Wednesday, October 5, 2011

மனிதனின் பிறப்புகள் எத்தனை?


`மனித உயிர்களுக்கு மறு பிறப்பு உண்டு’ என்பதை இப்போது எல்லா மதங்களுமே ஒப்புக்கொள்ளத் தொடங்கி விட்டன.
பிறப்பின் முடிவு இறப்பு- இறப்பின் முடிவு பிறப்பு.
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு ஒரு உயிர் பூமியிலே மீண்டும் மீண்டும் பிறக்கிறது.
ஏழு பிறப்பு என்பது தவறான வாதம்.
`எழு பிறப்பு’ என்ற வள்ளுவன் வார்த் தைக்கு, `எழுகின்ற ஒவ்வொரு பிற ப்பும்’ என்பது பொருள்.
`இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ என்பது பிரபந்தம்.
`ஏழேழ் பிறவி’ என்றால், `நாற்பத்தொன்பது பிறவி’ என்று அர்த்தமல்ல.
`எழுந்து வரும் ஒவ்வொரு பிறவிக்கும்’ என்பது பொருள்.
சில உயிர்கள், போன வேகத்தில் திரும்புகின்றன. சில உயிர்கள் ஓய் வெடுத்துத் திரும்புகின்றன.
புதிய வடிவங்கள் பிறந்த பின்னாலும், பழை ய வடிவங்கள் கனவில் வந்து பேசுகின்றன.
இம்மையில் பக்தியைச் செம்மையாகச் செ லுத்தி ஈஸ்வரனிடமே லயித்து விட்ட உயி ர், பிரிந்தால் மீண்டும் அது திரும்புவதில் லை. மறு பிறப்பு என்ற துயரம் அதற்கு இல் லை.
மற்றொன்று, `சில நேரங்களில் மரணம் அடைகிற உயிர் மீண்டும் திரும்புகிற தென் றும், வேறு சில நேரங்களில் மரணம் அடை கிற உயிர் திரும்புவதில்லை என்றும், தன்னைச் சரணடையும் உயிர் எப் போது மரித்தாலும் அதற்கு மறு பிறப்பு என்ற துன்பமே இல்லை’ என்றும் பகவான் கூறுகின்றான்.
எப்போது மரிக்கின்ற உயிர், மறுபடியும் பிறந்து அவஸ்தைப்படுகின்றது?
புகை சூழ்ந்த நேரம், இரவு நேரம், கிருஷ்ண பக்ஷம், தக்ஷணாயணம் ஆகியவற்றில் இறப்பவர்கள், சந்திரனின் வழியில் செல் கிறார்கள்.
சந்திர கதியை அடைந்த எந்த உயிரும் மீண் டும் திரும்புகிறது. காரணம், சந்திரன் என்பது அகங்காரம்; சூரியன் என்பது உண் மை அறிவு.
சந்திரனுக்கு இயற்கை ஒளி கிடையாது. சூரியனுடைய ஒளியை வாங் கித் திருப்பி அனுப்புகிறான்.
சந்திரனுடைய அகங்காரத்தை தனக்குள் அடக்கிக் கொண்டவன் பரமா த்மா. அவனைச் சரணடைந்து விட்டால் இந்த மறு பிறப்பை வெல்லலாம்.
எப்போது மரணம் அடைகிறவர்களுக்கு இயற்கை யிலேயே மறுபிறப்பு இல்லை?
நெருப்பு, வெளிச்சம், பகல், சுக்லபக்ஷம், உத்தராய ணம் இவற்றில் மரிக் கிறவர்கள் மீளாத வழியில் சென்று ஈஸ்வரனோடு ஐக்கியமடைந்து விடுகிறா ர்கள். இவர்களுக்கு மறுபிறவி இல்லை.
உத்ராயணம் என்பது சூரியனின் வடதிசைப் பய ணம். அதனால்தான், இறந்து போனவர்களை வடக்கே தலைவைத்துப் படு க்க வைக்கிறார்கள், முத்தியடைவதற்காக.
உயிரோடு இருப்பவர்கள் வடக்கே தலைவைத்துப் படுக்கக் கூடாது என்று சொல்வதும் அதற்காகவே.

இந்தப் பிறப்பில் துன்பங்களை அனுபவித்த வர்கள் இன்னும் ஒரு பிறப் பையா விரும்புவா ர்கள்?
மாதா உடல்சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கைசலித்து விட்டானேதாதா
இருப்பையூர் வாழ்சிவனே இன்னும்ஓர் அன் னை
கருப்பையூர் வாராமற் கா! – என்றார் பட்டி னத்தார்
`பிறவா வரம் வேண்டும் எம்மானே’ என்று புலம்பினார் ஒருவர்.
`மறுபடியும் கருவடையும் குழியில் தள்ளி வருத்தப்படுத்தவேண்டாம்’ – என்று வேண்டுகோள் விடுத்தார் ஒருவர்.
`அன்னை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை அப்பனோ
இன்னும் எத்தனை ஜென்மமோ?’ – என்று கலங்கினார் ஒருவர்.
மறு பிறப்பைப் பற்றிய திடமான நம்பிக் கையும், `ஐயையோ! படமுடி யாதினித் துயரம்! பட்டதெல்லாம் போதும்’ என்ற அவலமும் சேர்த்து இ திலே எதிரொலி க்கின்றன.
மறு பிறப்பு இல்லாமல் இருப்பதற்கோ, அப்படிப் பிறந்தாலும் பூர்வ ஜென்மத்தைப் பற்றித் தெளிவாகத் தெரிந்து கொள்வ தற்கோ ஒரே வழி ஈஸ்வர பக்தி.
அதையும் தெளிவாகச் சொல்வதென்றால், கிருஷ்ண பக்தி. ஏனென்றால், பகவான் மட்டும் தான் மறுபிறவி இல்லாமல் இருக்க வழி சொல்கின் றான்.
எங்கள் குடும்பத்தில் நான் சந்தித்த முதல் மரணம் முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தது.
எனது நாலாவது சகோதரியான காந்திமதி ஆச்சியின் மரணமே அது.
