Saturday, June 30, 2012

எல்லாம் இறைவன் செயல்

Posted On June 30,2012,By Muthukumar
நான் சமய மேடைகளில் அடிக்கடி ஒரு விஷயத்தைச் சொல்வேன்; நீங்கள் கேட்டிருப்பீர்கள். அது என் ஜாதகத்தைப் பற்றியது.
`ஐம்பது வயதுக்கு மேல் நான் ஒரு சாமியாராகவோ அல்லது, அந்தக் குணங்கள் கொண்டவனாகவோ மாறிவிடுவேன்' என்று குறிப்பிட்டதே அது.
அப்படி ஒருவர் குறிப்பிட்டபோது எனக்கு வயது இருபத்து ஒன்று. இப்போது ஐம்பதைக் கடந்துவிட்டேன். இந்த முப்பது ஆண்டுக் காலமும் அவர் சொன்னது போலவேதான் வாழ்க்கை ஓடியிருக்கிறது. இப்போது மனோபாவம் மட்டுமின்றி, உணவு முறை கூட சாமியார் முறையாகி இருக்கிறது.
எந்தெந்தக் காரியங்களை நான் பிரியத்தோடு செய்வேனோ, அதையெல்லாம் இறைவன் வெறுக்க வைத்திருக்கிறான். எவ்வெவற்றை நான் விரும்ப மாட்டேனோ, அவற்றையெல்லாம் ஏற்றுக் கொள்ளும்படி கட்டளை இட்டிருக்கிறான். உணவில் ஒவ்வொரு பொருளாக வெறுக்க வைக்கிறான். ஆனால், சிந்தனையில் நிதானத்தை ஏற்படுத்தியிருக்கிறான்.
எனக்கு எதிர்காலம் சொன்னவர், என் கைரேகைகளை மட்டும் தான் பார்த்துச் சொன்னார். ரேகை, ஜோசியம், ஜாதகம்-இவை சரியாகப் பார்க்கப்படுமானால், விஞ்ஞானம் உலகத்தைக் கணிப்பது போலவே இவை வாழ்க்கையைக் கணித்து விடும்.
இறைவனுடைய படைப்பில் ஒரு கன்றுக்குட்டிக்கும் கூட ஜாதகம் இருக்கிறது. கன்றுக்குட்டி என்ன, கடவுளுக்கே கூட ஜாதகம் இருக்கிறது. திருப்பதியில் நிற்கும் பெருமாள்தான் அழகர் கோயிலிலும் நிற்கிறார்.
ஆனால், திருப்பதி சமஸ்தானாதிபதி கோடீஸ்வரராகத் திகழ்கிறார்; அழகர் கோயிலில் பெருமாள் அன்றாடம் தடுமாறுகிறார். இத்தனைக்கும் காலத்தால் திருப்பதிக்கு முந்தியது அழகர் மலை என்று கருதப்படுகிறது.
கட்டியவன் ஜாதகம் எப்படியோ யார் கண்டது?
எனக்குத் தெரிந்த நல்ல குடும்பத்திலே பிறந்த அழகான பெண்ணொருத்தி, வசதி இல்லாத ஒரு அரைப்பைத்தியத்தை மணந்து கொண்டு, இட்லி சுட்டு வியாபாரம் செய்கிறாள். பார்த்தால் பொத பொதவென்று இருப்பாள் ஒருத்தி. வீதியில் போகும் விலங்குகள் கூட அவளை ஏறெடுத்துப் பார்க்க மாட்டா; அவளுக்கு லட்சாதிபதி வீடு; அழகான மாப்பிள்ளை கிடைத்து விட்டது.
கோயிலுக்கு ஜாதகம் இருக்கிறது. குருக்களுக்கு ஜாதகம் இருக்கிறது. கோயில் கட்டியவனுக்கும் ஜாதகம் இருக்கிறது. ஸ்ரீராமனுடைய ஜாதகத்திலும், பெண்டாட்டியைப் பறிகொடுக்கும் கட்டம் இருக்கிறது. சீதை பிறக்கும்போதே அவள் கை ரேகையில், அவள் காட்டுக்குப் போவாள் என்றிருக்கிறது.
ஒரு காரியம் நடைபெறுகிறது என்றால், அதற்கு நாம் காரணமில்லை என்றால், ஏதோ நமக்குத் தெரியாத ஒரு சக்தி தானே காரணம்?
தேர்தல் நடத்துவதும் நடத்தாததும் ஒருவர் கையில் இருந்த போது, அவர் தேர்தல் நடத்துவானேன்? தோல்வியுற்று அவதிப்படுவானேன்?
பெரிய பெரிய சாமர்த்தியசாலிகளையெல்லாம் ஜாதகம் பிடரியைப் பிடித்துத் தள்ளுகிறது.
இந்தியாவுக்குச் சுதந்திரம் வந்த அதே நேரத்தில் பாகிஸ்தானும் பிரிந்தது.
பாகிஸ்தான் ஜாதகத்தில் ராணுவ ஆட்சி என்றும், இந்தியாவின் ஜாதகத்தில் கலப்படம், குழப்பம் என்றும் இறைவன் அப்பொழுதே எழுதி வைத்திருக்கிறான்.
நினைக்காத ஒன்று நடக்கும்போது அதுவே ஜாதகப் பலன் என்றாகி விடுகிறது.
இது மாதிரி விஷயங்களில் இந்துக்களின் நம்பிக்கை எவ்வளவு அர்த்த புஷ்டி வாய்ந்தது என்பதைக் காண முடிகிறது.
நட்சத்திரங்களைக் கொண்டு, பிறந்த தேதியைக் கொண்டு பலன் சொல்லும் பழக்கம் நாகரிகத்தில் முன்னேறிய மேல்நாட்டுக்காரருக்கும் உண்டு.
அங்கேயும் நீங்கள் பார்த்தால் மேஷம் ரிஷபத்திற்கு நாம் என்ன படம் போடுகிறோமோ அதே படங்களைத் தான் ஆங்கிலேயர்களும் போடுகிறார்கள்; ஜெர்மானியர்களும் போடுகிறார்கள்.
காரணம், இந்த ஜோதிட சாஸ்திரத்துக்கு மூலம் வடமொழி.
விண்ணியல் அறிவும், விஞ்ஞான அறிவும் இந்துக்களிடமிருந்து எழுந்ததே.
சந்திர மண்டலம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்பதையும் இந்துமதம் கூறிற்று; சந்திர கிரணம் பிடிப்பதையும் அதுதான் கூறிற்று.
இன்று செயற்கைக்கோள் பறக்கவிடப்படுகிறது. அதற்கு `ஆரியப்பட்டா' என்று பெயர் வைக்கப்படுகிறது.
இந்த ஆரியப்பட்டா என்பவர் இந்து ஞானி, விஞ்ஞானி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் வாழ்ந்தவர். முதன் முதலில் வான மண்டலத்தைப் பற்றி ஆராய்ச்சி நடத்தியவர்.
வம்சங்களையே மாற்றி அமைத்த சாணக்கியர், பல காலங்களுக்குப் பொருந்தக் கூடிய ராஜ தந்திரத்தை எழுதினார்.
சில கோயில்களில் பிராகாரச் சுவர்களில் இன்ன காலத்தில் இன்ன காரியம் நடக்கும் என்பதே எழுதப்பட்டிருக்கிறது.
உலக வாழ்க்கையில் இந்துக்கள் தொடாத பகுதிகளே இல்லை.
எத்தனை பகுத்தறிவுகள் பொத்துக் கொண்டு ஓடி வந்தாலும், கடைசியில் எங்கே போகிறோம் என்று தெரியாமலே தான் கண் மூட வேண்டியிருக்கிறது.
அந்த இடத்தைத்தான் இந்துமதம் `ஈஸ்வரன்' என்று அழைக்கிறது.
சொல்லப்போனால், இந்துமதச் சக்கரத்திற்குள்ளே தான் உலகமே சுழன்று கொண்டிருக்கிறது.
இந்து மதத்தில் ஆயிரத்தில் ஒரு பகுதியை எடுத்துக் கொண்டுதான் மற்ற மதங்கள் உருவாக்கப்பட்டன.
ஜயதேவர், புத்தரைக் கூட ஸ்ரீ கிருஷ்ணனின் அவதாரம் என்கிறார்.
`கிறிஸ்து' என்ற வார்த்தைக்கும் `கிருஷ்ணன்' என்ற வார்த்தைக்கும் உள்ள பொருத்தம் பற்றியும், இருவரும், மாட்டுக் கொட்டிலிலே வளர்ந்தவர்கள் என்பது பற்றியும் ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் ஒரு கட்டுரையில் கூறி இருக்கிறார்கள்.
மலேசியாவின் பெரிய ராணிக்கு, `பரமேஸ்வரி நாச்சியார்' என்று பெயர். ஆனால் அவர் ஒரு முஸ்லிம்.
மலேசியாவிலும், இந்தோனேஷியாவிலும் ஆட்சியை, `பாதுகா' என்றார்கள்.
பரதன் ராமனின் பாதுகைகளைப் பெற்றுக் கொண்டதும், ஆட்சி நடத்தியதும் நமக்கு நினைவிற்கு வருகின்றன.
தாய்லாந்திலும், கம்போடியாவிலும் சகுன நம்பிக்கை, விக்கிரக ஆராதனை, இந்துப் பண்டிகைகள் போன்ற விழாக்கள் ஏராளம்.
மெக்சிகோவில் ஒரு விநாயகர் கோயிலைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
அந்நாட்டைப் பற்றி ஒரு புத்தகம் வெளி வந்திருப்பதாகவும், அதிலே ஆதிவாசிகள் நடனமாடும் படம் ஒன்று வெளி வந்திருப்பதாகவும், ஸ்ரீ காஞ்சிப் பெரியவர்கள் கூறுகிறார்கள். அதிலே நடனமாடும் எல்லாப் பெண்களுக்கும் நெற்றியில் ஒரு கண் வரையப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்கள்.
கடல் கொள்ளப்பட்ட லெமூரியா கண்டத்தில் எல்லோருக்குமே மூன்று கண்கள் இருப்பதாக பன்மொழிப் புலவர் அப்பாத்துரையார் தன் ஆராய்ச்சி நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்கப்போனால் இந்துமதத்தின் தத்துவங்கள் எல்லாமே ஆழமான அர்த்தம் உடையவை என்பது மட்டுமல்ல; இறை வழிபாடும் சமய சார்பும் முதன் முதலில் உருவாக்கப்பட்டதே இந்துக்களால் என்று தோன்றுகிறது.
மரத்தடி கிளி ஜோசியனில் இருந்து, மெக்சிகோ பேராசிரியர் வரை எல்லோரும் நம்புவது, `எல்லா விஷயங்களையும் உள்ளடக்கியது இந்துமதம் ஒன்றே' என்பதைத்தான்.

