Thursday, September 22, 2011

ஸ்ரீருத்ரம் - முழு ஆடியோ , வரி வடிவ புத்தகம்

  ஸ்ரீருத்ரம் - முழு ஆடியோ , வரி வடிவ புத்தகம் 

Posted On Sep 22,2011,By Muthukumar
வாசக அன்பர்களுக்கு வணக்கம். நீண்ட நாட்களுக்கு முன்பு சதுரகிரி  பற்றி எழுதிய கட்டுரையில் , அமைதியாக ஸ்ரீருத்ரம் படியுங்கள் என்று கூறியிருந்தேன். நம் வாசகர் ஒருவர் , இவ்வளவு எளிதாக கூறிவிட்டீர்கள், ருத்ரம் எப்படி வாசிப்பது, புத்தகம் எங்கு கிடைக்கும் என்று கேட்டு இருந்தார்.

ஒரு நீண்ட தேடுதலுக்குப் பிறகு - இன்று அந்த பணி நிறைவேறுகிறது.  கண்டிப்பாக நம் வாசர்களிடம் இதை சேர்க்கவேண்டும் என்று மனதில் இருந்த ஆசை பூர்த்தியாகிறது.

பலப்பல யுகங்களாக , பெரும் சித்தர் பெருமக்களும், குரு பரம்பரையினரும் , வேத விற்பன்னர்களும் மட்டுமே உபயோகித்து கொண்டு இருந்த விஷயம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே தெரிந்து கொண்டு , செய்து கொண்டு  இருக்கும் ஒரு அற்புத மந்திரத்தை ,  தமிழ் தெரிந்த , ஆன்மீக தேடல் இருக்கிற ஒவ்வொரு மனிதனுக்கும் எடுத்துச் செல்வதை , ஒரு கடமையாகவே எடுத்து இதை செய்து முடித்தேன்...

 கலைஞர் முதல்வரா இருந்தப்போ , பாசத் தலைவனுக்கு பாராட்டு  விழா எடுக்கிறப்போ , இல்லை ஜெயலலிதா முதல்வரா இருக்கிறப்போ - அவங்களோட தொண்டரடிப்பொடிகள் , தாங்க முடியாத அளவுக்கு முகஸ்துதி செய்யும்பொழுது - அவங்க முகத்துல ஒரு சந்தோசம் தெரியும் பாருங்க.. ! கற்பனை செய்ய முடியுதா ! அப்படி புகழ்ந்து சொல்றவங்க எல்லாம் தலைவர்களோட குட் புக்ஸ் ல வந்துடறாங்க. நல்லா பேசத் தெரிஞ்சதுக்காகவே ஒவ்வொரு மேடையிலும் இவங்களை இதுக்குனே ஏத்தி விட்டுருவாங்க.. !

இதை எதுக்கு சொல்றேன்னா , அந்த மாதிரி சிவனை - குளிர குளிர வைக்கக் கூடிய ஒரு அற்புதம் ஸ்ரீருத்ரம். சிவன் அருள் பெறுவதின் மூலம் உங்கள் அத்தனை கர்ம வினைகளும் அறுக்க கூடிய, சகல சௌபாக்கியங்களும் கிடைக்க வல்ல - மகத்தான மந்திரம் இந்த ஸ்ரீ ருத்ரம்..


ஸ்ரீருத்ரம் கேட்டால் மட்டும் போதுமா , அதை பாராயணம் செய்ய முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று எண்ணியதுதான் , இந்த வரி வடிவ புத்தகம். இதில் , ஸ்ரீ ருத்ரம் தவிர , புருஷ சூக்தம் , வேத , சாந்தி மந்திரங்கள் ஆகியவையும் உள்ளன.

என்னை பொறுத்தவரை , என்னை போல ஒரு ஆன்மீக தேடுதல் இருக்கும் அனைவருக்கும், இது ஒரு பெரிய பொக்கிஷம்.  ஆடியோவும், புத்தகமும் இருக்கும்பொழுது நல்ல முறையில் சாதகம் பண்ணினால் ,  விரைவில் முழு ருத்ரமும் பாராயணம் செய்ய இயலும்.

 ஒரு இரண்டு மாதம் , சின்சியரா - ஒரு நாளைக்கு அஞ்சு வரி, ஆறு வரி மனனம் பண்ணினா , மொத்த ஸ்ரீருத்ரமும் உங்க மனசுல பதிந்து விடும். அதன் பிறகு, எந்த சிவ ஆலயம் சென்றாலும், அமைதியாக ஒரு இடத்தில் அமர்ந்து ஜெபிக்க ஆரம்பியுங்கள்.. அந்த ஆலய சூழ்நிலையில் , உங்கள் உடம்பில் ஏற்படும் vibration துல்லியமாக உணர முடியும்..

சிவன் அருள் கிடைத்து அந்த கயிலை  அல்லது அமர்நாத் செல்லக் கூடிய பாக்கியம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.. பனி படர்ந்த , அந்த சூழலில் , பொன் மயமாகும் வேளையில் , அல்லது தேவர்களும் இறங்கிவரும் அந்த ஏரிக்கரையில் அமர்ந்து, உணர்ச்சிகள் அற்று , ஆனந்தம் பெருக்கி கண்களில் நீர் மல்க - சிவன் உறையும் கயிலையை நீங்கள் மெய்மறந்து வணங்கும்போது - ஸ்ரீ ருத்ரமும் ஜெபிக்க முடிந்தால் அது எவ்வளவு நன்றாக இருக்கும்.

அமாவாசையா பௌர்ணமியோ - நள்ளிரவில் சதுரகிரி மகாலிங்கம் சந்நிதி முன்பு நீங்கள் , அமர்ந்து இருக்கிறீர்கள் . உங்களுக்கு அந்த சூழ்நிலையில் ஸ்ரீருத்ரம் ஜெபிக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் !

 அண்ணாமலையில் அமைதி தவழும் ஒரு நன்னாளில்  - கிரிவலம் வருகிறீர்கள். உங்களால் ஸ்ரீருத்ரம் ஜெபித்தவாறே வர முடிந்தால் - அது ஜென்ம ஜென்மமாக - நீங்கள்  சேர்த்து வைத்த புண்ணியம் அல்லவா ? 
...................................
ஸ்ரீ ருத்ரத்தின் மகிமைகளை வார்த்தைகளில் விவரிக்க இயலாது. சிவன் அருளை , பரிபூரணமாக உங்களுக்கு கிடைக்க செய்யும்.

முதல் தடவை கேட்கும்போதே , உங்களுக்கு கிடைக்கும் அதிர்வை கவனியுங்கள். மிகத் தெளிவான உச்சரிப்புடன் , கூடிய இந்த ஆடியோ , எனக்கு கிடைத்தது கூட சிவன் அருளாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். நமது வாசகர்கள் அனைவரும் தவறாது பயன்படுத்திக் கொள்ளவும்....

 ஸ்ரீ ருத்ரம் - வரிவடிவம் பதிவிறக்கம் செய்ய

http://www.ziddu.com/download/16232335/Sri_Rudram.pdf.html

 ஆடியோ பதிவிறக்கம் செய்ய   : 

 http://www.ziddu.com/download/16232325/rudram.wma.html

இந்த கட்டுரையை படிக்கும் ஒவ்வொருவரும் , உங்களால் இயன்றவரை , மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.. குறைந்தது ஒரு ஐந்து பேருக்காவது. யாரோ ஒருவரின், நீண்ட நாள் தேடுதலாக இருக்கலாம். நீங்களும் இந்த புண்ணிய காரியத்தில் கைகொடுங்கள்..!
 சகலருக்கும் சிவ கடாட்சம் கிடைக்க மனமார வேண்டுகிறேன்...!

No comments:

Post a Comment