Wednesday, March 21, 2012

இளமை காலத்தில் பட்டினத்தார்

திரை கடலோடித் திரவியம் தேடும் மூன் றாம் வருணத்தவரான வணிகர்கள் மர பில் நான் ஒருவன்.
பூம்புகார்ச் சோழர்களும் சரி, பிற சோழர்க ளும் சரி, தாங்கள் முடி சூட்டிக் கொள்ளும் போது வணிகர்களிலேயே மிகப் பெரிய தனவந்தராக இருப்பவர் தான் அந்த மகுட த்தை எடுத்துக் கொடுக்க வேண்டும். ஏறக் குறைய மூன்று தலைமுறைகளாக நாங்க ளே மகுடங்களை எடுத்துத் தந்திருக்கி றோம் என்பதிலிருந்து எத்தனை தலை முறைகளாக எங்கள் குடும்பம், செல்வம் நிறைந்ததென்று நீங்கள் கண்டு கொள்ள லாம்.
என் தந்தை பெயர் சிவநேசன் செட்டியார். தாய் ஞானகலை ஆச்சி.
நான் பிறந்ததும் என் கழுத்திலும் கை கால்களிலும் ஆடிய தங்க நகைகளைப் போலவே, நான் படுத்திருந்த தொட்டிலுக்கும் நவ மணிகள் பூட்டப்பட்டன.
எனது ஆட்காட்டி விரலினால் எனது குரு மண்ணில் என்னை `ஹரி ஓம்’ என்று எழுத வைத்த போது, இறைவன் தத்துவத்தையே நாம் ஒருநாள் அறிவோம் என்று எண்ணியதில்லை.
கிண்கிணிச் சதங்கையோடு துள்ளி விளையாடிய இளம் குழந்தை பாடம் படித்தது, திங்களில் பத்து நாள்; ஆடி மகிழ்ந்தது மீதி இருபது நாள்.
காவிரிக் கரையில் சிறுவர்களோடு ஆடுவே ன்; குதிரைக் குட்டிகளில் ஏறி எருமைகளை த் துரத்துவேன். `குதிரை போகும் வேகம் எருமை போகவில்லையே ஏன்?’ என்று யோ சிப்பேன்.
கூற்றுவன் தன் கடமையைக் குறைவாகச் செய்யவே எருமையை அவனுக்கு வாகன மாகக் கொடுத்தார்கள் என்பது இப்போது புரிகிறது.
`பிள்ளை படிக்கவில்லையே’ என்று பிறப்பு க்குக் காரணமான தந் தை வருந்தினார்.
`படிக்காவிட்டால் என்ன, பத்துத் தலை முறைக்குச் சொத்திருக்கி றதே’ என்று பத்துமாதம் சுமந்த மாதா தேற்றினாள்.
இவை அத்தனையும் நடந்தது ஆறு வயது வரையிலே தான்.
எனது ஆறாவது வயதில் ஈன்ற தந்தை சான்றோனை அடைந்தார்.
காவிரிப்பூம்பட்டினமே எங்கள் மாளிகை முன்னால் கூடி என் தந் தையின் சடலத்தைச் சுமந்து சென்று எரியூட்டிற்று.
புகார் நகரத்தில் எங்களுக்கு இருந்த வாணிபக் கடைகள் இருபது. யவனர்களோடு வாணிபம் செய்வதற்காகவும், யவனர்கள் தெரு வில் நான்கு கடைகள் இருந்தன. விலை மதிக்க முடியாத மாணிக் கங்கள் அவற்றிலேதான் இருந்தன.
தந்தை காலமானதும் செல்வச் சுமையு ம், வாணிபப் பொறுப்பும் என் தாயின் தலையிலே விழுந்தன.
`இல்லங் காக்கும் நாயகிக்கு செல்வமு ம் காக்கத் தெரியுமே அன்றி, வாணிபம் செய்யத் தெரியாதே’ என்று, என் அம்மா ன் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண் டார். தாயின் உடன் பிறந்த மூவருள் இளை யவர் அவர்.
பொருளில் மிகுந்தவர். அவரது பெயர் சிவசிதம்பரம் செட்டியார். அவரது மனைவி பெயர் சிவகாமி ஆச்சி.