பிராண சக்தி விழிப்பு இரகசியம்


Posted On June 30,2012,By Muthukumar
பிராணாயாமம் என்பது யோகம் பழகுபவர்களிற்கு முக்கியமான ஒரு பயிற்சியாகும். இன்றைய நோக்கில் யோக பழகுங்கள் உடல் ஆரோக்கியம் வரும். பிராணாயாமம் பழகினால் உடல் ஆரோக்கியம் வரும் என்று யோகா நிலையங்கள் போதித்து வருகின்றன. இது உண்மையானாலும் இதை விட ஒரு அரிய விடயம் இதில் பொதிந்துள்ளது என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

முதலாவது பிராணன் என்பது மூச்சு அல்ல, மூச்சு பிராணனை உடலிலிருந்து கட்டுப்படுத்த உபயோகிக்கும் ஒருசாதனம் என்பதனை யோகம் பழக விரும்புபவர்கள் மனதில் இருத்த வேண்டும். மனிதன் பஞ்ச கோசங்களால் ஆனவன் என்பது யோக தத்துவம், சித்தர் தத்துவங்கள் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த பஞ்ச கோசங்களில் அன்னமய கோசம் என்பது எமது ஸ்தூல உடல், மனோமய கோசம் என்பது மனம் இவற்றை இரண்டையும் இணைக்கும், செயற்படுத்தும் சக்திதான் பிராணன், இந்த பிராணன் மேற்குறிப்பிட்ட அன்னமய, மனோமய கோசங்களில் பயணிப்பதற்கு உள்ள அமைப்புகள் தான் உடலில் உள்ள ஆதார சக்கரங்களும், 72000 நாடிகளும், ஆதாரங்கள் என்பன மொலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்சை, ஆறும் சகஸ்ரதளம் என்பது இந்த ஆறு ஆதாரங்களினது சேர்க்கையும் ஆகும். இவை ஒவ்வொரு சம்பிரதாயங்களுக்கு ஏற்ப மாறுபடும் (கோரக்கரின் வகைப்படுத்தல் பிரகாரம் எட்டு ), இவை உண்மையில் ஸ்துல உடலில் இருப்பவையல்ல, மனோமய கோசத்தில் பிராணனின் ஓட்ட ஒழுங்கிற்காக  சித்தர்களால் உருவாக்கப்பட்டவை, மன இயக்கத்தின் படி மூச்சு மாறும், மூச்சின் மாற்றத்தின் படி பிராணனின் ஓட்டம் மாறுபடும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே உடலில் உள்ள சக்கரங்கள், இவை தற்போது போதிக்கப்படுவதுபோல் குறித்த இடத்தில் மாத்திரம் இருப்பவை அல்ல, இன்னும் பல சக்கரங்கள் உள்ளன, சித்தர்களால் வழங்கப்பட்டுள்ள சக்கர வரைபடம் ஒருவருடைய பிராணனை ஒழுங்கு படுத்தி பரிணாமத்தில் மேலே கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். அதாவது முக்தி பாதையில் செல்வதற்கான வரைபடமாகும். 

அதாவது மஹா பிராணன் எனப்படு பிரபஞ்சச பிராணன் மூச்சு உள்ளிழுக்கும் பொது சகஸ்ராரம் உடாக வந்து ஒவ்வொரு ஆதார சக்கரங்களூடாக கிழிறக்கி மூலாதாரத்திற்கு சென்று பின் அங்கிருந்து இடகலை, பிங்கலை நாடிகலூடாகவும் உப நாடிகலூடாகவும் உடலிற்கு செலுத்தப்படுகிறது. இந்த பிராண சக்தியும் அன்னமய கோசம் ஏற்கும் உணவிலுள்ள சத்துகளும் சேர்ந்து உடலினதும், மனத்தினதும் இயக்கத்தினை சரிவர செய்கின்றது. உண்மையில் நோய்வந்து மருந்து உண்ணும் போது மருந்தும் உணவும் நோய்வந்த பகுதியினை மீளமைக்கவும் சரி செய்யவும் தேவையான மூலப்பொருளை வளங்குகின்றணவே தவிர குணப்படுத்துவதில்லை, அதனால் தான் ஆங்கிலத்தில் "Doctor treat; God cures" என்பார்கள், இந்த கடவுள் என்பது பிராண சக்தியே ஆகும். இந்த பிராண சக்தி உடலில் எவ்வளவு இருக்கின்றதோ அந்தளவிற்கு உடல் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

இந்த மஹா பிராணசக்தி ஒவ்வொருவருடைய பிராணமய கோசத்திலும் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் மனிதன் கடவுளின் அமிசம், தான் கடவுள் என்பதனை மாயையினால் மறந்துவிட்ட கடவுள், அல்லது இப்படிசொல்லலாம் மஹா பிராண சக்தி எந்த விதத்திலும் கலப்பற்று சுயமாக இயங்கும் நிலை கடவுள் அல்லது பரா சக்தி, கட்டுப்பட்டு சுருண்ட நிலை மனிதன் அல்லது குண்டலினி. அதாவது இரண்டும் ஒன்றுதான் ஆனால் பிராணனின் விழிப்பு நிலை வித்தியாசம், இதுவே கடவிளிற்கும் மனிதனிற்கும் உள்ள வேறுபாடு. 

இதனை அறிந்த சித்தர்கள் பிராணமய கோசத்தில் உறங்கும் மகா பிராண சக்தியினை விழிப்படைய வைத்து ஒவ்வொரு மனிதனும் கடவுளாகும் நிலையினை அடைவதே யோக சாதனையின் குறிக்கோள். 

பிராணயாமத்தின் பயன்பாடு 
பிராணாயாமத்தின் போது உடலின் நாடிகள் மெதுவாக உஷ்ணமடைகின்றது, இது மெதுவாக மூலாதாரத்தில் உறைந்துள்ள மஹா பிரணனான குண்டலினியை உஷ்ணப்படுத்தி விழிப்படைய வைக்கிறது, இந்த வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது மஹா பிராணன் சுழுமுனை  நாடியினுடாக ஆக்ஞ்ச சக்கரத்தினை அடைந்து பின்னர் மூலாதாரத்திற்கு மீண்டு வருகிறது. இதுவே சுருக்கமான விளக்கம். ஆனால் சுழுமுனை விழிப்படையாத நிலையில் பிராணன் வேறு நாடிகளுடாகவும் செல்லும், இதனால் பல்வேறு வேண்டத்தகாத விளைவுகளும் ஏற்படலாம். 

எல்லாவித பிராணயாமங்களும் மகா பிராணனை விழிப்படைய செய்வதில்லை, சிலது பிராணன் பயணிக்கும் நாடிகளை சுத்தி செய்பவை, 

எப்படியாயினும் பிரணாயாம பயிற்சி தகுந்த குருவினை அண்டி செய்யவேண்டிய பயிற்சி என்பதனை பழக விரும்புபவர்கள் மனதில் இருத்துதல் அவசியம்.

Friday, June 29, 2012

சர்வ கார்யங்கள் ஸித்தி பெற ஸ்ரீ மஹா லஷ்மியை தோத்திரம்

ஸ்ரீ மஹா லஷ்மித் தேவியைத் தங்களுடைய இஷ்டத் தெய்வமாகக் கொண்டு உபாசித்து வருபவர்கள் அநேகம் பேர். அவளுக்குரிய சில பவித்திரமான மந்திரங்களை ஜபிப்பதன் மூலமாக -அவளுடைய அருளை, அவளை ஆராதிப்பவர்கள் அடையலாம். அத்துடன் சகல கார்யங்களிலும் சகல விதமான சித்திகளையும் அடையலாம்.
இவ்வாறு சித்தி பெறுவதற்குரிய மந்திர மார்க்கங்களை அனுசரித்து எப்படிப் பலன் பெறலாம் என்பதைக் காணலாம்.
1. அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அடைவதற்கு . . .
கீழ்வரும் மந்திரத்தினைத் தினந் தோறும் காலையில் எழுந்து -இரு பத்து ஏழு தடவை ஜபம் செய்யவும்.
மந்திரம் :
மஹா லக்ஷ்மீர் மஹாகாளீ மஹாகந்யா ஸரஸ்வதீ
போக வைபவ ஸந்தாத்ரீ பக்தானுக்ரஹ காரிணீ
2. எல்லாவிதப் பயங்களும் ஒழிய . . .

