அருள்மிகு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் திருக்கோயில் |
|
|
|
|
|
|
|
|
|
|
| மூலவர் | : | உச்சி பிள்ளையார் |
| உற்சவர் | : | - |
| அம்மன்/தாயார் | : | - |
| தல விருட்சம் | : | - |
| தீர்த்தம் | : | காவிரி |
| ஆகமம்/பூஜை | : | சிவாகமம் |
| பழமை | : | 1000-2000 வருடங்களுக்கு முன் |
| புராண பெயர் | : | திரிசிராப்பள்ளி |
| ஊர் | : | திருச்சி |
| மாவட்டம் | : | திருச்சி |
| மாநிலம் | : | தமிழ்நாடு |
|
|
|
| பாடியவர்கள்: | |
| | |
| - | |
| | |
| திருவிழா: | |
| | |
| விநாயகர் சதுர்த்தி, ஆங்கிலப்புத்தாண்டு, தமிழ்புத்தாண்டு, பொங்கல். | |
| | |
| தல சிறப்பு: | |
| | |
| மலை உச்சி மேல் அமைந்துள்ள விநாயகர் கோயில் இது. | |
| | |
| திறக்கும் நேரம்: | |
|
|
|
|
| தல வரலாறு: | |
| | |
|
மகாவிஷ்ணு ராமாவதாரத்தில், ராவணனை வதைத்து சீதையை மீட்டு அயோத்தி சென்றார். விபீஷணன், சுக்ரீவன் மற்றும் அனுமன் ஆகியோரும் உடன் சென்றனர்.
அயோத்தியில் ராமர் பட்டாபிஷேகம் முடிந்து, அவரிடம் விடைபெற்று கொண்டு திரும்புகையில், நினைவுப்பரிசாக ரங்கநாதர் சிலையை பெற்றுக் கொண்டு விபீஷணன் தெற்கே வந்தான்.
எழில் வனப்புடன் மிகுந்த சோலை நடுவே அகண்ட காவிரியில் சற்று ஓய்வெடுக்க எண்ணிணான். அப்போது, அங்கு சிறுவன் உருவில் நின்று கொண்டிருந்த விநாயகரிடம் ரங்கநாதர் சிலையை சிறிது நேரம் வைத்திருக்குமாறு கொடுத்து விட்டு சென்றான். விநாயகர் சிறிது நேரம் பார்த்து விட்டு அச்சிலையை பூமியில் வைத்து விட்டு அருகில் இருந்த மலையில் போய் அமர்ந்து கொண்டார்.
திரும்பி வந்து வீபிஷணன் சிறுவனைக் காணாமல் மலைத்து போனான். செய்வதறியாது பூமியில் இருந்த சிலையை எடுக்கப்பார்த்தும் அவனால் சிலையை நகர்த்த முடியவில்லை. இதனால் இலங்கைக்கு செல்ல இருந்த ரங்கநாதர், விநாயகரின் அருளால் ஸ்ரீரங்கத்தில் எழுந்தருளினார்.
தான் சிலையை கொடுத்த அந்த சிறுவன் மலையில் அமர்ந்திருப்பதை பார்த்த வீபிஷணன் கோபமடைந்து, விநாயகர் தலையில் ஒரு குட்டு வைத்தான்என்பது வரலாறு.
உச்சிப்பிள்ளையார் தலையில் இன்றும் அந்த குட்டின் வடு காட்சியளிக்கிறது. இப்படி சிறப்பு வாய்ந்த விநாயகர் தான் தமிழகத்தின் நலன் காக்க அருகில் அமைந்துள்ள ரங்கநாதருடன் ஆண்டாண்டு காலமாய் ஆட்சி செய்து வருகிறார்
Posted On September 8,By Muthukumar | |
| | |
|
|
|
No comments:
Post a Comment