ஒன்றைக் கூற மறந்தேன். எனக்கொரு தமக்கை உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள். அந்தத் தமக்கையின் பெயர் தில்லையம்மை.
எனது அம்மான் சிவசிதம்பரம் செட்டியாருக்கு ஒரே ஒரு பெண் மகவு. அவள் பெயர் சிவகலை.

செல்வக்கலை கூடிய குடும்பத்தில் எல்லாமே கலைகளாக இருப் பதில் வியப்பில்லை. எனக்கு மட்டும் எங்கள் பெற்றோர், சுவேதா ரண்யன் என்று செல்லப் பெயரிட்டு அழைத்தார்கள்.
உங்களில் பலர் அறிந்த விஷய ங்கள்தான் இவை. ஆயினும் மாத ரார்க்குப் புரியும் வண்ண ம் பெயர்களை விளம்பினேன்.
பத்தாண்டுச் சிறுவனாக நான் வளர்ந்த போது எனது கவனம், மனித வாழ்க்கையின் பல்வே று கூறுகளிலேயும் திரும்பி ற்று.
அவ்வளவு சின்ன வயதிலா என்று நீங்கள் ஐயப்படுவீர்கள். அது தெளிவானதோர் ஞானமன்று. இன்ப உணர்வுகள் நிறைந்த புதுமை யான அறிவு.
அப்போது கடலோடிக் கொண்டிருந்த எங்கள் கப்பல்கள் பன்னிர ண்டு, அதில் ஒன்று என் தந்தை கடல் கடந்து செல்வதற்காகப் பயன் படுத்தப்பட்டது. அதில் துடுப்பு வலிப்போர் மட்டும் இருபது பேர். அவர்கள் தங்குவதற்கும், இடம் உண்டு. என் தந்தைக்காக அலங்கரி க்கப்பட்ட தனி அறை உண்டு. உள்ளே அமர்ந்தால் இல்லத்தில் அமர்வது போலவே இருக்கும். அந்தக் கப்பலில் பயணம் செய்து பார்க்க நான் அவாவினேன்.
வாணிபத்துக்காக நாங்கள் அடிக்கடி போகும் இடங்களில் ஒன்று பன்னீராயிரம் தீவு.
நான், என்னுடன் ஒத்த செல்வச் சிறுவர்கள் இருவர்- பெயர்கள் மாணிக்கம், வைரம்- அவர்களும், என் தாயின் அனுமதி பெற்று அந்தக் கப்பலில் பயணம் செய்தோம்.
கப்பல் தளத்தில் நின்று வானையும் கடலையும் நோக்கிய போது, அந்தப் பிரம்மாண்ட சிருஷ்டி என்னை வியக்க வைத்தது.
புவி வாழ்க்கையில் மிகப் பெரியவனாகக் காட்சியளிக்கின்ற மனி தன் கூட, கடலுக்குள்ளே விழுந்து விட்டால் அவன்மீனுக்குச் சிறிய வனாகி விடுகிறான். சம்சாரக் கடலும் அப்படித்தான்.
இதை நான் அன்று உணரவில்லை.
பழந்தீவுகளில் நான் போய் இறங்கியபோது, அந்த நாட்டு மக்களை ப் பார்ப்பதற்கு எனக்குப் பரிதாபமாக இருந்தது.
நாகரிகத்தில் முன்னேறிய சோழ நாடு எங்கே? உலகம் தோன்றிய போது எப்படி இருந்தார்களோ அப்படியே இன்னும் இருக்கும் இந் தத் தீவு மக்கள் எங்கே?
எங்கள் கப்பலைக் கண்டதும், எங்களோடு வாணிபம் செய்யும் தீவு வணிகர்கள், கடல் துறையில் கூடி விட்டார்கள்.
`செட்டியார் மகன்’ என்று என்னை அவர்கள் அழைத்துக் கொண்டு போய் நடத்திய இராஜோபசாரம் இன்னும் என் மனதை விட்டு நீங்க வில்லை.
