Wednesday, September 28, 2011

மோட்சபுரி ஹரிதுவார்


                                        மோட்சபுரி ஹரிதுவார்

Temples at Rishikesh




நம்நாட்டில் இருக்கும் முக்கியமான ஏழு மோட்சபுரிகளில் ஒன்று ஹரிதுவார். அவை காசி, காஞ்சி, துவாரகா, உஜ்ஜயினி, அயோத்தியா, மதுரா ,மாயாபுரி. ஹரிதுவார்தான் இந்த மாயாபுரி. இங்கிருந்து ‘கிளம்பினால்,’ நேரா மோட்சம் என்பதால் பலர் தங்கள் கடைசி காலத்தில் இங்கே வந்து தங்கிவிடுகிறார்கள்–மேட்சபுரி??
டெல்லியில் இருந்து பேருந்து மூலம் ஹரித்துவார் சென்றோம்.  இனிய பயணம்.கோவையில் அறிமுகமாகாதவர்களாகக் கிளம்பியவர்கள் நெருங்கிய குடும்பநண்பர்களாக மாறினோம்.
முகத்திலும் முதுகிலும் அறைந்த மாதிரி தகித்த டெல்லி வெயிலில் இருந்து தப்பிய உணர்வு..
ஹரித்வாரில் இருந்து ரிஷிகேஷ் 16 கி,மீட்டர்கள்தான்.
புராணகாலத்தில் கங்கைக்கரையில் ரிஷிகள் வந்து கங்கையில் மூழ்கி எழுந்து தவமும் தியானமுமாக இருப்பார்களாம்.
 நாளில் பலமுறை கங்கையில் குளித்துக்கொண்டே இருப்பதால் இவர்களின் ஜடாமுடியில் இருந்து எப்போதும் கங்கைநீர் சொட்டிக்கொண்டே இருப்பதால்.  ரிஷி கேசம் என்று பெயராம்..
 ஆசிரமங்களும் ,நிறைய பெயர்களின் ட்ரஸ்ட்களும் நிறைந்திருக்கின்றன.. சாரிட்டபிள் ட்ரஸ்ட்தான் எல்லாமே……
ராம்ஜூலா பாலம். 650 அடி நீளம் -இரண்டு மீட்டர் அகலம் கொண்டது..பாலம் கடந்ததும் நிறைய கடைகள். பெருங்காயம் வாங்கினார்கள். உயர்ந்த தரமாம்.
  சிவானந்தா பாலம் என்று தான் பெயர் பொறித்திருந்தது. ஆனால்….இந்த ஊரில் இருக்கும் லக்ஷ்மண ஜூலாவுக்குத் துணையாக இருக்க மக்கள் ராம்ஜூலான்னு கூப்பிடப்போய் இப்போ ராம்ஜூலா என்ற பெயரே வழக்கில்வழங்குகிறது
 சிவானந்தா ஆஸ்ரமம்தான் பாலம் கட்டும் செலவில் பாதி கொடுத்திருக்கிறார்களாம். . நாம் நடக்கும்போது லேசா ஒரு ஆட்டம். .நிறைய குரங்குகள் தாவிக்கொண்டிருந்தன.
நடைப்பாலமென்றாலும் சைக்கிள், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள் எல்லாம் கூட இதன்மேல் ஓட்டுகிறார்கள். மாடுகளும் நிதானமாக நடந்து செல்கின்றன.பாலத்தில் நடக்கும்போது மழைத்தூறல் ரசிக்கவைத்த்து.
கரையை ஒட்டிப்போகும் பாதையில் ஒரு கீதாபவன் கோவில், உச்சியில் குடையின் கீழ் நாலு பக்கமும் பார்த்தமாதிரி நாலு திருவுருவச்சிலைகள். ராமன், லக்ஷ்மணன், ஹனுமன்,சீதா.
கீதா பவன் ஆஷ்ரமம்.
Rishikesh, India: The entrance gate (from the inside)


பரந்து விரிந்த. லக்ஷ்மிநாராயணன் கோவில்நிறைய அறைகள் பக்தர்கள் வந்து தங்குவதற்காக. அங்கங்கே பெரிய ஹால்கள் வகுப்புகள் நடத்த, பிரசங்கம் பண்ண இப்படி. ஆயுர்வேத சிகிச்சை நடக்கும் இடங்கள். மருந்து விற்கும் இடங்கள். ஏழைகளுக்கு இலவச மருந்து கொடுக்கும் இடம், தங்கியுள்ள பக்தர்களுக்கான பலசரக்கு சாமான் விற்கும் கடை கண்ணிகள் பெரிய முற்றங்களின் நடுவில் மரங்கள். தியானம் செய்ய பெரிய ஆலமரம் உள்ள தோட்டம், புல்வெளி, கங்கைக்குப்போகும் தனிப்பட்ட படித்துறைகள் இப்படி ஏராளம் ஏராளம். .
 கங்கைக்கு ஒரு கோவில். ‘ஸ்ரீ கங்கா கோயில்’தமிழிலும் எழுத்து! கவனத்தை ஈர்த்தது. இமயம்வரை தமிழ் போய் வெற்றிவா சூடி இருப்பதாக சொல்லிக் கொள்ள நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே!.
கங்காமாதா ஆரத்தி கண்கொள்ளாக்காட்சி.
Uttaranchal Photo - haridwar
ஒரு பக்கம் கோவில்களுக்கே உரித்தான பாத்திரக்கடைகளில் தாமிரச்சொம்புகளாக அடுக்கி இருந்தது. . வாங்கி கங்கையை நிறைத்து மூடிபோட்டு ஈயம் வைத்து ஸீல் செய்து வாங்கிக்கொண்டோம்.. .

நதியின் வேகத்தில் கால்தவறினால் இழுத்துச்செல்லும் அபாயத்தைத் தவிர்க்க இரும்புக்கம்பிகளை நட்டு அதில் இரும்புச்சங்கிலி போட்டு சங்கிலி வைத்திருந்தது பிடித்துக்கொண்டு முங்கி எழவேண்டும்.

இமயத்திலிருந்து உருகி வந்த குளிர்ச்சியான நீர் நடுநடுங்க வைத்தது. பாதங்களைதேய்த்து ரத்தஓட்டத்தைச் சீராக்கிய பின் பிள்ளைகளுக்கு நீர்விளையாட்டு மிகப்பிடித்து விட்டது. எழுந்து வரமனமில்லை. .
பெண்களுக்குத் தனி இடமாக உடை மாற்றிக்கொள்ள ஒரு சின்ன அறை

Uttaranchal Photo - rishikesh
File:An array of jewellery being sold at Rishikesh.jpg




1 comment:

  1. அருமையான பகிர்வு.. வாழ்த்துகள்..

    http://jaghamani.blogspot.com/2011/09/blog-post_27.html

    ReplyDelete