Monday, April 16, 2012

சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு

POsted On April 17,2012,By Muthukumar

இயற்கைச்சீற்றங்களை நிறுத்தவும்,நமது கர்மவினைகள் தீரவும் திரு.சிவமாரியப்பன் அவர்கள் தலைமையில் சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு


இந்த நந்தன ஆண்டில்5.5.2012 சனிக்கிழமை காலை 8.12 வரையிலும் சித்திரை நட்சத்திரமும்,அதன்பிறகு சுவாதி நட்சத்திரம் மறுநாள் 6.5.2012 ஞாயிறு காலை 6.35 வரையிலும் இருக்கிறது.(பவுர்ணமியானது 5.5.2012 சனிக்கிழமை மதியம் 12.25க்கு ஆரம்பித்து,6.5.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.01 வரையிலும் இருக்கிறது)சித்திரை மாதம் வரும் பவுர்ணமி எப்போதும் சித்திரை நட்சத்திரத்தில் தான் உதயமாகும்.அபூர்வமாக பவுர்ணமியானது இரண்டு நட்சத்திரங்களில் வரும்;அப்படி வரும் நாள் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வருடத்தில் அமைந்திருக்கிறது.
அப்படி உதயமாகும்போது பின்வரும் வழிபாட்டுமுறையைப்பின்பற்றினால்,நமது கர்மவினைகள் அடியோடு நீங்கிவிடும்;குழந்தைப்பேறின்மையால் ஏக்கமடைபவர்களின் துயரம் நீங்கும்;பிரிந்திருக்கும் தம்பதியினர் ஒன்று சேர்ந்துவிடுவர்;(அவர்களுக்கிடையே இருக்கும் எப்பேர்ப்பட்ட பிணக்கும் தீர்ந்துவிடும்);பெண்ணுக்கு ஆணால் ஏற்பட இருக்கும் அவமானங்களும்;ஆணுக்கு பெண்ணால் ஏற்பட இருக்கும் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.மேலும் இந்த நந்தனவருடத்தில் வர இருக்கும் இயற்கைச் சீற்றங்கள் இந்த வழிபாட்டினால் தணித்துவிட முடியும்.(ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது!!!)

எனவே,இந்த சித்ராபவுர்ணமி வழிபாடு திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்கால சீடரும்;நமது ஆன்மீக வாழ்க்கை வழிகாட்டியும்,ஆன்மீகச் செம்மலுமாகிய திரு.சிவமாரியப்பன் அவர்களின் தலைமையில் 5.5.2012 சனிக்கிழமை காலை 6 மணியளவில் சதுரகிரியின் நுழைவாசலான தாணிப்பாறையில் துவங்க உள்ளதால், அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.

சொந்த ஊரில் வாங்கி வர வேண்டியவை:

குறைந்தது ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,
அரை கிலோ விதையில்லாத கறுப்பு திராட்சை
விதையில்லாத பேரீட்சை பழ பாக்கெட்(இவைகளை சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் சன்னிதியில் படையலிட்டுவிட்டு,கொஞ்சம் அங்கேயே பகிர்ந்துகொடுத்துவிட்டு,மீதியை வீட்டுக்குக்கொண்டு சென்று  நமது குடும்ப உறவுகளுக்கு கண்டிப்பாகத் தர வேண்டும்)

குறைந்தது 5 கிலோ நவதானியங்களை வாங்கி வர வேண்டும்.இவைகளை சதுரகிரி மலைப்பாதை ஓரங்களில்  தூவ வேண்டும்.இந்த நவதானியங்கள் நவக்கிரகங்களின் பிரதிநிதிகளாக இருப்பதால்,நமது ஜாதகத்தில் இருக்கும் நவக்கிரக தோஷங்கள் அடியோடு நீங்கிவிடும்.

வீட்டில் தயார் செய்து கொண்டு வர வேண்டியது:

   1)எள்ளை இடித்து,அத்துடன் கருப்பட்டி சேர்த்து  அதை 27 உருண்டைகளாகப் பிடித்து வைக்க வேண்டும்.இந்த 27 எள் உருண்டைகளையும் உடையாமல்,கொண்டுவர வேண்டும்.இது நமது முன்னோர்களுக்கு நாமே தர்ப்பணம் செய்வதற்காக!!!

2)குறைந்தது 2 கிலோ பொறியை(பொறிகடலையில் பொறி மட்டும்) வாங்கி,அத்துடன் குறைந்தது அரைக்கிலோ பூந்தியைக் கலக்கிக் கொள்ள வேண்டும்.இதை படையலாக்குவது நமது முன்னோர்களாகிய சித்தர்களின் ஆசி நேரடியாக நமக்குக் கிடைப்பதற்காக!!!ஆமாம்,நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வழித்தோன்றல்களே!!!(* பூர்வபுண்ணியம் உள்ளவர்கள்  இந்த நாளில் சதுரகிரியில் நமது முன்னோராகிய சித்தரையும் தரிசிக்கமுடியும்)

3) சதுரகிரி சுந்தரமஹாலிங்கத்துக்கு படையலாக சர்க்கரைப்பொங்கலும்,அவல் பாயாசமும் படைக்க வேண்டும்.இந்த இரண்டும் தயார் செய்யத் தேவையான பொருட்களை நாம் ஒவ்வொருவரும் கொண்டு வர வேண்டும்.சதுரகிரியில் இரவு நேரத்தில் நாம் கொண்டு வந்த பொருட்களை ஒன்றாக்கி,ஒரே படையலாக தயார் செய்ய வேண்டும்.அவ்வாறு தயார் செய்து இரவு 9 மணி முதல் 12 மணி வரை சதுரகிரி சுந்தர மஹாலிங்க சுவாமிக்குப் படைக்க வேண்டும்.படைத்துவிட்டு,நமது மஞ்சள்துண்டில் சுந்தரமஹாலிங்கத்தின் முன்பாக அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ஜபித்துமுடித்தப்பின்னர்,இந்த படையலை அங்கிருப்போர்களுக்கு விநியோகிக்க வேண்டும்;நாமும் கொஞ்சம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வர வேண்டும்.(மறக்காமல் டார்ச் லைட்,பாத்திரம் கொண்டு வரவும்)

இவ்வாறு செய்துவிட்டு,5.5.2012 சனிக்கிழமை இரவு கண்டிப்பாக சதுரகிரியில் தங்க வேண்டும்.மறு நாள் 6.5.2012 ஞாயிறு காலையில் அவரவர்களின் வீடுகளுக்குத் திரும்பலாம்.இவ்வாறு செய்வதால்,நீண்டகாலப் பிரச்னைகள் அடுத்த சில நாட்கள்/வாரங்களில் தீர்ந்துவிடும்;பொருளாதார நெருக்கடிகள் உடனடியாகத் தீர்ந்துவிடும்.நமது பூமிக்கு வர இருக்கும் இயற்கைச் சீற்றங்கள் விலகிவிடும்.

ஓம்சிவசிவஓம்

*** இந்த நந்தன வருடத்தின் முதல் பவுர்ணமியன்று இரவு முழுக்க சித்தர்களின் வீடாகிய சதுரகிரியில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஒரு சந்தர்ப்பம் ஆன்மீக குருவாகிய சிவமாரியப்பன் அவர்களால் கிடைத்திருக்கிறது.இது எப்பேர்ப்பட்ட ப்ராப்தம்!!!
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment