Wednesday, September 28, 2011

மந்திர வழிபாட்டு முறையும் அதன் சிறப்புகளும்

மந்திர வழிபாட்டு முறையும் அதன் சிறப்புகளும்

அன்னையை வழிபட ஆரம்ப நாட்களில் ஆலயத்தில் 108 மந்தி ரங்கள், வேண்டுதற்கூறு, சக்தி வழிபாடு போன்றன கூட்டு வழிபாட்டுக்கு பயன் படுத்தப்பட்டு வந்தன. அன்னைக்கு 1008 போற்றி மல ர்கள் எழுத வேண்டும் என்ற எண்ணம் ஆலயப்புலவர்கள் ஒருவரு க்கு உதிக்க அவர்
அம்முயற்சியில் ஈடுபட்டார்.எந்த சாஸ் திரமும், மந்திரங்களும் தெரியாத அவர் அன்னை விட்ட வழியென சிறுகச் சிறுக இரகசிய மாக எழுதி வந்தார். இவர் மந்தி ரங்களை எழுதிக் கொண்டிருந்த வேளை ஒரு நாள் ஆலயத்திற்குச் சென்றிருந்தார். அன்று அன்னை மந்தி ரிப்பு நல்கிக் கொண்டிருந்தாள். இவரும் அதில் ஒருவராய்ப் போய் நின்றார். அன்னை இவரை நோக்கி மகனே 1008 போற்றியை விரை வில் முடி என்றாள்.
பரமரகசியமாக இருந்த தம் முயற்சியை அன்னை அறிந்து கொ ண்டிருக்கிறாள். எனக் கண்ட அப்புலவ ருக்கோ கரைகாணா ஆனந்த ம். இவ்வா னந்தத்தோடே மிகுதி மந்திரங்களையும் எழுதி முடித்து அன்னையின் திருவடி யில் சமர்ப்பிக்க அன்னையவள் மற் றொரு புலவரையும் அழைத்து “இதில் திருத்தங்கள் சில செய்ய வேண் டியுள்ள து. இருவரும் சேர்ந்து திருத்தங்கள் செ ய்து எடுத்து வாருங் கள்” என்றாள்.
மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டு அன் னையிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அப்புத்த கத்தைப் பிரித்துப் பார்க்காமலேயே அன் னை சில குறிப்பிட்ட எண்ணுக்குரிய மந் திரங்களைப் படிக்கக் கூறி அம்மந்தி ரங்களை அன்னையே திருத்திக் கொடுத்து வேப்பிலையைத் தூவி இம்மந்திரநூலை ஏற் றுக் கொண்டாள்.மற்றுமொரு ஆலயப்புலவர் அன்னைக்காக 1008 போற்றி மந்திர ங்களை எழுதியுள்ளதாகவும், அதற்கு அன்னையின் ஆசி வே ண்டும் என வேண்டி நிற்க அன் னையவள் அதனையும் வேப்பி லையைத் தூவி 1008 போற்றித் திருவுருவாக ஏற்றுக்கொண் டாள்: எல்லையிலாக் கருணையோடு மானிட குலத்தை உய்விக்க வேண்டி அவதார நோக்கம் கொ ண்டு வந்த அன்னை நாத்திகம் பேசிய இர ண்டு பிள்ளைகளைத் தன் காலடியில் இழுத்துப் போட்டுக் கொண்டு அவர்கள் கைகளாலேயே மந்திரங்கள் எழுத வைத்து, அதற்கான காப்புச் செய்யுளாகத் தன் திருவாயாலேயே வெளியிட்ட மந்திரம் தான் இந்த மூல மந்திரம்!
 “ஓம் சக்தியே பராசக்தியே
  ஓம் சக்தியே ஆதிபராசக்தியே
  ஓம் சக்தியே மருவூர் அரசியே
  ஓம் சக்தியே ஓம் விநாயகா
  ஓம் சக்தியே ஓம் காமாட்சியே 
  ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே”
இதனாலேயே அன்னையவள் புலவர்கள் எழுதிய 1008 போற்றி மலருக்கும் 1008 போற்றித் திருவுருக்கும் காப்புச்செய்யு ளாக இம் மந்திரத்தை அருளினாள். இந் தக்காப்பே மூல மந்திரமாக ஓதப்படுகி றது,இந்த மூல மந்திரம் பரம்பொருளான அன்னை ஆதிபராசக்தி அரு ளிய மூலமந்திரம்! தேவர்க்கும், மூவர்க்கும் யோகிகட்கும் எளிதில் புலப்படாத அவள் மேல்மருவத்தூரில் வந் து கருணையோடு வெளிப்படுத்திய மந்தி ரம் அது! லட்சக்கணக்கான ஆன்மாக்களோடு உற வாட வேண்டி அருள்வாக்கு அளித்து, மக னே! மகளே! என்று பாசத்தைப் பொழிந்து, ஈர்த்துக் கொண்ட அவள், பிற்காலத்தே தன் பக்தர்கள் உருவேற்றி நலம் பெறவும், தன் அருள் பெறவும், ஆன்மிக சாதனை யில் ஈடுபடவும், ஆபத்துக் காலங்களில் துணைபுரியவும் அருளிய மூல மந்திரம் அது! 
 காப்புச் செய்யுளாக மூல மந்திரத்தை அரு ளிய அன்னை ஓம் பங்காரு காமாட்சியே! என்ற மந்திரத்திற்கு விளக்கம் அளித்தாள். ஆதியில் தான் காஞ்சி யில் காமாட்சியாக இருந்ததையும் பாதியில் தான் பங்காரு காமா ட்சியாகத் தஞ்சையில் எழுந்தருளிய குறிப்பையும் அன்று புலப் படுத்தினாள்.
அன்னையை வழிபட வேண்டுதற்கூறு, 108 போற்றி உரு பாடல் களே இருந்தன. அதன் பின் அம்மா 1008 மந்திரங்களை இயற்ற வைத்தாள்.
அன்னையவள் அருளிய மந்திரங்களுள் விசேட மந்திரங்களாக 1008 போற்றி மலர்களும், 1008 போற்றித் திருவு ருவும் கருதப் படுகின்றன.
அன்னையை வழிபட்டு அருள்பெற வே ண்டி 1008 மந்திரங்கள், 108 மந்திரங்கள் அனைத்தும் தமிழில் உள்ளது மிகப் பெரிய சிறப்பாகும். “1008 போற்றி மலர்களை செவ்வாய்க் கிழமை வழிபாட்டுக்கு வைத்துக்கொள்!”
“1008 போற்றித் திருவுருவை வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு வைத்துக்கொள்” என்று அன்னை அருளினாள்.
இவற்றைக் கொண்டு மந்திர வழி பாடு செய்வது எப்படி என்பதை சொ ல்லிக் கொடுத்தாள்.  1008 போற்றித் திருவுருவைப் படிக் கிறவர்களை சந்நிதியின் முன் பாக வடதிசை நோக்கி அமர வைத்தாள். 1008 போற்றி மலர் படிப்பவர்க ளைத் தென் திசை நோக்கி அமர வைத்தாள்.
கருவறையில் சுயம்பின் கீழிருந்து எலுமிச்சம் பழம் எடுத்துவரச் சொல்லி, மந்திரம் படிப்பவர் முன் கற்பூர ஆராதனை காட்டி எலுமி ச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும். அன்னை அருளிய மந்திரம் படிக்கும் போது கடை ப்பிடிக்க வே ண்டிய விதிமுறைகள்:
1. ஒவ்வொரு வரிசையிலும் ஒற்றைபடையில் எண் கள் வருமாறு தொண்டர்கள் அமர வேண்டும்.
2. ஒருவர் உடம்பு மற்றொருவர் உடம்பின் மேல் படாதவாறு இடைவெளியிட்டு அமர்தல் வேண்டும்.
3. மந்திரம் படிக்கும் போது முதுகு வளையாமல் உடம்பு ஆடாமல் நிமிர்ந்து உட்கார்ந்தபடி மந்திரம் படிக்க வேண்டும். உடம்பில் எந் தச் சேட்டையும் கூடாது.
4. மந்திர வழிபாட்டுக்கு அனைவரும் அமர்ந்ததும்., அன்னைக்குக் கற்பூர தீபா ராதனை காட்டிப் பின்பு மந்திர வழி பாட்டில் கலந்து கொண்டுள்ளவர்களு க்கு தீபாராதனை காட்டி அவர்களைச் சுற்றி வந்து தீபாராதனை செய்து, அவர் களுக்கும் எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
5. மூல மந்திரத்தோடு 1008 மந்திரங்க ளைத் தொடங்க வேண்டும். பின் 108 சொல்லி முடிக்க வேண்டும்.
6. ஒவ்வொரு மந்திரமும் சொல்லி முடி க்கும் போது ‘ஓம்’ என்ற பிரணவ ஒலியுடன் கையால் அடிக்கும் மணி யின் ஒலியும் இணை ந்து முடிய வேண்டும்.
7. ஆயிரம் மந்திரம் வந்ததும் பிரம்மதாளம், மணி ஒலி, மிகுந்த முழக்கத்துடன் ஒலிக்கப்படவேண்டும். 

8. 1008 மந்திரங்களும் சொல்லி முடித்த பிறகு 108 மந்திரம் சொல்ல வேண்டும்.
இறுதியில் மந்திர வழிபாட்டில் கலந்து கொண்ட அன்பர்கள் எல் லோரும் வரி சையாக நின்று,ஒவ்வொருவராக எதி ரில் இருப்பவ ரை நோக்கி, ஓம் சக்தி சொல்லிக் குனிந்து, அவர் காலைத் தொ ட்டு வணங்க வேண்டும். பெண்கள் குனிய வேண்டாம். நின்றபடி ஓம் சக்தி என்று கை கூப்பித் தொழுதால் போதும். 9. 1008 மந்திரங்கள் சொல்லி வழிபாடு நடக்கிற நேரத்தில் மந்திரம் படிக்கிற சிலருக்குத் தொண்டை கம்மி க் கொள்ளலாம். மந்திர வழி பாட்டில் தொய்வு ஏற்படலாம். அப்படிப்பட்ட நேரங்களில் பூசனி க்காய் திருஷ்டி கழிக்க வேண்டும். இல்லையேல் எலுமிச்சம் பழம் பிழிந்து திருஷ்டி கழிக்க வேண்டும்.
10.”மந்திரங்களை ஒரு மன துடன் படித்து வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு ஒரு ம னத்தோடுபடிகிறபோது நீங்களு ம் சக்தி மயமாக ஆகி விடுகி றீர்கள்  மகனே! “என்பது அன் னையின் அருள் வாக்கு. 11. மந்திரம் படிக்கிறபோது உனக்கு மூக்குக் கண்ணாடி எதற்கு? கை களில் மோதிரம் எதற்கு? என்று சிலரை அன்னை கேட்பது உண்டு. பார்வையில் பழுதுள்ளவர்கள் எழுத்து தெரியாதவர்கள் எப்படிப் படிப்பது என்று கேட்கலாம். அத்தகையவர்கள் வேறு வழியில்லாத நிலையில் மூக்கு க் கண்ணாடி அணியலாம்.
“நீ ஒழுங்காக, ஒருமனத்துடன் மந்திரம் படித்தால் உன் மங்கலான பார்வையும் குணமாகிவிடும்.” என்பதை உணர்த்து வதற்காகவோ என்னவோ, உனக்கு மூக்குக் கண்ணாடி எதற்கு? என்று அன் னை கேட்டாள்.
மந்திரத்தின் முழுமையான பலனைப் பெறவேண்டுமானால்,
“எவன் ஒருவன் இந்த 1008 மந்திரங்களை விடியற்காலை  3 மணி க்குஎழுந்து  இந்த மந்திரங்களைத் தூய்மையுடனும், பயபக்தியு டனும், மன ஒருமைப்பாட்டுடனும், 1008 நாட்கள் தொடர்ந்து படித்து வருகிறா னோ அவனையும் அவனுடைய சந்த தியையும் நான் காப்பாற்றுவேன் மக னே!” என்று சொல்லிக் காட்டினாள் அன் னை.
“இம் மந்திரங்களை எந்த இடத்திலி ருந்து படித்தாலும் அந்த இடம் தூய்மை அடையும்”என்பது அன்னையின் அரு ள்வாக்கு. அம்மா காட்டும் பாதையில் அனுதின மும் அன்னையின்  “1008, 108 மந்திர ங்களை தினமும் படித்து வழிபட்டு அம்மாவின் அருளைப் பெறு வோமாக!”
ஓம் சக்தி அம்மாவே சரணம் அம்மா! 
உலகமெலாம் சக்திநெறி ஓங்க வேண்டும்!!
ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும்!!
ஓம் சக்தி


ஆன்மீகம்: மோட்சபுரி ஹரிதுவார்

ஆன்மீகம்: மோட்சபுரி ஹரிதுவார்: மோட்சபுரி ஹரிதுவார் நம்நாட்டி...

