பக்தி என்றால் என்ன?
Posted on September 10, 2011 by muthukumar
இறைவனிடம் அதைக்கொடு, இதைக்கொடு என்று கேட்கிறார் கள்.
காந்தக் கல்லோடு எப்படி ஊசி போய் ஒட்டிக்கொள்கிறதோ, பதிவிரதையின் மன மானது
பர்த்தாவினிடத்தில் போய் கவிந்து கொள்கிறதோ, நதியானது மகா சமுத்திரத் தில்
கலந்து விடுகிறதோ… அது போல், கட வுளுடன் நமது மனமும் கலந்துவிட வேண்டும்.
நமக்கு அனுக் கிரஹம் செய்கிற, பரமாத்வினிடத்தில், தன்னை அறியாமல் போய்
நிற்க வேண்டும். அதற்கு காரணமே இருக்கக் கூடாது. காரணம் என்று வந்தால் அது
வியாபாராமாகி விடும். இறைவ னிடம் எதைக் கேட்டாலும் அது வியாபாரம் தான்!
ஏதோ ஒன்றுக் கொன்று கொடுப்பது போல ,செல்வ த்தைக் கொடு, பக்தி செய்கிறேன்,
என்று இறைவனிடம் பரிமாறிக் கொள்வதனால் வியாபாரமாகி விடும். அப்படியில்லாமல்
எதையு மே நினைக்காது, ஈஸ்வரனிடத்தில் போய் சேருவதையே நினைத்து தன்னை
அறியாமல் ஓடுகிற சித்த விருத்தி இருக்கிறதே, அத ற்கு தான் பக்தி என்று
பெயர்.
No comments:
Post a Comment