Tuesday, September 20, 2011

சனி தோஷம் நீக்கும் கூர்ம மூர்த்தி


சனி தோஷம் நீக்கும் கூர்ம மூர்த்தி

Swine Flu
திருமாலின் தசாவதாரங்களில் இரண்டாவது, கூர்மம். தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடையும்போது மந்தார மலையை தாங்கியபோது மட்டுமல்லாமல், அதன் பின் பல சமயங்களில் கூர்மமாக வடிவெடுத்திருக்கிறார் மாலவன்.

ஸ்வேதபுரத்து அரசர் ஸ்வேதனின் மனைவி விஷ்ணு
ப்ரியா. அவளும் திருமாலின் பக்தை. அவள் ஒரு ஏகாதசி திதியன்று பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டிருந்தாள். அப்போது ஸ்வேத மன்னன், மனைவியை காதலுடன் பார்த்தான். அவளோ கூர்மாவதார தினமான அன்று கணவன்&மனைவி தாம்பத்யம் கொள்ளலாகாது என்று தெரிந்தும் மன்னன் இப்படி நடந்து கொள்கிறாரே... விரத பங்கம் ஒருபக்கம்; பதி விருப்பத்தை நிறைவேற்றாத பாவம் ஒருபக்கம். என்ன செய்வது? ‘மாதவா நீயே கதி’ என்று திருமாலை மானசீகமாகப் பிரார்த்தனை செய்தாள். அப்போது திடீரென தம்பதியிடையே ஒரு நதிப் பிரவாகமாக ஓடியது.

அதைக் கண்டு திடுக்கிட்ட மன்னன், அப்போதும் தாபம் குறையாமல், ‘‘மாதவா! நான் இந்த ஆற்றைக் கடக்க, என்னைத் தாங்கிச் செல்லும் கூர்மமாகத் தாங்கள் வரவேண்டும்” என வேண்டினான். அப்படியே திருமாலும் கூர்மமாக மாறி நதியில் மிதந்து வர, பளிச்சென்று மன்னனுக்கு ஞானம் பிறந்தது. அந்த அவதாரத் திருவுருவிலேயே திருமாலுக்கு அங்கு ஒரு ஆலயம் எழுப்பினான். பெருமாள் மிதந்து வந்த நதி சுருங்கி ஸ்வேத புஷ்கரணியாயிற்று. அத்தலம் ஸ்வேதபுரம் ஸ்ரீகூர்மம் எனப் பெயர் பெற்றது.
 
ஸ்வேத மன்னனுக்கு அருளிய திருமால், இத்தலத்தில் கூர்ம நாயகித் தாயாருடன் கூர்மநாதராக அருள்புரிகிறார். கூர்மநாதர் திருமுகத்தில் திருநாமம் வெள்ளித் தகட்டிலும் விழிகள் தங்கத்தாலும் வால்பகுதி சாளக்ராமத்தாலும் அமையப் பெற்று அதிரூப லாவண்யத்தோடு தரிசனமளிக்கிறார்.
  இத்தலம் முன்பு கூர்ம லிங்கேஸ்வரம் எனும் பெயருடன் வழங்கப்பட்டு சைவாகம பூஜா விதிமுறைப்படி பூஜைகள் நடைபெற்றதாகவும் கூறுவர். பஞ்சலிங்க ஆத்மஸ்தலம் எனும் பெயரையும் இத்தலம் பெற்றது குறிப்பிடத்தக்கது. பகவான் ராமானுஜர் தமது திக்விஜயத்தின்போது இத்தலம் வந்தார். அங்கு திருமாலே சாளக்ராம வடிவில் ஆமை
வடிவில் அருள்வதை உணர்ந்தார். உலகோருக்கு அதை அறியவைக்க வேண்டி அந்த ஆலயத்தின் கிழக்கு வாசல் எதிரில் கொடிமரம் அமைந்திருந்த இடத்தினருகில் சென்று நெடுஞ்சாண் கிடையாக வணங்கி ஆலயத்தை வலம் வந்தார். அவர் தெற்கு திசை நோக்கித் திரும்பியபோது கருவறையில் வீற்றிருந்த கூர்மமூர்த்தியும் அத்திசை நோக்கித் திரும்பி நிலைகொண்டது. உடனே கொடிமரமும் மேற்கில் திரும்பி விட்டது. இதைக் கண்டு வியந்த மக்கள் அன்றிலிருந்து கூர்மமூர்த்தியை திருமாலாக ஆராதிக்கத் தொடங்கினர். கி.பி. 1281ல் ராமானுஜர் இத்தலத்தை புனருத்தாரணம் செய்துள்ளார். கூர்மாவதாரத்திற்கென உலகில் உள்ள ஒரே கோயில் இதுதான். சுவாமி தேசிகன் இயற்றிய தசாவதார துதியில் இந்த கூர்மமூர்த்தி சனி தோஷம் தீர அருள்பவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஆந்திர மாநிலத்தில் விசாகப்பட்டினம் நகரிலிருந்து ஸ்ரீகாகுளம் என்ற ஊர் சுமார் நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதிலிருந்து நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தொலைவில் அம்புக் குறியிடப்பட்ட பாதையில் ஸ்ரீகூர்மம் பெயர்ப்பலகை நம்மை வரவேற்கிறது. அந்த நெடுஞ்சாலையிலிருந்து பிரியும் சாலையில் 3 கி.மீ தொலைவில் வண்டியில் பயணித்தால் கூர்மநாதர் ஆலயத்தை அடையலாம்.

No comments:

Post a Comment