Thursday, November 24, 2011

ஸ்ரீரமண மகரிஷி



வைத்திய வசதி அதிகமில்லாத அந்த நாட்களில், கொடும் நோ யான ப்ளேக்கிலிருந்து தப்பிப்பது மிகக் கடினம். பகவான் ஸ்ரீரமண மகரிஷியின் அருகில் இருந்ததால், ராமநாத பிரம்மசாரி உயிர் பிழை த்தார்.
ஸ்ரீரமணர்,  மலையிலிருந்து கீழிற ங்கி ரமணாஸ்ரமத்தில் வசிக்கத் துவ ங்கியபோது, ராமநாத பிரம்ம சாரியும் தொடர்ந்து சேவை செய்ய லானார். ஆஸ்ரமத்துக்குப் புதிதாக வருபவர்களுக்கு, படுத்து க்கொள்ள ஓலைப் பாயும், தலையணையாக ஒரு கட்டையும் தருவார். தானே தக் ளியில் நூல் நூற்று, அந்த நூலைக் கொண்டு நெய்த வேட்டியை மகாத்மாகாந்திக்குப் பரிசாகக் கொடுத்துவிட்டு வந்தார்.
ரமணாஸ்ரமத்துக்கு அருகில் உள்ள உள்ள பலாக் கொத்தில் வெங்க டராமையா, விஸ்வநாத சுவாமி, குஞ்சு சுவாமி போன்ற வர்கள் குடில் அமைத்து வசித்தனர். இந்த இருப்பிடங்களைச் சுத் தம் செய்வது ராமநாதரே. இப்படி ஓடி யாடி சேவை செய்த ராம நாத பிரம்ம சாரிக்கு ‘பலாக் கொத்து சர்வாதிகாரி’ என்று பெயரிட்டா ர்கள். இது பகவான் வரை போய் அவராலும் அங்கீகரிக்கப் பட்டது.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாத சேவை க்கு, மிகப் பெரிய மரியாதை கிடைத் தது. ஒருநாள் ராமநாதன் உணவு எடுத் துக் கொள்ளாமல் இருக்க, விசாரித்த போது தந்தையார் திவசம் என்று பதில் வந்தது. ‘அப்படியா… கூட இரண்டு இட்லி அவனுக்குப் போடு’ என்று பகவான் உபசரித்தார். இதைக் கண்ட ராஜகோபாலன் என்பவர்,  ’இனி நானும் திவசம் செய்யப்போவதில்லை’ என்றார். இது பகவா னுக்குப் போயிற்று. ‘ராம நாதன், எல்லாம் விட்டு இங்கு வந்துவிட்டான். ராஜ கோபாலன் எதை விட்டார்?’ என்றார். இப் படி, ஸ்ரீ ரமணர்   போலவே எல்லாம் விட்டவர் என்று புகழப்பட்ட ராம நாதன் பிரம்மசாரி, 1942-ல் சென் னையில் உயிர்நீத்து பரம பதம் சேர்ந்தார். குருவின் அணுக்கத் தொண்டர்க ளுக்குப் பணி செய்து கிடப்பதே குருவுக்கான பூஜை என்று வாழ்ந்து காட்டிய ராமநாத பிரம்மசாரி, ஓர் அதிசயப் பிறவி. அவரை யோ சிக்க யோசிக்க, உத்தமராய் வாழ்வது எப்படி என்று விளங்கிவிடும்.
ஸ்ரீரமணரின்  இன்னொரு தொண்டர் மஸ்தான் சுவாமிகள். இஸ்லா மியர். வந்தவாசிக்கு அருகில் உள்ள தேசூரைச் சேர்ந்தவர். முற்பி றவி புண்ணியத்தால் இவரு க்கு அடிக்கடி சமாதி நிலை யில் ஆழ் ந்துவிடும் பாக்கி யம் இருந்தது. ஆனால் சிலர், இதைப் புரிந்து கொள்ளவி ல்லை. பகவானின் மற்றொ ரு அணுக்கத் தொண்டரான அகிலாண்டம் அம்மையார், அவரின் நிலை தெரிந்து திரு வண்ணா மலைக்கு அழை த்து வந்தார். மஸ்தான் சுவாமிகள், முதன் முதலாய் பகவானைப் பார்த்தபோது, பகவான் அசையாது சிலை போல வீற்றிருந்தார். அவரது கண்கள் கருணை மழை பொழிந்தன. கணநேரம் எதிரே நின்ற மஸ்தானை அவை தொட்டுவிட்டு அகன்றன. மஸ்தானின் மனதுள் மாற்றம் உண்டாயிற்று. சுமார் எட்டு மணி நேரம் நின்ற நிலையிலேயே அசைவற்று ஆழ்ந்த நிலைக்குச் சென்றார். பகவானிடம் வருகிற அன்பர்களில் சிலரே, மிகப் பக்குவ நிலை யில் இருப்பார்கள். முதல் சந்திப்பிலேயே, முதல் பார்வை யிலேயே, மேலும் கனிந்து, தானே நழுவி விழும் பழத்தைப் போலிருப்பார்கள். மஸ் தான், இத்தகைய நிலையைச் சேர்ந் தவர் என்று பகவான் ஸ்ரீரமண ரே  கூறியிருக்கிறார். விரு பாக்ஷி குகைக்கு வந்து, குகை நெருங்கும் போதே ஆழ்நிலைக்குப் போய்விடு வார் மஸ்தான். தன் நிலை பற்றிப் பேசுவதோ, பிறருக்கு நடுவே பிரப லமாக வேண்டும் என்ற ஆசையோ இல்லாதிருப்பார். எந்த நிகழ்ச் சியிலும் பின்னணியிலே யே இருப்பார். தேசுரம்மா, பகவானுக்கு உணவளிக்க மளிகைப் பொருட்கள், பாத்திரங்கள் போன்றவற் றைக் கொண்டுவர, அதைத் தலையில் சுமந்து வருவதை, மஸ் தான் பெரும் பேறாகக் கருதி னார்.
கீரிப்பிள்ளை ஒன்று, ஆஸ்ரமத்தில் முன்னும் பின்னும் ஓடி, அவ் வப்போது பகவான் மடியில் அமர் ந்து  கொள்ளும்.  ஆஸ்ரமத்து மயி ல்களை அது குதறிவிடப் போகி றதே என்று மஸ்தான் அதை விரட்ட, ஒரு கைத் தடியை வைத் திருந்தார். அதைப் பிடித்துக் கட்டி விட்டால் அதுவும் ஆஸ்ரமத்து செல்லப் பிள்ளையாகிவிடும் என்று ஒருவர் சொல்ல, ‘அதைக் கட்ட முடியாது. அது சித்த புருஷர். இங்கு தரிசனம் செய்ய பல சித்தர்கள் பல வடிவில் வருவார்கள். உங்களுக்குப் புரியவில்லை’ என்றார் பகவான். ஒருமுறை மஸ் தான், அன்பர்களுடன் யாசகத்துக்குச் சென்று உணவு வாங்கி வந்தார். அதில் ஒரு அவித்த முட்டையும் இருந்தது. சகலரும் திடுக்கிட்டு நிற்க, பகவான் அந்த முட்டையை வீசியெறிந்து விட்டு, உணவை சகலருக் கும் பகிர்ந்தளித்து,  தானும் உண்டார். ஆச்சாரக் கூச்சல் இல்லாது, உயர்ந்த ஒரு மன ப்பக்குவத்தை தன் அன்பர்க ளுக்கு பகவான் அறிவுறுத்தி னார்.
மலையடிவாரத்தில் ரமணா ஸ்ரமம் ஏற்பட்டபிறகு, ஒருநாள் கள்வர் புகுந்து, ‘எல்லா காசையும் எடு. ஏகப்பட்ட கூட்டம் வரு கிறதே,  அவர்கள் தருவதை எங்கே வைத்திருக்கிறீர்கள்’ என்று தடி கொண்டு மிரட்ட, பகவான்… ‘எங்களிடம் ஏதுமில்லை’ என்று சொ ல்ல, அவர்கள் நம்பாமல் அடிக்கத் துவங்கினார்கள். ஸ்ரீரமணருக்கும் தொடை யில்  இரண்டு அடிகள் வி ழு ந்தன. மஸ்தான் சுவாமி கள் உடனே வெகுண்டு தடி யோடு எழ, பகவான் அவ ரை அடக் கினார். ‘நாம் சாதுக்கள். எதிரே வன்மு றை நடந்தாலும், அதை மௌனமாக ஏற்க வேண்டுமே ஒழிய, பதிலுக்கு வன்முறை கூடாது’ என்று அறிவுறுத்த, சட்டெ ன்று மஸ்தான் அட ங்கினார். இது பகவானின் அன்பர்களுக்குத் தரப்பட்ட மிகப் பெரிய பாடம். நான் என்கிற அகங்காரம், முற்றிலும் அழியாது உள்ளே பதுங்கி, திடீரென்று வெளிக் கிளம்பி, இதுவ ரை கடைப்பிடித்து வந்த உயர் நிலை அமைதியைக் குலைத்துக் குப்புறத் தள்ளும். எனவே எது நேரி டினும் அமைதியாக இருப்பது என்ப தைக் கடைபி டிக்க வேண்டும் என்கி ற பாடம்.
அகிலாண்டம்மாளும் மஸ்தான் சுவா மியும் தேசூரில் ரமண மடா லயம் ஏற்படுத்தினார்கள். இதுதான் பகவான் பெயரில், உலகில் தோன் றிய முதல் மையம். ‘ஆஹா… ரமண மடாலயம் வந்து விட்டது. இனி என் பேரும் புகழும் பிரபல மாகப் போகிறது’ என்று பகவான் வேடிக்கையாகக் கூறினார். தேசூரைச் சுற்றியுள்ள பலரும் பகவா னைப் பற்றி அறிய, மஸ்தான் சுவாமியிடம் வந்து பேசு வார்கள். தலை மழித்து, துறவு உடை அணிந்து, அமைதியே உருவாக இருக்கும் மஸ்தான் சுவாமி, தேசூர் விட்டு, மடம் எனும் கிராம த்தில் வாசம் செய்தார்.
உடல் நலம் குன்றி, 1938-ஆம் வருடம் நவம்பர் 8-ஆம் தேதி தீபாவளி நன்னாளில் தேகம் நீத்தார். இவர் மறைவு பகவானிடம் சொல்லப்பட்டது. குஞ்சு சுவாமிகளை பகவான் அழைத்து, மடம் கிராமத்துக்குச் சென்று சமாதி அமைக்கும்படி கூறினார். அதற்கான திருநீறு, கற்பூரம் போன்ற பொருட்கள், சமாதிக் குழியில் இடுவத ற்காக தன் கையாலேயே தந்து, எவ்வாறு சமாதி அமைக்க வேண்டும் என்பதையும் விளக்கினார். பகவான் தம் அன்னை அழகம்மை, பசு லட்சுமி, மஸ்தான் சுவாமி மூவருக்கும் சமாதி க்கான பொருட்கள் தந்து சிறப்பித்தார். ஓர் இஸ்லாமியர், பகவா னிடம் முழுமையாய் சரண டைந்ததும் பகவான் அவரை நேசித் ததும் உயர்வானவை. மதம் தாண்டிய நேசத்தில் பகவானும் அவரது அன்பர்களும் திளைத் திருந்தார்கள் என்பது மஸ்தான் வாழ்வின் மூலம் தெரிகிறது.
விருபாக்ஷி குகையில் பகவான் இருக்கும் போது, அவருடைய அன்னை அழகம்மை அடிக்கடி வருவார். இரவு கீழிறங்கி அன்பர் கள் வீட்டில் தங்குவார். இதைக் கண்ட பகவானின் தொண்டர்கள் சிலர், தாயாருடன் பகவான் இங்கிருந்து வேறிடம் போய் விடுவார் என்று பயந்தனர். தாயார் ஆயினும் பெண்கள் எவரும் விருபாக்ஷி குகையில் தங்கக் கூடாது என்று கட்டளையிட்டனர். சிலர், குரு வின் மௌனத்தைத் தவறாகப் புரிந்து கொண்டு, தான் அதிகம் அறிந்தவனாகக் கற்பனையில் ஈடுபட்டு, நெஞ்சு நிமிர்த்தி விதி முறைகள் பேசத் துவங்கினார்கள்.  எதிலும் பிறழாதவர்களாகக் கம்பீரம் காட்டுவார்கள். ஆண் உயர்வு, பெண் தாழ்வு என்று அல ட்டுவார்கள். சத்தியத்தின் ஒளி உள்ளே இருப்பின் இப்படி அற்ப மான பேச்சுக்கள் எழாது. ‘ஏன் பெண்கள் வேண்டாம்னு சொல் றேன்னா…’ காரணங்கள் கூடிக் கொண்டே போயின.
