Tuesday, January 31, 2012

நிஜ சம்பவம் : முருக பக்தரின் வாழ்வில் நடந்த அதிசயம்..

Posted On Jan 31,2012,By Muthukumar

முருகர் நிகழ்த்திய அற்புதங்கள் என்று பல கதைகள் உண்டு. வரலாற்றுரீதியில் லேட்டஸ்ட்டாக அருணகிரிநாதர் கதையை அறிந்திருப்பீர்கள். ஆடாத ஆட்டமெல்லாம் ஆடியதால், தொழுநோய் வந்து உற்றார் உறவினர் எல்லோராலும் விரட்டியடிக்கப்பட்ட அருணகிரிநாதர், தான் செய்த தவறுகளை உணர்ந்து இனியும் தான் வாழ்வது வீண் என்று முடிவு செய்து திருப்பரங்குன்றம் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயல்கிறார். அப்போது முருகர் தடுத்தாட்கொண்டு, நல்ல உடல்நலனையும், அருளையும் வாரி வழங்கியது வரலாறு.

அதிகமாக அறிவு வளர்ந்துவிட்ட நமக்கு ‘இதென்னடா, இப்படிக் கதை விடுறானுக..தொழுநோய் வந்துச்சாம்..முருகரும் வந்தாராம்..ச்சூ மந்திரகாளின்னு தொழுநோயை விரட்டினாராம்..நல்லா விட்றுக்காங்கப்பா ரீலு’ என்று தோன்றும். அது ஒன்றும் பெரிய தவறில்லை தான்..அது அப்படியே இருக்கட்டும்..

இன்று நான் என் உறவினர் வாழ்வில் நடந்த சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்..இது நடந்தது சரியாக 22 வருடங்கள் முன்பு..அவர் ஒரு கடின உழைப்பாளி. கல்யாணம் ஆகி இரண்டு வருடங்களே ஆகியிருந்தது. குழந்தையில்லை. நன்றாக இருந்த மனிதர் திடீரென மெலியத் தொடங்கினார். கூடவே தீராத ஜலதோஷம் வேறு. பல மாத்திரைகளை அவராகவே வாங்கிப் போட்டும் ஒன்றும் கேட்கவில்லை.

உடம்பில் இருந்த சத்தையெல்லாம் யாரோ ஸ்ட்ரா போட்டு உறிஞ்சுவது போல், தினமும் அவரின் மெலிவு சீராகத் தொடர்ந்து. கூடவே இருமலும் சேர்ந்துகொண்டது. அதன்பின் ஆஸ்பத்திரிக்குச் சென்று காட்டினால் ‘காசநோய்’ என்று சொல்லிவிட்டார்கள். அதுமட்டுமல்ல, மிகவும் முத்திப்போய்விட்டதாகவும், இன்னும் சில மாதங்களே இருப்பார் என்றும் சொல்லிவிட்டார்கள். அப்போது மருத்துவ வசதிகளும் இந்த அளவிற்கு இல்லை. வசதியின்மை காரணமாக அரசு ஆஸ்பத்திரியை விட்டால், வேறு வழியும் இல்லை.

அவர் உழைப்பில் தான் குடும்பம் ஓடிக்கொண்டிருந்தது. அவர் இனி அவ்வளவு தான் என்ற செய்தி கிடைக்கவுமே அவர் உடன்பிறப்புகள் இந்தப் பக்கமே வருவதில்லை. நோய் ஒட்டிக்கொள்ளுமோ என்ற பயம் வேறு. கையிலோ காசும் இல்லாமல், வறுமையும் சேர்ந்து அவரைக் கொன்றது. அப்போது அவர் மனைவி செய்தது தான் ஆச்சரியமான விஷயம். அவராலோ வேலைக்குப் போக முடியவில்லை. இனி ரொம்ப நாள் அவர் இருக்கப்போவதும் இல்லை. இனி எதற்கு அவருடன் சேர்ந்து கஷ்டப்பட வேண்டும் என்று நன்றாக யோசித்துவிட்டு, தன் தாய்வீட்டிற்கு கிளம்பிப் போய்விட்டார். 

‘இல்லானை இல்லாளும் மதியாள்’ என்ற அவ்வையின் வாக்கின் அர்த்தத்தை அன்று தான் அவர் உணர்ந்தார். மனம் நொந்தார். உயிருள்ள அனாதைப் பிணமாய் ஆனார். ’இது என்ன வாழ்க்கை..சிறு நோய் வந்தால் எல்லாமே தலைகீழாய் மாறிவிடுமா? இதற்கா இத்தனை ஆட்டம், கொண்டாட்டம்’ என்று யோசித்தார். திக்கற்றவனுக்கு தெய்வமே துணை. அவருக்கு அவர்களது குடும்பம் அடிக்கடி சென்று வழிபடும் ஸ்ரீவாளசுப்பிரமணியர் கோவில் ஞாபகம் வந்தது. அது ராஜபாளையம் அருகே தென்மலை என்ற கிராமத்து மலைமேல் உள்ளது. மிகச் சிறிய கோவில். முருகர் மட்டுமே அங்கு உண்டு. யாரும் அடிக்கடி அங்கு போக மாட்டார்கள். ஏறிச்செல்வதும் கஷ்டம். அங்கே அப்போது கட்டிடங்களும் ஏதும் கிடையாது. ஒதுங்க நிழலும் கிடையாது. ஆனால் ஒரு நாழிக்கிணறும், சிறு குட்டை போன்ற தெப்பமும் உண்டு.

தான் இனி அதிக நாள் இருக்க மாட்டோம் என்று அவருக்கே தெரிந்தது. இந்த மனிதர்களிடையே சாவதைவிட அங்கு சென்று முருகன் காலடியில் உயிரை விடலாம் என்று முடிவு செய்தார். அந்த முருகரைப் பற்றி பலகதைகள் உண்டு. எங்கள் தாத்தா ஒருவர் ஒரு நள்ளிரவில் அந்த மலையில் இருந்து கோமணம் கட்டிய ஒருவர், கையில் தடியுடன் உலாத்தியதைக் கண்டிருக்கிறார். எனவே அந்த சக்தி வாய்ந்த மலைக்குப் போய், அங்கேயே வயனம் காப்பது என்று முடிவு செய்தார்.

வயனம் காத்தல் என்பது ஏறக்குறைய துறவு நிலை. கோவிலே கதி என்று உட்கார்ந்து விடுவது. அங்கு என்ன கிடைக்கிறதோ, அதை மட்டுமே உண்டு வாழ்வது. அந்த மலையில் த்ண்ணீரைத் தவிர வேறேதும் கிடையாது. எப்போதாவது யாராவது வந்தால், சாப்பாடு தருவார்கள். இல்லையென்றால் அதுவும் அவன் சித்தம் என்று சும்மா உட்கார்ந்து விடுவது.

அவர் அப்படியே அங்கு அமர்ந்தார். ‘ஏன் எனக்கு இந்த நிலைமை? வாழ வேண்டிய வயதில் ஏன் என்னை நோயாளி ஆக்கினாய்?’ என்று தினமும் அழுதபடியே முருகரைப் பார்த்துக் கேட்டுக்கொண்டேயிருந்தார். காசநோயும் முத்திக்கொண்டே போனது. இப்படியே ஏறக்குறைய ஆறுமாதங்களுக்கு அவர் தனித்திருந்தார். உடம்பில் சதை காணாமல் போய், எழும்பும் உருகத் தொடங்கியிருந்தது. சளி உடலை அரித்துத் தின்றுகொண்டிருந்தது. 


அவர்-மலை-முருகர் மூவர் மட்டுமே இருந்தனர். நாளாக நாளாக அவரே மலை போல் தன்னைப் பற்றிய உணர்வற்றவராய் ஆனார். தன் உடலை மறந்தார், நோயையும் மறந்தார். முருகரை மட்டுமே நினைந்தார். கோவணாண்டி மட்டுமே அவருக்குத் தெரிந்தார். இவரும் சிலையாய் முருகர் சன்னதி எதிரே சமைந்திருந்தார். ஒரு கார்த்திகை மாத நள்ளிரவில் அவருக்கு ஒரு குரல் கேட்டது. ”எழுந்து உள்ளே வா” என்று கர்ப்பகிரகத்தில் இருந்து ஒரு குரல் கேட்டது. அவர் எழுந்து உள்ளே போனார். அங்கே முருகரின் சிலை இல்லை. கண்ணை கூசச் செய்யும் ஒளி மட்டுமே அங்கே இருந்தது. அவருக்கு இது கனவோ என்று தோன்றியது. ஆனால் தான் கருவறைக்குள் நின்றுகொண்டிருப்பதும் அவருக்குத் தெரியவில்லை. அவருக்கு ஏதும் சொல்ல வராமல் அழுதார், அங்கேயே சரிந்து உட்கார்ந்து அழுதார். அப்படியே தூக்கம் அவரை இழுத்துக்கொண்டது.

மறுநாள் காலையில் உடலில் பலம் கூடியிருப்பது போல் தெரிந்தது. இருமல் இல்லை. சந்தேகத்துடனே தொடர்ந்து இரண்டு மூன்று நாட்கள் அங்கேயே இருந்தார். சளியோ இருமலோ இல்லவே இல்லை. அவருக்கு ஆனந்தம் தாங்கவில்லை. ‘முருகா..முருகா’ என்று ஆனந்தக் கூத்தாடினார். மலையில் இருந்து இறங்கி ஊருக்குள் போய்ச் சொன்னார். மனைவியும் திரும்பி வந்தார். கொஞ்சம் கொஞ்சமாக உடம்பு பழைய நிலைக்கு மாத்திரைகள் இல்லாமலே திரும்பியது. டாக்டர்களுக்கும் ஆச்சரியம் தான். சொந்தங்களுக்கும் ஆச்சரியம் தான்.

இப்போதும் அவர் செவ்வாய்-வெள்ளியன்று அதிகாலையில் அந்த முருகர் கோவிலுக்குப் போய் வருகிறார். ஒவ்வொரு மாத கார்த்திகை நட்சத்திர நாளன்று அவர் பொறுப்பில் பூஜையும் நடத்தப்படுகிறது. எனக்கு அவர் சித்தப்பா முறையாவார். இப்போது அவருக்கு இரண்டு குழந்தைகள். நல்ல வசதியுடன் முருகன் அருளால் வாழ்கிறார்.

சென்ற வருட கார்த்திகைத் திருவிழாவின்போது, அந்தக் கோவிலில் அவருடன் இருந்தேன். இன்றும் அவர் பக்திகுறையாமல் ஒவ்வொரு படி ஏறும்போதும் முருகா..முருகா என்று அழைத்தபடியே வந்தார். முருகரின் அருளுக்குச் சாட்சியாக அவர் வலம் வருவதை பலரும் சுட்டிக் காட்டிப் பேசிக்கொண்டிருந்தனர். ‘இது எப்படிச் சாத்தியம்?” என்று இப்போது புதிதாக அவரைப் பார்த்த எல்லோருமே கேட்டார்கள்.

அது அவருக்கு எப்படித் தெரியும்?

அதை அவன் மட்டுமே அறிவான்.

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!


கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே!


மாறுபடு சூரரை வதைத்த முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே!


ஆறுமுகம் ஆன பொருள் நீ! அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமாளே!


கோவிலுக்குச் செல்லும் வழி:

ராஜபாளையத்தில் இருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் பருவக்குடி-முக்குரோடு பஸ் ஸ்டாப்பில் இறங்கவும். அங்கிருந்து தனியே சிவகிரிக்கு ஒரு சாலை செல்லும். அதில் சென்றால் இரண்டாவது ஊர் தென்மலை. அங்கே மலை மேல் வீற்றிருக்கின்றார் ஸ்ரீவாள சுப்பிர மணியர். சிறிய கோவில், இப்போது கொஞ்சம் எடுத்துக் கட்டியுள்ளார்கள். வெள்ளிக்கிழமை மட்டுமே பூஜை நடக்கும். ஆனாலும் மற்ற நாட்களிலும் நல்ல அதிர்வு இருக்கும் இடம் அது. யாருமே இல்லாத நேரத்தில் தரிசிப்பதும் நல்ல அனுபவம்.
 
நம்பினோர் கைவிடப்படார்...!
 
நன்றி : திரு . செங்கோவி .  

காஞ்சி: சித்ரகுப்தனுக்கு கோயில் !! எந்த திசையில் தீபம் ஏற்றவே கூடாது?Posted On Jan 31,2012,By Muthukumar

கச்சபேஸ்வரர் கோவில் ! இதுவும் காஞ்சி அம்மன் கோயிலுக்கு அருகே நடந்து போகும் தூரத்தில் தான் உள்ளது. இதனை ஒரு சிவ விஷ்ணு ஆலயம் என்று கூட சொல்லலாம். காரணம் முக்கிய சிவன் சன்னதிக்கு எதிரிலேயே பெருமாளுக்கும் சந்நிதி உள்ளது.

கச்சபேஸ்வரர் கோவில்
" கச்ச" என்றால் ஆமை என்று பொருள். இந்த இடத்தில், பெருமாள் ஆமை வடிவில் வந்து சிவனுக்கு பூஜை செய்தார் என்பது ஐதீகம். இங்கு உள்ள கோயில் குளத்தில் ஏராளமான ஆமைகள் உண்டு.
கோயிலின் நுழைவு வாயில்
இந்த கோயிலில் நான் மிக ரசித்த விஷயம் ஒன்று உண்டு. சிவனை மிக வழிபட்ட வாழ்ந்து மறைந்த மனிதர்களான நாயன்மார்களுக்கு இங்கு சிலை இருப்பதுடன் அவர் எதனால் சிறப்பு பெற்றார் என்பதை ஓரிரு வரிகளில் எழுதி வைத்துள்ளனர். உதாரணத்துக்கு சில:

அதிபத்தர்: இந்த நாயன்மார் ஒரு மீனவர். கடலில் பிடிக்கும் முதல் மீன் சிவனுக்கு என்று கடலில் விட்டு விடுவாராம். இவரை சோதித்து பார்க்க ஒரு முறை முதல் மீன் தங்க மீனாக வர வைத்தாராம் சிவன். அதையும் " சிவனுக்கு" என்று சொல்லி கடலில் போட்டாராம் அதிபத்தர்.

புகழ் சோழர்: போரில் வென்ற தலைகளில் சடை முடியுடன் கூடிய தலை கண்டதும் சிவபக்தனை கொன்ற பாவம் தீர தீக்குள் புகுந்தவர்.


நாங்கள் சென்ற போது அங்கு ஒருவர் விஷ்ணு துர்கை சந்நிதி அருகே அருமையாக நாதஸ்வரம் வாசிக்க, அந்த பின்னணி இசையுடன் இந்த கோயிலை ஒரு வீடியோ எடுத்தேன் பாருங்கள்கோபுரத்தில் அமர்ந்திருக்கும் கிளிகள்

***********
காஞ்சி பேருந்து நிலையத்துக்கு மிக அருகில் உள்ளது சித்ரகுப்தன் கோயில். நாங்கள் சென்ற ஞாயிறு காலை செம கூட்டம் ! சிறிய கோயிலாக தான் உள்ளது.உலகிலேயே சித்திர குப்தனுக்கு கோயில் இருப்பது இங்கு தான் என்பது குறிப்பிட தக்கதுஇங்கே விளக்கு ஏற்றுவது குறித்து படித்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்:

கிழக்கே தீபம் ஏற்ற - துன்பம் ஒழியும் !

மேற்கே தீபம் ஏற்ற - கடன் தொல்லை/ பங்காளி பகை நீங்கும் !

வடக்கே தீபம் ஏற்ற - திருமண தடை/ கல்வி தடை நீங்கும் !

தெற்கு திசை நோக்கி மட்டும் தீபம் ஏற்ற கூடாதாம் !!

***

மேலும் இங்கு ஸ்ரீமன் நாராயணன் வாக்கு என்று, " கீழே உள்ளவற்றில் ஏதாவது ஒன்றை பின் பற்றினாலே போதும்... வாழ்வில் முன்னேறலாம் !" என்று போட்டிருந்தார்கள். ஆர்வமாய் ஒன்று தானே Follow செய்தால் போச்சு என்று படித்தால், எல்லாமே பின் பற்ற கஷ்டமாய் இருந்தது.. உதாரணத்துக்கு சில..

தன்னலமற்ற சேவை

அவா விடுத்தல்

பெற்றோர் பேச்சிற்கு முழுதும் கீழ்படிதல்

*****************
சித்ர குப்தன்   கோயிலுக்கு சற்று எதிரிலேயே எமனுக்கும் கோயில் உள்ளது. நாங்கள் சென்ற காலை பதினோரு மணிக்கே பூட்டியிருந்தது. அதிகம் திறப்பதில்லை என்றார்கள். மிக சிறிய கோயிலாக தான் தெரிகிறது. வெளியே உள்ள சுவரில் சிவன் ஓவியம் தான் உள்ளது. உள்ளே எம தர்மருக்கு விக்ரகம் இருக்கும் போலும் !!


சித்திர குப்தன் கோயில் எதிரில் உள்ள எமதர்மன் கோவில் 
*************காஞ்சிபுரத்தில் உள்ள மற்றொரு நல்ல சிறு ஹோட்டலை அறிமுக படுத்துகிறேன். காஞ்சி காமாட்சி அம்மன் கோவில் அருகிலேயே உள்ளது அன்னபூர்ணா பவன் ஹோட்டல். பிராமண குடும்பம் ஒன்று அவர்களே சமைத்து பரிமாறுகிறார்கள். மதிய சாப்பாடு நாங்கள் சாப்பிட்டோம். குறிப்பாய் வத்தல் குழம்பு செமையாக இருந்தது. காய்கறிகளும் அருமை. நாற்பது ரூபாய்க்கு மிக நிறைவான சாப்பாடு. காஞ்சி காமாட்சி கோயில் சென்றால், வெளியே வந்த பின் நிச்சயம் இங்கு சாப்பிடலாம் நீங்கள் !
Saturday, January 28, 2012

திருவண்ணாமலை தீர்த்தங்கள்!

Posted On Jan  28,2012,By Muthukumar
தெய்வத் திருமலை திருவண்ணாலையில் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாமலும் முந்நூற்று அறுபது தீர்த்தங்கள் இருக்கின்றனவாம்.
இந்தத் தீர்த்தங்களிலே கங்கை, யமுனை, சரஸ்வதி, கோதாவரி, நர்மதா, சிந்து, காவேரி முதலான புனித நதிகள் திருவிழாக் காலங்களில் வந்து கலப்பதாக புராணங்கள் விரிவாக எடுத்துக் கூறுகின்றன. அவற்றுள் சில:
திருவண்ணாமலையின் கிழக்கே இந்திரனால் உண்டாக்கப்பட்ட தீர்த்தம் ஒன்று உள்ளது. இது இந்திர தீர்த்தம் எனப்படும். இத்தீர்த்தத்தில் தைப்பூசத்தன்று நீராடி ஒரு கையளவு நீர் உட்கொண்டால் கோடி பிரம்மஹத்தி தோஷம் போகும். அங்கு நீராடிய இந்திரன் தன் குற்றங்கள் நீங்கப்பெற்று தொடர்ந்து இந்திரப் பதவியை வகிக்கும் பேறு பெற்றான்.
திருவண்ணாமலைக்குத் தென்கிழக்கில் அக்னி தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் பங்குனி மாதம் பௌர்ணமி நாளில் மூழ்கி எழுந்தால் எப்பேர்ப்பட்ட பாவமும் நீங்கும். அறமும் தவமும் வந்து சேரும். அக்னிதேவன் தனக்கு ஏற்பட்ட பாவத்தை இந்தத் தீர்த்தத்தில் மூழ்கி இறைவனை வழிபட்டு போக்கிக் கொண்டான்.
திருவண்ணாமலையின் நிருதி மூலையில் நிருதி தீர்த்தம் இருக்கிறது. இத்தீர்த்தத்தில் மூழ்குபவர்களுக்கு பகை நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நிருதியானவள் இத்தீர்த்தத்தில் மூழ்கியதன் பயனாக நெருப்பு போன்ற கண்களையும், பிளந்த வாயினையும் உடைய ஒரு ராட்சஸப் பேயை தன் வயமாக்கிக் கொண்டான்.
திருவண்ணாமலைக்கு மேற்கு திக்கில் வருண தீர்த்தம் என்று ஒன்றுண்டு அதில் பக்தியோடு மூழ்கி எழுந்தால் ஒன்பது கிரகங்களும் நன்மையைச் செய்யும். அந்த ஒன்பது கிரகங்களும் அதன்படி மூழ்கி வேண்டிய வரங்களைப் பெற்றனவாம். அத்தீர்த்தத்தின் வாயு திசையில் வாயு தீர்த்தம் இருக்கின்றது. அத்தீர்த்தத்தில் மூழ்கினால் சகல துன்பங்களும் தீரும் என்பர்.
திருவண்ணாமலையில் வடதிசையில் குபேர தீர்த்தம் என்றொரு தீர்த்தம் உண்டு. அதில் மூழ்கி எழுந்தால் சகல பாவங்களும் நீங்கி மேலான நிலையை அடைவதோடு சிவபெருமானின் பாதங்களைச் சேர்வார்கள்.
திருவண்ணாமலையில் எமன் தீர்த்தத்திற்குத் தெற்கே அகத்தியத் தீர்த்தம் இருக்கிறது. புரட்டாசி மாதத்தில் அதில் மூழ்கி நீராடி தீர்த்தம் அருந்தினால் பெரும் பண்டிதர் ஆவார் என்றும்; திருமகளும் கலைமகளும் அவரிடத்திலே வந்து தங்கியிருப்பார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
திருவண்ணாமலையில் குபேர தீர்த்தத்தின் அருகே வசிட்ட தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. அதில் நீராடிய வசிஷ்ட முனிவர் முனிவர்களுக்கெல்லாம் தலைமையைப் பெற்றார். அத்தீர்த்தத்தில் மூழ்கியவர்களுக்கு எல்லா சாஸ்திரங்களும் விளங்கும்.
திருவண்ணாலையின் வடக்கு பக்கத்தில் திருநதி என்று ஒரு நதியுண்டு. அதில் திருமகளான லட்சுமிதேவி மூழ்கி எழுந்ததால் திருமாலின் மார்பினைச் சேர்ந்தார்.
நர்மதை ஆற்றினால் வணங்கப்படும் சோணம் என்ற ஒரு நதி அண்ணாமலையின் தெற்கே இருக்கிறது. அதில் கங்கை, யமுனை, காவிரி ஆகியோர் வந்து மூழ்கித் தங்கள் துன்பத்தைப் போக்கிக் கொண்டார்களாம்.
திருவண்ணாமலையின் மேற்கு திசையில் புண்ணியநதி என்று ஒன்று உண்டு. அதன் அருகே புண்ணியாற்றூர் என்று ஒரூர் இருக்கிறது. அங்கு வாழ்ந்த ஈழன் என்ற அரசன் தனக்கு தீங்காக வந்தடைந்த பெண் உருவை அந்நதியில் மூழ்கிப் போக்கிப் பெரும் பேறு பெற்றான். இப்புண்ணிய நதிக்கு வடப்பக்கம் சேயாறு என்ற ஆறு உள்ளது. அது முருகப் பெருமானால் உண்டாக்கப்பட்டது என்பர். அதில் முருகப் பெருமானே மூழ்கி எழுந்து அசுரர்களைக் கொல்லும் வரமும் தேவசேனாதிபதி என்ற பேறும் பெற்றார்.
திருவண்ணாமலைப் பெருமான் கோயிலில், உள்ளே சிவகங்கைத் தீர்த்தம் என்று ஒரு தீர்த்தம் உண்டு. இதனை தினந்தோறும் உள்ளத்தில் நினைத்தால் கங்கை நதியில் மூழ்கிய பயன் உண்டாகும். அநேக உருத்திரர்கள் அதில் மாசி மாதத்தில் மூழ்கி இடபாரூடராய் எல்லா தேவரினும் மேலான பேறு பெற்றார்கள்.
திருவண்ணாமலையில் உள்ள சிவகங்கை தீர்த்தத்தின் கிழக்கே சக்கர தீர்த்தம் இருக்கிறது. திருமால் வராக அவதாரம் எடுத்தபோது அதில் நீராடினாராம். அதில் நீராடுவோரும், அந்நீரை அருந்தியவர்களும் அதனை வலமாக வந்தவர்களும் துயரக்கடல் நீங்கி சிவபெருமானின் திருவடிகளைச் சேர்வர்.
திருவண்ணாமலையார் சன்னதியில் அக்னி திசையில் பிரம்மதேவனால் அமைக்கப்பெற்ற பிரம்ம தீர்த்தம் ஒன்றுண்டு. அதில் மூழ்கியவர்கள் பிறவிக் கடலில் நீந்தி சென்ற பிறப்புகளில் சேர்ந்த தீவினைகள் அனைத்தும் நீங்கப் பெறுவர். அந்த பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கி அணுவளவுப் பொன்னை தானம் கொடுப்பாராயின், நவமணிகள் நிறைந்த நிலவுலகத்தையே ஒரு அடியவருக்குக் கொடுத்த புண்ணியத்தை அடைவர். இத்தீர்த்தத்தில் மூழ்கி எழுந்து தானங்களைச் செய்தவர்கள் சிவபெருமானின் திருவடித் தாமரையை அடைவார்கள்.
விநாயகர், முருகன், சூரியன், சந்திரன், கங்கை, பார்வதி, பைரவர், சப்த கன்னியர், அட்டவசுக்கள், தேவர்கள் ஆகியோர் மூழ்கி எழுந்த தீர்த்தங்கள் பலவுண்டு. அவற்றின் பெருமையை வேதங்களும் அறியாது.
திருக்கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களில் தீர்த்தவாரி என்பது ஒரு முக்கிய நிகழ்வாகும். இறைவனையும் இறைவியையும் தரிசித்தவர்கள் இருவினையும், மும்மலங்களும் அடங்கி இறைவியின் திருப்பாதம் பெற்று பேரின்பத்தில் மூழ்குவர் என்பதாகும். இதன் அடிப்படையில்தான் பத்தாவது நாளில் தீர்த்தவாரி என்ற நிகழ்ச்சி திருக்கோயில்களில் நடைபெற்று வருகிறது.
தீர்த்தவாரி நடைபெறும்போது மக்களின் ஆன்மா குளிர்ச்சியடைகிறது. அதாவது இறைவனோடு இறைபக்தியும் சேர்கிறது. திருவண்ணாமலை திருக்கோயில் இறைவன் மணலூர்பேட்டை சென்று தீர்த்தமாடுவதும், கலசப்பாக்கம் சென்று தீர்த்தமாடுவதும் அந்தந்த ஆற்றிற்கு சிறப்பாகும்.
எல்லா நதிகளும் அங்கு ஒன்றாகக் கலந்து இறைவனை வழிபடுவதாக அர்த்தம். ஆக, தீர்த்தவாரி என்பது மிகவும் முக்கியமானதாகும். லட்சக்கணக்கான பக்தர்கள்கூடி இறைவன் தீர்த்தவாரி செய்து அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும்போது தாங்களும் நீராடுவதால் தங்களுடைய பாவங்களைத் தீர்த்தது போல் ஓர் உள்ளுணர்வு ஏற்பட்டு மனநிம்மதி அடைகின்றனர்.

Friday, January 27, 2012

திருமணத்தடை நீக்கும் கல்யாண சுந்தரேசுவரர்

Posted On Jan 28,2012,By Muthukumar


தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள திருநல்லூரில் பிரசித்திபெற்ற கல்யாண சுந்தரேசுவரர் கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் ஆசிரியர்கள் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் மற்றும் நம்பியாண்டார் நம்பி, சேக்கிழார், அருணகிரியார், மலைக்கொழுந்து நாவலர், ராமலிங்கஅடிகள் ஆகியோரால் பாடல் பெற்ற பெருமை இத்தலத்திற்கு உண்டு.
இந்த கோவிலில் உள்ள மூலவர் லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். இந்த மூலலிங்கத்தின் அருட்குறி(பாணம்) எந்த பொருளால் ஆனது என்று கூற இயலாத நிலையில் தானே முளைத்ததாக காணப்படுகிறது. இன்றும் இங்குள்ள இறைவன் தினமும் 5 முறை நிறம் மாறி மாறி காட்சி அளிக்கிறார்.
ஐந்து வகை நிறத்துடன் இறைவன் தோன்றுவதால் `பஞ்சவர்ணேசுவரர்' என்றும், அமர்நீதியார், அப்பர் ஆகியோரை ஆட்கொண்டமையால் `ஆண்டார்' எனவும், அகத்தியருக்கு தன் திருமண கோலத்தை காட்டி அருளியமையால் `கல்யாண சுந்தரர்' என்றும், மிகுந்த பேரழகுடன் விளங்குவதால் `சுந்தரநாதன்', `சவுந்தரநாயகர்' என்றும் பல்வேறு பெயர்களில் இவர் அழைக்கப்படுகிறார்.
இங்குள்ள சிவலிங்கத்தில் ஒரே ஆவுடையாரில் இரண்டு பானங்கள் உள்ள அமைப்பை தமிழகத்தில் வேறு எங்கும் காண முடியாது என்கிறார்கள்
இத்தலத்தில் தான் அப்பர் சுவாமிகளுக்கு
சிவபெருமான் திருவடி சூட்டி அருளினார். அதன் நினைவாக இன்றும் இத்தலத்திற்கு வரும் பக்தர்களுக்கு திருவடி (சடாரி) சூட்டப்படுகிறது.
திருமண கோலத்தில் இறைவன் காட்சி அளிப்பதால் திருமணத் தடை உள்ளவர்கள், இங்குள்ள இறைவனையும், இறைவியையும் திருமண பாக்கியம் வேண்டி 2 மலர் மாலைகளை சூட வேண்டும். பின்னர் அதில் ஒரு மாலையை அணிந்து கொண்டால் எளிதில் திருமண பாக்கியம் கிட்டும் என்கிறார்கள்.
பாபநாசம் - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில், பாபநாசத்தில் இருந்து வலங்கைமான் செல்லும் சாலையில் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் திருநல்லூர் அமைந்துள்ளது.