மோட்சபுரி ஹரிதுவார்


                                        மோட்சபுரி ஹரிதுவார்

Temples at Rishikesh
நம்நாட்டில் இருக்கும் முக்கியமான ஏழு மோட்சபுரிகளில் ஒன்று ஹரிதுவார். அவை காசி, காஞ்சி, துவாரகா, உஜ்ஜயினி, அயோத்தியா, மதுரா ,மாயாபுரி. ஹரிதுவார்தான் இந்த மாயாபுரி. இங்கிருந்து ‘கிளம்பினால்,’ நேரா மோட்சம் என்பதால் பலர் தங்கள் கடைசி காலத்தில் இங்கே வந்து தங்கிவிடுகிறார்கள்–மேட்சபுரி??
டெல்லியில் இருந்து பேருந்து மூலம் ஹரித்துவார் சென்றோம்.  இனிய பயணம்.கோவையில் அறிமுகமாகாதவர்களாகக் கிளம்பியவர்கள் நெருங்கிய குடும்பநண்பர்களாக மாறினோம்.
முகத்திலும் முதுகிலும் அறைந்த மாதிரி தகித்த டெல்லி வெயிலில் இருந்து தப்பிய உணர்வு..
ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷ் 16 கி,மீட்டர்கள்தான்.
புராணகாலத்தில் கங்கைக்கரையில் ரிஷிகள் வந்து கங்கையில் மூழ்கி எழுந்து தவமும் தியானமுமாக இருப்பார்களாம்.
 நாளில் பலமுறை கங்கையில் குளித்துக்கொண்டே இருப்பதால் இவர்களின் ஜடாமுடியில் இருந்து எப்போதும் கங்கைநீர் சொட்டிக்கொண்டே இருப்பதால்.  ரிஷி கேசம் என்று பெயராம்..
 ஆசிரமங்களும் ,நிறைய பெயர்களின் ட்ரஸ்ட்களும் நிறைந்திருக்கின்றன.. சாரிட்டபிள் ட்ரஸ்ட்தான் எல்லாமே……
ராம்ஜூலா பாலம். 650 அடி நீளம் -இரண்டு மீட்டர் அகலம் கொண்டது..பாலம் கடந்ததும் நிறைய கடைகள். பெருங்காயம் வாங்கினார்கள். உயர்ந்த தரமாம்.
  சிவானந்தா பாலம் என்று தான் பெயர் பொறித்திருந்தது. ஆனால்….இந்த ஊரில் இருக்கும் லக்ஷ்மண ஜூலாவுக்குத் துணையாக இருக்க மக்கள் ராம்ஜூலான்னு கூப்பிடப்போய் இப்போ ராம்ஜூலா என்ற பெயரே வழக்கில்வழங்குகிறது
 சிவானந்தா ஆஸ்ரமம்தான் பாலம் கட்டும் செலவில் பாதி கொடுத்திருக்கிறார்களாம். . நாம் நடக்கும்போது லேசா ஒரு ஆட்டம். .நிறைய குரங்குகள் தாவிக்கொண்டிருந்தன.
நடைப்பாலமென்றாலும் சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் எல்லாம் கூட இதன்மேல் ஓட்டுகிறார்கள். மாடுகளும் நிதானமாக நடந்து செல்கின்றன.பாலத்தில் நடக்கும்போது மழைத்தூறல் ரசிக்கவைத்த்து.
கரையை ஒட்டிப்போகும் பாதையில் ஒரு கீதாபவன் கோவில், உச்சியில் குடையின் கீழ் நாலு பக்கமும் பார்த்தமாதிரி நாலு திருவுருவச்சிலைகள். ராமன், லக்ஷ்மணன், ஹனுமன்,சீதா.
கீதா பவன் ஆஷ்ரமம்.
Rishikesh, India: The entrance gate (from the inside)


பரந்து விரிந்த. லக்ஷ்மிநாராயணன் கோவில்நிறைய அறைகள் பக்தர்கள் வந்து தங்குவதற்காக. அங்கங்கே பெரிய ஹால்கள் வகுப்புகள் நடத்த, பிரசங்கம் பண்ண இப்படி. ஆயுர்வேத சிகிச்சை நடக்கும் இடங்கள். மருந்து விற்கும் இடங்கள். ஏழைகளுக்கு இலவச மருந்து கொடுக்கும் இடம், தங்கியுள்ள பக்தர்களுக்கான பலசரக்கு சாமான் விற்கும் கடை கண்ணிகள் பெரிய முற்றங்களின் நடுவில் மரங்கள். தியானம் செய்ய பெரிய ஆலமரம் உள்ள தோட்டம், புல்வெளி, கங்கைக்குப்போகும் தனிப்பட்ட படித்துறைகள் இப்படி ஏராளம் ஏராளம். .
 கங்கைக்கு ஒரு கோவில். ‘ஸ்ரீ கங்கா கோயில்’தமிழிலும் எழுத்து! கவனத்தை ஈர்த்தது. இமயம்வரை தமிழ் போய் வெற்றிவா சூடி இருப்பதாக சொல்லிக் கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே!.
கங்காமாதா ஆரத்தி கண்கொள்ளாக்காட்சி.
Uttaranchal Photo - haridwar
ஒரு பக்கம் கோவில்களுக்கே உரித்தான பாத்திரக்கடைகளில் தாமிரச்சொம்புகளாக அடுக்கி இருந்தது. . வாங்கி கங்கையை நிறைத்து மூடிபோட்டு ஈயம் வைத்து ஸீல் செய்து வாங்கிக்கொண்டோம்.. .

நதியின் வேகத்தில் கால்தவறினால் இழுத்துச்செல்லும் அபாயத்தைத் தவிர்க்க இரும்புக்கம்பிகளை நட்டு அதில் இரும்புச்சங்கிலி போட்டு சங்கிலி வைத்திருந்தது பிடித்துக்கொண்டு முங்கி எழவேண்டும்.

இமயத்திலிருந்து உருகி வந்த குளிர்ச்சியான நீர் நடுநடுங்க வைத்தது. பாதங்களைதேய்த்து ரத்தஓட்டத்தைச் சீராக்கிய பின் பிள்ளைகளுக்கு நீர்விளையாட்டு மிகப்பிடித்து விட்டது. எழுந்து வரமனமில்லை. .
பெண்களுக்குத் தனி இடமாக உடை மாற்றிக்கொள்ள ஒரு சின்ன அறை

Uttaranchal Photo - rishikesh
File:An array of jewellery being sold at Rishikesh.jpg
Tuesday, September 27, 2011

இரங்குபவன் இறைவன் !

                 இரங்குபவன் இறைவன் !

