Posted on July 27, 2012 by muthukumar
அண்மையில் காஞ்சிபுரம் சென்றபோது திருவெஃகா என்ற கோயிலு க்குப்
போனேன். இங்கு பெரு மாளின் பெயரே ரொம்ப வித்தி யாசமானது. ‘சொன்ன வண் ணம்
செய்த பெருமாள்’ என்று பெயர், இங்கே துயில் கொண்டி ருக்கும் ரங்கநாதருக்கு.
திரும ழிசை ஆழ்வார், இந்தக் கோயி லில் இருந்தபோது, தனக்குப் பணிவிடைகள்
செய்த ஒரு கிழவியைச் சட்டென்று இளம் பெண் ஆக்கி விட்டாராம். இத னைக்
கேள்விப்பட்ட அந்த நகரத்து அரசன் தன் கிழத்தனத்தையும் போக்குமாறு இவரது
சீடன் கனிகண்ணன் மூலம் சொல்லி அனுப்பி னான். ஆழ்வார் மறுத்து விட்டார். அரசன் கோபம் கொண்டு சீடன் கனிகண்ணனையும் ஆழ்வாரையும் நகரத்தை விட்டு வெளியேற உத்தரவு
போட்டான். திருமழிசை ஆழ் வார் கோயிலில் சயனக்கோல த்தில் இரு ந்த
பெருமாளையும் ‘எழுந்திரு போகலா ம்’ என்று சொல் ல, அதன்படியே அவரும் தன்
பாம்பணைப் படுக்கையைச் சுருட்டிக் கொண்டு உடன் சென்று விட்டாராம். இதைப்
பார்த்து மற்ற தேவதை களும் உடன் சென்றுவிட, கோயில்கள் காலியா கிவிட்டன.
அரசன் தன் தவற்றை உணர்ந் து ஆழ்வாரை அணுகி மன்னிப்புக் கேட்க , ஆழ்வார்
திருமாலிடம் ‘சரி வாரும்; திரு ம்பச் செல்லலாம்’ என்று சொல்ல, அவ ரும்
திரும்ப வந்து படுத்துக் கொண்டாரா ம்! இந்தக் கதையின் ஆதாரம், திரு மழிசை
ஆழ்வார் பாடியதாகச் சொல் லப்படும் இரு தனிப்பாடல்கள்:
கனிகண்ணன் போகின்றான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்.
-என்று முதல் பாடல் எழுதி, சமாதானம் ஆன பின் இரண்டாம் பாடல் எழுதினார்:
கனிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழிந்தான் நீயுழன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.
மணிவண்ணா நீ கிடக்க வேண்டா – துணிவுடைய
செந்நாப் புலவனும் செல்கின்றேன் நீயும் உன்றன்
பைந்நாகப் பாய் சுருட்டிக்கொள்.
-என்று முதல் பாடல் எழுதி, சமாதானம் ஆன பின் இரண்டாம் பாடல் எழுதினார்:
கனிகண்ணன் போக்கொழிந்தான் காமரு பூங்கச்சி
மணிவண்ணா நீ கிடக்க வேண்டும் – துணிவுடைய
செந்நாப் புலவனும் செலவொழிந்தான் நீயுழன்றன்
பைந்நாகப் பாய் படுத்துக்கொள்.
என்ன அழகான வெண்பா! இரு வெண்பாக்களிலும் உள்ள ‘துணிவு டைய செந்நாப் புலவன்’ என்ற சொற்றொடரில் என்ன ஒரு கம்பீரம்! சமண
மதத்தில் மருள் நீக்கியாராக இருந்தவர் திருநாவுக்கரசராக மாறி சை வத்தில்
சேர்ந்து விட்டார் என்று கேள்வி ப்பட்டதும் மன்னன் மகேந்திர பல்லவன்
கோபப்பட்டான். அவரை விசாரணைக்கு அழைத்துவர ஆள் அனுப்பினான். கட் டளையைக்
கொண்டு போன ராஜ தூதர் கள் அந்த மகா புருஷரைக் கொஞ்சம் அச்சுறுத்தினார்கள்.
‘எனக்குத் தலைவன் சிவபெருமான்தான்; உங்களுடைய அரச ன் கட்டளையை நான் மதிக்க
மாட்டேன்!’ என்று திருநாவுக்கரசர் கூறித் தூதர்க ளை திடுக்கிடச் செய்தார்.
‘உம் மைச் சுண்ணாம்புச் காளவாயில் போடுவோம் ; யானையின் காலால் மிதிக்கச்
செய்வோம், கழுத்திலே கல்லைக் கட்டிக் கடலில் போடுவோம்’ என்றெல்லாம்
தூதர்கள் பயமுறுத்திய போது திருநாவுக்கரசர் ஒரு பாடலைப் பாடினார்.
‘நாமார்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை’
நரகத்தி லிடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோ மல்லோம்
இன்பமே எந்நாளுந் துன்பமில்லை’
அரச
கட்டளை வரும்போது ‘பணிவோமல்லோம்’ என்று கூறும் நெஞ்சத்தில் எத்தனை துணிவு!
‘ஒரு லோக்கல் கவுன்சிலரை எதிர் த்தால் வீட்டுக்கு ஆட்டோ வருமோ’ என்று
பயப்படும் தலைமுறையி ல் வாழும் நமக்கு, எல்லாவற்றையும் துறந்த ஞானிகளின்
தைரிய மும்
வீரமும் ஆச்சரியமாகத் தான் தெரிகின்றன. சீக்கியர்களி ன் ஒன்பதாவது குரு,
தேஜ் பஹ தூர். அவுரங்கசீப் டெல்லியை ஆட்சி செய்த காலம் அது. காஷ் மீரில்
வசித்த இந்துக்க ளை கசையால் அடித்து மத மாற்றம் செய்து வந்தது அவுரங்
கசீப்பின் அரசாங்கம். அந்த இந்துக்கள் தேஜ் பகதூரின் உதவியை நாடி னார்கள்.
‘குருவை மதமாற்றம் செய்தால் எல்லா இந்துக்களும் மாறுகிறோம்’ என்று அரசரிடம்
போய் சொல்லச்சொன்னார், குருதேஜ் பஹதூர் சிங். இத்தனைக்கும் அவர் இந்து
அல்ல! ஆனால் அவரவர் மத நம்பிக்கைகள் அவரவர் களுக்கு இருக்க வேண்டும் என்ற
எண்ணம் கொண்டவர். இந்துக் கள் அரசரிடம் போய்ச் சொல்ல ஆணவம் பிடித்த சீக்கிய
குருவை சங்கிலியில் பிணைத்து இரும்புப் பெட்டியில் பூட்டி எடுத்து வரச்சொ
ல்லி உத்தரவு வந்தது. அப்படியே எடுத்து வரப்பட்ட சீக்கிய குரு சொல்ல
முடியாத சித்திரவதைகளுக்கு ஆட்படுத்தப்பட்டார். இறுதி வரை எல்லா
சித்திரவதைகளையும் இன்முகத்துடன் ஏற்று மதம் மாற மறுத்தார். டெல்லியின்
நடுத்தெருவில் அவர் தலை வெட்டி எறியப்பட்டது. தோல்வி என்ன வோ மன்னன் அவுரங்க சீப்பிற் குத்தான்.
‘துறவிக்கு
வேந்தன் துரும்பு’ என்ற நம் பழைய பொன்மொழி விலை மதிப்பற்றது. நம் எளிய
சராசரி வாழ்வில் அச்சமே நமது ஆசாரமானது. அலுவலக த்தில் மேலதிகாரியிடம்
பயம்; வீட்டில் வேலைக்காரர்களிடம் பயம்; அநீதியைக் கண்ணால் பார்த்தால்
பயம்; பற்றியது விலகு மோ என்று பயம்; விலகியது பற்றுமோ என்று பயம்; கேட்டது
கிடைத் தால் நிலைக்குமோ என்ற பயம் – என்று கிட்டத்தட்ட தெனாலி ஸ்டைலில்
வாழும் நமக்கு, அரசன் ஒரு ஆணையிட்டபோதும் அதை மறுதலித்த மனத்தின் சிந்தனைப்
பின்னல்கள் புரியவே புரியாது. இறைவனுக்கு தன்னை முழு வதுமே ஒப்புக்கொடுத்துவிட் ட மனதில்தான் இத் தைரியம் வரும்.
நவகாளியில்
இந்து, முஸ்லிம் கள் கடும் போராட்டம். காந்தி உண் ணாவிரதம் இருக்கிறார்.
ராணுவத்திற்கும் அடங்காத கலவரம், ஒரு மெலிந்த கிழ வரின் உண்ணாவிரதத்தின்
முன் ஒடுங்கியது. ஒரு இஸ்லாமியர் ஒரு ரொட்டியுடன் வந்தார். காந்தியின் மேல்
அதைத் தூக்கி எறிந்தார். ‘ஏன் உண்ணாவிரதம் இருந்து எங்களை கொடு மைப்
படுத்துகிறாய்?’ என்று கர்ஜித்தார். ‘என் குடும்பத்தையே ஒரு ஹிந்து
கொன்றுவிட்டான். நான் கத்தியை எடுத்துப் போனேன். நாலு ஹிந்து குழந்தையைக்
கொன்றேன். இன்னும் என் வெறி அடங்கவில்லை. இது அடங்காது. நீ உண்ணா விரதம்
இருந்தால், என் கோபம் சரியாகுமா?’ என்று அலறினான். உண்ணாவிரதப் பந்த லில்
மயான அமைதி நிலவியது. காந்தி மெலிந்த குரலில் பதில் சொன் னார். ‘அடங்கும்.
உன் கோபம் தணியு ம்.’ ‘எப்படி?’ என்றார், அந்த மனிதர். ‘கலவரத்தில்
அநாதையான ஒரு ஹிந்துக்
குழந்தையை எடுத்து வளர்த்து வா. உன் கோபம் அடங் கும்’ என்றார் காந்தி.
உண்ணாவிரதத்தால் உடல் தளர் ந்து போன ஒரு கிழவரின் குரலில் என்ன கம்பீரம்,
என்ன சக்தி! வந்தவர் கொஞ்ச நேரம் சிலைபோல இருந்தார். விசும்பி விசும்பி
அழுதார். ‘பாபு, நீங்கள் சொன்ன தையே நான் செய்வேன்’ என்று சொல்லி ச்
சென்றார். ஆன்மிகத்தில் தோய்ந்து பதப்பட்ட மனமே அச்சங்களற்றது. ‘நா ளைப்
பொழுதை நடத்த இறைவன் உண் டு’ என்ற நம்பிக்கை நிறைந்த சுகம் மனி தர்களைப்
பார்த்து அஞ்சுவது இல்லை. பெரியோரை வியத்தலும் சிறியோரை இகழ்தலும் இல்லாத
சமநிலை அந்த அகத்துக்கு மட்டுமே இயல்பு. எது சத்தியமோ அதை எந்தச்
சூழ்நிலைக்கும் அஞ்சாது இனிய சொற் களால் கம்பீரமாகச் சொல்ல யாரால்
முடிகிறதோ அவர்களே இந்தத் தேசத்தின் ஆன்மிகப் பேராற்றலை
யுகயுகாந்திரங்களாகக் காத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment