Wednesday, December 2, 2015

வலம்புரிச் சங்குஆண், பெண் இருபாலாரும் வலம்புரிச் சங்கில் பசும்பால் விட்டு 27 செவ் வாய்க்கிழமை அம்மனை பூஜித்து வந்தால்  அவர்களுக்கு
இருந்துவரும் திருமணதோஷம், செவ்வாய்தோஷம் உட்பட சிலதோஷங் கள் நீங்கி எந்த தடையும் இன்றி திருமணம் இனிதே நடைபெற்று பிள்ளைப்பேரும் பெறுவார்கள் என்கிறார் கள்.
இந்த வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது. சங்கிற்கு சந்தனம், குங்குமம் வைத்து பித்தளை அல்ல து வெள்ளித்தாம்பாளத்தில் வைக்க வேண்டும். எவர் சில்வர் தட்டில் வைத்துவழிபடலாம். அத்துடன், செல் வத்திற்கு அதிதெய்வமான மகாலட்சுமி பிறந்த ஆடி மாதம் பூர நட்சத்திரலும், இந்திரன் லட்சுமியை வண ங்குகிற புரட்டாசி பௌர்ணமியிலும், ஆனி மாதம் சுக்லபட்சம் கூடிய அஷ்டமியிலும், சித்ரா பௌர்ணமி யிலும் வலம்புரிச்சங்கில் பசும்பால் வைத்து மலர்களா ல் சங்கினையும், லட்சுமி யையும் அலங்கரித்து, சந்தனம் குங்குமம் இட்டு அதிரசம், லட்டு ஆகிய வைகளை பசு நெய்யில் செய்து பால் பாயாசம் செய்து பசுநெய் ஊற்றி விளக்கேற்றி பூஜை செய்ய வேண்டும்.
இப்படிச்செய்தால் எல்லா வித செல்வங்களும் வந்து சேரும். இது தவிர செவ்வாய், வெள்ளிக் கிழமைகளிலும் சங்கிற்கு பூஜை செய்யலாம். ஒவ் வொரு நாளும் சங்கில் தண்ணீர் விட்டு அதில் துளசி, வில்வக்கட்டை, ஏலக்காய், பச்சைக்கற்பூரம், குங்குமம், பூ சேர்த்து பூஜை செய்துவிட்டு அதில் சிறிது தண்ணீரைக்குடித்துவிட்டு, சிறிது தண் ணீரை வாசற் படியில் தெளிக்கவும்.
இப்படி 90நாள் செய்தால் திருஷ்டி, போட்டி பொறாமை நீங்கும். வலம்புரி சங்கு இருக்கும் வீட்டில் துர்தேவதை கள் நெருங்காது. இச்சங்கில் தண்ணீர் விட்டு பூஜை செய் து அதை அருந்தினால் வியாதிகளும் குணமடையும். மாமிச உணவருந்திய தினங்களிலும், பெண்கள் மாத விலக்கான நாட்களிலும் வலம்புரிச் சங்கைத் தொடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓரையை பயன்படுத்தி வெற்றி பெறும் சூட்சுமம்


Posted By Muthukumar On ,Dec 2,2015
தமிழர் ஒரு நாளினை தற்காலத்தில் உள்ளதைப் போல நொடி, நிமிடம், மணிநேரம் என்று அளக்காமல் தற்பரை, வினாடி, நாழிகை, ஓரை, பொழுது என அளந்தனர்.

ஒரு நாளின் பொழுதுகளை ஆறு சிறு பொழுதுகளாகவும், ஒவ்வொரு சிறும்பொழுதும் 4 ஓரைகளாகவும் பகுத்தனர். மொத்தம் ஒரு நாள் 24 ஒரைகளைக் கொண்டிருக்கும். சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து(காலை) ஒரு நாள் தொடங்குகிறது. அந்நேரத்திலிருந்து தான், அந்நாளின் ஓரையும் கணக்கிடப்படுகிறது. ஒரு நாளின் தொடக்க ஓரை எவ்வகை ஓரையாக வருகிறதோ அந்நாள் அவ்வோரையின் பெயரில் அழைக்கப்படுகிறது. உதாரணமாக சனி ஓரை முதலில் தொடங்கினால் அன்று சனிக்கிழமை.இவ்வாறுதான் கிழமை முறை வந்திருக்க வேண்டும்.

