Saturday, March 31, 2012

பொதுவான தர்ப்பண விதிகள்

Posted On April 01,2012,By Muthukumar
1. ஞாயிறு, செவ்வாய், வெள்ளி, ஸப்தமி, அஷ்டமி, சுக்ல பசஷத் ரயோதசி, ஜன்மநசஷத்ரம், இரவு, இருஸந்த் யா முதலிய காலங்க ளில் எள்ளுடன் அசஷ தையைச் சேர்த்துத் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
2. சிலர் நெற்றிக்குப் விபூதி அணிந்து தர்ப்ப ணம் செய்வர். சிலர் அணியாமல் செய்வர். சிலர் தர்ப்பைகளை வளைத்து கூர்ச்சமாகச் செய்து அதில் தர்ப்பணம் செய்வர். சிலர் தர்ப்பைகளை அப்படியே பரப்பி அதன் மேல் செய்வர். சிலர் பித்ரு வர்க்கத்திற்கும் மாத்ரு வர்க்கத்திற்கும் தனித்தனி கூர்ச்சங்களில் செய்வர். சிலர் ஒரே கூர் ச்சத்தில் செய்வர். இவையெல்லாம் அவரவர்  ஸம்ப்ர தாயத்தைப் பொறுத்தது.
3. கிரகண தர்ப்பணம் தவிர மற்ற தர்ப்பணங்களெல்லாம் மாத்யா ன்ஹிகம் செய்துவிட்டு உச்சிவே ளைக்குப்பின் செய்வது உத்தமம்.
4. யற்ஞவராஹ மூர்த்தியாக அவத ரித்த மகாவிஷ்ணுவின் உடலிலிரு ந்து கருப்பு எள்ளும், தர்ப்பையும் உண்டாயிற்று என்பதால் எள் ளும், தர்ப்பையும் புனிதம் மிக்கவை. தீயசக்திகள் அவைக ளைக் கண்டு அஞ்சும். ஆகையால், தர்ப்பை யை ஆசனமாகவும், பவித்ர மாகவும், கூர்ச்சமாகவும் உபயோகிக் கிறோம். பித்ரு கர்மாக்களில் மூன்று தர்ப் பைகளிலும் தேவகாரியங்களில் இர ண்டு தர்ப்பைகளி லும் பவித்திரம் முதலியவற்றைச் செய்ய வேண்டும். பவித்திரத்தைக் கையிலிருந்து எடுத் தால் பூமியில் வைக்கக் கூடாது. வல து காதில் வைத்துக் கொள்ள வேண் டும்.
5. தர்ப்பணத்திற்கு எள்ளை எடுக்கும் போது ஆள்காட்டி விரலால் தொடாமல் கட்டை விரலை மற்ற விர ல்களுடன் சேர்த்து எடுக்க வேண்டும். கட்டை விரலுடன் ஆள் காட் டி விரல் சேர்ந்தால் ராசஷ ஸ முத்திரை எனப்படும்.
 
6. வீட்டில் தர்ப்பணம் செய்யும்போது தேவ பூஜா ஸ்தானத்திலிருந்து சற்று விலகிச் சுத்த மான இடத்தில் அமர்ந்து ஒரு அகலமான தாம் பளத்தில் தர்ப்பையைப் பரப்பி அதன் மேல் தர்ப்பணம் செய்ய வேண்டும். வெள்ளித் தாம் பாளம் உயர்ந்தது. ஆனால், அது சாப்பி டும் தட்டாக இருக்கக்கூடாது. அடுத்தபடி தாமிரமு ம், பித்தளையும் நல்லது. வெண்கலத்தட்டும், ஈயம் பூசின தட்டும் விலக்கப்பட வேண்டும்.

