Friday, December 30, 2011

பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அம்மன்

Posted On Dec 30,2011,By Muthukumar


பக்தர்கள் அம்மனை வேண்டி விரதம் இருப்பதுதான் நடைமுறை. ஆனால், இங்கு பக்தர்களுக்காக அம்மனே விரதம் இருக்கிறாள். இதை `பச்சைப் பட்டினி' விரதம் என்கிறார்கள். மாசி மாத கடைசி ஞாயிறு அன்று நடைபெறும் பூச்சொரிதல் திருவிழாவுடன் அம்மனின் இந்த பச்சை பட்டினி விரதம் ஆரம்பிக்கிறது.
பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த சமயபுரம் மாரியம்மன் முற்காலத்தில் `வைஷ்ணவி' என்ற நாமத்தில் ஸ்ரீரங்கத்தில் குடிகொண்டிருந்ததாக கூறுகிறார்கள். அங்கிருந்த இந்த அம்மனை வேறொரு இடத்திற்கு கொண்டு சென்ற சிலர், கண்ணனூர் என்ற இடத்தில் அம்மனை வைத்துவிட்டு சென்றுவிட்டனர். அவ்வாறு சிலை வைக்கப்பட்ட கண்ணனூர்தான் இன்றைய சமயபுரம் என்றும், அந்த அம்மன்தான் இன்றைய சமயபுரத்தம்மன் என்றும் சொல்கிறார்கள்.
இந்த நிலையில், தென்னாட்டின் மீது படையெடுத்து வந்த விஜயநகர மன்னர், கண்ணனூர் காட்டுப்பகுதியில் முகாமிட்டிருந்தார். அப்போது, அங்கிருந்த மாரியம்மனை வழிபட்டார். போரில் வெற்றிபெற்றால் கோவில் கட்டுவதாகவும் வேண்டிக்கொண்டார்.
அதன்படி, போரில் ஏற்பட்ட வெற்றியை அடுத்து மாரியம்மனுக்கு கோவில் எழுப்பினார். தற்போதுள்ள கோவில் கி.பி.1804-ல் விஜயரங்க சொக்கநாத நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும்.
சோழர் காலத்திலேயே இங்கு மாரியம்மன் கோவில் இருந்திருக்க வேண்டும். தற்போதுள்ள கோவில், பிந்தைய விஜய நகர மற்றும் நாயக்க மன்னர்கள் காலத்தில் சிறப்பு பெற்றிருக்க வேண்டும் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
சமயபுரம் கோவிலின் கருவறையைச் சுற்றி எப்போதும் நீர் நிறைந்திருக்குமாறு ஈரத் தன்மையுடன் வைத்திருக்கிறார்கள். அம்மன் எப்போதும் குளிர்ச்சியாக இருப்பதற்காக இப்படிச் செய்கிறார்கள்.
சமயபுரத்து மாரியம்மனின் விக்ரகம் மூலிகைகளால் ஆனது என்பதால் இதற்கு அபிஷேகம் செய்வதில்லை. அதற்கு பதிலாக உற்சவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.
திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சென்னைக்கு செல்லும் வழியில் சமயபுரம் அமைந்துள்ளது.Thursday, December 29, 2011

தீபம் ஏற்ற வேண்டிய முறைகள்


நாம் அன்றாடம் காலையும் – மாலையும் பூசை அறையில் தீபம் ஏற்றி ஆண்டவனை வணங்குகி றோம். தினம் தீபம் ஏற்றும் நம் மில் எத்தனை பேருக்குத் தீபம் ஏற்ற வேண்டிய முறைகள் பற்றி யும், அவை தரும் பலன்கள் பற்றி யும் தெரியும் ?
தீபம் ஏற்றும்போது கிழக்குத் திசையில் உள்ள முகத்தை மட் டுமே ஏற்றினால் நம்மைத் தொட ரும் துன்பங்கள் நீங்குவதுடன் மக் களிடையே நன் மதிப்பும் கிடை க்கும்.
மேற்குத் திசையில் உள்ள முகத்தை மட் டும் ஏற்றினால் கோதரர் களிடையே ஒற்றுமை ஏற்படும்; கடன் தொல் லைகள் விலகும். சர்வ மங்களமும், பெரும் செல்வமும் வேண்டுவோர் வட திசை யில் உள்ள முகத்தை ஏற்ற வேண்டும்.
தென் திசையில் உள்ள முகத்தை ஒரு போ தும் ஏற்றக்கூடாது. எதிர்பாராத தொல்லை களும், கட ன்களும் பாவங்களும் கூடும்.
திரியில்லாமல் தீபம் ஏது?
திரிகளின் வகைகளும் அவை தரும் பலன் கள் பற் றியும் பார்க்கலாமா?
சுகங்களைக் கூட்டும் தன்மை கொண்டது தான் பஞ்சுத்திரி. 
முற்பிறவியின் பாவங்களை அகற்றி- செல்வத்தைத் தக்க வை த்துக் கொள்ளவேண்டுமென்றால் தாமரைத் தண்டு திரி போட்டு விளக்கேற்ற வேண்டும்.
மழலைப் பேறில்லையே என ஏங்கு வோர் வாழைத்தண்டு திரிபோட்டு விள க்கேற்ற வேண்டும். செய்வினைகள் நீங்கவும், நீடித்த ஆயுள் பெறவும் வெள் ளெருக்குப் பட்டைத் திரியில் விளக் கேற்ற வேண்டும். முழுமுதற்கடவுளா ன கணேசப் பெருமானுக்கும் உக ந்தது இது.
தம்பதிகள் மனமொத்து வாழவும் – மகப் பேறு பெறவும் மஞ்சள் நிறங் கொண்ட புதிய திரி போட்டு விளக்கேற்ற வேண் டும்.
திரியுடன் எண்ணையிட்டால்தானே தீபம் எரி யும்?
எந்த எண்ணையிட்டாலும் விளக்கு எரியும்தான். ஆனால் பலன்…?
நலம் வேண்டி நாம் விளக்கேற்றும்போது அதில் விடும் எண்ணை யினால் பலன்கள் நேரெதிராகவும் வாய் ப்புகள் உண்டே?
ஏதோ இருக்கும் எண்ணையை ஊற்றி விளக்கு ஏற்றுதல் என்பது மிகவும் தவறான ஒன்று. கிரக தோஷங்கள் விலகி சுகம் பெற சுத்தமான பசு நெய்யினால் தீபம் ஏற்ற வேண்டும். கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
வேப்பெண்ணை தீபம் உகந்தது.
அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது மணக்கு எண்ணை தீப ம். எள் எண்ணை (நல்லெண் ணை) தீபம் என்றுமே ஆண்டவ னுக்கு உகந்தது;
நவக்கிரகங்களைத் திருப்தி செ ய்யவு ம் ஏற்றது.
மனதில் தெளிவும், உறுதியும் ஏற்பட வேண்டுவோர் சுத்தமான தேங்காய் எண்ணை கொண்டு தீப மேற்ற வேண் டும்.
செல்வங்கள் அனைத்தையும் பெற விரும்புவோர் வேப்பெண் ணை, இலுப்பை எண்ணை, நெய் மூன்றையும் கலந்து தீபம் ஏற்ற வேண்டும்.
மந்திர சித்தி பெற வேண்டு வோர் விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ஆகிய ஐந்து எண் ணைகளையும் கலந்து விள க்கேற்ற வேண்டும்.
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளை யும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.