‘அம்மா அவ ர்கள் இங்கு இரு க்கட்டும். நாம் வேறு இடம் போ வோம்.’ ஒரே வீச்சில் ஸ்ரீரமணர், அவர்களை துடைத்தெறி ந்தார். கிளம்பத் தயாரானார். பேசிய கூட்டம் இருட்டாயிற்று. சூரியன் நகர் ந்துவிட்டால் உலகம் ஏது? காலில் விழுந்து மன்னிப்புக் கேட்ட னர். சரி. ஒரே வார்த்தையில் அந்த சாந்த சொரூபி தன்னிருப்பிடம் திரும்பினார். மறுபடி பிரச்னை வந்த து.  கணபதி முனிவரின் வீட் டுப் பெண் கள் விருபாக்ஷி குகையில் தங்க விரும்ப, எதிர்ப்பு கிளம் பியது. கணபதி முனி கோபமானவர். ‘இன்று இரவு என்ன நடக்கும் தெரியுமா?’ என்று சீறினார். இரவு பலத்த மழை, இடி மின்னல் காற்று. இடி, கோயில் தேரில் இறங்கி தீக்கி ரையாயிற்று. விதிமு றைப் போர் வையை மூடிக் கொண்டனர். ஆனாலும், பெண்கள் தங்க வசதி வேண்டுமே!
 கந்தசாமி, பகவான் தொண்டர். மலை யில் அலைந்து இடம் கண்டு பிடித்தார். பகவானிடம் காட்டினார். நீர் கசியும் பாறையைப் பார்த்துவிட்டு பகவானும் ஒப்புதல் தந்தார். கள்ளிக்காரைச் செடி களை ஒருவராகவே அப்புறப்படுத்தி, மலை யிலிருந்து உருண்டு விழுந்த பாறைக்கற்களை அடுக்கி அழகாய் ஒரு ஹால் இரண்டு அறைகள் என்று இருப்பிடத்தை உருவா க்கினார். கந்தசாமி, தொழி ல்முறைக் கொத்தனார். ஆனால், சகல மும் விட்டுவிட்டு பக வானிடம் சரணடைந்திருந்தார். அவருடைய தொழிற்திறன் இப் போது ஒரு நல்ல கட்டடத்தை மலையில் உருவாக்க உதவியது. அவர் ஒருவராகவே இரவு பகல் பாராது கடினமாக உழைத்துக் கட்டிய இடம் இது என்று பகவான் சொல்லிச் சொல்லிப் பூரிப்பா ராம். அந்தக் கட்டடம், கந்தசாமியின் பெயரால் கந்தாஸ்ரமம் என்று வழங்கலா யிற்று. குருவுக்காக உழைத்த வர்கள் பெயர், பொன்னெழுத்தில் பொறிக்கப்படும். இன்று வரை அந்த இடம் கந்தாஸ்ரமம்தான். ராமநாத பிரம்மசாரி, மஸ்தான் சுவாமி, கந்த  சாமி போன்ற தொண்டர்கள் வாழ்வு பார்க்கும் போது, அது மிகப் பெரிய படிப்பினையாகிறது. சரணாகதி என்பதற்கு இவர்கள் சாட்சி களாய் இருக்கிறார்கள். குரு, இவர்களை நல்ல கதிக்கு இட்டுச் செல்கிறார்.
ஸ்ரீரமணரின் சரித்திரம் சொல்லும்போது, குஞ்சு சுவாமிகளைச் சொல்லாது இருக்க முடியாது. அது தங்கத்தில் செய்த இன்னு மொரு பெயர்.

No comments:

Post a Comment