தங்கமழை ரகசியம் : பொன்மகள் வந்தாள் , பொருள் கோடி தந்தாள்.. !
Posted on Sep 24, 2011.By Muthukumar
வேலூருக்கு
அருகே , தங்கத்தினாலேயே கோவில் கட்டி இருக்கிறாங்க , தெரியும் இல்லையா?
அது நல்ல விதத்தில் வந்த தங்கமா , இல்லையா என்பது , நமக்கு தேவையில்லாத
ஒரு விஷயம் . ஆனால், நிச்சயமாக , அதில் ஒரு அமானுஷ்யம் இருப்பதை , உணர
முடிகிறது.
என்னுடைய நண்பர் ஒருவர் ஒரு அனுபவத்தை , கூறினார். ஒருவர் சின்ன சின்ன ஆமைகளை வைத்துக்கொண்டு ஆமை பூஜை செய்கிறாராம். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்யணுமாம். அதற்கு அம்பது லட்சம் செலவு ஆகுமாம். (?) . பூஜை பண்ணி முடிச்சதும், ரூபாய் நோட்டா , எட்டு பக்கத்திலேயும் இருந்து கொட்டுதாம்.. ! எனக்கு சிரிப்பு தாங்க முடியலை. இதை கேள்விப் பட்டு , என் கூட இருந்த இன்னொரு நண்பர் , சார், நான் ட்ரை பண்ணி பார்க்கட்டுமா.. ? அம்பது தானே.. !
இவர் மனுஷன் கந்து வட்டி பார்ட்டி. கட்டப் பஞ்சாயத்து , அடிதடி , அரசியல் பலம் எல்லாம் உள்ள ஆளு. அம்பது லட்சம் எல்லாம் , அரை மணி நேரத்தில ரெடி பண்ணிடுவாரு. அப்படி ஒரு வேளை பணம் வரலைனா கூட , ஆளை அடி பெண்டு எடுத்திடுவாங்க , அவங்க கைத்தடிங்க ....!
நான் சொன்னேன்.ஏன் சார் , இப்போவே நீங்க பண்ணாத பாவம் இல்லை. எப்படியும், உங்க வட்டிப் பணம், உங்க தலைமுறையை எப்படி ஆட்டுவிக்கப்போவுதோ தெரியலை. அதை விடுங்க, இப்போ இருக்கிற பணத்தையே , நீங்க முழுசா அனுபவிக்கப் போறது இல்லே. எதுக்கு, அங்கே போயி ஒரு தகராறு பண்ணனும். உங்களை மாதிரி , அங்கேயும் ஒரு கூட்டம் இருந்துச்சுனா? மாத்தி , மாத்தி வெட்டிக்கணுமானு கேட்டேன். அப்படியே விட்டுட்டார்... !
அப்படி பணமா கொட்ட முடிஞ்சா , அந்த பூஜை பண்றவரே பண்ணிக்க வேண்டியதுதானே... மத்தவங்களை பத்தி , அதுவும் அம்பது லட்சம் வைச்சு இருக்கிறவங்களை இன்னும் குபேரன் ஆக்கி என்ன பண்ணப் போறாங்க..? ஏதும் வில்லங்கம் பண்ணாத ஆளுங்களாப் பார்த்து , ஒரே அமுக்கா அமுக்க ஒரு பெரிய குரூப்பே திரியுது போல... !
ஆனா , இது நிஜம் சார்னு கற்பூரம் ஏத்தி சத்தியம் பண்ணாத குறை..! ( கற்பூரம் ஏத்தி சத்தியம் பண்ணினா மட்டும் நம்பிடுவோமா.. எந்த காலத்துல இருக்கிறாங்கப்பா? ) சரி, இந்த மாதிரி ஆமை பூஜை பண்ணி , கூரையைப் பிச்சுக்கிட்டு தங்கமா கொட்டுச்சாம்.. இன்னும் கூட கொட்டுதாம்.. , அதை வைச்சுத் தான் தங்க கோவில் கட்டுனாங்களாம்...! இதுக்கு மட்டும் , அப்படியா னு ஆச்சரியப் பட முடியுது.. ! பின்னே , எவ்வளவு தங்கம் !?. வெளியிலே இருந்து எல்லாம் கொண்டு வர்றதுக்கு வாய்ப்பே இல்லை.. !
சரி, ஏதோ ஒன்னு.. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்..!
அந்த காலத்திலேயே இப்படி தங்க மழை பெய்த சில சம்பவங்களை பற்றிப் பார்க்கப் போறோம்.
இந்த கட்டுரை எதுக்குன்னு கேட்கிறீங்களா? உண்மையோ, பொய்யோ.. நீங்களும் கொஞ்சம் தெரிஞ்சுக்கோங்க, தங்க மழை , ஆமை பூஜை..... (அட , சிரிக்காதீங்க சார். ) அந்த அளவுக்கு எல்லாம், போக வேண்டாம்.. நம்பினவங்களை ,அந்த தெய்வம் கண்டிப்பா ஒரு நாள் கரை ஏத்தும். கஷ்டம் எல்லாம் தீரும். கவலைப் படாதீங்க. கீழே நீங்க படிக்க போற விஷயங்களும், கொஞ்சம் ஆச்சரியப் பட வைக்கும்...
படிக்கும்போதே, உங்கள் மனசுக்கு எதுவாது தோணுதான்னு பாருங்க, உங்களுக்கும் கூட அந்த தங்க மழையில நனையிற வாய்ப்பு கிடைச்சாலும், கிடைக்கலாம்....
ஸ்ரீதனலக்ஷ்மி : அஷ்டலட்சுமிகளில் அள்ளித் தருபவள். எட்டுக்கரங்கள் உடையவள். மேல் இருகைகளில் தாமரை மலர்கள்; அடுத்த இரு கைகளில் அம்பும் வில்லும்; அடுத்த இரு கைகளில் சக்கரமும் வலம்புரிச் சங்கும்; கீழ் வலக்கையில் பொன் நாணயங்கள் அடங்கிய பை. கீழ் இடக்கையால் வரத முத்திரை காட்டிக்கொண்டிருக்கிறாள்.
சங்கரர்,
வித்யாரண்யர், நிகமாந்த தேசிகர், தாதாச்சாரியார் ஆகிய நால்வருக்காகவும்
ஸ்ரீலட்சுமி பொன்னை மழையாகக் கொட்டச் செய்தாள். சுருக்கமாக, அந்த
சம்பவங்களை இங்கே பார்ப்போம்.. ...
ஆதிசங்கரர்
சிறுவராக இருக்கும்போது உஞ்சவிருத்தி எனப்படும் பிட்சாவிதி தர்மத்தை
கடைபிடித்துவந்தார். ஒருநாளைக்கு ஒரு வீட்டின் முன் போய் நின்று, "பவதி பிக்ஷாந்தேஹி"
என்று சொல்லவேண்டும். ஏதாவது பிச்சை போட்டால் அதைமட்டுமே உண்ணவேண்டும்.
வேறெதையும் கேட்கக்கூடாது. ஒருவேளை மட்டும்தான். அந்த ஒருவேளையிலும்கூட
மும்முறை மட்டுமே குரல் கொடுக்கவேண்டும். பிக்ஷை போடவில்லை யென்றால்
அன்று பசியுடன் இருக்கவேண்டியதுதான். அவ்வாறு வீட்டின்முன்னால் சென்று
குரல் கொடுத்தார்.
அந்த
வீட்டுக்காரர்கள் பரம ஏழைகள். அன்று ஏகாதசி விரதம் முடித்து துவாதசி
விரதத்தை நெல்லிக்கனியை உண்டு, பூர்த்தி செய்யவேண்டும். அதற்கான
நெல்லிக்கனி மட்டுமே அந்த வீட்டில் அன்று இருந்தது. நெல்லிக்கனியை
உண்ணவில்லையானால் விரதபங்கம் ஏற்படும்.
ஆதிசங்கரர்
குரல் கொடுத்தபோது அந்த வீட்டு அம்மாள் எதை பிக்ஷயாகப் போடுவது என்று
தெரியாமல் திகைத்தாள். இரண்டு முறை குரல் கொடுத்தாகிவிட்டது. மூன்றாவது
குரலுடன் போய்விடுவார். அப்படியாகினால் ஓர் இளம் சன்னியாசியைப்
பசியுடன் திருப்பியனுப்பிய பாவம் நேரிடும்.
ஆகவே
நெல்லிக்கனியை ஆதிசங்கரருக்குப் போட்டுவிட்டாள். இதனைக் கண்ட ஆதிசங்கரர்,
அந்தப் பெண்மணியின் நிலைமை குறித்து மனம் கசிந்துருகி ஸ்ரீலட்சுமியிடம்
வேண்டி 'கனகதாரா' என்னும் துதியைச் செய்தார். அந்தப் பாடலைப் பூர்த்தி
செய்தபோது அங்கு பொன்மழையாகக் கொட்டியது.
அடுத்தது நிகமாந்த தேசிகர்.......
நிகமாந்த தேசிகர் என்பவர் ஸ்ரீவைஷ்ணவத்தின் முக்கிய நால்வரில் ஒருவர்.
இவர்தான் ஸ்ரீவைஷ்ணவத்தின் வடகலைப் பிரிவின் முக்கிய கர்த்தா.
பிள்ளை லோகாச்சாரியார் என்பவர் தென்கலையின் முக்கிய கர்த்தா.
இருவருமே சமகாலத்தினர். ஸ்ரீரங்கத்தில் இருந்தனர்.தமிழகத்தின் மிகக்கொடுமையான, சோதனையான காலகட்டத்தில் இருந்தவர்கள்.

1313-ஆம் ஆண்டில் டில்லி சுல்த்தானாகிய அலாவுதீன் கில்ஜியின் தளபதியாகிய மாலிக் காபூரின் தாக்குதலுக்குப் பின்னர் குஸ்ராவ் கான் என்பவனுடைய தாக்குதலும் அதன்பின்னர் 1327-ஆம் ஆண்டில் முகம்மது பின் துக்ளக்கின் படையெடுப்பும் ஏற்பட்டன.துக்ளக்கின் படையெடுப்பு ஆந்திராவின் வாரங்கல்லிலிருந்து தெற்கு நோக்கி வந்தது.
தமிழ்நாட்டில் நுழைந்து மிக விரைவாக தொண்டை மண்டலத்தைப் பிடித்துவிட்டார்கள். காவிரியை நோக்கி முன்னணிப் படை வந்து கொண்டிருந்தது. கில்ஜி, துக்ளக் ஆகியோரும் அவர்களுடைய முக்கிய படை அணியினரும் துருக்கர்கள். அந்தக் காலகட்டத்தில் துருக்கர், மாங்கோலியர் ஆகியோரின் படைகள்தாம் மிக விரைவாக நகரக்கூடியவை. பயங்கரமாகத் தாக்குதல் நடத்தக்கூடியவை. வெல்லப்படமுடியாதவை என்று பெயர் பெற்றவை. உலகின் நாகரிக முற்றிய பல பேரரசுகளை வீழ்ச்சியடையச் செய்தவை. அவ்வாறு ஒரு முன்னணிப் படை மிக விரைவாக வந்துகொண்டிருந்தது.
அப்போது ஸ்ரீரங்கத்தில் ஓர் உற்சவம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
துருக்கர் படை சமயபுரத்துக்கு வந்துவிட்டது என்ற செய்தி கிடைக்கும்போது எல்லாரும் ஓடிப்போவதா அல்லது உற்சவத்தை பூர்த்தி செய்வதா என்று பெருமாளின் முன்னிலையில் திருவுளம் கேட்டார்கள். உற்சவத்தைப் பூர்த்தி செய்ய உத்தரவாகியது. அப்போது சமயபுரத்தையும் துருக்கர்கள் தாண்டிவிட்டதாகச் செய்திவந்தது. ஆகவே விரைவாக விழாவைப் பூர்த்திசெய்துவிட்டு உற்சவ மூர்த்திகளைத் தூக்கிக்கொண்டு போக முயன்றார்கள். ஆனால் துருக்கர் படை வந்துவிட்டது.

பிள்ளை
லோகாச்சாரியார் பெருமாள் சிலையை ஒரு மூடுபல்லக்கில் வைத்துக் கொண்டு
தெற்கு நோக்கி தப்பிச்சென்றார். துருக்கர்கள் கண்டவர்களையெல்லாம் கொன்று
குவித்துவிட்டார்கள். பிணக்குவியலின் அடியில் தேசிகாச்சாரியார்
கிடந்தார்.
துருக்கர்கள் சென்றபிறகு தேசிகாச்சாரியர் குருமைந்தர்கள் இருவருடன் ஸ்ரீபாஷ்யத்திற்குத் தாம் எழுதிய உரை நூலைப் பத்திரமாக எடுத்துக்கொண்டு மைசூர் எல்லையை அடைந்தார்.
அவருடைய வாழ்க்கையில் ஒரு சம்பவம் நடந்தது.
ஸ்ரீரங்கத்தில் ஓர் இளைஞன் இருந்தான். அவனுக்குத் திருமணம் செய்துகொள்ள ஆசை. ஆனால் முடியவில்லை. ஏனெனில் அவன் பரம ஏழை. அக்காலத்திலெல்லாம் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள மாப்பிள்ளை வீட்டாருக்குத்தான் செலவு.

தேசிகாச்சாரியாரைப்
பிடிக்காதவர்கள் சிலர் அவருக்கு ஏதாவது மனக்கஷ்டத்தை ஏற்படுத்தி
அவமானப்படுத்தவேண்டும் என்று எண்ணியிருந்தார்கள். அவர்கள் அந்த இளைஞனைத்
தூண்டிவிட்டு தேசிகாச்சாரியாரிடம் பொருள் கேட்கச்சொன்னார்கள். அவனும்
தேசிகாச்சாரியாரிடம் போய்க்கேட்டான்.தேசிகாச்சாரியாரிடம் கையில்
ஒன்றுமில்லை. ஆகவே அந்த இளைஞனுக்காக அவர் ஸ்ரீலட்சுமியைத் தோத்திரம்
செய்தார். 'ஸ்ரீஸ்துதி' என்னும் அந்த தோத்திரத்தைப் பாடியவுடன் பொன்மழை
பெய்தது....
அடுத்தாற்போல..வித்யாரண்யர்.
துங்கபத்ரை ஆற்றங்கரையில் ஓர் ஊர். அங்கு ஓர் இளைஞன். பரம ஏழை. அந்த ஏழ்மையிலும் அவனுக்குள் ஏதோ ஓர் உத்வேகம் இருந்து அவனை எவ்வாறேனும் உலகில் முன்னேறி எதையாவதைப் பெரிதாகச் சாதிக்கவேண்டும் என்று இயக்கி கொண்டேயிருந்தது. வேதம், தந்திரம், ஆகமம் முதலிய பல சாஸ்திரங்களைக் கற்றவன். தன்னுடைய வறுமையைப் போக்கிக்கொண்டு மிகப் பெரிய பணக்காரனாகவேண்டும் என்ற ஆசை எவ்வாறோ அவனுக்குள் வந்துவிட்டது.
ஆகவே முறைப்படி ஸ்ரீலட்சுமியை உபாசனை செய்தான்.
அவனுடைய தவத்தின் இறுதியில் ஸ்ரீலட்சுமி தோன்றினாள். அவளிடம் அவன் செல்வம் கேட்டான்.இந்தப் பிறவியில் அவனுக்கு அந்தப் பேறு கிடையாது என்று அவளும் சொல்லிவிட்டாள்.
"இன்னொரு பிறவியில்தான் கிடைக்குமா?"
"நிச்சயம் கிடைக்கும்". உடனே அவனுக்குள் ஒரு மின்னலடித்தது.
சன்னியாசத்திலேயே பலமுறைகள் இருக்கின்றன. ஆதிசங்கரர் எடுத்துக்கொண்டது ஆபத்சன்னியாசம். இந்த இளைஞன் மானச சன்னியாசத்தைத் தனக்குள் சங்கல்பித்துக்கொண்டான்.
"தாயே! இப்போது நான் சன்னியாசம் மேற்கொண்டுவிட்டேன். சன்னியாசம் என்பது புதியதொரு பிறவிதான் என்று சாஸ்திரப்பிரமாணம் இருக்கிறது. ஆகவே இப்போது நான் இன்னொரு பிறவி எடுத்து விட்டேன். இப்போது நீ எனக்கு செல்வத்தைக் கொடுக்கவேண்டும்."
உடனே ஸ்ரீலட்சுமியின் அருளால் அந்த இடத்தில் பொன்மழை பெய்தது.
அந்தப் பொன்னை அள்ளிக்கொண்டுபோக முயற்சித்த அந்த இளைஞனைப் பார்த்து ஸ்ரீலட்சுமி கேலியாகச் சிரித்தாள்.
"ஏனப்பா சன்னியாசிக்கு எதற்கு இந்தப் பொன்னெல்லாம்?"
அந்த இளைஞனிடம் இன்னொரு மின்னற்பொறி தோன்றியது.
அத்தனை செல்வத்தையும் துருக்கர் ஆக்கிரமிப்பால் சிதைந்து போய் சீரழிந்திருந்த இந்து தர்மத்தையும் இந்து சமுதாயத்தையும் நிலைநிறுத்த உறுதி எடுத்துக்கொண்டான்.
அதைச் செய்வதற்கு இந்துக்களின் சாம்ராஜ்யம் மீண்டும் தோன்றவேண்டும். அரச வம்சங்கள் வேண்டும்.

புராண கால விஸ்வாமித்திரன் தன்னுடைய தபோவலிமையால் திரிசங்குவுக்காக சொர்க்கலோகத்தையே
சிருஷ்டி செய்ததுபோல இந்துக்களுக்காக பேரரசு, சமுதாய வாழ்வியல், அரச
பரம்பரை எல்லாவற்றையும் சிருஷ்டி செய்துவிட்டார்.
இந்து சாஸ்திரங்கள் அழிந்துபோகாமல் இருக்கும் வண்ணம் தம்முடைய தம்பியுடன் எல்லாவற்றுக்கும் எழுத்துப் படிவம் கொடுத்து அவற்றுக்கு உரைகள் எழுதினார்.
காட்டில் திரிந்துகொண்டிருந்த ஐந்து சகோதரர்களைக் கூடிவந்து அவர்களை வைத்துப் புதியதொரு அரசபரம்பரையைத் தோற்றுவித்தார்.
ஒரு விஜயதசமியன்று அஸ்திவாரம்போட்டு அடுத்த விஜயதசமியன்று உலகிலேயே மிக அழகான, மிகப்பெரியதான, மிகப்பாதுகாப்பான தலைநகரம் ஒன்றையும் தோற்றுவித்தார். அதிலிருந்து தென்னிந்திய முழுவதையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவர திட்டத்தை வித்திட்டார்.
இவ்வாறுதான் விஜயநகரப் பேரரசை வித்யாரண்யர் தோற்றுவித்தார்.
அதற்கு அஸ்திவாரமாக இருந்தது..... பொன்மழை.
காட்டில் திரிந்துகொண்டிருந்த ஐந்து சகோதரர்கள் சங்கமர் என்பவருடைய மைந்தர்கள். அவர்களில் மூத்தவர் ஹரிஹரர்; அடுத்தவர் புக்கர். துருக்கர்கள் தென்னாட்டைக் கைப்பற்றுமுன்னர் அவர்கள் கர்நாடகத்தின் அரசாகியாகிய ஹொய்சள அரசில் அதிகாரிகளாக இருந்தனர்.
ஹொய்சளத்துடன் தென்னகத்தில் பாண்டியம், காகதீயம், யாதவம் ஆகிய நாடுகள் இருந்தன. இவை அனைத்தையுமே டில்லி சுல்த்தான் அலாவுத்தீன் கில்ஜி தன்னுடைய தளபதியாகிய மாலிக் கபூர் என்பவனுடைய தலைமையில் சென்ற படைகளால் பிடித்துக்கொண்டான்.
அவனுக்குப் பின்னர் வந்த குஸ்ராவ் கானுக்கும் பின்னர் வந்த துக்ளக் அந்த நாடுகளைப் பிடித்துக்கொண்டதுடன் அவற்றைத் தன்னுடைய டில்லி பேரரசின் மாநிலங்களாகச் சேர்த்துக்கொண்டான். தென்னகத்தில் ஹசன் ஷாவும் தக்கணத்தில் பாஹ்மன் ஷா என்பவனும் அரசப்பிரதிநிதிகள்; ஆனால் விரைவில் சுதந்திர அரசுகளை ஏற்படுத்திக்கொண்டார்கள்.