சித்தர்கள் , அண்ணாமலை பற்றிய மேலும் சில ரகசியங்கள்

Posted On Dec 29,2011,By Muthukumar

சித்தர் சமாதி என்பது, சித்தர்கள் தங்கள் யோக நெறியினால் முத்தி நிலையடைந்த பின்பு, அவர்கள் தங்கள் உடலின் இயக்கத்தை நிறுத்தி வைத்து விட்டு, பல ஆண்டுகளுக்குப் பின்பு, அந்த உடலை மீண்டும் இயங்கவைத்து உலகத்தில் நடமாடுவது என்பர். சித்தர் தங்கள் உடலியக்கத்தை நிறுத்திவிட்டு, உடலைப் பூமிக்குள் புதைத்து வைக்கச் செய்வர். அவ்வாறு உடல் புதைக்கப்பட்ட அல்லது மறைக்கப்பட்ட இடம் சமாதி எனப்படும். சமாதி நிலையில் இருப்பதும் யோக நெறியின் உச்ச நிலையென உரைக்கப்படுகிறது.

அவ்வாறு, சித்தர்கள் சமாதி அடைந்த இடங்களாகத் தமிழகத்திலும் பிற இடங்களிலும் சுமார் 39 இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. ஒவ்வாரு இடமும் ஒவ்வொரு சித்தர் அடங்கிய இடமாகக் கூறப்படுகிறது. சித்தர்கள் அடங்கிய 39 இடங்களும் இன்றைய நிலையில் சைவ மதத்தின் திருக்கோயில்களாகவும் வழிபாட்டிடங்களாகவும் இருக்கின்றன. சித்தர்கள் அடக்கமாகிய சமாதிகள் சைவமதத்தின் திருக்கோயில்களாக மாறியது பற்றிய உண்மை ஆராய்தற்கு உரியது.
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTM6ouY-HkzosDsnIWJU0SynXSxV8B1GBON-LIIdbJRj6ABVzEQ8w
தில்லையில் திருமூலர்,

 அழகர் மலையில் இராமதேவர்,

அனந்த சயனத்தில் கும்ப முனி,

அருணையில் இடைக்காடர்,

வைத்தீஸ்வரன் கோயிலில் தன் வந்தரி,

 எட்டுக்குடியில் வான்மீகர்,

 மருதாசலத்தில் பாம்பாட்டி,

 மாயுரத்தில் குதம்பை,

ஆருரில் கமல முனி,

பழநியில் போகர்,

பரன்குன்றில் குதம்பை,

திருப்பதியில் கொங்கணர்,

இராமேசுரத்தில் பதஞ்சலி,

காசியில் நந்தி,

கருவூரில் காங்கேயர்,

பொய்யூரில் கோரக்கர்,

சோதிரங்கத்தில் சட்டமுனி,

மதுரையில் சுந்தரானந்த தேவர்  

இந்த இடங்களில் அமைந்த ஆலயங்களில் எல்லாம், மக்கள் கூட்டம் ஏன் அலை மோதுகிறது என்கிற கேள்விக்கு , உண்மை உங்களுக்கு புலப்படக்கூடும்.


சித்தர்கள்  இன்றும்  அருள் பாலிக்கும் இடங்கள் :  

கலசப்பாக்கம் மலபீடான் சித்தர் என்ற பூண்டி சித்தரின் ஜீவசமாதி சென்னை அருகில் போரூர்/கலசப்பாக்கம் அருகில் உள்ள பூண்டியில் உள்ளது.இவர் மாத சிவராத்திரி அன்று திருஅண்ணாமலையில் கிரிவலம் வருகிறார்.

ஸ்ரீபெருமானந்த சித்த சாமிகள்(தேனி மலை) அவர்களின் ஜீவசமாதி புதுக்கோட்டையிலிருந்து பொன்னமராவதி செல்லும் காரையூர் வழியில் உள்ள தேனி மலையில் இருக்கிறது.ஏராளமானவர்கள் இவரை வழிபட்டுவருகின்றனர்.

வாத்யார் ஐயா ஸ்ரீமுத்துவடுகநாத சித்தர்(சிங்கம்புணரி) ஸ்ரீவராஹி உபாசனையில் அனுபவம் மிக்கவர்.இவரது ஜீவ சமாதி எங்கு இருக்கிறது எனத்தெரியவில்லை; திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீவராஹி தீர்த்தத்திற்கு தினமும் வந்து வழிபடுகிறார்.தவிர தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள ஸ்ரீவராஹி சன்னதி, கும்பகோணம் ஸ்ரீவரதராஜப்பெருமாள் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வராஹி அம்மன் சன்னதிக்கு தினமும் வந்து வழிபடுகிறார்.இவர் தினமும் இந்தியா முழுக்க சூட்சும ரீதியாகப் பயணிக்கிறார். இதனால்தான் மாந்திரீகக்கட்டுக்களால் இந்தியா பாதிக்கப்படுவதில்லை.

ஸ்ரீசதாசிவ பிரம்மேந்திரர் திருவிசைநல்லூர், திருமா நிலையூர், கரூர், கராச்சி,மானாமதுரை, நெரூரில் ஜீவசமாதி யடைந்துள்ளார்.

சீரியா சிலம்பாக்கினி சித்தர் திருஅண்ணாமலையில் வசிக்கிறார்.இவர் பெயரில் சிலம்பாக்கினி மலை ஒன்று அங்கு உள்ளது.

ஸ்ரீபெத்தநாராயணசித்தர் பல நூற்றாண்டுகளாக திருஅண்ணாமலையில் வாழ்கிறார்.  ஸ்ரீஉண்ணாமுலை சமேத ஸ்ரீஅண்ணாமலை ஈசனே போற்றி என வணங்கி  ஸ்ரீபெத்த நாராயண சித்த சுவாமிக்கு நமஸ்காரம் என கிரிவலம் செய்யும்போது ஜபித்து ஆங்காங்கே பூக்களைத் தூவிக்கொண்டு வந்தால் அவர்களுக்கு ஏராளமான நற்பலன்கள் உண்டு.

இடியாப்பசித்தர் இமயத்தில் அன்னபூரணி சிகரங்களில் உறைந்திருக்கிறார்.

சீனந்தல் சிவப்பெருவாளச்சித்தர் திருஅண்ணாமலையில் பிறந்தவர்.ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் உணவு சார்ந்த பிரச்னைகள் தீரும்.உணவகம், காய்கறி , மளிகைப்பொருள் வியாபாரம் செழிக்கும்.வயிறு சார்ந்த நோய்கள் தீரும். அன்ன துவேஷத்தால் சரியாக சாப்பிடமுடியாதவர்கள் ஆடிமாத சிவராத்திரியன்று கிரிவலம் சென்றால் குணமாகும்.

திருவல்லம் பாம்பணையான் சித்தர் மார்கழிமாத பவுர்ணமி அன்று மனிதவடிவில் கிரிவலம் அண்ணாமலையில் வந்துகொண்டிருக்கிறார். இவரை நினைத்தாலே பாம்புகளால் ஏற்பட்ட தோஷங்கள் நீங்கும்.