அந்தச் சகோதரி சத்தம் போட்டுப் பேசாது. அவ்வளவு அடக்கம், பொறு மை, பண்பாடு.
அவரது மரண ஊர்வலத்தின் போது லேசாக மழை பெய்தது. அந்த ஊரே அதைப்பற்றி பெருமையாகப் பேசிற் று.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன், 1962-இல் நானும் சம்பத் அவர்களும் தமிழ் தேசியக் கட்சியின் சார்பில் சுற்றுப் பயணத்தை மேற்கொண்ட போது, மதுரை மாவட்டத்தில் ஒரு காப்பித் தோட்ட அதிபரின் வீட்டுக்குச் சாப்பிடப் போனோம்.
நான் தலைகுனிந்து சாப்பிட்டுக்கொண்டே இருந்தேன்.
ஒரு அம்மையார் சற்று அதிகமாகக் குழம்பு ஊற்றி விட்டார்.
`போதும் அம்மா!’ என்று சொன்னபடியே நிமிர்ந்து பார்த்தேன்.
ன் உடம்பெல்லாம் வியர்த்து விட்டது. அப்ப டியே என் சகோதரியின் தோற்றம், அதே முக ம், அதே மூக்குத்தி, அதே சிரிப்பு!
இது என்ன அதிசயம்! இதைவிட அதிசயம், அவர் பெயரும் காந்திமதி தான்!
பாண்டிய நாட்டில் `காந்திமதி’ என்ற பெயர் அதிகம் என்றாலும், இந்த ஒற்றுமையில் என க்கு மறுபிறப்புத் தத்துவம் தான் தோன்றிற்று.
பகவான் ஒன்று சொல்கிறான், `மனம், உயிர், ஆத்மா மூன்றும் வேறு வேறு’ என்று.
உடம்பை விட்டு உயிர் பிரியும் போது, ஆத்மாவும் பிரிகிறது. அதனால் தான் இறந்து போனவர்களுக்கு அனுதாபம் தெரிவிக்கும் போது, `அவரது ஆத்மா சாந்தியடையட்டும்’ என்கிறோம்.
மனிதனின் பாவ புண்ணியங்களை கவனிக்கிற இந்த ஆத்மா, உயிரைக் கையோடு அழைத்துக் கொண்டு மறு கூட்டிலே புகுந்து விடுகிறது.
அந்த ஆத்மா சாந்தியடைந்து விட்டால், அந்த உயிரையும் தன்னோடு வை த்துக் கொண்டு விடுகிறது.

இந்தப் பிறவியில் துன்பங்களை அனுபவித் தவர்கள், தன் வாழ்நாளிலே துன்பங்களிலி ருந்து விடுதலை பெற முடியவில்லை என் றால், கடைசி யாக அவர்கள் பெறக் கூடிய விடுதலை, `ஆத்ம சாந்தி’.
ஈஸ்வர பக்தி இல்லாதவனுடைய ஆத்மாவும், தற்கொலை செய்து கொள்கிறவனுடைய ஆத் மாவும் எப்போதும் சாந்தியடைவதில்லை.
மறு உலகில் அவை, பேயாய் கணங்களாய்த் திரிகின்றன. மீண்டும் இந்தப் பூமியிலே பிறந்து விட்ட இடத்திலிருந்து துன்பத்தைத் தொடரு கின்றன.
ஆகவே லெளகீகத்தில் போராடிப் பார்த்து இறுதியாகத் துன்பங்களி லிருந்து விடுதலை பெற முயற்சிக்கிறவனுக்குக் கைகொடுக்கும் ஒரே மார்க்கம், பக்தி மார்க்கம்.
இங்கே மீண்டும் என் கதைக்கு வருகி றேன்.
இருபது வருஷங்களுக்கு முன்னால், என் எழுத்துக்களை நீங்கள் படித்திருப் பீர்கள். ஆண்டுகளுக்கு ஆண்டு அதிலே மாறுதலைக் கவனித் திருக்கிறீர்கள்.
இதற்குக் காரணம் என் திறமை அன்று; பக்தி மார்க்கத்திலே ஏற்பட்ட பற்றுத லே.
முன்பெல்லாம் துன்பங்களில் நடுக்கம் வரும்; தூக்கம் வராது. இப்போது வருவது போல் தூக்கம் எப்போதுமே வந்ததில்லை.
பெரிய பெரிய நிகழ்ச்சிகளைப் பற்றிக் கேள்விப்படும் போதெல்லாம் சிரி ப்புத்தான் வருகிறது.
`அது இல்லை, இது இல்லை’ என்ற சிந்தனைகள் எல்லாம் போய் விட் டன.
`இருப்பது கடவுள் கொடுத்தது’ என்று இயற்கை யாகவே தோன்றுகிறது.
உடல் நோயைப் பொறுத்தவரை தினமும் மாலை யில் ஒரு டாக்டரைச் சந்திக்கிறேன்.
அவர் தான் டாக்டர் கிருஷ்ணன்!
அவரை ஊனக் கண்ணால் பார்க்க முடியாது; ஞான க் கண்ணால் தான் பார்க்கலாம்.
சட்டங்களிலும் இ.பி.கோ, இ.பு.கோ. ஆகியவற் றைக் கண்டு நான் பரிதாப்படுகின்றேன்; அவற்றை அலட்சியப்படுத்துகி றேன்.
நான் பயப்படுவது `ப.பு.கோ’ ஒன்றுக்குத்தான்.
அதாவது `பகவான் புரொஸீஜர் கோர்ட்’ ஒன் றுக்குத்தான்.
காரணம் என்னுடைய `புருஷன்’ இப்போது கம்பீரமாக நிற்கிறான்.
வடமொழியில் `புருஷன்’ என்றால் `ஆத் மா’ என்று அர்த்தம்.
கணவன் தான் மனைவியினுடைய `ஆத்மா’ என்பதால் தான் அவனைப் `புருஷன்’ என்று அழைத்தார்கள்.
அடிக்கடி சொல்லும் ஒன்றையே நான் மீண்டும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.
`ஒன்று நடந்து தான் தீரும் என்றால் அதைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்?’
அத்தனையையும் பகவானிடம் ஒப்படையுங்கள்.
இந்த வாழ்க்கையில் கசப்பையே இனிப்பாக்கிக் கொள்ளுங்கள்; இருட் டையே வெளிச்சமாக்கிக் கொள்ளுங்கள்; நஷ்டத் தையே லாபமாக்கிக் கொள்ளுங்கள்; எது நேர்ந்தாலும் கவலைப்படா தீர்கள்.
விதி என்ற உண்மையைப் போட்டு, அதைத் துடை த்து விடுங்கள்.
எந்தச் செய்தியையும் அமைதியாகக் கேளுங் கள்; உடம்பை அலட்டிக் கொ ள்ளாதீர்கள்.
யாராவது தாறுமாறாக உங்களிடம் பேசிக் கொண்டிருந்தால், `நீங்கள் சொல்லுவதே சரியாக இருக்கக்கூடும்’ என்று சொல்லி விடு ங்கள்.
உங்களை `முட்டாள்’ என்று திட்டினால், `எனக் குக் கூட அந்தச் சந்தேகம் உண்டு!’ என்று கூறு ங்கள்.
உங்கள் மனைவி சண்டை போட்டால், `சம்சா ரத்தில் இதுதான் முக்கிய கட்டம்’ என்று கருதுங்கள்.
யாராவது உங்களை அவமானப்படுத்தினால், ஒரு அனுபவம் சேகரிக் கப்பட்டு விட்டதென்று கருதுங்கள்.
வருகின்ற துன்பங்கள் எல்லாம் ஒன்று, இரண்டு, மூன்று என்று அனுபவமாகச் சேகரித்துக் கொள்ளுங்கள்.
புதுப்புது அனுபவமாகச் சேகரியுங்கள்; ஒரே அனுபவத் திற்கு இரண்டு மூன் று பதிப்புகள் போடாதீர்கள்.
`நம்மால் ஆவது ஒன்றுமில்லை’ என்ற நினைப்பு, `நம க்கு வந்தது துன்ப மில்லை’ என்று நினைக்க வைத்துச் சாந்தியைத் தரும்.
`நாட்டையே கட்டி ஆண்டவர்கள் எல்லாம் கூட கோர்ட்டை மிதிக்கும்படி விதி வைக்கிறதே!’ உனக்கும் எனக்கும் வருவது துன்பமா என்ன?

விஜயதசமி கொண்டாடுவது ஏன்?


பிரம்மாவை நோக்கி தவம் செய்த மகிஷன் என்னும் அசுரன், தனக்கு அழிவு நேர்ந்தால் ஒருபெண்ணால் மட்டுமே நிகழ வேண்டும் என்ற வரத் தை ப் பெற்றான். தனக்கு அழிவே கிடையாது என ஆணவம் கொண்டான். தேவலோகத்தின் மீது போர் தொடுத்து தேவர் களைத் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் பராசக்தியிடம் முறையிட்டனர். அவர்களின் துன் பம் தீர்க்க எண்ணிய தேவி, உக்ரரூபம் கொண்டா ள். மும்மூர்த்திகளும் தங்களது அம்சத்தையும் அவ ளுக்கு அளித்து உதவினர். மகிஷனுடன் அவள் போரிட்டாள். சூலத்தை வீசிக்கொன்றாள். மகிஷ னை வதம் செய்ததால் மகிஷாசுரமர்த்தினி என்ற பெயர் பெற்றாள். அந்த வெற்றி த்திருநாளையே விஜயதசமியாகக் கொ ண்டாடுகிறோம். இந்நாளில் அம்பாள் கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
வெற்றிநாளான விஜயதசமி நாளில் பராசக்தியின் அருள் பெறும் வித த்தில் இப்பகுதி இடம் பெற்றுள்ளது. மாலை வேளையில் இதைப் பாராயணம் செய்து அம்பி கையின் அருள் பெறுங்கள்.
●மலையரசனின் மகளே! உயிர்கள் வாழ அருள்புரிபவளே! விஷ்ணுவின் அம்சமாகத் திக ழ்பவளே! அர்ஜுனனால் துதிக்கப்பட்டவளே! நீல கண்டப் பெருமானின் மனைவியே! உலக மாகிய பெரிய குடும்பத்தைக் காப்ப வளே! மன நிறைவைத் தருபவளே! மகிஷாசுர மர்த்தினியே! அழகான ஜடை கொண்டவளே! பர்வத குமாரியே! உன் திருவடியை வணங்கு கிறேன்.
● பக்தர்கள் வேண்டும் வரம் அருள்பவளே! அசு ரர்களை அழிப்பவளே! மூவுலகங்களையும் காப்பவளே! சிவபெருமா னிடம் விருப்பம் கொண்ட வளே! தைரியமும், கோபமும் குணமாகக் கொண்டவளே! என்றும் இள மை கொண்ட கன்னியே! உன் திருப் பாதத்தை என் தலைமேல் தாங்கு கிறேன்.
● உலகின் நாயகியே! தாயாக காப்பவளே! சிரிப்பில் விருப்பம் கொ ண்டவளே! கதம்பவனத்தில் இருப்பவ ளே! மலைகளின் அரசனான இமாலா யத்தின் உச்சியில் ஸ்ரீசக்ர பீடத்தில் இருப்பவளே! கைடபரை முறியடித்தவ ளே! உன் திருவடியைப் போற்றுகிறேன்.
● சதகண்டம் என்னும் ஆயுதத்தால் ரு ண்டாசுரனைத் அழித்தவளே! கஜா சுரனி ன் துதிக்கையை துண்டித்தவளே! சாமர் த்தியம் மிக்க சிங்க வாகனம் உடையவ ளே! முண்டாசுரனை வென்றவளே! உன் கமலச் செவ்வ டிகளில் விழுந்து பணிகிறேன்.
● பாவம், தீய எண்ணம் கொண்ட எதிரிகளை அழித்தவளே! சரணாகதி அடைந்தவருக்கு அபயம் அளிப்பவளே! சூலா யுதம் தாங்கியவளே! ரக்த பீஜன், சும்பன், நிசு ம்பன் ஆகிய அசுரர்களை வதம் செய்தவளே! உன் திருவடி நிழல் உலகெங்கும் வியாபி க்கட்டும்.
