Posted By Muthukumar.On Feb 16,2015
விரத பலன்;
ஒரு வீட்டில் கணவன் விரதமிருந்து வழிபட்டால் கணவனுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். ஆனால் மனைவி விரதமிருந்து வழிபட்டால் மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவனுக்கும், குழந்தைக்கும் கூட நற்பலன்கள் கிடைக்கிறது.
குடும்ப பாதிப்பு, கஷ்டங்கள்; தினமும் வீட்டில் [அல்லது] உள்ளூர் பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.
. மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க; அஷ்டமி, நவமி, கரிநாள், ராகு காலம், எமகண்டம் தவிர்த்து, புதன், வியாழக்கிழமைகளில் அமிர்த யோகம், சித்தயோகக் காலத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது எதிர்காலக் கல்விக்கு நல்லது.
வீட்டில் குடும்பத்திலுள்ளவர்களில் யாருக்காவது அறுவை சிகிச்சை நடைபெற்றால் வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் விளகேற்றி வெள்ளை சிகப்பு அரளிப்பூ போட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தம்பதியரின் பெயர், ஜெனம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் தம்பதியர் இருவரும் ஒற்றுமையாக அன்னியோன்னிய நேசத்துடன் விளங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
நிரந்தர நல்ல வேலை கிடைக்க செவ்வாய்க்கு அதிபதி முருகனை நம்பிக்கையுடன் தினமும் வழிபட்டு வந்தால் 3 மாதத்திற்குள் வேலை கிடைக்கும்.
திருமணம் தாமதமாகி களத்திர தோசத்திற்குள்ளான பெணகள் செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30. மணி ராகு காலத்தில் துர்க்கை அம்மன் சன்னதியில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றுவதோடு நவகிரகங்களை ஒனபது முறை சுற்றினால் திருமணம் விரைவில் நடைபெறும்.
வியாபாரிகள் தங்களது கடைக்கு நல்லவர், கெட்டவர் வந்து போவதால் திருஷ்டியைப் போக்க இரவில் கடையை மூடும் பொழுது சூடம் ஏற்ற வேண்டும். எலுமிச்சம் பழம் வெட்டி குங்கும்ம் தோய்த்து கடையச்சுற்றி கடையின் நான்கு திசைகளிலும் போட்டால் வியாபாரம் நன்கு விருத்தியாகும்.
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கைகூடும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்தில் [4.30 மணி முதல் 6 மணி வரை] உள்ளூர் ஆலயத்திலுள்ள கால பைரவருக்கு செவ்வரளி மாலை, நெய் தீபம் 27 வாரம் ஏற்றி வர திருமணம் நடக்கும். 48 வது வாரம் நெய் தீபம் ஏற்ற எதிரி தவிடுபொடி, பில்லி, சூன்யம், சனி, நாக தோசம் மரண பயம் நீங்கும். காயத்ரி சொல்லி வழிபடுவது சிறப்பு தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு மிகச்சிறப்பு.
திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சையை சொருகினால் திருஷ்டி செய்வினை நீங்கும்.
விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம். வன்னிமரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபடுவதால் சனி, ராகு, கேது, தெசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன்பொருள் சேர்க்கை ஏற்றமான வாழ்வு அமையும்.
ஸ்ரீ மந்நாராயண்னின் அம்சமாகப் போற்றபடுவது அரச மரம். அரச மரத்தின் வேரில் பிரம்மாவும் மத்தியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து தெய்வங்களும், உப தேவதைகளும் அரச மரத்தின் பழங்களில் வாழ்வுதாயும் புராணங்களில் கூறப்படுகிறது.
திங்கடகிழமையும், அமாவாசயும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வது மகா புண்ணியம் தரும். நீண்ட ஆயுள், பிள்ளைப்பேறு, நோயிலிருந்து நிவாரணம், வைகுண்ட பிராப்தி இவை கண்டிப்பாகக் கிட்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
புத்ர தோசத்திற்கு சக்தியுள்ள பரிகாரம்; வியாழக்கிழமைகளில் ஒரு வேளை உபவாசமும் மாலையில் திருக்கோவிலிலுள்ள தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றிவர விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் இந்த விரதத்தை அனுஷ்டிக்காமல் வேறு யார் மூலமாவது நெய் தீபம் ஏற்றி வர வேண்டும், நம்பிக்கை அவசியம்.
தடைப்பட்ட திருமணம் நடைபெற
ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிசேகம் செய்து வழிபட வேண்டும்..பிரதோச நாளில் நந்திபகவானுக்கு பால்,தயிர் வாங்கி அபிசேகத்துக்கு கொடுக்க வேண்டும்.விரைவில் திருமணம் நடைபெறும்..!!
|
Monday, February 16, 2015
திருமணம் நடைபெற பரிகாரங்கள்,விரதம்,வழிபாடு
கடன் தீர கணபதி மந்திரம்
Posted By Muthukumar,On Feb 16,2015
கடன் தீர கணபதி மந்திரம்.
ஓம் கணேசருணம் சிந்தி வரேண்யம் ஹீம் பட்ஸ்வாஹா ஹே பார்வதி புத்ரா ருணம் நாசம் கரோதுமே ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் அபீஷ்ட சித்திம்மே தேஹி சரணாகத வத்ஸல பக்த்யா ஸமர்ப்பயே துப்யம் ஸ்வாஹா ஸ்ரீசக்ரேசாய ஸ்ரீமகா கணபதயே ஸ்வாஹா கருங்காலி குச்சியால் கணபதி ஹோமம் செய்ய எவ்வளவு பெரியளவில் கடன் இருந்தாலும் அது மிக விரைவாக தீர்ந்துவிடும்.
கணபதி மந்திரங்களை பிரம்ம முகூர்த்த வேளை எனப்படும் அதிகாலை 4.30 முதல் 6.00க்குள் ஜபிப்பது மிக நன்று என கணேச உத்தர தாயினி உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது.
|
Monday, February 9, 2015
கோவில்கள் – அதிரவைக்கும் அதிசயங்களும்! – வியத்தகு விளக்கங்களும்!
Posted onFeb 9,2015 by Muthukumar