இளைமையிலேயே இறைஅறிவு பெற்று உய்திட அழைத்த அருணந்தி சிவாச்சாரியாரின் குருபூசைத்தினம் இன்று. சிவஞான சித்தியாரைத் தமிழ் உலகுக்குத் தந்த
அருணந்தி சிவாச்சாரியாரின் குருபூசை. சிவஞானத்தில் சித்தியடைதல் இவ்வுலக வாழ்விற்கும் சிவனடி அடைதற்கும் அவசியமானது என்பதை வலியுறுத்துவதே சிவஞான சித்தியாரின் நோக்காக உள்ளது. சைவசித்தாந்த சாத்திரத்தின் - தமிழர் ஆன்மீகத் தத்துவத்தின் இரண்டாவது நூலாகப் போற்றப்படும் சிவஞான சித்தியார் சிவஞானத்தில் சித்தி பெறுதலுக்கான எண்ணங்களை நம்பிக்கையைத் தந்திடும் இறைவெளிப்பாடு எனலாம்.
சுவேதனப் பெருமாள் என இயற்பெயர் கொண்டவரை பரஞ்சோதி முனிவரின் அருட்பார்வைத் தீட்சை தெய்வப்புலமை பெற வைத்து மெய்கண்டார் என்னும் அருட்பெயரும் அவராலேயே அருளப்பட்டு பொல்லாப் பிள்ளையார் துணையால் சிவஞான போதம் என்னும் சிவஞானத்தின் அறிவினை வெளிப்படுத்தும் இறைவெளிப்பாட்டு நூலை எவ்வாறு எழுத வைத்ததோ - அவ்வாறே சிவஞான போதத்திற்கு வழிநூலாகிய சிஞானசித்தியாரை எழுதிய அருணந்தி சிவாச்சாரியாரையும் சிவஞானத்தை வாழ்வில் பெற்று சித்திகள் அடைதற்கான வழிகள் விளக்கும் இறைவெளிப்பாடாகவே சிவஞானசித்தியாரை எழுத சிவனருள் வைத்துள்ளது என்றால் மிகையாகாது.
இதனால் தான் அஃறிணைப் பொருளாகிய சிவஞானசித்தி என்னும் நூலுக்கு உயர்திணை விகுதியான ஆர் கொண்டு சிவஞானசித்தியார் என முடித்து உயிர்களையும் உலகையும் இயக்கும் பேராற்றல் மிகு மூலமுதல்வனின் அருளாற்றலின் சொல்லாற்றால் வெளிப்பாடு இந்நூல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது
சகலாகம பண்டிதர் என்னும் அறிவுக்கடலாகத் திகழந்து மெய்கண்டாரின் பெற்றோர்க்கே திருஞானசம்பந்தரின் திருக்கடைக்காப்புக்கே நூல்கட்டிப்பார்க்கப் பணித்து திருமறைக்காடு சென்று சிவனருளால் சுவேதனப் பெருமாளைக் குழந்தையாகப் பெற வழிகாட்டியவர் அருணந்தி சிவாச்சாரியார். பின்னர் அருணந்தி சிவாச்சாரியாரே மெய்கண்டாராக அக்குழந்தை அருள் உபதேசம் செய்வதையும் இதனால் தன்னிடத்தில் படிக்கும் சீடர்கள் தொகை குறைந்து அக்குழந்தையிடத்திலேயே சீடர்கள் தொகை குறைவதையும் கண்டு மனக்கொதிப்படைகிறார். மெய்கண்டார் உபதேசிக்கும் இடத்திற்கே சென்று ஆணவம் என்றால் என விளக்கு என அறிவின் மமதையில் கட்டளை பிறப்பிக்கின்றார். மெய்கண்டாரோ எதுவுமே பேசாது அவரையே உற்றுப்பார்க்கத் தானே ஆணவம் என்பதின் மொத்தவடிவாக நிற்பதை அருணந்தி சிவாச்சாரியார் உணர்கிறார். உடனேயே மெய்கண்டாரை வணங்கி அவரையே தனது குருவாகவும் ஏற்று அவர் எழுதிய சிவஞானத்தை மக்கள் மயப்படுத்தும் சிவஞான சித்தியாரையும் அருளினார் என்பது வரலாறு.
ஆணவம் ஒடுங்கும் பொழுது சிவசித்தி சித்திக்கும் என்பது சிவஞானசித்தியாரின் தோற்றக்கதை தரும் பெருவிளக்கமாக அமைகிறது. . “கருவினுள் அழிவதாயும், கழிந்திடாது அழிவதாயும் - பரிணமித்து அழிவதாயும், பாலனாய் அழிவதாயும் - தருணனாய் அழிவதாயும், தான் நரைத்து அழிவதாயும் - உருவமே அழிவேயானால், உள்ளபோதே பார் உய்ய”. என்பது அருணந்தி சிவாச்சாரியார் விடுக்கும் அழைப்பு.
என் பிள்ளை நன்றாக கணித விஞ்ஞானத்தில் தேறி பட்டங்கள் பல பலக்கலைக்கழகத்தில் பெற்று பெரும் பதவிகளும் பெற்று நல்ல இடத்தில் திருமணம் செய்து வாழ்வாங்கு வாழ்ந்து முதுமையில் சிவப்பணி செய்து சிவப்பேறு பெற்றிடல் வேண்டும் என்பது பெரும்பாலான பெற்றோர்களின் எதிர்பார்ப்பு. இதற்காகத் தாங்களும் பிள்ளைகளும் இறைவனை வழிபட்டு அவன் அருளை இச்செயற்திட்டத்திற்குப் பெற்றிடல் வேண்டும் என்பதே பெரும்பாலான தமிழர்களின் இறைவழிபாட்டு நோக்காகவும் அமைகிறது.
இவை மனித மனதின் இயல்பான எண்ணங்கள் என்பதும் உண்மை. ஆனால் உயிரின் தோற்றமும் ஒடுக்கமும் உயிரின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே அருணந்தி சிவாச்சாரியாரின் மேற்சொன்ன பாடல் எமக்கு நெஞ்சிருத்துகிறது.
திருமூலநாயனாரும் திருமந்திரத்தில், “ கண்ணதும் காய்கதிரோனும் உலகினை - உள்நின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்- விண்உறு வாரையும் வினை உறுவாரையும் - எண்ணுறும் முப்பதில் ஈர்ந்து ஒழிந்தாரே” எனப்பாடி முப்பது வயதளவில் ஒரு ஆன்மாவுக்கு விண்ணா மண்ணா என்ற அடுத்த பிறவிக்கான தீர்ப்பு எழுதப்பட்டிடும் எனக்கூறி இளவயதிற்குள்ளேயே செபமும் தவமும் சிறுவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதைக் காணலாம்.
மேலும் நான்மறை பயிலும் நாட்டில் பிறப்பதும் வாழ்வதும் இறைகொடை என்றார் அருணந்தி சிவாச்சாரியார். “ நரர்பயில் தேயந்தன்னில், நான்மறை பயிலா நாட்டில்,- விரவுதல் ஒழிந்து, தோன்றல் மிக்க புண்ணியத்தான் ஆகும்; தரையினில் கீழை விட்டு தவம்செய் சாதியினில் வந்து – பரசமயங்கண் செல்லர் பாக்கியம் பண்ணொணாதே.” என்னும் சிவஞானசித்தியார் பாடல் மூலம் அருணந்தி சிவாச்சாரியார் வேதமுறையையும் தவநெறியையும் கொண்டு பிறசமயங்களுள் செல்லா மன உறுதி கொண்டிட அழைக்கின்றார்.
இது இன்றைய புலத்துச் சைவமக்கள் மனத்துக் கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான கட்டளையும் கூட. இங்கு தவம் செய் சாதி எனச் சைவர்களை குறித்துள்ளமை மிக முக்கியமான ஒன்று. “உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை – அற்றே தவத்திற் குரு” என்று தவத்தின் வடிவம் என்பது விரதத்தால் தன் உயிருக்கு உற்ற நோயை மாற்றுதலும் பிற உயிர்கள் எதற்கும் தீங்கு செய்யாது வாழ்தலும் என்று தவத்திற்கு தவம் குறித்த தன் அதிகாரத்தில் வரைவிலக்கணம் தரும் வள்ளுவர் பின்னர் ‘சான்றாண்மை’ என்னும் அதிகாரத்தில், “ கொல்லா நலத்தது நேர்ன்மை பிறர் தீமை - சொல்லா நலத்தது சால்பு” என்று கூறி உயிர்களைக் கொல்லாமை தவம் உயிர் வருந்தக் கூடிய வகையில் பிறரின் தீமைகைளச் சொல்லாது இருப்பது சால்பு” என்று அழகாக விளக்கம் தருகிறார்.
இன்னா சொல்லும் இன்னா செய்யாமையும் சைவவழி என்பதை வள்ளுவம் எடுத்துரைக்கிறது. சைவன் எனப்பட்டவன் எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாது வாழ்பவன் என்னும் தத்துவத்தைக் கடைப்பிடிப்பதற்காகவே புலால் உண்ணாமை சைவத்தின் அடிப்படை விதியாகிறது. இது ஒருவகைத் தவமே இதனால் தான் தவஞ்செய் சாதியில் பிறத்தலே பெரும் புண்ணியம் என அருணந்தி சிவாச்சாரியார் அழகுற எடுத்தியம்புகிறார்.
வாழ்வு மயக்கம் தரும் தன்மையானது. வறுமை சிறுமைகளைச் செய்விக்கும் போக்குடையது. இவற்றிலிருந்து தப்புவதற்குத் தெய்வ அருள் வேண்டும். கூடவே வாழ்வில் பணிவு என்னும் பண்பு மனத்தில் எந்த அளவுக்கு வளர்கிறதோ அந்த அளவுக்கே நான் என்னும் அகங்கார முனைப்பும் எல்லாமே எனக்கு என்னும் எனது என்னும் மமகாரப் போக்கும் அடங்கும். இந்தத்தன்மை பெறவும் இறையருள் அவசியம். “வாழ்வெனும் மையல் விட்டு, வறுமையாம் சிறுமை தப்பி – தாழ்வெனும் தன்மையோடும் சைவமாம் சமயம் சாரும் - ஊழ்பெறல் அரிது சால் உயிர் சிவஞானத்தாலே,- போழ் இழ மதியினானைப் போற்றுவார், அருள் பெற்றாரே” என்னும் சிவஞானசித்தியாரின் பாடல்.
இந்த தாழ்வு என்னும் பணிவு இறைவனை அடைதற்கான முதல் நிபந்தனை என்பதைக் கிறிஸ்தவத்தைத் தோற்றுவித்த இயேசுநாதரும் பலதடவைகளில் வலியுறுத்துவதைக் காணலாம். அவர் “ஊசிமுனைக் காதுக்குள் ஒட்டகங்கள் போனாலும் செல்வந்தர்கள் கடவுளின் அரசுக்குள் செல்ல மாட்டார்கள்” என அடித்துக் கூறினார். தாழ்வென்னும் தன்மை பெறத் தடையாவன செல்வத்தை போற்றும் செல்வந்தர்களை சிவஞானசித்தியார் செத்த பிணத்தோடு ஒப்பிட்டுப் பேசுகிறது. “அரிசனம் பூசி மாலை அணிந்து பொன்னாடை சாத்தி,- பரிசனம் பின்பு செ;ல்ல, பாரகர் பரிக்க, கொட்ட – வரிசின்னம் ஊத தொங்கல் வந்திட உணர்வு மாண்டு, - பெரியவர் பேச்சும் இன்றிக் கிடத்தலால் பிணத்தொடு ஒப்பர்” என்பது பிறருக்கு உதவாத செல்வந்தர் குறித்து சிவஞான சித்தியார் தரும் சொற் காட்சி.
இந்த செல்வத்தைத் தன்னிடத்திலே குவித்தல் என்னும் சுரண்டலுக்கு எதிரான இந்த போர்க்குணம் மறைஞானசம்பந்தரிலும் இருந்தமையை உமாபதி சிவாச்சாரியார் பல்லக்கில் பகற்பொழுதில் தீப்பந்தங்கள் புடைசூழ போவதைக் கண்டு அவர் சொல்லிய “பட்ட கட்டையில் பகற்குருடு போகிறது” என்ற வசனம் நினைவுபடுத்துகிறது. இந்த வார்த்தைகளே உமாபதிசிவாச்சாரியார் வாழ்வு மாறுபாட்டுக்கான செல்நெறியாகியமை வரலாறு.
மண்ணாசை பொன்னாசை பெண்ணாசை வென்றிடல் என்பதற்கு மனக்கட்டுப்பாடு என்பது பயிற்றுவிக்கப்படல் வேண்டும். இதனையே அறவாழ்வு தருகிறது. மண்ணை அறுத்துச் செல்லும் நீர்ப்பெருக்குப் போன்று இறைஅருட்பெருக்கால் வாழ்வுக்கான பாதையை வகுத்துக் கொள்தலே அறம். அறமே இறைவனை எம் உள்ளம் தாங்கும் வாகனம். இதனால் தான் அறத்தின் சின்னமான விடை மீது சிவபெருமான் எழுந்தருளுகின்றார்.
இந்த அறவழி என்ன என்பதைச் சிவஞானசித்தியார் ஒழுக்கம் அன்பு அருள் ஆசாரம் உபசாரம் உறவு சீலம் வழுக்கு இலாத் தவம் தானங்கள் வந்தித்தல் வணங்கல் வாய்மை அழுக்கு இலாத் துறவு அடக்கம் அறிவொடு அர்ச்சித்தல் ஆதி இழுக்குஇலா அறங்களால் இரங்குவான் பணி அறங்கள் என வகுத்துக் கூறி இந்த அறவழி வாழ்பவர்களுக்கு இரங்குபவன் இறைவன் என்பதையும் அடித்துக் கூறுகிறது.
மதங்கள் இந்த அறத்தைக் கடைப்பிடித்தல் என்னும் தன்மையைக் கொண்டிருத்தலால்தான் பல்வேறு மதங்களிலும் வழிபாடு பெறும் ஒரே கடவுள் என்ற தத்துவம் பிறக்கிறது. மனமது நினைய வாக்கு வழுத்த மந்திரங்கள் சொல்ல இனமலர் கையில் கொண்டு அங்கு இச்சித்த தெய்வம் போற்றி சினமுதல் அகற்றி வாழும் செயல் அறமானால் யார்க்கும் முனம் ஒரு தெய்வம் எங்கும் செயற்குமுன் நிலையாம் அன்றே. என்று ஒன்றே தேவன் என்ற தத்துவத்திற்கு தெய்வம் போற்றி சினம் முதலாம் அறத்திற்கு எதிரான தன்மைகள் நீக்கி வாழ்தல் நிபந்தனையாகிறது என்பதை இச்சிவஞானசித்தியார் பாடல் விளக்குகிறது.
இதற்கு அடுத்த பாடலாகத் தான் யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் ஆகி என்னும் புகழ்மிக்க பாடல் வருகிறது. யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்மாம் ஆகி ஆங்கே மாதொரு பாகனார்தாம் வருவர் மற்று அத்தெய்வங்கள் வேதனைப்படும், இறக்கும் ,பிறக்கும் மேல் வினை செய்யும் , ஆதலான் இவை இலாதான் அறிந்து அருள் செய்வன் அன்றே. என சமயசமரசம் பேசும் இப்பாடல் சிவன் மூலமுதல்வன் என்பதினால் தோற்றம் நிலைத்தல் ஒடுங்கல் என்னும் தன்மையைக் கொண்டிருந்த மற்றைய தெய்வங்கள் எல்லாவற்றையும் தன்னுள் ஒடுக்கி தானே அருள்செய்கின்றான் என்ற விளக்கத்தைத் தருகிறது. இதனை சிவஞானசித்தியாரின் அடுத்த பாடல் மேலம் தெளிவாக்குகிறது.
இங்கு நம் சிலர்க்குப் பூசை இயற்றினால், இவர்களோ வந்து அங்குவான் தருவார்? அன்றேல் அத்தெய்வம் அத்தனைக் காண் , எங்கும் வாழ் தெய்வம் எல்லாம் இறைவன் ஆணையினால் நிற்பது அங்கு நாம் செய்யும் செய்திக்கு ஆணைவைப்பால் அளிப்பன். என யாருக்குப் பூசை செய்தாலும் அவற்றை ஏற்று பூசையின் பலனை அவர்களுக்கு அளிப்பவன் இறைவன் என்பதை அருணந்தி சிவாச்சாரியார் எடுத்து விளக்குகின்றார்.
இதனை அருணந்தி சிவாச்சாரியார் அவர்கள் திருமூலரின் பின்வரும் பாடலை அடியொற்றி எழுதினாரா என்கிற கேள்வி உண்டு.
சைவம் சிவனுடன் சம்பந்த மாகுதல்
சைவம் தனை அறிந்தே சிவம் சாருதல்
சைவம் சிவம் தன்னைச் சாராமல் நீங்குதல்
சைவம் சிவானந்தம் சாயுச்சியமே
சைவம் என்பது ஒரு மனிதன் நன்மைத்தனத்தை சிவத்தை தொடர்புறும் நிலை. அதன் பின் அம்மனிதன் தன்னால் இயன்ற நன்மைத்தனத்தை வெளிப்படுத்தி நிற்பான். சைவம் என்பது ஒன்றாயும் உடனாயும் வேறாயும் தன்அகத்தில் உள்ள இறைவனைச் சிவத்தை உணர்ந்து தன் செயல் எல்லாம் அவனால் செய்விக்கப்படுகிறது என அவனில் சாரும் நிலை. இந்த நிலையை அடைகையில் சிவம் என்பது மூலசக்தி அதனை உணரத்தான் முடியுமே தவிர விளக்க முடியாது என்கிற உண்மை தெளிவாகும் பொழுது சிவம் என்ற உருவநிலையை வழிபடும் நிலையில் நின்று விடுபட்டு மதங்கடந்த இறைவனை எங்கும் எல்லாமாய் நிறைந்துள்ள இறைவனை எல்லாவற்றையும் இயக்குகின்ற இறைவனை எல்லாவற்றையும் நிலைப்படுத்தி அனுபவப்படுத்தி இருவினை ஒப்பு ஏற்பட்டு மலபரிபாலனம் நிகழ்ந்து ஆன்மா சக்திநிபாதனமாகச் சக்தியில் சரண் புகும் பொழுது தன்னைக் காட்டித் தன்னோடு ஒடுக்கி அருள்செய்யும் இறைவனை அறிவர் - காண்பர் - மகிழ்வர்.
இந்நிலையில் சைவம் சிவானந்தம் தரு வழியாகிறது. சாயுச்சியம் என்னும் இறைவனுக்கு மிகநெருக்கமாகத் - தாள் தலையாக அவனில் நிலைபெறும் தன்மையை அளிக்கிறது என்பது திருமூலரின் விளக்கம். இதனை அடைய வைப்பது ஞானம். தடையில்லா ஞானமே சிவசக்தி என்பது சிவஞானசித்தியார் தரு விளக்கம். இதனால் தான் ஞானநூல், தனைஓதல் ஓதுவித்தல் நல்பொருளைக் கேட்பித்தல் தான்கேட்டல் நன்றா ஈனம்இலாப் பொருள் அதனைச் சிந்தித்தல் ஐந்தும் இறைவன் அடி அடைவிக்கும் எழில்ஞான பூசை ஊனம் இலாக் கன்மங்கள் தபம் செபங்கள் தியானம் ஒன்றுக்கு ஒன்று உயரும், இவை ஊட்டுவது போகம் ஆனவையான் - மேலான ஞானத்தால் அரனை அர்ச்சிப்பர் வீடு எய்த அறிந்தோர் எல்லாம். என ஓதல் ஓதுவித்தல் - கேட்டல் கேட்பித்தல் - கேட்டதைச் சிந்தித்தல் என்பதே எல்லாப் பூசைகளுக்கும் வழிகாட்டும் தினச்செயலாகும் என அருணந்தி சிவாச்சாரியார் எடுத்து விளக்குகிறார்.
இதனைச் செய்ய வேண்டிய கடமை உள்ளவர்கள் பெற்றோர்கள் - ஆசிரியர்கள் - குருக்கள் - ஊடகங்கள் - தலைவர்கள். இதில் இவர்கள தவறும் பொழுதே அமைதியின்மை யுத்தம் துன்பம் துயரங்கள் வாழ்வாகின்றன. மனிதன் தான் விதைத்தவை விளையும் பொழுது கடவுளாலும் எதுவும் செய்ய முடியாத நிலை தோன்றிவிடுகிறது.
“தெய்வத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் - மெய்வருத்தக் கூலி தரும்” ஆம். நமது வினைகளை மாற்ற தெய்வத்தால் முடியாது. ஆயினும் முயற்சி தவம். வழுக்கு இலாத் தவத்தை நாம் செய்து அதன் வழி எம் உடல் வருந்தினாலும் உறுதியுடன் உழைத்தால் நிச்சயம் “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றி – தாழா துஞற்று பவர்” என்ற தன்மையைப் பெறுவோம்.
மாண்டன உயிர்பெறும். மாண்புகள் சிறப்புறும். மகாகவி பாரதி தனது வாழ்வின் இறுதிச் செய்தியாகச் சொன்ன “ நாணத்தைக் கவலையினைச் சினத்தைப் பொய்யை அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால் அப்போது சாவும் அங்கே அழிந்து போகும்.” மரணமில்லாத மனித குலம் இந்த மண்ணில் சாத்தியம் சிவத்துள் ஒடுங்குதல் அழிவில்லை. ஆனந்தம். சிவத்திலிருந்து தோன்றுதல் படைப்பு அல்ல பயணம். அனுபவப் பயணம். மாசுக்கள் நீங்கிச் சிவத்தில் நிலைபெறலுக்கான அழைப்புப் பயணம். அரிது அரிது மானிடராதல் அரிது ஒளவையின் குரலொலி கேட்கிறது. அஞ்சுவது யாதொன்றும் இல்லை. அஞ்சவருவதும் இல்லை.
நாவார நம்பனையே பாடப் பெற்றோம்
நாணற்றார் நள்ளாமே விள்ளப் பெற்றோம்
ஆவா என்றெமையாள்வான் அமரர நாதன்
அயனொடு மாற் கறிவரிய அனலாய் நீண்ட
தேவாதி தேவன் சிவனென் சிந்தை
சேர்ந்திருந்தான் தென்திசைக்கோன் தானே வந்து
கோவடிக் குற்றேவல் செய்கென்றாலும்
குணமாகக் கொள்ளோம் எண் குணத்துள்ளோமே!
அப்பர் தந்த பாடலின் தத்துவப் பலம் தான் சிவஞானசித்தியார் தரும் அற்புத விளக்கங்கள். திருச்சிற்றம்பலம்.


