Posted By Muthukumar.On Feb 16,2015
விரத பலன்;
ஒரு வீட்டில் கணவன் விரதமிருந்து வழிபட்டால் கணவனுக்கு மட்டுமே பலன் கிடைக்கும். ஆனால் மனைவி விரதமிருந்து வழிபட்டால் மனைவிக்கு மட்டுமல்லாமல் கணவனுக்கும், குழந்தைக்கும் கூட நற்பலன்கள் கிடைக்கிறது.
குடும்ப பாதிப்பு, கஷ்டங்கள்; தினமும் வீட்டில் [அல்லது] உள்ளூர் பெருமாள் கோவிலில் உள்ள ஸ்ரீ லட்சுமி நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபட பாதிப்பு நீங்கும்.
. மாணவர்களைப் பள்ளியில் சேர்க்க; அஷ்டமி, நவமி, கரிநாள், ராகு காலம், எமகண்டம் தவிர்த்து, புதன், வியாழக்கிழமைகளில் அமிர்த யோகம், சித்தயோகக் காலத்தில் மாணவர்களை பள்ளியில் சேர்ப்பது எதிர்காலக் கல்விக்கு நல்லது.
வீட்டில் குடும்பத்திலுள்ளவர்களில் யாருக்காவது அறுவை சிகிச்சை நடைபெற்றால் வீட்டின் பூஜை அறையில் நெய் தீபம் விளகேற்றி வெள்ளை சிகப்பு அரளிப்பூ போட்டு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து தம்பதியரின் பெயர், ஜெனம நட்சத்திரத்திற்கு அர்ச்சனை செய்தால் தம்பதியர் இருவரும் ஒற்றுமையாக அன்னியோன்னிய நேசத்துடன் விளங்குவார்கள் என்று சொல்லப்படுகிறது.
நிரந்தர நல்ல வேலை கிடைக்க செவ்வாய்க்கு அதிபதி முருகனை நம்பிக்கையுடன் தினமும் வழிபட்டு வந்தால் 3 மாதத்திற்குள் வேலை கிடைக்கும்.
திருமணம் தாமதமாகி களத்திர தோசத்திற்குள்ளான பெணகள் செவ்வாய்க்கிழமை மாலை 3.00 மணி முதல் 4.30. மணி ராகு காலத்தில் துர்க்கை அம்மன் சன்னதியில் எலுமிச்சம் பழ விளக்கு ஏற்றுவதோடு நவகிரகங்களை ஒனபது முறை சுற்றினால் திருமணம் விரைவில் நடைபெறும்.
வியாபாரிகள் தங்களது கடைக்கு நல்லவர், கெட்டவர் வந்து போவதால் திருஷ்டியைப் போக்க இரவில் கடையை மூடும் பொழுது சூடம் ஏற்ற வேண்டும். எலுமிச்சம் பழம் வெட்டி குங்கும்ம் தோய்த்து கடையச்சுற்றி கடையின் நான்கு திசைகளிலும் போட்டால் வியாபாரம் நன்கு விருத்தியாகும்.
ஆறு தேய்பிறை அஷ்டமிகளில் சிவன் கோவிலில் உள்ள பைரவருக்கு சிவப்பு அரளி மலர்களால் அர்ச்சனை செய்து வந்தால் குழந்தை பாக்கியம் கைகூடும்.
ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு காலத்தில் [4.30 மணி முதல் 6 மணி வரை] உள்ளூர் ஆலயத்திலுள்ள கால பைரவருக்கு செவ்வரளி மாலை, நெய் தீபம் 27 வாரம் ஏற்றி வர திருமணம் நடக்கும். 48 வது வாரம் நெய் தீபம் ஏற்ற எதிரி தவிடுபொடி, பில்லி, சூன்யம், சனி, நாக தோசம் மரண பயம் நீங்கும். காயத்ரி சொல்லி வழிபடுவது சிறப்பு தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு மிகச்சிறப்பு.
திரிசூலத்தில் குங்குமம் இட்டு எலுமிச்சையை சொருகினால் திருஷ்டி செய்வினை நீங்கும்.
விநாயகருக்கும், சனிபகவானுக்கும் மிகவும் பிரியமான மரம் வன்னி மரம். வன்னிமரத்தின் கீழ் உள்ள விநாயகரை வழிபடுவதால் சனி, ராகு, கேது, தெசாபுத்தி பாதிப்பு, ஆயுள் விருத்தி, நினைத்த காரியம் நிறைவேறல், பொன்பொருள் சேர்க்கை ஏற்றமான வாழ்வு அமையும்.
ஸ்ரீ மந்நாராயண்னின் அம்சமாகப் போற்றபடுவது அரச மரம். அரச மரத்தின் வேரில் பிரம்மாவும் மத்தியில் விஷ்ணுவும், மேல்பகுதியில் சிவனும் குடி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. மற்ற அனைத்து தெய்வங்களும், உப தேவதைகளும் அரச மரத்தின் பழங்களில் வாழ்வுதாயும் புராணங்களில் கூறப்படுகிறது.
திங்கடகிழமையும், அமாவாசயும் சேர்ந்து வரும் நாட்களில் அரச மரத்தை 108 முறை பிரதட்சணம் செய்வது மகா புண்ணியம் தரும். நீண்ட ஆயுள், பிள்ளைப்பேறு, நோயிலிருந்து நிவாரணம், வைகுண்ட பிராப்தி இவை கண்டிப்பாகக் கிட்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது.
புத்ர தோசத்திற்கு சக்தியுள்ள பரிகாரம்; வியாழக்கிழமைகளில் ஒரு வேளை உபவாசமும் மாலையில் திருக்கோவிலிலுள்ள தட்சணாமூர்த்திக்கு நெய் தீபமும் தொடர்ந்து ஏற்றிவர விரதம் ஏற்ற 192 நாட்களில் கருத்தரிப்பு ஏற்படும். மாதவிடாய் சமயத்தில் இந்த விரதத்தை அனுஷ்டிக்காமல் வேறு யார் மூலமாவது நெய் தீபம் ஏற்றி வர வேண்டும், நம்பிக்கை அவசியம்.
தடைப்பட்ட திருமணம் நடைபெற
ஒவ்வொரு தமிழ் மாதம் துவங்கும்போதும் உத்திரம் நட்சத்திரம் வரும் வளர்பிறை நாளில் சிவன் கோயில் சென்று சிவபெருமானுக்கு வில்வ மாலை சார்த்தி அபிசேகம் செய்து வழிபட வேண்டும்..பிரதோச நாளில் நந்திபகவானுக்கு பால்,தயிர் வாங்கி அபிசேகத்துக்கு கொடுக்க வேண்டும்.விரைவில் திருமணம் நடைபெறும்..!!
|
Showing posts with label வழிபாடு. Show all posts
Showing posts with label வழிபாடு. Show all posts
Monday, February 16, 2015
திருமணம் நடைபெற பரிகாரங்கள்,விரதம்,வழிபாடு
Sunday, July 29, 2012
நமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்!!!
Posted On July 29,2012,By Muthukumar
நமது ஏக்கங்களைத் தீர்க்கும் பைரவர் வழிபாடுகள்!!!
பைரவ வழிபாடு செய்ய முடிவெடுத்துவிட்டால்,அசைவம் சாப்பிடுவதை அடியோடு
நிறுத்த வேண்டும்;மேலும் எந்த நோக்கத்துக்காக வழிபாடு செய்கிறோம் என்பதை எவரிடமும்
சொல்லாமலிப்பதும் அவசியம் ஆகும்.சொன்னால் அந்த வழிபாட்டு முறையை தொடர்ந்து செய்ய முடியாமல்
போய்விடும்.அந்த அளவுக்கு பொறாமை இன்று தமிழ்நாடெங்கும் பரவியிருக்கிறது.குடும்பத்தோடு
அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால்,100% பலன்கள் விரைவாக கிடைக்கும்.யார் வழிபாடு
செய்கிறார்களோ,அவர் மட்டும் அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் 60% பலன்களே கிடைக்கும்.
நமது குழந்தையின் படிப்பில் மந்தத்தன்மை நீங்கிட: புதன் கிழமை அன்று
காலை 6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 முதல்
9 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்துக்கு பின்வரும் பொருட்களோடு செல்ல
வேண்டும்;
1.மரிக்கொழுந்து மாலை(வேறு எந்த பூவும் இருக்கக் கூடாது)
2.புனுகு
3.பாசிப்பருப்பு கலந்த சாதம்(வீட்டில் சமைத்திருக்க வேண்டும்)
4.பாசிப்பருப்பு கலந்த பாயாசம்
இவைகளில் பூசாரியிடம் மரிக்கொழுந்து மாலையை பைரவருக்கு அணியச் சொல்லி,கொடுக்க
வேண்டும்.நாம் கொண்டு வந்திருக்கும் பாத்திரத்தை பைரவரின் சன்னதியில் வைக்க வேண்டும்.(இவைகளில்
பாசிப்பருப்பு சாதமும்,பாசிப்பருப்பு பாயாசமும் தனித்தனி பாத்திரங்களில் இருக்க வேண்டும்)நமது
(படிப்பு சுமாராக இருக்கும்) குழந்தையின் பெயரில் அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு,அங்கு
வந்திருக்கும் பக்தர்களுக்கு இந்த சாதத்தையும்,பாயாசத்தையும் பாதி விநியோகிக்க வேண்டும்;மீதியை
நமது வீட்டுக்கு எடுத்துச் சென்று,நமது குழந்தைக்குத் தர வேண்டும்.நாமும் சாப்பிடலாம்.
வழக்குகளில் வெற்றி பெற: சனிப்பிரதோஷம் வரும் நாட்களில் பிரதோஷ நேரத்திற்குள்
தயிர்ச்சாதம் நமது வீட்டில் தயார் செய்து அருகில் இருக்கும் சிவாலயத்திற்குக் கொண்டு
செல்ல வேண்டும்.சனிப்பிரதோஷம் முடிந்ததும் (மாலை 6 மணி முதல் 7 மணிக்குள்) அங்கிருக்கும்
காலபைரவருக்கு தயிர்ச்சாதத்தை படைக்க வேண்டும்;பிறகு நம்முடைய பெயருக்கு(யாருக்கு வழக்கு
இருக்கிறதோ அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்.பிறகு அவருடைய சன்னதியில் பைரவர்
108 போற்றியை வடக்கு நோக்கி அமர்ந்து(தரையில் தான்) மனதுக்குள் ஜபிக்க வேண்டும்.பிறகு,அங்கே
வந்திருக்கும் பக்தர்களுக்கு தயிர்ச்சாதத்தை விநியோகிக்க வேண்டும்.
கணவன் மனைவி பிரச்னைகள் தீர: புதன் கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை காலை
6 முதல் 7 மணிக்குள் அல்லது மதியம் 1 மணி முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 மணி முதல்
9 மணிக்குள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.இந்த இரண்டு கிழமைகளும் செய்யக் கூடாது.ஏதாவது
ஒரு கிழமையைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு, 8 வாரங்கள் இந்த வழிபாட்டைச் செய்ய வேண்டும்.
நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில் உள்ள காலபைரவருக்கு வில்வமாலை அணிவிக்க
வேண்டும்.நமது பெயர் மற்றும் நமது வாழ்க்கைத்துணை(கணவன் எனில் மனைவி, மனைவி எனில் கணவன்)பெயருக்கு
அர்ச்சனை செய்ய வேண்டும்;அர்ச்சனை செய்தபின்னர்,பைரவர் 108 போற்றி அல்லது பைரவர்
1008 போற்றியை அவரது சன்னதியில் அமர்ந்து கொண்டு ஜபிக்க வேண்டும்.(வாய்விட்டுச் சொல்லக்கூடாது)
ஸர்ப்ப தோஷம் விலக: ஒருவருடைய பிறந்த ஜாதகத்தில் லக்னம் அல்லது 2 ஆம்
இடத்தில் ராகு அல்லது கேது நின்றால் அது ஸர்ப்ப
தோஷம் ஆகும்.வெள்ளிக்கிழமை காலை 10.30 முதல் 12 மணிக்குள் நமது ஊரில் இருக்கும் சிவாலயத்தில்
கால பைரவருக்கு பாலபிஷேகம் செய்ய வேண்டும்;புனுகு பூச வேண்டும்;நாகலிங்கப்பூமாலை அவருக்கு
சார்த்த வேண்டும்;பால் பாயாசம்,பால் சாதம் இவைகளை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும்.நமது
பெயருக்கு(யாருக்கு ஸர்ப்ப தோஷம் இருக்கிறதோ,அவர் பெயருக்கு) அர்ச்சனை செய்ய வேண்டும்;அதன்பிறகு,கால
பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து கொண்டு காலபைரவர் 108 போற்றி அல்லது காலபைரவர்
1008 போற்றி அல்லது காலபைரவர் அஷ்டோத்திரத்தை மனதுக்குள் ஒருமுறை ஜபிக்க வேண்டும்.பிறகு
நேராக நமது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இப்படி தொடர்ந்து 8 வெள்ளிக்கிழமைகளுக்கு வழிபாடு
செய்ய வேண்டும்.
லக்னம் அல்லது இரண்டாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்து ராகு மஹாதிசை
அல்லது கேது மஹாதிசை வந்தால்,அந்த திசை முழுவதும் வாரம் தவறாமல் இந்த வழிபாட்டைச் செய்து
வர வேண்டும்.இந்த திசை முழுவதுமே அசைவம்,மது,போதைப்பொருட்களை கைவிட வேண்டும்.அவ்வாறு
கைவிட்டு இந்த வழிபாட்டைச் செய்து வந்தால்,ராகு மற்றும் கேதுவால் ஏற்பட இருக்கும் அவமானங்கள்
படிப்படியாக விலகிவிடும்.நிம்மதியும்,சிறந்த வாழ்க்கைத்துணையும் அமைந்துவிடும் என்பது
அனுபவ உண்மை ஆகும்.
மனதுக்குப்பிடித்த வாழ்க்கைத் துணை அமையவும்; திருமணத்தடை அகலவும்: வெள்ளிக்கிழமை
ராகு கால நேரமான காலை 10.30 முதல் 12 மணிக்குள் கால பைரவருக்கு சந்தனக்காப்பு பூச ஏற்பாடு
செய்ய வேண்டும்;புனுகு பூசச் செய்து,தாமரை மலரை அணிவிக்க வேண்டும்;அவல் கேசரி,பானகம்,சர்க்கரைப்பொங்கல்
இவைகளை படையலாக்க வேண்டும்;படைத்து நமது பெயருக்கு அர்ச்சனை செய்து வர வேண்டும்.
மேலும் ஞாயிறு தோறும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் காலபைரவருக்கு
சந்தனக்காப்பு பூச வைத்து,நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்.இவ்வாறு தொடர்ந்து
8 வெள்ளிக்கிழமைகளுக்கும்,8 ஞாயிற்றுக்கிழமைகளுக்கும் வழிபாடு செய்து வர எப்பேர்ப்பட்ட
திருமணத்தடையாக இருந்தாலும் அது நீங்கிவிடும்.