கணதங்கணான் சித்தர் இவர்தான் மாத சிவராத்திரி மகிமையை பூமிக்கு உணர்த்தியவர்.இங்குதான் வசிக்கிறார். ரோகிணி,திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி நட்சத்திர நாட்களில் கிரிவலம் வருபவர்களின் கபாலம் சார்ந்த நோய்கள் குணமாகும்.சிலந்தித் தலைவலி, மைக்ரான் தலைவலி குணமாகும்.

மாதசிவராத்திரி கிரிவலத்தின் போது அர்த்த ஜாம பூஜை நேரத்தில் குரு ஓரையில் இவர் தரிசனம் பாக்கியம் உள்ளோருக்கு கிட்டும்.

இடைக்காடர் திருஅண்ணாமலை, திருவிடை மருதூர், இடைக்காட்டூரில் ஜீவசமாதியடைந்திருக்கிறார். இவர் கோடி ஆண்டுகளுக்கு கார்த்திகை தீபம் தரிசித்தவர். திருஅண்ணாமலைபற்றி பரிபூரண ரகசியம் அறிந்தவர் இவர் மட்டுமே!!!

 ஒரு தடவை தீபம் பார்த்தாலே , எவ்வளவோ புண்ணியம்.. கோடி தடவை.. யோசித்துப் பாருங்கள் !! இன்றும் இடைக்காடர் , அண்ணாமலை ஆலயத்திலும், கிரிவலப் பாதையிலும் அரூபமாகவோ, வேறு ரூபமேடுத்தோ உலவுகிறார். உங்களுக்கு யோகமெனில், அவர் தரிசனம் கிடைக்க கூடும். 

எந்த நாளிலும், நீங்கள் கிரிவலம் செல்லலாம். சித்த புருஷர்களின் உடலை தழுவி வரும் காற்று , உங்கள் மேல் பட்டாலே , உங்களுக்கு வாழ்வில் நல்லதொரு ஏற்றம் உண்டாகும். 

சித்தர்கள் மலைகளிலேயே தங்கள் குடிலை அமைத்துக் கொண்டு மருந்தாய்விலும் யோக நெறியிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்கள்.  அவர்கள் வாழ்ந்த மலை ‘சித்தர் பருவதம்’ என்று வழங்கப்படும். சதுரகிரி மலையையே சித்தர் பருவதம் என்பர். இம்மலையில் அனேக சித்தர்கள் வாழ்ந்ததாகச் சதுரகிரிமலை தலபுராணம் கூறுகிறது. சதுரகிரி மலையைச் சித்தர்கள் பல பெயர்களால் வழங்கினர். போதகிரி, பொதிகைகிரி, சூரிய கிரி, மயேந்திர கிரி, கும்ப கிரி, பரம கிரி, கயிலாயம் என்னும் வேறு வேறு பெயர்களால் குறிப்பிடும் போது, இடங்களைக் கண்டறி வதில் மயக்கம் உண்டாகிறது. 

உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் , சதுரகிரியோ அல்லது திருவண்ணாமலை யோ - அடிக்கடி சென்று வந்து கொண்டு இருங்கள். ஈசன் , உங்களை நிச்சயம் நல்லதொரு நிலையில் வைப்பது உறுதி.   


போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு

Posted On Dec 29,2011,By Muthukumar


http://1.bp.blogspot.com/_TooApzVX-eU/TFAvfDpicTI/AAAAAAAAABI/qOTWnZv6TOY/s320/bhogar+with+murugar.jpg

போகர்! சித்தர்கள் பற்றி சிந்திக்கும் பொழுது பாமரருக்கும் கூட பளிச்சென்று புலப்படும் ஒரு பெயர் இது.

மருத்துவம், விஞ்ஞானம், மெய்ஞானம், ரசவாதம், காயகல்பமுறை, யோகாப்பியாசம் _ என்று சகலத்திலும் உச்சம் தொட்ட ஒரு சித்தர் உண்டு என்றால் அவர், போகர்தான்.

அகத்தியர், இவரைத்தான் முதல் சித்தன் என்று ஒரு பாட்டின் மூலம், கூறுகிறார்.


சமயத்தில் உதவியவர்களைப் பார்த்து 'கடவுளைப் போல உதவினீர்கள்... என் வரையில் நீங்களே கடவுள்' என்று சொல்வோம், அல்லவா...!

அப்படித்தான், போகரின் செயல்திறத்தைப் பார்த்து இவரே முதல் சித்தன் என்று அகத்தியர் கூறியதும். உண்மையில், முதல் சித்தன் அந்த ஆதிசிவன்தான். அவனே மதுரையம்பதியில் சுந்தரானந்தனாக வந்து அருளிச் சென்றான்.

போகரைப்பார்த்து வியப்பதற்கு ஏராளமான காரண காரியங்கள் உள்ளன. பொதுவில் சித்தர் எனப்படுபவர்கள், இந்த உலகம் பின்பற்றும் ஆன்மிக நெறிமுறைகளை புறந்தள்ளியவர்கள்.

ஆலயம் செல்லுதல், விக்ரகங்களை பூஜித்தல், ஆசார சடங்குகளில் நாட்டம் கொள்ளுதல் என்பதெல்லாம் விடுத்து, தங்களுக்குள்ளேயே இறைவனைக் கண்டு இன்புற்றவர்கள்.

ஆனால் இதில், போகர் பெரிதும் வேறுபட்டே தெரிகிறார். பல சித்தர்கள் போல், இவரும் ஒரு சிவத் தொண்டரே. அதே சமயம், அன்னை உமையை தியானித்து அவளருளையும் பெற்றவர்.அவளது உபதேசம் கேட்டு பழனி மலைக்குச் சென்று தவம் செய்து முருகனை தண்டாயுத பாணியாகவே தரிசனம் செய்தவர்.

உலகம் உய்ய வேண்டும் என்பதற்காக, தான் தரிசித்த தண்டாயுபாணிக்கு நவபாஷாணத்தால் சிலை எடுத்தவர்.

பாஷாணங்களைக் கட்டுவது என்பது சாதாரண விஷயமல்ல. ஒவ்வொரு பாஷாணமும் ஒவ்வொரு விதம்... ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம். அவைகளை உரிய முறையில் சேர்ந்துப் பிசைந்தால்தான் உறுதியான, ஒரு பொதுவான பாஷாணம் உருவாகும். இதை நயனங்களால்
பார்த்தாலேகூட போதும். அதிலிருந்து வெளிப்படும் நுட்பமான கதிர்வீச்சு, கண்வழியாக உடம்பின் உள்ளும், உடம்பின் புறத்திலும் படிந்து, நலம் ஏற்படும். இதன்மேல் பட்டு வழியும் பொருள் எதுவாயினும் அதுவும் மருத்துவ குணம் கொண்டு தீராத வியாதியை எல்லாம் தீர்த்து வைக்கும்.

உயர்வான பாஷாணங்கள் ஒன்பதை தேர்வு செய்து அதைக் கொண்டு போகர் செய்ததுதான் பழனிமுருகனின் மூலத் திரு உருவம். அவ்வாறு செய்ததோடல்லாமல், அவ்வுருவத்திற்கு ஏற்ற வழிபாட்டு முறையை ஒரு புதிய சித்தாகமமாகவே உருவாக்கி அதையும் நடைமுறைப்படுத்தியவர் போகர்.

