Tuesday, April 17, 2012

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக் கலை மற்றும் பொறியியல் அதிசயமான ” இசைத் தூண்கள் “!!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந் து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூ ண்களை தட்டினால் ” சப்த ஸ்வர ங்கலான ” ” ச, ரி, க, ம, ப, த, நி ” என்ற தனித் தனி ராகங்களை அது இசைக்கி ன்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூ ண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கி ன்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் ” மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி ” போன்ற இசைக் கருவி களின், இசையை தருகின்றது !! அப்படி என் றால் ஒவ்வொ ரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறுவே று ஒலிகளில் இசைக்கும்! இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படு வதில்லை, உண் மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டி னால் இசைக் கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லி யமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்த க்காலத்தில் இருந்த இசைக் கலை ஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவி யைகூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்து ள்ளனர்! .இது போன்ற வை உலகில் எந்த இடத்திலும் இல்லை என் பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத் தூண்களை “மிடறு” என்று அழைத்தார்கள்.
இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான ” அலைகற்றையை ” உருவா க்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார் ” என்பவரும் அவ ருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளி ந்துள்ள ” இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய் ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்று ம் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.
“In situ metallography ” (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது ” தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் ” என தெரிய வந் த து !!. ” spectral analysis “என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களி ல் வரும் இசையானது” தன் மைக் கேற்ப இசைந்து கொடுக் கும் அலைக்கற்றயினால் ” சப் தம் உருவாவதாக தெரிவிக்கி ன்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிச யாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினா லே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்திய லை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல்! .இசை என்பது காற்றை உள் வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவா ரதைக்கூட உருவாக்கவில் லை !
இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த “இசைத்தூண்கள் ” ஆயிர ம் ஆண்டுகளுக்கு மேல் வெறு ம் ஆச்சர்யத்தை மட்டுமே பதி லாய் தந்து கொண்டிருக்கின்ற து! அடுத்த ஜென்மம் என்ற ஒ ன்று இருக்கின்றதா என தெரிய வில்லை ! அப்படியே இருந்தா லும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போ மா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இது போன்ற இடங்களுக்கு சென்று நம் முன் னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழி யில் வந்த நாம் புதிதாக எது வும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக் காப்போம்!

Monday, April 16, 2012

நம் பாதமும் பதியட்டும்!-ஏப்.,- 17 – திருநாவுக்கரசர் குருபூஜை

Posted On April 17,2012,By Muthukumar
"மாசில் வீணையும் மாலை மதியமும்...' என்ற தேவாரப்பாடலை இசைக்காத பக்த நெஞ்சங்களே இல்லை. இந்த இனிய பாடலை எழுதிய திருநாவுக்கரசர் குருபூஜை, சித்திரை சதய நட்சத்திரத்தில் நடக்கும். இந்த நன்னாளில், அவர் அவதரித்த திருவாமூர் தலத்துக்கு சென்று வரலாம். நாவுக்கரசரின் தந்தை பெயர் புகழனார், தாயார் மாதினியார், சகோதரி திலகவதியார். இவருக்கு மருள்நீக்கியார் என்பது நிஜப்பெயர். இளமையிலேயே பெற்றோர் இறந்து விட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார்.
திலகவதியாருக்கு, அவ்வூர் சேனைத்தலைவர் கலிப்பகையாரை திருமணம் செய்து வைக்க, நிச்சயித்தனர். நிச்சயதார்த்தம் முடிந்த பின், போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் கொல்லப்பட்டார். திருமணம் நின்றுபோனதால், மனம் உடைந்த திலகவதி, திருவதிகை என்ற தலத்திற்கு சென்று, சிவத்தொண்டு செய்து வந்தார். திருநாவுக்கரசரோ, சைவ சமயத்திலிருந்து சமண சமயத்திற்கு மாறி, தர்மசேனர் என்ற பெயர் சூட்டிக்கொண்டார்.
தன் தம்பியை, சைவ சமயத்திற்கு தொண்டாற்ற மீண்டும் தர வேண்டும் என, சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார் திலகவதியார். சிவனும் அதை ஏற்று, தன் சோதனையை ஆரம்பித்தார். நாவுக்கரசரை சூலைநோய் தாக்கியது. திருவதிகை சென்று, திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால், மெய்சிலிர்த்த அவர், "திருப்பதிகம்' பாடி வழிபட்டார். அந்த இசையில் மயங்கிய சிவனே, அவர் முன் தோன்றி, "இனிய பாடல்களைப் பாடிய நீர், "நாவுக்கரசு' என போற்றப்படுவீர்...' என்றார்.
பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய நாவுக்கரசர், திருப்புகலூரில், சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். ஞானசம்பந்தர், இவரை தன் தந்தையாகக் கருதி, "அப்பரே' என அழைத்ததால், "அப்பர்' என்றும் பெயர் பெற்றார்.
நாவுக்கரசர் அவதரித்த திருவாமூரில், திரிபுரசுந்தரி உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கே அப்பர் பெருமான், நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவரை வணங்கினால், மனதிற்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வியில் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும். பசுபதீஸ்வரரும், திரிபுர சுந்தரியும் அருள் பாலித்தாலும், அப்பர் பெருமானுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. திலகவதியாருக்கும், அப்பரின் தாய் தந்தைக்கும் சன்னிதிகள் உள்ளன.
சித்திரை சதயநாளில், அப்பர் குருபூஜை நடக்கிறது. இதையொட்டி நடக்கும் விழாவில், தேவாரத்தை சிறப்பாக பாடும் சிறந்த ஓதுவாமூர்த்திக்கு, "மூத்த திருமுறை இசைவாணர்' என்ற சிறப்பும், "திருமுறை கலாநிதி' என்ற பட்டமும் வழங்கப்படுகிறது.
அப்பர், பங்குனி, ரோகிணி நட்சத்திரத்தில் அவதரித்ததாகக் கருதி, அன்றும் அவருக்கு விசேஷ பூஜை நடக்கிறது. திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார், போரில் இறந்து விட்டதால், இவ்வூரில் திருமணத்தன்று தான் நிச்சயதார்த்தம் செய்கின்றனர்.
நாவுக்கரசர் அவதாரம் செய்த, களரி வாகை மரத்தடியில், சுவாமிக்கு அழகிய கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரம் செடியாகவும் இல்லாமல், கொடியாகவும் இல்லாமல், மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. 7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே, இந்த மரம் இங்கு உள்ளது என்கின்றனர்.
பண்ருட்டியிலிருந்து, 9 கி.மீ., கடலூரிலிருந்து, 34 கி.மீ., விழுப்புரத்திலிருந்து, 28 கி.மீ., தூரத்தில் திருவாமூர் உள்ளது. தேவாரம் பாடிய தலைமகன் அவதரித்த ஊரில், நம் பாதமும் பதியட்டுமே!

சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு

POsted On April 17,2012,By Muthukumar

இயற்கைச்சீற்றங்களை நிறுத்தவும்,நமது கர்மவினைகள் தீரவும் திரு.சிவமாரியப்பன் அவர்கள் தலைமையில் சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு


இந்த நந்தன ஆண்டில்5.5.2012 சனிக்கிழமை காலை 8.12 வரையிலும் சித்திரை நட்சத்திரமும்,அதன்பிறகு சுவாதி நட்சத்திரம் மறுநாள் 6.5.2012 ஞாயிறு காலை 6.35 வரையிலும் இருக்கிறது.(பவுர்ணமியானது 5.5.2012 சனிக்கிழமை மதியம் 12.25க்கு ஆரம்பித்து,6.5.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.01 வரையிலும் இருக்கிறது)சித்திரை மாதம் வரும் பவுர்ணமி எப்போதும் சித்திரை நட்சத்திரத்தில் தான் உதயமாகும்.அபூர்வமாக பவுர்ணமியானது இரண்டு நட்சத்திரங்களில் வரும்;அப்படி வரும் நாள் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடத்தில் அமைந்திருக்கிறது.
அப்படி உதயமாகும்போது பின்வரும் வழிபாட்டுமுறையைப்பின்பற்றினால்,நமது கர்மவினைகள் அடியோடு நீங்கிவிடும்;குழந்தைப்பேறின்மையால் ஏக்கமடைபவர்களின் துயரம் நீங்கும்;பிரிந்திருக்கும் தம்பதியினர் ஒன்று சேர்ந்துவிடுவர்;(அவர்களுக்கிடையே இருக்கும் எப்பேர்ப்பட்ட பிணக்கும் தீர்ந்துவிடும்);பெண்ணுக்கு ஆணால் ஏற்பட இருக்கும் அவமானங்களும்;ஆணுக்கு பெண்ணால் ஏற்பட இருக்கும் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.மேலும் இந்த நந்தனவருடத்தில் வர இருக்கும் இயற்கைச் சீற்றங்கள் இந்த வழிபாட்டினால் தணித்துவிட முடியும்.(ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது!!!)

எனவே,இந்த சித்ராபவுர்ணமி வழிபாடு திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்கால சீடரும்;நமது ஆன்மீக வாழ்க்கை வழிகாட்டியும்,ஆன்மீகச் செம்மலுமாகிய திரு.சிவமாரியப்பன் அவர்களின் தலைமையில் 5.5.2012 சனிக்கிழமை காலை 6 மணியளவில் சதுரகிரியின் நுழைவாசலான தாணிப்பாறையில் துவங்க உள்ளதால், அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சொந்த ஊரில் வாங்கி வர வேண்டியவை:

குறைந்தது ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,
அரை கிலோ விதையில்லாத கறுப்பு திராட்சை
விதையில்லாத பேரீட்சை பழ பாக்கெட்(இவைகளை சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் சன்னிதியில் படையலிட்டுவிட்டு,கொஞ்சம் அங்கேயே பகிர்ந்துகொடுத்துவிட்டு,மீதியை வீட்டுக்குக்கொண்டு சென்று  நமது குடும்ப உறவுகளுக்கு கண்டிப்பாகத் தர வேண்டும்)

குறைந்தது 5 கிலோ நவதானியங்களை வாங்கி வர வேண்டும்.இவைகளை சதுரகிரி மலைப்பாதை ஓரங்களில்  தூவ வேண்டும்.இந்த நவதானியங்கள் நவக்கிரகங்களின் பிரதிநிதிகளாக இருப்பதால்,நமது ஜாதகத்தில் இருக்கும் நவக்கிரக தோஷங்கள் அடியோடு நீங்கிவிடும்.

வீட்டில் தயார் செய்து கொண்டு வர வேண்டியது:

   1)எள்ளை இடித்து,அத்துடன் கருப்பட்டி சேர்த்து  அதை 27 உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.இந்த 27 எள் உருண்டைகளையும் உடையாமல்,கொண்டுவர வேண்டும்.இது நமது முன்னோர்களுக்கு நாமே தர்ப்பணம் செய்வதற்காக!!!

2)குறைந்தது 2 கிலோ பொறியை(பொறிகடலையில் பொறி மட்டும்) வாங்கி,அத்துடன் குறைந்தது அரைக்கிலோ பூந்தியைக் கலக்கிக் கொள்ள வேண்டும்.இதை படையலாக்குவது நமது முன்னோர்களாகிய சித்தர்களின் ஆசி நேரடியாக நமக்குக் கிடைப்பதற்காக!!!ஆமாம்,நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வழித்தோன்றல்களே!!!(* பூர்வபுண்ணியம் உள்ளவர்கள்  இந்த நாளில் சதுரகிரியில் நமது முன்னோராகிய சித்தரையும் தரிசிக்கமுடியும்)

3) சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு படையலாக சர்க்கரைப்பொங்கலும்,அவல் பாயாசமும் படைக்க வேண்டும்.இந்த இரண்டும் தயார் செய்யத் தேவையான பொருட்களை நாம் ஒவ்வொருவரும் கொண்டு வர வேண்டும்.சதுரகிரியில் இரவு நேரத்தில் நாம் கொண்டு வந்த பொருட்களை ஒன்றாக்கி,ஒரே படையலாக தயார் செய்ய வேண்டும்.அவ்வாறு தயார் செய்து இரவு 9 மணி முதல் 12 மணி வரை சதுரகிரி சுந்தர மஹாலிங்க சுவாமிக்குப் படைக்க வேண்டும்.படைத்துவிட்டு,நமது மஞ்சள்துண்டில் சுந்தரமஹாலிங்கத்தின் முன்பாக அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ஜபித்துமுடித்தப்பின்னர்,இந்த படையலை அங்கிருப்போர்களுக்கு விநியோகிக்க வேண்டும்;நாமும் கொஞ்சம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.(மறக்காமல் டார்ச் லைட்,பாத்திரம் கொண்டு வரவும்)

இவ்வாறு செய்துவிட்டு,5.5.2012 சனிக்கிழமை இரவு கண்டிப்பாக சதுரகிரியில் தங்க வேண்டும்.மறு நாள் 6.5.2012 ஞாயிறு காலையில் அவரவர்களின் வீடுகளுக்குத் திரும்பலாம்.இவ்வாறு செய்வதால்,நீண்டகாலப் பிரச்னைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்களில் தீர்ந்துவிடும்;பொருளாதார நெருக்கடிகள் உடனடியாகத் தீர்ந்துவிடும்.நமது பூமிக்கு வர இருக்கும் இயற்கைச் சீற்றங்கள் விலகிவிடும்.

ஓம்சிவசிவஓம்

*** இந்த நந்தன வருடத்தின் முதல் பவுர்ணமியன்று இரவு முழுக்க சித்தர்களின் வீடாகிய சதுரகிரியில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஒரு சந்தர்ப்பம் ஆன்மீக குருவாகிய சிவமாரியப்பன் அவர்களால் கிடைத்திருக்கிறது.இது எப்பேர்ப்பட்ட ப்ராப்தம்!!!
ஓம்சிவசிவஓம்

Friday, April 13, 2012

நாம் பிறந்திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான்

வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வர வேண்டும் என்பது பிறருக்கெ ல்லாம் உபகாரம் செய்வதற் காகத்தான். நிறையச் சம்பா தித்து அதையெல்லாம் நமக் காகவே செலவழித்துக் கொ ண்டால் ஸ்வாமி சந்தோஷ ப்படமாட்டார். அவருக்கு நாம் எப்படிக் குழந்தையோ அதே மாதிரி ஏழைகள், நோ யாளிகள், அநாதைகள் எல் லாரும் குழந்தைகள். அந்தக் குழந்தை களுக்கு நாம் உபகாரம் பண்ணாமல் நமக்கே செலவழித் துக் கொண்டால் ஸ்வாமி அதற்கப்புறம் நமக்கு அருள் செய்யமாட் டார்.அதனால் நீங்கள் எல்லோரும் உலகத்துக்கு உங்களால் முடி ந்த உபகாரத்தைச் செய்ய வேண்டும். அதி ல் உங்களுக்கு ஒரு பெரிய சந்தோஷமும் திருப்தியும் உண்டாகும். நீங்களே சாப்பி டு வதைவிட ஓர் ஏழைக்குச் சாப்பாடு போட்டால் அதில் உங்களுக்கு இன்னும் ஜாஸ்தி இன்பம் உண்டாகும். நாம் பிறந் திருப்பதே மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்காகத்தான் என்று தெரியும். இப்படி உங்களால் முடிந்த உதவியைச் செய்து நீங்கள் மற்றவர்களின் மனத்தைக் குளிர வைத்தால் அதைப் பார்த்து ஸ்வா மியும் உங்களிடம் மனம் குளிர்ந்து நிரம்ப அருள் செய்வார். உங்களிடம் மற்றவர்க ளுக்கு நல்ல அபிப்பிராயம் வந்தால், அவ ர்களும் நீங்கள் ஸ்வாமியைத் தொழுவ தைப் பார்த்துத் தாங்களும் தொழுவார்கள். பக்தியினால் உங்களுக் கு உண்டாகிற ஆனந்தமும் நல்லறிவும் அவர்களுக்கும் கிடைக்கு ம். ஆனபடியால் நீங்கள் ஸ்வாமியிடம் பக்தியாக இருப்பதே எல்லாவற்றையும் விடப் பெரிய பரோபகார மாகிறது.
 
- ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

Thursday, April 12, 2012

நவக்கிரஹ தோஷம் நீங்க செய்யவேண்டிய விரதம் முறைகள்!

ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவானுக்கு ஏற்ற விசேஷமான நாள். சூரிய நமஸ்காரம் செய்து ஆதித் யஹ்ருத யம் படிக்க வேண்டும். சூரியனுக்குரிய தேவதை – சிவ ன், தானியம் – கோதுமை, வஸ் திரம் – சிவப்பு, புஷ்பம் – செந்தா மரை, ரத்தினம் – மாணிக்கம், உலோகம் – தாமி ரம்.
திங்கள்கிழமை அனுஷ்டிக்கப் படும் இந்த விரதத்திற்கு சோம வார விரதம் என்று பெயர். திங்கள் கிழமையv ன்று தம்பதியருக்கு இயன்ற அளவு தானம் செய்து போஜ னம் அளிப்பது விசே ஷம். சந்திரனுக் குரிய தேவதை – துர்க் கா தேவி தானியம் – நெல், வஸ்திரம் – வெள்ளை, புஷ்பம் – வெள்ள ரளி, ரத்தி னம் – முத்து, உலோகம் – ஈயம்.
செவ்வாய்க்கிழமை அங்காரகனுக்கு உகந்த நாள் செவ்வாய் தோ ஷம் ஜாதகத்தில் உள்ளவர்களுக்கு செவ்வாய்க் கிழமை விரதம் நல்ல மேன்மையைத் தரும். சும ங்கலிகளுக்கு மஞ்சள் குங்குமம், தாம் பூலம் கொடு க்கலாம். செவ்வாய்க்குரிய தேவதை – முருகன், தானி யம் – துவரை, வஸ்திரம் – சிவப்பு, புஷ்பம் – சண்பகம், ரத்தி னம் – பவழம், உலோகம் – செம்பு.
புதன்கிழமை விரதம் அனுஷ்டிப்பதால் கல்வி, ஞானம், தனம் பெரு கும். பச்சைபயறு கலந்த சர்க்கரைப் பொங்கல், பழம், பொரி – கட லை நிவேதனம் செய்து விஷ் ணு சகஸ்ரநாமம் படிப்பது மிகவும் நல்லது. புதன்கிழமை விரதம் புகழைக் கொடுக்கும், பொன், பொருளைச் சேர்க்கும், புதனுக்குரிய தேவதை – விஷ்ணு, தானியம் – பச்சைப் பயிறு, வஸ்திரம் – பச்சைப்பட்டு, புஷ்பம் – வெண் காந் தள், ரத்தினம் -பச்சை, உலோகம் – பித்தளை.
வியாழக்கிழமை குருபகவானுக்கு உகந்த நந்நாள் இந்நாளில் விர தம் இருப்போருக்கு சகலகாரியங்களும் சித்தி யாகும், எல்லா நலன்களும் பெருகும், குருவின் அருளால் குழந்தைச் செல்வம் உண்டாகும், குடு ம்பத்தில் உள்ள சஞ்சலம் விலகும் திருமணம் நடக் கும். குரு பகவானின் தேவதை – ருத்ரன் (தக்ஷிணு மூர்த்தி), தானி யம் – கொண்டக் கட லை, வஸ்திரம் – மஞ்சள், புஷ்பம் – முல்லை, ரத்தினம்–கனகபுஷ்பராகம், உலோகம் – தங்கம்.
வெள்ளிக்கிழமை விரத மகிமையால் சுக்ரனுக்குப் ப்ரீதி ஏற்படு கிறது. சுக்ரன் சுபிட்சத்தைத் தருவான் ,தொல்லை கள் நீங்கி, நல்லவை நடக்கும். வெள்ளிக் கிழமை யன்று அவரவர் குல தெய்வத்தை வழிபாடு செய் வது நல்ல பலன்தரும். சுக்கிரனுக்குரிய தேவதை – வள்ளி, தானியம் – வெள்ளை மொச்சை, வஸ்திரம் – வெண்பட்டு, புஷ்பம் – வெண்தாமரை, உலோகம் – வெள்ளி, ரத்தினம் – வைரம்.
சனிக்கிழமை சனிபகவானுக்கு மிகவும் சிரேஷ்டமான நாள் ஜாதக த்தில் சனி நீச்சமாக இருந்தாலும், அஷ்டமசனி இருந்தாலும், பகை வீட்டில் இருந்தாலும், ஏழரை யாண்டு சனி இருந்தாலும், சனிக்கி ழமை விரதம் இருந்து சனிபகவானை வணங்கி வழிபட்டு எள்தீபம் ஏற்றினால் சனி பகவானால் நல்லது உண்டாகும். சனி பகவானு க்குரிய தேவதை -திருமூர்த்தி, தானியம் – எள், வஸ்திரம் – கருப்பு வஸ்திரம், ரத்தினம் – நீலம், புஷ்பம் – கருங்குவளை, உலோகம் – இரும்பு.
ராகுதிசை நடப்பவர்களும், ராகு தோஷம் உள்ளவர்களும் காலசர்ப் பயோகம் உள்ளவர்களும் ராகுவிரதத்தை அனுஷ் டிக்கலாம். செவ் வாய்க்கிழமை துர்க்கைக்கு இலு ப்பை எண்ணெய்யினால் விளக்கேற்றி மந்தார மலரால் அர்ச்சனை செய்து உளுந்து நிவேதனம் செய்து வழிபட்டால் அளவற்ற நன்மை கிடைக்கும். ராகுக்குரிய தேவதை – பத்ரகாளி, தானியம் – உளு ந்து, ரத்தினம் – கோமேதகம், வஸ்திரம் – கருப்பு வஸ்திரம், உலோகம் – கருங்கல், புஷ்பம் – மந்தாரை மலர்.
கேதுதிசை நடப்பவர்களும் ஜாதகத்தில் கேது நீச்ச மடைந்தவர்களு ம் இந்த விரதத்தை அனுஷ்டிக்கலாம். சனிக் கிழமையன்று விநாயகரை 108 பிரதக்ஷணம் செய்து அருகம்புல்லால் அர்ச்சித்து வழி பட்டால் அமோகமான சௌபாக்யத்தைத் தரும். கேது விற்குரிய தேவதை – விநாயகர், தானியம் – கொள்ளு, வஸ்திரம் – பலகலர் கலந்த வஸ்திர ம், ரத்தினம்–வைடூரியம், புஷ்பம் – செவ்வல் லி, உலோகம் – துருக்கல்.

Tuesday, April 10, 2012

உள்ளத்திலே இருக்கிறார்…

Posted On April 11,2012,By Muthukumar
பக்தி என்பது, ஓரிரு நாளில் வந்து விடாது; ஒரே ஜென்மாவிலும் வந்து விடாது. முற்பிறவிகளில் இதில் ஈடுபாடு இருந்திருந்தால், இந்த ஜென்மாவிலும் அது தொடர்ந்து வரும். பகவான் எல்லா இடங்களிலும் உள்ளார். ஒவ்வொருவரின் இதயத்திலும் உள்ளார். அவரை பக்தியின் மூலமே அறிய முடியும்.
ஆரம்பத்தில், புராணங்களைப் படிப்பதன் மூலமும், பல மகான்களின் சொற்பொழிவுகளை கேட்பதன் மூலமும் மனதில் பக்தி வளரும். தெய்வ வழிபாடுகளிலும் ஈடுபட வேண்டும். இப்படி பல ஜென்மாக்களில் ஈடுபட்டு வந்தால், ஏதாவது ஒரு ஜென்மாவில் பலன் கிடைக்கும்.
சிவவாக்கியர் என்பவர் ஒரு சித்தர். அவருக்கு, கண்ணை மூடிக் கொண்டால் பகவான் தெரிவதுண்டாம். "நாங்கள் கண்ணை மூடினால், ஒரே இருட்டாகத் தெரிகிறதே... உங்களுக்கு மட்டும் கண்ணை மூடினால், பகவான் தெரிவதாகச் சொல்கிறீர்களே... அது எப்படி?' என்று கேட்டனர் மற்றவர்கள்.
அதற்கு அவர், "இது, இந்த ஜென்மாவில் கிடைத்த பாக்கியம் இல்லை. நான் பல ஜென்மாக்களில் பகவான் நாமாவைச் சொல்லி, எத்தனை @காவில்களை சுற்றி, சுற்றி வந்திருக்கிறேன் தெரியுமா?
"இத்தனை ஜென்மாவில் சேர்ந்த புண்ணியத்தால், இந்த ஜென்மாவில் கண்ணை மூடினாலும் பகவான் தெரிகிறார்...' என்றார். இப்படி பகவானை ஒவ்வொரு ஜென்மாவிலும் வழிபட்டு வந்தால், ஏதாவது ஒரு ஜென்மாவில் பகவானைக் காண முடியும்.
ஒரு குருவிடம் ஒரு சீடன் இருந்தான். அந்த சீடன், "நான் பகவானைத் தேடிக் கண்டுபிடித்து வருகிறேன்...' என்று, வெளியில் புறப்பட்டுச் சென்றான்.
சில நாட்களுக்குப் பின் குருவிடம் வந்து, "எங்கு தேடியும் பகவானை காண முடியவில்லை...' என்றான். அதற்கு குரு, "உள்ளத்தே உறைந்திருக்க, ஊரெல்லாம் தேடுவானேன்?' என்றார். அப்போது தான் சீடனுக்குப் புரிந்தது, பகவான் எல்லார் உள்ளத்திலும் இருக்கிறார் என்று. அஞ்ஞானம் என்ற திரை, அவரை காண முடியாமல் மறைக்கிறது. பக்தி என்ற ஆயுதத்தால், அந்த திரையை விலக்கினால், பகவானை காண முடியும்.
அவர் எங்கும் இருக்கிறார் என்பதை அறிந்து, தினமும் ஜெபம் செய்ய ஆரம்பித்தான். பகவானைத் தேடி எங்கும் போக வேண்டாம்... பகவானை நினைத்து, இருக்கும் இடத்திலேயே வழிபட்டு வந்தால், ஏதோ ஒரு ஜென்மாவில், ஒரு நாள், அவரை தரிசிக்க முடியும். இதற்கு நம்பிக்கையும், பொறுமையும் வேண்டும்!

புனித நீராட புறப்படுவோம்!