அதன் பின் ஒவ்வொரு மணி நேரமும் மேலே கூறப்பட்டுள்ள வரிசைப்படி ஓரை கணக்கிடப்படும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை காலை முதல் ஒரு மணி நேரம் (6-7 மணி) சூரியனின் ஓரை. இதையடுத்து 7-8 மணி வரை சுக்கிரன்(வெள்ளி) ஓரை, 8-9 மணி வரை புதன் ஓரை, 9-10 வரை சந்திரன் ஓரை, 10-11 வரை சனி ஓரை, 11-12 மணி வரை குரு(வியாழன்) ஓரை, 12-1 மணி வரை செவ்வாய் ஓரை. இதையடுத்து மீண்டும் சூரியன் ஓரை துவங்கும். இதேபோல் செவ்வாய்க்கிழமை என்றால் அன்று காலை 6 முதல் 7 மணி வரை செவ்வாய் ஒரை, புதன்கிழமை என்றால் காலை 6-7 மணி வரை புதன் ஓரை. பொதுவாக காலை 6 மணி என்பதனை சராசரி சூரிய உதய நேரமாகக் கொண்டு ஓரைகள் கணக்கிடப்படுகின்றன..

ஒரு நாளில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் அடுத்து என்ன நடக்கும் என கணிதம் செய்திட இந்த ஓரைகள் பயன்படுகின்றன..ஒரு நல்ல காரியம் செய்ய அசுப கிரக ஆதிக்கம் பெற்ற ஓரைகளை தவிர்த்து ,சுப கிரக ஓரைகளில் அக்காரியத்தை நம் முன்னோர் செய்து வந்தனர்..பொண்ணு பார்க்க போனால்கூட சுக்கிர ஓரையில் போனால் நல்லது நடக்கும்...

ஒரு காரியத்தை செய்ய நினைக்கும்போது,அந்த நேரம் ராகு காலமா ,எமகண்டமா,குளிகை நேரமா..அன்று என்ன கிழமை ,திதி என்ன,நட்சத்திரம் என்ன ,என ஜோதிடரிடம் ஆலோசிக்க வேண்டும்..ஆனால் அவசரத்துக்கு , நல்ல ஓரையா இருந்தால் போதும் என முடிவு செய்து விடுவர்.

எந்த காரியத்துக்கு என்ன ஓரை என கணக்கு இருக்கிறது....சனி,செவ்வாய்,சூரியன் ஓரைகள் அசுப ஓரையாக இருந்தாலும் முற்றிலும் தவிர்ப்பதில்லை...அரசாங்க காரியம் நடக்க வேண்டும் எனில் சூரிய ஓரையில் முயற்சிக்கலாம்...நெருப்பு,கோர்ட் ,வழக்கு சார்ந்த பிரச்சினைகள் ,எதிரி சார்ந்த பிரச்சினைகள் என்றால் செவ்வாய் ஓரையில் செய்யலாம்..

சுபகாரியம் செய்யும்போது முக்கியமான விசயம் ஒருவரிடம் பேச முயற்சிக்கும்போதும் ,இப்போது ராகு காலமா,எமகண்ட நேரமா,சுப கிரகத்தின் ஓரையா எனா ஒருமுறை காலண்டரில் கவனிப்பது நல்லது.சுக்கிரன்,புதன்,குரு இவற்றின் ஓரைகள் எல்லா சுப காரியங்களுக்கும் சிறப்பு.
சிலர் மிதுன லக்னத்துக்கு யோகாதிபதி ,லக்னாதிபதி புதன் எனில் புதன் ஓரையையே பயன்படுத்தி வெற்றி பெறுவர்.இவ்வாறு நுணுக்கமாக எல்லோராலும் பார்க்க முடியாது.அவர்கள் சுக்கிரன்,புதன்,குரு ஓரையை கவனித்தாலே போதுமானது.