தமிழில் சிவன் போட்ட கையெழுத்து

தமிழில் சிவன் போட்ட கையெழுத்து

திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்பது பழமொழி. மாணிக்கவாசகரின் மணிமொழிகள் திருவாசகத்தின் தேன் துளிகள். விண்ணோரும், மண்ணோரும், தென்னாட்டவரு ம், இந்நாட்டவரும், வெளிநாட்ட வரும் எப்படி இவ்வெளிய நடை யில், அழகு தமிழில் திருவாசகத் தைப் படைத்தார் என எண்ணி எண்ணி மனமுருகி, வாய்பிளந்த வண்ணம் இருக்கின்றனர்.
பேரருட்பெரியவர்
சைவத்திருமுறைகள் பன்னிரண்டு. அதில் திருவாசகம் எட்டாம் திருமுறையாகும். சிவனடியார்களில் நாயன்மார்கள் 63 பேர். சமயக்குரவர் நால்வர்-அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருநா வுக்கரசர் ஆவர். திருவாசகம் செந்தமிழுக்கு அன்பு மறை யாகவும், உயிர்ப்பிணிக்கு மருந்தாகவும் உள்ளது. அப்பர் சரியைக்கும், சம்பந்தர் கிரியைக்கும், சுந்தரர் யோகத்திற்கும், மாணிக்கவாசகர் ஞானத்திற்கும் உரியவ ராக எண்ணப்படுவர்.
‘தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’
மாணிக்கவாசகர் மதுரைக்காரர். பெயர் வாதவூரர். மாணிக்க வாச கர் ஏறத்தாழ 8ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என்பர். இவர் ஐப்பசி விசாகத்தில் பிறந்தாரென கீழ்க்கண்ட செய்யுள் மூலம் தெரிய வருகிறது.
சித்திரையில் ஆதிரையில் திருஞானசம்பந்தர்
பக்திமிகும் அப்பர்பிரான் பங்குனி ரோகிணி
வித்துரிய ஐப்பசி விசாகத்தில் வாசகனார்
உத்திரத்தில் ஆவணியில் உதித்தார் நம்சுந்தரரே.
ஆதி சங்கரரைப் போல 32 ஆண்டுகளே வாழ்ந்தார் மாணிக்க வாசகர்.
அப்பருக்கெண் பத்தொன் றருள்வாத வூரர்க்குச்
செப்பிய நாலெட்டிற் றெய்வீகம்-இப்புவியிற்
சுந்தரர்க்கு மூவாறு தொன்ஞான சம்பந்தர்க்
கந்தம் பதினா றறி.
– (மாணிக்கவாசகர் அகவல்)
அப்பருக்கு 81, வாதவூரர்க்கு 32, சுந்தரருக்கு 18, ஞான சம்பந்தருக்கு 16 வயதில் முக்தி.
வைகைகரையில் திருவாதவூரில் அமாத்தியர் எனும் அந்தணர் மரபில் சம்புபாதசிருதர், சிவஞானவதிக்குப் புதல் வராகத் தோன்றி யவர். மன்னன் அரிமர்த்தன பாண்டியனின் முதல் அமைச்சர். தென்னவன் பிரமராயர் என்ற பட்டம் பெற்றவர்.
சோழநாட்டுக் கடற்கரையில் குதிரைகள் வந் துள்ள செய்தி கேட்ட மன்னன், வாதவூரரிடம் பணம் கொடுத்து வாங்கி வரச்சொன்னான். வாத வூரர் வழியில் திருப்பெருந் துறையில் தங் கினார். சோலை ஒன்றில் சிவாகமங்கள், வேதங்கள் ஒலிப்பதைக் கேட்ட வாதவூரர் அங்கே சென்று, சிவனே குருநாதர் தோற்றத் தில் மரத்தடியில் வீற்றிருக்க, கீழே அடியார் கள் கூடியிருக்கும் காட்சியைக் கண்டு, பசுவை த் தேடிய கன்று போல் விரைந்து சென்று காலடியில் வீழ்ந்து வணங்கி, அருள் தர வேண்டினார்.
”அறை கூவி ஆட்கொண்டருளி
மறையோர் கோலம் காட்டி அருளலும்
உளையா அன்பென்பு உருக ஓலமிட்டு”
என்பார் மாணிக்கவாசகர்.
விண்ணவர் தேவர் மற்றவரிருக்க, குதிரை வாங்க வந்த வாதவூர ரைத் திருப்பெருந்துறையில் சிவபெருமான் குருவாய்த் தோன்றி குருந்த மரத்தினடியில் அமர்ந்து தடுத்தாட்கொண்டு, தன் நீள் கழல் களைக் காட்டி ஸ்பர்ச, நயன, மந்திர தீட்சைகளை அளித்து மறை ந்தார். வாதவூரரரை இறைவன் ‘மாணிக்கவாசக’ என அன்புடன் அழைத்தார்.
ஆண்டவனால் ஆட்கொள்ளப்பட்ட, வாதவூரர், பாடிய முதல் அடி
“நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க” .
அவ்விடத்தில், மதுரை மன்னன் குதிரை வாங்கக் கொடுத்த பணத் தில் இறைவனுக்கு ஆலயத்தைக் கட்டினார். பணத்தைத் திருப்பணி களுக்கும், சிவனடியார்களுக்கும், மனத்தை சிவ வழிபாட்டிலும் கொடுத்த செய்தி கேட்ட மன்னன், மாணிக்கவாசகரைத் திரும்பி வருமாறு பணித்தான். மாணிக்கவாசகர் சிவன் கொடுத்த மதிப்பி ல்லா மாணிக்கமொன்றை அரசனிடம் அளித்து, “ஆவணித் திங்கள் மூல நாளில் குதிரை கள் வரும்” என்றார்.
பின்னர் அது பொய் யென்றறிந்த மன்னன், அவரைச் சிறையில டை த்தான். சிவபெரு மான் குதிரை வணி கனாகச் சென்று, நரிக ளைப் பரிகளாக்கி அர சனிடம் கொடுத்தார். அவை, இரவில் மீண் டும் நரி களாகி, மற்ற குதிரைகளையும் கடி த்தன. இதனால் கோபம் கொண் ட மன்னன், மாணிக்க வாசகரை சுடுமண லில் கல்லேற்றி நிறுத் தினான்.
ஆண்டவன் வாங்கிய பிரம்படி
இதையறிந்த இறைவன் வைகையைப் பெருக்கி, மதுரையை வெள் ளத்தில் அமிழ்த்தி அச்சுறுத்த, அரசன் கரையை அடைக்க மக்களை ஏவினான். சிவபெருமான் கூலியாளாக, வந்தி எனும் பிட்டு வாணி ச்சிக்கு உதவ வந்து, பிட்டை வாங்கிக் கொண்டு, கரையை அடைக் காமல், உறங்கியதால் அரசனிடம் பிரம்படி பட்டார். அடித்த அடி, அண்ட சராசரங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் மீதும் பட்டது. அடியாருக்காக அடி வாங்கிய இறைவன் வெள்ளத்தைக் குறைத்து மாணிக்கவாசகரின் பெருமையை உணர்த்தி, மறைந்தருளினார்.
உண்மையை உணர்ந்த மன்னனிடம் விடைபெற்ற அடிகள், மதுரை யிலிருந்து புறப்பட்டு, பல திருத்தலங்களைத் தரிசித்து, மனம் கசிய திருப்பதிகங்கள் பல பாடினார். திருவாசகத்தில் 51 பகுதிகள் உள் ளன. இவ ற்றுள் 20 பகுதிகள், திருப்பெரு ந்துறையில் பாடப் பட்டன. இலங்கையிலிருந்து வந்த புத்த ர்களை வாதில் வென்று, இல ங்கை மன்னனின் ஊமை மக ளைப் பேசச் செய்தார். அவள் வாயிலாகப் புத்தன் கேள்விகளுக்குப் பதில் சொல்லவைத்தார்.
ஆன்மிக வரலாற்றுச் சிறப்புகள்
* இறைவன் மனிதனுக்குச் சொன்னது ‘பகவத்கீதை’ – பகவான் கிருஷ்ணன் அருச்சுனனுக்கு அருளியது.
* மனிதன் இறைவனுக்குச் சொன்னது ’திருவாசகம்’ – மாணிக்க வாசகரிடம் சிவபெருமான் வேண்டி எழுதியது.
* மனிதன் மனிதனுக்குச் சொன்னது – திருக்குறள் – திருவள்ளுவர் படைத்தது.
இத்தருணத்தில் வேழமு கத்தோன் விநாயகப்பெரு மான், தன்னு டைய தந்தத்தை உடைத்து வேத வியாசருக்காக, மகா பாரதத்தை எழுதியதை யும் நினைவு கொள்க.
கைச்சாத்து
திருவாசகப் பாடல்கள் அதுவரை ஏட்டில் எழுதப்படாமலிருந்தன. திருவாசகத்தின் தேனினுமினிய தீந்தமிப் பாக்களைக் கேட்டு சொ க்கிய மதுரைக் கடவுள் சொக்கநாதர், இப்புண்ணிய பூமியில் அந்த ணனாய் உருக்கொண்டு மணிவாசகரைக்கண்டு, பாடல்களை எழு திக்கொள்ள வேண்டினார். மாணிக்கவாசகர் இசைந்தருள, அட்சர லட்சம் பெறும் ஒவ்வொரு பாக்களையும் தம் அருள்புரியும் திருக் கரங்களால் ஓலைச்சுவடியில் எழுதினார். பாவை பாடிய வாயால் கோவை பாடுமாறு மீண்டும் இறைவன் வேண்ட, அவரும் பாடி னார். இறைவன் விடைபெற்று, ’மாணிக் கவாசகர் சொற்படி அழகிய சிற்றம்பல வன் எழுதியது’ எனக் கையொப்பமிட்டு, ஓலைச்சுவடிக ளைத் தில்லைப் பொ ன்னம்பலத்தின் கருவறையில் பஞ்சாட் சரப் படியில் வைத்தார். மறுநாள் அடி யார்கள் ஏட்டைக்கண்டு மாணிக்க வாச  கரை அழைத்து பொருள் விளக்க வேண் ட, ”அம்பலவாணரே இத ன் பொருள்” என்றருளினார். இறைவன் அருட்பேரொ ளியாகத் தோன்றி, அத்தாட்சி அளித்து மாணிக்கவாசகரைத் தம்மோடு சோதி யில் இணைத்துக்கொண்டார். அன்று ஆனி மாமக நன்னாள்.
எவ்வுலகிலும், எக்காலத்திலும், எவருக்கும் இறைவன், தில்லைக் கூத்தன், இதுவரை கைச்சாத்து அளித்ததில்லை. சிறந்தடியார் சிந்த னையுள் தேனூறி நிற்கும் திருவாசகத்தைக் கறந்த பால் கன்ன லொடு, நெய் கலந்தாற்போல நமக்களித்த மாணிக்கவாசகர் ஒரு வர் மட்டுமே, தாயிற்சிறந்த இறைவனால் கைச்சாத்துடன் நற்சான் றிதழ் பெற்ற மகாத்மா.
திருப்பெருந்துறை எனும் ஆவுடையார் கோவில்
இறைவன் அமர்ந்த இடம் குருந்த மரத்தடி. குருந்த மரத்தின் இலை கள் ஒவ்வொரு கொத்திலும் மூன்று வகை இலைகளுடன் காணப்படும். அவ்விடமே, கோவிலாகியது. இறைவன் திரு உருவச் சிலை கள் இங்கு இல்லையே தவிர, இக்கோவி ல், சிற்பக்கலையின் உன்னத சிகரமாக இருக்கின்றது. பூத க ணங்களே இக்கோவிலைக் கட்டினர் என்பர். சிற்பிகள் தங் களது பணி ஒப்பந்தங்களில் “தாரமங்கலம் தூணும், திருவலஞ்சுழி பலக ணியும், ஆவுடையார் கோவில் கொடுங்கையும் நீங்கலாக” என்று எழுதுவர் எனக் கேள்வி. கோவில் கணக்குகளில், ஆளுடை யார் கோவில் என்று காணப்படுகின்றது. இலக்கியங்களில், அநாதி மூர்த்தித் தலம், சதுர்வேதபுரம், யோகபீடபுரம் என்றும், கல்வெட் டுகளில் சதுர்வேதமங்கலம் என்றும், திருவாசகத்தில், சிவ புரம் என்றும் வழங்கப் பெற்று ள்ளது. தற்போது கோவிலின் பெயரா லேயே, ஊரும் அழை க்கப்பட்டுவருகிறது.
கோவிலின் சிறப்பு
தலம்: திருப்பெருந்துறை
மூர்த்திகள்: ஆத்மநாதர், யோ காம்பிகை
தீர்த்தம்: ஒன்பது- சிவ தீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவ தீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம்
புனித மரம்: குருந்த மரம்
கோவிலின் மூலவர் ஆத்மநாதர் ஸ்வாமி ஆவார். சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. சிவபெருமா னுக்கு ஆவுடையாரும் (சக்தி பீடப் பகுதி) எதிரில் ஒரு மேடையும் (அமுத மண்டபம்) மட்டுமே உள்ள ன. ஆவுடை யாருக்குப் பின் சுவரில் 27 நட்சத்திரத் தீபங்களும், அதற்கு மேல் சூரிய, சந்திர, அக்கினி தீபங்களும் ஒளிர்கின்றன. அம் மன் யோகாம்பிகை சந்நிதியில் யோக பீடமும், அதன் மேல் அம்மன் பாதங்களும் மட்டும் உள்ளன. அதுவும் பலகணி வழியே மனத்தை ஒருமுகப்படுத்தினால் மட்டும் தரிசிக்க முடியும். மாணி க்கவாசகருக்கு தனிச் சந்நிதி இருக்கிறது. கோவிலில் கொடிமரம், நந்திக்கடவுள், சண்டேசர் ஆலயம் கிடையாது. இங்கே நடராஜர், விநாயகர், முருகர் தவிர பரிவார மூர்த்திகள் இல்லை. தீபாரா தனை கருவறையை விட்டு, வெளியே வராது. புழுங்கல் சோறு, கீரை, பாகற்காய் ஆகியவற்றின் ஆவியே நிவேதனம். அடியார் மாணிக்கவாசகருக்காக மட்டும், வருடந்தோறும் ஆனித் திரும ஞ்சனத் திருவிழா நடக்கிறது.
ஏனைய கோவில்கள் சரியை, கிரியை வழிபாட்டிற்கும், இக் கோ வில் மட்டும் யோக, ஞான மார்க்க வழிபாட்டிற்கும் உரியதாக உள் ளது. அதனால் இக்கோவில் அமைப்பு மற்ற கோவில் களிலிருந்து பெரிதும் மாறுபட்டுள்ளது. மூலாதாரம் முதலாக ஆறு ஆதாரங் களின் வடிவாகவும், சிவனை அரூபமாகவும் நிர்மாணித்து, யோகி களும், ஞானிகளும் வழிபடும் வகையில் இக்கோவில் கட்டப்பட்டு ள்ளது என்பர்.
பஞ்சாட்சர மண்டபம்
மூன்றாம் பிராகாரத்தில், இரண்டாம் கோபுர வாசலை ஒட்டி, பஞ் சாட்சர மண்டபம் உள்ளது. இம்மண்டப த்தின் மேல் தளத்தில் மந்தி ரம், பதம், வன்னம், புவனம், தத்துவம், கலை எனும் ஆறு அத்து வாக்கள் கட்டங்களாக அமைக்க ப்பட்டுள்ளன.
கற்சிலை ஓவியங்கள்
சிற்ப வேலைகளைப் பற்றிச் சொல்லி மா ளாது. நேரில் கண்டால் பிரமிப்பு அடங்காது. வல்லப கணபதி, உக்கிர நரசிம்மர், பத்திர காளி, ஊர்த்துவ தாண்டவர், பிட்சாடனர், வில் பிடித்த முருகன், ரிஷபாரூடர், சங்கர நாராயணர், குதிரைச்சாமி, குறவன், குறத் தி, வீரபத்திரர்கள், குதிரைக்காரர்கள், நடன மங்கைகள், விலங்குகள், உயிரோட்டத்து டன் ரத்த நாளங்கள் தெரிய மிளிர்கின்றன. தவிர டுண்டி விநாயகர், உடும்பும் குரங்கும், இரண்டே தூண்களில் ஓரா யிரம் கால்கள், 1008 சிவாலய இறைவன், இறைவியின் உருவ ங்கள், பல நாட்டுக் குதிரைகள், நடனக்கலை முத்திரைகள், சப்த ஸ்வரக் கற்தூண்கள், போன்ற அற்புதங்கள் மற்றும் நட்சத்திர மண் டலம், பச்சிலை ஓவியங்கள், கூரையிலிருந்து தொங்கும் கற்சங் கிலிகள் ஆகியன நம்மைப் பிரமிக்க வைக்கின்றன. மேற் கூரை யான கொடுங்கை மிகச்சன்னமாக இழைக்கப்படுள்ளது. மரச்சட்டங்களில் குமிழ் ஆணி அடித்தது போல நுட்பமான வேலைகள் கல்லில் அடிக்கப்பட்டுள்ளன. அதில் நிஜக் கம்பிகள் போன்ற அமைப்பு உள்ளது. இதை நம்பாத ஒரு ஆங்கிலேயன் துப்பாக் கியால் சுட்டதால் ஏற்பட்ட ஓர் ஓட்டையும் கொடுங்கை யில் உள்ளது. மொத்தத்தில் சிற்ப வேலைப்பாடுகள், கண்ணில் ஒற்றிக் கொள்ளும்படி மிக மிக நேர்த்தியாக செதுக்கப்பட்டுள்ளன.
இக்கோவில், திருவாவடுதுறை ஆதீனத்தால் சிறப்பாகப் பராமரிக் கப் படுகிறது. புதுக்கோட்டையிலிருந்து, 45 கி.மீ தொலைவில் உள்ளது. அறந்தாங்கியிலிருந்து, 14 கி.மீ தூரம்.
மாணிக்கவாசகர் தீந்தமிழைத் தேனில் தோய்த்தெடுத்து, பக்தியால் உருக்கி, அன்பினால் வார்த்து, எளிய நடையெனும் உளியால் பத முடன் பக்குவமாய்ச் செதுக்கி, என்றென்றென்றும் நிலைத்திருக் கும் சிலைபோல் திருவாசகத்தைப் படைத்தார். ஆவுடையார் கோவிலைக் கட்டிய சிற்பிகளோ, தமது கலைத்திறமையால் இக் கோவிலைக் கட்டிச் சிலைகளை உருவாக்கிக் காலத்தால் அழியாத ஒரு பெரும் காவியமாகப் படைத்தார்கள்.
நூலின் மகிமை
மற்றெந்த நூலையும் படித்து, சிந்தித்து அவ்வாசிரியரின் மனத் தைப் படம் பிடித்து ஒரு கட்டுரை எழுதிவிடலாம். திருவாசகத்தை மட்டும் படித்துக் கொண்டே இருக்கத்தான் மனம் விழைகிறது. திருவாசகத்தைப் படித்தலும் கேட்டலும் எப்போதுமே ஒரு இனிய அனுபவமாக இருந்துவருகிறது. திருவாசகத்தைப் பற்றி ஆழ்ந்து அனுபவித்து எழுதினால் பல புத்தகங்களாக நிரம்பிவிடும். பானை சோற்றுக்கு ஒரு சோறுதான் இக்கட்டுரை.
“வான்கலந்த மாணிக்க வாசகநின் வாசகத்தை
நான்கலந்து பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
தேன்கலந்து பால்கலந்து செழுங்கனித்தீஞ் சுவைகலந்தென்
ஊன்கலந்து உயிர்கலந்து உவட்டாமல் இனிப்பதுவே” -
-வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளின் ஆளுடைய அடிகள் அருள்மாலை
மாணிக்கவாசகரின் உயர்ந்த பக்குவம்
மாணிக்கவாசகர் எவ்வளவு உயர்ந்த நிலையை அடைந்தாலும், தன்னை மிகவும் தாழ்த்திக் கொண்டார். பணிவு, தன்னடக்கம், எளி மை ஆகியவற்றின் மறு உருவமாக இருந்தார். தன்னை நாயினும் கீழாகக் காட்டிக் கொண்டார்.
உதாரணங்கள்:
‘நாயினேனை நலமலி தில்லையுட்’
‘நாய்ச்சிவிகை ஏற்றினார்ப் போல’
“பிழைப்பு வாய்ப்பொன்று அறியா நாயேன்
குழைத்தசொல் மாலை கொண்டருள் போற்றி”
மேலும் ஒரு சாதாரண மனிதனுக்குரிய ஆசாபாசங்களைப் வெளிக் காட்டி, பசி, தூக்கம், பெண் மயக்கம், ஆகியவற்றிலிருந்து தன்னை எப்படி இறைவன் காத்து, அருளினார் என்பதையும், மாயையிலி ருந்து தன்னை விடுவிக்கும் படியும் மனமுருகி வேண்டிக் கொண் டார்.
“நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து நானடுவே”
“அரவன் ஆண்டுதன் அடியரில் கூட்டிய அதிசயம் கண்டோமே.”
“மண்ணி லேபிறந்(து) இறந்துமண் ஆவதற்(கு)
ஒருப்படு கின்றேனை
அண்ணல் ஆண்டுதன் அடியரில் கூட்டிய
அதிசயம் கண்டாமே”
அதேபோல், மறுபிறவியைக் கொடுத்து விடாதே எனவும் மற வாமல் கேட்டுக்கொண்டார். ஞானத்தைக் கொடுக்கும்படி கெஞ்சி னார்.
கற்பனைக்கெட்டா வர்ணனை வளம் பெற்றவர் மாணிக்கவாசகர். இறைவனின் கருணையை வாழ்த்தும் அவருடைய பிரபலமான பாடல்:
“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்
கோனாகி யானெனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே”
பொதுவாக, கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் என்பர். மாணிக்கவாசகர், அதற்கு மாறாக, ஞானம் கிடைத்தவுடன் அப்பே ரின்பத்தை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.
“அருளதறிய தறியேன் பருகியும் ஆரேன்
விழுங்கியும் ஒல்ல கில்லேன்
செழுந்தண் பாற்கடல் திரை புரை வித்து
உவாக்கடல் நள்ளுநீர் உள்ளகம் ததும்ப
வாக்கிறந்து அமுதம் மயிர்க்கால் தோறும்
தேக்கிடச் செய்தனன் கொடியேன் ஊந்தழை
குரம்பை தோறும் நாயுடல் அகத்தே
குரம்பைகொண்டு இன்தேன் பாய்ந்து நிரம்பிய
அற்புத மான அமுத தாரைகள்
எற்புத் துளைதொறும் ஏற்றினன் உருகுவது”
வீட்டுக்கொரு திருவாசகம் இருக்க வேண்டும். அன்பர்கள், மெய் யுருக்கும் திருவாசகத்தைப் படித்தின்புற்று மனம்கசிந்து மெய் ஞானப் பாதையில் முன்னேற தில்லைக்கூத்தன் அருள்புரிவாராக.
நன்றி -
அம்மன் தரிசனம்.