Posted On April 11,2012,By Muthukumar
"விஷு' என்ற சொல், சூரியன் குறிப்பிட்ட சில ராசிகளில் நுழையும் காலத்தைக் குறிக்கும். மேஷத்தில் நுழையும் காலம் சித்திரை விஷு, துலாமில் நுழையும் காலம் ஐப்பசி விஷு. ஒன்று வெயில் காலம், இன்னொன்று மழைக் காலம். இரண்டுமே சூரியனை சார்ந்து இருக்கிறது. சித்திரையில், வெயில் தாளாமல் தவிக்கும் போது, சூரியனை கரித்துக் கொட்டாதவர்கள் இல்லை. "என்னமா வெயில் அடிக்குது!' என்பர். ஐப்பசியில் மழை கொட்டும் போது, "இந்த மழை அழுது வடியுறதை எப்பதான் நிறுத்துமோ!' என்று சலித்துக் கொள்கிறோம்.
ஆனால், இதிலுள்ள உண்மையை புரிந்து கொண்டால், சூரியனை வாழ்த்துவோம். மழை காலத்தில், நம் கண்ணுக்குத் தெரியாத, எவ்வளவோ நுண்கிருமிகள் உற்பத்தியாகின்றன. இவை, மனிதனுக்கு கேடு செய்பவை. இவற்றை அழிக்க, வெயில் சுட்டெரித்தால் தான் முடியும். எனவே தான், "அக்னி நட்சத்திர காலம்' என்ற ஒன்றைக் கூட, இறைவன் நமக்கு அருளியுள்ளான். இந்தக் காலம் சித்திரையில் துவங்குகிறது.
அதே நேரம், அதிக வெயில், மனிதனுக்கு சில வெப்ப நோய்களையும் தந்து விடுகிறது. அதனால் தான், சித்திரை முதல்நாளில், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதை வழக்கமாக்கினர். அதிலும், தாமிரபரணியில் நீராடுவது மிக மிக புண்ணியத்தையும், உடல் வலுவையும் தரும்.
கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி உள்ளிட்ட, உலகிலுள்ள எல்லா புண்ணிய நதி தேவியரும், சிவபெருமானை சந்தித்து, "ஐயனே... பாவம் செய்த பலரும், எங்களுள் வந்து நீராடுவதால், சுமை தாளாமல் அவஸ்தைப் படுகிறோம். எங்கள் சுமையைக் குறைக்கும் வழி சொல்லுங்கள்...' என்றனர்.
"பெண்களே... நீங்கள், சூரியன் மேஷத்தில் புகும் சைத்ர மாசம் (சித்திரை) முதல் நாளில், தாமிரபரணியில் மூழ்குங்கள். உங்கள் பாவங்கள் அனைத்தும் மறைந்து விடும்...' என்றார் சிவன்.
"தாமிரபரணிக்கு அப்படியென்ன சிறப்பு?' என்று, நதி தேவியர் கேட்டனர்.
"கயிலாயத்தில் என் திருமணம் நடந்த போது, எல்லா மக்களும் அங்கு கூடினர். எனவே, உலகம் சமநிலை இழந்தது. யாராவது ஒருவர் பொதிகைக்கு சென்றால், உலகம் சமப்படும் என, நான் சொன்னேன். யாரும் முன்வராத நிலையில், ஒரே ஒருவர் மட்டும் தியாக உணர்வுடன் பொதிகை மலைக்கு செல்ல ஒப்புக் கொண்டார். அவரே அகத்தியர். அவர், தன் மனைவி லோபமுத்திரையை, புனித நீராக உருமாற்றி, ஒரு கமண்டலத்தில் அடைத்திருந்தார். குடகுமலைக்கு சென்ற சமயம், விநாயகர் அந்த கமண்டலத்தை தட்டி விட்டார். அது, காவிரி எனும் பெயரில் ஓடியது. அதிர்ச்சியடைந்த அகத்தியர், வேகமாக கமண்டலத்தை எடுத்தார். எஞ்சிய நீருடன் பொதிகை வந்தார். அந்த மலையின் உச்சியில், மீதி நீரை ஊற்றினார். அது தாமிர பரணியாக பெருக்கெடுத்தது. அந்த ஆற்றின் கரையில், சித்திரை முதல் நாளில், நான் அவர்களுக்கு திருமணக் காட்சியளித்தேன். அந்த நன்னாளில், தாமிரபரணியில் புனித நீராடி, இந்த திருமணக் காட்சியைக் காண்பவர்கள், நற்கதியடைய வேண்டும் என்று, அவர் என்னிடம் வேண்டினார். அந்த வரத்தை அவருக்கு அளித்தேன்...' என்றார்.
இப்போதும், சித்திரை விஷுவன்று நள்ளிரவில் அகத்தியருக்கு, சிவபார்வதி திருமணக்கோலம் காட்டியருளும் நிகழ்ச்சி, தாமிரபரணியின் முதல் தலமான பாபநாசம் பாபநாசநாதர் கோவிலில் நடக்கிறது. திருநெல்வேலியில் இருந்து, 50 கி.மீ., தொலைவில் இவ்வூர் உள்ளது. நவகைலாயங்களில், இது சூரியனுக்குரிய தலம் என்பதால், இங்கு நீராடுவது இரட்டிப்பு நன்மையைத் தருகிறது.
இந்தக் கோவிலில் மட்டுமே அகத்தியரை, அவரது மனைவி லோபமுத்திரையுடன் தரிசிக்க முடியும். அகத்தியர் அருவி, அகத்தியர் கோவில் ஆகியவையும் பொதிகை மலையில் உள்ளன.
புனிதமான தாமிரபரணியில் நீராட புறப்படுவோமா!

Saturday, April 7, 2012

அதிசயம் : ஆஞ்சநேய தரிசனம்

Posted On April 07,2012,By Muthukumar
வாசக அன்பர்களுக்கு வணக்கம்... நம்பியவருக்கு இறை தரிசனம் உண்டு என்பதற்கு ஒரு நல்ல உதாரணம்.. இந்த நிகழ்வு.

பெரியவர் ரமணி அண்ணா அவர்கள் எழுதிய ஒரு அற்புதமான கட்டுரை. சக்தி விகடனில் வெளியானது என்று நினைக்கிறேன்.  எனது நண்பர் ஒருவர் - மின்னஞ்சலில் அனுப்பி இருந்தார். அதை நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்வதில், பெரு மகிழ்ச்சி அடைகிறேன்....


பெரியவங்க எல்லாம் - எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.. நாம் எந்த அளவு வேறுபடுகிறோம் என்பது  தோன்ற ஆரம்பிக்கலாம்.... இறைவனுக்கு நைவேத்தியம் ஏன் படைக்கிறோம் என்பதற்கு , மிக நல்ல விதத்தில் காரணம் விளங்கும்.  நம்பி ராம நாமம் சொல்ல , ஆஞ்சநேய தரிசனம் கண்டிப்பாக கிடைக்கும் என்பதற்கு - இது ஒரு ஆணித்தரமான சான்று...!

இந்த எழுத்துநடை,  கொஞ்சம் ஐயர் ஆத்து பாஷை அங்கங்கே இருப்பது  சிரமமாக தெரிந்தாலும் , முழுவதும் படித்துப் பாருங்கள்....பிரமிப்பில் நீங்கள் அமிழப்போவது  உறுதி....... 

  

ஒரு வெள்ளிக்கிழமை, நண்பகல் வேளை. சிருங்கேரியில் ஜகத்குரு அபிநவ வித்யாதீர்த்த மஹா சந்நிதானம், தனது நித்திய பூஜைகளை முடித்துக் கொண்டு, பிட்சை முடித்த பின், ஏகாந்தமாக அமர்ந்து மடத்துச் சீடர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

சிருங்கேரியை குரு பீடமாகக் கொண்ட திருநெல்வேலி, மதுரை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த வேதபாடசாலைகளில் பயின்று வந்த மாணவர்கள் பலர் அப்போது, சாரதாம்பாளையும் ஜகத்குருவையும் தரிசிக்க அங்கு வந்திருந்தனர். அவர்களைச் சில நாட்கள் தங்கிப் போகும்படி, ஸ்வாமிகள் கட்டளை இட்டிருந்தார். அந்த மாணவர்களும் ஸ்வாமிகளது உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.


அப்போது, பிரவசனம் (ஆன்மிக விளக்க உரை) பண்ணும் உபன்யாசகர்களைப் பற்றி பேச்சு வந்தது. மதுரை தல்லாகுளம் வேத பாட சாலையைச் சேர்ந்த சங்கர சுப்பிரமணியன் என்ற மாணவன் எழுந்து, ஜகத்குருவை நமஸ்கரித்தான். பிறகு, ”இந்த பிரவசனம் பற்றி மனசுல உள்ள ஒரு விஷயத்தை, குருநாதர்கிட்ட விக்ஞாபனம் (வேண்டுகோள்) பண்ணிக்க ஆசைப்படறேன்” என்றான். அவனைச் சற்று ஏற இறங்கப் பார்த்த ஆச்சார்யாள், ”என்னது? சொல்லேன்!” எனப் பணித்தார்.

உடனே அவன் தாழ்ந்த குரலில், ”வேற ஒண்ணுமில்லே குருநாதா! இப்பல்லாம் கதா பிரவசனம் பண்ற சில உபன்யாசகர்கள், சாராம்சத்தை விட்டுட்டு, இதர விஷயங்களைத்தான் நிறைய பேசறா! இதனால… சாராம்சம் மறந்து போயிடறது. இதர விஷயங்கள் மட்டும் நன்னா ஞாபகத்தில் இருக்கு. ‘நல்ல பிரவசனம் கேட்டோம்’கிற திருப்தி ஏற்பட மாட்டேங்கறது! இது, பிரவசனம் பண்றவாளோட குறைபாடா அல்லது கேக்கறவாளோட குறைபாடா? மகா ஸ்வாமிகள்தான் தெளிவுபடுத்தி அனுக்கிரகிக்கணும்!” என்றான்.

இதைக் கேட்ட மற்றவர்களும், இந்த சந்தேகம் தங்களுக்கும் இருப்பதாகத் தெரிவித்தனர். ஜகத்குரு புன்னகைத்தார். கம்பீரமாக நிமிர்ந்து அமர்ந்தவர், ”மொதல்ல, நீங்கள்லாம் போஜனம் பண்ணியாச்சா?” என்று பரிவுடன் விசாரித்தார்.

அனைவரும் எழுந்து நின்று கைகூப்பி, ”பண்ணியாச்சு ஸ்வாமி” என்றனர்.
”சந்தோஷம்” என்று சிரித்த ஜகத்குரு தொடர்ந்தார்: ”எங்கே, எதைக் கேட்டாலும், அதுல இருக்கிற நல்ல சாராம்சத்தை மாத்திரம் நாம கிரகிச்சுண்டு, மத்ததை விட்டுடணும். இதுக்கு, நம்ம மனசை பரிபக்குவப்படுத் திக்கணும். அதுதான் ஒசத்தியான குணம். உபன்யாசம் பண்றவா, காலத்தையும் சபையையும் அனுசரிச்சுண்டு… அதே நேரம், ‘சப்ஜெக்ட்’டையும் விட்டுடாமத்தான் பூர்த்தி பண்றா! நாமதான் அன்னபட்சி மாதிரி அதுலேர்ந்து கிரகிச்சுக்கணும்… என்ன புரியறதா?” என்று கேட்டு விட்டு பலமாகச் சிரித்தார்.
அவரது பதில், சீடர்களுக்கு பிரமிப்பை ஏற்படுத்தியது. ஜகத்குருவை பார்த்தபடி… அவர்கள், தங்களுக்குள் ஏதோ ரகசியமாக விவாதித்தனர்!

சூர்யநாராயணன் என்ற சிஷ்யன் எழுந்து, மஹா சந்நிதானத்தை நமஸ்கரித்தான். பிறகு, பய பக்தியுடன் கேட்டான்: ”ஜகத்குருவிடம் ஒரு பிரார்த்தனை! நாங்கள்லாம் மத் ராமாயணம் கேக்கணும்னு ஆசைப்படறோம். ஜகத்குருதான் கிருபை பண்ணி…” – அவன் முடிப்பதற்குள், ”அதுக்கென்ன… பேஷா ஏற்பாடு பண்ணிட்டா போறது. நன்னா வாசிச்ச பௌராணிகாளா (உபன்யாசகர்) மைசூர்லேர்ந்து வரவழைச்சு சொல்லச் சொல்றேன்” என்றார் ஸ்வாமிகள்.
இதைக் கேட்ட சிஷ்யர்கள், ஒருவரை யருவர் ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டனர். யக்ஞநாராயணன் என்ற சிஷ்யன் தயங்கியபடியே எழுந்து, ஜகத்குருவை நமஸ்கரித்தான். பிறகு பணிவுடன், ”ஜகத்குருவின் அம்ருத வாக்கால மத் ராமாயணம் சிரவணம் (கேட்டல்) பண்ணணும்னு எங்களுக்கு ரொம்ப நாளா ஆசை. குருநாதர் அனுக்கிரகிக்கணும்!” என்று வேண்டினான்.

ஸ்வாமிகள் நெகிழ்ந்து போனார். எனினும் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், கலகலவென சிரித்தவர், ”ஓஹோ… இதுக்குத்தான் இவ்வளவு பீடிகையா?! பார்ப்போம்… பார்ப்போம்…” என்றபடி எழுந்து உள்ளே சென்று விட்டார். சிஷ்யர்களுக்கு ஏமாற்றம்!