திருவந்திபுரம் ஹயக்ரீவர்!‘கல்விக் கடவுள்’ சரஸ்வதி. அந்த சரஸ்வதிக்கே கல்வியறிவைக் கொடுத்தவர், ஞானத்தின் அதிபதியான ஹயக்ரீவர். அவரைத் தரிசித்தால் தங்கள் பிள்ளைகளுக்கு கல்வி அறிவு பெருகும், குடும்பக் கஷ்டம் நீங்கும் என்பது மக்களின் நம்பிக்கை. அந்த வேண்டுதல்களோடு தங்கள் குழந்தைகளுடன் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார், திருவந்திபுரம் ஹயக்ரீவர்!
நடுநாட்டுத் திருப்பதிகள் இரண்டில் ஒன்றாகப் போற்றப்படுகிறது, கடலூர் மாவட்டம், திருவந்திபுரம். கடலூரிலிருந்து மேற்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும், பண்ருட்டியிலிருந்து கிழக்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள இத்தலத்தில், ஔஷதகிரி மூலிகை மலையின் உச்சியில் அமைந்துள்ளது ‘லக்ஷ்மி ஹயக்ரீவர்’ திருக்கோயில். ‘கல்விக் கடவுள்’ என்று சொல்லப்படும் ஹயக்ரீவருக்கு தமிழகத்திலேயே முதன் முதலில் கோயில் அமையப்பெற்ற தலம் இது என்பது இதன் தனிச்சிறப்பு.
பிரளய காலத்தில் – உலகம் அழியும் சமயம், பிரம்மாவின் தூக்கத்தில் உதித்த அசுரர்கள், வேதங்களைப் பெண் குதிரை வடிவமாக்கி பிரளய வெள்ளத்தில் அதலபாதாளத்தில் ஒளித்து வைக்க, அதனை மீட்க மகாவிஷ்ணு எடுத்த அவதாரம் குதிரைமுக (பரிமுகம்) பெருமாள் (ஹயக்ரீவர்). வேதங்களை மீட்டு வந்ததால் ஞானத்துக்கு அதிபதியாக விளங்குகிறார் லஷ்மி ஹயக்ரீவர்.
இமயமலையிலிருந்து சஞ்சீவ பர்வத மலையை பெயர்த்துக்கொண்டு இலங்கைக்குப் போனார் ஆஞ்சநேயர். அப்போது, அந்த மலையிலிருந்து கீழே விழுந்த ஒரு பகுதிதான் இந்த ஔஷதகிரி மலை. சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன், காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள தூப்பில் கிராமத்தைச் சேர்ந்த வேதாந்த தேசிகன் என்பவர், தனக்கு ஞானம் வேண்டி இந்த ஔஷதகிரி மலையின் மேல் அமர்ந்து கருட பகவானை நோக்கி தவமிருந்தார். அப்போது அவருக்கு அருள்பாலித்த கருட பகவான், ஞானத்துக்கு அதிபதியான ஹயக்ரீவர் மந்திரத்தை உபதேசித்து, ஹயக்ரீவரை வேண்டி பூஜிக்கச் சொன்னார். அதன்படியே பூஜித்த வேதாந்த தேசிகனுக்கு ஹயக்ரீவரும் அருள்பாலித்தார். அதன் பிறகு ‘நவரத்ன மாலை’, ‘மும்மணிக் கோவை’ போன்ற பல தமிழ் நூல்களை எழுதினார் வேதாந்த தேசிகன். அவரால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர்தான் இந்த லக்ஷ்மி ஹயக்ரீவர் என்கிறது புராணம்.