மனிதப் பிறப்பானது கோள்களால் நிர்வகிக்கப்படுவதை உணர்ந்து அந்தக் கோள்களின் குணங்களைக் கொண்ட ஒன்பது பாஷாணத்தை தேர்வுசெய்து அதிலிருந்து தண்டாயுத பாணியை செய்து, கோள்களை ஓர் உருவுக்குள் அடக்கிப் பூட்டியவர் போகர் என்றும் கூறுவர்.

தண்டாயுத பாணியை எவர் வந்து தரிசித்து வணங்கினாலும் நவ கோள்களையும் ஒருசேர வணங்கிய ஒரு வாய்ப்பும் அவர்களுக்கு உண்டாவது, இதனுள் அடங்கிக் கிடக்கும் இன்னொரு நுட்பம்.

இப்படி பழனியம்பதியில் முருக வழிபாட்டிற்கு களம் அமைத்த போகரின் வாழ்க்கையும் ஒரு வகையில் நவரசங்களால் ஆனதுதான்.

பழனியம்பதியின் சித்த விலாச கணக்குப்படி வைகாசி மாதத்து பரணி நட்சத்திரத்தில் பிறந்த போகரின் பிறப்பு மூலம் பற்றி பெரிதாக செய்திகள் இல்லை. ஆனால்,நவசித்தர்களில் ஒருவரான காலாங்கி நாதரின் மாணவர் இவர் என்பது குறிப்பிடப்படவேண்டிய ஒரு செய்தி.அதை இவரது, அரிய நூல்களுள் ஒன்றான 'போகர் ஏழாயிரம்' எனும் நூலின் வழி அறியலாம்.

பதினெண் சித்தர் வரிசை தோன்றுவதற்கு முன்பு, நவசித்தர்களே பிரதானமாகக்கருதப்பட்டனர். மேருமலைதான் இவர்களின் யோகஸ்தலம். மேருவும் இமயமும் உலகப் பற்றில்லாத சித்த புருஷர்கள் பெருமளவு சஞ்சாரம் செய்யும் ஒரு வெளியாகவே விளங்கியது.

இங்கேதான் நவநாத சித்தர்கள் வசித்து வந்தனர். அவர்களுள் ஒருவர், காலாங்கிநாதர். காலாங்கி நாதர், போகர் வந்த சமயம் மகாசமாதியில் இருந்தார்.

போகர், சமாதியில் உள்ள காலாங்கி நாதரை வணங்கி, அவ்விரு மலைகளிலும் பல தாது வகைகளை தேடிக்கண்டு பிடித்தார். அதைக் கொண்டு பல காய கற்பங்களை செய்து, தானே உண்டு பார்த்து அதன் பயனையும் உடனே அடைந்தார். இதனால் அவரது தேகம் மிகவும் திடமாகியது. மேலும், வானவெளியில் பறப்பது, நீர்மேல் நடப்பது போன்ற செயல்பாடுகள் எல்லாம் மிக மிகச் சாதாரணமாகியது. இதனால் போகருக்குள் கர்வம் துளிர்த்துவிட்டது. 


துரோணருக்கு ஓர் ஏகலைவன் போல தானும் குருவை வணங்கி அந்த அருளாலேயே பல தாதுக்களை கண்டறிந்து விட்ட ஒருவன்; உண்மையில் காலாங்கி நாதருக்கு சீடர்கள் இருந்திருந்தால், அவர்கள் கூட இப்படி எல்லாம் அறிந்திருக்க மாட்டார்கள்; என்றெல்லாம் நினைக்கத் தொடங்கிவிட்டார்.

இதனால், அந்த மலைத் தலத்தில் பணிவாக பார்த்துப் பார்த்து நடந்தவர், நிமிர்ந்து நெஞ்சு நிமிர்த்தி நடக்க ஆரம்பித்தார்.

மேருவிலும் இமயத்திலும் சூட்சம வடிவில் பலநூறு சித்த புருஷர்கள் தவமியற்றி வந்தனர். அவர்களில் பலரது தவம், போகரின் கர்வமான நடையால் கலைந்தது. அவர்கள் கண்விழித்ததோடு போகருக்கும் காட்சியளித்தனர். திடுக்கிட்ட போகரிடம் நாங்கள் காலாங்கி நாதரின் மாணவர்கள். பலப்பல யுகங்களாக எங்களை மறந்து தவம் செய்தபடி இருக்கிறோம் என்றார்கள். அத்தனை யுகங்களும் சில நாட்கள் கடந்தது போலத்தான் இருக்கிறது என்று அவர்கள் கூற, போகருக்கு அது ஆச்சரிய அதிர்ச்சியாகியது.அப்படியானால் அவர்கள் தவத்தை எவ்வளவு பெரிய விஷயமாக கொண்டிருக்க வேண்டும் என்றும் தோன்றியது. அந்த நொடி, தான் கற்ற தாதுவித்தை எல்லாம் மிக அற்பமானது என்கிற எண்ணம் ஏற்பட்டு அவரது கர்வமும் அடங்கியது. அதை அறிந்த அந்த சித்தபுருஷர்கள், போகருக்கு பல சித்த ரகசியங்களை போதித்தார்கள்.
ஒரு சித்தர், போகர்மீது பெரும்கனிவு கொண்டு, 'மிர்தமணிப்பழம்' என்னும் தேவக்கனி மரம் ஒன்றை அந்த வெளியில் காட்டி, அதன் பழங்களை உண்ணச் சொன்னார். அதை உண்டால் ஆயுள்முழுக்க பசிக்காது, நரைக்காது, முதுமை உண்டாகாது. இதில் உள்ள பழத்தை உண்டுவிட்டே இங்குள்ளோர் காலத்தை வென்று தவம் செய்கின்றனர் என்று கூறிட,போகர் அந்தக் கனிகளை உண்டு உடம்பின் பிணியாகிய 'பசி, தாகம், மூப்பு' என்கிற மூன்றிலிருந்தும் விடுதலை பெற்றார்.

இப்படி படிப்படியாக முன்னேறிய போகருக்குள் சில விசித்திரமான எண்ணங்களும் ஏற்பட்டன. அவை முழுக்க முழுக்க மனித சமுதாயம் தொடர்பானவையே..

ஒரு உயிர் எதனால் மனிதப் பிறப்பெடுக்கிறது? அப்படிப் பிறக்கும்போது அது எதன் அடிப்படையில் ஏழையின் வயிற்றிலும், பணக்காரனின் வயிற்றிலும் பிறக்கிறது?

இறப்புக்குப்பின் கொண்டு செல்வது எதுவும் இல்லை என்று தெரிந்தும் வாழும் நாளில் மனிதன் ஏன் ஆசையின் பிடியிலேயே சிக்கிக் கிடக்கிறான்? எவ்வளவு முயன்றும் அவனால் மரணத்தை ஏன் வெற்றி கொள்ள முடியவில்லை?