-.

Monday, September 26, 2011

பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?
பிரபஞ்ச ரகசியம் : எந்த கடவுளை எந்த காரியத்திற்கு வணங்குவது ?

  Posted On Sep 26, 2011,By Muthukumar

http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcR1u8X16P_DCB6W4WdxmigIIcZ8hxPl3Jp1Np1veMem-aA-MLYmZA

 கடவுள் ஒருவனே , என்கிறது பிற மதங்கள். ஆனால், இந்து மதத்தில் மட்டும் எதற்கு இத்தனை கடவுள்கள் , என்கிற கேள்வி நம் எல்லோர் மனத்திலும் நிகழும். மும் மூர்த்திகள் என்று கருதப்படுபவர்கள் கூட , ஒரு யோக நிலையில் இருப்பது போல நாம் எத்தனை படங்களில் பார்த்து இருக்கிறோம். அவர் யாரை எண்ணி தவம் செய்கிறார். மும்மூர்த்திகளுடன் . சதாசிவம், ருத்ரன், என்று - ஐந்து மூர்த்திகள் இருக்கின்றனராம்.
உலக பரம்பொருள் என்று சர்வ வல்லமை பொருந்திய அந்த கடவுள் ஒன்று தான். அவரைத்தான் சிவனும் , யோக நிலையில் தியானிக்கிறான். அந்த ஆதி சிவன் ஒருவனே. மீதி நாம் வணங்கும் அனைவரும், தேவதைகள் , தெய்வங்கள் - அவதாரங்கள் , ஒரு சில காரண , காரியத்துக்காக அந்த பரம்பொருள் அனுப்பியவர்கள் என்கின்றனர் பெரியோர்கள். சித்தர்களுக்கு மேல் இருக்கும் உயர்ந்த நிலை , இந்த தெய்வங்கள். 

 முருகனும், விநாயகரும் கூட - சித்தர்கள் போன்று வாழ்க்கை நடத்தி, பின் சிவனின் மைந்தனானவர்கள் என்கின்றனர். பலப்பல யுகங்கள் கடந்து , நாமும் இறைநிலை அடைய விருக்கிறோம். அதை இன்றிலிருந்தே தொடங்குவது , நமக்கு இன்னும் நல்லது.

 எப்படி இறைவனுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டு இருக்கின்றனவோ, அதே போல மனிதர்களுக்கும் சில கடமைகள் விதிக்கப்பட்டுள்ளன.


ஒரு பெரிய தொழிற்சாலை இருப்பதாக எடுத்துக்கொள்வோம். நாமெல்லாம் தொழிலாளர்கள். நம்மை சூப்பர்வைஸ்  செய்ய - நவ கிரகங்கள். நவ கிரகங்கள் - பக்காவாக நம்மை கண்காணித்து , நம்மை வேலை வாங்குகின்றன. பஞ்ச பூதங்களை - ரா மெட்டீரியலாக கொண்டு , பஞ்ச பூத கலவையாலான அந்த உடலைக் கொண்டு இந்த பிரபஞ்ச தொழிற்சாலை இயங்குகிறது. 


இந்த சூபர்வைசர்களுக்கு  மேலே மேலாளர்கள். அவர்களுக்கும் மேலே - பொது மேலாளர்கள் . அவர்களையும் இயக்குவது இயக்குனர்கள். அந்த இயக்குனர்களுக்கும் மேலே - சேர்மன் என்கிற முதலாளி. 


