Posted on January 26, 2012 by muthukumar
சிவலிங்க வழிபாடு இந்தியாவில் குறிப்பாக திராவிட இனத்தில் சிந்து
சமவெளி நாகரீகம் தொட்டே நடைபெற்றுவருவதென்பதற்கு சாட் சியாக ஆங்கில
ஆய்வளர்க ளால் சிந்து சமவெளி நாகரீகத்தில் அகழ்ந் து எடுக்கப்பட்ட
நூற்றுக்கணக் கான சிவலிங்க உருவங்களே சாட்சி. ஆரியர்கள் இவ்வுருக்களை ஆண்
குறி வடிவம் என்று வேதங்களில் இழித்தே கூறி இருக்கின்றனர். சிவ லிங்க
உருவம் ஆண் குறி குறியீடா ? என்று பார்த்தால் அவ்வாறு பொருள ல்ல வென்றும்,
முழு முதற்கடவுளா கிய சிவபெருமானின் பேரொளியை தீ வடிவத் தில் வழிபட்டதும்
அத்தீ அமைக்க அமைக்கப்பட்ட வேள்விக் குழியே ஆவுடையார் எனும்
கீழ்பீடமாகவும். கொழுந்து விட்டொறிந்த ஜோதியே லிங்க வடிவமாகவும் வடிக்கப்
பெற்றதென்பர். அதாவது ஆண் பெண் வடிவ த்தினனில்லாத இறைவனை ஜோதியாக உருவகித்து வழிபட்டதே சிவலிங்க சொரூபமென்பர்.
ஆரியர்க்கு இறைவணக்கமெல்லாம் இந்திரன், வருணன் போன் றோர்காக
செய்யப்படும் வேள் வித்தீயும் அதற்கு முன் இடப்ப டும் குதிரை, காளை
ஆகியவற் றின் உயிர்பலியுமேயாகும் என் பது வேதங்களில் தெளிவாக் கப்பட்டு
இருக்கிறது. ஆரியர்க ளின் வேள்வியை காக்கும் பொருட்டு அவிற்பாகம் பெற் றுக்
கொண்டு வேள்வியை அழி க்கவரும் அசுரர்களை அழிப்ப தே ருத்திரன் எனும் வேத
தெய் வம் என்பர். சுரர் என்றால் சுரா பாணம் அருந்துபவர்கள் அதாவது
தேவர்கள். அசுரர் என்றால் சுராபாணம் அருந்தாதவர்கள். சுரா பாண ம் என்றால்
கள் என்றே சொல்லப்படுகிறது. அசுரர்கள் எனப்பட்டோ
ர் வேத வேள்வியின் உயிர் கொலை யை கண்டித்து அதனை அழிக்கவே முற்பட்டு
இருக்கின்றனர். அவர்க ளையெல்லாம் ருத்திரன் மற்றும் கண்ணன் ஆகியோரால்
அழிக்கப்ப ட்டதா கவே வேத சுலோகங்கள் சொல்லுகின்றன.
வேதவழி
வேள்வி வீழ்ச்சியுற்றபின்பு அதாவது கொல்லாமை அறம் ஓங் கியபோது
சிவலிங்கவழிபாட்டை ஏற்றுக் கொண்ட ஆரியர்கள், வேள் வியின் அடையாளமே தீப அடை
யாளமான ஜோதிர்லிங்கம் எனவேள்வியின் அடையாளமாகவே போற்ற ஆரம்பித்தனர். உயிர்
கொலையை மறந்தாலும் முன்பு செய்யப்பட்ட பலிகளின் அடையா ளமாக சிவ
லிங்கத்திற்கு முன்பு காளைமாட்டையும் அதன் பின்னே பலி பீடத்தையும் அமைத்து
வைத்து நந்தி என்று சொல்லியதாக அறியப் படுகிறது.
வெட்டப்போகும் மாட்டின் முன் சென்றால் அருவாள் நமது உடலிலும் விழ லாம்
என்ற பொருளிலேயே ‘நந்தியின் குறுக் கே செல்லக் கூடாது’ என்ற எச்சரிக்கை வழ
க்கும் வந்திருக்கிறது.
வேள்விக்கு
முன் உயிர்கொலை என்னும் இந் நேரடி பொருள் பொதிந்த நந்தி மற்றும் பலி
பீடத்தை மறைப்பதற்காக தமிழ்சைவர்கள் உயர்தத்துவத்தின் பொருளாக மாற்றி வைத்தனர். அதாவது இறைவனாகிய பதியின் முன் பசுவாகிய ஆத்மா தனது ஆணவ மலத்தை பலி
இடுவதின் குறியீடே நந்தி மற்றும் பலிபீடம் என்று ஆகமங்களில் மாற்றி
எழுத்தப்பட்டு உயிர்கொலையின் வடிவு தத்துவ அடையாள மாக மாறியது.
No comments:
Post a Comment