Posted On March 2,2012,By Muthukumar
குரு
என்றால் அவருக்கு சீடர்கள் இருக்க வேண்டும். குருவும், எல்லா கலைகளிலும்
தேர்ச்சி அடைந்திருக்க வேண்டும்; தபோபலம் மிகுந்தவராக இருக்க வேண்டும்.
அப்படி ஒரு குரு இருந்தார். அவருக்கு, நான்கு சீடர்கள் இருந்தனர்.
ஒரு நாள் சீடர்களைப் பார்த்து, "நான் காசிக்குப் போய் கங்கா ஸ்நானம் செய்ய வேண்டும்; என் னால் நடக்க முடியாது. என்னை, நீங்கள் நால்வரும் சுமந்து, காசியில் விட்டு விடுங்கள்...' என்றார்.
சீடர்கள் நால்வரும் அவரை சுமந்து நடந்தனர். இப்படி அவர்கள் செல்லும் போது, கொஞ்ச தூரம் போனதும், "என்னால் முடியவில்லை...' என்று சொல்லி, மூன்று சீடர்கள், ஒவ்வொருவராக பாதி வழியிலேயே நின்று விட்டனர். நாலாவது சீடன் மட்டும் சிரமப்பட்டு குருவை சுமந்து போய் காசியில் விட்டு விட்டு அவரை வணங்கி நின்றான்.
அப்போது, "அப்பனே... நீ தான் உண்மையான சீடன். எனக்கு நடக்க முடியாத அளவுக்கு எந்த நோயுமில்லை; உங்களை சோதிக்கவே அப்படி நடித்தேன். இதோ பார், என் கால்கள் நன்றாகவே உள்ளன...' என்று சொல்லி, நடந்து காண்பித்தார் குரு.
"நீ மட்டும் குருபக்தியின் காரணமாக என்னை சுமந்து வந்ததால், உனக்கு எல்லா கலைகளும் பூர்ணமாக சித்தியாகும். என்னை விட்டு விட்டுப் போன மூன்று சீடர்களுக்கும், நான் கற்றுக்கொடுத்த கலைகள் மறந்து போகும்...' என்றார்.
அதே போல் அவரை சுமந்து வந்த சீடன், எல்லா கலைகளிலும் உயர்ந்து, ராஜ சபையில் ஒரு வித்வானாக அமர்ந்தான். மற்ற மூன்று சீடர்களும் எல்லா கலைகளையும் மறந்து, தெருத்தெருவாக அலைந்து, திண்டாடினர்.
குரு - சீடன் என்றால், குரு என்ன சொல்கிறாரோ அதை சீடன் @கட்க வேண்டும்; அவர் என்ன செய்யச் சொல்கிறாரோ அதைச் செய்ய வேண்டும்.
கிருஷ்ணன் கூட, குருகுலவாசம் செய்தார்.
சாந்தீபினி முனிவரிடம் வேதம் பயின்றார்.
வேத ஸ்வரூபியான கிருஷ்ணனே குருகுல வாசம் செய்தது எதற்காக? நாமும் அதே போல் குருகுல வாசம் செய்யவேண்டும் என்ற எண்ணம், மற்றவர்களுக்கும் தோன்றட்டுமே என்று தான். இதெல்லாம் அந்தக் காலம்; இப்போது அப்படி இல்லையே!

No comments:
Post a Comment