அடுத்த வீடு சென்றாலும் மரியாதை; அடுத்த நாடு சென்றாலும் மரியாதை; பிறப்பில் இருந்தே வறுமையை அறியாத சுகபோகத் தோடு, பத்து வயதிலேயே பிறரது மரியாதை; அது எங்களிடம் குவி ந்து கிடந்த பொருளுக்குத் தான் தரப்பட்ட தென்றாலும், என்னை ஒரு ஆணவக்காரனாக ஆக்குவதற்கு அதுவே போது மானதாக இருந்தது.
எனது பதினாறாவது வயதில் கடைகளை நானே கவனிக்க ஆரம் பித்தேன்.
குதிரைக் குட்டிக்கு ஓடக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? வணிகனு க்குக் கணக்கு வராமற் போனால், அதுதானே பூர்வ ஜென்ம பாவம்.
குறையாகவே படித்த எனக்கு, கூட்டத் தெரியும்; பெருக்கத் தெரி யும்; கழிக்கத் தெரியும்; வகுக்கத் தெரியும். எங்கள் சமூகத்தில் ஒரு வன் இந்த நாலும் தெரிந்தவனாக இருந்தால், அவனால் கடையை நடந்த முடியும்.
இந்தப் பருவம்தான் என் வாழ்வில் அதிசயமான பருவம்.
அழகிய ரதத்தில் என் வீட்டிலிருந்து நான் கடைக்குப் போகும் போ தெல்லாம், இத்தனை நாழிகைக்கு நான் வருவேன் என்று எத்தனை பெண்கள் வாசலிலேயே நிற்பார்கள்!
தேவனுக்காகக் காத்துக் கொண்டு நிற்கும் தேவதைகள் போல, அவர்கள் எனக்காகக் காத்துக் கொண்டு நிற்பார்கள்.
சாளரத்துத் திரைச் சீலையை விலக்கிக் கொண்டு நாணம் மிகுந்த பதுமைகள் சிலவும், என்னைப் பார்ப்பதுண்டு.
ஐந்து வயதிலேயே மணம் முடித்துவிடும் எங்கள் குலத்தில் நான் ஒருவன்தான் பதினாறு வயது வரையிலே மணம் முடிக்கப்படாத வனாக இருந்தேன்.
எனக்கு வாழ்க்கைப்பட வேண்டும் என்றே பல பெண்களும் தங்கள் பெற்றோரால் வளர்க்கப்பட்டுக் கொண்டி ருந்தார்கள்.
இத்தனைக்கும் என் சகோதரிக்கு எட்டு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டது. அவளை மணந்து கொண்ட பையனின் குடும்பமும் கோடிக்கு அதிபதியான குடு ம்பம் தான். ஆயினும் பெரியவளாகும் வரை தாய் வீட்டிலேயே வளருகின்ற சம்பிரதாயத்தில் அவள் வளர்ந்து கொ ண்டிருந்தாள். பதினெட்டு வயதில் பெரி யவளானாள்.
ஆறாவது மாதம், தன் நாயகனோடு இல் லறம் காண அவனது இல்லத்திலேயே குடிபுகுந்து விட்டாள்.
பெண்ணைப் பெற்றவர்களுக்கெல்லாம் நான்தான் தனி மரமாகக் காட்சி தந்து கொண்டிருந்தேன்.
மற்றவர்களைப் போலவே என் அம்மானும் தன் மகளை எனக்காக வளர்த்துக் கொண்டு வந்தார்.
ஏராளமான பெண்கள் தேடி வருகின்றனர் என்றாலே நல்ல பெண் ணைத் தேர்ந்தெடுக்கக் கூடிய அறிவை இளமை இழந்து விடுகிறது. `எதுவும் கிடைக்கும்’ என்ற ஆணவம் வந்து விடுகிறது. அந்த ஆண வத்தினிடையிலேயும் எனக்குப் பேரொளியாகத் திகழ்ந்தவள், நவமாணிக்கம் செட்டியாரின் மகள் மரகதம்.
பலர் என்னைக் கவனித்தாலும் நான் கவனித்தது அவளைத் தான்; அவளை நான் கவனிக்கிறேன் என்பதிலே பிறருக்குப் பொறாமை.
மற்றவர்களுக்கு என்ன? என் மாமன் மகள் சிவகலைக்கே அதிகம் பொறாமை. யாரிடம் சொல்வாள் இதை? என் தாயிடம் சொன் னாள்.
என் தாய் ஒருநாள் என்னை அருகே அழைத்து, “என் மகனே, வயது வந்ததும் மணம் முடிக்காமல் இருப்பது, எதிர்காலத்தில் சிதறிய எண்ணங்களுக்கு வித்திட்டு விடும். ஆகவே, என் தம்பி மகளுக்கும் உனக்கும் திருமணம் முடிக்க முடிவு செய்துவிட்டேன்” என்றார் கள்.
`நான் ஒருத்தியை விரும்புகிறேன்’ என்று தாயிடம் சொல்லும் பழக் கம் இல்லையே நமக்கெல்லாம்!
நான் மவுனத்தில் ஆழ்ந்தேன்! என் மயக்கம் அன்னைக்குப் புரிந்தது.
“அதனால்தான் இந்த அவசரம்” என்றார்கள். “தம்பி மகளிருக்க அந்நியத்தில் பெண்ணெடுத்தால், அந்தப் பெண்ணுக்குத் திருமணம் ஆகுமா? காரணம் கூறிக் கதை கட்டமாட்டார்களா? ஒரு பெண் ணை நீ அடைய, உறவுப் பெண் வாழ்விழப்பதா?” என்றார்கள்.
இறைவனிடம் கூட நான் எதையும் மறுத்துப் பேசுவேன்; என் தாயி டம் பேசுவதில்லை.
அன்னையின் விருப்பத்திற்குப் பணிந்தேன்; மணத்திற்குத் துணிந் தேன்.
ஆம், துணிந்தேன் என்று சொல்வதே பொருந்தும். ஒருவன் திரு மணம் செய்து கொள்வதென்பது எவ்வளவு துணிவான செயல்? அதிலேயும் வாய்த்துடுக்கு நிறைந்த பெண்ணல்லவா எனக்கு வாழ்க்கைப்படப் போகிறாள்!
எதிர்ப்பேச்சு, ஏடாகூடம், எகத்தாளம் எவ்வளவுக் கண்டிருக்கிறேன் அவளிடம்!
`மனைவி என்பவள் தாயின் துணைக்கு வருகிறவளே’ என்று முடிவு கட்டி, தாயின் விருப்பத்தை நிறைவேற்றினேன்.
திருமணம் நடந்தது. காவிரி நகரமே அதிர்ந்தது; விருந்தினர், உண வை உறிஞ்சி உண்ட ஓசை, கடல் ஒலியையும் மிஞ்சியது.
எங்கள் குலத்துச் சம்பிரதாயங்களில் ஒன்று விருந்தில் முக்கனி போடக் கூடாதென்பது. அது மன்னவர்கள் தரும் விருந்தில் மட்டு மே நடக்கலாம். மற்றையோர் ஏதேனும் ஒரு கனி குறைவாகவே போடவேண்டும். ஆனால் அந்தச் சம்பிரதாயத்தை மீறி மன்னர் குல விருந்து போலவே விருந்து நடத்தினேன் நான்.
எங்கள் குலத்தில் `இசை குடிமானம்’ என்று ஒன்று எழுதுவார்கள். குடும்பத்தில் பாரம்பரியமான புகழ், மானம், மரியாதை, இவற்றை க் காப்பாற்றுவதற்கான துணை அது.
எங்கள் சம்பிரதாயங்கள் முற்றும் சைவ நெறிகளுக்குக் கட்டுப்பட் டவை.
திருமணத்தின்போது ஆசை உணர்வுகள் மீறிய நிலையில் தான் இருந்தேன் என்றாலும், நமது வைதிக நெறிகளை அறிந்து கொள் வதில் ஆர்வம் இருந்தது.
எங்கள் குலத்தில் தாலி கட்டுவதை `திருப்பூட்டுவது’ என்பார்கள். மாங்கல்யம் பெண்ணுக்கு நீங்காத செல்வமாகப் பூட்டப்படுகிறது.
முன்பின் அறிமுகமில்லாத ஒருத்தி அந்தத் `திருப்பூட்டப்பட்டது ம்’ கணவனது பாதக் கமலங்களில் சரணடைந்து விடுவாள்.
அவன் கூன், குருடு, நொண்டியாக இருந்தால் கூட அவள் கவனம் வேறுபக்கம் திரும்புவதில்லை.

நான் அங்கம் குறைந்தவனல்ல. “தங்கமே என்று தாய் என்னைத் தாலாட்டியது முற்றும் பொருந்தும்’ என்று வே ண்டாதவர்கள் கூடச் சொல்வார்கள்.
கேளுங்கள்.
இசை, குடி, மானத்தைக் காப்பாற்ற நான் சிவகலையின் கரம் பற்றி இல்லறத்தில் புகுந்தேன்.
உடல் உறவில் சற்று அதிகமாகவே ஈடுபட்டேன்.
என்ன ஆச்சரியமோ, மங்கலம் கழுத்தில் விழும் வரை வாய்த் துடுக்காக இருந்த சிவகலை, மங்கலம் விழுந்ததும் மந்திரத்தில் கட்டுண்டவள் போலானாள்.
உடம்பு திருப்தியடைந்து விட்டால், உடும்பு கூடப் பிடியை விட்டு விடுகிறது.
மஞ்சள் பூசி, திலகம் அணிந்து, கழுத்தைக் கவ்விக் கொண்டி ருக்கும் அட்டிகையோடு பட்டுப் புடவை கட்டி அவள் என் எதிரி ல் வரும் போதெல்லாம், உடல் வெறியால் துள்ளிக் குதித்து கட்டிப்பிடிக் கின்ற நான், கால ங்கள் செல்லச் செல்ல ஒரு தெ ய்விக உணர்ச்சியால் கட்டுண் டேன்.
உடலிலுள்ள ஜீவ அணுக்கள் சமாதானம் பெறத் தொடங்கின. அவ ளைப் பார்க்கும் போதெல்லாம் உயர்ந்த எண்ணங்களே உருவா யின.
ஆனால், ஆண்டுகள் ஐந்து ஆகியும் மகனுக்குப் பிள்ளைப் பேறு இல்லையே என்ற கவலை என்னைப் பெற்றவளை வாட்டி எடுத் தது.
`மூன்று தலைமுறைகளுக்கு மேல் தாழ்ந்தவர்களும் இல்லை; மூன்று தலைமுறைக்கு மேல் வாழ்ந்தவர்களும் இல்லை’ என்பார்கள்.
எங்கள் வம்சத்தின் செல்வப் பெருமைக்கு நான் மூன்றாவது தலை முறை. என்னோடு கதை முடிய வேண்டியது தானா? அடுத்த ஒரு வாரிசு பிறப்பதற்கில்லையா?
நான் அதைப்பற்றி அதிகம் கவலைப்படவில்லை. ஆனால், என் தாய் எதற்காக உயிர் வாழ்ந்தார்களோ, அது நிறைவேறவில் லையே என்பது அவர்கள் கவ லை.
ஒருநாள் மெதுவாக என்னைப் பார்த்து, “ஐயா! நான் சொன் னால் வருந்தாதே! ஒன்றிருக்க ஒன்று கொள்வது நம் இனத் தில் இயற்கை தான். என் தம்பி மகளை வைத்து விட்டே இன் னொரு பெண்ணை உனக்குத் திருமணம் செய்ய முடிவு கட்டி இருக்கிறேன்” என்றார் கள்.
நான் துடித்துப் போனேன்.