● தும்தும் என்ற நாதத்துடன் வருபவளே! பகைவர்களின் தலையை சதுரங்க காய் போல பந்தாடுபவளே! ஜயஜய என்ற கோஷத் துடன் துதிக்கப்படுபவளே! தேவலோக பாரிஜாத மலரைப் போல ஒளி கொண் டவளே! பாற்கடலில் பிறந்த சந்திரன் போல குளிர்ச்சி மிக் கவளே! உன் பொற்பாதங்களில் தண்டனிடுகிறேன்.
●பெண்கள் விரும்பும் பேரழகு கொண்டவளே! ராஜகுமாரியே! சுமங்கலிப் பெண்களால் சூழப்படுபவளே! தாமரை மலர் போன்ற நெற்றி கொண்டவளே! கலைக்கு இருப்பிடமாகத் திகழ் பவளே! வண்டுகள் பாடும் நறு மலர்கள் சூடியவளே! பட்டு பீதாம்பரம் அணிந்தவளே! உன் மலர் பாதங்களில் முகம் புதைக்கிறேன்.
● போர்வீரனாக விளங்கும் கார்த்திகேயனை புத்திரனாகப் பெற்றவளே! ஞானியர் நாடும் சமாதி நிலையில் விருப்பம் கொண்ட வளே! கருணைக்கு இருப்பிடமான தேவியே! கோடி சூரியர்களால் வண ங்கப்படுபவளே! கிடைத்தற்கரிய உன் திருவடியைக் கண் கொட்டாமல் காண்கிறேன்.
●அம்மா! உனது திருவடியை வணங்கும் பேறு பெற்ற நாங்கள் கல்வி கலைகளிலும், செல்வத்திலும் சிற ந்து விளங்க அருள் செய். பரம கருணையால் உலகிற் கெல்லாம் தாயாக விளங்குபவளே! உனக்கு எது விரு ப்பமோ அதை எனக்குச் செய்தருள்வாயாக. பர்வத ராஜ குமாரியே! எங்கள் வாழ்வில் வெற்றி குவிய உன்னைப் போற்றி வணங்குகிறேன்.
சக்தியின் நான்கு வடிவங்கள்: படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல் (பிள்ளைகள் செய்யும் தவறை தந்தைக்கு தெரியாமல் தாய் மறைப்பது போல, உலக உயிர்கள் செய்யும் தவறை சிவனுக்கு தெரியாமல் மறை த்து வைத்தல்) அருளல் என்னும் ஐந்து தொழில்களை செயல்படுத்த ஆதாரமாகத் திகழ்பவள் சக்தி. எல்லாவற்றுக்கும் மூல காரணமாக இருப்பதால் அவளை ஆதி பராசக்தி என்பர். அவள் சிவபெருமானின் இடப்பாகத்தில் இருக் கும்போது பவானி என்றும், அவளே ஆண் தன் மையை ஏற்கும் போது மகாவிஷ்ணு என்றும், அசு ரர்களை அழித்து உலகத்தைக் காத்தருளும் போது காளி என்றும், வெற் றிவாகை சூடி புன்முறுவல் காட்டும் போது துர்கா என்றும் பெயர் பெறு கிறாள். பவானி, மகாவிஷ்ணு, காளி, துர்கா ஆகிய நான்கு வடிவங்களும் சக்தியின் வடிவ ங்களாகும்.
ஒழுக்கத் திருநாள்: சிவபக்தனாக ராவணன், தினமும் கோயிலுக்குச் சென்று சிவபார்வதியை வணங்குவது வழக்கம். பக்தியோடு இருந்தா லும், ஒழுக்கத்தை அவன் பின்பற்றவில்லை. சீதையை சிறையெடுத்து அசோகவனத்தில் வைத்தான். இதனால், பார்வதிதேவிக்கு ராவண ன் மீது சீற்றம் உண்டானது. பக்தியை விட ஒழுக்கமே முக்கியம் என்பதை உலகிற்கு உணர்த்த எண்ணினாள். விஸ்வாமித்திரர் மூலம் சிறு வய திலேயே ராமன் தேவிமந்திரத்தை அறிந்திருந்தார். அம்மந்திரத்தை ஜெ பித்து நவராத்திரி விரதம் மேற் கொ ண்டார். அவருக்கு துர்க்கையாக காட் சியளித்த பார்வதி, யுத்தத்தில் வெற்றி கிடைக்க அருள்புரிந்தாள். ராவண னை வெற்றி கொண்ட தினத்தையே வடமாநிலங்கள் சிலவற்றில் விஜய தசமியாக மக்கள் கொண்டாடுகின் றனர். வெற்றிக்கு ஒழுக் கம் முக்கியம் என்பதை காட்டும் நாளாக விஜயதசமி அமைந்துள்ளது.
முக்குண தேவியர்: ஆதிபராசக்திக்கு ஆயிரமாயிரம் வடிவங்களும், பெய ர்களும் உள்ளன. இதில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியவை முக்கிய வடிவங்கள். மனிதனுக்குரிய குணங்களான சத் வம்(மென்மை), ரஜோ (வன்மை), தமோ (மந் தம்) ஆகிய மூன்றின் அடிப்படையில் தேவியர் அமைந்துள்ளனர். சத்வம் கொண்டவளாய் லட் சுமியும், ரஜோ கொண்ட வளாய் சரஸ்வதியும், தமோகுணம் கொண்டவளாய் பார்வதியும் இருக்கின்றனர். எல்லா குணங்களும் ஏதாவது ஒரு சமயத்தில் மனிதனுக்கு உதவுகிறது. என வே தான் மூன்று தேவியரையும் நாம் வழி படுகிறோம்.
அம்பாள் வழிபாடு அங்கும் இங்கும்…
முதல்வேதமான ரிக்வேதத்தின் பத்தாம் மண் டலத்தில் பராசக்தியைப் பற்றிய குறிப்புகள் தேவி சூக்தம் என்ற தலை ப்பில் இடம்பெற்றுள்ளன. அம்பிகையை மட்டுமே வழிபடும் முறைக்கு சாக்தம் என்று பெயர். சாக்தத்தில் வாமாசாரம், தட்சிணாசாரம் என்னும் இரு வித வழிபாடு உண்டு. தேவியை வாமா சாரமாக வழிபடுவது கடின மானது. இம்முறை வட மாநிலங்களில் பின்பற்றப்படுகிறது. அசா மில் வாமாசாரத்தைப் பின் பற்றுகின்றனர். மந் திர தீட்சை பெற்றால் தான் அம்பாளை இங்கு வழிபட முடியும். அம்பாளுக்கு பலியிடுவது இவர்களின் வழக்கம். சாத்வீகமான முறை யில் அம்பிகையை வழிபடும் முறை தட்சிணா சாரம் ஆகும். இது தென்னிந்தியப் பகுதியில் பின்பற்றப்படுகி றது. இங்கு பெரும்பாலான அம்மன் கோயில்களில் உயிர்ப்பலி கொ டுப்பதில்லை.
விஜயதசமி மரம்: சாதாரணமாக, கோயில்க ளில் வில்வம், வேம்பு, அரச மரங்களைப் பார்க்கலாம். இதில் அரசமர த்தை மட்டுமே வலம் வருவது மரபு. ஆனால், விஜயதசமியன்று வன்னி மரத்தை வலம் வர வேண்டும் என்பது ஐதீகம். பஞ்சபாண்டவர்கள் காட் டில் மறைந்து வாழும் போது, நவராத்திரி காலம் வந்தது. அவர்கள் தங் களின் ஆயுதங்களை ஒரு வன்னி மரத்தில் ஒளித்து வைத்தனர். பத்தாம் நாள் பராசக்தியை வழி பட்ட பிறகு ஆயுதங்களை எடுத்துக் கொண்டு புற ப்பட்டனர். அந்த நாளே விஜய தசமி. இந்த நாளில் வன்னிமரத்தை 21 மு றை வலம் வந்தால் எண்ணியது ஈடே றும் என்பர். இந்நாளில் மதுரை மீனாட்சியம்மன் கோயி லில் உள்ள வன்னிமரத்திற்கு, சிறப்பு பூஜை நட க்கும்.
வெற்றிக்குரிய தசமி திதி: எச்செயலைச் செய் தாலும் அதில் வெற்றி பெற வேண்டும் என்றே அனைவரும் விரும்புவர். அவ்வெற்றியை நம க்கு தந்தருளும் நாளே விஜயதசமி. கல்வி, கலைகளை கற்க விரும்புபவர் கள் இந்நாளில் தொடங்குவது வழக்கம். இந்நாளில், குழந்தை களுக்கு எழுத்துப்பயிற்சி தொடங்கினால் கல்வியில் சிறந்து விளங்குவர். இதனை அட் சர அப்யாசம் என்பர். கூத்தனூர் சரஸ்வதி கோயிலில் அட்சர அப்பியாச வழிபாடு மிக வும் விசேஷம். படிப்பு மட்டுமில்லாமல் சுப விஷயங்களையும் இன்று தொடங் கினால், எளிதில் வெற்றி பெறலாம்.


Sunday, October 2, 2011

நவராத்திரி வரலாறு


தேவி மகாத்மியத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சும்பன், நிசும்பன் என்ற அண்ணன், தம்பி இருவரும், அரக்கர்கள். அவர் களது அக்கிரம ஆட்சி தாங்காமல், மக்கள் தவித் திருக்கின்றனர். இந்த அரக்கர்களை எப்படியா வது அழித்து, மக்களைக் காப்பாற்ற வேண்டும் என, சிவா, விஷ்ணு, பிரம்மா (மும்மூர்த்திகள்) விடம், தேவர்கள் முறையிட்டிருக்கின்ற னர்.
மும்மூர்த்திகளும், மகா சக்தியைத் தோற்றுவி த்து, அவளுக்குத் தங்களது சக்தியையும், ஆயுதங் களையும், வாகனங்களையும் அளித்தனர். தேவி, அழகிய பெண் உருவம் எடுத்து, பூலோகத்திற்கு வந்தாள். அரக்கர்களின் வேலையாட்கள், சண் டன், முண்டன் என்ற இருவரும், இந்த அழகுப்பது மையான மகாசக்தியைப் பார்த்ததும், தங்களது ராஜாக்களுக்கு ஏற் றவள் இவள் என முடிவு செய்து, தேவியிடம், தங்களது ராஜாக்களில் ஒரு வரைத் திருமணம் செய் து கொள்ளும்படி வற்புறுத்தினர். அப்போது தேவி, தான் ஒரு சபதம் செய்திருப்பதாகக் கூறி, “யார் என்னை போரில் வெல்கின்றனரோ, அவர்களைத்தான் மணப்பேன்’ என்றாள்.
அதற்கு சண்டனும், முண்டனும், “தேவர்கள், அசுரர்கள் எல்லாருமே, எங்கள் ராஜாக்க ளுக்கு அடிமை. பெண்ணான நீ எம்மாத்திரம்? பேசாமல் எங்களுடன் வா…’ என்றனர். அத ற்கு தேவி, “தெரிந்தோ, தெரியாமலோ, சப தம் செய்து விட்டேன். நீ போய் ராஜா விடம் சொல். அவர்கள் எப்படி சொல்கின் றனரோ, அப்படியே நடக்கட்டும்…’ என்றாள்.
இதை சும்பன், நிசும்பன்களிடம் சொன்னதும், இருவரும் ஒவ்வொரு அசுரர்களாக அனுப் பினர். அவர்கள் எல்லாரையும் அழித்தாள் தேவி. அதில், ரக்த பீஜன் என்று ஒரு அரக் கன். இவன் கடுந்தவம் செய்து, ஒரு வரம் பெற்றிருக்கிறான். இவன் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும், மீண்டும் ஒரு ரக்த பீஜன் தோன்றுவான்.
அவனும் ரக்த பீஜன் போலவே ஆற்றலுடன் இருப்பான். ரக்த பீஜனை தேவி அழிக்கத் துவங்கி, கீழே விழும் ஒவ்வொரு துளி ரத்தத்திலும், ஒரு ரக்த பீஜன் தோன்றி, உலகமே ரக்த பீஜர்களால் நிறைந்தது. உடனே தேவி, தன்னிடம் உள்ள சாமுண்டி என் ற காளியை, வாயை அகலமாகத் திறந்து, ரக்த பீஜனின் உடம்பிலிருந்து விழும் ஒவ்வொரு துளி ரத்தத்ததை யும் குடிக்க வேண்டும் என்று ஆணை யிட்டாள். சாமுண்டியும், தேவியின் கட்டளையை நிறைவேற்றினாள். கடைசியில் ரக்த பீஜன் தன் ரத்தமெல்லாம் வெளியேற சோர்ந்து, இறந்து விடுகிறான். இறுதியில் சும்பன், நிசும்பன்களையும் அழித்து விடுகிறாள் தேவி. முதல் மூன்று நாட்கள் துர்க்கா பூஜையின் போது, தேவி மலை மகளாக இருந்து இச்சா சக்தியை, அதாவது, நமக்குள் இருக்கும் கெட்ட எண்ணங்களை அழிக்கும் தீர்மானத்தைத் தருகிறாள். இரண் டாவது மூன்று நாட்கள் லட்சுமியாக இருந்து, நமக்கு க்ரியா சக்தியை, அதாவது, வேண்டிய எல்லா செல்வங்களையும் கொ டுத்து, நம்மை முழு மனி தனாக ஆக்குகிறாள். மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதியாக உருவாகி, நம க்கு ஞான சக்தியை அருளி, நாம் மோட்சம் அடையும் வழியைக் காட்டுகிறாள்.
பத்தாவது நாள் தசமியன்று, மோட்சத்தை அ டைய வழி ஏற்பட்டதைக் கொண்டாடும் தினம் .நவராத்திரி பூஜையை நிறைய பேர் சேர்ந்து சமஷ்டி பூஜையாகச் செய்யலாம். எப்போதுமே கூட்டுப் பிரார்த்தனைக்கு சக்தி அதிகம். நவராத்திரியின் போது காலை யில் பூஜையை அனுஷ்டானங்களுடன் செய்ய வேண்டும். தேவி மகாத்மியத்தில் ஒவ்வொரு நாளுக்கும், ஒரு அத்யாயம் அல்லது குறிப்பிட்ட வழிமுறைப் படி பாராயணம் செய்ய வேண் டும். முதல் மூன் று நாட்கள், துர்க்காஷ்டகமும், இர ண்டாவது மூன்று நாட்கள், லட்சுமி அஷ் டோத்திரமும், மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதி அஷ் டோத்திரமும் சொல்லி பூஜை செய்ய வேண் டும். பூஜைக்குப் பயன்படுத்தும் பூக்களில் வாட ல், அழுகல் இல்லாமல் பார் த்துக் கொள்ள வேண் டும்.
அதேபோல், வெற்றிலையும் அழுகலோ அல் லது கோணலாகவோ இல்லாமல் தேர்வு செய் ய வேண்டும். பாக்கும் நல்ல பாக்காக இருக்க வேண்டும். ஏனென்றால், தேவிக்கு நாம் சிறப் பானதைத்தான் படைக்க வேண்டும். பூஜை செய் வது நம் வசதியைப் பொறுத்தது. பூஜை முடிந்த பிறகு, தினமும் ஒரு தம்பதிக்கு விருந்து படைக்கலாம் அல்லது ஒன்பது நாட்களில் ஏதாவது ஒரு நாள், இந்த விருந்து உபசாரத்தைச் செய்யலாம். இது செய்ய இய லாதவர்கள், சுமங்கலிக்கு ஒரு நாள் கண்டி ப்பாக விருந்து உபசாரம் செய்வது அவ சியம். அதே போல், ருது அடையாத கன்யா பெண்க ளையும் உபசரித்து, உணவளித்து, தாம் பூலம் கொடுக்க வேண்டும். வசதி குறைந்தவ ர்கள், குத்து விளக்கையே தேவியாக நினைத்து பூஜை செய்து, தம்மால் முடிந்ததை நிவேதனம் செய்து, யாராவது ஒருவருக்கு, மனதார தா ம்பூலம் கொடுத்தாலே, பூஜையின் முழுப் பலனும் கிடைக்கும். மூல நட்சத்திரத்தன்றே சரஸ்வதியை ஆவா ஹனம் செய்ய வேண் டியது முக்கியம். சரஸ்வதியை விக்ரக வடிவ த்திலோ அல்லது புஸ்தக வடிவத்திலோ ஆவா ஹனம் செய்யலாம். ஆத்மார் த்தமாக, மனம் ஒப்பி பூஜை செய்ய வேண்டும். எல்லாவற்றையும் நமக்கு தேவிதான் கொடுக்கிறாள். அவளுக்குச் செலுத்தும் சிறு நன்றிதான் இந்த நவராத்திரி பூஜை.

Saturday, October 1, 2011

கொலு சொல்லும் பல விஷயங்கள் …


ஒரு பெண்ணுக்கு எத்தனை கைகள்? எல்லோருக்கும் தெரிந்தது, இரண்டு கைகள்தான். ஆனால் அவள் தினமும் எட்டு கைகள் பார்க்கக்கூடிய அளவுக்கு கடுமையான வேலைகளை பார்க்க வே ண்டிய திருக்கிறது. அதை எடுத்துக்காட்டும் விதத் தில்தான் பெண் தெய்வ மான காளி தேவியை எட் டுக்கைகளுடன் படைத் தார்கள். அதைப் பார்த்து பெண்கள் பிரமிக்கிறார்க ளே தவிர, தங்களிடம் எட்டு கரத்துடன் உழைக்கும் அளவிற்கு சக்தி இருக்கிறது என்பதை உண ரத் தயங்குகிறார்கள்.. என்று புது விளக்கம் தருகிறார்கள், இன்றைய புதுமைப் பெண்கள்!
`இந்த விளக்கம் சூப்பராகத்தான் இருக்கிறது. இப்போது இந்தியாவே நவராத்திரி விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நவராத்திரி விழா பெண்களின் சிறப்பை எப் படி எடுத்துரை க்கிறது என்ப தை சொல்லுங்க ளேன்..?’ என்று கேட்டால், இவர்கள் தரும் பதில் சுவாரஸ்யமா னது. பெண்கள் பெருமைப் படத்தக்கது.
“நவராத்திரி விழா துர்க்கை அம்மனை சிறப்பிக்கும் விழா என்று அறிய ப்பட்டாலும், துர்க்கையின் பிரதிநிதிகளாக இந்த உலகில் வாழும் பெண்களை, பெண்மையை சிற ப்பிக்கும் விழா அது என்பதுதான் உண்மை. அத னால்தான் இந்த விழா வில் சிறுமிகள் முதல் சுமங்கலி பெண்கள் வரை அத்தனை பேரும் கவுர வப்படுத்தப் படுகிறார்கள்.
அன்பு, கருணை, தாய்மை, தைரியம், எதிரி களை அழிக்கும் ஆற்றல், அழகுணர்வு, க லை உணர்வு, கர்வம், கனிவு போன்ற ஒன் பது விதமான குணங்கள் எல்லா பெண்க ளிடமும் இருக்கவேண்டும். இத்தனை தன்மை களையும் கொண்ட பெண்களால் தான் இந்த உலகில் சிறப்பாக வாழ முடி யும். அதை பிரதிபலிக்கும் விதத்தில்தான் நவராத்திரியில் துர்க்கை அம்மனை ஒன் பது குணங்கள் கொண்டவளாக, ஒன்பது விதமாக அல ங்காரம் செய் கிறோம். இந்த விழாவினை பெண்கள் கொண்டாட தயாராகும் போதே இந்த ஒன்பது குணாதிசயங்களும் தங்களிடம் இருக் கிறதா என்று ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதாவது ஒன்று தங்களிடம் இல்லாவிட்டால்கூட அதை உணர்ந்து, இந்த விழாக் காலத்தில் அந்த குணத்தையும் உரு வாக்கி முழுமை நிறைந்த பெண் களாக தங் களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
அன்பு, பெண்மைக்கு பெருமை சேர்க்கும் மிகப் பெரிய சொத்து. பெண்களிடம் எப்போதும் அன் பு வற்றாத ஜீவநதிபோல் பெருகிக்கொ ண்டே இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்ட த்தான் துர்க்கையை அன்பின் சின்ன மாக நவராத்திரியில் ஒருநாள் அலங்காரம் செய்து வழிபட்டு மகிழ் கிறோம். கருணை என்றாலே நமக்கு கடவுளும், தாயும்தான் நினைவுக்கு வருவார்கள். இந்த உலகில் வாழு ம் ஒவ் வொரு பெண்ணும் கருணையின் வடிவம்தான். பெண் எப்போதும் கரு ணைமிக்கவளாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், துர்க்கை யை ஒருநாள் கருணை நிறைந்தவளாக உருவகப்படுத்தி, அலங்காரப் படுத்தி நவராத்திரி வழிபாடு செய்கிறோம்.
தாய்மை பெண்களின் தனிப்பெரும் சொத்து. தாய்மை உணர்வால் பெண், எல்லா உயிர்களையும் தன் உயிராக நினைக்கும் பக்குவ நிலைக்கு உயர் கிறாள். அதனால் துர்க்கையை தாய் மையின் சின்னமாகவும், நவராத் திரியில் பெருமைப்படுத்தி, பெண்க ளின் சிறப்பை மேம்படுத்திக்கொள் கிறோம்.
பெண்களிடம் கருணை, கனிவு, அன்பு போன்ற அனைத்தும் இருந்தாலும் அவர்கள் அநீதிகளைக் கண்டால் சின ந்தெழுந்து அதர்மக்காரர்களை அழிக்க தயங்கக்கூடாது என்பதை துர்க் கை வழிபாடு நமக்கு காட்டுகிறது. அநீதி நிகழ்ந்தபோது அந்த துர்க்கை யே சினந்தெழுந்து அசுரர்களை அழித் தார் என்று கூறி, பெண்களிடம் எப்போதும் போராட்டக்குணம் இருந்து கொண்டிருக்கவேண்டும் என்று உணர்த்தப்படுகிறது. அதனால்தான் துர்க்கை மகிஷனை வதம் செய்ததை நினைவுகூர்ந்து, அவளை மகிஷா சுரமர்த்தினி யாக வழிப டுகிறோம்…” என்று நீண்ட விளக்கம் தருகிறார்கள், ஆன்மிக ஆர்வலர்களான பார்வதி பாலசுப்பிரமணியனும், ஸ்ரீ ரஞ்சினி மோகன் குமாரும்!
“அலங்காரம் என்பது பெண்மைக்கே உரிய விஷ யம். அழகுணர்ச்சி கொண்ட பெண், தான் நேசி க்கும் எல்லாவற்றையும் அழகு படுத்திப்பார்ப் பாள். தனது குழந்தையையும் அழகுபடுத்துவாள். தான் வழிபடும் கடவு ளையும் அலங்காரத்தால் அழகுபடுத்துவாள். பெண்களிடம் இருக்கும் அழ குணர்ச்சி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்ப தற்காகத்தான் நவராத்திரி விழாக்காலத்தில் ஒன்பது நாளும், ஒன்பது விதமாக துர்க்கையை பெண்கள் அலங்காரம் செய்கிறார்கள். அந்த அலங்காரம் அவளது திறமையை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் மகிழ் ச்சியையும், மற்றவர்களிடம் இருந்து பாராட்டையும் பெற்றுத் தருகிறது. நாங்கள் நவ ராத்திரியில் துர்க்கையை அலங்காரம் செய்வதில் எப் போதும் தனிக் கவ னம் செலுத்து வோம். வருட த்திற்கு வருடம் அதில் புதுமைப டைத்து எங்க ளுக்குள் இருக்கும் அழகு படுத்தும் திறமையை வள ர்த்துக்கொண்டிருக்கி றோம்..” என்கிறார், சுஷ் மா.
நவராத்திரி பட்சணங்கள் பக்கம் தன் பேச்சை திருப்புகிறார், சுபாஷினி.
மனிதர்கள் உயிர்வாழ முக்கியமானது உணவு. சுவையும், குணமும், நிற மும், புதுமையும் இருந்தால்தான் அதை நாம் விரும்பி உண்போம். பட்சணங்களில் சுவையைவிட ஆரோக்கியம் மிக முக் கியம். பெண்கள் அனைவரும் சமை யலை கற்றுக்கொள்ளவேண்டும். அவர் கள் சமைக் கும் உணவில் புதுமை, ருசி, ஆரோக்கியம் போன்றவை இருக்க வேண்டும் என்பதை, நவராத்திரி போ ன்ற பண்டிகைகள் மக்களுக்கு கற்றுத் தரு கின்றன. ஒன்பது நாளும் கடவுள் பெயரால் வெவ்வேறுவிதமான உணவுகளை சமைத்து, கடவுளுக்கு படைத்து நாம் உண்ணுகிறோம். இப்போது டீன்ஏஜ் பெண்களில் பலர் தங்களுக்கு சமைக்கத் தெரியாது என்று சொல்வதை பேஷனாகக் கொண் டிருக்கிறார்கள். அது சரியல்ல, எல் லோரும் சமைக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பண்டிகை கா லங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. நான் ஒவ்வொரு பண்டிகை கால த்திலும், குறைந்தது நாலைந்து புதிய உணவுவகைகளையாவது கற்றுக் கொ ள்வேன்” என்கிறார், அவர்.
கொலு வைப்பதன் தத்துவம் உணர்த்தும் விஷயங்களை புதுமையாக விளக்குகிறார், ஆகாங்ஷா.
“கொலுவைப்பது என்பது பொம்மைகளை வரிசையாக அடுக்கிவைத்து, அழகு பார்ப்பது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வல்ல உண்மை. கலைநயம், சேகரிப்பு திறன், அழகின் வெளிப்பாடு, பொறுமை, நிறங்களின் தன்மையை புரிந்து கொ ள்ளல், படைத்தல், பாது காத்தல் போன்ற பல விஷயங்களை கொலு நமக்கு சொ ல்லித் தருகிறது.
பொம்மை தயாரிப்பது என்பது குடி சைத் தொழில்போல் லட்சக்கண க்கான குடும் பங்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. விழாக் களின் பெயரில் பொம்மைகளை வாங்கி, அந்த குடிசை தொழிலா ளர்களை ஊக்குவிப்பது நம் கடமையாகும். ஒரு பெண் பொம் மை களைவாங்க முன் வருகிறாள் என் றாலே, அவள் அதை உருவாக்கும் கலை ஞர்களுக்கு வாழ் வளிக்கும் நல்ல மன தை பெற்றிருக்கிறாள் என்று அர்த் தம். ஒரு பெண்ணிடம் எப்படிப்பட்ட கலை நயம் இருக்கிறது என்பதை அவள் பொம் மைகளை தேர்ந்தெடுப்பதை வை த்து கண்டுபிடித்துவிடலாம். வாங்குதல் , சேகரித்தல், அவைகளை அடுக்குதல், பாதுகாத்தல் போன்றவை களில் ஈடுபடும்போது அந்த பெண்ணிடம் நிதானம், பொறுமை போன் றவை ஏற்பட்டுவிடுகிறது. பொம்மைகளை வாங்கும் விதத்திலும், அவைகளை வரிசைப்படுத்தி கொலுவில் அடு க்கும் விதத்திலும் நிறங்களை வகை ப்படுத்தும் அறிவு எந்த அளவுக்கு அந்த பெண்ணிடம் இருக்கிறது என்பதை புரி ந்துகொள்ளலாம். அதனால் கொலு என்பது பார்த்து ரசிக்கும் ஒரு விஷயம் அல்ல. பெண்களின் அழகுணர்ச்சி, உள் ளத்தின் உணர்வுகள், மகிழ்ச்சி, உதவும் தன்மை போன்ற பல விஷயங்களை யும் கொலு வெளிப்படுத்துகிறது..” என் கிறார்.
“பெரும்பாலான விழாக்கள் பெண்களுக்கு வேலை சுமையை உருவாக் கிவிடும். வேலை சுமை உருவாகும்போது, பெண்களுக்கு ஓய்வற்ற உழைப்பும், சோர்வும் ஏற்பட்டு அந்த வி ழாவை மகிழ்ச்சியற்றதாக மாற்றிவி டும். ஆனால் நவராத்திரி விழா பெண் களின் அழகு, ஆட்டம், மகிழ்ச்சிக்கு அதி க முக்கியத்துவம் கொடுக்கிறது. பெண் கள் அழகழகாக உடை அணிந்து, ஆடிப் பாடி மகிழ்வார்கள். வாழ்க்கையை சுவா ரஸ்யப்படுத்த நடனங்கள் மிக இன்றிய மையாதவை. பெண்கள் சிறுவயதில் இருந்தே கலாசார நடனங்களை கற்றுக் கொள்ளவேண்டும். வாழ்க்கையின் எல்லா காலங்களிலும் அந்தந்த விழாக்களின்தன்மைக்கு தக்கபடி அவர்கள் ஆடவேண்டும். மகிழ்ச்சியாக வாழவேண்டும். ஆடவேண்டும் என்றால், ஆரோக்கியமான உடல் தே வை. அதனால் அழகு, ஆரோக் கியம், மகிழ்ச் சி போன்றவைகளை எல்லாம் பெண்களு க்கு தரும் விதத்திலும், பெண்மையின் சிறப்புக ளை ஆண்கள் உணர்ந்து அவர்களுக்கு மதி ப்பு தரும் விதத்திலும் நவராத்திரி பண்டிகை இருக்கிறது. அது கடவுள் வழிபாட்டோடு இந் த உலகுக்கு உணர்த்தப்படுகிறது..” என்கி றார், சஞ்சனா.
பண்டிகைகளில் பக்திக்கு அப்பால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா! நவராத்திரி விழா இன்றைய பெண்களுக்கு இருக்கவேண்டிய ஒன்பது குணாதிசயங்களைக் கொண்ட வித்தி யாசமான முகங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறது என்பது பெண்களுக்கு பெருமைதரும் விஷயம் தான்!
நன்றி-தினத்தந்தி