நாட்கள் கடந்தன. அன்றும் வெள்ளிக்கிழமை; சந்தியாகால வேளை. சாரதாம்பாள் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழிந்தது. திடீரென… அம்பாளைத் தரிசிக்க வந்தார் ஸ்வாமிகள். அவர், தரிசனம் முடிந்து வெளியே வரும்போது மணி எட்டு இருக்கும்! ஆலய வாசலில் தயாராகக் காத்திருந்த சிஷ்யர்கள், ஸ்வாமிகளைக் கண்டதும், நெடுஞ்சாண் கிடையாக விழுந்து நமஸ்கரித்தனர். ஆச்சார்யாள் அப்படியே நின்றார்.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தபடியே, ”ஏதேது, விடமாட்டேள் போல இருக்கே. சரி… சரி… நீங்க ஆசைப்பட்டபடியே நடத்திடலாம்! ஒரு நல்ல நாள் பார்த்து ப்ராரம்பம் (ஆரம்பம்) பண்ணுவோம்” என்றபடி வேகமாகப் புறப்பட்டார்.
அந்த நல்ல நாளும் வந்தது. ஏழு நாட்கள் ஆச்சார்யாள் சுந்தரகாண்டம் சொல்வதென முடிவாயிற்று. ‘மஹா சந்நிதானமே பிரவசன அனுக்கிரகம் பண்ணப் போறார்’ என்ற செய்தி பரவ, ஏகக் கூட்டம். அன்று மழை வேறு தூறி ஓய்ந்திருந்தது!

ஆசனத்தில் வந்து கம்பீரமாக அமர்ந்த ஜகத்குருவை அன்று தரிசித்தவர்கள், சாட்சாத் வேத வியாஸ பகவானே வந்து அமர்ந்திருப்பது போல் உணர்ந்தனர். கணீரென்ற குரலில் பிரவசனம் ஆரம்பமானது. அரை மணி நேரம் கடந்திருக்கும். திடீரென பிரவசனத்தை நிறுத்திய ஸ்வாமிகள், மடத்தைச் சேர்ந்த ஒருவரை அழைத்தார். அவரிடம், ”ஆரம்பத்திலேயே சொல்லணும்னு இருந்தேன்… மறந்துட்டேன்! நீ என்ன பண்றே… என் பக்கத்துல கொஞ்சம் தள்ளி, ஒரு மனைப் பலகையைக் கொண்டு வந்து போடு. அதுமேல பட்டு வஸ்திரத்தை விரி. அப்புறம், ஒரு வெள்ளித் தட்டுல ரெண்டு பெரிய கொய்யாப் பழத்தை கொண்டு வந்து வை… சீக்கிரம்!” என்று கட்டளையிட்டார். உத்தரவு பூர்த்தி செய்யப்பட்டு, உபன்யாசம் தொடர்ந்தது.

ஐந்தாம் நாள் உபன்யாசமும் பூர்த்தி அடைந்தது. அந்த மாணவர்களுக்கும் நன்கு புரிகிற மாதிரி விவரித்த ஸ்வாமிகள், இடையிடையே தர்மசாஸ்திர நுணுக்கங்களையும் விளக்கினார்.

திருநெல்வேலி வேத பாடசாலையைச் சேர்ந்த வேங்கடேசன் என்ற மாணவன் மெள்ள வந்து ஜகத்குருவை நமஸ்கரித்து, ”எனக்கு ஒரு சந்தேகம் குருதேவா” என்றான் தயங்கியபடி.

”என்ன சந்தேகம், கேள்!” என்றார் ஸ்வாமிகள்.
அவன் திக்கித் திணறியபடி கேட்டான்: ”குருநாதா! உபன்யாசம் ஆரம்பிச்ச நாள்லேர்ந்து… உங்க பக்கத்துல ஒரு பலகையைப் போட்டு, அதுக்கு முன்னால ஒரு தட்டுல கொய்யாப் பழத்தையும் வைக்கச் சொல்றேள்! அது எதுக்குனு புரியலை…”

இதைக் கேட்டு கலகலவென சிரித்த ஆச்சார்யாள், ”சொல்றேன் கேளு… ‘யத்ர யத்ர ரகுநாத கீர்த்தனம்… தத்ர தத்ர க்ருதமஸ்த காஞ்சலிம்’னு… எங்கெல்லாம் ராமனின் பெருமை பேசப்படறதோ, அங்கெல்லாம் ஆஞ்சநேய ஸ்வாமி வந்துடுவார்னு ஒரு நம்பிக்கை. இங்கே நாம மத் ராமாயணம்னா சொல்றோம். அதனால நிச்சயம் ஸ்வாமி வருவாரில்லையா? அவரை நாம நிக்க வைக்கலாமோ? அவர் ‘நவ வ்யாகரண’ பண்டிதராச்சே! அவர் உட்காரத்தான் ஆசனப் பலகை! அப்புறம்… நம்ம வீட்டுக்கு யாராவது ‘கெஸ்ட்’ வந்தா பழம்- பட்சணம், காபியெல்லாம் குடுத்து உபசாரம் பண்ற மாதிரிதான் இது! ஸ்வாமிக்கு கொய்யாப் பழம்னா ரொம்பவும் புடிக்கும். இப்ப புரிஞ்சுண்டியா?” என்று கேட்டார்.

தலையாட்டினான் வேங்கடேசன். அந்த இளம்பிஞ்சு இன்னும் தெளிவடைய வில்லை என்பது அந்த தெய்வத்துக்கு தெரியாதா என்ன!
ஆறாம் நாளன்றும் நல்ல கூட்டம். அன்றைய உபன்யாசத்தை உருக்கமாகக் கூறி முடித்தார் ஜகத்குரு.

அனைவரும் ஸ்வாமிகளை நமஸ்கரித்துச் சென்ற பின்னர், பாடசாலை மாணவர்களும் ஒருவர்பின் ஒருவராக நமஸ்கரித்து நகர்ந்தனர். கடைசியாக, முதல் நாள் சந்தேகம் கேட்ட திருநெல்வேலி பாடசாலை மாணவன் வேங்கடேசன் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து விட்டு, கைகூப்பி நின்றான். புன்முறுவலுடன் அவனை ஏறிட்ட ஸ்வாமிகள், ”ஒம் முழுப் பேரென்ன?” என்று வினவினார்.

”பிரசன்ன வேங்கடேசன் குருநாதா!”
”பூர்வீகம் எது?” என்று கேட்டார்.
”திருநெல்வேலி- கடையநல்லூர் பக்கம் ஒரு குக்கிராமம் குருநாதா”
”தகப்பனார் என்ன பண்றார்?”
”உபாத்தியாயம் (வைதீகத் தொழில்) குருநாதா!”
உடனே ஆச்சார்யாள், ”பேஷ்… பேஷ்” என்று கூறிவிட்டு, அன்றைய தினம் ஆஞ்சநேய ஸ்வாமிக்கு அர்ப்பணிக்கப்பட்ட இரண்டு கொய்யாப் பழங்களை தன் தங்கக் கைகளால் எடுத்து, அவனிடம் தந்தார். பிறகு, ”வேங்கடேசா! இவை ஆஞ்சநேயர் சாப்பிட்ட உச்சிஷ்ட (மீதி) பிரசாதம். நறுக்கி நீயும் வாயில போட்டுண்டு, எல்லாருக்கும் கொடு!” என்று விடைகொடுத்தார்.

ஆனால், பிரசன்ன வேங்கடேசன் அந்த இடத்தை விட்டு நகரவில்லை. ஆச்சார்யாள் அளித்த இரு கொய்யாப் பழங்களையும் கைகளால் உருட்டி உருட்டிப் பார்த்துக் கொண்டே இருந்தான்!

அவனது எண்ண ஓட்டத்தைப் புரிந்து கொண்ட ஆச்சார்யாள் தனக்குள் சிரித்தபடி, ”என்ன பிரசன்ன வேங்கடேசா! பழங்களைக் கையில் வெச்சுண்டு அப்டி என்ன யோசனை? கொஞ்சம் சொல்லேன், நானும் தெரிஞ்சுக்கறேன்!” என்றார். அவன் தயங்கினான்.

”சொல்லு”- தைரியப்படுத்தினார் ஜகத்குரு.
”வேற ஒண்ணுமில்லே குருநாதா! அந்த ஆசனத்துல ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்து மத் ராமாயணம் கேட்டுட்டு, அவருக்கு அர்ப்பணிச்ச கொய்யாப் பழங்களையும் சாப்டுட்டுப் போறதா…” என்று அவன் முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடைமறித்தார்.

”இத நான் சொல்லலே! பரம்பரை பரம்பரையா நம்ம தேசத்துல மத் ராமாயண பிரவசனம் பண்ணிண்டு வர பெரியவாள்லாம் பூர்ண நம்பிக்கையோட கடைப் பிடிக்கிற வழக்கம். இது சத்தியமும் கூட! இதுல, உனக்கு என்ன சந்தேகம்?” என்று கேட்டார் ஞானகுரு.

அந்தக் குளிரிலும் வியர்த்துக் கொட்டியது பிரசன்ன வேங்கடேசனுக்கு. பேசத் தயங்கினான். அவனை அருகில் இன்னும் நெருங்கி வரச் சொன்ன ஆச்சார்யாள், ”எதுவா இருந்தாலும்… மனசுல பட்டதை தைரியமா சொல்லு!” என்று உற்சாகப்படுத்தினார்.

உடனே அவன், ”நானும் பிரவசனம் கேக்கறச்சே அந்தப் பலகையையே அடிக்கடி பார்த்துண்டிருந்தேன்… என் கண்ணுக்கு ஆஞ்சநேய ஸ்வாமி வந்து ஒக்காந்ததா தெரியவே இல்லியே! பக்கத்துல இருந்த சகாக்களையும் கேட்டேன். அவாளும் ‘தெரியலே’னுட்டா. அதான்…” என மென்று விழுங்கினான் வேங்கடேசன்.
உடனே ஆச்சாரியாள், ”சரி… சரி. இது உன்னோட முதல் சந்தேகம்! ‘ரெண்டு கொய்யாப் பழமும் வெச்சது வெச்சபடி அப்படியே இருக்கே! ஆஞ்சநேய ஸ்வாமி சாப்பிட்டிருந்தா, குறைஞ்சிருக்கணுமே’ங்கறதுதானே ரெண்டாவது சந்தேகம்?” என்று கேட்டார்.

பிறகு, ”ஆத்மார்த்தமான பக்தியும், சிரத்தையும் இருந்தா ஆஞ்சநேய ஸ்வாமி பவ்யமா, பக்தியோடு அமர்ந்து மத் ராமாயண சிரவணம் பண்றத நாமும் தரிசிக்கலாம்! ஆஞ்சநேயர் விஸ்வரூபியா வந்து உட்கார்ந்துட்டார்னா அத பார்த்துட்டு, தாங்கிக்கிற சக்தி எல்லோருக்கும் இருக்குமா? அதனால அவர், சூட்சுமமா வந்து கேட்டுட்டுப் போவார்!” என்று விளக்கம் அளித்தார். அத்துடன், ”உனக்கு கிரந்த எழுத்து வாசிக்கத் தெரியுமா?” என்று வேங்கடேசனிடம் கேட்டார்.

”தெரியும் குருநாதா” என்றான் அவன்.
உடனே, உள்ளேயிருந்து உபநிஷத் சம்பந்தமான ஒரு கிரந்த புத்தகத்தைக் கொண்டு வரச் செய்தார் ஆச்சார்யாள். அதில் ஒரு பக்கத்தைப் பிரித்து வைத்துக் கொண்டு, ஒரு சிறு பகுதியை சுட்டிக் காண்பித்து, ”இதை, ஐந்து நிமிஷத்தில் மனப்பாடம் செய்து அப்டியே என்னிடம் ஒப்புவிக்க வேண்டும். முடியுமா பார்” என்றார் சிரித்தபடி!
புத்தகத்துடன் சற்றுத் தள்ளிப் போனான் பிரசன்ன வேங்கடேசன். சரியாக ஐந்து நிமிடம் ஆயிற்று. ஆச்சார்யாளிடம் வந்தவன், அவர் குறிப்பிட்ட பகுதியை அட்சர பிசகின்றி ஒப்பித்தான்.

ஆச்சார்யாள் முகத்தில் பரம சந்தோஷம். புத்தகத்தைக் கையில் எடுத்தார். தான் உருப்போடச் சொன்ன அந்தப் பகுதியை எடுத்து வைத்துக் கொண்டு, ”வேங்கடேசா, நான் சொன்னபடி அஞ்சே நிமிஷத்துல படிச்சு ஒப்பிச்சுட்டே! நீ அந்த புஸ்தகத்திலேர்ந்து குறிப்பிட்ட அட்சரங்களை கிரகிச்சுட்டதால… அவை, அந்த இடத்திலேருந்து மறைஞ்சு போயிடலையே! கிரந்த எழுத்துக்கள்லாம் இருந்த இடத்துல அப்படியே இருக்கோல்லியோ? அதுமாதிரிதான் இதுவும்! தெய்வத்துக்கு நாம எதை அர்ப்பணிச்சாலும், அதுல இருக்கிற பக்தி சிரத்தையுடன் கூடின ருசியை மாத்திரம் ஸ்வீகரிச்சுண்டு, பதார்த்தங்களைப் பரம கருணையோடு நமக்கே விட்டுடுறார். வெச்ச கொய்யா ரெண்டும் வாடாம- வதங்காம, முழுசா அப்படியே இருக்கிற ரகசியம் இப்ப புரியறதா உனக்கு?” என்று கேட்டுவிட்டு, கலகலவென்று சிரித்தார்.