கீழ்வரும் மந்திரத்தைத் தினந்தோறும் மாலையில் பனிரெண்டு தடவை ஜபம் செ ய்யவும்.
மந்திரம் :
பத்ரகாளீ கராளீ ச மஹாகாளீ திலோத்தமா
காளீ கராள வக்த்ராந்தா காமாக்ஷீ காமதா ஸுபா
3. ஏதாவது ஒரு காரியத்தைச் செய்ய எண் ணும் போது, அதில் வெற்றி கிட்ட வேண் டும் என்றால் . . .
கீழ் வரும் மந்திரத்தைத் தாங்கள் எந்தக் காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணினார்களோ -
அந்தக் காரியத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் தினந்தோறும் பத்துத் தடவை ஜபம் செய்து வரவும்.
மந்திரம் :
ஜயா ச விஜயா சைவ ஜயந்தீ சாபராஜிதா
குப்ஜிகா காளிகா ஸாஸ்த்ரீ வீணா புஸ்தக தாரிணீ
4. எதிரிகளின் தொல்லைகளிலிருந்து விடு பட . . .
கீழ்வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்த வுடன் பதினெட்டுத் தடவை. தினந்தோறும் ஜபிக்கவும்.
மந்திரம் :
பிப்பலா ச விஸாலாக்ஷீ ரன்க்ஷக்க்நீ வ்ருஷ்டி காரிணீ
துஷ்ட வித்ராவிணீ தேவீ ஸர்வோபத்ரவ நாஸிநீ
5. கல்வியில் வல்லமை பெற . . .
கீழ்வரும் மந்திரத்தைக் காலையில் எழுந்தவுடன் பனிரெண்டு தட வை ஜபிக்கவும்.
மந்திரம் :
அர்த்த நாரீஸ்வரி தேவீ ஸர்வ வித்யா ப்ரதாயிநீ
பார்கவீ பூஜுஷீ வித்யா ஸர்வோபநிஷ தாஸ்திதா
6. ஒன்று மாற்றி ஒன்றாகக் கஷ்டங்கள் வந்து கொண்டே இருந்தால் . . .
கீழ் வரும் மந்திரத்தைத் தினந்தோறும் நூற்றியெட்டுத் தடவை ஜபம் செய்து வந்தால் கஷ்டங்கள் நிவர் த்தியாகும்.
மந்திரம் :
கேதநீ மல்லிகா ளஸோகா வாராஹீ தரணீத்ருவா
நாராஸிம்ஹீ மஹோக்ராஸ்யா பக்தாநா மார்தி நாஸிநீ

கடன்களைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தம்


Posted On June 29,2012,By Muthukumarகலியுகம் என்றாலே துன்ப யுகம் என்றுதான் அர்த்தம்;எனவே,இந்த கலியுகத்தில் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரையும் கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது கர்மவினை வாழ்நாள் முழுக்க துரத்திக்கொண்டே இருக்கும்.இதை சரிசெய்ய ஜோதிட அறிவியல் வழிகாட்டுகிறது.


நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள்; அந்த ஆளு ஒரு வீடு கட்டுனான்பா! அன்னிலிருந்து இன்னிக்கி வரைக்கும் வீடுகளாக கட்டிக்கிட்டே இருக்கான்பா;பத்து வருஷமாக வீடாகக் கட்டி,இப்போ கோடீஸ்வரனாகிட்டான்பா! எங்கியோ அவனுக்கு மச்சம் இருக்குது;ஹீம் அதுக்கெல்லாம் குடுப்பினை வேணும்.
இந்த குடுப்பினை நம்  அனைவருக்குமே இருக்கிறது.வீணாப்போன நாத்திகத்தால் இந்த அரிய அறிவுப்பொக்கிஷத்தை நாம் நம்புவதில்லை; ஒரு வேளை நம்பி செயல்படுத்திட ஆரம்பித்த பின்னர்,நான் இப்படிச் செய்யுறேன்னு நம்மைச் சுற்றியுள்ளவர்களிடம் நம்மால் பெருமையடிக்காமல் இருக்கமுடிவதில்லை;நம்மோடு இருப்பவர்கள் நமக்கு நன்மை மட்டுமே செய்வர் என்றுதான் நம்புகிறோம்;அவர்கள் பொறாமைப்படுவர் என்பதை உணருவதில்லை;நாம் இப்படி பெருமையடித்ததும்,அவர்கள் நுணுக்கமான ஒரு பொய்யை நம்மிடம் சொல்வதன் மூலமாக நமது ஜோதிட முயற்சியை பாதியிலேயே நிறுத்திவிடுகின்றனர்.  “ஆமாம்,இவன்/ள் மட்டும் இந்த ஜோதிட ஆலோசனையைப் பின்பற்றி பெரிய ஆளாயிட்டா. . .” தமிழ்நாடு முன்னேறாமல் போனதற்கு காரணமே இதுதான் காரணம்.


2008 முதல் மைத்ர முகூர்த்த நேரப் பட்டியலை வெளியிட்டுவருகிறேன்.இதனால்,பல தமிழ் ஹீமோகுளோபின்களின் மலையளவு கடன்கள்,கடுகளவாக சிதறிப்போயிருப்பதை அவர்களின் நன்றியுணர்வுடன் கூடிய மின் அஞ்சல்கள் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றன.ஏழு ஆண்டுகளாக ரூ1 கோடி கடனுடன் போராடிய ஒரு இலங்கை நிறுவனம்,நமது மைத்ர முகூர்த்த நேரத்தைப் பலமுறை பின்பற்றியதால்,இன்று கடனே இல்லாத நிறுவனமாக பரிணமித்துவிட்டது.விளைவு? இரண்டே இரண்டு நாடுகளில் கால் பதித்திருந்த அந்த நிறுவனம்,இன்று ஆறு நாடுகளில் கிளைபரப்பியிருக்கிறது.