“குழந்தைகளுக்கு கல்வி சம்பந்தமா ஏதாவது தோஷம் இருந்தாலோ, அல்லது கல்வியறிவு பெருக வேண்டியோ, சந்நிதிக்கு வந்து பேனா, நோட்டு, தேன், ஏலக்காய் மாலை வாங்கி ஹயக்ரீவருக்கு பூஜை செய்யணும். பூஜை முடிஞ்சதும் அந்த தேனை குழந்தைகள் நாக்கில் கொஞ்சம் தடவிவிட்டு, ஏலக்காய் ஒண்ணை வாயில் போட்டுவிட்டா போதும்… உடனடியா தோஷமெல்லாம் நிவர்த்தியாகிவிடும். கல்வி அறிவு வளரும்!’’ என்ற கோயிலின் அர்ச்சகர் சேஷா பட்டாச்சார்யார், இத்தலம் பிணி தீர்க்கும் மகத்துவத்தையும் கூறினார்.
‘‘இங்க கொடுக்கிற லக்ஷ்மி தீர்த்தம், தெய்விகமானது. வேதாந்த தேசிகர் ஆராதனை செய்த தீர்த்தம் அது. அந்த தீர்த்தத்தைப் பருகினா உடலில் உள்ள சகல பிணிகளும் பறந்துடும். அதாவது, குதிரைக்கு எப்போதும் வாயிலிருந்து நீர் வடிஞ்சுட்டே இருக்கும். குதிரை ரூபத்தில் இருக்கும் ஹயக்ரீவருக்கும் அப்படித்தான். அப்போது அசுரர்கள் அந்த நீரைப் பருகித்தான் தங்களோட பாவங்களைப் போக்கிக்கிட்டாங்க. இங்க கொடுக்கப்படும் லக்ஷ்மி தீர்த்தமும் அதுபோலத்தான். மூலிகைகளால் தயாரிக்கப்பட்டு அதை ஹயக்ரீவருக்கு ஆராதனை செஞ்சு தீர்த்தமா கொடுக்கப்படுது!’’ என்றார் பட்டாச்சார்யார்.
108 திவ்ய தேசங்களில் திருவந்திபுரமும் ஒன்று. வைகானஸ ஆகம விதிமுறைப்படி தினமும் ஆறு கால பூஜைகள் செய்யப்படுகின்றன. ஹயக்ரீவருக்கு திருவோண நட்சத்திரம் என்பதால், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை பூஜைக்கு உகந்த நாள். இங்கு தினந்தோறும் காலை 8.30-ல் இருந்து 11.30 வரையிலும், மாலை 4.30-ல் இருந்து 7.30 வரையிலும் நடைதிறக்கப்பட்டிருக்கும்.கல்வியருள் பெற… ஹயக்ரீவர் தரிசனம் பெறுங்கள்!

வீட்டிற்குள் தெய்வ சக்தி நிரந்தரமாக நிலைத்திருக்க


வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழைய
 *வீட்டிற்குள் தெய்வ சக்தி நுழையவேண்டும் அது என்றென்றும் நிரந்தர மாக நிலைத்திருக்க‍ வேண்டும் என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஏனென்றால், சாதாரணமாக
மனிதன் மண்மீது ஒரு வீடு கட்டி குடி போகிறார். ஆனால், ஏற்கனவே அவன் வீடு கட்டுவதற்கு முன்பு அந்த மண் மீது என்ன இருந்தது, அந்த மண்மீது எது வாழ்ந்தது, மண்ணிற்கு அடியில் என்ன புதைந்து கிடந்தது என்பதை அறிந்து கொள்ளக் கூடிய ஞானம் மனி தனுக்கு இல்லை. ஆனால், சில பறவைகளுக்கு அதுபோன்ற ஞானம் நிறைய உண்டு.
* குறிப்பாக சிட்டுக்குருவி, புறா, அதற்கடுத்தது அணில் இவைகளுக்கெல் லாம் சூசகமான, சூட்சமமான சக்தியையெல்லாம் உணரக்கூடிய ஆற்றல் உண்டு. அதனால், இயற்கை‌யி‌ல் நம்மை விட நான்கறிவு, மூன்றறிவு உயிரினங்களுக்கு சில சூட்சுமசக்தியை இறைவன் கொடுத்திருக்கிறார்.
* ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் ஏதாவது ஒரு ஜீவ சக்தியை நாம் கொண்டு வர வேண்டும். ஜீவன் என்றால், மனிதனும் உயிருடன் இருக்கிறான், ஜீவனுடன் இருக்கிறான் என்று பார்க்கக்கூடாது. மனிதனைத்தாண்டி சிட்டுக் குருவி போன்ற வற்றிற் கெல்லாம் ஜீவாதார சக்தி அதிகமாக இருக்கிறது. நெற் கதிர்களை வீட்டிற்குள் கட்டித் தொங்க விடு வார். அதைச்சாப்பிட குருவி இரண்டுவரும், கத்தும், கொ றித்துவிட்டு பறக்கும், மீண்டும் வரும். அதேபோல, அணி லுக்கும் கூடு கட்டிக்கொடுப்பார். தூக்கனாங்குருவி கூடு இரண்டு மூன்று எடுத்து வந்து போட்டு வைப்பார். அதை இழுத்துக் கொண்டு போய் ஜன்னல் பக்கத்தில் அது கட்டி வைக்கும்.
* இதெல்லாம் என்னவென்றால், ஜீவாதார சக்தியை வீட்டி ற்குள் கொண்டு வருவதற்கான அமைப்பு. வீட்டில்  சிட்டுக் குருவி, அனில் போன்றவை கூடுகட்டி குஞ்சு பொரிக்கின்றன, குட்டி போ டுகின்றன. இதை சிலர் கலைத்து விடுகிறார்கள். ஆனால், இதுபோன்று இவைகள் வருவது, கூடு கட்டு வது, குஞ்சு பொரிப்பதுநல்லதா
கழுதைபடத்தை வைப்பது, நரி முகத்தில் முழிப்பது என்றுசிலர் சொல்வார்கள். ஆனால், படங்களை வைப்பதைவிட இது போன்று செய்தால் நல்லபலன் இருக்கு ம். புறா கூடு கட்ட வழி செய்வது, அணில் கூடு கட்டி னால் கலைக்காமல் இருப்பது, சிட்டுக்குருவி வீடு கட்டுவது போன்றதெ ல்லாம் சாதமான சக்திகளை கொண்டு வருவதற்கான ஆத்மாக்கள் இவைகளெல்லாம். இது போன்ற சாதகமான சக்தியைக்கொண்டு வருவனவற்றை நாம் விரட்டக்கூடாது. இதெல்லாம் வந்துவிட்டுப் போனாலே நமக்கு நல்லது நடக்கும்.

பிரச்னைகள் தீர்க்கும் பிள்ளையார் சஷ்டி!


மூன்று சஷ்டி விரதங்கள்…
முருகப் பெருமானுக்கு உகந்த திதி, சஷ்டி திதி! அதிலும், ஐப்பசி மாதம் வரும் கந்த சஷ்டி மிகவும் விசேஷம். அன்றுதான் முருகப் பெருமான் சூரபத்மனை சம்ஹாரம் செய்து, விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் அருள்புரிந்தார். இந்தக் கந்த சஷ்டி விரதத்தை ஆறு நாட்கள் அனுஷ்டித்து முருகப் பெருமானை வழிபடுவது நம் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதேபோல், விநாயகர் சஷ்டி விரதமும், பைரவரின் செண்பகா சஷ்டி விரதமும் அன்பர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது.
இந்த மூன்று சஷ்டிகளின் நிறைவில் திருக்கல்யாண வைபவம் நடைபெறுவது விசேஷம். கந்த சஷ்டியின் நிறைவில் முருகர்தெய்வ யானை திருக்கல்யாணம்; விநாயகர் சஷ்டியின் நிறைவில் விநாயகர்வல்லபை; பைரவர் சஷ்டி நிறைவில் பைரவர்ஆனந்தவல்லி ஆகிய திருக்கல்யாணங்கள் நடைபெறுகின்றன.
விரதத்தின் நிறைவில் தெய்விகத் திருமணங்களைத் தரிசிக்கும் பேறு நமக்குக் கிடைப்பதால், இந்த மூன்று சஷ்டிகளிலும் விரதம் இருப்பது மிகவும் சிறந்தது.
பிள்ளையார் சஷ்டி விரதம்
மாகதர் என்னும் முனிவருக்கும், விபுதை என்ற அசுரப் பெண்ணுக்கும் பிறந்தவன் கயமுகாசுரன். அவன் சிவபெருமானைக் குறித்துத் தவமியற்றி, எந்த ஆயுதத்தாலும் தான் அழியக்கூடாது என்று வரம் பெற்றான். வரம் பெற்ற செருக்கில் தேவர், முனிவர் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப்படுத்தினான். அனைவரும் சிவபெருமானிடம் பிரார்த்தித்தனர்.
சிவபெருமான் விநாயகப் பெருமானை அழைத்து, பூத கணங்களுடன் சென்று கயமுகாசுரனை அழிக்கும்படி ஆணை இட்டார். அதேபோல், விநாயகரும் பூதகணங்களுடன் சென்று, கய முகாசுரனுடன் போர் புரிந்தார். விநாயகர் ஏவிய எந்த ஆயுதத்தாலும் கயமுகாசுரனை அழிக்க முடியவில்லை. அப்போதுதான் அவன் பெற்றிருந்த வரம் நினைவுக்கு வரவே, தன்னுடைய தந்தங்களில் ஒன்றை உடைத்து, கயமுகாசுரனின் மேல் ஏவினார் விநாயகர். அது கயமுகாசுரனைத் தாக்கியது. மார்பில் ரத்தம் பெருக்கெடுக்க, வலியால் துடித்த கயமுகாசுரன் மூஷிக வடிவம் கொண்டு ஓடினான். தந்தமும் அவனைத் துரத்தியது. ஓடி ஓடிச் சோர்ந்துபோன கயமுகாசுரன் இறுதியில் விநாயகரைச் சரண் அடைந்தான். விநாயகப் பெருமானும் அவனை மன்னித்து, தனது வாகனமாக ஏற்றுக்கொண்டார்.
கயமுகாசுரனை அடக்கி ஆட்கொண்டு திரும்பிய விநாயகப் பெருமானை பூதகணங்களின் அதிபதியாக நியமித்தார் சிவபெருமான். அன்று முதல், விநாயகருக்கு கணபதி என்ற பெயர் ஏற்பட்டது.
முருகப் பெருமான் சூரபத்மனை மயில் வாகனமாக ஆட்கொண்டு அருளியதுபோல், பிள்ளையாரும் கயமுகாசுரனை சம்ஹாரம் செய்யாமல், வாகனமாக ஏற்று அருள்புரிந்தார். இதனால், பிள்ளையார் சஷ்டி விரதம் இன்னும் விசேஷமாகும்.
பிள்ளையார் சஷ்டி விரதம்
அனுஷ்டிக்கும் முறை
பிள்ளையார் சஷ்டி விரதம் என்பது, கார்த்திகை மாதம் கிருஷ்ண பட்ச பிரதமை தொடங்கி (மார்கழி மாதம் சுக்லபட்ச சஷ்டி திதி வரை) 21 நாட்கள் அனுஷ்டிக்கும் விரதமாகும்.
கார்த்திகை மாதம் கிருஷ்ணபட்ச சஷ்டியன்று காலையில் ஸ்நானம் செய்த பிறகு, உடல் மனத் தூய்மை யுடன் விரதத்தைத் தொடங்க வேண்டும். விரத பங்கம் ஏற்படாமல் இருப்பதற்காக 21 இழைகளுடன் கூடிய நூலை மஞ்சளில் தோய்த்து, விநாயகரை தியானித்து, ஆண்கள் வலது கரத்திலும் பெண்கள் இடது கரத்திலும் காப்பாகக் கட்டிக் கொள்ளவேண்டும்.