இப்படிப் பலவித கேள்விகள் போகரை ஆட்டிப்படைத்தன. மொத்தத்தில் மனித சமூகமே வாழத் தெரியாமல் வாழ்ந்து விதியின் கைப்பாவையாக இழுத்துச் செல்லப்படுவது போல உணர்ந்தவர், மனித சமூகத்தை காப்பாற்றியே தீர வேண்டும் என்று எண்ணம் கொண்டார்.

இதனால், தானறிந்த மருத்துவ மூலிகை ரகசியங்களை நூலாக எழுதினார் அவைதான் 'போகர் ஏழாயிரம்', போகர் நிகண்டு, 17000 சூத்திரம், 700 யோகம் போன்றவை.

இவர் உள்ளத்தில் மனித சமூகத்தை நோயின்றி வாழவைக்கும், அரிய குறிப்புகள் தோன்றின.

அதேசமயம், இவருக்கு எதிர்ப்பும் தோன்றியது. பல சித்த புருஷர்கள் இவரை பெரிதும் எதிர்த்தனர்.

சித்த ரகசியங்களை எழுதிவைப்பது ஆபத்து என்றனர். மனிதன் அனுபவிக்க வேண்டிய கர்மங்களை முற்றாக நீக்க முயற்சிப்பது இயற்கைக்கே ஊறு விளைவிக்கும் என்றெல்லாம் புகார்கள் கூறினர். போகர் அவற்றை காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை. சஞ்சீவி மூலிகை, ஒருவர் கையிலும் அகப்படாதபடி விலகி ஓடும் இயல்பு உடையது. இதை அறிந்த போகர், அதை ஒரு மந்திரத்தால் கட்டி பின்பு அதை கைப்பற்றி காட்டினார்.

அந்த மந்திரம், தம்பணா மந்திரம் எனப்படுகிறது. இன்றும் காடுகளில் மூலிகை தேடிச்செல்வோர் தம்பணா மந்திரத்தை மானசீகமாக உச்சரித்து, காணப் பெறாத மூலிகைகளையும்கண்டு அதைக் கைப்பற்றுவர்.

அமிர்தத்துக்கு இணையான ஆதிரசத்தையே இவர் கண்டறிந்தார் என்பர். அதைக் கொண்டு இரும்பைத் தங்கமாக்கலாம். ஆதிரசமோ, அமிர்தமோ தேவர்களுக்கே உரியது. அசுரர்களோ மானிடர்களோ அதை உண்டால் அதனால் உலகம் அழிந்து விடும் அபாய நிலை உருவாகும் என்று பல சித்த புருஷர்கள் அஞ்சினர்.

தங்கள் அச்சத்தை தட்சிணா மூர்த்தியாகிய சிவபிரானிடம் கூறிட, சிவபிரானும் அவர்களது கவலையை நீக்குமூலமாக போகரை அடைந்து அவர் அறிந்து எழுதிய அவ்வளவு ரகசியங்களையும் கேட்டார்.

போகர் எழுதியதை, போகர் போல ஒரு சித்தரால் அன்றி சராசரி மனிதர்களால் விளங்கிக் கொள்ள இயலாது என்பதை அதன் மூலம் அறிந்த அவர், போகரின் முயற்சியை ஆசிர்வதிக்கவேசெய்தார். அதன்பின் இவர் புகழ் பலமடங்கு பெருகியது. பலரும் இவரிடம் வந்து கற்பங்கள், குளிகைகள் பெற்றுச் சென்றனர்.

மொத்தத்தில் மனித சமூகத்தை, இம்மண்ணில் உள்ள பொருட்களைக் கொண்டே, தேவர்களுக்கும் கந்தவர்வர்களுக்கும் இணையாக ஆக்கினார்.

அண்டை நாடான சீன தேசமும், நமது நாவலந் தீவாகிய பாரத தேசமும், புவி இயலில் அனேக ஒற்றுமைகள் கொண்டிருந்தன. இதனால், மூலிகைச் செல்வங்கள் இவ்விரு தேசங்களில்தான் மிகுந்து காணப்பட்டது. எனவே வான்வழியாக அடிக்கடி சீனதேசம் சென்று வருவது போகரின் வழக்கமாகியது.

அங்கே, 'போ யாங்' என்ற ஒரு சீன யோகியின் உடம்புக்குள், கூடுவிட்டு கூடு பாயும் முறையில் புகுந்து, சீனராகவே வாழ்ந்தார் என்றும் ஒரு கதை உண்டு.

சீனர்கள், இந்தியர்களில் இருந்து உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிதும் வேறுபட்டவர்கள். இந்திய உணவில் எண்ணெய், கொழுப்பு சத்து, காரம்,
புளிப்பு, உவர்ப்பு என்றெல்லாம் பல சுவைகள் உண்டு. சீனர்களிடம் அப்படி இல்லை. அவர்களது உணவுமுறை ரஜோ குணத்தை தூண்டுவதாகவும்; எலும்பு, நரம்பு இவைகளை வலுவாக வைத்துக்கொள்ளத் தக்கதாகவும் இருந்தமையால், அவர்களிடம் பல வித்யாசமான பயிற்சி முறைகள் இருந்தன.அதில் 'ரஜோலி' என்னும் யோக முறையும் ஒன்று.

போகர் அதை ஆர்வத்துடன் பழகிடும்போது தலையில் அடிபட்டு அவருக்குள் அவர் பற்றிய அவ்வளவு எண்ணங்களும் மறைந்துபோன. பின்னர், அவரைத் தேடிக்கொண்டு வந்த போகரின் மாணாக்கர்களில் ஒருவரான புலிப்பாணி, போகரின் நிலை கண்டு கலங்கி, அவரைத் தன் முதுகில் சுமந்துகொண்டு இந்தியா திரும்பினார் என்றும் சொல்வர்.

அதன்பின் குருவுக்கே அவரிடம் கற்றதை உபதேசித்து, அவருக்குள் மீண்டும் பழைய எண்ணங்களை தோற்றுவித்தார். ஒரு சீடன், குருவுக்கு உபதேசிப்பது என்பது காரியப் பிழையில் முடிந்து, முடிவில் அவனையே சாபத்திற்கு ஆளாக்கிவிடும் என்பதால்,புலிப்பாணி, போகரின் தண்டத்திற்கு உபதேசிப்பது போல போகருக்கு உபதேசித்து போகரை மீண்டும் நிலை நிறுத்தினார். அதன்பின், போகர் ஒரு புத்துயிர்ப்போடு எழுந்தார்.பலவித அனுபவங்களால் பழுத்த ஞானியாகிவிட்ட அவர், இறுதியாக வந்து சேர்ந்த இடம்தான் பழனி. அங்கேயே முக்தியும் அவருக்குக் கிட்டியது. மொத்தத்தில் போகர் என்றால் 'நவநாயகர்' என்றும் கூறலாம்.Wednesday, December 28, 2011

ஆசைப் பட்டதை அடைவது எப்படி? - ஒரு அற்புத , ஆன்மீக வழிகாட்டுதல் மந்திரங்கள்

Posted On Dec 29,2011,By Muthukumar
திடீரென்று , ஒரு மலையாள பத்திரிகை கொடுத்து படிக்க சொன்னால் , உங்களால் படிக்க முடியுமா? முடியாது இல்லையா... ஏன்? மலையாளம் படிக்கலை , அதனாலே நமக்கு புரியலை. அந்த மாதிரி இறைவன் ஒருவர் இருக்கிறதை நாம உணர்றதுக்கு நமக்கு உதவுவது தான் , கோவில்கள் , மந்திரங்கள், தியானம் இப்படிப் பல விஷயங்கள். 

