Thursday, July 5, 2012

இடைக்காட்டு சித்தரின் ஜீவசமாதி,திருஅண்ணாமலை


Posted On July 05,2012,By Muthukumar



சித்தர்களில் முக்கியமானவர் இடைக்காடர்.புரட்டாசி மாதம் வரும் திருவாதிரை நட்சத்திரநாளன்று(7.10.2012 ஞாயிறு காலை 6.08 மணியிலிருந்து 8.10.2012 திங்கள் காலை 8.14 வரை) மதுரைக்கு அருகில் இருக்கும் இடைக்காட்டூரில் பிறந்தவர்,இவர் தனது கர்மப்படி,ஆடு மேய்த்துகொண்டிருந்தார்;வானில் பயணித்துக்கொண்டிருந்த ஒரு சித்தர் ,இவரது ஆத்ம ஒளியை உணர்ந்து,பூமியில் இறங்கி வந்து,இவருக்கு ஜோதிடம்,ப்ராணயாமம்,சித்துக்கலைகளைக்கற்றுக்கொடுத்து     விட்டு புறப்பட்டார்.நவக்கிரகங்களையே பூமியில் வாழும் மனிதர்களின் நலனுக்காக மாற்றியவர்.


திரு அண்ணாமலை கோவிலுக்குள்ளே கோசாலை இருக்கிறது.அந்த கோசாலையில் இந்தபதிவில் கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் போன்ற இடம் தெரியும்.இந்த இடமே இடைக்காடர் இன்றும் தவம் செய்யும் இடம் ஆகும்.இங்கே பின்வரும் பொருட்களுடன்  எட்டு சனிக்கிழமைகளுக்கு மாலை 5 மணி முதல் 8 மணிக்குள் வர வேண்டும்.


1.முழுக்க முழுக்க ரோஜாப்பூக்களால் கட்டப்பட்ட மாலை
2.ஒரு கிலோ டயமண்டு கல்கண்டு
3.விதையில்லாத கறுப்பு திராட்சை அரைக்கிலோ(வருடத்தில் ஒரு சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும்)
4.விதைகள் நீக்கப்பட்ட பேரீட்சைபழம் ஒரு பாக்கெட்
5.வெற்றிலை பாக்கு,தரமான பத்திப்பாக்கெட் ஒன்று
6.ஆறு நாட்டு வாழைப்பழங்கள்
7.நெய் தீபம் ஏற்றத் தேவையான பொருட்கள்


இவைகளைக் கொண்டு வந்து,இவரது ஜீவசமாதியில் படையலிடவேண்டும்.அதாவது,டையமண்டு கல்கண்டு பாக்கெட்டை கிழித்து ஒரு காகிதத்தில் கல்கண்டுகளை வைக்க வேண்டும்;வெற்றிலைப்பாக்கினை வைக்க வேண்டும்;விதையில்லாத கறுப்பு திராட்சைகளை தரையில் வைக்க வேண்டும்.ஆறு நாட்டுவாழைப்பழங்கள் மீது பத்தியைப்பொறுத்தி வைக்க வேண்டும்;நெய்தீபத்தை ஏற்ற வேண்டும்.மஞ்சள் துண்டினை விரித்து ஒரு மணி நேரத்துக்குக் குறையாமல் ஓம்சிவசிவஓம் என்று ஜபிக்க வேண்டும்;ஜபிக்கும்போது இரு கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் கையில் இருக்க வேண்டும்.ஜபிக்க ஆரம்பிக்கும்போது,நமது கோரிக்கைகளை மனதில் நினைத்து வேண்ட வேண்டும்.பிறகு,டையமண்டு கல்கண்டு,விதையில்லாத திராட்சை மற்றும் பேரீட்சை பழங்களை கொஞ்சம் அங்கே விநியோகிக்க வேண்டும்.


அண்ணாமலைக்குச் செல்லமுடியாமல் தவிப்பவர்களுக்கும்,அயல் நாடுகளில் இருப்பவர்களுக்கும் என்ன வழி?
இந்த புகைப்படத்தை கம்யூட்டர் வால்பேப்பராக வைத்து வழிபாடு செய்யலாம்; அல்லது புகைப்படத்தை பிரிண்ட் எடுத்து பூஜை அறையில் வடக்கு நோக்கி வைத்து இதுபோல வழிபடவேண்டும்.சில நாடுகளில் மேற்கூறிய பொருட்கள் அனைத்தும் கிடைப்பது அரிது;அப்போது,அவர்கள் டயமண்டு கல்கண்டு,விதையில்லாத பேரீட்சை இவைகளுடன் இடைக்காடர் சித்தரின் போட்டோவின் முன்பாக ஒரு பாட்டில் சுத்தமான தண்ணீரை வைத்து தினமும் ஒரு  மணி நேரம் வரை ஓம்சிவசிவஓம் என்று ஜபித்து வர வேண்டும்.மாதம் ஒருமுறை பழங்களையும்,தண்ணீரையும் மாற்றினால் போதுமானது.அதுவரை அந்த பழங்கள் அப்படியே படையலாக இருக்கலாம்.இதில் எச்சரிக்கையான விஷயம் என்னவெனில்,இடைக்காடர் சித்தர் படம் இருக்கும் இடத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.ஒருபோதும் மன்மதச் செயல்களில் ஈடுபடக் கூடாது.மனதைக்கட்டுப்படுத்திட முடியாதவர்கள் இந்த வழிபாட்டுமுறையைச் செய்யாமல் இருப்பதே சிறந்தது.(வீட்டில் வைத்து வழிபடும் முறையை இவ்வாறு குறிப்பிடுகிறோம்)


அல்லது


திருவாதிரை நட்சத்திரமும் சனிக்கிழமையும் சேர்ந்து வரும் நாட்களில் மட்டும் இவ்வாறு வழிபாடு செய்வது மிகவும் அளவற்ற அருளைத் தரும் என்பது நிரூபிக்கப்பட்ட ஆன்மீக ஆராய்ச்சி உண்மையாகும்.3.11.2012 சனிக்கிழமை மதியம் 1.14 முதல் 4.11.2012 ஞாயிறு மதியம் 3.24 வரை திருவாதிரை நட்சத்திரம் அமைந்திருக்கிறது.இந்த நாளில் சனிக்கிழமையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.அடுத்தபடியாக 1.12.2012 சனிக்கிழமை முழுவதும் திருவாதிரை நட்சத்திரம் வருகிறது.


இவ்வாறு செய்தால்,நேர்மையை தனது சுபாவமாகக் கொண்டிருக்கும் ஜோதிடர்களும்,தன்னலம் கருதாத  குணத்தைக்கொண்ட திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்,ஆழ்ந்த சிவபக்தி கொண்ட எந்த ராசி/நட்சத்திரக்காரர்களும் மிகுந்த ஏற்றம் பெறுவார்கள்.

No comments:

Post a Comment