Posted on January 17, 2012 by muthukumar
சிறு வயதில் கிராமபுறத்தில் குழந்தைகளை கடைக்கு செல்ல ஒரு 2 (ரெண்டு) , 8(எட்டு) வெச்சு இங்க இருக் கிற கடைக்குப் போயிட்டு வா கண்ணு என்று சொல்வதை கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?
திருமூலர்
மற்றும் எல்லா ஞானிகளும் இந்த 2, 8 பற்றி பேசு கிறார்கள் – நாம்
வழக்கத்தில் உபயோகிக்கும் இந்த ரெண்டு மற்றும் எட்டுக்கும் ஞானிகள்
சொல்லும் 2, 8 க்கும் சம்பந்தம் இருக் கிறதா?
நிச்சயமாக இருக்கிறது!
முதலில் ஞான சற்குரு சிவசெல்வராஜ் ஐயாவின் திருமந்திர பாடலுக்கான விளக்கம் பார்ப்போம் பின் தமிழோடு இது எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை அடுத்து பார்ப்போம்.
“எட்டும் இரண்டும் அறியாத என்னை
எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்த பின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்.”
எட்டு – அ – வலது கண் …………. இரண்டு – உ – இடது கண்எட்டும் இரண்டும் அறிவித்தான் என்நந்தி
எட்டும் இரண்டும் அறிவால் அறிந்த பின்
எட்டும் இரண்டும் இலிங்கமதாகும்.”
இவைதான்
சூரிய சந்திரன், சிவசக்தி! எட்டும் இரண்டும் பத்தாகிய அக்னிஸ்தானம் ஆத்ம
ஸ்தானம் நம் தீ தான் நந்தி! இரு கண் மணி ஒளியை பெருக்கி உள்ளே ஜீவஜோதியை
நம் தீயை அடைந்ததால் அறிவித்தான் நந்தி! நந்தி அருளால் அறிவு துலங்க
அறிந்தனன் நான்! அது என்ன? ஆத்ம ஜோதி லிங்க வடிவமாம்! எட்டும் இர ண்டுமான
கண்களும் லிங்கம் போல தோன்றும் என்கிறார். சிவ லிங்கத்தை
மேலிருந்து பார்க்க வேண்டும்… பார்த்தால் மூன்று வட்டமே லிங்கம் என்கி
றார். ஞான சற்குருவின் உபதேசத்தால் தான் எட்டும் இரண்டும் அறிய முடியும்.
எட்டும் இரண்டும் பற்றி சொல்லாத ஞானி களே இல்லை! இது உங்கள் அறிவுக்கு எட்ட
வேண்டும். அடியேனால் முடிந்த வரை உங்கள் அறிவுக்கு எட்டும்படியாக கூறி
விட்டேன்! எட்டாத தூரத்தில் இல் லை! எட்டி பிடியுங்கள்! எண் குணன் அருள்
பரிபூரணமாக கிட்டும்!
எட்டு இரண்டு நமது தமிழ் மொழியுடன் எவ்வாறு பின்னி பினைந்திருக்கிறது என்பதற்க்கு ஒர் உதாரணம்
சிறு வயதில் நிச்சயமாக நாம் ஒவ்வொருவரும் “கடைக்கு போ” என்ற வார்த்தையை அவரவர் அம்மா வாயால் நிச்சயமாக கேட்டிருப் போம்.
நீங்கள்
கேட்டு இருக்கிறீர்களோ இல்லையோ… இந்த கதையில் வரும் “தணிகை மணி” பலமுறை
கேட்டு இருக்கிறான். கேட்ட மாத் திரத்தில் சலிப்பாகவும், கசப்பாகவும்
இருக்கும் அவனுக்கு. ஏன் எனில் “தணிகை மணி” தான் கால்பந்து விளையாட செல்ல
வே ண்டுமே? கடைக்கு சென்றால கால்பந்து விளை யாட முடியாதே!!
உடனே அவன் சொல்லுவான்… போம்மா கடை ரொம்ப தூரம் என்று….
தாயுக்கும்
அவனை பற்றி தெரியும் அல்லவா…. இப்பொழுது அவள் அவன் பெயரை மறந்து விட்டு
என்னடா கண்ணா இப்படி சொல் கிறாய் என்பாள்… (ஆம், சிந்தியுங்கள் நாம்
குமார், கார்த்தி, ராம் அல்லது சிவா அல்லது எந்த பெயரில் இருந்தாலும் என்
அனைத்து தமிழ் தாய் மார்களும் சொல்வது “கண்ணா” என்று மட்டும்தான்… இங்கே
ஏன் அப்படி சொல்கிறார்கள் என்று நாம் சிந்தித்தால்… இது தான் சித்தர்கள்
சொன்ன மற்றும் வள்ளல் பெருமான் இறங்கி சொன்ன ஞான தவம்).
ஒரு
நொடியில் “தணிகை மணி” யாக இருந்து கண்ணணாக மாறிய அந்த பையன் சொல்வான்
போம்மா… கடை ரொம்ப தூரம்… கால் எல்லாம் வலிக்கும் என்று சொல்கிறான்.
கண்ணன் கள்வன் அல்லவா… அதை அவள் தாயும் அறிவாள் அல்லவா?
ஒரு பொய் கோபத்துடன்……….
டேய் கண்ணா ஒரு ரெண்டு எட்டு வைச்சா கடைக்கு போயிடலாம் ஆனா இதுக்கு போய் சலித்து கொள்கிறாயே என்று சொல்வாள்?
அவனும் ஒருவாறு சமாதனம் அடைகிறான் என தாய் தெரிந்து கொள்கிறாள்….
இப்பொழுது ராஜா இல்லை, என் கண்ணு இல்லை, போட கண்ணா என்று அவளும் குழைந்து சொல்கிறாள்….
மெல்ல… அவனுடைய திருவடிகளை எடுத்து வைக்கிறான்…
ஆம் 8 – லும், 2 – லும் வைக்கிறான்…. மெதுவாக நடக்கிறான்…
பின்னாடி இருந்து அம்மாவின் குரல் ஒலிக்கிறது….. என்னடா மச மச வென போய் கொண்டிருக்கிறாய்… விறு விறு என நடடா என்று….
வைக்கிறான் வேகமாக…8 , 2
2 , 8
8 , 2
2 , 8 என்று மாற்றி மாற்றி நடக்கிறான்.
தணிகைமணி போய் சேர்ந்தானா இல்லையா என்று கேட்கிறீர்களா………….
தணிகைமணி…..
அவந்தான் கண்ணன் னாயிற்றே
அவந்தான் ராஜா வாயிற்றே — போய் சேராமல் இருந்து விடுவானா என நான் கேட்கவில்லை வள்ளலார் கேட்கிறார்.
இதில் ரெண்டு, எட்டு மற்றும் கடை என்றால் என்னவென்று உங்களுக்கு புரிந்தால் போதும்
ரெண்டு – 2எட்டு – 8
வைத்தால்
கடை – ஞானம் (கடைந்தேருவது …. என்று பொருள்)
இந்த 8 ஐயும் 2 ஐயுமே கண்ணா(கண்கள்) என்று சொல்கிறார்கள்
இந்த கண்களையே ராஜா என்கிறார்கள்… ராஜா தானே ஆட்சியை பிடிப்பான் ( ஞானத்தை பிடிப்பான்)
No comments:
Post a Comment