகே காந்தியடிகளும், பரமஹம்சரும் தத்துவ ஞானிகள் ஆனார்கள்.
இது பற்றிக் காந்தியடிகள் கூட விரிவாகக் கூறியிருக்கிறார்.