Posted On March 18,2012,By Muthukumar
பொதுவாக மாசி மகம் என்பது ஒரு நீராடல் விழா. பழந்தமிழர் காலத்தில் இருந்தே இந்த நீராடல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இக்காலத்தில் சைவ, வைணவ ஒற்றுமை விழாவாகவும் இது கொண்டாடப்படுகிறது. சிவபெருமானிடம் இருந்து மாலை மரியாதைகளைப் பெருமாள் பெற்றுக் கொள்வதும், தான் அணிந்த மாலை பரிவட்டங்களைச் சிவபெருமானுக்கு அளிப்பதையும் இன்றும் கும்பகோணம் சென்றால் தரிசிக்கலாம். பின்னர் இருவரும் சேர்ந்து மாலை, பரிவட்டங்களை தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு அளிப்பார்கள்.
கடலூர் தேவனாம்பட்டினம் கடற்கரைக்கு திருக்கோவிலூர் உலகளந்த பெருமாளும், திருப்பாதிரிப் புலியூர் பாடலீஸ்வரரும் ஒன்று கூடி எழுந்தருளுவார்கள்.
ஸ்ரீமுஷ்ணம் பூவராகப் பெருமாள் கிள்ளைக் கடற்கரைக்கு பெருமாள் தீர்த்தவாரிக்காக வரும் போது, இஸ்லாமியர்கள் அவருக்குப் பட்டு சார்த்தி வழிபடும் வழக்கம் இன்றும் வழக்கத்தில் உள்ளது. ஆக, ஒற்றுமையின் விழாவாகவும் மாசி மகம் திகழ்கிறது.
|
No comments:
Post a Comment