 செய்யும் வேலை , திறமை , அவர்கள் செய்து முடிக்கும் திறன் , என்று ஒவ்வொருவரின் உழைப்பும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது. உழைக்க வேண்டும். அதாவது , வாழ வேண்டும் - வாழ்ந்து அவரவர் கடமையை செய்ய வேண்டும். இப்படியே , ஒவ்வொருவருக்கும் அடுத்தடுத்த நிலை தீர்மானிக்கப் படுகிறது. ஒரு செக்சனிலிருந்து  , மற்றொரு  பிரிவுக்கு அவர் மாற்றப்படுவர்.  நல்ல திறமையுடன், நல்லவராக இருந்தவருக்கு - அடுத்த பிரிவு , கொஞ்சம் மேன்மையானது

இந்த அப்ரைசல் தான் - மரணம்  , அடுத்த பிறவி. நீங்கள் திரும்ப உழைப்பதற்கு வசதியாக , திரும்ப இளமை கிடைக்கிறது. மோசமான வேலை செய்தவர்களுக்கு - கடினமான செக்க்ஷனும் கிடைக்கும். 
நீங்களே ஒண்டியா, தனித்தனியே வேலை செய்ய முடியாததால் - உங்களுடன் இணைந்து செயலாற்ற உங்கள் குடும்பம் , நண்பர்கள் , சமுதாயம் என்று ஒரு குழுவே இருக்கிறது.
  
குடும்பத்தில் யாரோ ஒருவர் , ஓவராக ஆட்டம் போட்டாலும், திடு திப் பென்று ( அகால மரணம்) டிபார்ட்மென்ட் மாற்றமும் நிகழும். இதனால் , அவரும் பாதிக்கப் படுகிறார். அந்த குடும்பமும் வேலைப் பளுவால் முழி பிதுங்கும். 

இவை அத்தனையும் சமாளித்து , நரை மூப்பெய்தி - என்னை கூட்டிக்கோப்பா என்று  , நீங்கள் எழுப்பும் ஒரு மன ஓலம் , உங்களுக்கு அடுத்த கதவை திறக்க வைக்கும்.


 நீங்கள் கதவு திறந்து , அடுத்த அறைக்கு வந்ததும், அதே சூப்பர்வைசர்கள். அவர்களுக்கு தெரியும், நம்மோட அருகதை. இதில், பாரபட்சம் பார்க்காது - நமக்கு கிடைக்க வேண்டிய கூலியை , அவர்கள் மேலிடத்திலிருந்து நமக்கு கிடைக்க செய்கின்றனர். 


ஒரு ப்ரோமோஷன் கொடுக்கும் முன், உங்கள் சகல திறமையும் பரிசோதிப்பது போல - உங்களுக்கு பலப்பல கஷ்டங்கள், சோதனைகள் வைக்கப்படுகின்றன. இதிலும் தாக்குப் பிடித்து , உங்கள் அணியிலுள்ள சக தொழிலாளர்களையும் அரவணைத்து , உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை செய்து முடிக்க வேண்டும். 

உங்கள் அணியிலும், சமூகத்திலும் , ஒருவர் மனம் கூட கோணாது , அவர்களுக்கும் ஒத்தாசை செய்து , ஒரு குழுவாக கூடி - உங்கள் கடமையை செய்து முடிக்கவேண்டும். அவர்களை பகைத்துக் கொண்டால், சமயத்தில் சொதப்பிவிடுவார்களே. 


 உங்களை நீங்கள் , உங்கள் ஆன்ம ஒளியை உணர்ந்து கொள்ளுதல் தான் - முதல் படி. உங்கள் பலம் என்ன வென்று அதன் பிறகுதானே உணர முடியும்?  ஹனுமனை போல நீங்களும் கடலை தாண்ட முடியும். மலையையும் தூக்க முடியும்.


 உலகம் ஒரு நாடக மேடைதான். அந்த இறைவன் இயக்குகிறான். திறமையாக , நடித்தால் - நீங்களும் ஒரு நாள் ஹீரோ வைக்கலாம். இல்லையெனில், சாதாரண துணை நடிகர் தான். ஒரு நாடகம் முடிந்ததும் , அடுத்த நாடகம் ஆரம்பிக்கும். அப்போது ஹீரோவும், இரண்டாம் நிலைக்கு தள்ளப்படலாம், தனது பொறுப்பை உணர்ந்து ஜொலிக்காவிடில்.

  ..நமது பிறப்பின் நோக்கம் என்ன, நாம் எந்த இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம் என்பது மிக முக்கியம்.


இப்போது நாம் எங்கு இருக்கிறோம் ? நமக்கு ஏன் இத்தனை தெய்வங்கள் என்று புரிகிறதா?  எப்படி சூரியனிலிருந்து - தெறித்து வந்த , உஷ்ணத் துளிதான் பூமி என்று விஞ்ஞானம் நிரூபித்ததோ, அதைப் போல ஏராளமான சூரியன்களும் இருப்பது உண்மையோ, அந்த பிரபஞ்சத்திற்கும் மூலப் பொருள் ஒன்று இருக்கும். அந்த மூலத்திலிருந்து வெளியான , துகள்களின் , அணுக்களில் , அணுக்களில் உள்ள அணுதான் , நாம் அனைவரும்.


என்னில் உள்ள அந்த ஜீவ ஒளி தான் , உங்களிலும் உள்ளது. நம் அனைத்து உயிர்களிலும் உள்ளது. இயற்கையிலும் உள்ளது.


 எனவே , ஜாதி மத . இன துவேஷத்தை மறப்போம். சக மனிதர்களை நேசிப்போம். இயற்கையை ஆராதிப்போம். நம் வாழ்வாதாரத்தை வணங்குவோம். குழந்தைகளையும், திறமை இல்லாதவர்களையும், வழி நடத்துவோம். நாம் அனைவரும் கடவுளாவோம். 

 அடி மனத்தில் பரவும் எண்ணம், எத்தனை ஜென்மங்கள் எடுத்தாலும் மறையாது. முதலில் நம் மனம் முழுவதும் நல் எண்ணங்களால் நிறையட்டும். 

பிற உயிர்களுக்கு தீங்கு விளைவிக்க வேண்டாம். பிற உயிர்களை கொன்று புசிக்க வேண்டாம். நடந்தவை மறப்போம். இனியும் மனதறிந்து எந்த பாவமும் செய்யாமல் , நிம்மதியாக வாழ்வோம். 


தோல்விகளை கண்டு துவளாத மனமும், வெற்றிகளைக் கண்டு மமதை கொள்ளாத மனப் பக்குவமும், கஷ்டங்களை தாங்கி கொள்ளும் மனப்    பக்குவமும், வெற்றிப் பாதையை நமக்கு அடையாளம் காட்டும் அந்த பரம்பொருளின் ஆசியும் நம் அனைவருக்கும் கிடைக்கட்டும் !


கீழே , சில காரண காரியங்களுக்கு எந்த தெய்வங்களை வணங்கினால் , உங்கள் குறை தீரும் என்று , நம் முன்னோர்கள் - சித்தர் பெருமக்கள் கூறியவற்றை கொடுத்துள்ளேன்.. உரிய டிபார்ட்மென்ட் மேனஜர் , சூப்பர்வைசர் தானே உடனடியாக தீர்வு கொடுக்க இயலும். முயன்று பாருங்கள்...    மனிதம் வளர்ப்போம் !காரியம் நடக்க
விக்னங்கள், இடையூறுகள் நீங்க - விநாயகர்
செல்வம் சேர-ஸ்ரீ மகாலட்சுமி, ஸ்ரீ நாராயணர்
நோய் தீர- ஸ்ரீ தன்வந்தரி, தட்சிணா மூர்த்தி
வீடும், நிலமும் பெற- ஸ்ரீ சுப்ரமண்யர், செவ்வாய் பகவான்
ஆயுள், ஆரோக்கியம் பெற- ருத்திரன்
மனவலிமை, உடல் வலிமை பெற- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ஆஞ்சநேயர்
கல்வியில் சிறந்து விளங்க- ஸ்ரீ சரஸ்வதி
திருமணம் நடைபெற- ஸ்ரீகாமாட்சி அம்மன், துர்க்கை
மாங்கல்யம் நிலைக்க- மங்கள கௌரி
புத்திர பாக்கியம் பெற- சந்தான கிருஷ்ணன், சந்தான லட்சுமி
தொழில் சிறந்து லாபம் பெற- திருப்பதி வெங்கிடாசலபதி
புதிய தொழில் துவங்க- ஸ்ரீகஜலட்சுமி
விவசாயம் தழைக்க- ஸ்ரீ தான்யலட்சுமி
உணவுக் கஷ்டம் நீங்க- ஸ்ரீ அன்னபூரணி
வழக்குகளில் வெற்றி பெற- விநாயகர்
சனி தோஷம் நீங்க- ஸ்ரீ ஐய்யப்பன், ஸ்ரீ ஆஞ்சநேயர்
பகைவர் தொல்லை நீங்க- திருச்செந்தூர் முருகன்
பில்லி, சூன்யம், செய்வினை அகல- ஸ்ரீ வீரமாகாளி, ஸ்ரீ நரசிம்மர்
அழியாச் செல்வம், ஞானம், சக்தி பெற- சிவஸ்துதி
நோய் தீர
முடி நரைத்தல், உதிர்தல்- மகாலட்சுமி, வள்ளி
கண் பார்வைக் கோளாறுகள்- சிவபிரான், சுப்ரமண்யர், விநாயகர்
காது, மூக்கு, தொண்டை நோய்கள்- முருகன்
ஆஸ்துமா, சளி, காசம், சுவாசக் கோளாறுகள்- மகாவிஷ்ணு
மாரடைப்பு, இருதய கோளாறுகள்- சக்தி, கருமாரி, துர்க்கை
அஜீரணம், குடல்வால், அல்சர், மூலம், மலச்சிக்கல், மஞ்சள் காமாலை, காலரா- தட்சிணாமூர்த்தி, முருகன்
நீரிழிவு, சிறுநீரகக் கோளாறு- முருகன்
பால்வினை நோய்கள், பெண்களுக்கான மாதவிடாய் கோளாறுகள்- ராஜராஜேஸ்வரி, ஸ்ரீ ரங்கநாதர், வள்ளி
மூட்டுவலி, கால் வியாதிகள்- சக்கரத்தாழ்வார்
வாதங்கள்- சனிபகவான், சிவபெருமான்
பித்தம்- முருகன்
வாயுக் கோளாறுகள்- ஆஞ்சநேயர்
எலும்பு வியாதிகள்- சிவபெருமான், முருகன்
ரத்தசோகை, ரத்த அழுத்தம்- முருகன், செவ்வாய் பகவான்
குஷ்டம், சொறி சிரங்கு- சங்கர நாராயணன்
அம்மை நோய்கள்- மாரியம்மன்
தலைவலி, ஜீரம்- பிள்ளையார்
புற்று நோய்- சிவபெருமான்
ஞாபகசக்தி குறைவு- விஷ்ணு

உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!


உன்னை அறிந்தால்.. நீ உன்னை அறிந்தால்... உலகத்தில் போராடலாம்..!

  Posted on Sep 26, 2011,By Muthukumar
 
சாயந்திரம் ஆச்சுனா, சரக்கு. இடையிலே, மொபைல் ல - எஸ் ஹனி , லவ்   யூ செல்லம் னு - ஒரு நாலு பேருக்கிட்ட பேச்சு. கட்டின பொண்டாட்டி பேசுறப்போ , மீட்டிங் முடிய போகுது கண்ணு. இதோ வந்துடறேன் .... 
இது தான் இன்னைக்கு மாடர்ன் யூத் பண்ணிக்கிட்டு இருக்கிற , ஒரே வேலை. நல்லா சம்பாதிக்கிறான். சம்பாத்தியம் , காசு பார்த்திட்டு - ஒரு   ரெண்டு , மூணு பொண்ணுங்க , அவன் பின்னாடி சுத்தும். காசுக்குத்தான்னு தெரியும் , இவருக்கும். இருந்தாலும், இவரும் அதை தொடர்வார். கட்டின பொண்டாட்டி தவிர, எல்லா பொண்ணுங்களுமே , எதோ ஒரு வகையிலே - இவரை இம்ப்ரெஸ் பண்ணுவாங்க.. ! இப்படியே வண்டி ஓடும்.     

சிட்டில பாதி இளைஞர்கள் இப்படித்தான். மீதி பேரு , இப்படி இருந்தா , நல்லா இருக்குமேன்னு நினைக்கிற இளைஞர்கள். 


தத்வமசி  னு ஒரு சமஸ்க்ருத சொல் உண்டு. YOU ARE THAT னு அர்த்தம். நீ எதை நினைக்கிறயோ, அப்படியே ஆகிடுவே. நம் எண்ணம் , ரொம்ப முக்கியம். நல்ல விதமாக இருக்க வேண்டும். கெட்டவனா ஆகிறதுக்கு, ஒரு மணி நேரம் போதும். நல்ல பேரை காப்பாத்த , லைப் முழுவதும் போராடனும்


கெட்ட எண்ணங்கள் வராம இருக்க, நல்ல எண்ணங்கள் வளர்க்கணும். அதுக்கு முன்னே , நமக்கு நம்மை பத்தி நல்லா தெரியனும். அதன் விளைவுதான் இந்த கட்டுரை. இது தெளிவான கட்டுரை படிக்கிற மாதிரி இருக்காது. முழுக்க முழுக்க உங்களுக்குள் , கொஞ்சம் குட்டையை குழப்ப மட்டுமே. குழம்பிய பிறகு, மனது தெளிவடைய ஆரம்பித்த பிறகு, உங்களை நீங்கள் கவனியுங்கள். உங்களைவிட நல்லவர் யாருமே இல்லை... மேலே தொடரலாம்..!

"ஓ" போடு பாட்டு ஹிட் ஆன "ஜெமினி" படத்தில வைரமுத்து ஒரு பாடல் எழுதி இருக்கிறாரு.. ஆனா , அதை நம்மில் எத்தனை பேரு நோட் பண்ணிருப்போம்னு தெரியலை. .. தலை கீழா பொறக்கிறான்னு வர்ற பாட்டு.. .... வாய்ப்பு கிடைக்கும்போது , பொறுமையா கேட்டுப் பாருங்க... 
http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcSEr8IXXKpoTkhtu4muqHkX679Gf5SY9CxUUotbYIF_ChUQ_Ifr
ஒரே ஒரு துளி யில் இருந்து உருவாவது இந்த உயிர். இத்தனைக்கும் , ஒரு துளி விந்துவில் இருப்பது , பல கோடி ஜீவ அணுக்கள். உங்களுக்கு முன்னே இருந்த ஒரே ஒரு அணு , முண்டிப் போயிருந்தா , இன்னைக்கு நீங்க இல்லை. உங்களுக்கு பதிலா , உங்க அண்ணாச்சி தான் , பிறந்து இருப்பாரு. அத்தனையும் தாண்டி , நீங்க , பிறக்கும்போதே , கோடி பேரை ஜெயிச்சு , இந்த பூமியைப் பார்க்க ஆசைப் பட்டு , வெற்றி வீரனா வந்து இருக்கீங்க...