“ஆத்தா, பழக்க வழக்கங்கள் வேறு; மனிதனின் விருப்பங்கள் வேறு ; குலப் பழக்கம் என்பதற்காக ஒரு தாசியின் உறவைக் கொள்ளவும் மாட்டேன்; இன்னொரு பெண்ணை மணக்கவும் மாட்டேன். சிவ கலையிடம் அந்த சிவநாதனின் கலையை நான் கண்டு கொண் டிருக்கிறேன். சைவர்களுக்கு எப்படி சிவபெருமான் ஆதிமூலமோ அப்படியே எனக்குச் சிவகலைதான் எல்லாமும். அவளைத் தொட் ட கையால் ரம்பையர் கிடைத்தாலும் தொடமாட்டேன். ஒன்றுக்கு மேல் திருமணம் செய்து கொள்வது எப்படி நம் குலப்பழக்கமோ, அப்படியே பிள்ளை இல்லாதவர்கள் சுவிகாரம் என்று பிள்ளை கூட்டிக் கொள்வதும் வழக்கம்தான். வருகின்ற பிள்ளைக்கு தாய் தந்தையரிடம் பாசம் இல்லாமல் போனாலும், தாய் தகப்பன் தங்களுக்குள் உள்ள பாசத்தைத் தளராமல் வைத்துக் கொள்ள முடியுமல்லவா?” என்றேன் நான்.
அன்னை ஆறுதல் பெறவுமில்லை; என்னைக் கட்டாயப் படுத்தவும் இல்லை.
மாடத்துச் சாளரத்தில் நின்று எங்கள் பேச்சைக் கவனித்த சிவ கலையின் கண்கள் நீரூற்றுப் போல் பொங்கி நின்றதையும் நான் கண்டேன்.
அன்று அவள் என்னிடம் நடந்து கொண்ட முறை, தெய்வத்தை நெருங்கிவிட்ட பக்தையின் பிரீதியைப் போல் காட்சி தந்தது.
கணவன், மனைவியின் நலனில் அக்கறை செலுத்தினால் மனை வி, கணவன் கால்களுக்கே அணியாகி விடுகிறாள்.
அன்பு, அரக்கைக் கூடத் தண்ணீரிலே கரைத்து விடுகிறது. பாசம், கல்லைக் கூட எரித்துச் சாம்பலாக்கி விடுகிறது. வெறுப்பு தெய்வத் தைக்கூட வெகு தூரம் விரட்டி விடுகிறது.
சிவகலையும் நானும் சிவஸ்தலங்களுக்கு யாத்திரை போனோம்.
பிள்ளை இல்லாதவர்கள் கடைப்பிடிக்கும் இரண்டாவது வழி அது தானே?
அதிலும் பயனில்லை.
சொத்துக்கு நான் வாரிசு தேடவில்லை. இல்லாதது கூட நல்லது என்று நினைத்தவன். ஆயினும் தாய், என்னைப் பெற்றவள்; இற ந்து விட்டால் என்னால் பெற முடியாதவள். அவளது ஆன்மத் துடிப் புக்காக இறைவனை இறைஞ்சினேன். பலன் இல்லை.
`எங்கே மீண்டும் ஒரு சபலம் என் தாய்க்குத் தோன்றி விடுமோ’ என்று சிவகலை அழுதாள்.
பனித்திருந்த அவளது கண்களை நான் துடைத்தேன். சரியாக அதைத் துடைக்கும் போது ஒரு குழந்தை அழும் சத்தம் என் காதுக் குக் கேட்டது.
நான் திகைத்தேன். “ஒரு குழந்தை அழுகிறதே. உனக்குக் கேட்கி றதா?” என்றேன்.
“இல்லையே” என்றாள்.
“எங்கே மீண்டும் அழு” என்றேன்.
அவள் அழுதாள்.
நான் கண்ணீரைத் துடைத்தேன்.
கண்ணீரைத் துடைக்கும் போதெல்லாம் குழந்தை அழும் சத்தம் கேட்டது.
“இறைவா, என்ன இது அதிசயம்!”
இது ஏதோ ஒரு சோதனை என்று கருதி, அன்று இரவு அவளை விட்டுப் பிரியாமல் அவள் அருகிலேயே படுத்திருந்தேன்.
திடீரென்று அவள், “எனக்கு பிள்ளை பேறு உண்டா?” என்று கேட் டாள்.
அப்படிக் கேட்ட உடனேயே மீண்டும் பிள்ளை அழும் சத்தம் கேட் டது.
பிறகு நான் அவளைப் பேசவும் விடவில்லை. அழவும் விடவில் லை. ஆலிங்கனத்திலேயே தூங்கினேன்.

No comments:

Post a Comment