Posted on September 11, 2014 by Muthukumar
இன்றைக்கு உலகம் முழுவதும் போற்றிப் பெருமை கொள்ளும் அவதா ரங்களில் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் ஒன்றாகும். இதயத்தை ஈர்க்கும் திருவு ருவம் கண்ணனின் எழில் உருவம். அயல் நாட்டிலும் கூடப் புகழ் பெற்று விளங்குவது. மேல் நாட்டவர்களையும் ஈர்த்துள்ளது கிருஷ்ணாவதாரம். கண்ணன் வழிபாட்டை ஆங்கிலத்தில் ‘Sri Krishna Cult’ என்பர்.
ஸ்ரீ கிருஷ்ணாவதாரம் ஒப்பற்ற, ஈடிணையற்ற அவதாரம். அதர்மத்தை அழித்துத் தர்மத்தை நிலைநாட் ட ஸ்ரீ நாராயணன் எடுத்தஅவதாரம் ஸ்ரீ கிருஷ்ணாவதாரம். கண்ணன் அவதாரம் ஒரு புரட்சிகரமான அவதாரம் என்பர். ஆயர்பாடிக் கண்ணன், துவாரகை மன்னன், பாண்டவதூதன், பார் த்தசாரதி, அரவிந்த லோசன ன், ஆண்டாள் மணவாளன் என இப்படிப் பல தோற்றங்கள் காட்டுகிறான். அந் தக் கண்ணன் பாண்டவ தூதனா ய்த் துரியோதனாதியரிடம் தூது சென்ற பொழுது மல்லரை மாய் த்த இடம் தான் திருப்பாடகம். பெரிய காஞ்சியில் பாடகமென்று பெயர் கொண்ட திருப்பாடகத்தில் இக்கண்ணனைக் காணலாம். காஞ்சிபுரம் மாவட்டத்தின் தலைநகரமா ன காஞ்சீபுரத்தில் பல கோயில்கள் உள்ள ன. அவற்றுள் சைவ, வைஷ் ணவச் சிறப் பு மிக்க ஊர் இது. அருளாளர் வரதனை இங்கு காணலாம். சென்னையிலி ருந்து எழுபத்தைந்து கி.மீ. தூரத்திலுள்ளது காஞ் சிபுரம். சென்னை – காஞ்சி விரைவுப் பேரு ந்துகள் ஒன்றரை மணி நேரத்தில் காஞ்சி யைஅடையும். சென்னையிலிருந்து புகை வண்டிப்பாதை உள்ளது. பெருமானின் நின்ற திருக்கோலத்தினைத் திரு ஊரகத்தி லும், கிடந்த திருக்கோலத்தை திருவெஃ காவிலும், இருந்த திருக்கோலத்தைக் திரு ப்பாடகத்திலும் (காஞ்சிபுரத்தில்) காண லாம்.
சூடிக் கொடுத்த சுடர்க்கொடி, பாமாலை பாடிக் கொடுத்த பாவை எட்ட வாது பாசுரத்தில்,
‘மாவாய்ப் பிளந்தானை, மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்’
தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்’
என அந்த தேவாதி தேவன் மல்லரை மாட்டிய கதையை விவரித்துள்ளார். அந்த வரலாற்றை நோக்குவோ ம்.
பஞ்ச பாண்டவர்களுக்குத் தூது செல் லக் கண்ணன் ஒப்புக் கொண்டதும், நம் வலையில் இக்கண்ணன் சிக்கமா ட்டானா என ஏங்கிய துரியோதன ன் இந்த அரிய வாய்ப்பைப் பெற்றான். மிகப் பெரிய சுரங்கம் அமைத்து அத னுள் பல மல்லர்களை ஒளித்து வைத் து மேலே மூடி அதன் மேல் ஆசனமி ட்டுக் கண்ணனை அப்பீடத்தின் மேல் உட்கார வைத்துவிட்டான். இதனை அறிந்து கொண்டான் எல்லாம் அறிந்த மாயக்காரன் மாயவ ன். விஸ்வ ரூபம் கொண்டு அமர்ந்தான். அதன் விளைவாக மாட்டிக் கொண்ட மல் லர்கள் நசுங்கி மாண்டனர்.
கண்ணன் தோன்றிய புராணக் கதையைக் காண்போம். பாரதப்போர் முடி ந்த பின்னர் வெகு காலத்துக்குப் பின் ஜெனமே ஜெய மகாராஜன், வைச ம்பாயனர் என்னும் ரிஷியிடம் பாரதக் கதையைக் கேட்டு வந்தார். அப் போது ஸ்ரீ கிருஷ்ணர் ஹஸ்தினாபுரத்திலி ருந்து தூது சென்றபோது எடுத்த திருக்கோ லத்தை (உருவத்தை) தானும் சேவிக்க வேண்டுமென ஆசைப்பட்டு அதற்கு வழி கேட்டார். சத்யவிரத க்ஷேத்ரமான காஞ்சி க்குச் சென்று அசுவமேத வேள்வி செய்தா ல் வேள்வியின் முடிவில் விரு ம்பிய திரு க்கோலத்தைக் காணலாமென முனிவர்கள் கூற மன்னன் அவ்வாறே செய்தான். வேள் வியின் பயனாய்ப் பிரம்மாண்டமாக கண் ணன் வேள்வியில் தோன்றி மன்னருக்கும், ஹாரித முனிவருக்கும் காட்சி கொடுத்தார் என்பது வரலாறு. இத்திருத்தலத்தினைப் பூதத்தாழ் வார், பேயாழ்வார், திருமழிசை யாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகிய நால்வரும், ஆறு பாசுரங்களில் மங்களா சாசனம் செய்துள்ளது இத்தல த்தின் சிறப்பாகும்.
இனி கோயிலின் அமைப்பு, தீர் த்தம், இத்தலத்தின் சிறப்பு, புகழ் முதலிய வற்றை நோக்குவோ ம். இத்திருக்கோவிலின் திரு வாயிலை மூன்று நிலைகள் கொண்ட இராஜ கோபுரம் அல ங்கரிக்கிறது. கருவறை மேல் அமைந்துள்ள விமானம் ஐந் து கலசங்கள் கொண்ட அரியதொ ரு படைப்பு. இவ்விமானத்திற் கு பத்ர விமானம், வேத கோடி விமானம் எனும் பெயர்கள் உள்ளன. குமுதம், பட்டிகை என்னும் அமைப்புகளால் அதிட் டானம் அமைந்துள் ளது. மேற் சுவர் பகுதியில் புதைத் தூண்கள் நிறுவி வெளிப்பகுதி யாளி,வரிமானம், உட்கையில் பூதவரி அலங்கரித்து, விமானத்தின் புறப் பகுதி யில் நரசிம்மர், பரமபத நாதன் மூர்த்திகள் அழகுற விள ங்குகின்றனர். இத்தலத் திருக் கோயில் தீர்த்தம் மத்ஸ்ய தீர்த் தம்.
இங்கு கண்ணனின் தோற்றம் மிகவும் அழகானது. விசாலமான உண் ணாழிகையில் இருபத்தை ந்தடி ஓங்கி விசுவரூபம் கொண்டு அமர்ந்த திருக்கோலத்தில் எம்பெரு மான் உள்ளார். அப்பேருருவின் முன் ஆறடி உயரமுள்ள மானிடர்கள் கூனிக் குனிந்து வணங்க வேண்டும். சுதை வடிவமான எம்பெருமானு டைய திருப்பாதங்களைத் தான் நன்றாகத் தரிசிக்க முடியும். எம்பெரு மானைக் கழுத்து வலிக்க அண்ணாந்து நோ க்கினால்தான் திருமேனி ஒருவாறு புலப்படும். இரண்டு கரங்களே கொ ண்டு சங்கு, சக்கரம் ஏதும் இல்லாமல் எம்பெருமான் அபய வரதனாக காட்டும் அருட்காட்சி பரிபாலனம் பண்ணுவதை வலியுறுத்துகிறது. பாண்டவ தூதனாகிய இப்பெருமானைப் பாண்டவர்களுக்குச் சமாதான ம் பேசத் தூதனாய்ச் சென்ற திருக்கோலத்தில் ஒரு முறை தரிசனம் செய்தாலே போதும். அங்கேயே கட்டுண்டு நின்று விடுவோம். நூற்றி யெட்டு திவ்ய தேசங்களில் மட்டுமல்லாமல் இந்தியாவில் வேறெங்கு ம் இது போல் காட்சி காண இயலாது.
