Thursday, September 8, 2011


அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில்
[Image1]


மூலவர்:தண்டாயுதபாணி
உற்சவர்:சண்முகர்
அம்மன்/தாயார்:-
தல விருட்சம்:பொன்அரளி
தீர்த்தம்:குமரதீர்த்தம்
ஆகமம்/பூஜை:காரண ஆகமம், காமீக ஆகமம்
பழமை:500-1000 வருடங்களுக்கு முன்
புராண பெயர்:-
ஊர்:குமரகிரி
மாவட்டம்:சேலம்
மாநிலம்:தமிழ்நாடு
பாடியவர்கள்:
-
 திருவிழா:
கந்த சஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம்.
 தல சிறப்பு:
இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில், குமரகிரி, சேலம் மாவட்டம்.
போன்:
+91- 427 - 240 064.
 பொது தகவல்:
இங்கு முருகனுக்கு நைவேத்யமாக சுத்தான்னம், மாம்பழம் படைத்து வழிபடுகின்றனர். இத்தலம், தியானம் செய்வதற்கு ஏற்ற அமைதியான தலமாக திகழ்கிறது. பிரகாரத்தில் துர்க்கை, நவக்கிரகம், ஐயப்பன் சன்னதிகள் உள்ளது.
பிரார்த்தனை
தண்டாயுதபாணிக்கு மாம்பழம் படைத்து வணங்கிட புத்திரபாக்கியம் கிட்டும், தடைபட்ட திருமணங்கள் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நேர்த்திக்கடன்:
பால்குடம், காவடி எடுத்தல், முடி இறக்குதல், சேவல்காணிக்கை செலுத்துதல் என நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.
 தலபெருமை:
விபத்திற்கு பூஜை: இங்கு ஒரு வினோதமான அர்ச்சனை முறை உள்ளது. விபத்தில் காயம்பட்டவர் மற்றும் அவசரசிகிச்சை பெறுபவர்களுக்காக அவர்களின் உறவினர்கள் தண்டபாணிக்கு "திரிசதை அர்ச்சனை' செய்து பூஜை செய்கின்றனர். இக்கோயிலில் கிடைக்கும் விரிச்சி பூவில் பன்னீர், சந்தனம் கலந்து இந்த அர்ச்சனை செய்கின்றனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமடைவதாகவும், இவரை வணங்கிச்சென்றால் விபத்துக்களில் சிக்காமல் தப்பிக்கலாம் என்றும் நம்புகின்றனர். எனவே, இங்கு வாகனம் வைத்திருப்போர் அதிகளவில் இந்த அர்ச்சனை செய்கின்றனர்.
சிறப்பம்சம்: குமரன் குடியிருந்த கிரி என்பதால், "குமரகிரி' எனப்படும் இத்தலத்தில், கையில் தண்டத்துடன் குபேர திசையை (வடக்கு) நோக்கியபடி தண்டபாணி அருளுகிறார். எனவே, இவரை வணங்கிட செல்வம் செழிக்கும். படிபூஜை செய்தால் ஆயுள் நீளும் என்பது நம்பிக்கை.
  தல வரலாறு:
நாரதர் கொடுத்த மாங்கனியை தனக்குத் தரவேண்டுமென கேட்டு, பெற்றோரிடம் கோபித்த முருகன் மயில் வாகனத்தில் பழநி சென்றார்.
தண்டாயுதபாணியாக சென்ற அவர் வழியில் இக்குன்றில் சிறிதுநேரம் தங்கிவிட்டு சென்றார்.  பிற்காலத்தில், பழநிக்கு சென்ற பக்தர் ஒருவர் இந்த குன்றில் சற்றுநேரம் களைப்பாறினார். அப்போது, "தண்டாயுதபாணியான நான் இவ்விடத்தில் குடியிருக்கிறேன்' என அசரீரி ஒலித்தது. அதைக்கேட்ட பக்தர் ஒன்றும் புரியாமல் பழநிக்கு சென்றார்.
பழநியில் அடியார் வேடத்தில் வந்த முருகன், பக்தரிடம் ஒரு திருவோட்டைக் கொடுத்து, அசரீரி ஒலித்த இடத்தில் கோயில் கட்டும்படி கூறினார். அத்திருவோட்டில் கிடைத்த பணத்தின் மூலம் அப்பக்தர், இவ்விடத்தில் கோயில் கட்டினார். மாம்பழத்திற்காக கோபம் கொண்டு சென்ற தண்டபாணி தங்கிய இடமென்பதால் இங்குபிரதானமாக மாம்பழ நைவேத்யம் படைத்து வணங்கப்படுகிறது. இவ்வாறு, வணங்குவதால் முருகன் நாம் வேண்டும் வரங்களை தருவார் என்பது நம்பிக்கை.  இவரது, அருளால்தான் சேலம் பகுதி மாம்பழ உற்பத்தியில் சிறந்து விளங்குவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. எனவே பக்தர்கள் இவரை, "மாம்பழ முருகன்' என்றும் அழைக்கிறார்கள்.
























No comments:

Post a Comment