Thursday, March 8, 2012

செல்வ வளம் பெற அனைவரும் செய்ய இயலும் சில எளிய பூஜை முறைகள் !Posted On March 8,2012,By Muthukumar

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை. அது என்னவோ தெரியாது. ஆனால் பொருளில்லார்க்கு நிச்சயமா இவ்வுலகம் இல்லை. இது எல்லோருக்கும் தெரிஞ்ச விஷயம். 

செல்வ வளம் பெற , மிகச் சிறந்த வழிபாட்டு முறைகள் பற்றி நான் ஏற்கனவே சில கட்டுரைகளில் குறிப்பிட்டு இருக்கிறேன். பழைய பதிவை படிக்காதவர்கள், கீழே இந்த கட்டுரை முடிவில் இருக்கும் " Related  Posts  " பதிவுகளில் refer  செய்து கொள்ளவும்.  அவற்றுடன் , சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிகையில் கிடைத்த இந்த தகவல்களை , நம் வாசகர்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். 

நம்பிக்கையுடன் வழிபாடு செய்து வாருங்கள்... ! நிச்சயம் மிக நல்ல முன்னேற்றம் கிடைக்கும்...!

சென்ற வருட அண்ணாமலை குபேர கிரிவலம் - என்னுடன் வந்த ,  நண்பர்களுக்கு இந்த நான்கு மாதங்களில் மிக நல்ல முன்னேற்றம் கிடைத்து இருப்பதாக மனம் நெகிழ்ந்து கூறி இருக்கிறார்கள்..! ஒரு மூன்று வருட கடின உழைப்பின் மூலம் அடைய வேண்டிய நற்பலன்கள், இந்த வருடமே கிடைத்து இருப்பதால் பெரிய அதிசயம் போல உணர்கின்றனர். எல்லாம் அண்ணாமலையார் அருள் !  

என்னுடைய நிம்மதியின் ரகசியம் என நான் நினைப்பது - மாதத்தில் ஒரு முறையாவது - அண்ணாமலை கிரிவலம் சென்று வருவது. இதற்க்கு முன்பு வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பௌர்ணமி தினங்களில் சென்று வந்து கொண்டு இருந்தேன்... தீபம், சித்திரை பௌர்ணமி முடிந்தவரை தவிர்க்காமல் சென்று விடுவேன்.... நாளடைவில் அங்கு கூடும் கூட்டத்தில் வலம் வரும்போது தொந்தரவுகள் அதிகமாகவே சாதாரண சனி , ஞாயிறு செல்லும் பழக்கம் ஏற்பட்டது. 
கூர்ந்து கவனித்ததில் , மாதம் ஒரு முறை சென்று வர , வர , வாழ்வில் ஒரு படி மேலே மேலே ஏறுவது தெரிய ஆரம்பித்தது... காலை நடை திறக்கும்போது அண்ணாமலையாரை பார்த்து விட்டு மலை சுற்றுவது , நிஜமாகவே பெரும் பேறு கிடைத்தவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் அரியதொரு வாய்ப்பு... ஒவ்வொருமுறையும், ஒவ்வொரு வித்தியாசமான அனுபவம்.........  

கூடா நட்பு , கூடா பழக்கம் எல்லாம் ஒவ்வொருவராக கழன்று விட ,  தலைக்கு மேலே போய்விட்டது என்று நினைத்த பிரச்னைகள் எல்லாம் வந்த சுவடு தெரியாமல் மறைய....  பூதாகரமான பொருளாதாரப் பிரச்னைகளுக்கு நடுவில் , முழுக்க மூழ்கிவிட்டதாக நினைத்த போது - உச்சியைப் பிடித்து மேலே இழுத்து விட்டு , மூர்ச்சை தெளித்து ,  கை கொடுத்து கூடவே வலம் வருவது போல ஆக்கிரமிக்க அந்த அண்ணாமலையாரால் முடியும், என்பது  என் வாழ்வில் நிரூபணமான  உண்மை..! 

போன வாரம் ஒரு லேன்ட் டீலிங் முடிஞ்சு இருக்குது... பெரிய ஆச்சர்யம்... பத்து வருஷத்துக்கு அப்புறம் ஒரு வேளை வாங்க முடியலாம் என்று நினைத்து பார்க்க கூடிய ஒரு சொத்து , இந்த மாதமே வாங்க முடிகிறது என்றால் , இது அந்த இறைவன் கருணையன்றி வேறில்லை...!

நல் எண்ணங்கள், நற் செயல்கள் ,  நன் முயற்சி இருந்து - தெய்வத்தின் மேல் நம்பிக்கை வைத்து அவர் பொறுப்பில் விட்டு விட்டால் ,  நிறைந்த மனதும், மகிழ்ச்சியும்  கிடைப்பது உறுதி.....!

இந்த மாதிரி பூஜை , விரதம், கிரிவலம் என்று நேரம் வியமாவதை தவிர்த்தால் கூட , நீங்கள் இன்னும் சம்பாதிக்க முடியும் என்று என் நண்பர் ஒருவர் கேட்டார்.....

பூஜை , அண்ணாமலையார் தரிசனம் எல்லாம் -  ஒரு சுய கட்டுப்பாட்டு முறை. தனி மனித ஒழுக்கத்திற்கு அவை முக்கியம். நேர விரயம் ஆவதுபோல தோன்றினாலும், வலிய திட்டமிட்டு ஒருவரை கவிழ்க்க வைக்கும் சதிகார செயல்களில் இருந்து தப்ப , நாம் ஒன்றும் சினிமாவில் வரும் கதா நாயகர்கள் கிடையாது.. ஆனால், நமது வில்லன்கள் மட்டும் சினிமா வில்லன்களையும் விட இன்னும் திறமை சாலி... ! என்ன கொடுமை சார் இது ! 

கடவுள் ஒருவன் இருப்பதை மனப் பூர்வமாக நம்பி, அவன் அனுக்கிரகம் பெற, இந்த மாதிரி விரதம், பூஜை, இறை தரிசனம் , ஜோதிடமு, சாஸ்திரகளு.. சம்பிரதாயகளு... இவை எல்லாம் உதவும்.... நம்பிக்கையை இன்னும் பலப்படுத்தும். 

சின்ன சின்ன ஏமாற்றம் என்று இல்லை, பெரிய பெரிய ஏமாற்றம் , தோல்வி ஏற்பட்டாலும் - மனம் துவண்டு விடாமல் உங்களை உயிர்ப்புடன் வைத்திருக்க , இறைவனை இறுக்க பற்றிக்கொள்ளும் இந்த பழக்க வழக்கங்களால் மட்டுமே இது முடியும்...  


திருநாவுக்கரசர் பாடி இருக்கிறாராமே..! "உசுருக்கு போராடுற மாதிரி ஒரு சூழ்நிலைல ஒன்னை நினைக்க முடியுமோ, முடியாதோ... அப்போ நான் என்னை காப்பாத்துறதுக்காக உன்னை கூட மறந்து எதோ செய்ய வேண்டி வரும். அதனாலே, கை , கால் நல்லா இருக்கும்போது இப்போவே உன்னை கும்பிட்டுக்கறேன்... கருணை புரிவாய் ! " -  அட அடா ! என்ன வார்த்தை! 


அந்த மாதிரி , நல்ல படியா வாழ்க்கை போகும்போது, கடவுள் நினைப்பு வருவது கொஞ்சம் அபூர்வம்.... வந்தாலும், ஏதோ பிக்னிக் போற மாதிரி கோவிலுக்கு , கெத்தா , பந்தாவாத் தான் போக தோணும்... கடுமையான கஷ்டங்களினால் அவதிப்பட்டு, " ஐய்யா, உன்னை விட்டா வேற வழியில்லைன்னு கண்ணீர் மல்க , போய் அங்க நிக்கத் தோணாது..." ஆனா, நல்லா இருந்தாலும், இதுவும் அவன் கருணை என்று எண்ணி, பக்தியுடன் அவனை தரிசனம் பண்ணுபவர்களுக்கு , கண்ணீர் மல்க நிற்கும் ஒரு சூழல் எதிர்காலத்திலும் வராது..!

சரி, இன்று நாம் பார்க்க விருப்பது -  தோரக்ரந்தி பூஜை பற்றி. மிக நல்ல நிலையில் இருந்து விட்டு - தலைகீழாக புரட்டிப் போட்டது போல, செல்வம் அனைத்தையும் இழந்து இப்போது வறுமையில் வாடிக்கொண்டு இருப்பவர்களுக்கு - இது மிகப் பெரிய வரப்பிரசாதம்..!மகாலட்சுமியை அஷ்ட லட்சுமிகளாக வழிபடுகிறார்கள். இந்த அஷ்ட லட்சுமிகள் தான் நமக்கு எட்டு வகையான செல்வங்களை வாரி வழங்குகிறார்கள். இந்த அஷ்ட லட்சுமிகளுடன் வரலட்சுமியையும் சேர்த்து ஒன்பது லட்சுமிகள் உள்ளதாக சாஸ்திரம் சொல்கிறது.
எனவே வரலட்சுமி பூஜை தினத்தன்று ஒன்பது நூல் இழைகளால் ஆன, ஒன்பது முடிச்சுகள் போடப்பட்ட நோன்புக் கயிறை பூஜையில் வைத்து வழிபட வேண்டும். இந்த பூஜை ``தோரக்ரந்தி பூஜை'' என்று அழைக்கப்படுகிறது.
 
