Posted On July 8,2012,By Muthukumar |
நாம்
பகவானை அடைய வேண்டுமானால், பல ஜென்மாக்களில், பகவானை வழிபட்டு பக்தி
செய்திருக்க வேண்டும். ஒரே ஜென்மாவில் இது சாத்தியமில்லை. பகவான், மேல்
தட்டில் நின்று கொண்டு, கைகளை நீட்டி, நம்மை வரவேற்க காத்துக்
கொண்டிருக்கிறான். நாம் தாம் ஒவ்வொரு படியாக ஏறி, அவனை அடைய வேண்டும்.
அப்படி ஏறி, கடைசி படிக்கு போய்
விட்டால், அவன், தன் கைகளை நீட்டி, நம்மை அழைத்துக் கொள்வான். இது தான் வாழ்க்கையின் லட்சியமாக இருக்க வேண்டும்.
நாம் கடைசி படிக்கு போய்விட்டாலும் கூட, கால் தவறி கீழே விழுந்து விட்டால், மறுபடியும் முயற்சி செய்து மேல்படிக்குப் போக வேண்டும்.
இங்கே ஒரு படி என்பது, ஒரு ஜென்மா. இப்படி, பல ஜென்மாக்களிலும் அவனையே வழிபட்டு வந்தால், ஏதாவது ஒரு ஜென்மாவில், அவனை அடையலாம். அது, எந்த ஜென்மா என்பது தான் தெரியாது. அதனால், தொடர்ந்து ஒவ் வொரு ஜென்மா விலும் வழிபட்டுக் கொண்டே வர வேண்டும். இதற்கு, ஒவ்வொரு ஜென்மாவிலும் மனிதப்பிறவி எடுக்க வேண்டும். ஆனால், இங்கேயும் ஒரு சங்கடம் உள்ளது. அடுத்து மனிதப் பிறவியே கிடைத்து விடுமா? அவனவன் செய்த பாவ புண்ணியங்களுக்குத்
தகுந்தபடி தான் மறு ஜென்மா ஏற்படு கிறது. புண்ணியசாலியாக இருந்தால், மீண்டும் மனிதப் பிறவி கிடைக்கும். அப்போதும் பகவானை வழிபட வேண்டும். நற்கதி பெற வேண்டும் என்ற புத்தி ஏற்பட வேண்டும்.
இப்படியே பல ஜென்மாக்களிலும் பகவானை பக்தி செய்து, கடைசி ஜென்மாவில் அவனை அடைய வேண்டும். நடுவில் ஏற்படும் ஜென்மாக்களில், தொடர்ந்து பக்தி செய்து வர முடியுமா என்றால், முடியும். அதற்கு, ஸத் சங்கத்தின் தொடர்பு இருக்க வேண்டும். ஒருவன் கோவிலுக்குப் போக கிளம்புகிறான். வழியில் ஒரு நண்பன் வருகிறான். "டேய்... வாடா... இன்னிக்கு
தியேட்டரில் புதுப் படம் ரிலீஸ் ஆகிறது. முதல் ÷ஷா பார்த்து விட்டு வரலாம்...' என்று கையை பிடித்து இழுக்கிறான். இவன் திட சித்தமுள்ளவனாக இருந்தால், "நான் சினிமாவுக்கு வரவில்லை...' என்று சொல்லி, கோவிலுக்குப் போவான். இல்லாவிட்டால், நண்பனோடு சேர்ந்து, சினிமாவுக்கோ, சூதாட்ட கிளப்புக்கோ தான் போக வேண்டியிருக்கும். அதுவுமில்லாவிட்டால் தெருவோரம் நடக்கும் ரிக்கார்டு டான்சுக்கு போய், வேடிக்கை பார்த்துவிட்டு வருவான்.
கோவிலுக்கு போக கிளம்பியவன், தகாத சகவாசத்தினால், வேறு எங்கேயோ போய் வருகிறான். இப்படி இருந்தால், பல படிகளை கடந்து பகவானை அடைவது எப்படி? அதனால்தான், "நல்லவர்களோடு சேர்ந்திரு... ஸத் சங்கத்தை, நாடு...' என்றனர். இப்படி செய்து தான் பகவானை அடைய முடியும். சும்மா சினிமாவும், ரிக்கார்டு டான்சும் பகவானை அடையும் மார்க்கமல்ல. தெரிகிறதா?

No comments:
Post a Comment