இந்த மைத்ர முகூர்த்த நேரம் இந்தியாவில் தமிழ்நாடு,ஆந்திரா,கர்நாடகா மற்றும் கேரளா,இலங்கை,மாலத்தீவு,லட்சத்தீவு,அந்தமான் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.பிற நாடுகளில் வசிப்போர் இந்திய நேரத்திற்கும்,அந்த நாட்டின் நேரத்திற்கும் இருக்கும் வித்தியாசத்தை பொறுத்து மாறுபடும்.உதாரணமாக,இன்று காலை 9 முதல் 11 வரை ஒரு மைத்ர முகூர்த்த நேரம் இருப்பதாக வைத்துக்கொண்டால்,இங்கிலாந்தில் ஒருவர் இதே மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்திட,இந்தியாவின் நேரத்திலிருந்து 5.30 மணி நேரம் முன்னதாக வரும் நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்தியாவுக்குள் கடன் தீர்க்கும் நேரமாக இதைக் கணித்திருக்கிறோம்.கனடாவில் வசிக்கும் ஒருவர்,இந்தியாவில் வாழும் ஒருவரிடம் கடன் வாங்கியிருந்தால்,இந்திய நேரப்படி கனடாவிலிருந்து,இந்தியாவில் இருப்பவரின் வங்கிக்கணக்கில் அசலை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தில் செலுத்த வேண்டும்.
தமிழ்நாட்டில் இருப்பவர்கள் செய்ய வேண்டியது:மாரிமுத்து என்பவரிடம் நான் ரூ.2,00,000/-கடனை 2007 இல் வாங்கியிருக்கிறேன்.இன்று வரையிலும் வட்டி மட்டுமே கட்டிக்கொண்டிருக்கிறேன் எனில்,பின்வரும் மைத்ர முகூர்த்த நேரப்பட்டியல் நேரங்களில் மாரிமுத்துவிடம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்த வேண்டும்.அது ரூ.1000/- ஆக இருந்தாலும் சரி,ரூ.500/- ஆக இருந்தாலும் சரி;அப்படி ஒரே ஒரு முறை அசலில் ஒரு பகுதியை திருப்பிச் செலுத்தினாலே,மீதி ரூ.1,99,000/- அல்லது ரூ.1,99,500/- வெகு சீக்கிரமாக தீர்ந்துவிடும்.இந்த நேரத்தில் வட்டியை செலுத்தக் கூடாது.கந்துவட்டிக்கு இது பொருந்தாது;மீட்டர் வட்டி,கடப்பாறை வட்டி போன்றவைகளுக்கும் இது பொருந்தாது.


நந்தன ஆண்டின் மைத்ர முகூர்த்தப் பட்டியல்:1.7.12 ஞாயிறு மதியம் 1.50 முதல் 3.50 வரை;

28.7.12 சனி மதியம் 1.08 முதல் 3.08 வரை;

8.8.12 புதன் இரவு 10.40 முதல் நள்ளிரவு 12.40 வரை;

25.8.12 சனி காலை 11.24 முதல் 12.07 வரை;

4.9.12 செவ்வாய் இரவு 8.35 முதல் 10.35 வரை;

21.9.12 வெள்ளி காலை 9.24 முதல் 11.24 வரை;

1.10.12 திங்கள் இரவு 7 முதல் 9 வரை;

13.10.12 சனி காலை 6.16 முதல் 8.16 வரை;மதியம் 12.16 முதல் 2.16 வரை; மாலை 6.16 முதல் இரவு 8.16 வரை;

18.10.12 வியாழன் காலை 8 முதல் 11 வரை;

27.10.12 சனி காலை 6.02 முதல் 7.32 வரை;காலை 11.32 முதல் மதியம் 1.32 வரை;மாலை 5.32 முதல் இரவு 7.32 வரை;நள்ளிரவு 11.32 முதல் 1.32 வரை;

29.10.12 திங்கள் மாலை 5.12 முதல் 7.12 வரை;

15.11.12 வியாழன் காலை 6.15 முதல் 8.15 வரை;

25.11.12 ஞாயிறு மாலை 3.25 முதல் 5.25 வரை;

12.12.12 புதன் விடிகாலை 4.35 முதல் 6.30 வரை;

23.12.12 ஞாயிறு மதியம் 1.45 முதல் 3.45 வரை;

19.1.13 சனி மதியம் 12.55 முதல்  2.55 வரை;

15.2.13 வெள்ளி காலை 10.41 முதல் மதியம் 12.41 வரை;

23.2.13 சனி காலை 9.30 முதல் 11.30 வரை;மதியம் 3.30 முதல் 5.30 வரை;  இரவு 9.30 முதல் 11.30 வரை;

9.3.13 சனி காலை 8.45 முதல் 10.45 வரை;மதியம் 2.45 முதல் 4.45 வரை; இரவு 8.45 முதல் 10.45 வரை;

31.3.13 ஞாயிறு இரவு 9.09 முதல் 11.09 வரை;

11.4.13 வியாழன் காலை 6.20 முதல் 8.20 வரை;


இந்த நேரத்தின் மைய பாகத்தைப்  பயன் படுத்துவது மிகவும் நன்மை பயக்கும்;பல முறை இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப்பயன்படுத்திட,விரைவில் கடனில்லாத வாழ்க்கை நமக்கு அமைந்துவிடும்.பலரிடம் நாம் கடன் வாங்கியிருந்தால்,ஒவ்வொருவருக்கும் தனித்தனியே இந்த நேரத்தைப் பயன்படுத்திட வேண்டும்;வங்கிக்கடன்களை தீர்க்கவும் இந்த மைத்ர முகூர்த்த நேரத்தைப் பயன்படுத்தலாம்; நந்தன வருடத்தின் துவாதசி திதி வரும் நாட்கள்