அந்த காலத்தில் கோவில் கட்டும் போது ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது
ஒன்றை தனித்தன்மையுடன் அமைத்தனர். ஆனால் ஒவ்வொரு கோவிலிலும் ஏதாவது ஒரு தனிச்சிறப்பு உண்டு!

1.உற்சவர் அல்லாமல் மூலவர் வீதியில் வலம் வருவது சிதம்பரம் நடராஜ கோயில்
2.கும்பகோணமருகே “தாராசுரம்” என்ற ஊரில்
உள்ளஐராவதீஸ்வரர் கோவிலில் உள்ள சிற்பத்தில் வாலியும் சுக்ரீவனும் சண்டைஇடும் காட்சி உள்ளது. இங்கிருந்து ராமர் சிற்பம் இருக்கும் தூண் தெரியாது. ஆனால் ராமன் அம்பு தொடுக்கும் சிற்பத்தில் இருந்து பார்த்தால் வாலி சுக்ரீவன் போர் புரியும்
சிற்பம் தெரியும்.

3. தர்மபுரி மல்லிகார்ஜுன கோவிலில் உள்ள நவாங்க மண்டபத்தில் இரு தூண்களின் அடி பூமியில் படியாது.

5.கருடாழ்வார் நான்கு கரங்களுள் இரு
கரங்களில் சங்கு சக்கரம் ஏந்தியபடி காட்சி தரும் ஸ்த லம்கும்பகோணம் அருகே வெள்ளியங்குடி. 108 திவ்யதேசத்தில் இங்குமட்டு ம் இது போல் காட்சிதருகிறார்.

7.
ஸ்ரீபெரும்புதூரில் உள் ராமா னுஜர் உருவம் விக்ரஹமோ, வேறுஉலோகப்பொருளால்ஆன வடிவமைப்போ இல்லை.குங்குமப்பூ, பச்சை கற்பூரம் கொண்ட மூலிகைப் பொருளால் ஆனது.

11. ஆந்திராவில் சாமல் கோட்டை அருகே உள்ள 3 பிர
தான சாலைகளில் சந்திப்பி ல் உள்ள 72 அடி ஆஞ்ச நேயர் சிலையின் கண்களும்-சில நூறுமைகளுக்கு அப்பால் உள்ளபத்ராசல ஆலயத்தில் ஸ்ரீராமன் திரு வடிகளும் ஒரே மட்டத்தில் உள்ளன.