கண்ணனின் மணிமகுடம் விதானத்தை விட உயர்ந்திருப்பதால், தளம் கூம்பி குகைபோல் வரிசை இடாமல் குறுகி மேலே மறைந்துள்ளது. பழைய காலங்க ளில் செய்தது போல் சிற்பங்களைச் சுவரில் புதைப்பது போன்று செய்யாது இங்கே சிற்பி தனியாக அமைத்துள்ளார். உற்று நோக்கினால் கருறையின் மொத் தப் பகுதியை அப்படியே பெயர்த்துத் தலைக்குமேல் குவித்து வைத்தது போல் தோற்றமளிக்கிறது. மிகச் சிறிதா க இச்சந்நிதி அமைந்திருந்தாலும் கருவ றையின் குவிந்த அமைப்பும் அதனடி யில் பிரம்மாண்டமான திருக்கோலத் தில் எம்பெருமான் வீற்றிருப்பதும் கண்டு வியக்கத்தக்கது.
மேலும் இத்தலம் பற்பல சிறப்புகள் கொ ண்டது. எம்பெருமானின் நின்ற, அமர் ந்த, கிடந்த திருக்கோலங்களுக்கு திருஊ ரகம், திருப்பாடகம், திரு வெஃகா ஆகிய மூன்று திருத்தலங்களே புகழ் பெற்ற வை எனக் கூறுவர். நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் நின்ற திருக்கோலத்திற்கு வேங்கட முடையானையும், அமர்ந்த திருக்கோலத்திற்கு பத்ரிநாதனையும், கிட ந்த திருக்கோலத்திற்கு அரங்கத்து எம்பெருமானையும் தனித்துவமாக க் கொள்ளலாமெனினும் ஆழ்வார்கள் நின்ற, கிடந்த, இருந்த திருக்கோ லங்களுக்கு இம்மூன்று பதிகளையே மங்களாசாசனம் செய்துள்ளனர் என்று சொல்வார்கள்.
நின்றவாறும் அன்றியும் இருந்த வாறும் கிடந்த வாறும்
நினைப்பரியன ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
நினைப்பரியன ஒன்றலா உருவாய் அருவாய நின் மாயங்கள்
என நம்மாழ்வார் மங்களா சாசனத் துக்கு ஈடு வியாக்யானத்தில் திரு வூர கத்தில் நின்றபடியும், திருப்பா டகத்தில் இருந்தபடியும், திருவெஃ காவி ல் கிடந்தபடியுமாதல் எனக் காட்டுகிறது.
இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு ஆழ்வார்கள் காலத்தும் அதற்கு முன்னரும் எம்பெருமானி ன் மூன்று கோலங்களுக்கு இம் மூன்று தல ங்களையே குறித்தனர் எனக் கூறுகின்றனர். பின்னர் இந்நி லைகள் மாறி யிருக்கின்றனவெனில் அவை சிறப்புப் பெறத் தொடங்கி யுள்ளன என அறிகிறோம். இவை மூன்றும் காஞ்சித் திருத்தலத்துத் திவ் ய தேசங்கள் . நூற்றியெட்டு திவ்ய தேசங்களில் திவ்ய தேசமான திரு நீர்மலையில் மட்டுமே நின்ற, இருந்த, கிடந்த, நடந்த என்னும் நான் கு திருக்கோலங்க ளில் காட்சி தருகிறார்.
இத்தலத்துப் புகழுக்கு ஒரு கதையின் நிகழ்ச் சியைப் பார்ப்போம். எமக் கெல்லாம் தலைவ ர் என்னும் பொருள்படும் எம்பெருமானார் என் னும் சொல் இராமானுஜருக்கு மட்டுமே உரியது. அதே போல் அருளாளர் என் பது காஞ்சி அருளாளர் தேவராஜனைக் குறிக்கும். ஆனால் இவ்விரு சிற ப்புப் பெயர்களும் கூடிய அருளாளன் என்றே நாமம் சாத்தப் பெற்றவர் யக்ஞமூர்த்தி ஆவார். ஆந்திரப் பிரதேசம் நெல்லூர் மாவட்டத்தில் விஞ்ச மூர் என்னும் சிறு கிராமத்தில் அவதரித்தார் இவர். இவர் காசி மண் ணில் மாயாவாதியாய் ஏக தண்டம் பூண்ட ஒரு துறவியானார். உ டையவர் இராமானுஜர் பெருஞ்சிறப்புடன் விளங்குவதை அறிந்து அவ ருடன் வாதம் செய்ய எண்ணி தெற்கு நோக்கி வந்தார் யக்ஞமூர்த்தி. இராமனுஜ ரை வாதுக்கழைத்தார்.
யக்ஞமூர்த்தி தாம் தோற்றால் சமயம் மாறி விடுவதாக ஒப்புக் கொண் டார். உடையவர் கலைவாணியின் பாராட்டைப் பெற்ற ஸ்ரீ பாஷ்ய கை ங்கர்யத்தையே நிறுத்திவிடுவ தாகக் கூறிவிட்டார். பதினெட்டு நாள்கள் வாதம் நடைபெற வேண்டியதாக இருந்தது. பதினேழாம் நாள் இராமா னுஜரையே திண றடிக்கும் வினாவைத் தொடுத்தாராம். மறு நாள் உத் தாரம் சொல்வோம் என விடை கொடுத்து விட்டார். பொழுது விடி யும் வேளையில் இராமானுஜர் தாம் வழிபடும் அருள் வரதர் கமல மலர்ப் பாதங்களைச் சரணடைந்து வணங்கினார். அருளாளர் அவருக்கு வழி காட்டினார். “ஆளவந்தார் எழுதிய மாயாவா த காண்டத்தில் உமக்குப் பதில் உள்ளது” என அருளினார். நம்பிக்கை துளிர் விட, இராமானுஜர் வாதக்கூடம் வரும் வேளையில் எதிர் வந்த யக்ஞமூர்த்தி வாதினைத் தொடர விரும்பாமல், உடையவரிடம், உமக் கும் பெருமாளுக்கும் சற்றும் வேறுபாடு தெரியவில்லை என அருளாளரைப் பணிந் தார். ஞான சாரம், பிரமேய சாரம் என்னும் இரு நூல்க ளையும் எழுதிய யக்ஞமூர்த்தி, அருளாளர் திருவருளால் எம்பெருமானா ல் ஆட்கொள்ளப் பெற்றார். அதன்பிறகு அ வர் அருளாளன் எம்பெ ருமானார் என்னும் பெயர் பெற்றார். கார்த்திகைப் பரணியில் அவதரித்த இவருக்குத் தனிக் கோயில் வி ழாக்கள் உண்டு.
யார் என்ன பயன் கருதித் தவம் செய்யினு ம் அதன் பயனாகவே எம் பெருமான் அப்ப யனை அருள்வான். சூரியன், சந்திரன், சிவ ன், பிரம்மன், இந்திரன் என அவரவர்களின் எண்ணங்களுக்கேற்ப நியமித்து, அவர்களின் தவத்திற்கு மகிழ்ந்து பய னளிக்கிறான். அத்தகையார்தான் இந்தப் பாடகத்துள்ளார்கள். மணவா ள மாமுனிகளும் இங்கு எழுந்தருளி மங் களாசாசனம் செய்துள்ளார். இத்தகைய புகழுடன் விளங்கும் திருப்பாடகத் திருத்தலத்தில் எழுந்தரு ளியுள்ள பாண்டவ தூதர் கண்ணபிரானை வணங்கி வழிபட்டால் நம் இன்னல்கள் நீங்கும், சுக வாழ்வு கிட்டும் என்பது திண்ணம்.
No comments:
Post a Comment