Monday, April 16, 2012
சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு
POsted On April 17,2012,By Muthukumar
இயற்கைச்சீற்றங்களை நிறுத்தவும்,நமது கர்மவினைகள் தீரவும் திரு.சிவமாரியப்பன் அவர்கள் தலைமையில் சதுரகிரியில் சித்ரா பவுர்ணமி வழிபாடு
இந்த
நந்தன ஆண்டில்5.5.2012 சனிக்கிழமை காலை 8.12 வரையிலும் சித்திரை
நட்சத்திரமும்,அதன்பிறகு சுவாதி நட்சத்திரம் மறுநாள் 6.5.2012 ஞாயிறு காலை
6.35 வரையிலும் இருக்கிறது.(பவுர்ணமியானது 5.5.2012 சனிக்கிழமை மதியம்
12.25க்கு ஆரம்பித்து,6.5.2012 ஞாயிற்றுக்கிழமை காலை 10.01 வரையிலும்
இருக்கிறது)சித்திரை மாதம் வரும் பவுர்ணமி எப்போதும் சித்திரை
நட்சத்திரத்தில் தான் உதயமாகும்.அபூர்வமாக பவுர்ணமியானது இரண்டு
நட்சத்திரங்களில் வரும்;அப்படி வரும் நாள் சுமார் 15 ஆண்டுகளுக்குப் பிறகு
இந்த வருடத்தில் அமைந்திருக்கிறது.
அப்படி
உதயமாகும்போது பின்வரும் வழிபாட்டுமுறையைப்பின்பற்றினால்,நமது கர்மவினைகள்
அடியோடு நீங்கிவிடும்;குழந்தைப்பேறின்மையால் ஏக்கமடைபவர்களின் துயரம்
நீங்கும்;பிரிந்திருக்கும் தம்பதியினர் ஒன்று
சேர்ந்துவிடுவர்;(அவர்களுக்கிடையே இருக்கும் எப்பேர்ப்பட்ட பிணக்கும்
தீர்ந்துவிடும்);பெண்ணுக்கு ஆணால் ஏற்பட இருக்கும் அவமானங்களும்;ஆணுக்கு
பெண்ணால் ஏற்பட இருக்கும் பிரச்னைகளும் தீர்ந்துவிடும்.மேலும் இந்த
நந்தனவருடத்தில் வர இருக்கும் இயற்கைச் சீற்றங்கள் இந்த வழிபாட்டினால்
தணித்துவிட முடியும்.(ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது!!!)
எனவே,இந்த
சித்ராபவுர்ணமி வழிபாடு திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் ஆயுட்கால
சீடரும்;நமது ஆன்மீக வாழ்க்கை வழிகாட்டியும்,ஆன்மீகச் செம்மலுமாகிய
திரு.சிவமாரியப்பன் அவர்களின் தலைமையில் 5.5.2012 சனிக்கிழமை காலை 6
மணியளவில் சதுரகிரியின் நுழைவாசலான தாணிப்பாறையில் துவங்க உள்ளதால்,
அனைவரும் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
சொந்த ஊரில் வாங்கி வர வேண்டியவை:
குறைந்தது ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு,
அரை கிலோ விதையில்லாத கறுப்பு திராட்சை
விதையில்லாத பேரீட்சை பழ பாக்கெட்(இவைகளை
சதுரகிரி சுந்தரமகாலிங்கத்தின் சன்னிதியில் படையலிட்டுவிட்டு,கொஞ்சம்
அங்கேயே பகிர்ந்துகொடுத்துவிட்டு,மீதியை வீட்டுக்குக்கொண்டு சென்று நமது
குடும்ப உறவுகளுக்கு கண்டிப்பாகத் தர வேண்டும்)
குறைந்தது
5 கிலோ நவதானியங்களை வாங்கி வர வேண்டும்.இவைகளை சதுரகிரி மலைப்பாதை
ஓரங்களில் தூவ வேண்டும்.இந்த நவதானியங்கள் நவக்கிரகங்களின் பிரதிநிதிகளாக
இருப்பதால்,நமது ஜாதகத்தில் இருக்கும் நவக்கிரக தோஷங்கள் அடியோடு
நீங்கிவிடும்.