பிறக்கும் முன்னாலே இருந்தே போராட்டம் தான் , ஆனா அதுலே நீங்க வெற்றி பெற்று சாம்பியனா வந்து இருக்கீங்க. போராட்டம் ஒன்னும் நமக்கு புதுசு இல்லை. வெற்றியும் நமக்கு புதுசு இல்லை. 
எப்பவுமே எடுத்த முயற்சி எல்லாம் தோத்துப் போகுதே, வாழ்க்கையிலே முன்னேறாம இப்படியே இருந்திடுவோமோனு, பயப்படாதீங்க... உங்களால கண்டிப்பா முடியும். உங்களோட வாழ்க்கையை நீங்க வாழ்ந்து காட்டுவீங்க.. அதுக்குத் தான்,  நீங்க வந்து இருக்கீங்க...

உங்களோட சக்தியை , நீங்க உணர்ந்து - நம்பிக்கையுடன், வாழ்க்கையில் தொடர்ந்து பயணியுங்கள்... வெற்றி நிச்சயம்... !


நமக்கு உலகத்திலே தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள் எவ்வளவு இருக்குது தெரியுமா? முதல்ல நமக்கு நம்ம யாருன்னு தெரியுமா? நம்ம உடலைப் பற்றி ஏதாவது கொஞ்சமாவது தெரியுமா?

ஒரு சட்டை வாங்குறோம், பைக் வாங்குறோம்..... இதை எல்லாம் , ஒரு விலை கொடுத்து வாங்குறோம். சரிதானே ! அதன் பிறகு,  அது நம்ம பொருள்.

ஐயா, சரி ஐயா , உங்க உடம்புனு சொல்றீங்களே, அதுக்கு ஏதாவது விலை கொடுத்து வாங்கினீங்களா? இல்லை, நீங்க வாங்கலையே . அப்புறம் எப்படிம், என் உடம்பு னு உரிமை கொண்டாடுறீங்க?

சரி, இந்த உடம்பு எப்படி வந்துச்சு - உயிர் கொடுத்தவங்க ,  உங்க அப்பா , அம்மா ரெண்டு பேரும்தானே. உரிமை கொண்டாட வேண்டியவங்க அவங்க தானே.  நியாயமா , இந்த உடம்பு உழைச்சு ஓடாப் போக வேண்டியது அவங்களுக்குத் தானே. ஆனா , எத்தனை பேரு , அப்படி நினைக்கிறோம்?  எத்தனை தடவ பெற்றவங்களுக்கு கண்ணீர் வர வைச்சு இருக்கிறோம்? பெத்தவங்களை எவ்வளவு வேதனைப் பட வைக்கிறோம்? எத்தனை முதியோர் இல்லங்கள், அதில் எத்தனை பேரு ஆதரவு இல்லாம , கண்ணீரும் , கம்பலையுமா? உங்க உயிர் தங்கிக்கிட வாடகைக்கு வீடு கொடுத்த , வீட்டு உரிமையாளர்களுக்கு , உங்க கூட , ஒரே வீட்டில தங்கிக்கிட கொடுப்பினை இல்லை.  

வயசான அப்பா , அம்மா இருந்தா , உங்க கூட வைச்சுக்கிட முயற்சி பண்ணுங்க. அவங்க பண்ற எதுவும் உங்களுக்கு பிடிக்கலை, சரி, பரவா இல்லை - வாழ்க்கையிலே , எத்தனையோ விஷயங்களை அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டு, சகிச்சுக்கிட்டு போறோம். பெத்தவங்களை பார்த்துக்க முடியாதா? 

வேற ஒருத்தரோட உடமை , உங்க கிட்ட இருந்தா அதை எவ்வளவு பத்திரமா பாதுகாக்கணும்? திரும்ப கேட்டா , எந்த சேதாரம் இல்லாம கொடுக்கணும் இல்லை. நம்ம உடம்பு , நம்ம உடமை இல்லையே? அதை குறைந்த பட்சம் , பத்திரமா பார்த்துக்க வேண்டாமா? ஆனா, பண்ணுறோமா?

குடி, புகை , கறி , மீனு , மாமிசம்.. எவ்வளவு உள்ளே போகுது? பெண் சுகத்துக்கு ஏங்குகிற உடம்பு... இப்போதைக்கு உடம்பு தான் ஜெயிக்கிறது. மனசு , பாவம் ... என்ன பண்றதுனே தெரியாம மிரண்டு போய் இருக்குது. முதல் தப்பு பண்றபோது , மனசு கொஞ்சமாவது பக் பக்குன்னு அடிச்சிக்கும். ஒரு வார்னிங் தரும். ஆனா, அடுத்தடுத்து..? கம்முனு போயிடுது. நாமதான் இதை மனப் பக்குவம் (?) னு நெனைச்சு , நம்மளையே ஏமாத்திகிடுறோம். 
இப்படியே போனா, என்ன ஆகும்? சீக்கிரம் , உடம்பு தளர்ந்து , இளமையை நினைச்சு ஏங்கிக்கிட்டு.. அட ச்சே.ன்னு ஆகிடாது? உடம்பை பத்திரமா வைச்சுக்குவோம் சார்.. ! அந்த காலத்திலேயே , சர்வ சாதாரணமா , எண்பது வருஷம் , தொண்ணூறு வருஷம்னு இருந்து இருக்கிறாங்க? இப்போ பாருங்க.. !

உடம்புக்குள்ள , உயிர்னு ஒண்ணு , என்னென்னே தெரியாம , நமக்கு கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுது . உங்க உரிமை இல்லாத உடம்புக்குள்ள அது இருக்குது. ரெண்டும் சேர்ந்தது தான் நீங்க. நீ யார்னு முதல்லே தெரிஞ்சுக்கோனு சித்தர்கள் சொல்லுவது இதைத்தான். பஞ்ச பூதங்களின் சேர்க்கை தான் உடல். ஒரு குறிப்பிட்ட அளவு உஷ்ணம் இருந்துக்கிட்டே தான் இருக்கணும். அது கூடினாலும், குறைஞ்சாலும், உயிர் அந்த உடம்புலே தங்குறது இல்லை.

இப்போதைக்கு உலகத்திலே இருக்கிற ஜீவ ராசிகளிலே , கேட்க , சிந்திக்க, பேச ,  தெரிஞ்ச ஒரே இனம் நாம தான். ஆனா , நமக்கு நம்மை பற்றி தெரிஞ்சுக்க அவகாசம் இருந்தும், என்னென்னே தெரிஞ்சுக்கிடாம, நாமளும், மிருகத்தோட மிருகமா , வாழ்ந்து , ஒரு நாள் மடிஞ்சும் போறோம்.. நம்மளை பத்தி , நமக்கு இப்போ , புரியாம, அதுக்காக இன்னொரு ஜென்மம் எடுத்த பிறகுதான் புரியணுமா?  இப்போ இருந்தே , அதற்க்கான முயற்சியில் இறங்கலாமே?

நாம விடுற மூச்சுக் காற்றை , கவனிக்க ஆரம்பிச்சாலே போதும், நமக்கு கூடிய சீக்கிரம் , அதற்க்கான விடை கிடைக்க ஆரம்பிக்கும். மூச்சுப் பயிற்சி,
தியானம் - உங்களுக்கு இந்த பிறவியின் நோக்கம் என்ன என்பதை தெரிய வைக்க , நீங்கள் எடுத்து வைக்கும் முதல் அடி.

சப்தங்களை கேட்க தெரிஞ்ச மனிதன், தானும் சப்தம் எழுப்பி - பேசி - ஒரு விஷயத்தை அறிய முற்படுகிறான். இந்த பூமியே, ஒரு மெல்லிய சப்த அதிர்வில் தான் சுழன்று கொண்டு இருக்கிறது. ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் அதிர்வை ஒத்து அது இருக்கிறதாக , நம் சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதனால் தான், நாமும் மந்திர ஜெபங்களின் மூலம் , இறைவனை அடைய முயற்ச்சிக்கிறோம். 

மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன.

மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன.


எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது போலத்தான் முன்னோர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். ஜபம் செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், உணவு அருந்தும் போதும், வெறும் தரையில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது.

பொதுவாக வெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது. மேலும், இடது கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டும்,நின்று கொண்டு, படுத்துக் கொண்டும், சாப்பிடக்கூடாது என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. எதற்கு அப்படி சொல்லுறாங்க? 
http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQD7YWqo6Fgqq51BqofepCGTBazGdJR_QxxBAmL_ddkIvBvjk3NWg

வீட்டில் மின்சாரக்கம்பி முதலியவற்றை தொடும் போது ஷாக் அடிக்கிறது ஷாக் அடிக்காமல் இருக்க எல்லா வீடுகளிலும் கைக்கு உறை போடுவதில்லை. உடனே வீட்டில் உள்ள மனைப்பலகையை கீழே போட்டு மின்சார ஒயரைத் தொட்டு பழுது பார்க்கிறோம். இரும்பு நாற்காலியை பயன்படுத்தாமல் மரப்பலகையை ஏன் போட்டுக் கொள்கிறோம். என்றால் அது மின் கடத்தாப் பொருள்

மின்சாரத்தை தொடுவதால் அதிர்ச்சி ஏற்படக் காரணம், மின்சாரம் உடல் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி நம்மை அதிர்வடையச் செய்கிறது. இதனை மின்கடத்தாப் பொருளாக இருக்கக்கூடிய காய்ந்த மரப் பலகையை கொண்டு தடுத்துக்கொள்கிறோம். அதுபோலவே நம் உடலில் உள்ள சக்தி வெளியேறாமல் இருக்கவே முன்னோர்கள் வெறும் தரையில் படுத்துறங்கக் கூடாது என்று கூறியுள்ளனர்.

உடம்பு உணவால் ஆன பிண்டம். உணவு உயிருக்கு சக்தி தரும். ஜபம் செய்யும் போது உடலுக்கு சக்தி தரும். ஆகாரம் உண்ணும் போதும் சக்தி பெறப்படுகிறது. அச்சக்தி நிலத்தில் இறங்காமல் இறங்காமல் இருக்க சக்தியை கடத்தாத மனைப்பலகை, மான் தோல், புலித்தோல், தர்பாசனம், ஆகியவற்றில் அமர்தல், தொன்மையான பழக்கமாக இருந்து வந்துள்ளது.

http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRh5syiyl269D_F3LvwhDXmGDKyizT6G2QrAaabV7EG9J_HbBdGgw
வெறும் தரையில் படுத்தால் நாளைடைவில் உயிர்சக்தியானது குறைந்து உடல் பலம் இழக்கிறது. எனவே உறங்கும் போது உடலில் உயிர்ப்புறும் சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க ஒரு துணியையாவது விரித்தே படுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். நம் உடல் நலம் கருதி அமைந்த இந்த சாஸ்திர வழக்கங்கள் அறிவியல் ரீதியானவையே எனவே குளிர்ச்சியாக இருக்கிறது என்று வெறும் தரையில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர் முன்னோர்கள்.

இந்த மாதிரி, சில சின்ன சின்ன விஷயங்களை தெரிஞ்சுக்கிட ஆரம்பிப்போம்.
நம் உடம்பில் சக்தியை எப்படி பெருக்குவது என்று பார்ப்போம்.


மனசுன்னு ஒன்னு இருக்கிறதை உணர முடியுதா உங்களால? அறிவியலுக்கு அது தெரியாது. கண்ணுக்கு தெரியாத ஒன்றை எப்படி ஒத்துக்க முடியும்? நல்லா உடம்பை பார்த்துக்கிடுறோம், நல்லா ஆரோக்கியமா சாப்பிடுறோம்.. உடம்பு சக்தியோட இருக்கு. திடீர்னு ஒரு கெட்ட நியூஸ். ஹா... அதிர்ச்சி வரும் அளவுக்கு. என்ன ஆகும்..? உடம்பு என்னதான் சக்தியோட இருந்தாலும், அதனால ஒரு பிரயோஜனமும் இல்லை. 


என்ன வேலை செய்திட முடியும்? அதுக்கு அப்புறம், ஒழுங்கா சாப்பிடாம, இன்னும் உடம்பு வீக் ஆகும். இல்லையா? இந்த உடம்பு , மனசு / ஆத்மா ரெண்டும் சேர்ந்தாதான் , அது நாம்.


ரெண்டுல ஒன்னு இல்லைனாலும், பயன் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டுமே முக்கியம்...! நாம ஒன்னும் , பெரிய பெரிய அரசியல்வாதிகள் வீட்டில் பிறந்துவிட வில்லை. நாம உழைச்சாத்தான் , நமக்கு சாப்பாடு. நிறைய சம்பாதிங்க.! ஒரு பத்து குடும்பத்துக்காவது , நல்லா சம்பாதிக்கிற வாய்ப்பு, வழிமுறை சொல்லிக் கொடுங்க.. ! 


நம்ம காலம் முடிஞ்சாலும், நம்மளை வாழ்த்தி அனுப்ப - ஒரு பத்து பேராவது இருக்கட்டும். நமக்கு பிடிச்ச விஷயங்கள்லே , நம்ம மூளையை எப்படி பயன்படுத்துறோமோ, அதைவிட ரெண்டு மடங்கு - பணம் சம்பாதிக்கிறதுலே காட்டுங்க. 