பிரசன்ன வேங்கடேசன் பிரமித்துப் போய் அமர்ந்திருந்தான். அங்கு, சற்று நேரம் அமைதி நிலவியது. அனைவரும் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தனர்.
பிரவசன பூர்த்தி நாள்! மதியம் மூன்று மணிக்கே மேடைக்கு ஆச்சார்யாள் வந்து விட்டார். உபன்யாசம், மிக உருக்கமாகப் போய்க் கொண்டிருந்தது. பூர்த்தி கட்டம். அனைவரும் மெய்ம்மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அப்போதுதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது!

பெரிய வானரம் ஒன்று தாவித் தாவி அந்த உபன்யாச கூடத்துக்கு வந்தது. ஒருவரையும் லட்சியம் பண்ணாமல் மேடையில் பாய்ந்து ஏறி, ஆஞ்சநேய ஸ்வாமிக்காக போடப்பட்டிருந்த பலகையில், ஆச்சார்யாளைப் பார்த்தபடி- சாதுவாக அமர்ந்து கொண்டது! ஜகத்குரு சற்று நேரம் வைத்த கண் வாங்காமல் அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். எதிரிலிருந்த கொய்யாப் பழங்களை ‘அது’ ஏறெடுத்தும் பார்க்கவில்லை! கூட்டம் இதைப் பார்த்து வியந்தது!

மாலை ஐந்து மணி. அதுவரை, அந்த வானரம் அப்படி இப்படி அசையவே இல்லை! பழங்களையும் தொடவில்லை. ஆச்சார்யாள் உபன்யாசத்தைப் பூர்த்தி செய்து, ‘பலசுருதி’ (பலன்) சொல்லி முடித்தார். பிறகு வலப் புறம் திரும்பி வானரத்தைப் பார்த்து, ”ஆஞ்சநேய ஸ்வாமி! மத் ராமாயணம் கேக்கறதுக்காக நீங்க வந்து உக்காந்திருக்கறதுல ரொம்ப சந்தோஷம்! அந்த ரெண்டு கொய்யாப் பழங்களும் உங்களுக்குத்தான்… ஸ்வீகரிச்சுக்கணும்” என்று கேட்டுக் கொண்டார்.கூட்டத்தை ஒருமுறை நோட்டம் விட்ட வானரம், பழங்களை எடுத்துக் கொண்டு, ஆச்சார்யாளையே வாஞ்சையுடன் சற்று நேரம் உற்றுப் பார்த்தது.

இதற்குள் கூட்டத்திலிருந்து உரத்த குரலொன்று, ”ஆஞ்சநேயா… ராமா… ராமா!” என்று முழங்கியது. அனைவரும் குரல் வந்த திசையை ஆர்வத்துடன் பார்த்தனர். அங்கே பிரசன்ன வேங்கடேசன், கண்களில் நீர் மல்க கைகூப்பி நின்றிருந்தான்! இந்த நேரத்தில், மெள்ள மேடையை விட்டுக் கீழிறங்கிய வானரம், ராஜநடை போட்டபடி நடந்து சென்று மறைந்தது.

கண்களில் நீர் முட்ட ஜகத்குருவிடம் வந்த பிரசன்ன வேங்கடேசன், ”குருதேவா! ஒங்க பக்கத்துல பலகையில வந்து ஒக்காந்துட்டுப் போனது, என் கண்ணுக்கு வானரமா தெரியலே. சாட்சாத் ஆஞ்சநேய ஸ்வாமி, ஆஜானுபாகுவான சரீரத்தோட கம்பீரமா உட்கார்ந்திருந்ததைப் பார்த்தேன்! ஆச்சார்யாளோடு ஸ்வாமி ஏதோ பேசியதையும் பார்த்தேன்! நீங்க சொன்ன தாத்பர்யம் இப்ப எனக்குப் புரிஞ்சுடுத்து குருநாதா!” என்று ஜகத்குருவின் பாதார விந்தங்களில் விழுந்தான். எத்தனையோ பேர் தேற்றியும் அவனது கண்ணீரை மட்டும் எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை.

அந்த பரப்பிரம்மம் கரம் உயர்த்தி வேங்கடேசனை ஆசீர்வதித்தது!

Friday, April 6, 2012

இந்து மதத்தின் சிறப்புக்களை சொல்லும் “சங்கரா டி.வி.”யை நேரலையாக காண‌

இந்து மதத்தின் கொள்கைகளையும் சிறப்புக்களையும் மக்க‍ளிடம் எடுத்துச்செல்வதற்காகவும், பல்வேறு  அற்புத வேத மந்திரங்களின் அர்த்த‍ங்களை விளங்கச்செய்யும் பொருட்டும் சங்கரா தொலை க்காட்சி துவங்கப்பட்ட‍து அது இப்போது இணையத்திலும் நீங்கள் காணலாம் இதோ கீழே உள்ள‍ லிங்கை கிளிக் செய் து சங்கரா தொலைக்காட்சியில் ஒளிப ரப்பாகும் இந்து மதம் சம்பந்தப்பட்ட‍ நிகழ்ச்சிகளை நேரலையாக கண்டு பயன்பெறுங்கள்

Thursday, April 5, 2012

உத்திர வழிபாடுPosted On April 06,2012,By Muthukumar
உத்திரம் நட்ச்சத்திரத்தின் நெகடிவ் பாயிண்ட்டும் அதற்க்கான ஆலயமும்:
தீராத வேதனை,தைரியமின்மை, சிக்கல்களில் மாட்டிக் கொள்ளுதல், இனம் புரியாத அச்சம்.
இதற்க்கு தீர்வு அளிக்கும் ஆலயமே சிக்கல் சிங்காரவேலர் ஆலயம்.

File:Murugan by Raja Ravi Varma.jpg
File:Sikkal temple.jpg
உத்திர நட்ச்சத்திர நாளில், முருகனை நினைத்து விரதம் மேற்கொள்வது நல்லது. அன்று காலை குளித்து அதன் பின்பாக, கண நாதனை தொழுது, வலது கையில் மங்கள மஞ்சள் நிற துணியில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து முடிந்து, கங்கனமாக கட்டி, தங்களது குடும்ப சிக்கல் தீர இறைவன் வழி காட்ட வேண்டுதல் செய்து கொள்ள வேண்டும். உத்திர நாளன்று குடும்ப வழக்கப்படி , பூஜை முடியுங்கள்.
ஆறு நாட்கள், விரதம் எடுத்து ஏழாம் நாள், சிக்கல் சென்று சிங்கார வேலரை தரிசிக்க செல்ல வேண்டும் 
 
பூஜைப் பொருட்கள்: தேங்காய் -1 , வாழைப் பழம் - 6 , வரகு அரிசி மாவுடன் நாட்டு சர்க்கரை கலந்த கலவை, தேன், விபூதி, நெய் விளக்கு : 6 + 1 +2 = 9. விநாயகருக்கு இரு நெய் விளக்கு ஒரு விளக்கு கொண்டு ஏற்றி, இரு விளக்கை ஏற்றி வைத்து, 3 ஊது வத்தி ஏற்றி, வழிபட வேண்டும்.
அதன் பிறகு, முருகப் பெருமாநிர்க்கு அர்ச்சனை. நம் பிரச்சினையை முருகப் பெருமானிடம் ஒப்படைத்து விட்டதால், சுவாமி பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.
அர்ச்சனை முடித்த பின், மயில் வாகனம் முன்பாக அறுகோண வடிவில் நெய் விளக்கு வைத்து, விநாயகர் சந்நிதானத்தில் விளக்கு ஏற்ற பயன்படுத்திய விளக்கு கொண்டு ஏற்ற வேண்டும்.
விளக்கு ஏற்றிய பிறகு, ஆலயம் 6 சுற்றுகள் சுற்றி வந்து, கொடி மரமஅருகே விழுந்து வணங்க வேண்டும்.
அதன் பின்பாக, அர்ச்சனை செய்த பொருட்களை எடுத்துக் கொண்டு ஆலயம் விட்டு வெளியில் வந்து வயதான பெரியவர்களுக்கு தேங்காயும், வாழைப் பழத்தையும், சிறுவர்களுக்கு வரகரிசி மாவினையும் வழங்க வேண்டும். பிட்ச்சைக் காரர்களுக்கு அர்ச்சனைப் பொருட்களைத் தரக் கூடாது. வேண்டுமென்றால் தயிர் சாதம் அவர்களுக்கு வழங்கலாம். காசோ, பணமோ தரக்கூடாது. அதே போல், அர்ச்சகருக்கு தட்சிணை தொகையினை, தட்டில் மட்டுமே வைக்க வேண்டும். கையில் தருவது மரியாதை அல்ல. செய்யவும் கூடாது. கற்பூரம் ஏற்றுவதாக இருந்தால், பிளாஸ்டிக் கவர் நீக்கி, ஏற்றவேண்டும். ஒருவர் ஏற்றிய எரியும் கற்பூரத்தில் வைக்கக் கூடாது. தனியாக வைத்துத் தான் ஏற்றவேண்டும்.
தானம் அளித்த பிறகு, ஆலயத்தினுள் வந்து, கையில் கட்டிய கண்கனத்தினை அவிழ்த்து உண்டியலில் செலுத்தவும். இருபது நிமிட நேரம் அமர்ந்து, இறைவனுக்குகந்த பாடல்களை படிக்கவும். இருப்பத்தொன்றாவது நிமிடம் பிட்ச்சை இடாமல் ஆலயம் விட்டு வெளியே வந்து வீட்டிற்கு வரவும். ஆலயத்தினுள் தேவையின்றி பேசுதலை தவிர்க்கவும்.
வீடு வந்து, முருகர் முன்பாக ஒரு நெய் தீபம் ஏற்றி, அவ்விளக்கு அணையும் வரை பூசை அறையில் அமர்ந்து பக்தி பாடல் படிக்கவும். அதன் பிறகே வெளி வேலைக்கு செல்லலாம். இவ்வாறு செய்ய,
அதிசயப் படத் தக்க வகையில், சிங்கார வேலன், உங்களின் பிரச்சினைகளை களைவதனை நீங்களே அனுபவிக்கலாம். மனம் மகிழும்படி செய்வான் எம்பெருமான் சிக்கல் சிங்கார வேலன்.
 File:Sikkal temple.jpg

Sikkal Singaravelar
இன்னொரு பரிகார வழிமுறையும் உண்டு: புனர் பூச நட்ச்சத்திர தினத்தன்று குளித்து இறைவனை வழிபட்டு வலது  கையில் மஞ்சள் துணியில் ஒரு ரூபாய் நாணயம் வைத்து முடிந்து, வேண்டுதல் செய்து, ஆறு நாள் விரதம் இருந்து, உத்திர நட்ச்சத்திர திரு நாளில் பரிகாரம் முடிக்கலாம். சிக்கல் சிங்கார வேலரை தரிசிக்க செல்ல முடியாத நிலை இருந்தால் அருகில் உள்ள குன்றின் மீதுள்ள குமரனை தரிசித்து பேறு பெறுவீர்!

[murugan_silai.jpg]
படங்கள் உதவி : ஸ்ரீ இராஜ ராஜேஸ்வரி 
மணிராஜ் வலைப்பூ ஆசிரியர்.

நமது கர்மவினைகளை அடியோடு நீக்கும் கிரிவல விரதம்

Posted On April 06,2012,By Muthukumar

நம்மில் பலர் நேர்மையாகவும்,திறமையாகவும் உழைக்கிறோம்;உழைத்தும் அதற்குரிய பலன்கள் சம்பளமாக,பதவி உயர்வாக கிடைத்தாலும்,உழைப்புக்கேற்ற பலன்கள் கிடைப்பதில்லை;இதற்குக் காரணம் அவர்களின் பிறந்த ஜாதகத்தில் ஒளிந்திருக்கும்.யாருக்கெல்லாம் உழைப்புக்குரிய பலன்கள் கிடைக்கவில்லையோ,அவர்கள் இந்த கிரிவலவிரத முறையைப்பின்பற்றலாம்.


நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்துகொண்டே செல்கிறது;இதை கட்டுப்படுத்த வேண்டிய அரசுகள்,வேறு முக்கியமான ‘கடமைகளை’ செய்துகொண்டே இருக்கின்றன.இந்த சூழலில் நமது ஆன்மீக பலத்தை அதிகரித்துக்கொண்டே சென்றாலே,நமது பொருளாதார சூழ்நிலையில் தன்னிறைவை எட்டிவிட முடியும்.