வீட்டில் தயார் செய்து கொண்டு வர வேண்டியது:
1)எள்ளை
இடித்து,அத்துடன் கருப்பட்டி சேர்த்து அதை 27 உருண்டைகளாகப் பிடித்து
வைக்க வேண்டும்.இந்த 27 எள் உருண்டைகளையும் உடையாமல்,கொண்டுவர வேண்டும்.இது
நமது முன்னோர்களுக்கு நாமே தர்ப்பணம் செய்வதற்காக!!!
2)குறைந்தது
2 கிலோ பொறியை(பொறிகடலையில் பொறி மட்டும்) வாங்கி,அத்துடன் குறைந்தது
அரைக்கிலோ பூந்தியைக் கலக்கிக் கொள்ள வேண்டும்.இதை படையலாக்குவது நமது
முன்னோர்களாகிய சித்தர்களின் ஆசி நேரடியாக நமக்குக்
கிடைப்பதற்காக!!!ஆமாம்,நாம் ஒவ்வொருவருமே சித்தர்களின் வழித்தோன்றல்களே!!!(* பூர்வபுண்ணியம் உள்ளவர்கள் இந்த நாளில் சதுரகிரியில் நமது முன்னோராகிய சித்தரையும் தரிசிக்கமுடியும்)
3) சதுரகிரி
சுந்தரமஹாலிங்கத்துக்கு படையலாக சர்க்கரைப்பொங்கலும்,அவல் பாயாசமும்
படைக்க வேண்டும்.இந்த இரண்டும் தயார் செய்யத் தேவையான பொருட்களை நாம்
ஒவ்வொருவரும் கொண்டு வர வேண்டும்.சதுரகிரியில் இரவு நேரத்தில் நாம் கொண்டு
வந்த பொருட்களை ஒன்றாக்கி,ஒரே படையலாக தயார் செய்ய வேண்டும்.அவ்வாறு தயார்
செய்து இரவு 9 மணி முதல் 12 மணி வரை சதுரகிரி சுந்தர மஹாலிங்க சுவாமிக்குப்
படைக்க வேண்டும்.படைத்துவிட்டு,நமது மஞ்சள்துண்டில் சுந்தரமஹாலிங்கத்தின்
முன்பாக அமர்ந்து குறைந்தது ஒரு மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் ஜபிக்க
வேண்டும்.ஜபித்துமுடித்தப்பின்னர்,இந்த படையலை அங்கிருப்போர்களுக்கு
விநியோகிக்க வேண்டும்;நாமும் கொஞ்சம் வாங்கி வீட்டுக்குக் கொண்டு வர
வேண்டும்.(மறக்காமல் டார்ச் லைட்,பாத்திரம் கொண்டு வரவும்)
இவ்வாறு
செய்துவிட்டு,5.5.2012 சனிக்கிழமை இரவு கண்டிப்பாக சதுரகிரியில் தங்க
வேண்டும்.மறு நாள் 6.5.2012 ஞாயிறு காலையில் அவரவர்களின் வீடுகளுக்குத்
திரும்பலாம்.இவ்வாறு செய்வதால்,நீண்டகாலப் பிரச்னைகள் அடுத்த சில
நாட்கள்/வாரங்களில் தீர்ந்துவிடும்;பொருளாதார நெருக்கடிகள் உடனடியாகத்
தீர்ந்துவிடும்.நமது பூமிக்கு வர இருக்கும் இயற்கைச் சீற்றங்கள்
விலகிவிடும்.
ஓம்சிவசிவஓம்
***
இந்த நந்தன வருடத்தின் முதல் பவுர்ணமியன்று இரவு முழுக்க சித்தர்களின்
வீடாகிய சதுரகிரியில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஒரு சந்தர்ப்பம் ஆன்மீக
குருவாகிய சிவமாரியப்பன் அவர்களால் கிடைத்திருக்கிறது.இது எப்பேர்ப்பட்ட
ப்ராப்தம்!!!
ஓம்சிவசிவஓம்
Subscribe to:
Posts (Atom)

