Wednesday, April 4, 2012

கொடி முந்திரி நைவேத்யம்!

Posted On April 04,2012,By Muthukumar
மன்னார்குடி அருகே உள்ள திருத்தலம் திருப்பாதாளேஸ் வரம். தற்போது இது பாம்பணி என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ள அமிர்தநாயகி சமேத நாகநாத சுவாமி கோவில் பிரசித்திபெற்றது.
ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்கள் தோற்று அசுரர்களால் விரட்டியடிக்கப்பட்டனர். இதையறிந்த முசுகுந்த சக்ரவர்த்தி, இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க அசுரர்களுடன் போரிட்டு வென்றார்.
அதற்கு பரிசாக இந்திரன் தான் தினமும் பூஜித்து வந்த மரகத லிங்கத்தையும், கொடி முந்திரியையும் (திராட்சை) முசுகுந்த சக்கரவர்த்திக்கு அளித்தார். அவரும் அந்த பரிசோடு திருவாரூர் கோவிலுக்கு வந்தார்.
அப்போது, திருப்பாதாளேஸ்வரத்தில் பிரம்மோற்சவம் நடப்பதால் அங்கு சென்று திராட்சையை நிவேதனம் செய்யுமாறு அசரீரிக் கேட்டது.
இதையடுத்து முசுகுந்த சக்கரவர்த்தி அதை அப்படியே செய்தார். அன்று முதல் இத்தலத்தில் கொடி முந்திரி என்னும் பச்சை திராட்சை நிவேதனமாக வழங்கப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment