Posted on Jan 19,2012,By Muthukumar |
மதுரை
மாவட்டம் திருமோகூரில் பிரசித்திபெற்ற காளமேக பெருமாள் கோவில்
அமைந்துள்ளது. காளமேகம் (கருமேகம்) நீரை தனக்குள் வைத்துக்கொண்டு, அதை
மக்களுக்கு மழையாக பெய்விப்பதுபோல இத்தலத்தில் மகாவிஷ்ணு, அருள் என்னும்
மழையை தருகிறார். அதன் காரணமாக இவர், `காளமேகப்பெருமாள்' என்று
அழைக்கப்படுகிறார்.
இங்கு
அருள்பாலிக்கும் மோகனவல்லி தாயார், தனது சன்னதியை விட்டு வெளியேறுவதில்லை
என்பதால், சுவாமியுடன் ஆண்டாள் பிரதானமாக புறப்பாடு ஆகிறாள். வைகாசி
பிரம்மோற்சவத்தில் காளமேகப்பெருமாள், ஆண்டாளின் மாலையை
அணிந்தபடி, சேர்த்தியாக காட்சி தருவார். பங்குனி உத்திரம், அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத்திருவிழா, மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன், ஆண்டாளை தரிசிக்கலாம்.
அணிந்தபடி, சேர்த்தியாக காட்சி தருவார். பங்குனி உத்திரம், அதற்கு மறுநாள் நடக்கும் தெப்பத்திருவிழா, மார்கழி 28 ஆகிய நாட்களிலும் சுவாமியுடன், ஆண்டாளை தரிசிக்கலாம்.
வைகாசி
பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாள் மற்றும் மாசி மகம் ஆகிய நாட்களில் மோகினி
வடிவில் சுவாமி காட்சி தருவார் இத்தலத்து பெருமாள். மாசி மகம் அன்று அருகே
உள்ள ஒத்தக்கடை நரசிம்மர் கோவிலுக்கு இந்த பெருமாள் செல்கிறார். அங்கு
அவருக்கு மோகினி வடிவில் அலங்காரம் செய்து, சடை பின்னி, எண்ணெய் தடவி
தைலக்காப்பு செய்கின்றனர். அன்று நள்ளிரவில் சுவாமி, கருட வாகனத்தில்
எழுந்தருளி, கஜேந்திரனுக்கு மோட்சம் கொடுக்கும் வைபவம் நடக்கிறது.
No comments:
Post a Comment