இளமையின் சுகமான சிந்தனைகள்

Posted On March 31,2012,By Muthukumar
இளம் பருவத்து இனிய நினைவுகள் என்னைத் தாலாட்டுகின்றன.
கை கால்களுக்கு ஜீவனிருக்கும் காலத்தில் மரங்களின் உயரம் கூடக் குறைந்து விடு
கிறது.
ஏரியில் நீந்திய மீனுக்குத் தெரியும், அதைவிட நான் எவ்வளவு வல்லவன் என்று.
இளமை என்பது ஒரே ஒரு தரம் ஆண்டவனால் பரிசளிக்கப்படுகிறது.
மாமரத்தில் மாங்காய் காய்க்கும் போது மனித மனத்திலே துடிதுடிப்பிருக்கும் காலமே
இளமைக்காலம்.
இளமையின் சிந்தனைகள் சுகமானவை.
அவை வானக் கூரையைப் பிளந்து கொண்டு மேலே தாவுகின்றன.
காட்டாற்று வெள்ளத்தில் குதித்து எதிர் நீச்சல் போடுகின்றன.
கங்கை நதிக்கு குறுக்கே பாய்ந்து, தன் கைகளாலேயே அதைத் தடுத்து நிறுத்த முயல்கின்றன.
ரத்தத்தின் ஜீவ அணுக்கள் சித்தத்தை துடிதுடிக்க வைக்கின்றன.
இன்பம் துன்பம் இரண்டிலும் மிகைப்பட்ட நிலையை இளமைக்காலம் கண்ணுக்குக் காட்டுகிறது.
அது மேளச் சத்தத்தோடு சேர்ந்து கொள்கிறது.
வீணையின் ஒலியில் நர்த்தனமாடுகிறது.
மார்கழிப் பனியில் சட்டையைக் கழற்றிவிட்டு அந்தப் பனியை அனுபவிக்கச் சொல்கிறது.
கோடை காலத்து வியர்வையைக் கம்பீரமாகத் துடைத்துவிடச் சொல்கிறது.
`இப்போது உனக்கு என்ன வேண்டும்' என்று இளமையைக் கேட்டால், `எல்லாம் வேண்டும்' என்கிறது.
இரதத்திலே கயிற்றைக் கட்டிப் பல்லாலே இழுக்கிறது.
முதுமையில் தூக்கவே முடியாத எலும்புகளைப் பல்லால் நறநறவென்று கடித்துத் துப்புகின்றது.
கிராமத்து வாழைத் தோட்டங்களுக்குள்ளே ஓடி விளையாடச் சொல்கிறது.
எந்தப் பெண்ணைக் கண்டாலும் மனம் ஏதோ செய்கிறது.
ஆடல், பாடல், எதிர்வழக்காடல், ஏச்சுக்கு ஏச்சு, பேச்சுக்குப் பேச்சு- ருத்ர மூர்த்தியின் ஆனந்தத் தாண்டவம், இளமையின் ஊழிக்கூத்து.
எனக்குப் பன்னிரண்டு வயதான போது கிராமத்தின் பனை மரத் தோப்புகளில் அடிக்கடி அமர்ந்திருப்பேன்.
மாடு மேய்க்கும் சிறு பெண்கள் பாடிக்கொண்டே போவார்கள்.
ஆயர்குலச் சிறுவர்கள் சுதி சேராமல் புல்லாங்குழல் வாசிப்பார்கள்.
பருந்தைப் பார்த்தால் பறக்க நினைப்பேன்.
வெள்ளாடுகளைப் பார்த்தால் ஓட நினைப்பேன்.
பூமியைக் குத்தியதும் பீறிட்டுக் கிளம்பும் செயற்கை நீரூற்றுகளைப் போல வாலிபத்தின் சிந்தனையும் வளமானதாகவே இருந்தது.
அது ஆடி மகிழ்ந்த காலம்.
இது எண்ணிப் பார்க்கின்ற காலம்.
அதே துடிதுடிப்பை மீண்டும் பெறுவதற்கு நான் வைத்தியரை நாடப் போவதில்லை.
அந்தச் சுகமான சிந்தனைகளை இப்போது நான் வேறு பக்கம் திருப்பி இருக்கிறேன்.
வேதாந்தத்தில்,
தத்துவ விசாரத்தில்,
-சுகமான சிந்தனைகள் புறப்படுகின்றன.
அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்த சில விஷயங்கள், இப்போது ஜீரணிக்கப்படுகின்றன.
`சிந்தனையில் எனக்கு என்ன வேண்டும்' என்று அருட்பெரும் ஜோதி வள்ளலாரைக் கேட்டேன்.
அவர் சொன்னார்:
`தம்பி! மனம் சலனமுடையது; சபலம் மிக்கது; ஆனால் அக்கம் பக்கம் திரும்பாமல் ஒரே நோக்கில் ஆண்டவனை எவன் தியானிக்கிறானோ, அவனது நட்பு உனக்கு வேண்டும்.
கோயில் கட்டுகிறேன் என்பான்; கோயில் சொத்திலேயே கொள்ளையடிப்பான்.
அரகர சிவ சிவ என்பான்; அங்கு வரும் பெண் மீதே கண்ணாக இருப்பான்.
மனம் ஒன்று நாடும்; காதொன்று கேட்கும்; வாயொன்று பேசும்;
இவன் பக்தனல்ல; போலி; வேடதாரி.
ஒருமையுடன் தியானிக்கும் உத்தமர் தம் உறவு உனக்கு வேண்டும்.
உள்ளத்தில் வஞ்சம் மறைந்திருக்கும்; முகத்திலே புன்னகை மலர்ந்திருக்கும்.
`வாருங்கள் வாருங்கள்' என்று வாயால் அழைப்பான்; சமயம் வாய்த்தால் காலைத்தான் வாருவானே தவிர உன்னை வரவேற்க மாட்டான்.
`பொய்' என்று தெரிந்து கொண்டே சத்தியம் செய்வான், அவன் கள்ளத்தில் பூத்த மலர்; கபடத்தில் புழுத்த புழு; வெள்ளத்தில் வந்த குப்பை; வேஷத்தில் வாழும் மனிதன்.
அந்த நடிகனோடு, நீ உறவு கொள்ளாதே!
பாடுவதென்றால், மனிதனைப் பற்றிப் பாடாதே; இறைவனைப் பற்றிப் பாடு; பேசுவதென்றால் அவனைப் பற்றியே பேசு.
அவன் ஏராளமான வரங்களை உனக்கு அள்ளித் தரா விட்டாலும் உன்னைக் கேலி செய்யமாட்டான்.
தோளிலே கைபோட்டுப் பையிலே என்ன இருக்கிறது என்று தடவும் நண்பனை விட்டு விலகு.
யாரையோ, ஊரையோ காப்பாற்ற வேண்டுமானால் பொய் பேசு; இல்லையேல் பொய்யே பேசாதே.
ஆசைகளில் எல்லாம் உச்சமான ஆசை எது தெரியுமா?
பெண்ணாசை!
மூன்று நாட்களாகப் பட்டினி கிடக்கும் ஒருவனின் முன்னால் சோற்றையும் வைத்துப் பெண்ணையும் வைத்தால் அவன் முதலில் பெண்ணையே தொடுவான்.
மனித மனத்தின் மைய மண்டபத்தில் இருந்தே துயரங்கள் எழுகின்றன.
வாளிப்பான உடம்பையும், வளமான கூந்தலையும் பார்த்து மோகித்து விடாதே.
இந்திரியம் தீர்ந்துவிட்டால், சுந்தரியும் பேய் போலே!
பெண்ணை மறக்க எப்போது `கற்றுக்' கொள்கிறாயோ, அப்போது உன்னை நினைக்கக் கற்றுக் கொள்கிறாய்.
உன்னை நினைக்கக் கற்றுக் கொண்டு விட்டால், நீ மறக்கவே முடியாதபடி தெய்வம் வந்து உன் மனத்திலே உட்கார்ந்து கொண்டு விடும்.
எல்லாவற்றுக்கும் `அறிவு' வேண்டும்.
அவனது `கருணை' என்னும் நிதி வேண்டும்.
மதத்திலே அன்பு வேண்டும்; வெறி கூடாது.
ஒழுக்கம் என்னும் நெறி வேண்டும்; அடுத்தவன் பணத்தில் குறி கூடாது.
பலபேர் சொன்ன விஷயங்கள்தான். அவற்றைப் பற்றி ஒழுகாத காரணத்தால் வயதான காலத்தில் புலம்புவோர் எவ்வளவு பேர் தெரியுமா?
அதனால்தான் `சென்னை நகரக் கந்த கோட்டத்தில் குடியிருக்கும் சண்முகவேலைப் பற்றி இப்படிப் பாடினேன்' என்று பாடிக்காட்டினார்:
ஒருமையுடன் நினதுதிரு மலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவுகல வாமை வேண்டும்
பெருமைபெறு நினது புகழ் பேசவேண்டும்
பொய்மைபேசா திருக்க வேண்டும்
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமானபேய்
பிடியா திருக்க வேண்டும்
மருவுபெண் ஆசையை மறக்கவே வேண்டும்உனை
மறவா திருக்க வேண்டும்
மதிவேண்டும் நின்கருணை நிதிவேண்டும் நோயற்ற
வாழ்வுதான் வாழ வேண்டும்
தருமமிகு சென்னையில் கந்தகோட்டத் துள்வளர்
தலம் ஓங்கும் கந்தவேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!
-இந்தத் தத்துவங்களில் எனக்கு எவ்வளவு அனுபவங்கள் தெரியுமா?
நான் கடன்பட்டுக் கஷ்டப்பட்ட காலத்தில் என்னைக் காப்பாற்றுவார் என்று ஒரு வழக்குரைஞரை அண்டினேன்.
அவருடைய சகாக்களோ, என்னுடைய எதிரிகளுக்கெல்லாம் நண்பர்களாக இருந்தார்கள்.
வாங்காத கடனை எல்லாம் நான் கட்டவேண்டியிருந்தது.
கையெழுத்தும் இல்லை; நான் வாங்கவும் இல்லை; அப்படி இருந்தும் ஒரு வழக்கு என்மீது டிகிரி ஆயிற்று.
அவர் சிரித்துப் பேசுவார்; `கவிஞரே' என்று உயிரை விடுவார்.
ஆனால், அந்தரங்கத்தில் என் கழுத்தை அறுத்து விட்டார்.
இறைவனுடைய தர்மச்சக்கரம் நியாயம் கேட்கும் என்பதைத் தவிர, வேறு எதை நான் எதிர்பார்க்க முடியும்?
கடவுளின், தண்டனையை நான் நம்புகிறேன்.
உத்தமமான பக்தனுக்குக் கூடத்தான் சோதனைகள் வருகின்றன; ஆனால், அவை காலம் பார்த்து மீளுகின்றன.
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் வஞ்சகர்களோ, ஆனந்தமாக வாழ்ந்துகொண்டே இருப்பார்கள்.
அடிவிழ ஆரம்பித்தால் அவர்களைத் தூக்கிப் பிடிக்க ஆள் இருக்காது.
அவர்களது பிணத்தின் முன்னால்கூட மற்றவர்கள் குசுகுசுவென்று கேவலமாகப் பேசிக் கொண்டிருப்பார்களே தவிர, புகழ்ந்து பேச மாட்டார்கள்.
சூதாட்டத்தில் ஈடுபட்ட என்னுடைய தந்தையார் சில நகைகளை ஒருவரிடம் ஈடு வைத்தார்.
ஐயாயிரம் ரூபாய் பொறுமானமுள்ள நகைக்கு ஆயிரமோ, ஆயிரத்து ஐநூறோதான் வாங்கி இருப்பார்.
மீட்பதற்கு வசதி இல்லாமற் போய்விடும்.
நகை வட்டியிலே மூழ்கி விட்டதாகச் செட்டியார் அறிவித்து விடுவார்.
இப்படிப் போன சொத்துக்கள் ஒன்றா, இரண்டா?
என் தாயார் அடிக்கடி ஒரு பழமொழி சொல்வார்கள், `நந்தம் படைத்த பண்டம் நாய் பாதி; பேய் பாதி' என்று.
சென்னை அயனாவரம் கிராமமே எங்களைச் சேர்ந்தது.
அங்கே வாழுகின்ற மக்கள் அனைவரும் அறிவார்கள்.
மத்திய அரசாங்கம் கோச் பாக்டரி கட்டியிருக்கும் இடமும் எங்கள் இடமே.
இன்று பத்துக்கோடி ரூபாய் பெறுமானமுள்ள அந்தச் சொத்துக்களில் ஒரு அங்குலம் கூட எங்களுக்கு உதவவில்லை.
அதனை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தவர் வசதியாக அதனை அனுபவித்தார்.
முன்பெல்லாம் அவர் எப்போது சந்தித்தாலும், `எதற்காகக் கவலைப்படுகிறீர்கள்; உங்கள் சொத்து கோடி பெறும்' என்பார்.
அந்தக் கோடியையும் தான் அனுபவிக்க நினைத்தாரே தவிர, எங்களுக்குத் தர விரும்பவில்லை.
இது சம்பந்தமாக நீதிமன்றத்தில் சுமார் முப்பது வழக்குகள் நடைபெறுகின்றன.
ஒரு வழக்கு முடிந்து சுமார் இருபது லட்ச ரூபாய் பெறுமானமுள்ள ஒரு இடம் எங்களுக்குத் தீர்ப்பாயிற்று.
நானும் எனது சகோதரர் ஏ.எல்.எஸ். அவர்களும் அந்த இடத்தைச் சென்று பார்த்த போது, அங்கே `கருணாநிதி நகர்' என்று போர்டு போட்டிருந்தது. சுமார் நூறு குடிசைகள் போடப்பட்டிருந்தன.
அந்தக் குடிசைகளை இடித்துத் தள்ளுவதற்கு கோர்ட் உத்தரவிட்டிருந்தது.
அந்தப் பகுதியில் வாழும் திரு. வேலூர் நாராயணன் அவர்களோடு குடிசைவாசிகளை அணுகிக் கேட்டோம்.
யாரும் குடிசைகளைக் காலி செய்வதாக இல்லை.
என் சகோதரரும் போனால் போகட்டும் என்று விட்டு விட்டார்.
இன்னும் ஐகோர்ட் உத்தரவு எங்கள் கையில் இருக்கிறது.
அந்தச் சொத்துக்கு முதல் பங்காளியான என் சகோதரி, என் வீட்டிலேயே என் அரவணைப்பிலேயே வாழ்ந்து, அதே ஏக்கத்திலேயே மாண்டு போனார்.
வஞ்சகர்களை நம்பினால் சொத்துக்கள் போகும்; மானம் பறிபோகும்.
உத்தமர்கள் உறவு, தலைமாட்டிலேயே காவலிருக்கும்.
1944-ல் முதன் முதலாக `திருமகள்' என்ற பத்திரிகையில் எனக்கு வேலைக்காகச் சிபாரிசு செய்து ஒரு நண்பர் கடிதம் கொடுத்தார்.
திருச்சியில் அவர் கடிதம் கொடுத்தார். நான் புதுக்கோட்டைக்குப் போக வேண்டும்.
கையிலே பணம் இல்லை.
`மலையரசி தாயே' என்று வேண்டியபடி பாலக்கரை வழியே நடந்து கொண்டிருந்தேன்.
திடீரென்று ஒரு கடை என் கண்ணில்பட்டது.
அது ஒரு வட்டிக் கடை அல்ல, வட்டக் கடை.
கொஞ்சம் கமிஷன் எடுத்துக் கொண்டு நோட்டுகளுக்கு சில்லரை கொடுக்கும் கடை.
அதிலே உட்கார்ந்திருந்தார் ஒருவர்.
அவர் பெயர் வையிரவன் செட்டியார். எங்கள் ஊரைச் சேர்ந்தவர்.
நான் அவரிடம் போய் கடிதத்தைக் காட்டிக் கெஞ்சினேன்.
அவர் ஐந்து ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.
காலத்தால் அவர் செய்த அந்த உதவி எனக்கு முதல் உத்தியோகத்தை வழங்கிற்று.
இறை நம்பிக்கையின் விளைவாகத் துன்பத்துக்கிடையேயும் இன்பமும் தோன்றுவதை நான் பார்க்கிறேன்.
இப்போது நான் நினைத்தால் செய்ய முடியாத பல காரியங்களை, இதற்கு முன்னாலேயே செய்து முடிக்கும்படி இறைவன் எனக்கு உதவி இருக்கிறான்.
உதாரணம், எனது ஐந்து புதல்வியரின் திருமணங்கள்.
எனது ஏராளமான ஆழ்ந்த தத்துவார்த்த எழுத்துக்கள்.
நான் கவிதையிலே பொய் சொல்லுவேன், கற்பனை என்ற பெயரில். ஆனால், வாழ்க்கையில் பொய் சொல்ல மாட்டேன்.
எனக்கு மதநெறி உண்டு; வெறி கிடையாது.
எங்கே, இப்போது மீண்டும் வள்ளலார் பாடலைப் படித்துப் பாருங்கள்.
இந்தப் பாடல், துயரப்பட்டபின் எனது சிந்தனையைக் கிளறிற்று.
உங்களுக்கு இதுவே ஒரு சுகமான சிந்தனையாக இருக்கும்.

ராமநவமி விரத பூஜை எப்படி செய்வது ?

ராமநவமி அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்தையும், ராமாயண காவியத் தையும் பூஜை யறையில் வைத்து வழிபட வேண்டும்.  அதோடு வடை, பருப்பு, பானகம், நீர்-மோர், பாயசம், ஆகியவற்றை நைவேத்யம் செய்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு அவற்றைத் தர வேண்டும். இந்த விழா கொண் டாடப்படும் நேரம் கோடைக்காலம் எனபதால் விசிறி தானம் செய்வது மிகவும் நல்லது. ராமநவமி விரதம் இருக்கும் போது ” ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா” என்று 108 முறை சொல்லி வழிபடுவது சிறப்பு. ராமநாமம் எல்லையற்ற ஆன்ம சக்கி தரக்கூடியது.” ரா” என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கள் எல்லாம் வெளியேறிவிடுகின்றன என்றும், “ம” என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப்பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப் படுவதாகவும் ஐதீகம்.

