Sunday, July 22, 2012

500 ஆண்டுகளாக தடைபடாமல் நடக்கும் பூஜை

Posted On July 22,2012,By Muthukumar
ராமாயணத்தில் வரும் வானர ராஜ்யம் கிஷ்கிந்தா இருப்பது எங்கே?
எந்த ஊர் சந்தையில் ஒரு காலத்தில் வைரங்கள் விற்கப்பட்டது?
யுனெஸ்கோ வேர்ல்ட் ஹெரிடஜ் சைடில் இடம் பெற்றுள்ள தலம் எது?
திருப்பதியில் ஒரு மன்னரின் சிலையும் அவரது பெயரில் மண்டபமும் உள்ளது. அந்த அரசர் யார்?
எங்கு பார்த்தாலும் கோயில்களும், சிலைகளும் நிறைந்திருக்கும் ஊர் எது?
சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக தொடர்ந்து பூஜை நடப்பது எந்தகோயிலில்?
ஏதோ பத்தாம் வகுப்பு வரலாறு புத்தகத்தை புரட்டி கேள்விகள் கேட்பது போல் இருக்கிறதா?
வரலாறு சம்பந்தப்பட்ட இடம் தான். அதே சமயம் பத்தி நிறைந்த தலமும் கூட நினைவுக்கு வந்து விட்டதா?
ஆமாம்.  ஹம்பி திருத்தலம் தான் அது அரசர். கிருஷ்ணதேவராயர்.
கிருஷ்ண தேவராயரும் நினைவுக்கு வருகிறதா? ஹம்பி பெங்களூரவிலிருந்து 380 கிலோ மீட்டர் தொலைவில்  உள்ளது. அங்கே பார்க்க போவது விருபாஷா கோயிலை தான். எத்தனை எத்தனையோ கோயில்கள் அங்கே இருந்தாலும் இக்கோயிலின் தனிச்சிறப்புக்கு காரணம். ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் அன்று முதல் இன்று வரை தொடர்ந்து பூஜைகள் நடைபெற்று வருகிறது என்பது தான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட கோயில்கள் பல இருந்தாலும் அவற்றில் எல்லாம் ஒரு சில கால கட்டத்திலாவது வழிபாடுகள் தடைப்பட்டிருந்திருக்கும்.  வேற்று மத மன்னர்களின் படையெடுப்புகள், போர்கள் என எத்தனையோ இடையூறுகள் இப்பகுதியில் ஏற்பட்டபோதிலும் விருபாக்ஷõ கோயிலில் வழிபாடுகள் நிறுத்தப்பட்டதில்லை என்கிறார்கள்.
கோயிலில் நாயகனின் திரு“பயெர் விருபாக்ஷõ, பம்பா பதி என்ற பெயரும் இவருக்குண்டு. அம்பிகை, பம்பாதேவி, பிரம்மாவின் புதல்வியான இவரை மணக்கவே சிவபெருமான் விருபாக்ஷõ அவதாரம் எடுத்ததாக தல புராணம் கூறகிறது. கோயில் துங்கபத்ரா நதிக்கரையில் அமைந்துள்ளது. இந்த நதியின் இன்னொரு பெயர் பம்பா நதி.
மூன்று கோபுரங்கள், பிரதானகிழக்கு கோபுரம் 160 அடி உயரத்துடன் ஒன்பது நிலைகளை கொண்டுள்ளது. கோபுரத்தின் உச்சியில் உள்ள பசுவின் கொம்பு போன்ற அமைப்பு வேறெங்கும் காண இயலாது.
ஆரம்பத்தில் சிறிய கோயிலாக இருந்ததைகிருஷ்ணதேவராயர் மிகப்பெரிய கோயிலாக மாற்றி திருப்பணி செய்திருக்கிறார்.
உள்ளே நுழைந்தவுடன் நாம் காண்பது மேல் விதானத்துடன் கூடிய 100 தூண்கள் கொண்ட மண்டபம். அருகில் கல்யாண மண்டபம் ரங்க மண்டம், விஜயநகர பேரரசின் கட்டடக் கலைக்கு சான்றாக விளங்குகிறது இது. இங்குள்ள தூண்களில் சிவபுராணக் கதைகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளது. மண்டபத்தின் உத்தரத்தில் ராமாயண மகாபாரத காட்சிகள் சண்கவரும் சித்திரங்களாக தீட்டப்பட்டுள்ளன. சுற்றிலும் பம்பா தேவி, புவனேஸ்வரி நவக்ரஹ சந்நதிகள் இருக்கின்றன. விஜயநகர பேரரசு உருவாக காரணமான குல குரு வித்யாரண்யருக்கும் சந்நதி உள்ளது. அடுத்து வரும் சிறிய மண்டபத்தை கடந்தால் கர்ப்ப கிரகத்தில் லிங்கரூப தரிசனம் தருகிறார். விருபாக்ஷர் கிட்டத்தட்ட ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளாக பூஜிக்கப்பட்டு வருகிறார் என்றால் இத்தலத்தில் இவரது அருள் எவ்வளவு நிறைந்திருக்கும்? பக்தி அதிர்வுகள் நிரம்பிய பரமனின் அருள் பரிபூரணமாக  நிறைந்திருக்க கூடிய ஒரு தலத்தின் நாயகனை நாம் தரிசிக்கிறோம் என்ற நினைவே சிலிர்க்க செய்கிறது.
மூலஸ்தானத்தை வரும் வரும்போது ஓரிடத்தில்  அதிசயமான காட்சி ஒன்று காண கிடைக்கிறது. கர்ப்பகிரகத்தின் பின்னால் ஒரு சிறு இருட்டு அறையின் சுவரில் ஒரு மெல்லிய விரிசல் காணப்படுகிறது. அதன் வழியே வரும் சூரிய கதிர்களால் ராஜகோபுரத்தின் தலைகீழ் பிம்பம் எதிரே உள்ள சுவரில் விழுகிறது.
அறிவியல் ரீதியான ஒரு பரிசோதனை உண்டு. காலி அட்டைபெட்டின் ஒன்றின் ஒரு பக்கம் ஊசியால் தூரமிடுங்கள். அதன் நேர் எதிர்ப்பக்கம் ஒரு காகிதத்தை ஒட்டி அப்படியே ஜன்னல் பக்கம் வையுங்கள். ஊசித்துறை வழியாக வரும் வெளிச்சத்தில் மறுபுற காட்சிகள் தலைகீழ் பிம்பமாக காகிதத்தில் தெரிகிறதா? இதனை பின் ஹோல் கேமரா என்பார்கள். அந்த மாதிரியான அமைப்பில் தான் தெரிகிறது கோபுரத்தின் வடிவம். அறிவியல் வளர்ச்சி இல்லாத அந்த காலத்திலேயே இப்படிஒரு நுட்பமான அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்பது வியப்பான விஷயம்.
இக்கோயிலில் உள்ள ஒரு மலரின் சிற்பத்தினுடைய நடுப்பகுதியை இரு கைகளாலும் சேர்த்து பிடித்தபடி மனதில் எதையாவது நினைத்தால் அது நிச்சயம் நிறைவேறும் என்கிறார்கள்.

No comments:

Post a Comment