ஏனெனில்,இந்தியாவே கர்மநாடு! இந்தியாவைத் தவிர,மேல்நாடுகள் அனைத்தும் போக நாடுகள்.கர்மங்கள் எனில்,நாம் கடந்த பிறவிகளில் செய்த நற்செயல்களின் விளைவுகளால் இந்த பிறவியில் சொத்துக்களை அனுபவிக்கிறோம்;குறிப்பிட்ட திறமையோடு வேலை பார்த்து சம்பாதிக்கிறோம்;பலவிதமான வாழ்க்கை அனுபவங்கள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன;பலருக்கு கிடைக்கும் புகழ் அவர்களின் கால கட்டத்தில் வேறு எவருக்குமே கிடைப்பதில்லை;அதேபோல,நாம் செய்த தீச்செயல்களின் விளைவாக அவமானம்,தோல்விகள்,துயரங்கள்,காம அவமானம்,கடன்,நோய் ,அரசாங்க கோபம் என அவதிப்படுகிறோம்.இந்த கர்மவினைகளின் மொத்த வடிவமாக நாம் இந்தியராக இருக்கிறோம்.இந்த சூழ்நிலையில் நமது கர்மவினைகளை அடியோடு நீக்கிட,நாம் செய்ய வேண்டியது அண்ணாமலை கிரிவலம் தான்.
அண்ணாமலை கிரிவலம் பற்றி விரிவாகவும்,அனுபவரீதியாகவும் கடந்த சில ஆண்டுகளாக நிறைய்ய்ய்ய எழுதியிருக்கிறோம்.நீங்கள் ஆன்மீகக்கடல் 2009,2010,2011 ஆம் ஆண்டின் பதிவுகளை வாசித்தால் அண்ணாமலை கிரிவலத்துக்கு இவ்வளவு மகிமையா? என்று பிரமிப்பீர்கள்.சுமார் 12 தடவை கிரிவலம் சென்றுவந்தால்,அதன் விளைவாக நமது அனைத்து கர்மவினைகளும் அடியோடு நீங்கி,நமது தினசரி வாழ்க்கை மிகவும் எளிதாகவும்,மகிழ்ச்சிகரமாகவும்,நிரந்தரமான வேலை அல்லது தொழிலோடும் அமைந்துவிடும் என்பது அனுபவ நிச்சயம் ஆகும்.உங்களின் பிறந்த நட்சத்திரம் எதுவோ,அந்த நட்சத்திரம் ஒரு தமிழ் மாதத்தில் ஒருமுறை அல்லது இருமுறை வரும்;அவ்வாறு வரும்நாளன்று,நீங்கள் அண்ணாமலைக்கு வந்துவிடவேண்டும்.வரும்போது,மஞ்சள் நிற ஆடை,இரு ருத்ராட்சங்கள்,குறைந்தது ஐந்து கிலோ டயமண்டு கல்கண்டு இவைகளைக் கொண்டு வர வேண்டும்.உங்களின் ஜன்ம நட்சத்திரம் உதயமாகும் நேரத்தில் நீங்கள் சாப்பிடாமல்,(உபவாசம் இருத்தல்)மஞ்சள் நிற ஆடையை அணிந்துகொண்டு(ஆண்கள் எனில்,மஞ்சள் நிற வேட்டி மட்டும்),உடலெங்கும் விபூதி பூசிக்கொண்டு,இரட்டைப்பிள்ளையார் கோவிலில் ஒரு தேங்காயை விடலை விட வேண்டும்.(சூறைத் தேங்காய்)அங்கே இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் புறப்பட வேண்டும்.அங்கிருந்து கிழக்குக் கோபுர வாசலுக்கு வந்து,கோபுரவாசலில் இருந்தவாறு அண்ணாமலையாரை வழிபட்டு விட்டு,தேரடி முனீஸ்வரர் கோவிலுக்குச் சென்று அவரிடம் வழித்துணைக்கு வரும்படி மனதார வேண்டிக்கொண்டு ,கிரிவலம் புறப்பட வேண்டும்.கிரிவலப்பாதை முழுவதும் யாரிடமும் பேசக் கூடாது;பேசாமல் மனதுக்குள் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே கிரிவலம் செல்ல வேண்டும்.அவ்வாறு செல்லும்போது அக்னி லிங்கத்தைக் கடந்ததும்,கொண்டு வந்திருக்கும் டையமண்டு கல்கண்டை கிரிவலப்பாதையில் பாதையின் ஓரத்தில் அடர்த்தியாக இருக்கும் காட்டுப்பகுதியினுள் தூவ வேண்டும்.


கிரிவலத்தை பூதநாராயணர்கோவிலில் நிறைவு செய்ய வேண்டும்.நிறைவு செய்தபின்னர்,கோவிலுக்குள் சென்று அண்ணாமலையாரை தரிசிக்க வேண்டும்.அதன்பிறகு, வீட்டில்/ஹோட்டலில் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யவேண்டும்.
இதில் குறிப்பிடத்தக்க அம்சம் எதுவெனில்,உங்களால் கிரிவலப்பாதை முழுவதும் சாப்பிடாமல் பயணிக்கமுடியவில்லை எனில்,கிரிவலப்பாதையில் இளநீர் அல்லது பால் அருந்தலாம்(எவ்வளவு வேண்டுமானாலும்!)


#கிரிவலம் செல்லும்போது ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே இருப்பதால்,உடல் சூடாகிக்கொண்டே வரும்.இளநீர் அருந்துவதால் அதுவரை நாம் ஜபித்துவந்த ஓம்சிவசிவஓம் மந்திர அலைகள் நமது உடலுக்குள் முழுமையாக பதிவாகிவிடும்.இதை நமக்கு ஆராய்ந்து சொன்னவர் ருத்ராட்ச தெரபிஸ்ட்,சிவகடாட்சம் மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள்.

இரண்டாம் மாதத்தில் இதே போல உண்ணாவிரதமிருந்து 27 உணவுப் பொட்டலங்களைச் சுமந்தவாறு கிரிவலம் செல்ல வேண்டும்.ஓவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் தலா 3 துறவிகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.அவ்வாறு 27 உணவுப்பொட்டலங்களைச் சுமக்க  இயலாதவர்கள் உடன் வருபவருடன் 27 உணவுப்பொட்டலங்களை ஒரு ஆட்டோவில் ஏற்றிவிட்டு,முன்பே ஒவ்வொரு லிங்கத்தின் வாசலிலும் காத்திருக்கச் செய்து நீங்களே அன்னதானம் செய்ய வேண்டும்.


இவ்வாறு 12 மாதங்கள் செய்துவந்தால்,6 வது அல்லது 8 வது கிரிவல விரதம் பலனளிக்கத் துவங்கும்.நமது பிரச்னைகள் எப்பேர்பட்டதாக இருந்தாலும் அந்த பிரச்னைகள் தீர்ந்துவிடும்.நமது ஏக்கங்கள் எதுவாக இருந்தாலும் அது நிறைவேறும்.நமது வாழ்க்கைப் பயணமே அடியோடு மாறிவிடும்.


ஓம்சிவசிவஓம்

ஜீவசமாதியில் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்

Posted On April 06,2012,By Muthukumar

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம் பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம் சங்கரன்கோவில்,புளியங்குடி,கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே அமைந்திருக்கிறது.இந்த கிராமம் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில் அமைந்திருக்கிறது.தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7 மணி,காலை 11 மணி,மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது.சுமார் 2.45 மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது.மதுரையிலிருந்து புறப்படும் அந்த பயணிகள் ரயில் திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சங்கரன்கோவில்,பாம்புக்கோவில்சந்தை என்று பயணிக்கிறது.பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.


தமிழ்நாட்டில் அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது.பாம்புக்கோவில் சந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக(செங்கோட்டை பாதையில்) சுமார் 1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும்,ஒரு சிறிய சாலை குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும்.அதுதான் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.


இங்கே குறைந்தது ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;அவ்வாறு ஜபிக்கத் தேவையான மஞ்சள் துண்டு.இரு ருத்ராட்சங்களுடன் வருவோம்;இந்த ஆசிரமத்தில் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தனித்தனியே தங்கும் இடங்களும்,அன்னதான வசதியும் இருக்கின்றன.
யார் ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை தியானிக்கிறார்களோ,அவர்களுக்கு மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக கிடைக்கும்.இங்கு தங்குவோர் செய்ய வேண்டியது:


இரவு ஒரு மணி நேரமும்,அதிகாலை ஒரு  மணி நேரமும் மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதியில் மஞ்சள்துண்டு விரித்து ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க வேண்டியது மட்டுமே!!ஓம்சிவசிவஓம்

பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு அழைத்துச் செல்லும் திருக்குற்றாலநாதர் கோவிலில் சித்திரை 1 வழிபாடு

Posted On April 06,2012,By Muthukumarமுதன்மை சித்தர்கள் எனப்படும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி வருமிடமும்,ஏராளமான அரிய,அபூர்வமான மூலிகைகளும் நிரம்பியிருக்கும் இடம் திருக்குற்றாலம் ஆகும்.மனித குல வரலாறு வெறும் 20,00,000 ஆண்டுகளைக் கொண்டுள்ளது;அதற்கும் முன்பிருந்தே மனித குல நலனுக்காக இறைவனின் ஆணைப்படி சித்தர்களால் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு மூலிகை மருந்துகளும்,பைரவரின் திருவிளையாடல்களும் நிகழ்ந்த இடம் திருக்குற்றாலம்.தன்னையும்,தனது பிரகாசமான ஆத்ம வாழ்க்கையையும்,சித்தராகும் ஆசையுள்ளவரையும் தன்பால் ஈர்த்துக்கொள்ளும் இடம் திருக்குற்றாலம்.தென்னாடுடைய சிவனே போற்றி என்ற வாக்கியத்தின் ஜீவ சிவ ரகசியத்தை தன்னுள் பொதித்து வைத்திருக்குமிடம் திருக்குற்றாலம்.இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப்  பின்னரே இந்த ரகசியத்தினை மனித குலம் உணரும்.அப்போது பூமியைத் தவிர,பிற கோள்களில் மனித குலம் குடியேறி பிரபஞ்சத்தைக் கைப்பற்றுமளவுக்கு முன்னேறியிருக்கும்.அப்போதும் மனித குலத்தின் பிரபஞ்ச வெற்றிக்கு திருக்குற்றால நாதரின் ஆசி மனித குலத்துக்குத் தேவைப்படும்.நம்பமுடியவில்லையா? நாம் மனித உருவில் இருந்து நாம் செய்யும் செயல்களும் தான் நம்பமுடியாமலிருக்கிறது.

உங்களின் வாழ்க்கையானது சோதனை,சிரமங்கள்,கஷ்டங்கள்,விரையங்கள்,அவமானங்கள்,தோல்விகள்,விரக்தி என்றே பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறதா?


ஒரே ஒரு வழிபாட்டின் மூலமாக நீங்கள் தங்களின் அனைத்துக் கர்மவினைகளையும் கரைத்து,நிம்மதியும் செல்வ வளமும்,ஆத்மபலமும் கிடைக்க விருப்பமா?


பொருள் வளத்துடன் அருள்வளமும் ஒரே ஆண்டில் கிடைக்க வேண்டுமா?


நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:


கர வருடம் நிறைவடைந்து,நந்தன வருடம் 13.4.2012 வெள்ளிக்கிழமை ஆரம்பமாக இருக்கிறது.இந்த தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளான சித்திரை 1 ஆம் நாளான 13.4.2012 வெள்ளிக்கிழமை காலையில் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் திருக்குற்றாலத்துக்கு வந்து,இங்கிருக்கும் ஏதாவது ஒரு அருவியில் (ஐந்தருவி,செண்பகா தேவி அருவி,மெயின் அருவி) குளிக்க வேண்டும்;குளித்தபின்னர்,அணிந்திருக்கும் ஆடையில் ஏதாவது ஒன்றை அந்த அருவியில் விட்டுவிடவேண்டும்;

பிறகு,திருக்குற்றால நாதரின் கோவிலின் உள்பிரகாரத்தில் மனப்பூர்வமாக 16 சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.சுற்றியப்பின்னர், திருக்குற்றாலநாதர் கோவிலில் இருக்கும் அனைத்து இறை சக்திகளிடமும் புத்தாண்டு ஆசியைப் பெற வேண்டும்.சிவ வழிபாட்டுக்குரிய பொருட்களை  கொண்டு வந்து ஒவ்வொரு சன்னதியில் வழிபட வேண்டும்;பிறகு,கோவிலின் வாசலில் குறைந்தது 9 பேர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.பிறகு,காலை உணவு அருந்த வேண்டும்.
இவ்வாறு செய்துவிட்டு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும்,வேறு யாருடைய வீட்டுக்கும் செல்லாமலும் நேராக நாம் நமது வீட்டுக்குச் சென்றுவிட்டால்,14.4.2013(ஞாயிறு)க்குள்ளாக நமது வாழ்க்கை ஒரு உச்சமான நிலைக்கு வந்துவிடும்!!!