நீங்க ட்ரெயின்லே போய்க்கிட்டு இருக்கிறீங்க . உங்களுக்கு ஹிந்தி தெரியும்னு வைச்சுப்போம்.. பக்கத்திலே ரெண்டு பேர் ஹிந்தி பேசுறாங்க.. 
என்னதான் நீங்க ஒரு புத்தகத்தை படிச்சுக்கிட்டு இருந்தாலும், உங்க காது , மனசு அவங்க பேசுறதை கவனிக்க ஆரம்பிக்கும்.. இல்லையா?  நீங்க எதோ ஒரு வேலையா இருக்கிறீங்க ... அப்போ , உங்க பேர் சொல்லி , யாரோ ஒருவர் கூப்பிட்டதும், திரும்பி பார்க்கிறீங்க இல்லையா? 

அதே மாதிரி - இறைவனை , அவனது கோவிலில் சென்று , நீங்கள் இந்த மந்திரங்கள் சொல்லி அழைக்கும்போது - அவனும் உங்களுக்கு செவி சாய்ப்பான்.. ராகு கால வேளையில் - லலிதா சஸ்ரநாமமோ, அல்லது சிவ ஆலயங்களில் ஸ்ரீ ருத்ரமோ, சமகமோ சொல்லும்போது - நீங்கள் அந்த பரம்பொருளால் நேரடியாக கவனிக்கப்படுவீர்கள்..... இது போதாதா ?
https://www.himalayanacademy.com/taka/past/2008/April/April_08_2008/innersearch_080130-Tiruchendur-KK_661_IMG_9782.jpg
கடவுளை எப்படி வேண்டுவது? 

உங்கள் தீராத பிரச்னைகளை , தீர்க்க சொல்லி - மனதில் மன்றாடுங்கள். உங்கள் குழந்தை ஒரு சில விஷயங்களில் அடம் பிடிக்குமே. சமயத்தில் , அந்த குழந்தை கேட்காமலே வாங்கி கொடுப்பீர்கள். சமயத்தில் , அது அழுது , முரண்டு பிடித்தாலும் - உங்களுக்கு அதை நிறைவேற்ற சக்தி இருந்தால் வாங்கி தருவீர்கள். இல்லையெனில் , உங்கள் இயலாமை , அந்த குழந்தைக்கு முதுகில் ஒரு அடியாக வெளிப்படும். அடித்த பிறகு , உங்களுக்கும் மனசு வலிக்குமே... !

இதில் ஒன்றை கவனியுங்கள். வேண்டும் ஒரு விஷயம் , கிடைக்க வேண்டும் என்பதற்காக - குழந்தை உங்கள் கவனத்தை திருப்புகிறது. அதற்குத் தெரியும், நீங்கள் மனது வைத்தால்... அந்த ஆசையை நிறைவேற்ற முடியும். அந்த கோரிக்கை , நியாயமானது எனில், நீங்கள் உடனே இல்லையெனினும், விரைவில் அந்த ஆசையை பூர்த்தி செய்ய முயலுவீர்கள்.. பிற்காலத்தில், ஒரு சில கெடுதல் ஏற்படும் விஷயங்கள்  , என்று இருந்தால் - எப்பாடு பட்டாவது , அதை தடுக்க முயல்வீர்கள்.. இல்லையா? 

அதே தான் சார்.. உங்கள் கோரிக்கை என்னவென்று மனதுக்குள் வேண்டுங்கள்.. கச்சா முச்சான்னு இருக்க வேண்டாம்.. ஒரே விஷயம்.. நியாயமான கோரிக்கையா இருக்கட்டும்.. ! 
உங்கள் ஆசையை நிறைவேற்ற யார் இருக்கிறா ? உங்கள் இஷ்ட தெய்வம்.. 

எப்படி , அந்த தெய்வத்தோட கவனத்தை உங்க மேல திருப்பப் போறீங்க? 
அடிக்கடி அந்த தெய்வத்தோட சன்னதிலே போய் நில்லுங்க.. பதிகம் பாடுங்க, ஸ்லோகம் சொல்லுங்க..  விரதம் இருங்க... ! மந்திரங்கள் எனக்கு புரியலையே என்று நீங்கள் வருத்தப்படாதீர்கள்.. I need something to eat ... என்று நீங்கள் புரியாமல் சொன்னால் கூட ,  ஆங்கிலம் தெரிந்த உங்கள் நண்பர் , உங்களுக்கு சாப்பிட ஏற்பாடு செய்வார்.. இந்த மந்திரங்கள் அனைத்தும், அவன் அருளால் , அவன் பக்தர்களுக்கு - சில நற்காரிய , காரணங்களுக்காக உருவானவையே.. ! அவனுக்கு இதன் அர்த்தம் நன்றாகவே புரியும் !

ஒரு ஆபீஸ்ல ப்ரோமோசன் வாங்குறதுக்கு நீங்க என்ன பாடு எல்லாம் படுறீங்க..? எவ்வளவு வித்தை எல்லாம் செய்யுறீங்க.. அதுக்கு அப்புறம்  நீங்க தகுதி வாய்ந்தவர்ங்கிறதை அவங்க உணர்ந்துட்டா , உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்குது இல்லையா?  அதே மாதிரி அத்தனை வித்தையையும், கடவுள் கிட்டேயும் நீங்க காட்டனும். 

கண்டிப்பாக திறமை மதிக்கப்படுவது போலே , உங்களுக்கும் இறைவன் முழு கருணை அளிப்பான்...  சற்று தாமதம் ஆகலாம் .. ஆனால் , வெகுமதி நிச்சயம்.. நீங்கள் அவன் குழந்தை.. உங்களை ஏங்க வைத்து , அவன் சந்தோசம் அடையப்போவது இல்லை.. 

உங்கள் பெற்ற தாயிடம் வேண்டுவது போல , உரிமையுடன் - அந்த உலக மாதாவிடம் கேளுங்கள்.. ! தாய்க்கு கருணை ரொம்ப அதிகம்.. ! ஒரு எறும்பு , குருவி மேல் கூட பாசம் வைக்கும் அன்னை , உங்கள் மேல் இன்னும் பாசமுடன் இருப்பாள். 

தந்தை , உங்கள் திறமைக்கு ஏற்ப கொடுப்பவர். அதனால் , உங்கள் திறமையையும் வளர்த்துக் கொள்ளுங்கள்.. நீங்கள் எந்த துறையில் இருந்தாலும், அந்த துறையில் வல்லவராக முயற்சி செய்யுங்கள்..  குழந்தை திறமை சாலி எனில், முதல் ஆளாக ஊக்குவிப்பது தந்தை தான்.. !

என்ன தான் உமை அன்பைப் பொழிந்தாலும், ஈசன் உங்கள் திறமை வளர்க்க சந்தர்ப்பம் கொடுத்து , அதன் பின் உங்கள் ஆசை நிறைவேற செய்வான். !