விரதம் இருப்பது எப்படி?
வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும். விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். 
அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும். ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு ஆகிய நிவேதனப் பொருட்களை கலசம் முன் வைக்க வேண்டும். 
ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், திராட்சை ஆகிய பழ வகைகளையும் நிவேதனத்துக்காக வைக்கலாம். அதன்பிறகு வாசலில் உள்நிலைப்படி அருகே நின்று வெளியில் நோக்கி கற்பூர ஆரத்தி காட்டி மகாலட்சுமியை வீட்டுக்குள் வருமாறு அழைக்க வேண்டும். மகாலட்சுமி வீட்டுக்குள் வந்துவிட்டதாக பாவனை செய்து, பூஜையில் உள்ள கலசத்தில் அமர்ந்து அருள்புரியுமாறு மகாலட்சுமியை வேண்டிக் கொண்டு ஆவாஹணம் செய்ய வேண்டும். 
இப்போது மகாலட்சுமி உங்கள் வீட்டுக்குள் வந்து விட்டாள். அன்னைக்கு மனம் குளிர பூஜைகள் செய்ய வேண்டும். அப்போது மங்களகரமான தோத்திரங்களை சொல்லலாம். மகாலட்சுமிக்கு உரிய பாடல்களைப் பாடலாம். இதையடுத்து நோன்புக் கயிறை கும்பத்தை சாற்றி பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். லட்சுமியின் 108 போற்றி மற்றும் லட்சுமி அஷ்டோத்ரசதம் சொல்லலாம். 
``மகாலட்சுமி தாயே எங்கள் வீட்டில் நிரந்தரமாக தங்க வேண்டும். எங்களுக்கு எல்லா செல்வங்களையும் நீ தர வேண்டும்'' என்று மனம் உருக வணங்க வேண்டும். பின்னர் பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பத்தில் உள்ள மூத்த சுமங்கலிப் பெண்களுக்கு முதலில் பிரசாதம் கொடுக்க வேண்டும். இளம் பெண்கள் அவரிடம் ஆசி பெற்றுக் கொள்ள வேண்டும். இப்படி வரலட்சுமி விரத பூஜையை நெறி தவறாமல் செய்தால் மகாலட்சுமியின் பரிபூரண அருள் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். 
========================================================

பூசம் நட்சத்திரம் வரும் நாட்களில் , நிறைந்த அமாவாசை நாட்களில்  எல்லாம் குபேரனை மனதில் தியானித்து - கீழ்க்கண்ட குபேர போற்றியை சொல்லி வரவும்... ! பொருளாதார மேம்பாடு நிச்சயம் உருவாகும்...

108 - குபேர போற்றி !