தமிழகத்திலுள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் பற்றிய முழு விபரம் அறிந்திட‌ . . .


 தமிழகத்தில்  ஒவ்வொரு  மாவட்டத்திலுமுள் ள முக்கிய வழிபாட்டு தலங்கள், பூங்காக்கள்,  நினைவிடங்கள், கடற்கரைகள் உள்ளிட்ட அனைத்து சுற்றுலா தலங்கள்  பற்றிய முழு விப ரமும் tamilnadutourism.org இத்தளத்தில் உள்ளது .
தமிழ் நாடு சுற்றுலா வழிகாட்டுதலுக்கு இதைவிட சிறந்த தளங்கள் இல்லை எனலாம் .

Thursday, January 26, 2012

நந்திக்கு குறுக்கே ஏன் போகக் கூடாது ?


சிவலிங்க வழிபாடு இந்தியாவில் குறிப்பாக திராவிட இனத்தில் சிந்து சமவெளி நாகரீகம் தொட்டே நடைபெற்றுவருவதென்பதற்கு சாட் சியாக ஆங்கில ஆய்வளர்க ளால் சிந்து சமவெளி நாகரீகத்தில் அகழ்ந் து எடுக்கப்பட்ட நூற்றுக்கணக் கான சிவலிங்க உருவங்களே சாட்சி. ஆரியர்கள் இவ்வுருக்களை ஆண் குறி வடிவம் என்று வேதங்களில் இழித்தே கூறி இருக்கின்றனர். சிவ லிங்க உருவம் ஆண் குறி குறியீடா ? என்று பார்த்தால் அவ்வாறு பொருள ல்ல வென்றும், முழு முதற்கடவுளா கிய சிவபெருமானின் பேரொளியை தீ வடிவத் தில் வழிபட்டதும் அத்தீ அமைக்க அமைக்கப்பட்ட வேள்விக் குழியே ஆவுடையார் எனும் கீழ்பீடமாகவும். கொழுந்து விட்டொறிந்த ஜோதியே லிங்க வடிவமாகவும் வடிக்கப் பெற்றதென்பர். அதாவது ஆண் பெண் வடிவ த்தினனில்லாத இறைவனை ஜோதியாக உருவகித்து வழிபட்டதே சிவலிங்க சொரூபமென்பர்.
ஆரியர்க்கு இறைவணக்கமெல்லாம் இந்திரன், வருணன் போன் றோர்காக செய்யப்படும் வேள் வித்தீயும் அதற்கு முன் இடப்ப டும் குதிரை, காளை ஆகியவற் றின் உயிர்பலியுமேயாகும் என் பது வேதங்களில் தெளிவாக் கப்பட்டு இருக்கிறது. ஆரியர்க ளின் வேள்வியை காக்கும் பொருட்டு அவிற்பாகம் பெற் றுக் கொண்டு வேள்வியை அழி க்கவரும் அசுரர்களை அழிப்ப தே ருத்திரன் எனும் வேத தெய் வம் என்பர். சுரர் என்றால் சுரா பாணம் அருந்துபவர்கள் அதாவது தேவர்கள். அசுரர் என்றால் சுராபாணம் அருந்தாதவர்கள். சுரா பாண ம் என்றால் கள் என்றே சொல்லப்படுகிறது. அசுரர்கள் எனப்பட்டோ ர் வேத வேள்வியின் உயிர் கொலை யை கண்டித்து அதனை அழிக்கவே முற்பட்டு இருக்கின்றனர். அவர்க ளையெல்லாம் ருத்திரன் மற்றும் கண்ணன் ஆகியோரால் அழிக்கப்ப ட்டதா கவே வேத சுலோகங்கள் சொல்லுகின்றன.
வேதவழி வேள்வி வீழ்ச்சியுற்றபின்பு அதாவது கொல்லாமை அறம் ஓங் கியபோது சிவலிங்கவழிபாட்டை ஏற்றுக் கொண்ட ஆரியர்கள், வேள் வியின் அடையாளமே தீப அடை யாளமான ஜோதிர்லிங்கம் எனவேள்வியின் அடையாளமாகவே போற்ற ஆரம்பித்தனர். உயிர் கொலையை மறந்தாலும் முன்பு செய்யப்பட்ட பலிகளின் அடையா ளமாக சிவ லிங்கத்திற்கு முன்பு காளைமாட்டையும் அதன் பின்னே பலி பீடத்தையும் அமைத்து வைத்து நந்தி என்று சொல்லியதாக அறியப் படுகிறது. வெட்டப்போகும் மாட்டின் முன் சென்றால் அருவாள் நமது உடலிலும் விழ லாம் என்ற பொருளிலேயே ‘நந்தியின் குறுக் கே செல்லக் கூடாது’ என்ற எச்சரிக்கை வழ க்கும் வந்திருக்கிறது.
வேள்விக்கு முன் உயிர்கொலை என்னும் இந் நேரடி பொருள் பொதிந்த நந்தி மற்றும் பலி பீடத்தை மறைப்பதற்காக தமிழ்சைவர்கள் உயர்தத்துவத்தின் பொருளாக மாற்றி வைத்தனர். அதாவது இறைவனாகிய பதியின் முன் பசுவாகிய ஆத்மா தனது ஆணவ மலத்தை பலி இடுவதின் குறியீடே நந்தி மற்றும் பலிபீடம் என்று ஆகமங்களில் மாற்றி எழுத்தப்பட்டு உயிர்கொலையின் வடிவு தத்துவ அடையாள மாக மாறியது.

ஆரோக்கியத்தில் நிம்மதி

Posted On Jan 26,2012,By Muthukumar
`நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்' என்று உருகினார் ஒருவர். அதுபற்றி நான் `அர்த்தமுள்ள இந்து மதம்' நான்காம் பாகத்தில் கூறியுள்ளேன்.
நோய் இல்லாமலிருக்கச் சில வழிகளையும், உணவு முறைகளையும் அதில் நான் கூறியுள்ளேன். அதில் விட்டுப் போன சிலவற்றை இங்கே கூறுகிறேன்.
சாப்பாட்டிலே தினம் ஒரு கீரை சேர்த்துக் கொண்டு வர வேண்டும். மத்தியானம் மட்டும், அந்தக் கீரை பொரியலாகவோ, மசியலாகவோ, மண்டியாகவோ வேண்டுமானாலும் இருக்கலாம். எந்தக் கீரையுமே வயிற்றில் மலம் கட்டாமல் பார்த்துக் கொள்ளும்.
முளைக்கீரை, அரைக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, பருப்புக் கீரை, ஆரைக்கீரை, சிறுகீரை, முருங்கைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, அகத்திக்கீரை, பசளைக்கீரை, கோவைக்கீரை, குறிஞ்சாக்கீரை, புளிச்சங்கீரை, மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை.
மேற்குறித்த கீரைகளில் ஏதாவது ஒன்றைப் பகலிலே சேர்த்துக் கொள்ள வேண்டும்.
மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் மத்தியானத்தில் `தூதுவளை' ரசம் வைத்துச் சாப்பிட வேண்டும்.
அதில் ஜலதோசம் பிடிக்காது; சளி கட்டாது; குளிர்ந்த தண்ணீரில் குளித்தால் கூட எதுவும் செய்யாது.
கோடை காலத்தில் மணத்தக்காளிக் கீரை சூப் வைத்துச் சாப்பிட வேண்டும்.
அது உடம்பில் இருக்கும் நெருப்பை அப்படியே அணைத்து விடும். வாய்ப்புண், வயிற்றுப் புண் எல்லாவற்றையும் உடனடியாக ஆற்றிவிடும்.
சித்திரை, வைகாசி அறுபது நாளும் தொடர்ந்து பொன்னாங்கண்ணிக் கீரை சாப்பிட்டு வந்தால், பகலிலேயே நட்சத்திரத்தைப் பார்க்கலாம் என்பார்கள்.
அகத்திக்கீரை, புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அற்புதமான மருந்து. நுரையீரலைப் பாதுகாக்கிறது; உடம்பைச் சத்தோடு வலுவாக வைத்திருக்கிறது; மயிர்க்கால்களெல்லாம் வியர்வையை வெளியிடும் சக்தியைத் தெளிவாகப் பெற்று விடுகின்றன. `வயிற்றுப் புண்ணுக்கு அகத்திக்கீரை' என்றொரு பழமொழியே உண்டு.
சர்க்கரை வியாதிக்கு முருங்கைக்கீரை கண்கண்ட மருந்து. அது பசியையும் தாங்கும்; பஞ்சத்தையும் தாங்கும்.
நாட்டிலே பெரும் பஞ்சம் வந்தபோது வரகு அரிசிச் சோறும், கோவைக்காய்ப் பொரியலும், முருங்கைக்கீரை வதக்கலும் தானே மக்களைக் காப்பாற்றின.
முருங்கைக்கீரையில் இரும்புச் சத்து உண்டு; வைட்டமின் வகைகள் அதிகம் உண்டு. முருங்கைப்பூ, ஆண்மை நரம்புகளை முறுக்கேற்றும்; முருங்கைக்காயும் அப்படியே.
அப்படி ஒரு மரத்தைப் படைத்ததற்காக ஆண்டவனுக்கு நன்றி செலுத்த வேண்டும். அது ஏழைகளுக்காக இறைவன் அளித்த வரம்.
கிராமத்திலே ஒரு நாடோடிப் பாடல் உண்டு.
மந்தையிலே மாடு மேய்க்கும்
மச்சானுக்கு மத்தியானம்
மொந்தையிலே சோற்றைப் போட்டு
முருங்கைக் கீரையை வதக்கிக் கொட்டி
- என்று அந்தப் பாடல் துவங்கும்.
நகரத்தில் உடம்புக்குச் சக்தி இல்லாமற் போனதற்கு முருங்கைக் கீரை சாப்பிடாதது தான் காரணம்.
முருங்கைக்கீரை கிடைப்பது போல், அவ்வளவு சுலபத்தில் ஆரைக்கீரை கிடைக்காதென்றாலும், முருங்கைக் கீரையைப் போல் சர்க்கரை வியாதியைக் குணப்படுத்தும் சக்தி அதிலும் உண்டு.
`ஒரு காலடி நாலிலைப் பந்தலடி' என்று ஔவையாருக்கும், கம்பருக்கும் தகராறு வந்த போது ஔவையாரால் சொல்லப்பட்டது, இந்த `ஆரைக்கீரை'யைப் பற்றி சொல்லப்பட்டதேயாகும்.
மஞ்சள் கரிசலான் கண்ணிக் கீரை குடிகாரர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். ஈரல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, மாத்திரைகள் இதிலிருந்துதான் செய்யப்படுகின்றன.
இது கொஞ்சம் கசக்கும்; சாறு பிழிந்தும் சாப்பிடலாம்; மசித்தும், துவையலரைத்தும், சூப் வைத்தும் சாப்பிடலாம்.
குறிஞ்சாக் கீரையும், வயிற்றுப் புண்ணுக்கும் சர்க்கரை வியாதிக்கும் ஒரு அற்புதமான மருந்தாகும்.
சிறுநீர் நிறையப் போக வேண்டுமென்றால், மாத்திரை சாப்பிடாதீர்கள்; பசலைக்கீரை சாப்பிடுங்கள்.
எந்தப் பெண்ணும், கர்ப்பமான நாளிலிருந்து ஆறு மாத காலம் வரை, தொடர்ந்து பசலைக்கீரை சாப்பிட்டே ஆக வேண்டும். அதிலும் தலைப் பிரசவத்துப் பெண் கண்டிப்பாகச் சாப்பிட வேண்டும்.
இல்லையென்றால் `லாஸிக்ஸ்' மாத்திரை போட வேண்டிய நிர்ப்பந்தம் வரும். அந்த மாத்திரை போட்டால் சிறுநீரோடு பொட்டாஷியம் போய்விடும். சோகை பிடித்தது போலாகிவிடும். பிறகு, அதைச் சரிக்கட்ட தக்காளி ஜூஸோ, ஆரஞ்சு ஜூஸோ சாப்பிட வேண்டிவரும். பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியம் கெட்டுவிடும்.
தாய்மார்கள், கர்ப்பமுற்ற பெண்களுக்குத் தயவு செய்து ஆறுமாத காலம் பசலைக் கீரை சமைத்துக் கொடுங்கள். கருவுற்றிருக்கும் பெண், பசலைக் கீரையைத் தொடர்ந்து முறையாகச் சாப்பிட்டுக் கொண்டு வந்தால், பிரசவம் சுலபமாக அமையும்; அவஸ்தை இராது. அதோடு சிறுநீர் பிரிவதற்கு வாழைத்தண்டும், கீரைத்தண்டும் கண்கண்ட நல்ல மருந்துகள்.
இரண்டு வகையான உணவுகளைப் பற்றி, உலகத்தில் இரண்டு வகையான அபிப்பிராயங்கள் நிலவுகின்றன.
சைவ உணவு நல்லதா? மாமிச உணவு நல்லதா?
ஹிட்லர் தனது ரகசிய சம்பாஷணைகளில் இப்படிச் சொல்கிறார்:
`சைவ உணவைப் போன்று உடலுக்கு வலிமையும், ஆரோக்கியமும் வேறு எதிலும் இல்லை!'
மிருகங்களிலே கூட மாமிசம் சாப்பிடுகின்ற மிருகங்கள் கொஞ்சத் தூரம் ஓடினாலும், நாக்கைத் தொங்கப் போட்டு விடுகின்றன.
உதாரணம்: நாய், நரி, சிங்கம், புலி.
காய்கறி உணவு அருந்தும் மிருகங்கள், அவை எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எவ்வளவு வேகமாக ஓடினாலும் நாக்கைத் தொங்கப் போடுவதில்லை.
உதாரணம்: யானை, குதிரை, ஒட்டகம், மான், பன்றி.
மாமிசம் சாப்பிடுவது, மதத்துக்கு விரோதமானது அல்ல என்றாலும், உடம்புக்கு அதனால் நன்மையை விடத் தீமையே அதிகம். அதிலுள்ள `புரொட்டீன்'களைக் காய்கறிகளிலேயே பெற்று விடலாம்.
வங்காளத்து இந்துப் பிராமணர்கள் மீன் சாப்
பிடுகிறார்கள்; மீனை அவர்கள் காய்கறி வகைகளிலேதான் சேர்க்கின்றார்கள்.
வேறு சிலர் முட்டை சாப்பிடுகிறார்கள். முட்டையிலுள்ள `வெள்ளைக் கரு'வை எல்லோருமே சாப்பிடலாம் என்பது என்னுடைய கருத்து.
உணவில் அதிகம் வெங்காயம் சேர்த்துக் கொள்ளவேண்டும். இது இதயத்திற்கு நல்லது.
வாயுத் தொல்லை இல்லாதவர்களுக்கு உருளைக் கிழங்கு நல்லது.
மொத்தத்தில் நகரத்து உணவை விட, கிராமத்து உணவு நீண்ட நாள் வாழ வைக்கிறது.
இறைவனுக்கு வைக்கப்படும் நைவேத்தியங்கள் மருத்துவ முறைப்படி ஆனவை.
பால் அதிகம் சாப்பிடுவது ஒன்றே, தேவையான புரதச் சத்துகளை உடலுக்குத் தந்து விடும்.
பதினெட்டுச் சித்தர்களில், `தேரையார்' என்று ஒருவர் இருந்தார். எமனை விரட்டுவதற்கே அவர் சில வழிகளைச் சொல்கிறார்.
அந்தப் பாடல்களையும் அவற்றின் பொருள்களையும் கீழே தருகிறேன்.
`பாலுண்போம்; எண்ணெய்பெறின் வெந்நீரில்
குளிப்போம்.
பகல் புணரோம்; பகல் துயிலோம்; பயோதரமும் மூத்த
ஏலஞ்சேர் குழலியரோ டிளவெயிலும் விரும்போம்;
இரண்டடக்கோம்; ஒன்றை விடோம்; இடதுகையிற்
படுப்போம்.
மூலஞ்சேர் கறினுகரோம்; மூத்ததயிர் உண்போம்.
முந்நாளில் சமைத்தகறி அமுதெனினும் அருந்தோம்.
ஞாலந்தான் வந்திடினும் பசித்தொழிய உண்ணோம்,
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
பாலுணவை உண்ணுவோம்! எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் போது வெந்நீரில் குளிப்போம். பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்ப்போம். கரும்பென இனிப்போராயினும் வயதில் மூத்த பெண்களோடும், வாசக் குழலினை உடைய பொது மகளிரோடும் உடல் உறவு கொள்ள மாட்டோம்; காலை இளம் வெயிலில் அலைய மாட்டோம். மலம், சிறுநீர் முதலியவற்றை அடக்கி வைத்திருக்க மாட்டோம்; படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுப்போம். புளித்த தயிருணவை விரும்பி உண்போம். முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்றிருப்பினும், அதனை மறுநாள் உண்ணுதல் செய்ய மாட்டோம்; பசிக்காத போது உணவருந்தி, உலகமே பரிசாகக் கிடைப்பதெனினும் ஏற்க மாட்டோம்; பசித்த பொழுது மட்டும் உண்ணுவோம்.
இவ்வாறு மேற்கண்ட ஒழுக்க முறைகளை நடைமுறையில் கடைப்பிடித்து வருவோமானால் நம்மிடம் எமன் நெருங்க அஞ்சுவான்; நீண்ட ஆயுளோடு நாம் வாழ முடியும்.
`உண்பதிரு போதொழிய மூன்று பொழுதுண்ணோம்;
உறங்குவது இரவொழிய பகலுறக்கம் கொள்ளோம்;
பெண்ணுறவு திங்களொருக் காலன்றி மருவோம்;
பெருந்தாக மெடுத்திடினும் பெயர்த்துநீர் அருந்தோம்;
மண்பரவு கிழங்குகளில் கருணையன்றிப் புசியோம்;
வாழையிளம் பிஞ்சொழிய காயருந்தல் செய்யோம்;
நண்புபெற உண்டபின்பு குறுநடையும் பயில்வோம்;
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
ஒரு நாளைக்கு இரண்டு பொழுது மட்டும் உண்போம்; இரவில் நன்றாகத் தூங்குவோம்; பகலில் தூங்க மாட்டோம். பெண்ணின்பால் உடலுறவை மாதம் ஒரு முறை மட்டும் வைத்துக் கொள்வோம். உணவு உண்ணும் போது தாகம் அதிகம் இருப்பினும் இடையிடையே நீரினைப் பருக மாட்டோம்; வாழைக்காயில் பிஞ்சுக்காய்களையே கறி சமைத்து உண்ணுவோம்; முற்றிய காய்களைக் கறி சமைத்து உண்ண மாட்டோம்; உண்டவுடனேயே சிறிது தூரம் நடத்தலாகிய பயிற்சியைச் செய்வோம். இவ்வாறு நம் செயல்கள் இருக்குமெனின் காலன் நம்மை நெருங்கக் கலங்குவான்; நீண்ட ஆயுளைப் பெற்று வாழ்வோம்.
`ஆறுதிங்கட் கொருதடவை வமனமருந் தயில்வோம்;
அடர்நான்கு மதிக்கொருக்கால் பேதியுரை நுகர்வோம்;
தேறுமதி ஒன்றரைக்கோர் தரநசியம் பெறுவோம்;
திங்களரைக் கிரண்டுதரம் சவலிவிருப் புறுவோம்;
வீறுசதுர் நாட்கொருகால் நெய்முழுக்கைத் தவிரோம்;
விழிகளுக் கஞ்சனம்மூன்று நாட்கொருக்கா லிடுவோம்;
நாறுகந்தம் புட்பமிவை நடுநிசியில் முகரோம்
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்தி மருந்தை உட்கொள்வோம். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதி மருந்தை உட்கொள்வோம்; ஒன்றரை மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டுச் சளி முதலிய பீனச நோய் வராமல் தடுப்போம். வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்து கொள்வோம்; நான்கு நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிப்போம்; மூன்று நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இடுவோம்; மணம் வீசும் கந்தம், மலர் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகர்தலைச் செய்ய மாட்டோம். இவ்வாறு மருத்துவ விதிமுறைகளை நாம் மேற்கொண்டொழுகினால் எமன் நம்மை நெருங்க விரும்ப மாட்டான்; நீண்ட ஆயுளோடு வாழ்வோம்.
`பகத்தொழுக்கு மாதர்அசம் கரம் துடைப்ப
மிவைதூள்
படநெருங்கோம்; தீபமைந்தர் மரநிழலில் வசியோம்;
சுகபுணர்ச்சி அசனபச னத்தருணஞ் செய்யோம்;
துஞ்சலுண விருமலஞ்செய் யோகமழுக் காடை;
வகுப்பெருக்கிற் சிந்துகேசம் இவைமாலை
விரும்போம்;
வற்சலம்தெய் வம்பிதுர்சற் குருவைவிட மாட்டோம்;
நகச்சலமும் முடிச்சலமும் தெறிக்குமிட மணுக்கோம்;
நமனார்க்கிங் கேதுகவை நாமிருக்கு மிடத்தே!'
மாத விலக்கடைந்த பெண்கள், ஆடு, கழுதை
முதலானவைகள் வரும் பாதையில் எழும் புழுதி, மேலே படும் படி நெருங்கி நடக்க மாட்டோம்; கூட்டுமிடத்தில் உண்டாகும் தூசியும் மேலே படும்படி நடந்து கொள்ள மாட்டோம்; இரவில் விளக்கொளியில் நிற்போரின் நிழலிலும், மர நிழலிலும் நிற்க மாட்டோம்; பசியின் போதும், உண்டவுடனேயும் உடலுறவு கொள்ள மாட்டோம். அந்திப் பொழுதில் தூங்குதல், உணவுண்ணல், காமகுரோதச் செயல்கள், அழுக்குடை தரித்தல், தலைவாரி மயிர் உதிரச் செய்தல் போன்ற காரியங்களைச் செய்ய மாட்டோம்; நம்பால் இரக்கம் உள்ள தெய்வங்கள், பிதுரர், குரு ஆகியோரை எப்போதும் வணங்குவோம்; பிறர் கை உதறும் போது, நகத்தினின்று விழும் தண்ணீரும், குளித்து முடி தட்டும்போது உதிரும் தண்ணீரும் மேலே தெறித்து விழும் இடத்தில் நடக்க மாட்டோம். இத்தகைய நெறிகளில் நாம் நடந்தால், எமன் நம்மை அணுக அஞ்சுவான், நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழுவோம்.

கிருபானந்த வாரியாரின் ஒவ்வொரு நாளும் சொல்ல ஒவ்வொரு துதி!

Posted On Jan 26,2012,By Muthukumar
எல்லா நாட்களும் நல்ல நாட்களாகவே இருக்கவேண்டும்! இந்த ஆசை யாருக்குத்தான் இருக்காது?
அதற்கு எளிய வழி, இறைவனைத் துதிபாடித் துதிப்பதுதான் என்கின்றன புராணங்கள்.
இன்றைய அவசர உலகத்தில் கடவுளை, கையெடுத்துக் கும்பிடக்கூட நேரமில்லாத நிலையில் தினமும் பாட்டுப் பாடி கும்பிடுவதா? அது எப்படி முடியும்? என்கிறீர்களா?
முடியும். அதற்கான எளிய வழி இதோ இருக்கிறது. கிருபானந்த வாரியார் சுவாமிகள் அதற்காகவே வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார்.
திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!

Monday, January 23, 2012

பூஜை அறை எப்படி அமைக்க வேண்டும் ?


மனதிற்கு நிம்மதியை தருவது ஆண்டவன் சன்னிதி. அது போலவே ஒரு வீட்டில் உள்ள பூஜை அறையும். அது எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு சில முக்கிய குறிப்புகள் வருமாறு.
ஒரு வீட்டில் பூஜை அறை வட கிழ க்கில் அல்லது வடக்கில் அல்லது கிழக்கில் அமைக்கப்பட வேண்டும். பெரிய வீடாக இருந்தால் வீட்டின் மையப் பகுதியில் பூஜை அறை அமைக்கலாம்.
ஒரு பெரிய வீட்டில் இரண்டு தளங்கள் இருந்து எல்லோரும் அந்த வீட்டில் ஒரு குடும்பமாக வசித்தால் அவற்றில் தரை தளத்தில் பூஜை அறை இருக்க வேண்டும்.
பூஜை அறையில் கடவுளின் படம் அல்லது உருவம் கிழக்கு திசை பார் த்து இருக்க வேண்டும். அதாவது நாம் வணக்கும் போது கடவுளின் படங்கள் கிழக்கு பார்த்து இருக்க வேண்டும். மேற்கு நோக்கியும் இருக்கலாம்.
பூஜை அறையின் வழிபடும் பகுதியில் வட கிழக்கு மூலையில் ஒரு பித்த ளை சொம்பில் அல்லது டம்ப்ளரில் நீர் பிடித்து வைக்க வேண்டும். இந்த நீரை தினமும் மாற்ற வேண்டும்.
தென் – கிழக்கு மூலையில் குத்து விளக்கை வைத்து விளக்கேற்ற வேண்டும்.
முக்கியமாக கவனிக்க வேண்டிய து, பூஜை அறையில் இறந்து போன முன்னோர்களின் புகைப் படங்களை வைக்கக் கூடாது.
பூஜை அறையை குப்பைகள் இன் றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பூஜை அறை சுவர்களின் வண்ணம் வெள்ளை அல்லது இள மஞ்சள் அல்லது நீல நிறத்தில் இருக்க வேண்டும்.

பூஜை அறையை வழிபடுவதற்கு, தியானம் செய்வதற்கு மட்டும் பயன் படுத்த வேண்டும்.
சில வீடுகளில் இடப் பற்றாக்குறை கார ணமாக படுக்கை அறை அல்லது சமை யல் அறை சுவர்களில் உள்ள அல மாரிக ளை பூஜை அறையாக பயன் படுத்துவது ண்டு. அப்படி இருந்தால் வழி படும் நேரம் தவிர அந்த அலமாரியை மூடி வைக்க வேண்டும். அதாவது கதவு இருந்தால் அதை அடைத்து வைக்க வேண்டும். அப்படி இல்லா விட்டால் துணித் திரை கொண்டு மூடி வைக்க வேண்டும். சில சமயங்களில் கதவு உள்ள மரப் பெட்டிகளில் கடவுள் படங்களை வைத்து வழி படுவதும் உண்டு. இதை சமையல் அறையின் வட கிழக்கு மூலையில் வைக் கலாம்.
கழிப்பறையின் சுவர்களில் உள்ள அலமாரிகளில் மேற்கண்டவாறு பூஜை அறை அமைக்கக் கூடாது. அதை கண்டி ப்பாக தவிர்க்க வேண்டும்.
பூஜை அறைக்கு இரண்டு கதவுகள் இருக்க வேண்டும். அவை வெளிப் புற மாக திறக்கும்படி இருக்க வேண்டும்.
ஒரு பூஜை அறை மாடிப்படிகளின் கீழ் அமைந்து இருக்கக் கூடாது.
பூஜை அறையில் மந்திர உச்சாடனங் களை தினமும் ஒன்றிரண்டு தடவை ஒலிபரப்பாகும்படி செய்ய வேண்டும் அல்லது நாமும் வாய் விட்டு உச்சாடனம் செய்யலாம். இது வீட்டில் நேர்மறை எண் ணங்களை கொண்டு வரும்.
அனைத்தையும் விட பூஜை அறையில் மனதை ஒருமுகப் படுத்தி, தீர்க்கமாக நமது பிரார்த்தனையை கடவுளிடம் முன் வைக்க வேண்டும். அது ஒரு நிமிடம் நீடித்தாலும் கூட போதுமானது.