மறக்காமல் 14.4.2013 ஞாயிறு அன்று நந்தன வருடத்துக்கு அடுத்த வருடமான விஜய வருட ஆரம்ப நாளன்றும் திருக்குற்றாலத்துக்கு வந்து,திருக்குற்றால நாதருக்கு நன்றிகளைத்  தெரிவிக்க வேண்டும்.இதுவும் இந்த தெய்வீகக் கடமைகளில் முக்கியமானது ஆகும்.((இது போல ஓவ்வொரு ஆண்டும் வருகை தரலாம்.)) இந்த தெய்வீக ரகசியத்தை நமக்காக அருளியவர் சிவகடாட்சம் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் மனசாட்சியும் & ஆயுட்கால சீடரும்,நமது ஆன்மீக குருவுமாகிய திரு.சிவமாரியப்பன் ஆவார்.அவருக்கு நாம் மானசீகமாக நன்றியை தெரிவித்து விட்டு,இந்த தமிழ்ப்புத்தாண்டுக்கு குற்றாலத்துக்குப் புறப்படுவோம்.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

ஞானத்தின் பரிபக்குவ நிலை

Posted On April 05,2012,By Muthukumar
இந்து தெய்வங்கள் மனித வாழ்க்கைக்குச் சம்பந்தமில்லாத உன்னத நிலையில் வைத்து எண்ணப்படுவதில்லை. `தெய்வத்துக்கு இணையாக எதையும் சொல்லக் கூடாது' என்று கட்டளை போடுவதில்லை.
இந்து தெய்வம் மனித வடிவில் இயங்கும்.
மனித வாழ்க்கையின் பல கூறுகளிலும் தன்னைச் சம்பந்தப்படுத்திக் கொள்ளும்.
அது காதலிக்கும்; பரவசப்படும்; அது போர் புரியும்; யுத்த தர்மத்தைப் போதிக்கும்.
அது தூது செல்லும்; அரசு தர்மத்தைப் புகட்டும்.
காதலனையும் காதலியையும் சேர்த்து வைக்கின்ற வேலைக்குக் கூட அது துணை புரியும்.
ஆகவேதான் இந்து இதிகாசங்களோ, புராணங்களோ வறட்டுத்தனமாக இல்லை.
மற்ற மதத்தவர்கள் படித்தால் குட்டு வெளிப்பட்டு விடுமே என்று பயப்படுவதாக இல்லை.
நமது இதிகாசங்களில் லெளகீகத்தின் கம்பீரம் இருக்கிறது.
சுகமான காதலியின் கனவு இருக்கிறது.
அவற்றில் ஒன்று ராதா - கிருஷ்ண பாவம்.
இந்த பாவத்தை ஒரு காம நூல் போலவே வடித்தார் ஜயதேவர்.
அது ஞானத்தின் முதிர்ச்சி பெற்ற நிலையாயினும் காம ரசமாகவே தோற்றமளிக்கிறது.
நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் அவர் `அஷ்டபதி கீதகோவிந்தம்' என்ற தலைப்பில் இதனை எழுதினார்.
ஒவ்வொன்றும் எட்டு சரணங்கள் கொண்ட இருபத்து நான்கு கீதங்களாக அவர் இதனை வடித்தார்.
இதில் ஒரு வேடிக்கை. இதைப் படித்த வெள்ளைக்கார அதிகாரி ஒருவர், `இது ஒரு ஆபாச நூல்' என்று தடை செய்ய உத்தரவிட்டார்.
அதோடு ஜயதேவரைக் கைது செய்யும்படியும், ஆணை பிறந்தது.
அதன் பிறகுதான் ஜயதேவர் வாழ்ந்தது பலநூறு ஆண்டுகளுக்கு முன்பு என்பது விளக்கப்பட்டது.
ராதை, கிருஷ்ணனுக்காக ஏங்குகிறாள்; கிருஷ்ணன், ராதைக்காக ஏங்குகிறான்; தோழி ஒருத்தி தூது செல்கிறாள்; இடையில் அனைத்தும் வருணனைகள்; அவர்கள் வாழ்ந்த கதைகள்.
ஒவ்வொன்றும் சுவையான வருணனை.
சற்று பச்சையாக இருந்தாலும் தேவ பாவத்தோடு அவற்றை எடுத்துக் கொண்டு பார்க்கும் போது, லெளகீக வாழ்க்கையிலும் மனிதனுக்கு இச்சை வருகிறது.
நல்ல காதலன் காதலியின் இலக்கிய பாவம், கீத கோவிந்தம் முழுவதிலும் இழையோடுகிறது.
அதனால், அதன் உபந்யாசகர்கள் இதை மேடையில் எடுத்துச் சொல்வதில்லை.
பக்தி நூல் வரிசையில் பலர் இதைச் சேர்ப்பதும் இல்லை.
ஆனால், நான் இதனைச் சேர்க்க விரும்புகிறேன்.
அண்மையில் கீத கோவிந்தத்தில் இருந்து எட்டு கீதங்களை கவிதைகளாக எனது `கண்ணதாசன்' இதழில் எழுதியுள்ளேன்.
மற்றவற்றையும் கவிதையாக எழுதி முடிக்க இருக்கிறேன்.
தோழி கண்ணனிடம் சொல்கிறாள்:
`கேசவா! ராதா எவ்வளவு மெலிந்து விட்டாள் தெரியுமா? அவள் கழுத்தில் தங்க வடம் போட்டிருப்பாளே, அதைத் தாங்கக்கூடச் சக்தி இல்லாமற் போய்விட்டது அவளுக்கு; மயங்கி மயங்கி விழுகிறாள்.
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
குளிர்ச்சியான சந்தனத்தை அவள் மார்பில் பூசினேன். `ஐயோ, கொதிக்கிறதே!' என்றாள்.
`நான் படும் துன்பத்தில் ஏனடி நஞ்சிட்டுக் கொல்கிறாய்?' என்றாள்.
அவள் நெஞ்சில் நெருப்பு மூண்டிருக்கின்றது. அதனால் வருகின்ற மூச்செல்லாம் அனல் மூச்சாக வருகின்றது.
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
கண்ணா! என்ன வஞ்சனை உனக்கு!
அவள் இவ்வளவு மெலியும்படி வஞ்சித்து விட்டாயே?
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
கண்ணெனும் வலைவீசி உன்னைக் கட்டியிழுக்க நினைத்தாள்; மணிவண்ணன், தப்பிவிட்டான் என்றதும் மாயக்கண்ணீர் வடித்தாள்.
புண்ணாகி விட்டது அவள் நெஞ்சு; புனலாடுகின்றன அவள் கண்கள்; அனல் பட்ட புழுவானாள் ராதை!
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
மாந்தளிர் மஞ்சத்தில் படுக்க வைத்தேன். `ஐயோ! மஞ்சத்தில் ஏனடி நெருப்பை இட்டாய்' என்றாள்!
கொஞ்சமா அவள் துயரம்...?
கேசவா! நீ மறைந்து நிற்கிறாய்;
அவள் மயங்கி நிற்கிறாள்!
குன்றத்தைக் குடையாகப் பிடித்தவனே! ஆயர் குலம் காத்தவனே!
கோபியரை முத்தமிடும் கோபாலா!
கம்சக் கூட்டத்தின் வம்சத்தையே கருவறுத்த கண்ணா!
அடியவர்க்குக் கருணை மழை பொழியும் கார்முகிலே!
ராதையைக் காத்தருள மாட்டாயா...?'
-தோழியின் உரை கேட்டான் கண்ணன்.
அவனுக்கும் ஏக்கம் பிறந்தது.
தன்னுடைய தாபத்தையும் அவனிடம் கூறுகிறான்.
ராதையை உடனே அழைத்து வரச்சொல்கிறான்.
தோழி, ராதையிடம் சொல்கிறாள்:
`ராதா! கண்டேன் கண்ணனை!
தென்றல் தாலாட்டுமிடத்தில் அவன் இருக்கிறான். அங்கே செம்பூக்கள் மணம் பரப்புகின்றன.
பிரிந்திருக்கும் காதலர்களை வாட்டி எடுப்பானே மன்மதன், அவன் கண்ணனையும் வாட்டுகிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
மன்மதன் கணைகள் வீச, மதியும் வந்து உயிர் குடிக்க, அந்த வெண்ணிலா ஒளியில் தன்னை மறந்து தன்னைந் தனியே வாடுகிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
நள்ளிரவு.
தேனீக்கள் இசை பாடுகின்றன. அந்தப் பாடல்களில் மலர்கள் உறங்குகின்றன; ஆனால் மாயவன் உறங்கவில்லை.
அங்குமிங்கும் அலைகிறான்; ஏங்குகின்றான்!
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
அவன் தன் இல்லத்தைத் துறந்தான். காட்டுப் பூக்களால் மெத்தை விரித்துக் காட்டிலே காத்திருக்கிறான்.
எப்பொழுதும் அவன் வாயிலிருந்து, `ராதா! ராதா....!' என்ற ஒலியே புறப்படுகிறது.
புல் மஞ்சத்தில், பூப்படுக்கையில் உண்ணாமல், உறங்காமல், முல்லைச் சிரிப்புதிர்த்து மோகத்தால் வாடுகிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
இரவு நேரத்தில் மரத்தில் அமர்ந்திருக்கும் குயில்கள் சிறகடித்தால், `என் ராதை தான் வருகிறாளோ...?' என்று அங்குமிங்கும் ஓடுகிறான்; ஆசையுடன் தேடுகிறான்.
நங்கை உன்னைக் காணாவிட்டாலும் அவன் நம்பிக்கை தளரவில்லை.
மங்கலான இந்த இரவு, உன்னை அவன் சந்திக்கும் நேரமடி!
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
வானில் இடி இடித்தால், `இது ராதையின் கால் சிலம்பு ஒலி,' என்கிறான்.
கானகத்தில் அவன் உன்னைக் கட்டி அணைத்ததை எண்ணி எண்ணி உன் அழகையே புகழ்ந்து கொண்டிருக்கிறான்.
மாதைப் பிரிந்து தடுமாறி
மயங்குகிறானே வனமாலி!
பட்டாடை புனைந்து பரிமளிக்கும் கூந்தலுடன் இட்டமுடன் விளையாட ஏற்ற இடம் நாடி, கட்டழகன் செல்கிறான்; காதலி நீ பின் தொடர்க, முட்டியெழும் ஆசையை மோகனமாய்த் தீர்ப்பதற்கு!
ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
`ராதை! ராதை!' என வேய்ங்குழல் ஊதுகிறான்!
பாவை மென்னுடல் தழுவும் சற்றே பரிமளிக்கும் பூவை நின்னாசை நினைப்பால் கூறுகிறான்.
ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
பறவை சிறகடிக்க, பசுங்கொடிகள் அசைந்தாட, `பாவை வருவாள்' என்று எதிர்பார்த்து ஏக்கமுற,
புத்தம் புதுமலராய்ப் பூவமளி அமைத்து, அவன் நீ வருவாய் என வழிமேல் விழி வைத்துக் காத்திருப்பான்!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
ஒலிக்கும் நூபுரங்கள், மாபெரும் தொல்லையடி!
மறைவாய் கலவி செய்ய மாபெரும் இடையூறு!
கருப்பில் ஆடையுடன் கங்குல் கவிகையிலே, இருள்சேர் பூப்பந்தல் இனிதாய்ச் சேர்ந்திருக்க, தருணம் இதை உணர்ந்து தடுமாற்றம் அகற்றிவிடு!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
முரஹரி மார்பிடை முயங்கும் மாலையடி, கார்மேகக் கூட்டத்தில் வெண்பறவைக் காட்சியடி!
மின்னல் இடையாளே!
ஊடல் அகற்றி இனி இன்னல் தீர்க்க வரும் இனியவனைக் கூடிடுக! தருணம் இது, தோழி, தடுமாற்றம் அகற்றிவிடு!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
பூமகள் விரித்த மஞ்சம்; பொன்னுடலைச் சாய்த்தவுடன், மேகலையை அவிழ்ந்து விடு! மோகத்தோடு உறவாடு!
பங்கயக் கண் திறந்தே பார்த்துப் பருகிடுவான்.
அங்காந்து காத்திருப்பான். ஆரத் தழுவியவன் உடலைப் புறம் தழுவி, உண்ணும் சுவை கூட்டி கேட்டது கேட்டபடி தடைகள் சொல்லாமல், ஏதும் மறைக்காது, எதிர்த்தொன்றும் சொல்லாது, தூமலர்த்தேன் உறிஞ்சும் தும்பியைப் போலவனும் காமவிருத்தாடக்
களிப்போடுறவாடு!ஆற்றங்கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!
நாளை வரை அவனும் காத்திருக்க மாட்டான்; பாளைச்
சிரிப்புதிர்க்கும் பாவை நீ புறப்படு!
காளை அவன் மனத்தைக் கண்ணாடிப் பெட்டகம் போல், நோவாது கொள்ள மதுஹரியும் மனங்களிக்க!
மருள்கொள் புலவியிலே மதி மயக்கம் தந்திடவே தருணம் இது தோழி! தயங்காமல் புறப்படுக!
ஆற்றங் கரையருகே ஆனந்தத் தென்றலடி!
பற்றியொரு கரத்தால் பாசமிகு கோபியரின்
கொங்கை தழுவி வனமாலி விளையாட!'
கண்ணனும் ராதையும் கலந்து விளையாடியதை, காமரஸமாகச் சித்திரிக்கும் ஜயதேவர், அதில் ஒரு ஞானரஸத்தையும் ஊட்டுகிறார்.
`காமக் கலவி' என்பது ஒருவகை லயம்.
ஒன்றோடு ஒன்று கலந்து ஒன்றாகவே காட்சியளிப்பது அது.
அது அத்வைத நிலை, சமாதி நிலை.
பேசுவது சரீரங்களைப் பற்றியேயாயினும், உள்ளுணர்வு ஆன்மாவைப் பற்றியது.
இரண்டற்ற நிலையில் ஜீவராசிகள் முழுவதுமே ஒவ்வொரு கட்டத்தில் இயங்குகின்றன.
அந்த லயத்தில் மானிடஜாதி ஈடுபட வேண்டுமென்று தான் இல்லறத்தை ஒரு புனித `அற'மாக ஆக்கினார்கள்.
ஆடு மாடுகளுக்குக்கூட திடீர் திடீரென்று அந்த உணர்வு பெருக்கெடுக்கிறது.
ராதா கிருஷ்ண பாவம், லெளகீகத்தின் சாரம்.
`பகவானைப் பற்றி இப்படிப்பட்ட கதைகளா?' என்று கேட்கக் கூடாது.
பகவான், லோகாயத சுகத்தின் குருவாக ஆக்கப்படுகிறான்.
காமத்துக்கெனக் கூறப்படும் சாஸ்திரம், பகவான் வடிவத்தில் காட்டப்படுகிறது.
வாழ்க்கையின் உச்சக்கட்ட உணர்ச்சியாக, அது எழுந்து நிற்கிறது.
செயலின் மூலம் செயலற்ற நிலையே காமம்.
அந்த இயக்கத்தில் மனம் ஒன்று பட்டபின் வேறு சிந்தனைகள் இயங்காமல் நின்று விடுகின்றன.
அவனையே அவளும், அவளையே அவனும் நினைக்கிறார்கள்.
பக்தி தத்துவத்திலும் இதுதானே நிலை!
படுக்கை அறை `பள்ளியறை' என்று அழைக்கப்படுகிறது.
ஆண்டவன் சயனிப்பதும், `பள்ளி' என்று கூறப்படுகிறது.
உடல் உறவில் அடைகின்ற அமைதி, பக்தியிலும் கிடைக்கிறது.
பக்தியில் கிடைக்கின்ற ஆனந்தநிலை உடல் உறவிலும் கிடைக்கிறது.
சிருஷ்டியில், `ஆண்-பெண்' என்று இரண்டு படைக்கப்பட்டு, இரண்டுக்கும் உணர்வுகள் உண்டாவது ஏன்?
சிருஷ்டிகர்த்தா, சிற்றின்பத்திற்கு விரோதியாக இருந்திருந்தால், அவன் இப்படிப்பட்ட இரண்டு வடிவங்களை ஏன் படைக்க வேண்டும்?
`சிற்றின்பம்' என்ற வார்த்தையிலும், `இன்பம்' இருக்கிறது; பேரின்பத்திலும் இருக்கிறது.
கோபுரங்களில் காமரஸப் பதுமைகளை வைப்பதும் அதற்காகவே.
நேபாளக் கோயில்களில் ஒரு பெண் படுத்திருப்பது போன்ற சிலைகள் உண்டு. அதன் பெண் குறியில் தான் குங்குமம் கொட்டி, வைக்கப்படுகிறது, என்று முன்பே சொல்லியிருக்கிறேன்.
ஏன், சிவலிங்க வடிவமே அதுதானே!
காரணம் உலக இயக்கத்துக்கு இது தேவை.
திருமணங்களின் மூலம் குடும்பங்கள் உருவாகிப் பண்பாடுகள் காக்கப்படுகின்றன.
மாதா மாதம் இறைவன் பூமிக்கு வந்து சில உயிர்களைப் படைத்துக் கொண்டிருக்க முடியாது. அதற்காக அவன் உருவாக்கிய கருவிகளே ஆணும் பெண்ணும்.
அவை சிருஷ்டிக்கான கருவி என்பதால் யந்திரம் மாதிரி இயங்க முடியாது.

