Friday, March 16, 2012

சிதம்பரம் கோவில் – ரசிக்க‍ வைக்கும் ரகசியங்களும், அதிர வைக்கும் ஆச்சர்யங்களும்


Posted on  by muthukumar

தோற்றம், அவதாரம், பிறப்பு போன்ற மாசு மலங்கள் இல்லாததூயசெம் பொருளாக இருப்ப தால் பரமசிவம் ‘சித்து’ எனப் படுகிறது. ‘அம்பரம்’ என்றால் ‘ஆகாயம்’ என்று பொருள். எல்லாவற் றையும் கடந்து எல்லாமாக உள்ள பரிபூரண சித்து அம்பரமாக எழுந்தரு ளி இருக்கும் திருத்தலமே சிதம்பரம் (சித்து+அம்பரம்) என்று அழைக்கப்படுகிறது.
 
சிதம்பரம் நகருக்கு கோவில் நகர், நாட்டிய நகர் என்ற புனைப்பெயர்களும் உண்டு. திருச்சிற் றம்பலம் என்ற பெயர், சிற்ற ம்பல மாக மருவி சிதம்பரம் என்றானது என்றும் கூறுவர். சிதம்பரத்தில் உள்ள சிவ ஆல யம் உலகப் புகழ்பெற்றது. இது தில்லை மரங்கள் நிறைந்த காடாக முற்காலத்தில் இருந்த தால், ‘தில்லை’ என்றும் ‘தில் லையம்பலம்’ என்றும் அழைக் கப்பட்டது. நாயன்மார்கள் பாடிய தேவாரத்தில் சிதம்பரம் பற்றி கூறப்பட்டுள்ளதாலும், நாய ன்மார்கள் நால்வரும் இங்கு வந்து பாடியதாலும் இது ‘பாடல் பெற் ற தலம்’ என்றும் அழைக்கப்படுகின்றது.
 
சைவர்களின் முக்கிய கடவுளான சிவபெருமான், நடராஜர் என்றபெயரில் வீற்றிருக்கும் ஆலய மும், வைணவர்களின் முக்கிய கடவுளான திருமால், கோவிந் தராசப் பெருமாள், புண்டரீக வல்லித் தாயாருடன் வீற்றிருக் கும் ஆலயமும் சிதம்பரம் நக ரில் அமைந்துள்ளது, அந் நகர த்திற்கு மேலும் பெருமை சேர் க்கிறது. பிற கோவில்களில் லிங்க வடிவில் இருக்கும் சிவ பெருமான், சிதம்பரம் கோவி லில் மட்டும் நடனமாடும் நிலையில் நடராஜ ராக காட்சித் தருகி றார். நடனமாடும் நிலையில் இருப்பதால், பரதநாட்டியம் என்னு ம் நாட்டியக் கலைக்கு முதற்கடவுளாக இந்த நடராஜரை வண ங்குகின்றனர்.
40ஏக்கர் பரப்பளவில், நான் கு திசைக்கு ஒரு கோபுரம் என நான்கு கோபுரங்களும், ஐந்து சபைகளும் உடையது சிதம்பரம் ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள கிழக்கு கோபுரத்தில் 108 பரத நாட்டி ய நிலைகளில் உள்ள சிற்ப ங்களை காணலாம். இங்கு மூலவர் சிலை இருக்கும் இடம் கனகசபை என்று அழைக்கப்படுகிறது. இந்த சபை, பராந்தக சோழ மன்னனால் பொற் கூரை வேயப்பட்டு கனகசபை என்ற பெயர் பெற்றதாகும்.
 
பஞ்சபூதங்களில் ஒன்றான ஆகாயம் வடிவில் சிவபெருமான் இக்கோவிலில் இருக்கிறார் என்பதை குறி ப்பால் உணர்த்தும் வகை யில் ‘சிதம்பர ரகசியம்’ அமைக்கப்பட்டுள்ளது. ரத்தி னக் கல்லால் செய்யப்பட்ட நடராஜர் விக்கிரகமும், ஆதிசங்கரர் அளித்த ஸ்படிக லிங்கமும், சிதம்பர ஆலயத் தில் இன்றும் அவற்றிற்கு பூஜை செய் யப்படுகிறது. வைணவக் கடவுளான திருமால் இங்கு திருச் சித்திரக் கூடம் என்ற சபையில், நடராஜரின் கனக சபைக்கு அரு கில் இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார்.
நாலாயிர திவ்யபிரபந்தத்தில் திருச் சித்திரக்கூடம் பற்றிய குறிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த கோவிலில் சிவகாமி அம்மனும் அருள் பாலித்து வருகிறார் என் பதும் சிறப்பு. இங்கு ஆயிரம் தூண்கள் கொண்ட ஆயிரங்கால்மண் டபம், சிற்பக் கலைக்கும்- கட்டிடக் கலைக்கும் சிறப்பு பெற் றது.
 
நடராஜர் ஆலயமும், தில் லையம்மன் ஆலயமும், இளமையாக்கினார் ஆலய மும், திருச்சித்திரக்கூடமும் இங்கு இருப்பதால், இது ‘ கோவில் நகரம்’ என்றும் அழைக்கப்படுகிறது. நடனக்கலைகளின் தந்தையான சிவ பெருமா னின் நடனமாடும் தோற்றம் நடராஜ ராஜன் எனப்படுகிறது. இது வே மருவி நடராஜர் என அழைக்கப்படுகிறது. சிவ பெருமானின் பல வகையான நடனங்களில் இத்தலத்தில் அவரது ‘ஆனந்த தாண் டவம்’ இடம் பெற்றுள்ளது.
 
க்கோவிலில்நாட்டியாஞ்சலி என்ற நாட்டிய விழா ஒவ்வொ ரு வருடமும் சிறப்பாக கொண் டாடப்படுகிறது. உலகில் பல் வேறு இடங்களில் நாட்டியம் பயிலும் கலைஞர்கள், தங்களுடைய நாட்டியத்தை இங்கு அர்ப்பணிக்கின்றனர். அவர்கள் இங்கு வந்து நாட்டியார்ப்பணம் செய்வதை மிகப்பெரிய பாக்கிய மாகவே கருது கின்றனர்.
 
பக்தி இலக்கியத்திலும், சங்க இலக்கியத்திலும் தில்லை சிவ பெரு மான் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. சோழ மன் னர்கள் பலர், இந்த ஆலயத் திற்கு திருப்பணி செய்துள்ள னர். சோழர்களுக்குப் பிறகு பாண்டிய மன்னர்களும், கிரு ஷ்ண தேவராயரும் இங்கு வழி ப்பட்டதாகவும், திருப்பணிகள் பல புரிந்ததாகவும் இக்கோவில் கல்வெட்டுகளில் ஆதாரங்கள் காணப்படுகின்றன.

No comments:

Post a Comment