வடக்கே பாமனிகள், தெற்கே மதுரையில் ஹசன்ஷாஹிக்கள் .
இவற்றின் நடுவில் ஒன்றுமில்லாத சூனியத்திலிருந்துதான் விஜயநகரை வித்யாரண்யர் தோற்றுவித்தார். ஹரிஹரர் விஜயநகரத்தின் முதல் அரசரானார். சங்கமரின் புதல்வர்கள் ஆதலால் இந்த அரச வம்சத்தை 'சங்கம வம்சம்' என்று குறிப்பிடுவார்கள்.
அவருடைய காலத்தில் துங்கபத்திரை ஆற்றின் கரைய்¢லிருந்து தொடங்கி மிக விரைவாகக் கர்நாடகாவைப் பிடித்துவிட்டார்கள்.
ஹரிஹரரின் பின் புக்கர் ஆட்சிக்கு வந்தார். அவருடைய மகன்களில் ஒருவராகிய குமாரகம்பண்ண உடையார் ஒரு படையைக் கொண்டு சென்று மதுரையின் கடைசி மூன்று சுல்தான்களையும் வென்றார்.
அதன் பின்னர் தமிழ்நாடு, சேரநாடு, இலங்கையின் பகுதிகள் ஆகியவற்றை விஜயநகரத்தின் ராயர் பேரரசர்கள் கைப்பற்றி தங்களின் ஆட்சிக்குள் கொண்டுவந்துவிட்டனர். பாமினி அரசுடன் ஓயாத போர்கள்.
அடிக்கடி பாமினிகளிடம் தோற்றுப்போய் நிறையப் பொருள்களைக் கொடுத்து சமாதானம் செய்துகொள்ளவேண்டியிருந்தது. ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு வந்த இரண்டாம் தேவராயர் சற்று ஆராய்ந்தார். தம்முடைய குதிரைப் படையில் துருக்கர்கள், ஆ·ப்கானியர் மற்ற முஸ்லிம்களைச் சேர்த்துக் கொண்டார். பாமினிக்களின் யுத்த மரபுகள், உத்திகளைத் தாமும் கடைப்பிடித்தார். அதிலிருந்து வரலாறு மாறியது.
ஆனால் விஜயநகரிலும் மாற்றங்கள் ஏற்பட்டன. சங்கமர்களை விரட்டிவிட்டு சாளுவர்களும், அவர்களை விரட்டிவிட்டு துளுவர்களும் ஆட்சிக்கு வந்தார்கள். இதன் நடுவே பாமினி அரசும் ஐந்தாக உடைந்து ஐந்து சுல்த்தானியர்கள் ஆட்சி புரியலானார்க்ள். துளுவ வம்சத்தின் இரண்டாம் பேரரசர் கிருஷ்ணதேவராயர். விஜயநகரப் பேரரசர்களிலேயே மிகச் சிறந்தவராக அவரைச் சொல்வார்கள். அவர் போர்த்துகீசியரைத் தம் படையில் சேர்த்துக்கொண்டு நாட்டை இன்னும் விரிவாக்கினார்.
தொடர்ந்து...... தாதாச்சாரியார்.
கிருஷ்ணதேவராயர் - அவர்தான் விஜயநகரப் பேரரசர்களிலேயே மிகவும் பேர்பெற்றவர். மிகச்சிறப்பு வாய்ந்தவர். அவருடைய ஆஸ்தானத்தில்தான் 'அஷ்டதிக் கஜங்கள்' என்னும் பெயர் பெற்ற பேரறிஞர்கள் குழு இருந்தது. கிருஷ்ணதேவரராயரும்கூட ஒரு கலாரசிகர்; இசைக் கலைஞர், பெரும் வீரர், பெரும்புலவர், பயில்வான், போராளி, ஓவியர், சிற்பி, கவிஞர். சமஸ்கிருதம், தெலுங்கு ஆகிய மொழிகளில் விற்பன்னர். 'ஆமுக்தமாய்லதா' என்னும் பெருநூலை அவர் இயற்றியுள்ளார்.