Posted On June 29,2012,By Muthukumar


நமது கர்மவினையை மாற்றும் சக்தி (கலியுகத்தில்) அன்னதானத்துக்கு மட்டுமே உண்டு. உங்களின் அனைத்துப்  பிரச்னைகளும் வெகு விரைவாக தீரவே அன்னதானத்திலேயே மிக உன்னதமான அன்னதானத்தை தங்களுக்கு பரிந்துரைக்கிறேன்.
நமது சொந்த ஊரில் ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அவ்வளவு புண்ணியம் காசியில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
காசிக்குச் சென்று ஒரு நாளுக்கு 1,00,000 பேர்கள் வீதம் ஓராண்டு வரை தினமும் அன்னதானம் நாம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும்? அவ்வளவு புண்ணியம் நம்ம அண்ணாமலையில் ஒரு சாதாரண நாளில் ஒருவர் வீதம் மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;
துவாதசி திதியன்று அண்ணாமலையில் ஒரு வேளைக்கு ஒருவர் வீதம்,மூன்று வேளைகளுக்கு அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்கும் தெரியுமா?
நாம் பிறந்தது முதல் இறக்கும் வரையிலும் ஒவ்வொரு நாளும் 1,00,00,000 (ஒரு கோடி)பேர்களுக்கு காசியில் அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ,அதை விட அதிகமான புண்ணியம் நமக்குக் கிடைக்கும்.அது மட்டுமா? ,மேலும் மறுபிறவியில்லாத முக்தி கிடைக்கும்.ஆதாரம்:சிவமஹாபுராணம்(சிவபுராணம்)
அதென்ன முக்தி?: 84,00,000 விதமான உயிரினங்கள் பூமியில் இருக்கின்றன.இந்த 84,00,000 விதமான உயிரினங்களாக நாம் பிறந்து,பிறந்து,பிறந்து கடைசியில் நமக்கு கடவுளால் வழங்கப்படுவது மனிதப்பிறவி!!!
மனிதனாகப் பிறந்த பின்னர்,நமது தீய எண்ணங்களால் பாவங்களையும்,நல்ல எண்ணங்களால் புண்ணியத்தையும் ஒவ்வொரு மனித பிறவியிலும் சேகரிக்கிறோம்;இந்த மனித இயல்பினால்,ஒவ்வொரு ஐந்து மனித பிறவிகளுக்கும் ஒரு முறை    நாம் பணக்காரனாகவோ,பரம ஏழையாகவோ பிறந்துகொண்டே இருப்போம்;
இந்த மனித பிறப்பு,மனித இறப்பு சுழலில் இருந்து விடுபட நாம் பல ஜன்மங்களாக தியானம்,தவம்,அன்னதானம்,ஆடைதானம்,ருத்ராட்ச தானம்,தீபதானம்,கோவில் கட்டுதல்,கல்வி தானம்,தண்ணீர் தானம் என பலவிதமான தானங்களைச் செய்ய வேண்டும்.அப்படிச் செய்தாலும்,நமது பாவக்கணக்கு ஜீரோ பேலன்ஸ் வரும் வரை பிறந்து கொண்டே இருக்க வேண்டும்.நிறைய்ய புண்ணியம் செய்தால்,இந்திர உலகம்,சந்திர உலகம்,வைகுண்டம்,சிவ லோகம் ,சங்கு உலகம்,சக்கர உலகம் என இவற்றில் ஏதாவது ஒரு உலகிற்குச் சென்று சகல விதமான போகங்களை(ஜாலிகளை!!!) அனுபவித்துவிட்டு,மீண்டும் மனித பிறப்பாக பிறக்க வேண்டும்.
நிறைய்ய பாவங்களை செய்தால்,பூமிக்கு கீழே(தெற்கு திசையில் விண்வெளியில் சூட்சுமமாக இருக்கும்) நாக உலகம்,பேய் உலகம்,பைசாச உலகம்,நரக உலகம் போன்றவைகளுக்குப் போய் பூமியில் இதுவரையில்லாத கொடூரமான சித்திரவதைகளை பல ஆயிரம்(?!?!!) ஆண்டுகளாக அனுபவித்துவிட்டு,மீண்டும் ரொம்ப சாதாரண மனிதனாக பூமியில் பிறக்க வேண்டும்.ஆக,இந்த பூமியே கர்ம பூமி; மற்றவை அனைத்தும் மோட்ச பூமி;

இந்த பிறப்பு இறப்பு சுழற்சியிலிருந்து தப்பிக்க துவாதசி திதி அன்னதானம் செய்வதன் மூலமாக ஒரு போதும் பூமியில் நாம் மனித பிறவியெடுக்காமலேயே போவதுதான் முக்தி!!!
அசைவ அன்னதானம் செய்யக்கூடாது;நள்ளிரவு அன்னதானம் செய்யக்கூடாது;கட்டாயப்படுத்தி அன்னதானம் செய்யக்கூடாது;வீடு வாசல் இல்லாதவர்களுக்கு இலவசமாக உணவு கொடுத்தால் மட்டுமே அது அன்னதானம் என்று கருதப்படும்.அன்னதானம் பெறுபவர்களை ஒரு விநாடி மானசீகமாக நன்றி செலுத்த வேண்டும்.(முடிந்தால் கையெடுத்தும் கும்பிடலாம்)
இந்த நாட்களில் ஏதாவது ஒரே ஒரு நாளை நாம் தேர்ந்தெடுத்து நமது குடும்பத்தோடு அண்ணாமலைக்குச் செல்வோம்;குறைந்தது காலையில் ஒருவர்,மதியம் ஒருவர்,இரவு ஒருவர் வீதம் அன்னதானம் செய்வோம்;முடிந்தால் மதிய நேர அன்னதானத்தை எட்டாவது லிங்கமான ஈசான லிங்கம் இருக்கும் பகுதியில் செய்வது மிகுந்த நன்மைகளையும்,புண்ணியத்தையும் தரும்.மேலும் நமது வாதைகளை அறவே நீக்கும்.
வசதியிருப்பவர்கள் எட்டு லிங்கங்களின் வாசல்களிலும் அன்னதானம் செய்வது நன்று.ஒவ்வொரு லிங்கத்திலும் இருக்கும் துறவிகளுக்கு அன்னதானம் செய்ய நவக்கிரகங்களினால் ஏற்பட இருக்கும் பிரச்னைகள்,கர்மங்கள் முழுமையாக விலகிவிடும்.இதை துவாதசி திதி அன்னதானம் செய்த சில நாட்களிலேயே உணரலாம்.எல்லாம் அருணாச்சலத்தின் மகிமை!!!
நந்தன ஆண்டின் துவாதசி திதி வரும் நாட்கள்


15.7.12 ஞாயிறு முழுவதும்;

29.7.12 ஞாயிறு மாலை 5 முதல் 30.7.12 திங்கள் மதியம் 2.46 வரை;

14.8.12 செவ்வாய் முழுவதும்(இரவு 9.14 வரை);

28.8.12 செவ்வாய் முழுவதும்;

12.9.12 புதன் காலை 10.18 முதல் 13.9.12 வியாழன் காலை 10.36 வரை;

26.9.12 புதன் காலை 10.20 முதல் 27.9.12 வியாழன் காலை 9.20 வரை;

12.10.12 வெள்ளி முழுவதும்;

26.10.12 வெள்ளி முழுவதும்;

10.11.12 சனி காலை 11.54 முதல் 11.11.12 ஞாயிறு காலை 10.26 வரை;

24.11.12 சனி மதியம் 1.40 முதல் 25.11.12 ஞாயிறு மதியம் 2.45 வரை;

10.12.12 திங்கள் முழுவதும்;

24.12.12 திங்கள் காலை 7.34 முதல் இன்று முழுவதும்;

8.1.13 செவ்வாய் காலை 10.20 முதல் 9.1.13 புதன் காலை 8.02 வரை;

23.1.13 புதன் முழுவதும்;

7.2.13 வியாழன் முழுவதும்(மாலை 6.36 வரை);

22.2.13 வெள்ளி முழுவதும்;

8.3.13 வெள்ளி முழுவதும்;

23.3.13 சனி மாலை 4 முதல் 24.3.13 ஞாயிறு மாலை 4.39 வரை;

6.4.13 சனி மாலை 5.46 முதல் 7.4.13 ஞாயிறு மாலை 4.36 வரை;

இந்துக்காலக்கணக்குப்படி,ஒரு சூரிய உதயத்திலிருந்து அடுத்த சூரிய உதயம் வரையிலான காலமே ஒரு நாள் எனப்படும்.ஆனால்,இந்த பட்டியலில் பல துவாதசி திதி நாட்கள் ஒரு நாள் மதியம் அல்லது மாலையில் ஆரம்பித்து மறுநாள் மதியம் வரை அமைந்திருக்கின்றன.அந்த நாட்களைத் தவிர,முழுநாட்களில் வரும் துவாதசி திதி நாட்களைப் பயன்படுத்தவும்.


