|
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||
பாடியவர்கள்: | ||
- | ||
திருவிழா: | ||
காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து அபிஷேக ஆராதனை, சிறப்பு வழிபாடு நடக்கிறது.மாதந்தோறும் வளர்பிறை, தேய்பிறை, சதுர்த்தி நாளில் கணபதி யாக¬ம், சிறப்பு அபிஷேக ஆராதனையும் நடக்கிறது. ஆவணியில் சதுர்த்தி விழா பத்து நாள் நடக்கிறது. இதில் மூன்றாம் நாள் திருக்கல்யாண வைபவ¬ம், 10ம் நாள் புஷ்ப பல்லக்கு ஊர்வல¬ம், விழா நடைபெறும் நாளில் சிறப்பு ஆன்மிக சொற்பொழிவுகளும் நடக்கிறது. விழாவில் ¬முதல் நாளான சதுர்த்தியன்று ராஜகணபதிக்கு தங்க கவசம் சாத்துபடியும், 8ம் நாள் ¬முத்தங்கி சேவையும் மிக சிறப்பாகும். | ||
தல சிறப்பு: | ||
இவர் தினமும் ராஜ அலங்காரத்தில் தரிசனம் தருவதால் "ராஜ கணபதி' என அழைக்கப்படுகிறார். | ||
திறக்கும் நேரம்: |
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். | ||
முகவரி: | ||
அருள்மிகு ராஜகணபதி திருக்கோயில், சேலம்,சேலம் மாவட்டம். | ||
போன்: | ||
- | ||
பொது தகவல்: | ||
சுகவனேஸ்வரர் திருக்கோயில் இத்தலத்தின் மிக அருகில் அமைந்துள்ளது.
| ||
பிரார்த்தனை | ||
ராஜகணபதியை வழிபடும் பக்தர்களுக்கு மக்கள் செல்வம் கிடைக்கும். பொருட் செல்வம் சேரும். தீராத நோய் தீரும். திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். | ||
நேர்த்திக்கடன்: | ||
சுவாமிக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம். | ||
தலபெருமை: | ||
சேலம் வரும் பக்தர்கள் அனைவரும் ராஜகணபதியை தரிசித்து செல்வர். தேவர்கள் பெருமானை அரச மர வடிவத்தில் வழிபட்டது, தேவர்களின் பாவங்களை போக்கியது, சேரமானுக்கும் ஆதிசேடனுக்கும் தாண்டவ தரிசனம் காட்டியது, துன்மார்க்கத்தில் ஒழுகிய சரஸ்வதிக்கு சிவலோகம் கிடைத்தது, கலிங்கத்து மன்னன் ஹேமாங்கதனுக்கு மீண்டும் ராஜ்யத்தை பெறும்படி பெருமான் அருள் செய்த தலம் என போற்றப்பட்ட சுகவனேஸ்வரர் தலப்பெருமைகள் ராஜகணபதிக்கும் உள்ளதால் இத்தலம் பக்தர்கள் மத்தியில் வெகு பிரசித்தம்
| ||
தல வரலாறு: | ||
400 ஆண்டுகளுக்கு ¬முன் ஸ்தாபனம் செய்யப்பட்டது சேலம் ராஜகணபதி கோவில். கலியுக கண் கண்ட தெய்வமாக ராஜகணபதி விளங்கியதால் மன்னர் காலத்தில் சிறப்பு பெற்றது. இத்தலம் காடுகளும், மலைகளும் நிறைந்த பகுதியாக இருந்ததால் "சைலதேசம்' என பெயர் பெற்றது.
| ||
| ||||||||||||
No comments:
Post a Comment