Friday, March 30, 2012

பெண்களை பெருமைப்படுத்துவோம்-கவியரசு கண்ணதாசன்

Posted On March 30,2012,By Muthukumar

`என்ன குழந்தை பிறந்திருக்கிறது?' என்று கேட்கிறார்கள்.
`பெண் குழந்தை' என்று பதில் வருகிறது.
பாட்டி அலுத்துக் கொள்கிறாள்.
அத்தனைக்கும் அவளும் ஒரு பெண்தானே!
என் தாயாருக்கு முதற்குழந்தை பெண்ணாகப் பிறந்தது.
மருமகளுக்குக் குழந்தை பிறந்தால், மாமியார் வந்து மருந்து இடித்துக் கொடுப்பது எங்கள் குல வழக்கம்.
`பெண் குழந்தையா பெற்றிருக்கிறாள்?' என்று எங்கள் பாட்டி அலுப்போடு வந்தார்களாம்.
இரண்டாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.
பாட்டியிடம் போய்ச் சொன்னார்களாம்.
`இவளுக்கு வேறு வேலை இல்லையா...?' என்று பாட்டி அலுத்துக் கொண்டார்களாம். ஆனாலும் வந்து மருந்து கொடுத்தார்களாம்.
மூன்றாவது குழந்தையும் பெண்ணாகப் பிறந்தது.
என் பாட்டியோ, `அவளையே மருந்து இடித்துக் குடிக்கச் சொல்!' என்று சொல்லி விட்டார்களாம்.
பிறகு, அவர்களைக் கெஞ்சிக் கெஞ்சி அழைத்து வந்தார்களாம்.
நாலாவது குழந்தை வயிற்றில் இருந்த போது என் தாயார் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டிருந்தார்களாம்.
ஆண்டவன் லீலையைப் பாருங்கள்; அதுவும் பெண்ணாகவே பிறந்தது.
கடைசிவரை என் பாட்டி அந்தக் குழந்தையைப் பார்க்கவே இல்லையாம்.
`மலையரசி அம்மன் புண்ணியத்தில் ஐந்தாவதாக என் மூத்த சகோதரர் பிறந்தார்' என்று என் தாயார் சொல்வார்கள்.
எந்தப் பெண்ணுமே தனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்றே ஆசைப்படுகிறாள்.
பெண் குழந்தை பிறந்தால் பெற்ற தாயே சலித்துக் கொள்கிறாள்.
`பெண்ணென்று பூமிதனில்
பிறந்து விட்டால் மிகப்
பீழை இருக்குதடி தங்கமே தங்கம்!'
-என்றான் பாரதி.
பெண் பிறப்பு என்ன அப்படிப் பாவப்பட்ட பிறப்பா?
தாய் என்கிறோம்; சக்தி என்கிறோம்; ஆனால், குழந்தை மட்டும் பெண்ணாகப் பிறக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறோம்.
என்னைப் பொறுத்தவரையில் பெண் பிறந்தால் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கார் விபத்தில் சிக்கி நான் பாண்டிச்சேரி `ஜிப்மர்' மருத்துவமனையில் இருந்த போது, என்னைப் பார்த்துப் பார்த்து அழுதவை, பெண் குழந்தைகளே!
ஆண் பிள்ளையோ மனைவி வந்து விட்டால், அப்பனை வீட்டை விட்டுக் கூடத் துரத்தி விடுவான்.
பெண் குழந்தையின் பாசமும், பரிவும் ஆண் குழந்தைக்கு வராது.
ஒரு வயதுப் பெண் குழந்தைக்குக்கூட தாய், தகப்பன் மீதிருக்கிற பாசம் தெய்வீகமாக இருக்கும்.
அதிலும், இந்தியப் பெண்மை என்பதே மங்கலமானது.
அதன் இரத்தம், இரக்கம், கருணை, பாசங்களாலே உருவானது.
மேல் நாட்டுப் பெண்மைக்கும் இந்தியப் பெண்மைக்கும் உள்ள பேதம் இதுதான்.
மேல் நாட்டுப் பெண்மை ஒரு இடத்திலும் ஒட்டு, உறவு, பாசம் என்பதை வளர்த்துக் கொள்வதில்லை.
அது தண்ணீரில் விட்ட எண்ணெயைப் போல் தனித்தே நிற்கிறது.
இந்தியாவில்தான் இது சங்கிலி போட்டுப் பின்னப்படுகிறது.
எனக்கு நன்றாக நினைவிருக்கிறது.
என் சின்ன வயதில் எங்கள் சமூகத்தில் பெண்கள் குறைவு. அதனால், ஒரு பெண்ணை ஒரு வாலிபன் கல்யாணம் செய்து கொள்ள வேண்டுமென்றால் ஐம்பதாயிரம், அறுபதாயிரம் பணம் கொடுக்க வேண்டியிருக்கும்.
நான் வளர வளரக் கவனித்து வந்தேன்.
என் முதல் சகோதரி திருமணத்தின் போது பெண்ணின் விலை, மிக அதிகம்.
இரண்டாவது சகோதரிக்குத் திருமணம் நடந்த போது, அது குறைந்தது.
மூன்றாவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மேலும் குறைந்தது.
நான்காவது சகோதரியின் திருமணத்தின் போது, அது மிக மிகக் குறைந்து விட்டது.
ஐந்தாவது திருமணம் வந்த போது மாப்பிள்ளைக்கு நாங்கள் பணம் கொடுக்க வேண்டி வந்தது.
ஆறாவது திருமணத்தில் அது இன்னும் அதிகமாயிற்று.
இப்போது பெண்ணைப் பெறுகிறவர்கள் எல்லாம் நடுங்குகிறார்கள்.
நான் ஐந்து பெண்களுக்குத் திருமணம் செய்தேன்.
என் அண்ணனும், தேவரும் கைகொடுத்தார்கள்.
இப்பொழுது அதே திருமணங்களைச் செய்வதென்றால் என்னால் முடியாது.
சுவாமி விவேகானந்தர் சொன்னது போல், பெண் பிறந்து விட்டால் தாய் தகப்பனின் தலை சுழல்கிறது. அந்தப் பொருளாதார நோக்கத்தில் பெண் பிறப்பு வெறுக்கப்படுகிறது.
ஆண் குழந்தை அடி மடையனாக இருந்தாலும் அவனுக்கு நல்ல விலை கிடைக்கிறது.
தாய்மையின் கம்பீரத்தை, `சக்தி' வடிவமாகக் காணும் இந்திய நாடு, பெண்ணை வெறுக்க நேர்வது எவ்வளவு துரதிருஷ்டம்?
வரதட்சணை முறையைப்பற்றி எவ்வளவோ பேர் எவ்வளவோ சொல்லிவிட்டார்கள். ஆனால், அந்தக் கொடுமை இன்னும் நீடித்துக் கொண்டேதானிருக்கிறது.
பெண்மையின் எதிர்காலம் முழுவதுமே பணத்தில் அடங்கிக் கிடக்கிறது. அதன் மேன்மை உணரப்படவில்லை.
உத்தமமான ஏழைப் பெண்மையில் தெய்வீகம் காட்சியளிக்கவில்லை.
ஒரு ஏழைப் பெண், தான் குங்குமம் வைப்பதற்கே கண்ணீர் வடிக்க வேண்டியிருக்கிறது.
கழுத்திலே ஒரு பொட்டுத் தாலியைக் கட்டிக் கொள்வதற்குத் தாய் தகப்பனைக் கசக்கிப் பிழிய வேண்டியிருக்கிறது.
கூன், குருடு, செவிடு, நொண்டிக்காவது வாழ்க்கைப்பட்டு, `சுமங்கலி' என்ற பெயரோடு சாவதற்கு இந்துப் பெண் ஆசைப்படுகிறாள்.

ஆனால், அதற்கும் விலை தேவைப்படுகிறது.
நடுத்தரக் குடும்பத்தில் பிரச்சினைகளிலெல்லாம் பெரிய பிரச்சினை, மகளே!
எங்கள் சமூகத்தில் மகளைத் திருமணம் முடித்துக் கொண்டு விடுவதோடு தகப்பன் கவலை தீர்ந்து விடுவதில்லை.
தீபாவளி வந்தாலும், பொங்கல் வந்தாலும், மகள் பிரசவித்தாலும் அவன் பணம் தேட வேண்டியிருக்கிறது.
இல்லையென்றால், `உன் அப்பன் என்னடி கொடுத்தான்?' என்று மாமியார் கன்னத்தில் இடிக்கிறாள்.
கட்டிக்கொண்ட கணவனோ கல்லுப் பிள்ளையார் மாதிரி இருக்கிறான்!
அவனுக்குச் சுயதர்மமும் தெரியாது; சுயகர்மமும் புரியாது.
`எனக்கு மனைவிதான் தேவை; மாமனார் வீட்டு சீர்வரிசை அல்ல!' என்று சொல்லக்கூடிய ஆண் மகனாக அவன் பெரும்பாலும் இருப்பதில்லை.
`அடியம்மா! கதையைக் கேட்டாயா? அண்ணன் மனைவிக்கு சம்பந்தி வீட்டார், போட்ட சங்கிலி காற்றிலே பறக்கும்,' என்று நாத்தனார் கேலி செய்கிறாள்.
ஒரே வீட்டில் ஒரு மருமகள் ஏழையாகவும், இன்னொரு மருமகள் பணக்காரியாகவும் வந்து விட்டால், அந்த ஏழை மருமகள் படும்பாட்டை இறைவன் கூடச் சகிக்கமாட்டான்.
இந்துக்களின் துயரங்களிலெல்லாம் பெரிய துயரம் இந்தத் துயரமே.
சனாதன வைதிக இந்துக்கள் கூட இதில் கருணை உள்ளவர்களாக இல்லை.
சீதையை ராமன் மணந்ததும்,
ருக்மிணியைக் கண்ணன் மணந்ததும்,
-சீர்வரிசைகளுக்காக அல்ல.
வள்ளி, தெய்வானையிடம் உமா தேவியார் என்ன சீர்வரிசைகளா கேட்டார்கள்?
அகலிகை என்ன கொண்டு வந்தாள், முனிவரின் ஆசிரமத்திற்கு?
`நாளை உதயமாகக் கூடாது' என்று சூரியனுக்கே கட்டளையிட்ட நளாயினி, கற்பென்னும் அணிமணிகளை மட்டுமே அணிந்திருந்தாள்.
தேவர்களைக் குழந்தைகளாக்கிய அனுசூயையின் கழுத்தில் திருமாங்கல்யம் மட்டுமே பிரகாசித்தது.
இந்து வேதம் படிக்கிறான்; புராணம் படிக்கிறான்; இதிகாசம் படிக்கிறான்.
மகனுக்குப் பெண் தேடும் போது, மனிதாபிமானத்தையே இழந்து விடுகிறான்.
ஊரில் நடக்கும் திருமணங்களை எல்லாம் பார்த்தபடி உள்ளுக்குள் குமுறும் இந்துப் பெண்கள் எவ்வளவு பேர்?
பையன் பட்டப் படிப்புப் படித்து விட்டான் என்பதற்காக, `ஸ்கூட்டர் கொடு; பங்களா கொடு' என்று வம்பு செய்யும் மாமன்மார் எத்தனை பேர்?
இந்து சமூகத்தில் புரையோடிவிட்ட இந்தப் புற்று நோயை இளைஞர்கள் களைந்தாக வேண்டும்.
அழகான ஒரு அனுசூயையைத் தேர்ந்தெடுப்பதே அவனுடைய பணியே தவிர, ஸ்கூட்டருக்காகவும், வரதட்சிணைக்காகவும் எந்த அலங்கோலத்திலும் சிக்கிக் கொள்வதல்ல.
`ஒரு பெண் புக்ககம் வருகிறாள் என்றால், ஒரு தெய்வம் அடியெடுத்து வைக்கிறது' என்று பொருள்.
`தெய்வமே வைர நகைகளோடு வந்தாக வேண்டும்' என்று ஒரு நல்ல இந்து கேட்க மாட்டான்.
கற்புடைய ஒரு பெண்ணைவிட, அவள் அணிந்து வரும் நகைகள் விலையுயர்ந்தவையல்ல.
அழகான புள்ளிமானிடம் கவிஞன், கலையைத்தான் எதிர்பார்க்க வேண்டுமே தவிர மாமிசத்தையல்ல!
பையனைப் படிக்க வைக்கும்போதே, தான் செய்யும் செலவுகளையெல்லாம் சம்பந்தியிடம் வட்டி போட்டு வசூலிப்பது என்று தகப்பன் முடிவு கட்டிக் கொள்கிறான்.
அதை ஒரு தார்மிகப் பெருமையாகவும் கருதுகிறான்.
இந்து தர்மத்தின் முழு ஆதார சுருதியையும் அவன் அங்கேயே அடித்துக் கொன்று விடுகிறான்.
அவன் திருநீறு பூசுகிறான்; திருமண் இடுகிறான்; ஒரு மணி நேரம் பூஜையில் அமர்கிறான்; உலக க்ஷேமத்துக்காக பிரார்த்திக்கிறான்; வீட்டில் இருக்கிற சாமி சிலைக்குக் கூட வைர நகை செய்து போட்டு அழகு பார்க்கிறான்; ஆனால், மருமகளைத் தேர்ந்தெடுக்கும் போது மட்டும் அவன் யூத வியாபாரியாகி விடுகிறான்.
கண்ணைப் பறிக்கின்ற அழகு- கடவுளே மதிக்கின்ற கற்பு- ஆனால், அவளோ ஒரு நடுத்தரக் குடும்பத்துப் பிறப்பு.
அந்த இரண்டு அற்புதமான குணங்களுக்காக ஒரு பணக்காரன் அவளை கட்டிக்கொள்ள முன் வரவில்லையே?
ஒரு அனாதைக்கோ, தற்குறிக்கோ அல்லவா அந்தத் தெய்வப் பெட்டகம் போய்ச் சேருகிறது?
பொருளாதாரம் பெண்ணின் வாழ்வோடு விளையாடுவதை, இளைஞர்கள் தடுக்க வேண்டும்.
`உத்தியோகம் பார்க்கின்ற பெண் எனக்கு வேண்டும்' என்று ஒரு இந்து இளைஞன் கேட்பது எனக்குப் புரிகிறது.
அந்தப் பொருளாதாரத்தில் அடிப்படை நியாயம் இருக்கிறது.
`நான் படித்திருக்கிறேன்! நாற்பதாயிரம் வேண்டும்' என்பது தான் எனக்குப் புரியவில்லை.
துர்ப்பாக்கிய வசமாக ஏழைகளுக்கும், நடுத்தர மக்களுக்குமே குழந்தைகள் அதிகம் பிறக்கின்றன.
அதிலும் வறுமை மிக்க இல்லங்களில் இறைவன் பெண்ணாகவே படைத்துத் தள்ளுகிறான்.
அவன் இந்துக்களை ஆத்ம சோதனை செய்கிறான்.
`பிரமாத தத்துவம் பேசும் நீங்கள் என் சிருஷ்டியை எப்படி மதிக்கிறீர்கள்? பார்க்கிறேன்!' என்று சவால் விடுகிறான்.
நாம் ஒருபோதும் அவனது சவாலை ஏற்றுக் கொண்டதில்லை.
ஒரு கையில் தராசையும், ஒரு கையில் பையையும் வைத்துக் கொண்டுதான் பெண்ணைத் தேடுகிறோம்.
நமக்கு வருகிற வியாதிக்கெல்லாம் காரணம், இதுவே.
பெண்ணை மாமியார் வீட்டுக்கு வழியனுப்பும் போது பெற்றோர் கண்ணீர் வடிக்கிறார்களே, ஏன்?
`திருமணத்திற்கு முன் இவ்வளவு பாடுபடுத்தினார்களே, திருமணத்திற்குப் பின் என்ன செய்வார்களோ...?' என்று அஞ்சுகிறார்கள்.
என்னையே எனது ஒரு பெண்ணின் திருமணத்தில் அழ வைத்திருக்கிறார்கள்.
`இவர் கவிஞராயிற்றே, கவியரசாயிற்றே' என்ற மரியாதையெல்லாம் இந்த விஷயத்தில் கிடையாது.
பெண்ணைப் பெற்றவன், கண்ணீர் விட்டே ஆக வேண்டும்; அவ்வளவுதான்.
`பாரதத்தில் ஒருமுறைதானா குருக்ஷேத்திரம் நடந்தது?'
நாம் ஒவ்வொருவரும் குருக்ஷேத்திரம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.
எனக்கு நெருங்கிய நண்பராக இருந்த எழுத்தாளர் காலமானார்; அவருக்கு நான்கு பெண்கள்.
அவர் உயிருடன் இருக்கும்போதே ஒருத்திக்கு முப்பத்தி நான்கு வயது; ஒருத்திக்கு முப்பது வயது; ஒருத்திக்கு இருபத்தி ஆறு வயது; ஒருத்திக்கு இருபது வயது.
ஒருத்திக்கும் திருமணம் ஆகவில்லை.
இங்கே கலப்புத் திருமணத்திற்குத் தங்கப் பதக்கம் கொடுக்கிறார்களாம்!
இந்தக் கொடுமையில் இருந்து சமுதாயம் மீள வேண்டும்.
இது வெறும் வாதப் பிரதி வாதங்களால் நடக்கின்ற காரியமல்ல.
`இறைவா! எனக்கு ஒரு சீதையைக் கொடு; அனுசூயையைக் கொடு; கோலார் தங்கச்சுரங்கம் வேண்டாம்' என்று பிரார்த்திக்க வேண்டும்.
`நான் வரதட்சிணை வாங்காதவன்' என்பதே ஒரு இந்து இளைஞனின் பெருமையாக இருக்க வேண்டும்.