முதல் 20  நாட்கள் ஒருவேளை மட்டும் உணவு உண்டு, உபவாசம் இருக்கவேண்டும். இறுதி நாளில் முழு விரதம் இருந்து, இரவு விநாயகரை தரிசித்து வழிபட்டு, விரதத்தைப் பூர்த்தி செய்யவேண்டும்.
21 நாட்களும் விநாயகரின் திருக்கதைகளைப் படிப்பதும், விநாயகரின் திருவிளையாடல்களைப் பேசக் கேட்பதும் மிகப் புண்ணியமாகும். விநாயகர் ஆலயங்களில் விசேஷ அபிஷேகங்கள், ஆராதனைகள் நடைபெற்ற பின், பவித்ரமான விநாயகப் பெருமானின் சரிதத்தைப் பாராயணம் செய்யலாம். உபன்யாசம் செய்யக் கேட்டும் பயன் பெறலாம்.
21 நாட்கள் விரதம் இருக்க இயலாதவர்கள், மார்கழி மாதம் சுக்லபட்சத்தில் வரும் விநாயகர் சஷ்டி அன்று மட்டுமாவது முறைப்படி விரதம் அனுஷ்டித்து விநாயகப் பெருமானின் பூரண அருளைப் பெறலாம்.

விரத நாட்களில் பாராயணம் செய்ய…
கணேச நாமம்!
யதோஷனந்தஸக்தேரனந்தாஸ்ச ஜீவா
யதோ நிர்குணாதப்ரமேயா குணாஸ்தே!
யதோ பாதி ஸர்வம் த்ரிதாபேதபின்னம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யதஸ்சாவிராஸீத் ஜகத்ஸர்வமேதத்
ததாப்ஜாஸனோ விஸ்வகோ விஸ்வகோப்தா
ததேந்த்ராதயோ தேவஸங்கா மனுஷ்யா:
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யதோ வஹ்னிபானூ பவோ பூர்ஜலம் ச
யத: ஸாகராஸ்சந்த்ரமா வ்யோம வாயு:
யுத: ஸ்தாவரா ஜங்கமா வ்ருக்ஷஸங்கா:
ஸதா தம் கணோஸம் நமாமோ பஜாம:
யதோ தானவா: கின்னரா யக்ஷஸங்கா
யதஸ்சாரணா வாரணா: ஸ்வாபதாஸ்ச
யத: பக்ஷிகீடா யதோ வீருதஸ்ச
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யதோ புத்திரஜ்ஞானநாஸோ முமுக்ஷோர்
யத: ஸம்பதோ பக்த ஸந்தோஷிகா: ஸ்யு:
யதோ விக்னநாஸோ யத: கார்யஸித்தி:
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யத: புத்ரஸம்பத் யதோ வாஞ்சிதார்த்தோ
யதோஸபக்தவிக்னா: ததாஸனேகரூபா:
யத: ஸோகமோஹௌ யத: காம ஏவம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யதோஸனந்தஸக்தி: ஸ ஸேஷோ பபூவ
தராதாரணே ஸனேகரூபே ச ஸக்த:
யதோஸனேகதா ஸ்வர்கலோகா ஹி நானா
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
யதோ வேதவாசோ விகுண்டா மனோபி:
ஸதா நேதி நேதீதி யத்தா க்ருணந்தி
பரப்ரம்ஹரூபம் சிதானந்தபூதம்
ஸதா தம் கணேஸம் நமாமோ பஜாம:
ஶ்ரீகணேஸ உவாச
புனரூசே கணாதீஸ: ஸ்தோத்ரமேதத் படேந்நர:
த்ரிஸந்த்யம் த்ரிதினம் தஸ்ய ஸர்வம் கார்யம் பவிஷ்யதி
யோ ஜபேதஷ்டதிவஸம் து தஸவாரம் தினே தினே
ஸ மோசயேத் பந்தகதம் ராஜவத்யம ந ஸம்ஸய:
விதாயகாமோ லபேத் வித்யாம் புத்ரார்த்தீ புத்ரமாப்னுயாத்
யோ ஜயேத் பரயா பக்த்யா கஜானனபரோ நர:
ஏவமுக்தவா ததோ தேவஸ்சாந்தர்த்தானம் கத: ப்ரபு
ஶ்ரீ கணேசாஷ்டகம் சம்பூர்ணம்
