Tuesday, November 29, 2011

நீங்களே ஹோமம் செய்யலாம்...!

Posted On November 30,2011,By Muthukumar

   மது ஜோதிட சாஸ்திரத்தில் நவக்கிரகங்கள் ஒவ்வொன்றிற்கும் தனித்தனி தானியங்களும் மலர்களும் சொல்லப்பட்டிருக்கிறது

சூரியனுக்குக் கோதுமையும், செந்தாமரை பூவும்; 

சந்திரனுக்கு நெல்லும், வெண் அல்லியும்,

செவ்வாய்க்கு துவரையும், செண்பகப்பூவும்,

புதனுக்கு பச்சைப் பயிறும், வெண்காந்தல் பூவும்,

குருவுக்கு கொண்டைக் கடலையும், முல்லைப் பூவும்,

சுக்கிரனுக்கு மொச்சைப் பயிறும், வெண்தாமரையும்,

சனிக்கு எள்ளும், கருங்குவளையும்,

ராகுவிற்கு உளுந்தும், மந்தாரையும்,

கேதுவிற்கு கொள்ளும், செவ்வல்லியும் என்று சாஸ்திரங்கள் வகைப்படுத்தி தருகின்றன . 


நமது ஜாதகத்தில் எந்தக் கிரகத்தின் ஆகர்ஷணம் குறைவாக இருக்கிறதோ அந்தக் கிரகத்திற்குய தானியத்தை நெய்வேத்தியம் செய்து அதற்குரிய மலர்களால் பூஜை செய்து வழிபட்டால் நல்ல பலனைப் பெறலாம் என்றும் பொதுவாக சொல்லப்படுகிறது

ஆனால் இந்த தானியங்களையும் மலர்களையும் வேறொரு வழியிலும் பயன்படுத்தி குறிப்பிட்ட கிரகத்தின் நல்ல இயல்புகளை மனிதர்கள் பெறலாம்

உதாரணமாக ஒருவருக்கு குரு என்ற வியாழன் கிரகத்தின் நிலைப்பாடு ஜாதக ரீதியாக சரிவர அமைய வில்லை என்றால் அவர்கள் மா ஆல் அரசு ஆகிய மரங்களில் உள்ள சமித்துக்களில் ஹோம நெருப்பை வளர்த்து கொண்டை கடலையையும் உலர்ந்த முல்லை பூவையும் குரு அஷ்டோத்திர சத நாமாவளி சொல்லி ஆகுதியாக போட வேண்டும் 


 இப்படி மூன்று வியாழா கிழமை குரு ஓரையில் ஹோமம் செய்தால் குரு கிரகத்தின் முழு பலனையும் சம்பந்தப் பட்டவர்கள் அடையலாம்

இப்படியே ஒவ்வொரு கிரகத்திற்கும் அதற்குரிய நாளிலும் ஓரை நேரத்திலும் ஹோமம் செய்து பலனை அடையலாம்

இதற்கு சித்தர்கள் இன்னும் ரகசியமான வழிகளையும் சொல்கிறார்கள்

குறிப்பிட்ட தானியத்தை உணவில் அடிக்கடி சேர்த்து கொண்டாலும் மலர்களை உடலில் படும்படி அணிந்து கொண்டாலும் பலன் கிடைக்கும் என்கிறார்கள்

இப்படி செய்து பலன் பெற்ற பலரையும் நானறிவேன்

மேலும் இங்கே நான் சொன்ன ஹோமத்தை செய்ய தனியாக புரோகிதர்கள் தேவை இல்லை

சம்பந்தப் பட்டவர்களே தூய மனதோடு வீட்டிலேயே செய்யலாம்

நம்பிக்கையோடு செய்யுங்கள் நன்மை நிச்சயம் கிடைக்கும்


No comments:

Post a Comment