Showing posts with label ஆன்மீக முன்னேற்றத்திற்கு. Show all posts
Showing posts with label ஆன்மீக முன்னேற்றத்திற்கு. Show all posts

Friday, August 15, 2014

ஆன்மீக முன்னேற்றத்திற்கு நாம் பின்பற்ற வேண்டிய உணவு விதிகள்!!!


Posted By Muthukumar,On Aug 15,2014

நாம் உண்ணும் உணவும் நமது ஆன்மீக முன்னேற்றத்திற்கு அல்லது பின்னடவிற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது;
சமையல் செய்யும் போது கோபம்,வெறுப்பு,குரோதம்,மனவருத்தம் அடைந்தால் அந்த எண்ணங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும்(கணவன்,குழந்தைகள்) உறுதியாகப் பிரதிபலிக்கும்;தினமும் கவனித்துப் பார்த்தால் உண்ணும் உணவே சமைத்தவரின் எண்ண ஓட்டங்களைத் தெரிவித்துவிடும்;
ஒவ்வொரு முறை உண்ணும் போதும்(காலை,மதியம்,இரவு) அந்த உணவில் அறுசுவையும் இருப்பது முழு ஆரோக்கியத்தைத் தரும்;
ஒவ்வொரு முறையும் உணவு உண்பதற்கு முன்பு பழங்களைச் சாப்பிட்டுப் பழகுவது நன்று;(உண்டபின்னர் பழங்கள் சாப்பிடுவது தவறு)
குக்கரில் சமைக்கும் சாதத்தைத் தவிர்ப்பது அவசியம்;சாதத்தை வடித்து,அந்த வடிநீரை அருந்துவது நமது உடலுக்கு அளவற்ற நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும்;மட்டை அரிசி,பாலீஷ் செய்யாத அரிசியை வீட்டுச் சமையலுக்கு வாங்கிப் பழகுங்கள்;பூரண ஆரோக்கியம் உறுதியாகும்;சாதாரண பாத்திரத்தில் சமைக்கப் பழகுவது அவசியம்;திறந்த பாத்திரத்தில் சமைத்துச் சாப்பிடுவதுதான் சிறப்பு;திறந்த நிலையில் பிரபஞ்சத்தின் அனைத்து சக்திகளும் அந்த உணவின் மீது தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன;இந்த சக்திகள் நமது கண்களுக்குப் புலப்படாது;
மிக்ஸியில் அரைக்கப்படும் சட்னியானது விரைவில் கெட்டுப்போய்விடுகிறது;சுவையும் அவ்வளவு சிறப்பாக இருப்பதில்லை;ஆனால், ஆட்டு உரலில் அல்லது அம்மிக்கல்லில் அரைத்த சட்னியின் சுவை அற்புதமாகவும் நமது உடல் நலத்தை தொடர்ந்து பராமரிக்கும் விதமாகவும் இருக்கும்;
மிக்ஸியில் சட்னி அரைக்கும் போது ஜாரினுள் தேங்காய்த் துண்டுகள்,பொரிகடலை,மிளகாய்,வெள்ளைப்பூண்டு,உப்பு போன்றவைகளை போட்டு மூடியை இறுக மூடிவிட்டு அரைக்கிறோம்;அப்போது அந்த மூடியினுள் இருக்கும் காற்றுடன் தேங்காய்த்துண்டுகள்,பொரிகடலை சிலநொடிகளில் அரைபட்டு திப்பி திப்பியாக நுரை நுரையாக வந்துவிடுகின்றன;
ஆனால்,அம்மிக்கல்லில் அரைக்கும்போது இரண்டு ராட்சத கற்கள் இவைகளை அரைக்கின்றன;திறந்தவெளியில் அரைக்கும் போது பிரபஞ்சத்தின் அத்தனை கதிர்களும் நமது கண்ணுக்குத் தெரியாமல் இத்துடன் கலந்துவிடுகின்றன;மேலும்,இதை அரைக்கும் நமது தாயின் பரிவு,பாசம்,விட்டுக்கொடுக்கும் தன்மை போன்ற எண்ணங்களும் ஊடுருவி நமது உணவாகிறது;ஆக,நாம் எங்கிருந்து வந்தோமோ, அந்த பிரபஞ்சத்தின் சத்துக்கள் சட்னியில் கலந்துவிடுகின்றன;