வெறுமனே பெண் சுகம், குடி,  போதை வஸ்து என்று அனுபவிப்பதிலேயோ  , அல்லது அதையே நினைத்துக்கொண்டு  இருந்தோ  - நமக்கு கிடைத்துள்ள , இந்த மனித வாழ்க்கை என்னும் , அருமையான சந்தர்ப்பத்தை - இழந்து விட வேண்டாம். இதுவரை எப்படி இருந்தாலும் பரவா இல்லை, இனிமேலாவது சுதாரித்து எழுங்கள்..!உடலுக்கு தேகப் பயிற்சி , மனதுக்கு இறை பக்தி, வழிபாடு - இரண்டுக்கும் அடிப்படை - மூச்சுப் பயிற்சி. உங்களை முதலில் , அறிந்து கொள்ள முயற்சி எடுங்கள். அதன் பிறகு - வானம் நிச்சயம் உங்கள் வசப்படும்!
 
நம் வாழ்க்கையின் வெற்றி , தோல்வி - நம் கையில் தான் இருக்கிறது. 


வாழ்க வளமுடன்!   

Sunday, September 25, 2011

அம்மன் தரிசனம்


                                      "அம்மன் தரிசனம்"

.

"ஆடி ஆடி வருகுதம்மா
ஆடித்தேர் வருகுதம்மா

தேடித் தேடி வந்து நின்றோம்
தேவி உன்னைக் காண‌ வந்தோம்

வாடி வாடி அழுத முகம்
வாட்டம் தீர வணங்கி நின்றோம்

ஓடி ஓடி களைத்து விட்டோம்
உன் மடியில் சாய வந்தோம்

இடி இடியாய் வருவதெல்லாம்
பொடிப்பொடியாய் ஆகக் கண்டோம்

இன்னல் என்று வந்ததெல்லாம்
இன்னிசையாய் மாறக் கேட்டோம்"

 காலை வரலக்ஷ்மி எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள்.
பூஜை மரியாதைகளை அன்புடன் ஏற்றுக்கொண்டாள்.
அதைத் தொடர்ந்து என் மனத்தில் எழுந்த வரிகள் இவை!


வெள்ளிக்கிழமையில் அம்மன் தரிசனம் செய்வது இங்கே சிறப்பாகும்!

வடிவுடையாளின் வண்ணமுகத்தைக் காண்பது மனதுக்கு இனிதாகும்!

நுதலில் துலங்கும் குங்குமச்சிவப்பில் குற்றங்கள் யாவும் மறைந்தோடும்!

மீன்விழியாளின் மருளும் விழிகள் கண்டிட இங்கே கலிதீரும்!

மூக்குத்தி அழகைக் கண்டால்போதும் மனதில் மகிழ்ச்சி மிகவாகும்!

செவ்விதழ் காட்டும் சிரிப்பில் கவலைகள் எம்மைவிட்டு விரைந்தோடும்!

செவ்வாய்மொழிகள் கேட்டிடக் கேட்டிட களிப்பும் நெஞ்சில் குடியேறும்!

பட்டுக்கன்னம் காட்டும் செம்மையில் பாவங்கள் எல்லாம் பறந்தோடும்!

செவிமடல் ஆடும் குண்டலவொலியில் செய்தன யாவும் கழிந்துவிடும்!

அலையாய் விரியும் கூந்தல் அழகினில் அலைபோல் துன்பம் நீங்கிவிடும்!

அல்லிக்கைகள் அருளும் அழகில் அன்பே இங்கு அணைந்தேறும்!

கைவளை குலுங்க அசைந்திடும் அழகில் ஆசைகள் உள்ளில் மிகவாகும்!

குலுங்கும் கொங்கைகள் சுரக்கும் அமுதினில் பசியும் இங்கே பறந்தோடும்!

இடையில் திகழும் மேகலை ஒலியில் இன்னிசைக் கீதம் செவிமடுக்கும்!

கட்டுடல்மேனி கண்டதும் மனதில் கசடுகள் எல்லாம் கரைந்தோடும்!

பிஞ்சுப்பாதம் மிஞ்சும் மிஞ்சில் நெஞ்சம் இங்கே தள்ளாடும்!

மாவிலைவிரல்கள் முன்னே வருகையில் மோஹனம் எதிரே நடமாடும்!

முன்னழகில் மனம் தடுமாறும்! பின்னழகில் மனம் தள்ளாடும்!

அம்மன் தரிசனம் அழகாய்க் கண்டதில் ஆனந்தம் இங்கே மிகவாச்சு!

அம்மா உந்தன் அருளைக் காட்டி அடியேன் வாழ்வில் விளக்கேற்று!

திருச்செந்தூர் முருகன் சிறப்பு 
Posted On Sep26,2011,By Muthukuamr
 
பழனி முருகன் என்றால் வழக்கு, குடும்பம், மன நிலையில் மாற்றம், திருமணம் போன்றவற்றிற்காக வழிபடலாம்.. அதேபோல, திருச்செந்தூர் முருகனை என்று எடுத்துக்கொண்டாலே சந்தான பாக்கியம். குழந்தை பாக்கியத்திற்கு முதன்மையானத் தலம் திருச்செந்தூர்தான்.

செந்தில் ஆண்டவர், குழந்தை வடிவத்தில், சிரித்த கோலத்தில் காட்சி கொடுக்கக்கூடிய ஒரு இடம். அதுவொரு பெரிய சிறப்பு. அடுத்து, பெரிய பெரிய மகான்கள் நக்கீரரிலிருந்து, ரிஷிகள், முனிவர்களுக்கெல்லாம் உபதேசம் செய்த இடம். அதனால் கல்விக்குரிய இடமும் அதுதான்.

பையன் மிகவும் டல்லாக இருக்கிறான். கான்சண்ட்ரேட் பண்ணவதே இல்லை என்று சொன்னவர்களுக்கெல்லாம் திருச்செந்தூருக்குப் போகச் சொல்லி எவ்வளவோ பேருக்கு குணமாகியிருக்கிறது. அவர்களே வந்து நல்ல மாற்றம் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்கள்.

அதேபோல, இப்பவும் ஆண் குழந்தைதான் வேண்டும் என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள். இன்னமும் ஆண் குழந்தை மோகம் நம் நாட்டில் தீரவே இல்லை. அதுபோல வந்து கேட்பவர்களுக்கும் திருச்செந்தூரைத்தான் சொல்கிறோம்.

அதே மாதிரி, கர்ம வினைகள் இருக்கிறதல்லவா, அதாவது ஊழ்வினைப் பயன், அதனை நீக்கக்கூடிய இடம் திருச்செந்தூர்தான்.

சூரனை சம்ஹாரம் செய்கிறார் என்று சொன்னால், நம்மிடத்தில் இருக்கக்கூடிய சூரத்துவம் போன்றவற்றை ஒவ்வொன்றாக போக்கக் கூடிய இடம். கர்ம வினைகளையெல்லாம் யாராலும் நீக்க முடியாது. அதனை அந்த முருகன்தான் தீர்க்க முடியும்.

இந்த மூன்று விஷயங்களுக்கு திருச்செந்தூர் முதன்மையான இடம். அதனைக் கண்கூடாக எவ்வளவோ மக்கள் அனுபவிக்கிறார்கள்.

Saturday, September 24, 2011

உலக ஒளி உலா அன்னையருடன் அருளும் ஸ்ரீநிவாச பெருமாள் -சிங்கப்பூர்அன்னையருடன் அருளும் ஸ்ரீநிவாச பெருமாள் -சிங்கப்பூர்

Balaji lights

பச்சைமாமலை போல் மேனி பவளவாய் கமலச்செங்கன்            
அச்சுதா அமரரேறே ஆயர்தம் கொழுந்தோ என்னும்
இச்சுவை தவிர யான்போய் இந்திரலோகமாளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் 
எனப் பக்திப் பரவச சிலிர்ப்புடன் வணங்கப்படும் பெருமைக்குரிய 
சிங்கப்பூர் ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயத்துக்குச் சென்று வணங்கினோம்.

தாய்நாட்டை விட்டு வந்திருந்த போதிலும், இறைவழிபாட்டை மறவாது கோயில் கட்டி, தங்களின் கலாச்சாரம்,மதம்,மொழி ஆகிவற்றை மறவாது ஒழுகி நிற்கத் துடித்த காலம்.1800 நூற்றாண்டின் பிற்பகுதியில் ஸ்ரீ நிவாச பெருமாள் தோற்றம் கண்டது

1963-ம் ஆண்டு தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்ட சிற்பிகளைக் கொண்டு சிற்ப நடைபெற்றது. இராஜ கோபுரம்,பிள்ளையார் சந்நிதி, இவற்றைத் தவிர தற்சமயமுள்ள கோவில் 1966-ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.

நரசிங்கப் பெருமாள் ஆலயமாக ஆரம்பித்த கோவில் ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயமாக பெயர் மாற்றம் பெற்றது. நரசிங்க அவதாரம் எடுத்த விஷ்ணுவின் உருவத்திற்குப் பதிலாகத் திருப்பதி வெங்கடேசப் பெருமாளை ஒத்த திருவுருவத்தைக் கோவிலில் மூலவராக வைக்கவேண்டுமென்ற எண்ணத்துடன் கருஞ்சிலையும் இந்தியாவிலிருந்து கொண்டு வரப்பட்டது.

ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் வளாகத்திலேயே கோவிந்தசாமி பிள்ளை அவர்களால் ஒரு கல்யாண மண்டபம் கட்டப்பட்டு, 1965-ம் ஆண்டு சிங்கப்பூர் முதல் அதிபர் இஞ்சே யூசோப் பின் இஸ்ஸாக் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. கல்யாண மண்டபம் திருமணங்கள், கூட்டங்கள் இன்னும் பல்வேறு சமய சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக இன்று பயன்படுத்தப்படுகிறது.
 

ஸ்ரீநிவாச பெருமாள் கோயில் 1966-ம் ஆண்டு புதுப்பித்து கட்டப்பட்டுக் கும்பாபிஷேகம் முடிவுற்றவுடன் கோவிலுக்கு இராஜ கோபுரம் கட்டி 1975-ம் ஆண்டு கும்பாபிஷேத்தைச் சிறப்பாக நடத்த வைணவ ஆகமங்களில் தேர்ச்சி பெற்ற அலங்கார பட்டர் தமிழகத்திலிருந்து வந்து நடத்தினார்.
Sri Srinivasa Perumal temple - Singapore
41 நாட்கள் மண்டலாபிகஷேகத்தில் கலாச்சார நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திருமதி. எம்.எஸ். சுப்புலெட்சுமி, புலவர் கீரன் அவர்களும் வரு புரிந்தனர்.
Sri Srinivasa Perumal temple - Singapore
1978-ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் சிங்கப்பூர் தேசிய நினைவு சின்னங்கள் பாதுகாப்பு வாரியத்தால் அரசாங்கத்தால் அங்கீரிக்கப்பட்டது.
Sri Srinivasa Perumal temple - Singapore
கோவில் கோபுரம், விமானத்தில் உள்ள சுதை சிற்பங்களாகத் தாயார், ஆண்டாள், பெருமாள் எழிலுடன் காட்சியளிக்கிறார்கள். சன்னிதானத்தில் மூலவராக பெருமாள், ஆண்டாள், தாயார் ஆகியோரின் உற்சவ திருவுருவங்கள் ஏகாதசி மண்டபத்தில் வைக்கப்பட்டு அன்றாட பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.

கொடி மரம் இழைக்கப்பட்டு இந்தியாவிலிருந்து வந்த செம்புத் தகட்டினால் மூடப்பட்டுள்ளது. காரைக்குடியில் உள்ள சிறந்த நிபுணர்களைக் கொண்டு நுட்பமான வேலைப்பாடுகளுடன் இராஜகோபுரத்திற்கான கதவு எழிலாக செய்யப்பட்டுள்ளது.

LORD SAKKARATH AZHVAAR
Sri Srinivasa Perumal Temple: LORD SAKKARATH AZHVAAR

 புரட்டாசி சனி:- புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்த மாதம். ஏழுமலை வெங்கடாசலபதி இந்த புரட்டாசி மாதத்தில்தான் மக்களை நெறிபடுத்தியதாகக் கூறப்படுகிறது. சனிக்கிழமை பெருமாளுக்கு உரிய தினம். அன்று கோயிலில் அதிக கூட்டமிருக்கும். புரட்டாசி சனியில் அன்னதானம் செய்யும் வழக்கம் பெருமாள் கோயிலில் 1900 -களின் தொடக்கத்திலிருந்தே உள்ளதாக வாய்மொழி வரலாறு உண்டு. இன்று வரை புரட்டாசி சனியில் அன்னதானம் நடைபெற்று வருகிறது.

 வைகுண்ட ஏகாதசி
ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலில் மற்றொரு முக்கிய வைகுண்ட ஏகாதசி. அன்றிரவு முழுவதும் பக்தர்கள் கண் விழித்துப் பெருமாளை வழிபடுவது வழக்கம். மறுநாள் காலை சொர்க்கவாசல் திறக்கப்படும்.சொர்க்கவாசல் திறந்து தரிசனம் செய்த பிறகே பக்தர்கள் தங்கள் விரத்தை முடிப்பார்கள்.இவ் 1900 ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
 Click to view full size image
 கலியுகத்தில் பக்தர்களுக்கு அருள் மழை பொழிந்து அவர்களுடைய துன்பங்களை நீக்கும் கற்பகத் தருவாக விளங்குகிறார் 
சிங்கப்பூர் திருமலை திருவேங்கடமுடையான்.
SRI SRINIVASA PERUMAL TEMPLE-S'PORE
Sri Srinivasa Perumal Temple: ヒンドゥー寺院

Sri Srinivasa Perumal Temple (Little India, Singapore)Perumal Temple’s Gopuram

Fragment of Sri Srinivasa 


Fragment of Sri Srinivasa Perumal Temple's Gopuram
 ,