Saturday, September 24, 2011

சூலூர் திருப்பதி









சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் ஆர்.வி.எஸ் கல்லூரி வளாகத்தில்
வட திசை நோக்கி மனநிறைவாக வழிபடும் வகையில் அழகாக அருள்மிகு 
ஸ்ரீ பூதேவி சமேத ஸ்ரீவெங்கடாசலபதி கோவில் நின்ற திருக்கோலத்தில் 
இயற் எழில் கொஞ்சும் சூழலில் அமைந்து அருள் பொழிகிறது.
என்றே சிறப்புப் பெற்றிருக்கிறது.



கும்பாபிஷேகத்தின் போது திருப்பதி திருக்கோவிலில் இருந்து வந்த அர்ச்சகர்கள் அலங்காரம் செய்து சிறப்பித்தது கண்கொள்ளாக் காட்சி .

நாம் வணங்கும் திருப்பதி ஷேத்திரம் என்றே அருள் பொங்கிய உணர்வு அன்று நிரம்பியது.

கோவிலில் மூன்று நிலைகள் கொண்ட விமானம், கருவறை முகமண்டபம், அழகிய சிம்மத்தூண்கள அழகான சிற்பத்தூண்கள் அனைத்தும் சோழர்கால நுணுக்க வேலைப்பாடுகள் கொண்டு விளங்குகிறது.

கோவில் கட்டும்போது சென்று பார்க்கும் பாக்கியம் கிடைத்தது. ராஜராஜசோழன் தஞ்சைப்பெரிய கோவில் கட்டிய திரைப்படக்காட்சியாக பிரமிக்கவைத்தது.ஆரம்பித்த ஒரு வருடம் நிறைவதற்குள்ளாகவே பிரம்மாண்ட கோவிலும் கோலாகல கும்பாபிஷேகமும் வியக்கவைத்தது.




பக்த ஆஞ்சநேயரும், கருடாழ்வாரும் தனி சந்நிதிகளில் அருள்பாலிக்கிறார்கள்.





கல்விக்கடவுளாம் சரஸ்வதி தேவியின் ஞான குருவாகிய ஹயக்கிரீவரின் தரிசனம் கல்விக்கடல் வளாகத்தில் பொருத்தமாக திகழ்கிறது.



அலங்கார சிற்பத்தூண்கள் நிரம்பிய மகாமண்டப்த்தில் தனி விமானத்துடன் கூடிய ஆலயத்தில் ஞான முத்திரையுடன் சரஸ்வதி தேவி அருள்பாலிக்கும்  அற்புத காட்சி கூத்தனூரை நினைவுபடுத்துகிறது.








கும்பாபிஷேகத்தின் போது சிலநாட்கள் தொடர்ந்து இடைவிடாத 

அன்னதான நிகழ்வுகள் சிறப்பான ஏற்பாடுகளுடன் பிரமிக்கவைத்தது.க்குக்குக்ம்






சிற்பக்கலையழ்கோடு திகழும் திருமாலின் தசாவதார சிறபங்கள் ரசிக்கவைக்கிறது. 






நே






[thiru.jpg]


நேற்று வணங்கிய குமரன் கோட்ட முருகன் ஆலயமும் -வெங்கடேசப் பெருமாளும் ஒரே வளாகத்தில் அருகருகே அமைந்து அருள்பாலிக்கிறார்கள். சூலூர் சென்று வணங்கி ஆனந்தப்படலாம்..























No comments:

Post a Comment