Sunday, July 22, 2012

இதுதான் வாழ்க்கை-வள்ளலார்

Posted On July 23,2012,By Muthukumar
ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு 10 நிலைகளை வகுத்து தந்துள்ளார் வள்ளலார். அவை...
1. நான் நன்றாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.
2. தன்னைச் சுற்றியுள்ளவர்கள் சுகமாக வாழவேண்டும் என்றும் எண்ண வேண்டும்.
3. உலகில் உள்ள எல்லோரும் இன்பமாய் வாழவேண்டும் என்ற உயரிய எண்ணம் வேண்டும்.
4. மனிதனைவிட குறைந்த அறிவுடைய விலங்குகள் மீதும் கருணை காட்ட வேண்டும்.
5. பறவை, ஊர்வன என அனைத்தையும் நேசிக்க வேண்டும்.
6. புழு, மீன் ஆகியவற்றிடம்கூட இரக்கம் காட்ட வேண்டும்.
7. ஓரறிவு உயிர்கள் வாடினால்கூட நாம் வாட வேண்டும்.
8. எல்லா உயிர்களையும் தம் உயிர் என நினைத்துப் பழக வேண்டும்.
- இவை புற வாழ்வு தொடர்பான எட்டு நிலைகளாகும்.
அடுத்த இரண்டு நிலைகளில் இறை வழிபாட்டுச் சிந்தனை தோன்றி விடுகிறது.
9. எல்லா உயிர்களும் இறைவன் வாழும் நிலையங்கள் என்று எண்ணி அவற்றுக்குத் தொண்டு புரிந்து வாழ்வதே இறைவழிபாடு என்று நினைப்பது.
10. இறைவழிபாட்டின்படி வாழ்ந்து இறுதியில் கருணைமயமான இறைவனோடு இரண்டறக் கலந்து மரணமில்லாத பெருவாழ்வு அடைவது.
- இந்த பத்து நிலைகளையும் நாம் உடனே பின்பற்ற முடியாவிட்டாலும், அவற்றை பின்பற்ற முயற்சியாவது செய்யலாமே..?

No comments:

Post a Comment