12.வேலூர் அருகேஉள்ளவிருஞ்சிபுரம் என்றதலத்தி
ல் உள்ள கோயில் தூணின் தென் புறம் அர்த்த சந்திர வடிவில் 1 முதல் 6வரையும், 6முதல் 12 வ ரையும் எண்கள் செதுக்கியுள்ளன. மேற்புறம்உள்ள பள்ளத்தில் வழியே ஒருகுச்சியை நீட்டினால், குச்சியுன் நிழல் எந்த எண் ணில் விழுகிறதோ அதுதான் அப்போது மணி ஆகும்.

16.கும்பகோணம் சாரங்கபாணி கோவில்கோமளவல்லி தாயாருக் கு படிதாண்டா பத்தினி என்ற பெய ரும் உண்டு- பெருமாளோடு எக்கா லத்திலும் வெளியே வராத காரணத்தினால் . . .
Sunday, February 8, 2015
கோவில்களில் கடைபிடிக்க வேண்டியது
Posted By Muthukumar,On Feb 8,2014
* கோவில் பிரகாரத்தை குறைந்தது மூன்று முறையாவது வலம் வருவது நல்லது.
* கோவில்களில் உள்ள பிரகாரத்தை சுற்றும்போது, பெண்கள் தலையில் துணியை கட்டிக் கொண்டு சுற்றுதல் கூடாது. தலைக்கு குளித்த பின் தலைமுடியின் பின் நுனியை முடிந்து போடாமல், விரித்து போட்டுக் கொண்டு சுற்றுவதும் தவறான முறை.
* கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியே செல்லும் முன்பு, சில நிமிடங்கள் உட்காந்து விட்டு செல்வது சிறப்பு தரும். அப்போது கோவில் கோபுரத்தை தரிசனம் செய்வதும் நல்லது. கோபுர தரிசனம் கோடி பாவங்களில் இருந்து விமோசனம் அளிக்கக்கூடியது.
* கோவிலில் உள்ள அரச மரங்களை சனிக்கிழமைகளில் தான் தொட்டு வணங்க வேண்டும். அதே போல் காலையில் அரச மரத்தை சுற்றுவது தான் மிகவும் நல்லது. பெரும்பாலும் பிற்பகல், மாலை நேரங்களில் சுற்றுவதை தவிர்த்து விடவும்.
* கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்வதாக வேண்டிக்கொண்டு கோவிலை சுற்றி சிலர் உருண்டு வலம் வருவார்கள். அப்படி செய்கிறவர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு காலை வேளையை தேர்வு செய்வது நன்மையை தரும்.
* கோவிலை சுற்றும்போது ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒருமுறை இருக்கிறது. பிள்ளையாரை ஒருமுறை சுற்றி வந்தாலே போதுமானது. அம்மனை தரிசிக்கும்போது 4 முறை வலம் வர வேண்டும். அரச மரத்தை 7 முறையும், நவக்கிரகங்களை 9 முறையும் சுற்றி வர வேண்டும்.

ஆத்மாவை மறைக்கும் 10 துர்குணங்கள்
Posted By Muthukumar,On Feb 8,2015 |
காமம்: தனம், தான்யம், தாரம், தன் பிள்ளை, பேரன்கள் மீதுள்ள அளவிலா ஆசை
குரோதம்: மற்றவருக்கு தீமை விளைவிக்க முற்படுவது.
லோபம்: மற்றவருக்கு ஈயாதவனின் இயல்பு
யோகம்: மனைவி மக்கள் மீது அதிக பாசம் வைத்து அதிக செல்வம் தேடும் முயற்சியில் ஈடுபடுவது.
மதம்: மற்றவர்களை துச்சமாக நினைத்து கர்வத்துடன் செயல்படுவது.
மாச்சர்யம்: மற்றவர் நன்கு வாழ்வதைக் கண்டு பொறாமைப்படுதல்.
டம்பம்: நான்கு பேர் மெச்சுவதற்காகவே நல்ல காரியம் செய்தல்
தர்ப்பம்: செல்வம், செல்வாக்கு - இவற்றில் தன்னை மிஞ்சியவர் யாருமில்லை என்று கர்வம் கொள்ளல்
ஈர்ஷை: தனக்கு நேர்ந்த கஷ்டமும், துக்கமும், பிறருக்கும் ஏற்பட வேண்டும் என நினைப்பது
அசூயை: தீமை செய்வோருக்கு, பதிலுக்கு, தீமை செய்ய விரும்புவது.
இந்த பத்து அழுக்குகளும், நீரை மூடியுள்ள பாசி போல, ஆத்மாவை மறைக்கின்றன.
ஸ்ரீ ராஜமாதங்கி எனும் ஸ்ரீ ஷ்யாமளா வழிபாடு
Posted By Muthukumar,On Feb 8,2015
இசை,இலக்கியம் ,நடனம் மற்றும் சகலகலைகளிலும் சிறப்பான தேர்ச்சியும்,பத
மந்திர சாஸ்திர உபாசனையில் மேலான இடம் வகிக்கும் ஸ்ரீ வித்யா உபாசனையில் முதலில் ஸ்ரீ மஹா கணபதி மந்திரம் ,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி மந்திரம்,பின்னர
ஸ்ரீ மகாகணபதி,ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி உபாசனை இரண்டும் சித்தி செய்தவர்களுக்கு
ஸ்ரீ மதங்க முனிவர் ஸ்ரீ பஞ்சதசி மந்திரத்தை அக்ஷர லக்ஷம் ஜெபம் செய்து ஸ்ரீ ராஜராஜேஸ்வரியின
ஸ்ரீ ராஜமாதங்கி நம் உடலில் புத்தி தத்துவமாகவும்,ஸ
இவளை அனாஹத சக்கரம் என்ற ஹ்ருதய ஸ்தானத்தில் தியானிக்க வேண்டும்.
இவளது அங்க தேவதை லகு ஷ்யாமளா,உபாங்க தேவதை வாக்வாதினி ,பிரத்யங்க தேவதை நகுலீ.இவர்கள் சாதகனுக்கு நல்ல வாக்குவன்மை, கலைகளில் தேர்ச்சி ,சங்கீத ஞானம்,சகலகலா பாண்டித்தியம் அருள்வார்கள்.
இவள் உபாசனை அருள்,புகழ் பெற்றோர் ஸ்ரீ மகாகவி காளிதாசர், ஸ்ரீ பாஸ்கரராயர்,சங்
மதுரை மீனாக்ஷி ஸ்ரீ ராஜமாதங்கி அம்சம்.திருவானை
ஸ்ரீ ராஜமாதங்கியைத் தினமும் வழிபடலாம். அதிலும், அஷ்டமி, பௌர்ணமி, சித்திரை மாதம் வளர்பிறை,மாசி மாதம் வளர்பிறைகளிலும்
அரசாங்க காரிய வெற்றி,சர்வ ஜன வசீகரம்,பெரிய பதவிகள் கிடைத்தல், அவற்றைச் சிறப்பாக நிர்வாகம் செய்தல் போன்ற பலன்களுக்கு ஸ்ரீ ராஜமாதங்கியையும
ஸ்ரீ ராஜமாதங்கி மந்திரம்:
ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் \ஓம் நமோ பகவதி ஸ்ரீ ராஜமாதங்கேச்வரி
அல்லது
ஓம் |ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஐம் க்லீம் சௌம் \ஓம் நமோ பகவதி ஸ்ரீ ராஜமாதங்கேச்வரி
என்றும் ஜெபிக்கலாம்.ஹோம
ஸ்ரீ லகு ஷ்யாமா மந்திரம்:
ஐம் நமஹ உச்சிஷ்ட சாண்டாளி மாதங்கி சர்வ வசங்கரி நமோ நமஹ ||
அல்லது
ஐம் க்லீம் நமஹ உச்சிஷ்ட சாண்டாளி மாதங்கி சர்வ வசங்கரி நமோ நமஹ||
மூலமந்திரம் ஜெபிப்பவர்களும்
ஸ்ரீ ராஜமாதங்கியின் 16 திருநாமங்கள்:-
1.சங்கீதயோகினி
2.ஷ்யாமா
3.ஷ்யாமளா
4.மந்திரநாயிகா
5.மந்திரிணி
6. சசிவேசானி
7.ப்ரதானேசி
8.சுகப்ரியா
9.வீணாவதி
10.வைணிகீ
11.முத்ரிணி
12.ப்ரியகப்ரியா
13.நீபப்ரியா
14.கதம்பேசி
15.கதம்பவனவாசின
16.சதாமதா
Saturday, February 7, 2015
புண்ணியம் தரும் பரிமள ரங்கநாதர்!
Posted By Muthukumar On Feb 7,2015
கருடசேவை

மயிலாடுதுறையிலுள்ள திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில், பெருமாளின் 108 புண்ணிய திருத்தலங்களில் ஒன்று. இங்கு நடக்கும் கருடசேவை மிகவும் விசேஷம்.
பிரம்மாவிடமிருந்து வேதங்களை திருடி சென்ற மது, கைடபர்களை அழித்த மகாவிஷ்ணு, அவற்றை மீட்டு பரிமளம் (புனிதமாக்குதல்) ஆக்கினார். இதனால், இவர், பரிமள ரங்கநாதர் என்று பெயர் பெற்றார்.
தன் வாழ்க்கை துணைவியரை சரி வர கவனிக்காத காரணத்தால், தட்சனின் சாபத்திற்கு ஆளான சந்திரன், இங்கு சுவாமியை வழிபட்டு, விமோசனம் பெற்றான். சந்திரனுக்கு, ‘இந்து’ என்றொரு பெயரும் உண்டு. இதனால், இத்தலம், ‘திரு இந்தளூர்’ என்று பெயர் பெற்றது.
காவிரிக்கரையில் பெருமாள் சயனித்திருக்கும் ஐந்து தலங்கள், ‘பஞ்சரங்கம்’ எனப்படுகிறது. இதில் ஐந்தாவது தலமான இங்கு,
பரிமள ரங்கநாதர் வீர சயனத்தில் காட்சி தருகிறார். வேதங்களுக்கு அருளியதால் இவருக்கு, ‘வேதாமோதன்’ என்றும் பெயருண்டு. இவரது சிலை மரகதக்கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. சுவாமியின் தலைக்கு மேலே சூரியனும், நாபியில் பிரம்மாவும், பாதத்திற்கு அருகில் சந்திரனும், கங்காதேவியும், தலை அருகில் காவிரித்தாயும் உள்ளனர்; தாயார் பரிமள ரங்கநாயகி!
தன்னில் நீராடுபவர்களின் பாவத்தை ஏற்றுக்கொண்டதால், கங்கைக்கு அதிக பாவம் சேர்ந்தது. இதற்கு விமோசனம் கிடைக்க கங்காதேவி, இங்குள்ள காவிரி நதியில் மூழ்கி சுவாமியை வழிபட்டாள். கங்கையே தன் பாவத்தை தீர்க்குமளவுக்கு புண்ணியம் பெற்ற ஆறு காவிரி; இங்கே நீராடினால், புண்ணியம் பெருகும் என்பது ஐதீகம்.
ஐப்பசி மாதம், 22ம் தேதி முதல் இங்கு பிரம்மோற்சவம் துவங்கும். பத்து நாட்கள் நடக்கும் இந்த விழாவில், சுவாமிக்கு ஆண்டாள் அலங்காரம், குவலயாபீட வதம், பகாசுர வதம், அகல்யா சாப விமோசனம், காகாசுரன் வதம், உறியடி கோலக்காட்சிகள், வெண்ணெய்த்தாழி போன்ற அலங்காரங்களை செய்வர்.
விழாவின், 4ம் நாள் சுவாமி கருடசேவை சாதிப்பார்; இதைக் காண்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம் என்பது ஐதீகம். இதையடுத்து, சுவாமிக்கு திருக்கல்யாணமும், தேர்த்திருவிழாவும் நடக்கும்.
மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசியன்று, ஸ்ரீரங்கத்தைப் போல, இங்கும் ரங்கநாதர் முத்தங்கியில் காட்சி தருவார். தை அமாவாசையன்று சுவாமிக்கு தாயார் போலவும், தாயாருக்கு சுவாமி போலவும் அலங்காரம் செய்வர்; இதை, ‘மாற்றுத் திருக்கோலம்’ என்பர்.
பரிமள ரங்கநாதரை வணங்கினால், புண்ணியம் பெருகும்; தரிசிக்க கிளம்புவோமா!
தொடர்புக்கு தொலைபேசி எண்: 04364 223 330.

Subscribe to:
Posts (Atom)