ஒரு  நாளில்,காலை நேரம் என்பது  4.30 முதல் 11 மணிவரையிலான காலகட்டம் ஆகும்;
மதிய நேரம் என்பது மதியம் 12.30 மணி முதல் 3 மணி வரையிலான காலகட்டம் ஆகும்;
இரவு நேரம் என்பது இரவு 7 மணி முதல் 11 மணி வரையிலான காலகட்டம் ஆகும்.ஆக,இந்த நேரங்களுக்குள் அன்னதானம் செய்துவிட வேண்டும்.

நந்தன வருடத்தின் திருவாதிரை நட்சத்திர நாட்கள்

Posted On June 29,2012,By Muthukumar
தென்னாடுடைய சிவனே போற்றி: எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற தெய்வீக வாசகங்களுக்கான ஆதாரங்களை நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருக்கிறோம்.
சிவபெருமானது அருளை பெருமளவு பெறவும்,விரைவாக பெறவும் நாம் சிவபெருமானது அவதார நட்சத்திரமான திருவாதிரையன்று அண்ணாமலைக்கு வருகை தர வேண்டும்;முடிந்தால் விரதமிருந்து(சாப்பிடாமல்)  திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நேரத்திற்குள் கிரிவலம் செல்ல வேண்டும்;
விரதமிருக்க இயலாதவர்கள்,சிறிது பால் மற்றும் பழங்கள் சாப்பிட்டுவிட்டு,கிரிவலம் செல்லலாம்.
அவ்வாறு கிரிவலம் செல்லும்போது,மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;இரு உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்திருக்க வேண்டும்;கிரிவலத்தை கிழக்குக் கோபுர வாசலுக்குள் இருக்கும் விநாயகரை முதலில் வழிபட வேண்டும்.பிறகு தேரடி முனீஸ்வரரை வழிபட்டு, அண்ணாமலையாரை கிழக்குக் கோபுர வாசலில் அமைந்திருக்கும் சாலையில் இருந்தவாறே அவரை நோக்கி வழிபட்டுவிட்டு, துவக்கிட வேண்டும்.
அஷ்ட லிங்கங்களும் 14 கிலோ மீட்டர்கள் தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.இந்த தூரத்தை கடக்க சராசரியாக 4 முதல் 6 மணி நேரம் வரை ஆகும்.இந்த 4 முதல் 6 மணி நேரமானது நமக்கு அருணாச்சலேஸ்வரர் வழங்கிய ப்ளாட்டின நேரம் ஆகும்.இந்த நேரத்தில் நாம் ஒவ்வொரு விநாடியும் ஓம்சிவசிவஓம் என்றவாறு ஜபித்தவாறே கிரிவலம் செல்ல வேண்டும்.
நாம் அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையில் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் சேமிப்பாகிக்கொண்டே வரும்; (இதை துவைத்தால்,அதுவரையிலும் சேமிப்பாகியிருந்த மந்திர அலைகள் நீரில் கரைந்து போய்விடும்;எனவே,அண்ணாமலை கிரிவலம் வரும் போது மட்டும் அணியும் விதமாக ஒரு மஞ்சள் ஆடையை தனியாக தயார் செய்து வைக்கவும்)
நமது இரண்டு உள்ளங்கைகளில் இருக்கும் இரண்டு ருத்ராட்சங்களிலும் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் சக்தி சேமிப்பாகிக் கொண்டே வரும்;(நமது ஆயுள் முழுக்க இவ்வாறு ஜபித்த பின்னர்,நமது மூன்றாவது தலை முறை வரையிலும் இவ்வாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைத்துவிட்டால்,நமது நான்காவது தலைமுறையில் சிவனது கடாட்சம் பெற்ற ஞானி பிறப்பார்.ஒரு குடும்பத்தில் ஞானி பிறந்தால்,அவரோடு முடிவடையும் முந்தைய 71 தலைமுறையினருக்கு முக்தி கிடைக்கும்)
ஒவ்வொரு லிங்கத்தின் சன்னதியிலும் சில நிமிடங்கள் அமர்ந்தும்,ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.இந்த அஷ்ட லிங்கங்களின் சன்னதியிலும்,அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள்ளும் மஞ்சள் நிறத் துண்டு விரிக்காமலும்(விரித்தாலும் தப்பில்லை) ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ஏனெனில்,மலையே சிவபெருமானாக இருப்பதாலும்,அவரை நாம் வலம் வருவதே கிரிவலம் எனப்படுவதாலும்,இந்த அண்ணாமலையில் மட்டும் ஓம்சிவசிவஓம் எந்த நேரமும் ஜபித்துக்கொண்டே இருக்கலாம்;


நாம் அண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது நமது முந்தைய மனிதப்பிறவிகளும் நம்முடன் சூட்சுமமாக கிரிவலம் வரும்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு அகஸ்தியர் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.இதன் மூலமாக நமது கர்மவினைகள் விரைவாக தீர்ந்துவிடும்.

இனி திருவாதிரை நட்சத்திர நாட்கள்:


17.7.12 செவ்வாய் காலை 8.32 முதல் 18.7.12 புதன் காலை10.21 வரை;

13.8.12 திங்கள் மதியம் 3.48 முதல் 14.8.12 செவ்வாய் மாலை 5.42 வரை;

9.9.12 ஞாயிறு இரவு 11.01 முதல் 10.9.12 திங்கள் நள்ளிரவு 1.02 வரை( 10.9.12 சோமவாரம் + திருவாதிரை+ சூரியன் ஆட்சி பெறும் மாதமான ஆவணி மாதம்=மிக மிக புனிதமான நாள்; சிவ கடாட்சம் பெருமளவு கிடைக்கக் கூடிய நாள் இது)

7.10.12 ஞாயிறு காலை 6.08 முதல் 8.10.12 திங்கள் காலை 9.54 வரை;

3.11.12 சனி மதியம் 1.14 முதல் 4.11.12 ஞாயிறு மதியம் 3.24 வரை;

30.11.12 வெள்ளி மாலை 5.19 முதல் 1.12.12 சனி இரவு 10.34 வரை;

27.12.12 வியாழன் நள்ளிரவு 3.24 முதல் 28.12.12 வெள்ளி நள்ளிரவு 5.45 வரை(திருவாதிரை பவுர்ணமி எனப்படும் ஆருத்ரா தரிசன நாள்!!!)

24.1.13 வியாழன் காலை 10.36 முதல் 25.1.13 வெள்ளி மதியம் 12.59 வரை;

20.2.13 புதன் மாலை 5.52 முதல் 21.2.13 வியாழன் இரவு 8.18 வரை;

19.3.13 செவ்வாய் நள்ளிரவு 1.11 முதல் 20.3.13 புதன் நள்ளிரவு 3.39 வரை;(20.3.13 முழுவதும் என கணக்கில் கொள்ளலாம்)

நந்தன ஆண்டின் சனிப்பிரதோஷங்கள்:


13.10.2012

27.10.2012

23.2.2013

9.3.2013

ஒரு சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து ஆண்டுகள் தினமும் சிவாலயத்திற்குச் சென்றதாக அர்த்தம்; இந்த நன்னாளில் அண்ணாமலைக்குச் சென்று,பிரதோஷ நேரத்திற்குள் கிரிவலம் முடித்து,பிரதோஷத்தில் கலந்து கொள்வது சிறப்பு;


அல்லது


நவகைலாசங்கள் எனப்படும் நவக்கிரகங்களின் தன்மையோடு இருக்கும் சிவாலயங்கள் நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கின்றன.இதில் சனிபகவானின் அம்சமான சிவாலயமாக ஸ்ரீவைகுண்டம் இருக்கிறது.மிகச் சிறிய கோவில்;இந்த கோவிலுக்குள் நுழைந்தாலே,மனதிற்குள் ஒருவித ஆழ்ந்த அமைதியை உணர முடியும்.இங்கு இந்த 6 சனிப்பிரதோஷங்களுக்கும் சென்று ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாமே?
திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே ஸ்ரீவைகுண்டம் அமைந்திருக்கிறது.

Thursday, June 28, 2012

பணம் பணம் பணம்!

Posted On JUne 29,2012,By Muthukumar
பணம்... பணம்! இதற்காகவே பாடு படுகின்றனர் மக்கள். நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக, நகர்புறங்களுக்கு வந்து விடுகின்றனர் கிராமவாசிகள். எப்படியாவது பணம் சேர்த்து, குடும்பத்துக்கு கொடுத்து விட வேண்டும் என்று விரும்பு கின்றனர். இதற்காக, தன் உயிரை விடவும் தயாராகி விடுவதுண்டு. ஒருவர் விமானத்தில் பயணம் செய்கிறார்... "விமானம் விபத்துக்குள்ளானால், அது உங்களுக்கு ஆபத்தில்லையா?' என்று கேட்டால், "விபத்தில் நான் போய் விட்டாலும், குடும்பத்துக்கு நஷ்ட ஈடு கிடைக்குமே...' என்கிறார்.
ராணுவத்தில் சேர்ந்து கண் காணாத இடத்துக்கு போகிறார் ஒருவர்... "ராணுவத்தில் உயிருக்குக் கூட ஆபத்து வருமே?' என்றால், "அதனால் என்ன? குடும்பத்துக்கு பணம் வருமே...' என் கிறார். எப்படியும் பண ஆசை விடுவதில்லை. ஒருவன், தலையில் பண மூட்டை, ஒரு கையில் குழந்தை, ஒரு கையில் மனைவி, இப்படியாக ஒரு ஆற்றைக் கடக்க முயன்றான். ஆற்றில் வெள்ளம்; அவனால் ஆற்றை கடக்க முடியவில்லை.
அவனை பார்த்து, "உன்னிடம் உள்ளதை விட்டு விட்டால், ஆற்றை கடக்கலாம்...' என்றார் ஆற்றங் கரையில் இருந்த முனிவர் ஒருவர். உடன் அவன் கையில் பிடித்திருந்த குழந்தையை விட்டு விட்டான். அது ஆற்றோடு போய் விட்டது; அப்படியும் அவனால் ஆற்றைக் கடக்க முடியவில்லை. கைப்பிடித் திருந்த மனைவியையும் விட்டு விட்டான். அப்படியும் ஆற்றை கடக்க முடியவில்லை அவனால். முனிவர், "உன் தலையில் உள்ள மூட்டையையும் விட்டு விடு...' என்றார். அதற்கு அவன், "அது மட்டும் முடியாது. அது, நான் கஷ்டப் பட்டு சேர்த்து வைத்த பணம். அதை நான் எப்படி விட முடியும்...' என்று சொல்லி, தலையில் பண மூட்டையுடன் ஆற்றைக் கடக்க முயன்றான்.
ஆற்று வெள்ளம் அவனையும், பண மூட்டை யுடன் அடித்துக் கொண்டு போய் விட்டது. அதாவது மனைவி, பிள்ளைகள் போனாலும் பரவாயில்லை; பணம் மட்டும் போகக் கூடாது. இப்படி ஒரு பண ஆசை. இந்தப் பணம் எத்தனை நாள் இவனோடு இருக்கப் போகிறது? இவன் தான் எத்தனை நாள் இந்தப் பணத்தோடு இருக்கப் போகிறான். என்றாவது ஒரு நாள், இவனும் இருக்கப் போவதில்லை; பணமும் இருக்கப் போவதில்லை.
வாழ்க்கையே நிரந்தரமில்லாத போது, பணமோ, மனைவி - மக்களோ என்ன சாசு வதம்? என்றும் இருப்பவன் பகவான் ஒருவர் தான். பணம், மனைவி - மக்களை நம்பி, அவர்கள் மீது அன்பும், பாசமும் வைப்பதைவிட, என்றும் உள்ள பகவான் மீது அன்பு வைக்கலாமே! அது தான் கிடையாது. பணத்தின் மீது தான் ஆசை. பணம் எத்தனை நாட்களுக்கு காப்பாற்றும்? ஏமாந்தால் திருடன் கொண்டு போய் விடலாம். இறந்தால் உறவினர் பங்கு போட்டுக் கொள்வர். பின் இவனுக்கு என்று எது உள்ளது? பகவானை வழிபட்டால் போதும்! அவர், அவனது துன்பங்களை போக்கி, நல்வழி காட்டி நற்கதி அடையச் செய்வார்; அது தானே முக்கியம். யோசிக்க வேண்டும்!