அந்த உறவு சந்தோஷமில்லாமல், பானை செய்வது போலவும், பாத்திரம் செய்வது போலவும், அதுவும் ஒரு தொழிலாகி விட்டால், அந்த தொழிலாளர்கள் ஓய்வெடுத்துக் கொள்ள விரும்புவார்களே தவிர, பணி செய்ய மாட்டார்கள்.
அதனால் தான் சிருஷ்டி தத்துவத்தில் ஒரு சுகபோக லயம் கலக்கப்பட்டது.
அதுவும் வெறும் சுகமாக இருந்தால் ஆடு மாடுகளைப் போல, அந்த நேரத்து உணர்ச்சியாகி விடும்.
ஆகவே, அது கலையாக விவரிக்கப்பட்டது.
பலவகையாக அது வடிவமெடுத்தது.
ஒவ்வொரு சிறு காரியமும், பிரமாதப்படுத்தப்பட்டன.
வெறும் பார்வையே கூட காவியமாக்கப்பட்டது.
முத்தம் இடுவது கூட வகை வகையாக விவரிக்கப்பட்டது.
வீடு விட்டுக் காடு சென்ற முனிவர்களே கூட அதைப்பற்றி விவரிக்கத் தொடங்கினார்கள்.
அங்கங்களின் ஒவ்வொரு மயிர்க்காலும் கூட காவியங்களுக்கான கருவாக அமைந்தது.
வருணனைகளைப் படிக்கும் போதே, `வாழ்ந்து பார்க்க வேண்டும்' என்று ஆசை கிளர்ந்தெழுமாறு எல்லா பாஷைகளிலும் இந்தத் சுவையே மிகைபடத் தொடங்கிற்று.
ஆகவே, நோக்கம் சிருஷ்டி; அதற்கே இரண்டு கருவிகள்; அந்த இரண்டு கருவிகளைத் தூண்டிவிடும், வருணனைகள்.
மூலநோக்கம் சிருஷ்டி என்பதனை மனத்திலே கொண்டால், சிற்றின்பம் விரஸமாகத் தெரியாது.
காமம், உடலுறவு புனிதமாகி விடும்.
அந்தப் புனிதமான உடலுறவை ஜயதேவர் வருணிக்கிறார்.
`கட்டி உடல் தழுவிக் காதல் புரிகையிலே மட்டில்லா இன்ப வெள்ளம் பொங்கிப் பெருக்கெடுக்க, கண்ணை இமைமூடில் காதல் சுகம் பெருகும்' என்று கண் இமை திறந்து அங்கே கலவிச் சுகம் கண்டார்.
ஒருவர் இதழ் ஒருவர் கடித்து உறிஞ்சித் தேன்மாந்தும் பருகுவாய்க் கள்ளின் இணை கூறச் சுவையுண்டோ?
கலவிப் போர் இன்னும் வெற்றி தோல்வி என்று பகுத்துரைக்கும் வண்ணம் நடந்து முடியவில்லை.
இதுதான் துவக்கம்!
இன்பத்தின் வருணனைகள் இதுவென்று உரைப்பதற்கு என்னால் இயலவில்லை.
முடிவின் நிலை என்ன?
யார் உரைக்க வல்லாரோ?
கைகள் சிறைபிடிக்க, கடினமுலை மார்தாக்க, கை நகங்கள் உடல் கீற, மையச் சிவந்த வாய் பற்கள் கடித்து உதற, கார் குழலைக் கைப்பிடித்துக் கலைத்து இழுத்து, உயிர்த் துடிப்போடு கனிவாயில் வாய்வைத்துக் கள்ளுறுஞ்சும் வகையுரைக்கப் போமோ!
போதை தலைக்கேற புதுக்கனிகள் சுவைக்கின்றார். காதல் விளையாட்டுக்கென்றே இலக்கணங்கள் ஓதி உணராது உடல் புணர மாட்டாதோ?
கலவி மயக்கத்தின் அடையாளம், அறிவார்கள், உலவும் உள்ளத்து உணர்ச்சி பொங்கி, போர் ஆரம்பித்தவுடன் ஆனந்தம் பொங்குதடி!
தேரா விளையாட்டு தெவிட்டா இன்பச்சுவை; என்னென்ன ஆடலடி! எப்படித்தான் கூடுகிறார்?
கன்னல் பிழிந்தாற்போல் கலவி பிழிந்த சுகம், கடலின் அடுக்கடுக்காய் பொங்கி வரும் அலையாம்!
உடலை ஒருவனுக்கு ஒப்படைத்த மங்கையவள், தலைவன் தாக்கியதும் தான் எதிர்த்து தாக்கியதும், முலைகள் குதித்து வர மெய் தழுவிக் குதித்ததுவும், அலையா மனம் அடக்கி அந்தரத்தில் நின்றதும், வாக்கு மனம் செயல் இம்மூன்றும் மறைந்ததடி!
தாபச் சுரம் பெருக, தணிந்தபின் உடல் சோர, வாடும் மலர்க்கொடிபோல், வாடி உடல் சாய, பேசும் பேச்சிறைக்க, பேசாது மூச்சிறைய, வாசமலர் விழியாள் வைத்தில் கண்ட சுகம் நாசம் அடைவதுண்டோ, நலிவுடலும் கொள்வதுண்டோ?
பேசும் மாந்தர்களே!
புவியில் கூடலுக்கு நேரம் உண்டோ?
`பாற்கடலின் கரை அருகில் பாவை உன் அழகுடலைப் பார்த்த பரமசிவன், `மனம் கொண்ட காதல் இனி நடவாது' என்று உணர்ந்து, நலிவுற்ற மனத்தாலே சிவகாமி சிந்தை கவர் சிவனார் அந்நாளில் ஆலகால விஷம் அருந்தியதை நானறிவேன்!'
-பற்பலவாம் பேச்சுரைத்துப் பன்மாயக் கள்வனவன் பொற்கொடியின் சோர்ந்த உடல் பூமியில் சாய்ந்துறக்கம் மேற்கொண்ட வேளையிலே,
மெல்ல அவள் மேலாடை அப்புறமாய் ஒதுக்கி, ஆர்த்தெழுந்த கொங்கையினை கொப்பூழ் வனப்போடு குனிந்தபடி பார்த்திருந்தான்!
தீராது விளையாட்டுப்பிள்ளை, என் கண்ணன்
நேராது தீங்கு என்றும் நம்மை தினம் காப்பான்!
காலமெல்லாம் கண்விழித்துக் கண்கள் சிவப்பாக,
பற்பதித்து, செவ்விதழும் வெளுத்துப் பொலிவிழக்க,
நற்கூந்தல் சூடுமலர், சருகாய் வாடிவிட,
ஆடை சீர்குலைய, அங்கம் வெளித்தெரிய
இரவைக் கலைத்தொரு கதிரோன் வெளிப் போந்தான்.
நம்பி முகம் பார்த்து நாணும் கண்ணிரண்டும்
வம்பு செய் காதல் உணர்வை மீட்டி விட,
நம்பியுடன் நங்கை நாடிப் புணர்ந்ததனை
நாவால் எடுத்துரைக்க நல்ல சொல் கிடைக்கவில்லை!
முடித்த குழல் அவிழ்ந்து மொய்த்துத் தரை புரள,
வடித்து உடல் நீரால் கணைக் கதுப்பொளிர,
தடித்த செவ்வாயும் தனிக்காதல் மணம் பரப்ப,
கொங்கை மேல் குதித்து முத்து வடம் குலுங்க,
மங்கையவள் மேகலையும் மண்ணில் சிதறி விழ
அருகிருப்பார் பாராது அல்குல் அணிமார்பாம்
மருளும் பேதை கரம் மறைவாய்க் காத்தபடி
உருகித் தடுமாறும் ராதையைக் கண்டவுடன்
`வருக' என கண்ணன் விடு கோரிக்கை கண்டவுடன்,
`தையல் காணிக்கை'யென்று,
உடல் உண்ட சுகம் மீண்டும் உண்ண வருவதற்கு,
தண்மாலை துறந்தவளும் தாவி அவன் மேல் விழுந்து
கொண்ட சுவைக்கு ஒருகணக்கும் இல்லையடி!
பனியால் வளர்ந்து வரும் பச்சைப் புல் போல
கனிவாய் முறுவலிக்கும் கன்னி உடல் ஒசிய,
காதல் குரல் எடுக்க,
சொற்கள் பொருளிழக்க,
நாதன் தரும் இன்பத் தடுமாற்றம் நிலைகுலைக்க,
இதழ்கள் ஒவ்வொன்றில் எத்தனையோ பற்குறிகள்!
கோதை முக அழகை உண்டு ரசிக்கையிலும்,
இதமாய் உடல் தழுவி இருக்கும் சேர்க்கையிலும்
எத்தனையோ இன்பமடி!
எடுத்துரைக்க வார்த்தை இல்லை!
-மேலே வடமொழி மூலத்தில் இருந்து என் நண்பர் `ஆஷா' மொழி பெயர்த்ததை, அப்படியே கொடுத்திருக்கிறேன்.
இந்து மார்க்கத்தின் லெளகீக சுகத்துக்கு உச்சகட்ட உதாரணம், ஜயதேவர் அஷ்டபதி.
என்னைப் பொறுத்தவரை காமத்தைப் பாடி மனிதனை ஞானத்துக்குப் பக்குவப்படுத்துவதைப் பெரிதும் விரும்புகிறேன்.
அண்மைக் காலங்களில் அமெரிக்க நாட்டில் இந்து மதம் பரவி வரும் வேகம் நமக்குத் தெரிந்ததே. அங்கே இந்தியாவில் இல்லாத ஒரு புதுவித யோகத்தைக் கற்பித்தார்கள்.
சுமார் இருபது ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக நின்று கொள்வது; அதுவும் இடுப்பளவு தண்ணீரில் ஒரு ஆண், ஒரு பெண்ணென்று வட்டமாக நிற்பது; ஒருவர் தோளில் ஒருவர் கைபோட்டுக் கொள்வது; ஆனால் யாருக்கும் காம இச்சை வரக்கூடாது. இப்படி ஒரு பயிற்சி.
மூன்றாண்டுகளுக்கு முன் `லைப்' பத்திரிகையில் இந்தப் படத்தையே நான் பார்த்தேன்.
காம நிலையில் இருந்து கொண்டே காமத்தை மறப்பதென்பது இதன் பெயர்.
அப்படி ஒரு பக்குவம் எல்லாருக்குமே ஏற்பட்டு விடாது.
ஜயதேவரின் ராதா கிருஷ்ண பாவனை, காம உணர்வினையே தூண்டக்கூடும். ஆனால், அதிலிருந்து ஒரு ஞானயோகத்தை உருவாக்கும் முயற்சியை அறிவாளிகள் ஏன் மேற்கொள்ளக் கூடாது.?
வீணாக ஜயதேவரின் அஷ்டபதி கீத கோவிந்தத்தை ஒதுக்கி விடுவதில் பொருளில்லை.
கண் அந்த நூலைக் காண வேண்டும்; மனம் அதைப் படிக்க வேண்டும்; ஆண்மையுள்ள உடம்பு கூட உணர்ச்சியற்றிருக்க வேண்டும்; அதுதான் ஞானத்தின் பரிபக்குவ நிலை.