சிவனை வழிப்பட்ட சூரியக்கதிர்: பக்தர்கள் பரவசம்!

திருச்சி அருகே திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில், சிவலிங்கத்தை சூரியக்கதிர்கள் வழிப்பட்டதை தரிசித்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.
பொன்னி நதியாம் காவிரி பாயும் சோழவளநாட்டின் மையப் பகுதியான திருச்சியின் வடக்கே 25 கி.மீ., தூரத்தில், சென்னை பை-பாஸ் அருகே உள்ள திருப் பட்டூரில் பிரம்ம சம்பத் கௌரி உடனுறை பிரம்ம புரீஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. உலகிலுள்ள படைப்புகளுக்கு எல்லாம் தலையெழுத்தை நிர்ணயி க்கும் பிரம்மனுடைய தலையெழுத்தை மாற்றி எழுதி, தன்னை நோக்கி தவமிருந்த பிரம்ம னுக்கு சிவன் அருள்பாலித்த திருத்தலம். இதன் மூலம் இங்கு வந்து வழிபடும் பக்தர்களின் தலை யெழுத்தெல்லாம், திருமால், பதஞ்சலி, வியாக் கிர பாதர், சூரியபகவான் ஆகியோரால் மங்க ளகரமாக மாற்றியருள பிரம்மனுக்கு சிவன் வரம் அளித்த ஸ்தலம். இத்தகைய புராண சிறப்புப்பெற்ற திருத்தலத்தில், ஆண்டுதோறும் பங்குனி மாதம் 28, 29, 30 ஆகிய தேதிகளில், சூரியபகவான் தனது சூரியக் கதிர்கள் மூலம் மூலவர் பிரம்மபுரீஸ்வரை வழிபடுவது வழக்கம். சூரியக்கதிர் வழிபாடு நடக்கும் முதல் நாளான 28-03-2012 அன்று காலை ஏராளமான பக்தர்கள் சிவனை வழிபட அதிகாலையில் இருந்து காத்திருந்தனர். காலை 6.21 மணிக்கு, சிவலிங்கத்தின் மீது சூரியக்கதிர்கள் பற்றி படர்ந்தது. சூரியக்கதிர் பட்டு சிவலிங்கம் பிரகாசித்த காட்சியை கண்டு பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர். “தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவருக்கும் இறைவா போற்றி என்று கோஷம் எழுப்பி மகிழ்ந்தனர்.
* அம்மன் வழிபாடு: மூலவர் பிரம்மபுரீஸ்வரரை சூரியக்கதிர்கள் வழிபட்ட அதேநேரத்தில், பிரம்ம சம்பத் கௌரி அம்மனின் பாதங்களில் சூரியக்கதிர்கள் பணிந்த காட்சி பக்தர்களை பரவசமடைய செய்தது.
* திருத்தேர்: பிரம்மபுரீஸ்வர் கோவிலில் பங்குனித் திருத்தேர் விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. முக்கிய விழாவான பங்குனித்தேரோட்டம், வரும் ஏப்ரல் நான்காம் தேதி காலை 6.30 மணிக்கு நடக்கிறது. கோவிலின் தேர் பழுதடைந்ததால், கோவிலுக்கு பாத்தியப்பட்ட கிராம மக்கள் மற்றும் நன்கொடையாளர் கள் செலவில் புதிய தேர் செய்யப்பட்டு, கடந்த 25ம் தேதி வெள்ளோட்டம் விடப்பட்டது. 25 ஆண்டுக்கு பின், இக்கோவில் தேரோட்டம் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.

Thursday, March 29, 2012

தனிப்பட்ட‍ முறையில் சிறப்பு பெற்ற‍ திருக்கோவில்கள்

*  சின்ன சேலம் ஆறகழூரில் உள்ள காம நாதேஸ்வரர் ஆலயத்தில் அஷ்ட பைர வர்களையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்யலாம்.
*சக்தியோடுகூடிய தட்சிணாமூர்த்தி யை திருக்கள்ளில் தலத்திலும் சுருட்ட ப்பள்ளி தலத்திலும் பார்த்துப் பரவசம டையலாம்.
*  காங்கேயம் முருகன் ஆலயத்தில் கால் நடைகள் நோய்நொடியின்றி வளமாக வாழ கதனை என்று கூறப் படும் அதிர்வெடி வழிபாடு நடைபெறுகிறது.
*  சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அழகிரிநாத சுவாமி ஆலயத்தில், சிம்ம முகத் துடன் அனுமனை தரிசிக்கலாம்.
*  வந்தவாசிக்கு அருகில் உள்ள ஆவணியா புரத்தில் சிம்ம முகத் தோடு அருள்கிறாள் மகாலட்சுமி! பக்தர்களைக் காக்க, யாகத் தீயால் எரிந்த, அடையாளம் காண முடியா த, முகமில்லாத நரசிம் மர் மடியில் அமர்ந்திருக்கிறாள். அந்த ரசிம்ம ரின் முகத்தை தேவி தான் ஏற்று அருள்பாலிக்கிறாள்.
*  ஆந்திராவில் உள்ள மங்களகிரி பானக நரசிம்மருக்கு நாம் எவ்வ ளவு பானகம் நிவேதனம் செய்தாலும், அந்தப் பானக அளவில் பாதியை விழுங்கி, மீதியை பிரசாதமாக நிறுத்திவிடுகிறார். இனிப் பான பானகம் எத்தனையோ லிட்டர் கொண்டு சேர்த்தாலும் அத்த லத்தில் ஈ எறும்பு இல்லாதது அற்புதம்.
*  ராமபிரான் நான்கு கரங்களுடன் மூல வராக செங்கல்பட்டிற்கு அருகே உள்ள பொன்பதர்கூடத்திலும் உற்சவராக கும் பகோணத் தருகே உள்ள புள்ளம்பூதங் குடியிலும் அருள்கிறார்.
*  மனித முகத்துடன் விநாயகரை  கும்ப கோணம் திருமீயச்சூர் அரு கே உள்ள செதிலபதியிலும் சிதம்பரம் தெற்கு வீதி யிலும் தரிசிக் கலாம்.
*  வேதாரண்யம் அருகில் உள்ள கோடிக் காட்டில் ஆறு கரங்களும் ஒரு முகமும் கொண்ட முருகப் பெரு மான் அருள்கிறார்.
*  கும்பகோணம் அருகில், நாச்சியார் கோயில் கல் கருடன் வீதி உலா வரும்போது கருடனின் எடை கூடிக்கொண்டே செல்வதும் பின் ஆலயம் திரும்பும்போது குறைந்து கொண்டே வருவதுமான அற்புதம் நிகழ்கிறது.
கோலவிழி அம்மன்
* சென்னை-மயிலை கோலவிழி அம்மனின் திருவிழி கள் மனிதர்களுக்கு இருப்பது போலவே உயிரோட்டமுள்ள தாக அமைந்துள் ளது.
*  விருத்தாசலம் அருகே உள்ள ஸ்ரீ முஷ்ணத்தில் சப்த கன்னியர்களும் தாயாரின் தோழிகளாக பூஜிக்கப்படுகி ன்றனர்.
*  செங்கல்பட்டு-மதுராந்தகம் பாதையில், படாளம் சர்க்கரை ஆலையின் இடதுபுறத்தில் சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ள அரசர் கோயிலில் ஆறு விரல்கள் கொ ண்ட மகாலட்சுமியை தரிசி க்கலாம்.
*  சிதம்பரத்தில் உள்ள தில்லைக்காளி ஆலய பிராகாரத்தில் கடம் பவன தட்சிணாமூர்த்திரூபிணி எனும் பெயரில் பெண் வடிவ தட்சி ணாமூர்த்தியை தரிசிக்கலாம்.
*  தன் பக்தனுக்காக தீபாவளி அன்று திதி கொடுக்கும் கும்பகோ ணம் சார்ங்கபாணி பெருமாளுக்கு அன்றைய நிவேதனம், திதி சமையல்தான்.
*  விநாயகரின் முகத்தையும் தேள் போன்ற வரிவரியான உடல மைப்புடன் உள்ள விருச்சிகப் பிள்ளையாரை கும்பகோணம் ஆடு துறையிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள மருத்துவக்குடியில் தரிசிக்கலாம்.
*  ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு கிழக்கே 14 கி.மீ. தொலை வில் உள்ள நயினார் கோயில் நாகநாதர் சந்நதியில் குழந்தைக ளை ஆலயத்திற்கு நேர்ந்து விட்டு, பின் ஏலம் கேட்டு அவர்களை திரும்பப் பெறும் பிரார்த்தனை வழக்கத்தில் உள்ளது. இதை விற்று வாங்குதல் என அழைக்கின்றனர்.
*  திருச்சி, சிறுவாச்சூர் மதுரகாளிக்கு ஆலயத்திலேயே மாவிடித்து மாவிளக்கு ஏற்றுகின்றனர். வீட்டிலிருந்து மாவு எடுத்துச் செல்ல அங்கு அனுமதி இல்லை.
*  சென்னை, தாம்பரம் – காஞ்சிபுரம் மார்க்கத்தில் உள்ள பண்ருட்டி க் கண்டிகையில் மகாமேரு, திதிநித்யா தேவிகள் அனைவருமே யந்திர வடிவிலேயே அருள்கின்றனர்.
*  வேலூர் அருகில் உள்ள சேண்பாக்கத்தில் 11 சுயம்பு விநாயகர்கள் ஒரே கருவறையில் அருள்கின்றனர்.

விவேகானந்தரின் விளக்கம்!

Posted On March 29,2012,By Muthukumar
ராஜபுதனத்தில் ஆழ்வார் என்று ஒரு சமஸ்தானம் இருந்தது. ஒரு தடவை சுவாமி விவேகானந்தர் அந்த சமஸ்தான மன்னரின் அழைப்பை ஏற்று அங்கு சென்றிருந்தார்.
விவேகானந்தரின் ஆன்மிகப் பெருமையையும், அவருடைய அறிவாற்றலையும் கேள்விப்பட்டிருந்த மன்னர், விவேகானந்தரை தனது அரண்மனையிலேயே தங்கவைத்து மிகுந்த உபசாரம் செய்தார்.
அந்த சமஸ்தான மன்னருக்குப் பொதுவாக இந்து மதத்தின் மீது பற்றும், நம்பிக்கையும் இருந்தாலும், பலவிதமான மூட நம்பிக்கைகளால் இந்து மதத்தின் சிறப்புக்கு மாசு ஏற்படுகிறது என்ற கருத்தைக் கொண்டிருந்தார்.
இந்து மதத்தில் வழக்கமாக உள்ள கடவுள்களின் திருவுருவ வழிபாடு என்பது ஓர் அர்த்தமற்ற மூடநம்பிக்கை என்பது மன்னரின் அழுத்தமான எண்ணம்.
ஒருநாள் மன்னரும், விவேகானந்தரும் இந்து மதத் தத்துவங்கள் குறித்து உரையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது மன்னர் விவேகானந்தரை நோக்கி, ``சுவாமி, இந்து மதத்தில் நடைமுறையில் இருக்கும் தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றித் தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உயிரற்ற கற்களாலும், உலோகங்களாலும் செய்யப்பட்ட தெய்வத் திருவுருவங்களில் ஏதோ மகிமை இருப்பதாக எண்ணிக்கொண்டு அவற்றுக்குப் பூஜை செய்வதும், வழிபாடு மேற்கொள்வதும் அறிவுக்கு ஒவ்வாத செயல்கள் அல்லவா? கல்லிலும், செம்பிலுமான உருவங்களில் கடவுள் குடிகொண்டிருக்கிறார் என்று நீங்கள் நம்புகிறீர்களா?'' என்று கேட்டார்.
மன்னரின் அந்தக் கேள்வியைக் கேட்டு சுவாமி விவேகானந்தர் புன்முறுவல் பூத்தார்.
மன்னருக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை வெறும் வாய்விளக்கமாகக் கூறிப் போக்க முடியாது என்று அவர் நினைத்தார்.
வேறு எந்த வழியில் மன்னரின் ஐயத்தைப் போக்குவது என்று யோசித்த விவேகானந்தரின் கண்களில், சுவரில் மாட்டியிருந்த மன்னரின் தந்தையின் பெரிய திருவுருவப் படம் கண்களில் பட்டது.
``அது யாருடைய உருவப் படம்?'' என்று விவேகானந்தர் வினவினார்.
``என் தந்தையின் படம் இது'' என்றார் மன்னர்.
``இது என்ன படமா? எவ்வளவு அவலட்சணமான உருவம்! இந்தப் படத்தை இந்த இடத்தில் மாட்டி வைத்திருப்பதால் இந்த அறையின் அழகே கெட்டுப் போய்விடுகிறது. இதைக் கழற்றி சுக்குநூறாக உடைத்துக் குப்பைத் தொட்டியில் வீசுங்கள்!'' என்று கூறினார் விவேகானந்தர்.
அவர் சொன்னதைக் கேட்டு மன்னர் ஆவேசமடைந்து விட்டார்.
``சுவாமி... என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள்! இதே சொற்களை வேறு யாராவது சொல்லியிருந்தால் இந்நேரம் அவர் தலையை வெட்டி வீழ்த்தியிருப்பேன்! என் தந்தையை நான் தெய்வமாகவே கருதி வழிபட்டு வருகிறேன். அவருடைய திருவுருவப் படத்தைப் பற்றி நீங்கள் எவ்வாறு இழிவாகப் பேசலாம்?'' என்று ஆர்ப்பரித்தார்.
விவேகானந்தரோ மிகவும் நிதானமாக மன்னரை நோக்கி, ``மன்னவரே, உமது தந்தை மீது எனக்கு எவ்விதத் துவேஷமும் கிடையாது. அவரை இழிவுபடுத்துவதும் எனது நோக்கமல்ல. தெய்வத் திருவுருவ வழிபாட்டைப் பற்றி உங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விளக்குவதற்காகவே நான் இவ்வாறு நாடகமாடினேன்.
உங்கள் தந்தையாரின் உருவப் படத்துக்கு உயிர் இல்லை. இது ஓர் ஓவியரால் வரையப்பட்ட ஓவியம்தான். இந்த ஓவியத்தினுள் உங்கள் தந்தை ஒளிந்துகொண்டிருக்கவில்லை. ஆனால் உங்கள் தந்தை மீது உங்களுக்கு இருக்கும் அன்பு, மதிப்பு, மரியாதை காரணமாக இதை ஓர் நினைவுச்சின்னமாகப் போற்றி வருகிறீர்கள். தெய்வத் திருவுருவங்களை இந்து மதத்தைச் சார்ந்த மக்கள் வழிபடுவதன் நோக்கமும் இதுதான். இறைவனை நோக்கி வழிபடும்போது இறை சிந்தனையை நோக்கி மனதை ஒன்றுபடுத்துவதற்கு அந்த உருவங்கள் பயன்படுகின்றன'' என்றார் விவேகானந்தர். சந்தேகம் நீங்கித் தெளிவுபெற்றார் மன்னர்.

இம்மையிலேயே பிறவிப் பயன் அருளும் தெய்வம்

Posted On March 29,2012,By Muthukumar
எந்தப் பிறவியில் என்ன புண்ணிய பாவம் செய்துள்ளோமோ அதைப் பொருத்தே அவரவர் வாழ்க்கை அமையும் என்பார்கள். அதேநேரம், இந்தப் பிறவியில் புண்ணியம் செய்திருந்து, அதற்குரிய பலனை உடனே அனுபவிக்க வேண்டுமானால், நாம் வழிபட வேண்டிய தெய்வம், மதுரையில் எழுந்தருளி அருள்பாலிக்கும் இம்மையிலும் நன்மை தருவார். இம்மை என்றால் `இப்பிறவி' என்று பொருள். இந்த பிறவியிலேயே நன்மைகள் அருள்வதால் அவருக்கு அந்தப் பெயர் ஏற்பட்டது.
இவரை, `இன்மையில் நன்மை தருவார்' என்றும் சொல்வதுண்டு. `இன்மை' என்றால் `இல்லை' என்று பொருள். கடந்த பிறவியில், புண்ணியமே சேர்த்து வைக்காமல் போயிருந்தாலும் கூட, அதற்காக பிராயச்சித்தம் கேட்டு பிரார்த்தித்தாலும், அவர்களுக்கு அப்போதே நன்மை அருளுபவர் இவர் என்பதால் இந்த பெயர் ஏற்பட்டதாகச் சொல்கிறார்கள்.
இக்கோவில் கருவறையில் சிவனும், மத்தியபுரிநாயகி அம்மனும் ஒரே பீடத்தில் அமர்ந்திருக்க, அவர்கள் முன்னால் சிவலிங்கம் இருக்கிறது. இவர்கள் லிங்க பூஜை செய்வதாக ஐதீகம்.
ஒருமுறை சக்தியும், சிவனும் மானிட வடிவெடுத்து மீனாட்சியாகவும், சுந்தரேஸ்
வரராகவும் மதுரை வந்தனர். அவர்கள் மதுரை நகரின் ஆட்சிப்பொறுப்பைக் கையில் எடுத்தனர். பட்டாபிஷேகம் நடக்கும் முன், இறைவனை வழிபட எண்ணினர். சிவன் மானிடப்பிறவியாக வந்து விட்டதால், லிங்க பூஜையின் மகிமையை உலகுக்கு வெளிப்படுத்தும் விதத்தில், தனக்குத்தானே பூஜை செய்வதற்காக லிங்கம் ஒன்றை வடித்தார்.
அந்த லிங்கமே இக்கோவிலில் உள்ள சிவலிங்கம். அந்த லிங்கத்துக்கு பூஜை செய்ய கையில் மலர் ஏந்தியுள்ளார் இறைவனாகிய இம்மையிலும் நன்மை தருவார். இவரது அருகிலுள்ள அம்பிகை கையில் மலர் வைத்திருக்கிறாள்.
இப்போதும், ஆவணி மாதத்தில் சுந்தரேஸ்வரருக்கு பட்டாபிஷேகம் நடக்கும் முன், இந்தக் கோவிலுக்கு வந்து லிங்க பூஜை செய்யும் வழக்கம் உள்ளது.
இங்குள்ள அம்மன் மத்தியபுரிநாயகி கருணை மிக்கவள். திருமணத் தடையுள்ள கன்னிப்பெண்கள், இவளுக்கு மாங்கல்யம் அணிவித்து வணங்கினால் உடனடியாக திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.
அதேநேரம், இவளை கண்டிப்பானவள் என்றும் சொல்கிறார்கள். நம்மிடம் யாரேனும் நீதி தவறி நடந்து கொண்டாலோ, ஏமாற்றினாலோ அல்லது பிறவகையில் துன்பம் செய்தாலோ இவளிடம் முறையிட்டால் போதும், தக்க தண்டனையை அந்த நபர்களுக்கு கொடுத்து விடுவாள் என்கிறார்கள்.
இப்படி கருணையும், கண்டிப்பும் மிக்க மத்தியபுரி நாயகிக்கும், இம்மையில் நன்மை தருவாருக்கும் நடக்கும் திருமணத்தைக் காண்பவர்கள் இந்தப் பிறவி எடுத்த பயனை இப்போதே அடைவர்; வாழும் காலத்தில் நிறைந்த செல்வமும், வாழ்வுக்குப் பிறகு மோட்சமும் பெற்று சிறப்படைவர் என்பது ஐதீகம்.
மதுரை நகரின் மத்தியில், பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் வழியில் இக்கோவில் அமைந்துள்ளது.

Wednesday, March 28, 2012

சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டலாமா?

Posted On March 29,2012,By Muthukumar
சிவன் கோவில்களில் சண்டிகேஸ்வரர் சன்னதியை நீங்கள் பார்த்திருப்பீர்கள். சிலர், அந்த சன்னதியை அடைந்ததும் பவ்வியமாக கை தட்டுவார்கள். இன்னும் சிலர் பலமாக கை தட்டுவார்கள். மேலும் சிலர் அமைதியாக கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள்.
உண்மையிலேயே இப்படிச் செய்யலாமா? அதற்கு முன், யார் இந்த சண்டிகேஸ்வரர் என்று பார்த்து விடுவோம்...
சோழநாட்டில் சேய்ஞ்ஞலூர் என்ற திருத்தலம் உள்ளது. இங்கு எச்சதத்தன்-பவித்திரை தம்பதியினர் வசித்தனர். இவர்களது மகன் விசாரசருமன். இவன் சிறு வயதிலேயே சிவபக்தி கொண்டவனாக வளர்ந்தான்.
பசுக்களை மேய்க்கும் தொழிலை மேற்கொண்டதால் பசுக்கள் இவனை தாங்கள் உயிராக கருதின. மாடு மேய்க்க செல்லும் இடத்தில் மணலில் சிவலிங்கம் வடிப்பது இவனது வழக்கம். மேய செல்லும் பசுக்கள் அதன்மேல் பாலை சுரந்து அபிஷேகம் செய்யும். இவ்வாறு சிவ சேவை செய்த பசுக்கள் வீட்டுக்கு வந்த பிறகும் தங்கள் எஜமானர்களுக்கும் தேவையான பாலை சுரந்து கொடுத்து வந்தன.
ஒருமுறை அந்த ஊர் இளைஞன் ஒருவன் சிவலிங்கம் மீது பசுக்கள் பால் சுரந்ததை பார்த்து விட்டான். அத்துடன், விசாரசருமன் அதை கண்டு கொள்ளாமல் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி ஆனான். ஊருக்குள் சென்று நடந்த விவரத்தை தெரிவித்தான். மாடுகளின் உரிமையாளர்கள் இதுகுறித்து எச்சதத்தனிடம் சொல்லி, மகனை கண்டிக்கும்படி கூறினர்.
அவர் உண்மையை அறிய ஒருநாள் மாடு மேய்க்கும் இடத்துக்கு வந்து மறைந்து நின்று கவனித்தார். மாடுகளின் உரிமையாளர்கள் கூறியபடியே மண் லிங்கத்தின் மீது பசுக்கள் பாலை சொரிந்தன. விசாரசருமன், அந்த மணல் லிங்கத்தின் முன் ஆழ்ந்த தியானத்தில் இருந்தான்.
அதைப் பார்த்த எச்சதத்தனுக்கு கோபம் வந்து விட்டது. மகனை உதைத்து கண்டித்தார். மேலும், மணல் லிங்கத்தை காலால் மிதித்து உடைத்தும் விட்டார். இதனால் கோபம் அடைந்த அவரது மகன் விசாரசருமன், அவரது கால் மீது தன் கையில் இருந்த குச்சியை எறிந்தான். அது சிவன் அருளால் கோடரியாக மாறி அவரது காலை காயப்படுத்தியது.
அளவு கடந்த பக்தி காரணமாக தந்தையையே தாக்க துணிந்த அந்த அதி தீவிர பக்தன் முன்பு பார்வதி தேவியுடன் தோன்றினார் சிவன்.
எச்சதத்தனின் காயத்தை மறையும்படி செய்தவர், விசாரசருமனுக்கு சிவ கணங்களை நிர்வாகம் செய்ய சண்டிகேச பதவியை வழங்கினார். அதோடு, தனக்கு சூட்டப்படும் மாலை, நைவேத்யம் ஆகியவை அவருக்கே தினமும் வழங்கப்படும் எனவும் அருள்பாலித்தார்.
இதன்படி சிவனுக்கு அணிவித்த மாலையையே சண்டிகேஸ்வரருக்கும் அணிவிக்கும் பழக்கம் இருக்கிறது. சிவன் கோவிலுக்கு வருபவர்கள் சண்டிகேஸ்வரை வணங்காமல் சென்றால் அவர்கள் ஆலயத்துக்கு வந்த பலன் கிடைக்காது என்பது நம்பிக்கை.
சண்டிகேஸ்வரர் சிவ தியான நிலையில் இருப்பவர். இவர் முன் பலர் கை தட்டி வணங்கி சுற்றி வருகின்றனர். இவ்வாறு செய்தால் இவரது தியானம் கலைந்து விடும் என்பது ஐதீகம்.
அதனால் அவர் முன்பு கை தட்டி வணங்காமல் அமைதியாக வணங்குவதே சரியானது. சண்டிகேஸ்வரரை வணங்கினால் மன உறுதியும், ஆன்மிக பலமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

தீபங்கள் 16

Posted On March29,2012,By Muthukumar
தீபங்கள் 16 வகைப்படும். அவை...
1. தூபம்
2. தீபம்
3. அலங்கார தீபம்
4. நாகதீபம்
5. விருஷ தீபம்
6. புருஷா மிருக தீபம்
7. சூலதீபம்
8. கமடதி (ஆமை) தீபம்
9. கஜ (யானை) தீபம்
10. வியக்ர (புலி) தீபம்
11. சிம்ஹ தீபம்
12. துவஜ (பொடி) தீபம்
13. மயூர (மயில்)தீபம்
14. பூரண கும்ப
(5 தட்டு) தீபம்
15. நட்சத்திர தீபம்
16. மேரு தீபம்

Wednesday, March 21, 2012

மவுனத்தால் வந்த நன்மை!

Posted On March 22,2012,By Muthukumar
யுகதர்மம் என்றுள்ளது. அந்தந்த யுகங்களில் தர்மமும் மாறுவதுண்டு. கிருத யுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என, நான்கு யுகங்கள். தானே சென்று கொடுப்பர் கிருத யுகத்தில்; கூப்பிட்டுக் கொடுப்பர் திரேதா யுகத்தில்; வந்து கேட்டால் தான் கொடுப்பர் துவாபர யுகத்தில்; கசக்கிப் பிழிந்து கேட்டால்தான் கொடுப்பர் கலியுகத்தில்.
தர்ம தேவதைக்கு நான்கு கால்கள். கடந்த மூன்று யுகங்களில், மூன்று கால்கள் வெட்டப்பட்டு விட்டதால், இந்தக் கலியுகத்தில் தர்மம் ஒரே காலில், அதாவது கால் பங்கு தான் உள்ளது. முக்கால் பங்கு தர்மம் இப்போது இல்லை. இனி, அடுத்த கிருத யுகம் வரும்போது தான், தர்மம் முழு அளவில் இருக்குமாம். கலியுகமே இன்னும் பல வருஷங்கள் இருக்குமாம்.
கலிகாலம், முற்ற முற்ற இன்னும் பல கொடுமைகள் நடக்குமாம். இந்த கலியுகத்தில் என்னென்ன கொடுமைகள் நடக்கும் என்பதை, புராணங்களில் காணலாம். முந்தைய யுகங்களில், பொய் சொல்ல பயப்படுவர். ஒருவர், ஜெபம் செய்தபடி திண்ணையில் உட்கார்ந்திருந்தார். அந்த சமயம் ஒரு பசு மாட்டைக் கொல்வதற்காக துரத்தி வந்தான் ஒருவன். அந்த பசு மாடு, இவர் பக்கமாக ஓடி வந்து, பக்கத்து சந்து வழியாக ஓடி தப்பித்துக் கொண்டது.
ஜெபம் செய்தவரிடம் வந்து, "இந்தப் பக்கம் ஒரு பசு மாடு வந்து போயிற்றா?' என்று கேட்டான் துரத்தியவன். இவர் யோசித்தார்... "பசு மாடு இந்தப் பக்கம் போயிற்று என்றால் அது உண்மை. உண்மையைச் சொன்னால், அவன் பசு மாட்டை தேடிப் போய் கொன்று விடுவான்; அந்தப் பாவம் நம்மைச் சேரும். "பசு மாடு வரவில்லை என்றால் அது பொய்யாகி விடும்; அந்த பொய் சொன்ன பாவம் நமக்கு வரும்...' என்று யோசனை செய்தபடி பேசாமல் இருந்தார்.
பசுவை தேடி வந்தவன் இரண்டு, மூன்று தடவை கேட்டும், இவர் பதில் சொல்லவே இல்லை. "ஓகோ! இவர் செவிடு போலிருக்கிறது...' என்று நினைத்து திரும்பிப் போய் விட்டான். பசு மாடும் தப்பியது; தான் பதில் சொல்லாமல் மவுனமாக இருந்தது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று சந்தோஷப்பட்டார். மவுனமாக இருப்பதும் கூட நல்லதுதான். அதிகம் பேசப் பேச, அதுவே மனஸ்தாபத்தில் முடியும். அதனால்தான், சில பெரியவர்கள் மவுன விரதம் கடைபிடிப்பதுண்டு. வீண் பேச்சு பேசினால் தானே விரோதம் ஏற்பட வாய்ப்புண்டு.
வீட்டில் கூட, மவுன விரதம் இருந்தால், மனைவி மக்களிடம் பேசாமல் இருந்தால், வீண் விவாதம் இருக்காது. அதற்காக, பேசாமல் இருக்கவும் கூடாது. சந்தர்ப்பத்துக்குத் தகுந்தபடி சாமர்த்தியமாகப் பேச வேண்டும். முடியுமா உங்களால்? கடவுளைப் பற்றி பேசுங்கள்; அவன் குணாதிசயங்களைப் பேசுங்கள். புண்ணியம் உண்டு!

இளமை காலத்தில் பட்டினத்தார்

திரை கடலோடித் திரவியம் தேடும் மூன் றாம் வருணத்தவரான வணிகர்கள் மர பில் நான் ஒருவன்.
பூம்புகார்ச் சோழர்களும் சரி, பிற சோழர்க ளும் சரி, தாங்கள் முடி சூட்டிக் கொள்ளும் போது வணிகர்களிலேயே மிகப் பெரிய தனவந்தராக இருப்பவர் தான் அந்த மகுட த்தை எடுத்துக் கொடுக்க வேண்டும். ஏறக் குறைய மூன்று தலைமுறைகளாக நாங்க ளே மகுடங்களை எடுத்துத் தந்திருக்கி றோம் என்பதிலிருந்து எத்தனை தலை முறைகளாக எங்கள் குடும்பம், செல்வம் நிறைந்ததென்று நீங்கள் கண்டு கொள்ள லாம்.
என் தந்தை பெயர் சிவநேசன் செட்டியார். தாய் ஞானகலை ஆச்சி.
நான் பிறந்ததும் என் கழுத்திலும் கை கால்களிலும் ஆடிய தங்க நகைகளைப் போலவே, நான் படுத்திருந்த தொட்டிலுக்கும் நவ மணிகள் பூட்டப்பட்டன.
எனது ஆட்காட்டி விரலினால் எனது குரு மண்ணில் என்னை `ஹரி ஓம்’ என்று எழுத வைத்த போது, இறைவன் தத்துவத்தையே நாம் ஒருநாள் அறிவோம் என்று எண்ணியதில்லை.
கிண்கிணிச் சதங்கையோடு துள்ளி விளையாடிய இளம் குழந்தை பாடம் படித்தது, திங்களில் பத்து நாள்; ஆடி மகிழ்ந்தது மீதி இருபது நாள்.
காவிரிக் கரையில் சிறுவர்களோடு ஆடுவே ன்; குதிரைக் குட்டிகளில் ஏறி எருமைகளை த் துரத்துவேன். `குதிரை போகும் வேகம் எருமை போகவில்லையே ஏன்?’ என்று யோ சிப்பேன்.
கூற்றுவன் தன் கடமையைக் குறைவாகச் செய்யவே எருமையை அவனுக்கு வாகன மாகக் கொடுத்தார்கள் என்பது இப்போது புரிகிறது.
`பிள்ளை படிக்கவில்லையே’ என்று பிறப்பு க்குக் காரணமான தந் தை வருந்தினார்.
`படிக்காவிட்டால் என்ன, பத்துத் தலை முறைக்குச் சொத்திருக்கி றதே’ என்று பத்துமாதம் சுமந்த மாதா தேற்றினாள்.
இவை அத்தனையும் நடந்தது ஆறு வயது வரையிலே தான்.
எனது ஆறாவது வயதில் ஈன்ற தந்தை சான்றோனை அடைந்தார்.
காவிரிப்பூம்பட்டினமே எங்கள் மாளிகை முன்னால் கூடி என் தந் தையின் சடலத்தைச் சுமந்து சென்று எரியூட்டிற்று.
புகார் நகரத்தில் எங்களுக்கு இருந்த வாணிபக் கடைகள் இருபது. யவனர்களோடு வாணிபம் செய்வதற்காகவும், யவனர்கள் தெரு வில் நான்கு கடைகள் இருந்தன. விலை மதிக்க முடியாத மாணிக் கங்கள் அவற்றிலேதான் இருந்தன.
தந்தை காலமானதும் செல்வச் சுமையு ம், வாணிபப் பொறுப்பும் என் தாயின் தலையிலே விழுந்தன.
`இல்லங் காக்கும் நாயகிக்கு செல்வமு ம் காக்கத் தெரியுமே அன்றி, வாணிபம் செய்யத் தெரியாதே’ என்று, என் அம்மா ன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண் டார். தாயின் உடன் பிறந்த மூவருள் இளை யவர் அவர்.
பொருளில் மிகுந்தவர். அவரது பெயர் சிவசிதம்பரம் செட்டியார். அவரது மனைவி பெயர் சிவகாமி ஆச்சி.
ஒன்றைக் கூற மறந்தேன். எனக்கொரு தமக்கை உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தத் தமக்கையின் பெயர் தில்லையம்மை.
எனது அம்மான் சிவசிதம்பரம் செட்டியாருக்கு ஒரே ஒரு பெண் மகவு. அவள் பெயர் சிவகலை.

செல்வக்கலை கூடிய குடும்பத்தில் எல்லாமே கலைகளாக இருப் பதில் வியப்பில்லை. எனக்கு மட்டும் எங்கள் பெற்றோர், சுவேதா ரண்யன் என்று செல்லப் பெயரிட்டு அழைத்தார்கள்.
உங்களில் பலர் அறிந்த விஷய ங்கள்தான் இவை. ஆயினும் மாத ரார்க்குப் புரியும் வண்ண ம் பெயர்களை விளம்பினேன்.
பத்தாண்டுச் சிறுவனாக நான் வளர்ந்த போது எனது கவனம், மனித வாழ்க்கையின் பல்வே று கூறுகளிலேயும் திரும்பி ற்று.
அவ்வளவு சின்ன வயதிலா என்று நீங்கள் ஐயப்படுவீர்கள். அது தெளிவானதோர் ஞானமன்று. இன்ப உணர்வுகள் நிறைந்த புதுமை யான அறிவு.
அப்போது கடலோடிக் கொண்டிருந்த எங்கள் கப்பல்கள் பன்னிர ண்டு, அதில் ஒன்று என் தந்தை கடல் கடந்து செல்வதற்காகப் பயன் படுத்தப்பட்டது. அதில் துடுப்பு வலிப்போர் மட்டும் இருபது பேர். அவர்கள் தங்குவதற்கும், இடம் உண்டு. என் தந்தைக்காக அலங்கரி க்கப்பட்ட தனி அறை உண்டு. உள்ளே அமர்ந்தால் இல்லத்தில் அமர்வது போலவே இருக்கும். அந்தக் கப்பலில் பயணம் செய்து பார்க்க நான் அவாவினேன்.
வாணிபத்துக்காக நாங்கள் அடிக்கடி போகும் இடங்களில் ஒன்று பன்னீராயிரம் தீவு.
நான், என்னுடன் ஒத்த செல்வச் சிறுவர்கள் இருவர்- பெயர்கள் மாணிக்கம், வைரம்- அவர்களும், என் தாயின் அனுமதி பெற்று அந்தக் கப்பலில் பயணம் செய்தோம்.
கப்பல் தளத்தில் நின்று வானையும் கடலையும் நோக்கிய போது, அந்தப் பிரம்மாண்ட சிருஷ்டி என்னை வியக்க வைத்தது.
புவி வாழ்க்கையில் மிகப் பெரியவனாகக் காட்சியளிக்கின்ற மனி தன் கூட, கடலுக்குள்ளே விழுந்து விட்டால் அவன்மீனுக்குச் சிறிய வனாகி விடுகிறான். சம்சாரக் கடலும் அப்படித்தான்.
இதை நான் அன்று உணரவில்லை.
பழந்தீவுகளில் நான் போய் இறங்கியபோது, அந்த நாட்டு மக்களை ப் பார்ப்பதற்கு எனக்குப் பரிதாபமாக இருந்தது.
நாகரிகத்தில் முன்னேறிய சோழ நாடு எங்கே? உலகம் தோன்றிய போது எப்படி இருந்தார்களோ அப்படியே இன்னும் இருக்கும் இந் தத் தீவு மக்கள் எங்கே?
எங்கள் கப்பலைக் கண்டதும், எங்களோடு வாணிபம் செய்யும் தீவு வணிகர்கள், கடல் துறையில் கூடி விட்டார்கள்.
`செட்டியார் மகன்’ என்று என்னை அவர்கள் அழைத்துக் கொண்டு போய் நடத்திய இராஜோபசாரம் இன்னும் என் மனதை விட்டு நீங்க வில்லை.
அடுத்த வீடு சென்றாலும் மரியாதை; அடுத்த நாடு சென்றாலும் மரியாதை; பிறப்பில் இருந்தே வறுமையை அறியாத சுகபோகத் தோடு, பத்து வயதிலேயே பிறரது மரியாதை; அது எங்களிடம் குவி ந்து கிடந்த பொருளுக்குத் தான் தரப்பட்ட தென்றாலும், என்னை ஒரு ஆணவக்காரனாக ஆக்குவதற்கு அதுவே போது மானதாக இருந்தது.
எனது பதினாறாவது வயதில் கடைகளை நானே கவனிக்க ஆரம் பித்தேன்.
குதிரைக் குட்டிக்கு ஓடக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? வணிகனு க்குக் கணக்கு வராமற் போனால், அதுதானே பூர்வ ஜென்ம பாவம்.
குறையாகவே படித்த எனக்கு, கூட்டத் தெரியும்; பெருக்கத் தெரி யும்; கழிக்கத் தெரியும்; வகுக்கத் தெரியும். எங்கள் சமூகத்தில் ஒரு வன் இந்த நாலும் தெரிந்தவனாக இருந்தால், அவனால் கடையை நடந்த முடியும்.
இந்தப் பருவம்தான் என் வாழ்வில் அதிசயமான பருவம்.
அழகிய ரதத்தில் என் வீட்டிலிருந்து நான் கடைக்குப் போகும் போ தெல்லாம், இத்தனை நாழிகைக்கு நான் வருவேன் என்று எத்தனை பெண்கள் வாசலிலேயே நிற்பார்கள்!
தேவனுக்காகக் காத்துக் கொண்டு நிற்கும் தேவதைகள் போல, அவர்கள் எனக்காகக் காத்துக் கொண்டு நிற்பார்கள்.
சாளரத்துத் திரைச் சீலையை விலக்கிக் கொண்டு நாணம் மிகுந்த பதுமைகள் சிலவும், என்னைப் பார்ப்பதுண்டு.
ஐந்து வயதிலேயே மணம் முடித்துவிடும் எங்கள் குலத்தில் நான் ஒருவன்தான் பதினாறு வயது வரையிலே மணம் முடிக்கப்படாத வனாக இருந்தேன்.
எனக்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்றே பல பெண்களும் தங்கள் பெற்றோரால் வளர்க்கப்பட்டுக் கொண்டி ருந்தார்கள்.
இத்தனைக்கும் என் சகோதரிக்கு எட்டு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. அவளை மணந்து கொண்ட பையனின் குடும்பமும் கோடிக்கு அதிபதியான குடு ம்பம் தான். ஆயினும் பெரியவளாகும் வரை தாய் வீட்டிலேயே வளருகின்ற சம்பிரதாயத்தில் அவள் வளர்ந்து கொ ண்டிருந்தாள். பதினெட்டு வயதில் பெரி யவளானாள்.
ஆறாவது மாதம், தன் நாயகனோடு இல் லறம் காண அவனது இல்லத்திலேயே குடிபுகுந்து விட்டாள்.
பெண்ணைப் பெற்றவர்களுக்கெல்லாம் நான்தான் தனி மரமாகக் காட்சி தந்து கொண்டிருந்தேன்.
மற்றவர்களைப் போலவே என் அம்மானும் தன் மகளை எனக்காக வளர்த்துக் கொண்டு வந்தார்.
ஏராளமான பெண்கள் தேடி வருகின்றனர் என்றாலே நல்ல பெண் ணைத் தேர்ந்தெடுக்கக் கூடிய அறிவை இளமை இழந்து விடுகிறது. `எதுவும் கிடைக்கும்’ என்ற ஆணவம் வந்து விடுகிறது. அந்த ஆண வத்தினிடையிலேயும் எனக்குப் பேரொளியாகத் திகழ்ந்தவள், நவமாணிக்கம் செட்டியாரின் மகள் மரகதம்.
பலர் என்னைக் கவனித்தாலும் நான் கவனித்தது அவளைத் தான்; அவளை நான் கவனிக்கிறேன் என்பதிலே பிறருக்குப் பொறாமை.
மற்றவர்களுக்கு என்ன? என் மாமன் மகள் சிவகலைக்கே அதிகம் பொறாமை. யாரிடம் சொல்வாள் இதை? என் தாயிடம் சொன் னாள்.
என் தாய் ஒருநாள் என்னை அருகே அழைத்து, “என் மகனே, வயது வந்ததும் மணம் முடிக்காமல் இருப்பது, எதிர்காலத்தில் சிதறிய எண்ணங்களுக்கு வித்திட்டு விடும். ஆகவே, என் தம்பி மகளுக்கும் உனக்கும் திருமணம் முடிக்க முடிவு செய்துவிட்டேன்” என்றார் கள்.
`நான் ஒருத்தியை விரும்புகிறேன்’ என்று தாயிடம் சொல்லும் பழக் கம் இல்லையே நமக்கெல்லாம்!
நான் மவுனத்தில் ஆழ்ந்தேன்! என் மயக்கம் அன்னைக்குப் புரிந்தது.
“அதனால்தான் இந்த அவசரம்” என்றார்கள். “தம்பி மகளிருக்க அந்நியத்தில் பெண்ணெடுத்தால், அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகுமா? காரணம் கூறிக் கதை கட்டமாட்டார்களா? ஒரு பெண் ணை நீ அடைய, உறவுப் பெண் வாழ்விழப்பதா?” என்றார்கள்.
இறைவனிடம் கூட நான் எதையும் மறுத்துப் பேசுவேன்; என் தாயி டம் பேசுவதில்லை.
அன்னையின் விருப்பத்திற்குப் பணிந்தேன்; மணத்திற்குத் துணிந் தேன்.
ஆம், துணிந்தேன் என்று சொல்வதே பொருந்தும். ஒருவன் திரு மணம் செய்து கொள்வதென்பது எவ்வளவு துணிவான செயல்? அதிலேயும் வாய்த்துடுக்கு நிறைந்த பெண்ணல்லவா எனக்கு வாழ்க்கைப்படப் போகிறாள்!
எதிர்ப்பேச்சு, ஏடாகூடம், எகத்தாளம் எவ்வளவுக் கண்டிருக்கிறேன் அவளிடம்!
`மனைவி என்பவள் தாயின் துணைக்கு வருகிறவளே’ என்று முடிவு கட்டி, தாயின் விருப்பத்தை நிறைவேற்றினேன்.
திருமணம் நடந்தது. காவிரி நகரமே அதிர்ந்தது; விருந்தினர், உண வை உறிஞ்சி உண்ட ஓசை, கடல் ஒலியையும் மிஞ்சியது.
எங்கள் குலத்துச் சம்பிரதாயங்களில் ஒன்று விருந்தில் முக்கனி போடக் கூடாதென்பது. அது மன்னவர்கள் தரும் விருந்தில் மட்டு மே நடக்கலாம். மற்றையோர் ஏதேனும் ஒரு கனி குறைவாகவே போடவேண்டும். ஆனால் அந்தச் சம்பிரதாயத்தை மீறி மன்னர் குல விருந்து போலவே விருந்து நடத்தினேன் நான்.
எங்கள் குலத்தில் `இசை குடிமானம்’ என்று ஒன்று எழுதுவார்கள். குடும்பத்தில் பாரம்பரியமான புகழ், மானம், மரியாதை, இவற்றை க் காப்பாற்றுவதற்கான துணை அது.
எங்கள் சம்பிரதாயங்கள் முற்றும் சைவ நெறிகளுக்குக் கட்டுப்பட் டவை.
திருமணத்தின்போது ஆசை உணர்வுகள் மீறிய நிலையில் தான் இருந்தேன் என்றாலும், நமது வைதிக நெறிகளை அறிந்து கொள் வதில் ஆர்வம் இருந்தது.
எங்கள் குலத்தில் தாலி கட்டுவதை `திருப்பூட்டுவது’ என்பார்கள். மாங்கல்யம் பெண்ணுக்கு நீங்காத செல்வமாகப் பூட்டப்படுகிறது.
முன்பின் அறிமுகமில்லாத ஒருத்தி அந்தத் `திருப்பூட்டப்பட்டது ம்’ கணவனது பாதக் கமலங்களில் சரணடைந்து விடுவாள்.
அவன் கூன், குருடு, நொண்டியாக இருந்தால் கூட அவள் கவனம் வேறுபக்கம் திரும்புவதில்லை.