எல்லோரும் சொன்னார்கள். அளவற்ற சக்தியுள்ள எவரிடமிருந்து அளவற்ற ஜீவாகள் உண்டானர்களோ, நிர்குணரான எவரிடமிருந்து அளவிற்கடங்காத குணங்கள் உண்டாயினவோ, எவரிடமிருந்து எல்லா உலகமும் முக்குணங்களால் பிரிவுள்ளதாகயிருக்கிறதோ, அப்படிப்பட்ட கணேசரை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து இந்த எல்லா உலகமும் உண்டானதோ, அப்படியே எங்கும் வியாபித்தவரும், உலகத்தைக் கார்க்கிற வருமான பிரம்மதேவனும் உண்டானாரோ, அப்படியே இந்திரன் முதலிய தேவர்களும் மனுஷ்யர்களும் உண்டானார்களோ, அப்படிப்பட்ட கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து அக்னி, சூர்யன், ருத்ரன், பூமி, ஜலம் உண்டாயினவோ, ஏவரிடமிருந்து சமுத்திரங்களும், சந்திரனும், ஆகாசமும், வாயுவும் உண்டாயினவோ, எவரிடமிருந்து அசையாத பொருள்களும், அசையும் பொருள்களும், மரங்களின் கூட்டங்களும் உண்டாயினவோ, அந்தக் கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம், சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து அஸுரர்களும், கின்னரர்களும், யக்ஷர்களின் கூட்டங்களும் உண்டானார்களோ; எவரிடமிருந்து சாரணர்களும், யானைகளும், கரடி, புலி முதலிய பிராணிகளும் உண்டாயினவோ; எவரிடமிருந்து பக்ஷிகள், புழுக்கள் உண்டாயினவோ; எவரிடமிருந்து செடி கொடிகளும் உண்டாயினவோ அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து மோக்ஷத்தை விரும்புகிறவருக்கு அஞ்ஞானம் விலகி ஞானம் உண்டாகிறதோ; எவரிடமிருந்து பக்தர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் சம்பத்துகள் உண்டாகின்றனவோ; எவரிடமிருந்து இடையூறுகள் விலகுமோ; எவரிடமிருந்து கார்யஸித்தி ஏற்படுமோ; அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து புத்திர சம்பத்தும், எவரிடமிருந்து கோரிய பொருளும், எவரிடமிருந்து பக்தியற்றவர்களுக்கு பலவிதமான இடையூறுகளும், எவரிமிருந்து சோகமும், மோகமும், எவரிடமிருந்து இவ்வுலகில் வேண்டிய போகமும் உண்டாகுமோ, அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து அளவற்ற சக்தியுள்ளவரும், பலவகைப்பட்ட பூமியை தரிக்கும் சக்தி வாய்ந்தவருமான அந்த ஆதிசேஷன் உண்டானாரோ, எவரிடமிருந்து பலவகைப்பட்ட சுவர்க்கம் முதலிய லோகங்களும் உண்டாயினவோ, அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம், சேவையும் செய்கிறோம்.
எவரிடமிருந்து மனோவிருத்திகளால் அளவிடமுடியாத வேத வாக்குகள் உண்டாகி எப்பொழுதும் அஸத்தான வஸ்துக்களை ‘ஸத்வஸ்து அல்ல’ என்பதை சொல்லுவதன் மூலம் சிதாநந்த ரூபமான பரப்ரம்ம ஸ்வரூபத்தை உபதேசிக்கின்றனவோ அந்த கணபதியை எப்பொழுதும் நமஸ்கரிக்கிறோம். சேவையும் செய்கிறோம்.