வாழ வைத்த தெய்வங்கள்!-தை அமாவாசை

post on உங்களுக்காக

Posted On Jan 23,2012,By Muthukumar
இறைவன், நமக்கு உயிரையும், உறுப்புகளையும் கொடுத்து, பூமிக்கு அனுப்பி வைத்தான். நம், முன் வினைக்கேற்ப பலன்களை இங்கே அனுபவிக்கிறோம். இந்த ஜென்மத்துக்கான காலம் முடிந்ததும், மீண்டும் வந்த இடத்திற்கே திரும்புகிறோம்.
மனிதன் பிறந்தது முதல், மரணமடைவது வரை, 40 சம்ஸ்காரங்கள் இருப்பதாக, சாஸ்திரங்கள் சொல்கின்றன. சம்ஸ்காரம் என்றால், "நன்றாகச் செய்வது...' எனப் பொருள். இந்த சம்ஸ்காரங்களில் படித்தல், திருமணம் செய்தல் உள்ளிட்டவை அடங்கும். ஜீவனை, வயதுக்கேற்ப பக்குவம் செய்ய ஏற்பட்டவையே சம்ஸ்காரங்கள். மரணத்திற்கு பின், "பிரேத சம்ஸ்காரம்' என்பதையும் வைத்துள்ளனர். இந்த சம்ஸ்காரத்தை, ஒரு யாகத்துக்கு சமமாக ஒப்பிடுகிறது சாஸ்திரம்.
ஒருவர் இறந்ததும், யார் ஒருவர் முன்னின்று காரியங்களைக் கவனிக்கிறாரோ, அவரை, தேவர்களில் ஒருவராகக் கருத இடமிருக்கிறது. காரியம் செய்பவருக்கே, இப்படி ஒரு மதிப்பு என்றால், இறந்து போனவரின் குழந்தைகளுக்கோ, மற்ற உறவுகளுக்கோ, எவ்வளவு தூரம் பொறுப்பிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். "இறந்தவர் தான், உடனடியாக மறுபிறப்பெடுத்து விடுகிறார் என்கின்றனரே... அப்படியானால், எதற்கு இந்த சடங்கெல்லாம்...' என்று கேள்வி எழுப்புவோரும் உண்டு.
இந்த உடலுக்கு மிகுந்த முக்கியத்துவம் இருக்கிறது. உடல் என்பது, மனதால் இயக்கப்படும் ஒரு கருவி. மனம் நல்லதைச் சொன்னால், உடல் உறுப்புகள் நல்லதையே செய்யும். கால், கோவிலுக்கு போவதற்கும்; வாய், இறைவனின் புகழை பேசவோ, பாடவோ செய்வதற்கும்; கண், சுவாமி தரிசனம் செய்வதற்கும் என, ஒருவன் நினைத்தால், அந்த உறுப்புகள், தீயசெயல்களின் பக்கம் திரும்புவதில்லை.
இதனால் தான், "காயமே கோவிலாக' என்றார் திருநாவுக்கரசர். திருமூலர் திருமந்திரத்தில், "உடம்பை ஓம்பலானேன்' (பாதுகாக்கிறேன்) என்கிறார். இந்த உடலுக்குள்ளேயே, "ஜீவன்' இருக்கிறது. அதாவது, சிவம் இருக்கிறது என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே, இறைவன் கொடுத்த இந்த உடலை விட்டு உயிர் பிரிந்ததும், அதை தக்க மரியாதையுடன் வழியனுப்ப வேண்டும். பரமேஸ்வரனுக்கே அதை ஆஹுதி செய்ய வேண்டும். சிவன், சுடலை வடிவில் சுடுகாட்டில் இருப்பது கூட, இந்த உடம்பை சாம்பலாக்கி பெற்றுக் கொள்வதற்காகத் தான்.
சிலர், அனாதைகளாக இறக்கலாம். சாலையில், யாராவது இறந்து கிடந்தால் அவருக்கு, நம் உறவுகளுக்கு செய்வது போல, கிரியைகள் செய்து, அனுப்பி வைத்தால், அது அஸ்வமேத யாகத்துக்கு ஒப்பானது என்கிறது சாஸ்திரம்.
"அநாத ப்ரேத சம்ஸ்காராத் அச்வமேத பலம் லபேத்...' என்ற ஸ்லோகமே இருக்கிறது. இப்படி, ஒரு பரோபகாரம் செய்பவர்களுக்கு, அதுவரை செய்த பாவங்கள் கூட தீர்ந்து விடும்.
இறந்த முன்னோருக்கு சிரார்த்தம், தர்ப்பணம் செய்வது மிகவும் எளிதானது. அவரவர் இறந்த திதி மற்றும் அமாவாசை நாட்களில், தீர்த்தக்கரைகளுக்கு சென்று, எள்ளும், நீரும் இறைத்தாலே, அது, பிதுர் தேவதைகள் மூலம், சம்பந்தப்பட்டவர்களைச் சென்றடைந்து விடும். குறிப்பாக, தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகியவை, பிதுர்க்கடன் செய்ய, மிகச்சிறந்த நாட்கள். கங்கை, யமுனைக்கு போக வசதியிருந்தால் போகலாம்; இல்லாவிட்டால், அவரவர் ஊரிலுள்ள ஆறு, குளம், கிணறுகளில் இதைச் செய்தாலே போதுமானது.
ஆடி அமாவாசையன்று, பூமிக்கு வருகின்றனர் பிதுர்கள்; இதை, தட்சிணாயண காலம் என்பர். இந்த காலத்தில், தேவர்கள் ஓய்வெடுப்பதாகக் கருதப்படுவதால், முன்னோர், நம்மைப் பாதுகாக்க வருகின்றனர். உத்தராயண காலம் எனப்படும், தை மாத அமாவாசையில், இவர்கள் தங்கள் இருப்பிடமான, பிதுர்லோகத்துக்கு திரும்புகின்றனர். அவர்களை வரவேற்கவும், வழியனுப்பவும் நாம் தர்ப்பணம் செய்தாக வேண்டும். சிலருக்கு தீராத சாபம், கடுமையான வேதனை இருக்கும். குடும்பத்தில் நிம்மதி இருக்காது. அதற்கு முன்னோர் சாபம் தான் காரணம். இவர்கள், ஒருமுறை யாவது ராமேஸ்வரம் சென்று, தர்ப்பணம் செய்து, ராமநாதரை வணங்கி வந்தால், சாபம் தீரும் என்பது ஐதீகம்.
தை அமாவாசை, அம்பாளுக்கும் உகந்தது. அமாவாசை திதியை, பவுர்ணமி என்று மாற்றிச் சொன்ன, அபிராமி பட்டரை காப்பாற்ற, அம்பாள் தன் காதணியை, வானில் வீசி, நிலவாக்கிய நாள், இன்று தான். இந்த புண்ணிய நாளில், நம்மை வாழ வைத்த தெய்வங்களை நினைவு கூர்வோம்.
vayal | ஜனவரி 22, 2012 at 7:45 பிற்பகல் | Categories: ஆன்மீகம் | URL

Sunday, January 22, 2012

எல்லாம் பகவான் செயல்!

Posted On Jan 23,2012,By Muthukumar
தினமும் சிவன் கோவிலுக்கு போய் சுவாமி தரிசனம் செய்வான் ஒரு ஏழை. ஒரு நாள், பிள்ளையாரைப் பார்த்து, "இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள், நூறு ரூபாய் கிடைக்கும்படி செய்...' என்றார் சிவன். இவர் சொன்னது ஏழைக்குத் தெரியாது.
சிவன் சொல்வதை, ஒரு கமிஷன் ஏஜன்ட் கேட்டுக் கொண்டிருந்தான். "இந்த ஏழைக்கு இன்று இரவுக்குள் நூறு ரூபாய் கிடைக்கப் போகிறது. இவனிடம் பேரம் பேசி, ஏதாவது ஒரு கமிஷன் அடிக்கலாம்...' என்று எண்ணினான். ஏழையிடம், "ஐயா... உங்களைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நான் உங்களுக்கு ஏதாவது உபகாரம் செய்யலாம் என்று நினைக்கிறேன். நான் உங்களுக்கு ஐம்பது ரூபாய் தருகிறேன்; ஆனால், ஒரு நிபந்தனை... இன்று இரவுக்குள், உங்களுக்கு ஏதாவது பணம் கிடைத்தால், அதை அப்படியே என்னிடம் கொடுத்து விட வேண்டும்...' என்றான்.
யோசித்தான் ஏழை... "இவன் யார்? இவன் எதற்காக பணம் தருகிறேன் என்று சொல்கிறான்? இதில் ஏதோ மர்மம் இருக்கிறது...' என்று எண்ணி, "அதெல்லாம் வேண்டாம்...' என்றான். விடுவதாய் இல்லை கமிஷன் ஏஜன்ட். ஐம்பது ரூபாயிலிருந்து கொஞ்சம், கொஞ்சமாக உயர்த்தி, தொண்ணூறு ரூபாய் தருவதாகச் சொன்னான்.
சரி என்று ஒப்புக்கொண்டு தொண்ணூறு ரூபாயை வாங்கிக் கொண்டு போய் விட்டான் ஏழை. வழக்கம்போல் சிவ தரிசனத் துக்குப் போனான்.
பிள்ளை யாரைப் பார்த்து, "இந்த ஏழைக்கு நூறு ரூபாய் கிடைக்கும்படி ஏற்பாடு செய்தாயா?' என்று கேட்டார் சிவன். அதற்கு பிள்ளையார், "இவனுக்கு தொண்ணூறு ரூபாய்தான் கொடுத்தேன்...' என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த கமிஷன் ஏஜன்ட், "ஐயையோ... இவனுக்கு நானல்லவா, தொண்ணூறு ரூபாய் கொடுத்தேன்; பிள்ளையார் கொடுக்க வில்லையே...' என்றான்.
அப்போது, "ஐயா, நாங்கள் தேவலோகத்தில் ரூபாய் நோட்டு அச்சடித்து; யாருக்கும் கொடுப்பதில்லை. பணமெல்லாம் உங்களிடம் தான் உள்ளது; அதை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சேரும்படியாக, நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்; இருப்பவன், இல்லாதவனுக்குக் கொடுக்கும்படி செய்கிறோம்; அவ்வளவுதான்...' என்றார் சிவன்.
அப்போதுதான் கமிஷன் ஏஜன்டுக்கு புத்தி வந்தது. எல்லாம் அவன் செயல்; நம்மால் ஆவது எதுவுமில்லை. பணம் வருவதும், போவதும் அவன் செயல் தானே தவிர, நம் சாமர்த்தியம் எதுவுமில்லை என்பதை புரிந்து கொண்டு வீட்டுக்குப் போய்ச் சேர்ந்தான்.
பரமசிவனையும், பிள்ளையாரையும் நன்றாகக் கும்பிட்டு, ரூபாய் நோட்டை மடியில் செருகி, சந்தோஷமாகப் போனான் ஏழை. யார், யாருக்கு என்ன கிடைக்க வேண்டுமோ, அது கிடைக்கும்படி செய்வது, பகவான் செயல். இதில், நம் சாமர்த்தியம் எதுவுமில்லை!

