Sunday, March 18, 2012

இறைவழிபாட்டில் எலுமிச்சம்பழம் முக்கியத்துவம் பெறுவது ஏன்?


Posted on  by muthukumar

எல்லாம் வல்ல இறைவனுக்கு நம்மால் இயன்றவற்றை பக்தியு டன் அளிப்பதே பூஜை. ஆண்டவனு க்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனா னது அவருக்கு மட்டும் இல்லாமல் அனைத்து ஜீவராசிகளையும் சென் றடைந்து பயன் அளிக்கிறது. நாம் நமது சக்திக்கு ஏற்றவாறு பக்தியு டன் அளிக்கும் அனைத்து பொருட் களையும், இறைவன் அன்புடன் ஏற்கிறார். ஆகமங்களில் ஒவ்வொ ரு தெய்வ வடிவங்களுக்கும் அவர் களுக்கு உரிய சிறப்பான மலர், பழங்கள், மந்திரங்கள், வஸ்திரங் கள், எந்த நாட்களில் செய்ய வேண்டும் என மிகச் சிறப்பாக வகுத் துக் கொடுக்கப்பட்டுள்ளது. இவற்றில் ஒரு சிலஅனைத்து தெய்வ ங்களுக்கும் பொதுவானதாக உள்ளது. புஷ்பங்களைத் தொடுத்து மாலையாக அணிவிப்பதைப் போல, சில சிறப்பான பழங்களை யும் மாலையாகக் கட்டி கடவுளுக்கு அர்ப்பணிப் பதை ஆகமங்கள் ஆமோதிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று தான் எலுமிச்சம் பழம்.
தீயவற்றைப் போக்கி நன்மையை அளிக்கக்கூடிய மிகப் பெரிய மருந்து இது. வெற்றியின் அடையா ளமாகவும் வீரத்தின் அடையாளமாகவும் எலுமிச் சம்பழம் உள்ளது. காளி, மாரி, துர்கா போன்ற வீரத்தை வெளிப்படு த்தி நம்மைக் காக்கும் தெய்வங்களுக்கு இவை மிக உகந்தது. எனி னும், மற்ற தெய்வங்களுக்கும் இவற்றை அளிக்கலாம். இவ்வகை யில் எலுமிச்சம்பழத்தை மாலையாகக் கடவுளுக்கு அளிப்பதினா ல், அந்தப் பழத்தின் சிறந்த மஞ் சள் நிறத்தினாலும் தன்மையாலு ம் நாம் நமது காரியங்களில் வெற்றியடையலாம் என்பது உறு தி. அக்காலங்களில் நாம் நமது பிரார்த்தனையைத் தெரிவிக்க வேண்டுமெனில், அவர்களாகவே தங்களின் பிரார்த்தனைகளை சங்கல் பித்துக்கொண்டு பூவை யோ பழங்களையோ தொடுத்து கடவுளுக்கு அளித்து நன்மைக ளைப் பெற்றார்கள். முயன்றவரை நாமும் நம் கைகளால் பூவை யோ, பழங்களையோ மாலையாகத் தொடுத்து இறைவனுக்குப் படைத்து பயனடை வோம்.

No comments:

Post a Comment