அனைத்துப் பருப்புகளையும் தோல் நீக்காமல் உண்ணப் பழகவேண்டும்;
புளிக்குப் பதிலாக எலுமிச்சையை பயன்படுத்தப் பழக வேண்டும்;
மிளகாய்க்குப் பதிலாக மிளகை உபயோகிக்கப் பழக வேண்டும்;
வெள்ளைச் சீனி நமது உடல் ஆரோக்கியக் கட்டமைப்பை மெதுவாகக் கொல்லும் ஸ்லோபாய்சன்;அதற்குப் பதிலாக கருப்பட்டி,பனைவெல்லம்,பனங்கல்கண்டு,வெல்லம்,நாட்டுச் சர்க்கரை போன்றவைகளை பயன்படுத்தப் பழக வேண்டும்;
எள் எண்ணையில் வாரம் ஒருமுறையாவது குளிக்க வேண்டும்;வேக வைத்த உணவுகளைச் சாப்பிட்டுப் பழக வேண்டும்;பொறித்த மேல்நாட்டு உணவுகள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்,நோயை இலவசமாக வாங்குவதாக அர்த்தம்;
கொழுப்பு தரும் உணவுகளை அதிகம் சாப்பிடாமல் இருப்பது அவசியம்;
அதேபோல,பூமிக்குக் கீழே விளையும் கிழங்குகளை அதிகம் சாப்பிடாமல் இருக்க வேண்டும்;
ஒவ்வொரு நாளும்,ஒவ்வொரு முறையும் சாப்பிடத் துவங்கும் முன்பு பிரார்த்தனை செய்துவிட்டு சாப்பிட வேண்டும்;இந்த பிரார்த்தனை நேரம் வீடு எனில் ஒரு நிமிடம் வரையிலும்,வெளியிடங்கள் எனில் சில நொடிகள் வரை இருக்கலாம்;
தினமும் புதிய காய்கறிகளையும்,கீரைகளையும் சாப்பிடப்பழக வேண்டும்;
சாப்பிடும் போது ஒருபோதும் புத்தகம் படிக்கக் கூடாது;
சாப்பிடும் போது ஒரு போதும் டிவி பார்க்கக் கூடாது;
சாப்பிடும் போது ஒருபோதும் போனிலோ,நேரிலோ பேசவே கூடாது;
சாப்பிடுவதற்கு முப்பது நிமிடங்கள் முன்பும்,பின்பும் தண்ணீர் அருந்தக் கூடாது;
பசி இல்லாத போது ஒருபோதும் சாப்பிடக்கூடாது;அதேசமயம்,பசி உணர்வு வந்த கொஞ்ச நேரத்திலேயே சாப்பிடப் போய்விட வேண்டும்;அதிகநேரம் பசி உணர்வுடன் இருக்கக்கூடாது;பசிக்கும் போது ஒரு போதும் காபி,டீ,பால்,வடை,குளிர்பானங்கள் சாப்பிடவே கூடாது;
நாம் உண்ணும் உணவில் கசப்பு சேர்ப்பதை ஒதுக்கிவிட்டோம்;அதனால் தான் உடலானது நோய்வாய்ப்படுகிறது;
சைவ உணவில் தானிய உணவு,பருப்பு வகை உணவு,காய்கறிகள் மற்றும் கிழங்குகள், கீரை வகைகள் என்று நான்கு வகைகள் இருக்கின்றன;இவைகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நமது ஆரோக்கியமும் ஆன்மீக முன்னேற்றமும் உறுதிப்படும்;
புடலங்காய்,தேங்காய்,பிஞ்சாக இருக்கும் வெண்டைக்காய்,முருங்கைக்காய்,பீட்ரூட்,காரட் கிழங்கு,சேமைக்கிழங்கு,சேனைக்கிழங்கு,முள்ளங்கி,வெள்ளைப்பூண்டு,தூதுவளை,   தண்டுக்கீரை,சிறுகீரை,கறிவேப்பிலை,பசலைக்கீரை,பொன்னாங்கண்ணிக்கீரை,    வெங்காயம் சேர்த்த மசால்வடை,திராட்சைப் பழம்,மாதுளம்பழம்,காசினிக்கீரை,ரோஜாப்பூ,பிஸ்தாப் பருப்பு,சாதிக்காய்,கோரைக்கிழங்கு,லவங்கப்பட்டை,கிச்சிலிக்கிழங்கு,ஏலக்காய், அகிற்கட்டை,வெள்ளாட்டுப்பால்,வாதுமைப்பருப்பு,சுரைவிதை,நெல்லிக்காய்,       நாரத்தம்பழம்,இஞ்சி,சந்திஅனம்,கஸ்தூரி,முத்து,புதினா இலை,மிளகு,நாவல்பழம்,குங்குமப்பூ மற்றும் சில உணவுப்பொருட்களே காலம் காலமாக நம்மையும்,நமது முன்னோர்களையும் ஆரோக்கியமாக வாழ வைத்து வருகின்றன;