1. அளகாபுரி அரசே போற்றி
2. ஆனந்தம் தரும் அருளே போற்றி
3. இன்பவளம் அளிப்பாய் போற்றி
4. ஈடில்லாப் பெருந்தகையே போற்றி
5. உகந்து அளிக்கும் உண்மையே போற்றி
6. ஊக்கம் அளிப்பவனே போற்றி
7. எளியோனுக்கு அருள்பவனே போற்றி
8. ஏழ்மை நிலை அகற்றுவாய் போற்றி
9. ஐஸ்வர்யம் அளிப்பவனே போற்றி
10. ஒன்பது நிதி பெற்றவனே போற்றி
11. ஓங்கார பக்தனே போற்றி
12. கருத்தில் நிறைந்தவனே போற்றி
13. கனகராஜனே போற்றி
14. கனகரத்தினமே போற்றி
15. காசு மாலை அணிந்தவனே போற்றி
16. கிந்நரர்கள் தலைவனே போற்றி
17. கீர்த்தி அளிப்பவனே போற்றி
18. கீரிப்பிள்ளைப் பிரியனே போற்றி
19. குருவாரப் பிரியனே போற்றி
20. குணம் தரும் குபேரா போற்றி
21. குறை தீர்க்கும் குபேரா போற்றி
22. கும்பத்தில் உறைபவனே போற்றி
23. குண்டலம் அணிந்தவனே போற்றி
24. குபேர லோக நாயகனே போற்றி
25. குன்றாத நிதி அளிப்பாய் போற்றி
26. கேடதனை நீக்கிடுவாய் போற்றி
27. கேட்டவரம் அளிப்பவனே போற்றி
28. கோடி நிதி அளிப்பவனே போற்றி
29. சங்க நிதியைப் பெற்றவனே போற்றி
30. சங்கரர் தோழனே போற்றி
31. சங்கடங்கள் தீர்ப்பவனே போற்றி
32. சமயத்தில் அருள்பவனே போற்றி
33. சத்திய சொரூபனே போற்றி
34. சாந்த சொரூபனே போற்றி
35. சித்ரலேகா பிரியனே போற்றி
36. சித்ரலேகா மணாளனே போற்றி
37. சிந்தையில் உறைபவனே போற்றி
38. சிந்திப்போர்க்கு அருள்பவனே போற்றி
39. சீக்கிரம் தனம் அளிப்பாய் போற்றி
40. சிவபூஜை பிரியனே போற்றி
41. சிவ பக்த நாயகனே போற்றி
42. சிவ மகா பக்தனே போற்றி
43. சுந்தரர் பிரியனே போற்றி
44. சுந்தர நாயகனே போற்றி
45. சூர்பனகா சகோதரனே போற்றி
46. செந்தாமரைப் பிரியனே போற்றி
47. செல்வ வளம் அளிப்பவனே போற்றி
48. செம்மையான வாழ்வளிப்பாய் போற்றி
49. சொர்ணவளம் அளிப்பவனே போற்றி
50. சொக்கநாதர் பிரியனே போற்றி
51. சௌந்தர்ய ராஜனே போற்றி
52. ஞான குபேரனே போற்றி
53. தனம் அளிக்கும் தயாபரா போற்றி
54. தான்ய லெட்சுமியை வணங்குபவனே போற்றி
55. திகட்டாமல் அளித்திடுவாய் போற்றி
56. திருவிழி அழகனே போற்றி
57. திருவுரு அழகனே போற்றி
58. திருவிளக்கில் உறைவாய் போற்றி
59. திருநீறு அணிபவனே போற்றி
60. தீயவை அகற்றுவாய் போற்றி
61. துன்பம் தீர்த்திடுவாய் போற்றி
62. தூயமனம் படைத்தவனே போற்றி
63. தென்னாட்டில குடி கொண்டாய் போற்றி
64. தேவராஜனே போற்றி
65. பதுமநிதி பெற்றவனே போற்றி
66. பரவச நாயகனே போற்றி
67. பச்சை நிறப் பிரியனே போற்றி
68. பவுர்ணமி நாயகனே போற்றி
69. புண்ணிய ஆத்மனே போற்றி
70. புண்ணியம் அளிப்பவனே போற்றி
71. புண்ணிய புத்திரனே போற்றி
72. பொன்னிற முடையோனே போற்றி
73. பொன் நகை அணிபவனே போற்றி
74. புன்னகை அரசே போற்றி
75. பொறுமை கொடுப்பவனே போற்றி
76. போகம்பல அளிப்பவனே போற்றி
77. மங்கல முடையோனே போற்றி
78. மங்களம் அளிப்பவனே போற்றி
79. மங்களத்தில் உறைவாய் போற்றி
80. மீன லக்னத்தில் உதித்தாய் போற்றி
81. முத்து மாலை அணிபவனே போற்றி
82. மோகன நாயகனே போற்றி
83. வறுமை தீர்ப்பவனே போற்றி
84. வரம் பல அருள்பவனே போற்றி
85. விஜயம் தரும் விவேகனே போற்றி
86. வேதம் போற்றும் வித்தகா போற்றி
87. வைர மாலை அணிபவனே போற்றி
88. வைகுண்டவாசப் பிரியனே போற்றி
89. நடராஜர் பிரியனே போற்றி
90. நவதான்யம் அளிப்பவனே போற்றி
91. நவரத்தினப் பிரியனே போற்றி
92. நித்தியம் நிதி அளிப்பாய் போற்றி
93. நீங்காத செல்வம் அருள்வாய் போற்றி
94. வளம் யாவும் தந்திடுவாய் போற்றி
95. ராவணன் சோதரனே போற்றி
96. வடதிசை அதிபதியே போற்றி
97. ரிஷி புத்திரனே போற்றி
98. ருத்திரப் பிரியனே போற்றி
99. இருள் நீக்கும் இன்பனே போற்றி
100. வெண்குதிரை வாகனனே போற்றி
101. கைலாயப் பிரியனே போற்றி
102. மனம் விரும்பும் மன்னவனே போற்றி
103. மணிமகுடம் தரித்தவனே போற்றி
104. மாட்சிப் பொருளோனே போற்றி
105. யந்திரத்தில் உறைந்தவனே போற்றி
106. யௌவன நாயகனே போற்றி
107. வல்லமை பெற்றவனே போற்றி
108 குபேரா போற்றி போற்றி

No comments:

Post a Comment