நான் அங்கம் குறைந்தவனல்ல. “தங்கமே என்று தாய் என்னைத் தாலாட்டியது முற்றும் பொருந்தும்’ என்று வே ண்டாதவர்கள் கூடச் சொல்வார்கள்.
கேளுங்கள்.
இசை, குடி, மானத்தைக் காப்பாற்ற நான் சிவகலையின் கரம் பற்றி இல்லறத்தில் புகுந்தேன்.
உடல் உறவில் சற்று அதிகமாகவே ஈடுபட்டேன்.
என்ன ஆச்சரியமோ, மங்கலம் கழுத்தில் விழும் வரை வாய்த் துடுக்காக இருந்த சிவகலை, மங்கலம் விழுந்ததும் மந்திரத்தில் கட்டுண்டவள் போலானாள்.
உடம்பு திருப்தியடைந்து விட்டால், உடும்பு கூடப் பிடியை விட்டு விடுகிறது.
மஞ்சள் பூசி, திலகம் அணிந்து, கழுத்தைக் கவ்விக் கொண்டி ருக்கும் அட்டிகையோடு பட்டுப் புடவை கட்டி அவள் என் எதிரி ல் வரும் போதெல்லாம், உடல் வெறியால் துள்ளிக் குதித்து கட்டிப்பிடிக் கின்ற நான், கால ங்கள் செல்லச் செல்ல ஒரு தெ ய்விக உணர்ச்சியால் கட்டுண் டேன்.
உடலிலுள்ள ஜீவ அணுக்கள் சமாதானம் பெறத் தொடங்கின. அவ ளைப் பார்க்கும் போதெல்லாம் உயர்ந்த எண்ணங்களே உருவா யின.
ஆனால், ஆண்டுகள் ஐந்து ஆகியும் மகனுக்குப் பிள்ளைப் பேறு இல்லையே என்ற கவலை என்னைப் பெற்றவளை வாட்டி எடுத் தது.
`மூன்று தலைமுறைகளுக்கு மேல் தாழ்ந்தவர்களும் இல்லை; மூன்று தலைமுறைக்கு மேல் வாழ்ந்தவர்களும் இல்லை’ என்பார்கள்.
எங்கள் வம்சத்தின் செல்வப் பெருமைக்கு நான் மூன்றாவது தலை முறை. என்னோடு கதை முடிய வேண்டியது தானா? அடுத்த ஒரு வாரிசு பிறப்பதற்கில்லையா?
நான் அதைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை. ஆனால், என் தாய் எதற்காக உயிர் வாழ்ந்தார்களோ, அது நிறைவேறவில் லையே என்பது அவர்கள் கவ லை.
ஒருநாள் மெதுவாக என்னைப் பார்த்து, “ஐயா! நான் சொன் னால் வருந்தாதே! ஒன்றிருக்க ஒன்று கொள்வது நம் இனத் தில் இயற்கை தான். என் தம்பி மகளை வைத்து விட்டே இன் னொரு பெண்ணை உனக்குத் திருமணம் செய்ய முடிவு கட்டி இருக்கிறேன்” என்றார் கள்.
நான் துடித்துப் போனேன்.
“ஆத்தா, பழக்க வழக்கங்கள் வேறு; மனிதனின் விருப்பங்கள் வேறு ; குலப் பழக்கம் என்பதற்காக ஒரு தாசியின் உறவைக் கொள்ளவும் மாட்டேன்; இன்னொரு பெண்ணை மணக்கவும் மாட்டேன். சிவ கலையிடம் அந்த சிவநாதனின் கலையை நான் கண்டு கொண் டிருக்கிறேன். சைவர்களுக்கு எப்படி சிவபெருமான் ஆதிமூலமோ அப்படியே எனக்குச் சிவகலைதான் எல்லாமும். அவளைத் தொட் ட கையால் ரம்பையர் கிடைத்தாலும் தொடமாட்டேன். ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொள்வது எப்படி நம் குலப்பழக்கமோ, அப்படியே பிள்ளை இல்லாதவர்கள் சுவிகாரம் என்று பிள்ளை கூட்டிக் கொள்வதும் வழக்கம்தான். வருகின்ற பிள்ளைக்கு தாய் தந்தையரிடம் பாசம் இல்லாமல் போனாலும், தாய் தகப்பன் தங்களுக்குள் உள்ள பாசத்தைத் தளராமல் வைத்துக் கொள்ள முடியுமல்லவா?” என்றேன் நான்.
அன்னை ஆறுதல் பெறவுமில்லை; என்னைக் கட்டாயப் படுத்தவும் இல்லை.
மாடத்துச் சாளரத்தில் நின்று எங்கள் பேச்சைக் கவனித்த சிவ கலையின் கண்கள் நீரூற்றுப் போல் பொங்கி நின்றதையும் நான் கண்டேன்.
அன்று அவள் என்னிடம் நடந்து கொண்ட முறை, தெய்வத்தை நெருங்கிவிட்ட பக்தையின் பிரீதியைப் போல் காட்சி தந்தது.
கணவன், மனைவியின் நலனில் அக்கறை செலுத்தினால் மனை வி, கணவன் கால்களுக்கே அணியாகி விடுகிறாள்.
அன்பு, அரக்கைக் கூடத் தண்ணீரிலே கரைத்து விடுகிறது. பாசம், கல்லைக் கூட எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது. வெறுப்பு தெய்வத் தைக்கூட வெகு தூரம் விரட்டி விடுகிறது.
சிவகலையும் நானும் சிவஸ்தலங்களுக்கு யாத்திரை போனோம்.
பிள்ளை இல்லாதவர்கள் கடைப்பிடிக்கும் இரண்டாவது வழி அது தானே?
அதிலும் பயனில்லை.
சொத்துக்கு நான் வாரிசு தேடவில்லை. இல்லாதது கூட நல்லது என்று நினைத்தவன். ஆயினும் தாய், என்னைப் பெற்றவள்; இற ந்து விட்டால் என்னால் பெற முடியாதவள். அவளது ஆன்மத் துடிப் புக்காக இறைவனை இறைஞ்சினேன். பலன் இல்லை.
`எங்கே மீண்டும் ஒரு சபலம் என் தாய்க்குத் தோன்றி விடுமோ’ என்று சிவகலை அழுதாள்.
பனித்திருந்த அவளது கண்களை நான் துடைத்தேன். சரியாக அதைத் துடைக்கும் போது ஒரு குழந்தை அழும் சத்தம் என் காதுக் குக் கேட்டது.
நான் திகைத்தேன். “ஒரு குழந்தை அழுகிறதே. உனக்குக் கேட்கி றதா?” என்றேன்.
“இல்லையே” என்றாள்.
“எங்கே மீண்டும் அழு” என்றேன்.
அவள் அழுதாள்.
நான் கண்ணீரைத் துடைத்தேன்.
கண்ணீரைத் துடைக்கும் போதெல்லாம் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
“இறைவா, என்ன இது அதிசயம்!”
இது ஏதோ ஒரு சோதனை என்று கருதி, அன்று இரவு அவளை விட்டுப் பிரியாமல் அவள் அருகிலேயே படுத்திருந்தேன்.
திடீரென்று அவள், “எனக்கு பிள்ளை பேறு உண்டா?” என்று கேட் டாள்.
அப்படிக் கேட்ட உடனேயே மீண்டும் பிள்ளை அழும் சத்தம் கேட் டது.
பிறகு நான் அவளைப் பேசவும் விடவில்லை. அழவும் விடவில் லை. ஆலிங்கனத்திலேயே தூங்கினேன்.