உணவு உண்பதற்கான விதிகளை இங்கே தந்திருக்கிறோம்;இந்த விதிகளை முடிந்தவரையிலும் பின்பற்றுவதன் மூலமாக வளமான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும்;இந்த உணவு விதிகளைப் பின்பற்றுவதன் மூலமாக நமது ஆன்மீக முன்னேற்றம் ஒவ்வொரு நாளும் உறுதிப்படும்;
இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் தமிழ்நாடு முழுவதும் கிடைக்கின்றன;இவைகளை ஆர்கானிக் ஃபுட்ஸ் என்ற பெயரில் ஒவ்வொரு சிற்றூரிலும் கூட விற்பனை ஆகின்றன;சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரை இம்மாதிரியான உணவுகளையே நமது முன்னோர்கள் சாப்பிட்டுவந்துள்ளனர்;
டப்பாவில் அடைக்கப்பட்ட உணவுகள்,ரெடிமேட் உணவுகளை தவிர்க்கவும்;
ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாக விளம்பரங்களில் வரும் எந்த பொருளையும் வாங்க வேண்டாம்;அந்த விளம்பரங்கள் மிகைப்படுத்தப் பட்டவை;
சிப்ஸ்,நொறுக்குத் தீனிகள்,எண்ணெய்ப்பலகாரங்கள் போன்றவற்றை நாமும் ஒதுக்க வேண்டும்;நமது குழந்தைகள் இந்த மாதிரியான உணவுப்பொருட்களுக்கு அடிமையாகாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை;இவைகளுக்குப் பதிலாக ஆர்கானிக் பழங்கள்,கொட்டைகள்,பச்சைக்காய்கறிகளை உண்ணப் பழகவும்;குழந்தைகளுக்குப் பழக்கவும்;
இயந்திரங்களால் சமைக்கப்பட்ட உணவுகளை அறவே ஒதுக்கவும்;மனிதர்களால் சமைக்கப்படும் உணவில் இருக்கும் சுவையும் அக்கறையும் இயந்திரச் சமையலில் இராது;
அந்தந்தப் பருவகாலங்களில் விளைகின்ற பழங்கள்,காய்கறிகள்,கீரைகளை உண்ணவும்;கோடையின் வெப்பத்தைத் தணிக்க டிவி விளம்பரங்களில் வரும் குளிர்பானங்களை அருந்த வேண்டாம்;மோர்,தர்ப்பூசணி,இளநீர்,செவ்விளநீர்,குல்கந்து(ரோஜாத் தேனூறல்),திராட்சைப்பழம்,திராட்சைப் பழச் சாறு,காரட்,காரட் சாறு போன்றவைகளே நமது உடலுக்கு குளிர்ச்சியைத் தருபவை;

ஆட்டுக்கறி,மாட்டுக்கறி போன்றவைகள் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடவும்;இவைகளை கடையில் வாங்கிச் சாப்பிடுவதையும் கைவிடவும்;ஏனெனில்,இவைகளில் சேர்க்கப்படும் செயற்கைச் சுவையூட்டிகள் நமது உடலுக்குள் செல்லும் போது நோய்களை உருவாக்கக் காரணியாக அமைந்துவிடுகிறது;
உப்பு,சர்க்கரை,காரம் கலந்த உணவுகளை அளவோடு சாப்பிடப் பழகவும்;
மருத்துவருக்கு கொடுப்பதை விட வாணிகனுக்குக் கொடு என்ற பழமொழியின் உள்கருத்து என்னவெனில்,ஆரோக்கியமான உணவுப் பொருட்களைத் தேர்ந்தெடுத்து சாப்பிட்டால் நோய்கள் வராது என்பதே !!!