அவருடைய சபையில் பெரும்புகழ் பெற்ற தெனாலிராமன் இருந்தார். ராமகிருஷ்ணையா என்னும் பெயரையுடைய அவர் பெரும்புலவர். தெனாலி என்னும் ஊரைச் சேர்ந்தவர்.
கிருஷ்ணதேவராயருடைய காலத்தில்தான் விஜயநகரம் கீர்த்திமிக்கதாகவும், அதிக விரிவுடையதாகவும், தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்ற வண்ணமும் விளங்கியது. மாற்றார் அனைவருமே அஞ்சி ஒடுங்கியிருந்தனர்.
விஜயநகரை ஆரம்பத்தில் ஆண்ட சங்கம அரச வம்சம் ஒரு கன்னடிய வம்சம். அதில் தோன்றிய ராயர் மன்னர்கள் மகான் வித்யாரண்யரின் அத்வைத மரபையும் சைவசமயத்தையும் கடைப்பிடித்தவர்கள். ஆனால் பின்னால் வந்தவர்கள் தெலுங்கர்கள். விஷ்ணுவை விரும்பி வணங்கக்கூடியவர்கள்.
கிருஷ்ணதேவராயரின் ராஜகுருவாக இருந்தவர், 'கோடி கன்யாதானம் தாதாச்சார்யார்'. இவர் வைஷ்ணவர். இஷ்டதெய்வமாக திருமகளை வழிபட்டவர். அவளுடைய உபாசனையால் தினந்தோறும் ஸ்ரீலட்சுமியால் அவருக்குப் பொற்காசு கொடுக்கப் பட்டுவந்தது. அதைக்கொண்டு அவர் பல்லாயிரக்கணக்கான ஏழைக் கன்னிப்பெண்களுக்குத் திருமணம் செய்து வைத்தார். ஆகவேதான் அவரைக் 'கோடி கன்யாதானம் தாதாச்சார்யார்', என்று அழைத்தார்கள்.
அவருடைய செல்வாக்கால்தான் கிருஷ்ணதேவராயரும் திருவேங்கடநாதனின் தீவிர பக்தனாக விளங்கினார். திருமலைக் கோயிலுக்கு ராயர்தான் மிக அதிகமான திருப்பணிகளையும்
செய்திருக்கிறார்.
தென்னாட்டில் குறிப்பாக ஆந்திராவில் பெருமாள் வழிபாடு மிகுதியாக இருப்பதற்கு முக்கிய காரண கர்த்தா தாதாசாரியர்தான்.
மஹாராஷ்ட்டிரர்கள் ஆஞ்சனேய வழிபாட்டைப் பரப்புமுன்னரே அவர் அதனைச் செய்து விட்டார். பல இடங்களில் அவர் அனுமார் கோயில்களைக் கட்டினார்.தண்ணீர் பற்றாகுறை தீரும்வண்ணம் பல ஊர்களில் அவர் குடிதண்ணீர்க் குளங்களை அவருடைய செலவில் வெட்டுவித்திருக்கிறார். அவற்றில் பல, இன்றும் இருக்கின்றன. அவற்றை தாதாச்சாரியாரின் பெயராலேயே 'தாதன் குளம்' என்று அழைப்பார்கள்.
அவர் கோடிகன்யாதானமும் பல அறச்செயல்களும் செய்திருக்கிறார். அதற்கு உதவியது..... பொன்மழை.
==============================
நம்பி சொல்கிறீர்களோ, நம்பாமல் சொல்லுவீர்களோ - ஆனால், வெறுமனே கனகதாரா ஸ்தோத்திரம் அனுதினமும் சொல்ல , சொல்ல உங்களுக்கு , அடிப்படை பொருளாதார தேவைகள் விரைவில் நிறைவேறும்... இது 100 % - உண்மை. இதை அனுபவபூர்வமாக உணர்ந்தவர்கள் , நானறியவே , அதிகம் பேர் உள்ளனர்... ! உங்களுக்கு பண நெருக்கடி வராமலும் இது தடுக்கும்.. நம்பிக்கையுடன் முயற்சி செய்து பாருங்கள்.. !
=============================
No comments:
Post a Comment