Posted On July 18,2012,By Muthukumar |
அருளை நல்கி, மருளைப் போக்கும் கருணைக் கடல் இறைவன். அகந்தையை விட்டொழித்து, `நீயன்றி வேறு கதி இல்லை' என்ற மனோபாவத்தோடு, நம் உடலை தரையில் கிடத்தி இறைவனை வணங்குவதே நமஸ்காரத்தின் உட்பொருள். நமஸ்கார வகைகள் வருமாறு...
ஏகாங்க நமஸ்காரம்:- தலையை மட்டும் குனிந்து வணங்குவது,
த்ரியங்க நமஸ்காரம்:- தலைக்கு மேல் இரு கரங்களையும் கூப்பி வணங்குதல்,
பஞ்சாங்க நமஸ்காரம்:- (பெண்களுக்கு மட்டும்) கைகள் இரண்டு, முழங்கால் இரண்டு, தலை ஆக 5 அங்கங்கள் தரையில் படும்படி நமஸ்கரித்தல்,
அஷ்டாங்க நமஸ்காரம்:- (ஆண்களுக்கு) தலை, கை இரண்டு, இரு காதுகள், மார்பு, இரு கால்கள் ஆகிய 8 அங்கங்கள் தரையில் படவேண்டும்.
இறைவனுக்கு 3 முறை, சன்னியாசிகளுக்கு 4 முறை, தாய்-தகப்பனுக்கு ஒருமுறை நமஸ்காரம் செய்ய வேண்டும்.
மனிதர்களுக்கு
நமஸ்காரம் செய்யும் போது, அவர்கள் அவசியம் ஆசியளிக்க வேண்டும். கோவிலில்,
இறைவனைத்தவிர வேறு யாருக்குமே நமஸ்காரம் செய்யவே கூடாது.
No comments:
Post a Comment