அதனால் , அந்த பரம்பொருளின் கவனத்தை திருப்புங்கள். உங்கள் திறமையை வளர்த்துக்கொள்ளுங்கள்.. !

ஆசை பட்டது , கிடைக்கும்போது - மனம் அடையும் ஆனந்தத்திற்கு அளவு இல்லை.. !!

 சர்ப்ப தோஷம் - திருமண தடை நீங்க  சரபேசர் வழிபாடு பற்றி சில நாட்களுக்கு முன் எழுதி இருந்தேன்.. அந்த கோவில் பற்றி , நிறைய வாசகர்கள் மேலும் தகவல்கள் கேட்டு இருந்தனர். 

ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்  கிழமை ராகு கால நேரத்தில் - மாலை 4 .30 முதல் , அபிசேக , ஆராதனை நடக்கிறது.. கூட்டம் அதிகம் இருப்பது இல்லை. உங்களுக்கு நான்கு அடி தூரத்தில் , சர்வ வல்லமை பொருந்திய சரபேசரை  , நீங்கள் சலிக்க தரிசனம் செய்யலாம். வழிபாடு முடிந்து செல்ல இரவு எட்டு மணி ஆகிவிடும். 

கோவில் இருக்கும் இடம் : வன்னிவேடு.. வாலாஜா பஸ் நிலையத்தில் இருந்து ஒரு பத்து நிமிட நடந்து செல்லும் தூரத்தில் இருக்கிறது. வாலாஜா - ராணிப்பேட்டை, ஆற்காடு அருகில் உள்ள ஒரு நகரம். சென்னையிலிருந்து வேலூர் செல்லும் எல்லா பேருந்துகளும், வாலாஜா நின்று செல்லும்.. வேலூர் டு வாலாஜா - 25 km. சென்னை டு வாலாஜா - 100 km (approx .)


உங்களுக்கு அதிக பயன் தரும் சில முக்கியமான பாராயண மந்திரங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். நமது இணைய தளத்தில் ஏற்கனவே  ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள் அருளிய தங்க ஆனந்த களிப்பு & வேற்குழவி வேட்கை பதிகங்களை பாடி , கோடிகளில் செல்வம் குவித்த தென்காசி நண்பரை பற்றி ஏற்கனவே பார்த்து இருந்தோம்..  

இந்த பதிவை  படித்த பிறகு, நமது வாசகர் ஒருவர் - பாம்பன் சுவாமிகள் பற்றி தனியே இயங்கும் வலைப்பூ பற்றி குறிப்பிட்டு இருந்தார். நமது வாசகர்கள்   அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்பதால் , உங்களிடம் அதைப் பகிர்ந்து கொள்கிறேன்.. அதில் உள்ள ஒரு பதிவு நம் வாசகர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைத்து உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்...

வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் மறைய, பணம் , பொருள், ஆபரணம் சேர்க்க , குடும்பம் - மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ , மரண  பயம் நீங்க, துக்க செலவுகள் குறைய, துர் செய்திகள் வராமல் இருக்க , திருமணம் கை கூட , பிரிந்தவர் மீண்டும் ஒன்று சேர என்று -
இவை ஒவ்வொன்றும் , அற்புதமான பலன்கள் தரும் மந்திரங்கள்.

மந்திரங்களை படிக்க  இங்கே க்ளிக் செய்யுங்கள் 


நம்பிக்கையுடன் பாராயணம் செய்யுங்கள் !

வாங்க சில நல்ல விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்..!

Articles related to Vedic science, Hindu religion, Mind relaxing, entertainment, Astrology in Tamil, horoscope in Tamil - தமிழில் ஜோதிடம் , ஜாதகக் கணிப்பு, ஆன்மீக வழி காட்டுதல்.


Posted On  Dec 28, 2011,By Muthukumar


மனதுக்கு திறம், திடம் கொடுப்பது தான் மந்திரம். மந்திர ஜெபங்களை - இந்த காரிய பலிதம் வேண்டும் என்று மனதில் சங்கல்பம் எடுத்துக் கொண்டு, அதை மனதுக்குள் உருவேற்றும் போது - அது உங்கள் மனதை திடப் படுத்துகிறது.

அதன் பிறகு உங்கள் மனதில் ஏற்படும் ஒளியே - பல இன்னல்களை தகர்த்து , நீங்கள் விரும்பிய பாதையில் , உங்களை அழைத்துச் செல்கிறது.

கோபுரங்கள் கூம்பு வடிவத்தில் ஏன் அமைக்கப் பட்டு இருக்கின்றன? விண்ணில் விரவிக் கிடக்கும் நல் அலைகள் கோபுரத்தின் முக்கோண பரிமாண வடிவில் பட்டு , அங்கேயே சுழன்று கொண்டு இருக்கும்படி செய்வதற்காக , திட்டமிட்டே கோபுரங்கள் இந்த வடிவில் அமைக்கப் படுகின்றன. 

மனதின் சக்தி, ஒவ்வொரு மனிதனுக்கும் வேறுபட்டது.அதே சமயம், அந்த மன சக்தியை ஒருநிலைப்படுத்திடவே மனிதனின் முன்னோர்கள், தெய்வீக சக்தியை பூமியில் சில குறிப்பிட்ட இடங்களில் குவியச்செய்து,அதன் மூலம் எல்லாமனிதர்களும் தத்தம் மனசக்தியை சமநிலைப் படுத்திட ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

அலைந்து திரியும் மனதுடன் ஒருவர் இருந்தாலும், சக்தி வாய்ந்த இந்த கோபுரங்கள் அமைக்கப் பெற்ற ஆலயத்தில் ஒருவர் நுழையும்போதே , அவரது மனது சாந்தியும், சந்தோசமும் பெறுவது அங்கு நிலவும் இந்த தெய்வீக கதிர் வீச்சினால்தான்.  

ஒவ்வொரு மாத பவுர்ணமியன்றும் குரு ஓரையில் சித்தர்கள், மகான்கள், துறவிகளின் ஜீவ சமாதிகள், சதுரகிரி மலைப்பகுதி,சதுரகிரியின் கோவில் சன்னதி, திரு அண்ணாமலையின் கோவில்பகுதி, திருவண்ணாமலையின் கிரிவலப்பாதை, அஷ்ட லிங்கங்களின் சன்னதிகளில் அமர்ந்து பின்வரும் மந்திரத்தை 90 நிமிடங்கள் (முற்காலக் கணக்கின்படி ஒரு நாழிகை) ஜபித்துவரவேண்டும். உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் நூற்றுக்கணக்கான வருடங்கள் பழமையான ஒவ்வொரு ஆலயமும், அற்புத சக்தி நிரம்பிய ஆலயங்களே.
 
இதனால்,முற்பிறவி கர்மம்,நம் முன்னோர்கள் செய்த கர்மம்(பாவம்) தீரும். அப்படித் தீர்ந்தாலே, நாம் செல்வச் செழிப்பின் உச்சத்தை நோக்கி நகரத் துவங்குவோம்.

அதற்குமுன்பாக, இந்த மந்திரத்தை ஒரு சிவ பக்தர் / சிவாச்சாரியார் / சைவச்சித்தாந்த மாணவர் / உங்கள் ஆஸ்தான ஜோதிடர் / உங்களது ஆஸ்தான துறவி / உங்களது ஆசிரியர் என யாரையாவது இதை ஒருமுறை வாசிக்கச் சொல்லி அதை நீங்கள் கேட்டு, குரு உபதேசம்
பெற்றிருத்தல் அவசியம்.

சுவாதி மற்றும் விசாகம் நட்சத்திரங்கள் நின்ற நாட்களிலும் கடகம் மற்றும்
விருச்சிகம் லக்கினங்களிலும் குரு உபதேசம் பெற நன்று.

ஓம் ஹ்ரீம் பரஞ்சோதி பரஞ்சோதி ஹம்ஸ ஹம்ஸ
வ்யோம வ்யோம ந்ருத்த பரப்ரகாசானந்த நாதாய
ஹ்ரீம் சிவானய நமஹ


ஐயா மிஸ்டிக் செல்வம் அவர்கள் பல ஆராய்ச்சிக்குப் பிறகு , தெரிவித்த சில நல்ல அறிவுரைகளை கீழே கொடுத்துள்ளேன். நம் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.

சனிக்கிழமையன்று நவதானிய அடைதோசை நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் நவக்கிரகங்கள் திருப்தியடையும்.இதனால், அஷ்டமச்சனி, கண்டகச்சனி, ஏழரைச்சனி முதலியவற்றின் தாக்கம் குறையும்.
 
தினமும் ஏதாவது மந்திர ஜபம் செய்துவிட்டு நமது தினசரிக்கடமைகளைத்
துவக்கவேண்டும்.அப்படி மந்திர ஜபம் முடிந்த வுடனே ஒரு தம்ளர் இளநீர்
அருந்தினால் நாம் ஜபித்த மந்திர அலைகள் நம் உடலுக்கு உள்ளேயே பதிவாகிவிடும். 

கடலை எண்ணெய் குடும்பத்தில் கலகத்தை உண்டாக்கும்.எனவே, குடும்பத்தில் கடலை எண்ணெயைப் பயன்படுத்துவதை பெருமளவு குறைப்பது நல்லது. ஏனெனில், இந்தக் கலகம் குடும்பங்கிளிடையே பரவி, நாடு முழுக்க கலகத்தை உருவாக்கும்.
 
பாமாயில் (பனை மர எண்ணெய்) சமையலில் கலந்து சாப்பிட்டால் துர்தேவதைகள் உடலுக்குள் புகுந்துவிடும்.தொடர்ந்து பாமாயில் பயன்படுத்தினால், நாளாவட்டத்தில் நமது கை கால்களை முடக்கிவிடும்.
 
தேங்காய் தொடர்ந்து உண்டால் ( இளமுறி எனப்படும் இளம் தேங்காய்) தாது விளையும்.ஈரலுக்கு வலிமை கொடுக்கும்.குடலிலும், வாயிலும் உள்ள புண்களை ஆற்றும். 

நம் கர்மாவை மாற்றக்கூடிய சக்தி அன்னதானத்திற்கு உண்டு. வீடு, வாசல் இல்லாத அனாதைகளுக்கு அன்னதானம் செய்வதே நிஜமான அன்ன தானம் ஆகும்.  
வீடு மற்றும் தொழிற்சாலைகளில் மற்றவர்கள் விட்ட பெருமூச்சு நீங்க வேண்டுமானால் சாம்பிராணிப்புகை அல்லது 60 வகை மூலிகை சேர்க்கையால் செய்யப்பட்ட மூலிகைப்புகை போடுவது நல்லது.

காலில் அணியும் மிஞ்சி பெண்ணின் காமத்தைக் குறைக்கும்.மூக்குத்தியும்
மோதிரமும் சுவாசக்காற்றிலுள்ள விஷகலையை நீக்கும்.
 
கோதுமை உணவு சாப்பிடுபவர்கள் வெண்ணெய் அல்லது நெய் சேர்த்துக் கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் கோதுமை உணவினால் தீமையே (கண் எரிச்சல், மலச்சிக்கல்) ஏற்படும்.
 
கறுப்புத் துணிப் பக்கம் காகம் வருவதில்லை.வெள்ளைத் துணி மற்றும்
நீலவெளிச்சத்திற்கு கொசுக்கள் வருவதில்லை.தூய ஆடைகள் பக்கம் கொசு அண்டுவதில்லை. 

புதன் கிழமைகளில் நீங்கள் எவருக்கும் ஆடை, ஆபரணங்கள், பொன்,பொன் ஆபரணங்கள் இரவலாகக் கூடத் தரக்கூடாது.அப்படித் தந்தால்,உங்களது செல்வ வளம் உங்களை விட்டு நீங்கத் துவங்கும். ஆனால்,பிறரிடமிருந்து வாங்கலாம்.அப்படி வாங்கினால், நீங்கள் செல்வச் செழிப்பை அடைவீர்கள்.
வெள்ளி,செவ்வாய்க் கிழமைகளில் யாருக்கேனும் நீங்கள் நெல், அரிசி, கோதுமை மற்றும் உணவுப்பொருட்கள், பதார்த்தங்கள் தரக்கூடாது. பணம், முன் ஜாமீன் கொடுக்கக்கூடாது. அப்படிக் கொடுத்தால், வாங்கியவர் வளமடைவார்.

கார்த்திகை,மகம்,உத்திரம்,சித்திரை,மூலம்,ரேவதி நட்சத்திரங்களில் எவருக்கும் எதையும் கொடுக்கவும் வாங்கவும் கூடாது.அப்படிச்செய்தால் வறுமை உங்களை வந்தடையும் என்பது ஐதீகம்.

வேப்பமரத்தின் கீழ் உட்கார்ந்தால் அந்தக் காற்றில் அயோடின் இருக்கிறது. அது நமது உடலை சுத்தப்படுத்துகிறது. அரச மரத்தை எடுத்துக்கொண்டால் அதனுடைய குச்சி இருக்கிறதல்லவா சுள்ளி, அதில் மின் காந்த அலைகளே இருக்கிறது என்று ஆராய்ச்சியில் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான் அரச மரத்தை சுற்றிவந்தால் ஆண்மைத் திறன் வளரும். கர்ப்பப்பை பலவீனமாக இருந்தால் பலமடையும். ஏனென்றால் அந்தக் காற்றிற்கு அவ்வளவு சக்தி இருக்கிறது.
======================================================

முருக பக்தர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அதி சூட்சும ஷண்முக மந்திரம்
ஓம் நமோ பகவதே
சுப்ரமண்யாய ஷண்முகாய மகாத்மனே
ஸ்ர்வ சத்ரு ஸ்ம்ஹார
காரணாய குஹாய மஹா பல பராக்ரமாய
வீராய சூராய மக்தாய மஹா பலாய
பக்தாய பக்த பரிபாலனாயா
தனாய தனேஸ்வராய
மம ஸர்வா பீஷ்டம்
ப்ரயச்ச ஸ்வாஹா!
ஓம் சுப்ரமண்ய தேவதாய நமஹ!

-இந்த மந்திரத்தை தினமும் முருகன் உருவப்படத்தின் முன்பு  11 முறை சொல்லி வர நற்பலன் உண்டாகும். இது வழி வழியாக குரு உபதேசம் மூலம் அனுகிரஹிக்கப்படும் மந்திரமாகும்.