உடல் நலம் தரும் விரல் முத்திரைகள்


முத்திரைகள் இந்தியத் துணை கண்டத்தில் பிறந்தவை. முத்தி ரை களில் உடலில் பல பாகங் களும் கூடப் பயன்படுத்தப்படுகி ன்றன என்ற போதிலும் பெரும் பாலான முத்திரைகள் கைவிரல் களைப் பயன்படுத்தியே காட்டப் படுவன. நாட்டிய சாஸ்திரத்தில் விரல் முத்திரைகள் மிக முக்கி யமானவை. மகான்கள், மற்றும் தெய்வங் களின் சிலைகளையும், திருவுருவப்படங்களையும் கூர்ந்து பார்ப்ப வர்கள் அவர்களுடைய கைவிரல்கள் ஏதாவது ஒரு முத்திரை நிலையில் இருப்பதைக் காணலாம். துவக்கத்தில் இந்து மதத்திலும், புத்த மதத்திலும் அதிக மாகப் பயன்படுத்தப்பட்ட இந்த முத்திரைகள் காலம் செல்லச் செல்ல இந்தியத் துணைக்கண்டத்திலிருந்து உலகின் பிற பகுதிகளுக்கும் பரவத் துவங்கின.
இந்த விரல் முத்திரைகள் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் பெரிதும் பயனளிப்பதாக இருக்கி றது என்று கூறுகிறார்கள். இந்த விரல் முத்திரைகளை யோகா மற்றும் தியானக் கலைகளில் பயன் படுத்தும் போது கிடைக்கும் பலன்கள் பல மடங்காக இருப்ப தாக பயன்படுத்தி பலன் கண்டவர் கள் கூறுகிறார்கள். இது குறித்து பல ஆராய்ச்சிகளும் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன, பல நூல்களும் எழுதப்பட்டிருக் கின்றன. சில முக்கிய எளிய முத்திரைகளையும், அவற்றைச் செய் வதனால் ஏற்படும் பலன்களையும் சற்று பார்ப்போம்.
ஞான முத்திரை
கையின் பெருவிரல் நுனியையும், ஆட் காட்டி விரலின் நுனியையும் இணைக்கை யில் இந்த முத்திரை கிடைக்கிறது. மற்ற விரல்கள் நேராக நிறுத்தப்பட வேண்டும். பெரும்பாலான தியான நிலைகளில் இந்த முத்திரை பயன்படுத்தப்படுகிறது.
 நினைவு சக்தியை அதிகரிக்கவும், கவனக் குறைவைக் குறைக்க வும், மன அமைதியை அதிகரிக்கவும் இந்த முத்திரையைப் பயன் படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்துபவர்கள் ஹிஸ்டீரியா, மன அழுத்தம் போன்றவற்றிலிருந்து பெருமளவு விடு படலாம் என்று சொல்லப்படுகிறது.
வருண முத்திரை
பெருவிரல் நுனியையும் கடைசி விரல் நுனியையும் இணைக்கை யில் வருண முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும்.
 உடலின் நீர்சமநிலை மாறுமானால் அதனால் ஏற்படும் தீய விளைவு களை இந்த முத்திரை தடுக்கிறது என்று சொல்கி றார்கள். இரத்த சம்பந்தமான வியாதிகளைப் போக்கவும், தோல் சுருக்கத்தைப் போக்கவும் கூட இந்த வருண முத்திரை உதவுகிறது என்கிறார்கள்.
 சூன்ய முத்திரை
கையின் நடுவிரலை பெருவிரலின் அடியில் உள்ள மேட்டில் வைத்து அந்த விரலைப் பெருவிரலால் லேசாக அழுத்தியபடி வைத்துக் கொள்ளும்போது சூன்ய முத்திரை ஏற்படுகிறது. மற்ற விரல்கள் நீட்டப் பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும்.
 இந்த முத்திரை முக்கியமாக காது வலியையும், மற்ற காது சம்பந்த மான குறைபாடுகளையும் போக்க உதவுகிறது.
 ப்ராண முத்திரை
கையின் மோதிர விரலையும், கடைசி விரலையும் மடக்கி அந்த இர ண்டு விரல்களின் நுனியைப் பெரு விரல் நுனியால் தொடும் போது ப்ராண முத்திரை உருவாகிறது. மற்ற விரல்கள் நீட்டப்பட்டபடியே இருத் தல் வேண்டும்.
 இந்த முத்திரை கண்பார்வைக் கோளாறையும், மற்ற கண் சம்பந்த மான வியாதிகளையும் குறைக்க உதவுகிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்திக்கும், களைப்பை நீக்கவும் கூட இந்த ப்ராண முத்திரை பயன்படுகிறது என்கிறார்கள்.
 அபான முத்திரை
 கையில் நடு விரல் மற்றும் மோதிர விரலை மடக்கி அந்த இரண்டு விரல்களின் நுனியை பெரு விரல் நுனியால் தொடும் போது அபான முத்திரை ஏற்படு கிறது.
இந்த முத்திரை சர்க்கரை வியாதியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. மூலம் மற்றும் மலச்சிக்கலைப் போக்க இந்த முத்திரை பெருமளவு உதவுகிறது.
 அபான வாயு முத்திரை
அபான முத்திரையுடன் ஆட்காட்டி விரல் நுனியை பெருவிரலின் ஆரம்ப பாகத்தில் வைத்தால் அபான வாயு முத்திரை உண்டாகிறது. அதாவது நடுவிரல், மற்றும் மோதிர விரல் மடிக்கப்பட்டு அந்த விரல் களின் நுனியைப் பெருவிரல் நுனியால் தொட்டு, ஆட் காட்டி விரலை மடித்து பெருவிரலின் நுனி பாகத்தில் வைக்கும் போது இந்த முத்திரை உருவாகிறது
 இதய சம்பந்தமான குறைபாடுகளை நீக்கவும், இதயத்தை வலுப் படுத்தவும் இந்த அபான வாயு முத்திரை உதவுகிறது. அத்துடன் வாயுத் தொந்தரவுகளையும் இந்த முத்திரை வெகுவாகக் குறைக் கிறது.
 லிங்க முத்திரை
 படத்தில் காட்டியபடி விரல்களைப் பின்னி இடது பெருவிரலை நீட்டிய நிலையில் விட்டு வலது பெருவிரலால் இடது பெருவிரலை சுற்றிப் பிடித்துக் கொள்ளும் போது லிங்க முத்திரை ஏற்படுகிறது.
 சளி, கபம் போன்ற கோளாறுகளை இந்த லிங்க முத்திரை வெகு வாகக் குறைக்கிறது.
 இனி இந்த முத்திரைகளைச் செய்யும் போது நினைவில் நிறுத்த வேண்டிய வழி முறைகளைப் பார்ப்போம்.
முதலில் நன்றாகக் கைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.
பின் கைகளை நன்றாகத் துடை த்துக் கொண்டு கைகள் சூடாகும் வரை இரு கைகளை யும் சேர்த்து தேய்த்துக் கொள் ளுங்கள்.
இந்த முத்திரைகளை அமர்ந்து கொண்டும், நின்று கொண்டும், படுத்த நிலையிலும், நடந்து கொண்டும் கூட செய்யலாம். ஆனால் பர பரப்போ அவசரமோ இல்லாமல் அமைதியாக இருப்பது மிக முக்கியம்.
இந்த முத்திரைகளைச் செய்யும் கால அளவு பற்றி பல வித கருத்துகள் உள்ளன. அரை மணி முதல் முக்கால் மணி நேரம் வரை உங்களுக்குத் தேவை யான முத்திரைகளைச் செய்யலாம் என்கிறார் கள். சிலர் பத்து அல்லது பதினைந்து நிமிட கால ங்களில் சிறிது இடை வெளி விட்டு மூன்று முறை கூடச் செய்யலாம் என்று கூறு கிறார்கள்.
 ஒரேயடியாக நீண்ட நேரத்திற்குச் செய்ய ஆரம்பிக்காமல் சுமார் ஐந்து நிமிட காலம் செய்வதில் இருந்து ஆரம்பிப்பது நல்லது. பின் சிறிது சிறிதாக நேரத்தைக் கூட்டிக் கொண்டு செல்லுங்கள். இந்த முத்திரைகளால் வியக்கத்தக்க பெரும்பலன்கள் கிடைக்கின்றன என்று பல அறிஞர்கள் கூறுகிறார் கள்.
கண்டிப்பாக இந்த முத்திரைகள் பயிற்சி இன்றைய மருத்துவ சிகிச் சைக்கு இணை என்று சொல்லும் அளவு பரிசோதனைகள் முடிவு விஞ்ஞான பூர்வமாக முழுமை யாக வெளியாகி விடவில் லை. ஆனால் நீங்கள் இதை முயற்சித்து உண்மையைப் பரி சோதித்துக் கொள்வதில் எதிர் விளைவுகள் இல்லை. எனவே செலவோ, பிரயாசையோ இல்லாத இந்த முத்தி ரைகள் மூலம் சிறிது பலன் கிடைத்தாலும், மருந்துகள் இன்றி பக்க விளைவுகள் இன்றி இயல்பான வழியில் கிடைப்பது பெரிய விஷயம் அல்லவா?