Posted on March 31, 2012 by muthukumar
ராமநவமி
அன்று ஸ்ரீராமர் பட்டாபிஷேகப்படத்தையும், ராமாயண காவியத் தையும் பூஜை
யறையில் வைத்து வழிபட வேண்டும். அதோடு வடை, பருப்பு, பானகம், நீர்-மோர்,
பாயசம், ஆகியவற்றை நைவேத்யம் செய்து, பூஜையில் கலந்து கொள்பவர்களுக்கு
அவற்றைத் தர வேண்டும். இந்த விழா கொண் டாடப்படும் நேரம் கோடைக்காலம்
எனபதால் விசிறி தானம் செய்வது மிகவும் நல்லது. ராமநவமி
விரதம் இருக்கும் போது ” ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராமா” என்று 108 முறை
சொல்லி வழிபடுவது சிறப்பு. ராமநாமம் எல்லையற்ற ஆன்ம சக்கி தரக்கூடியது.”
ரா” என வாய் திறந்து உச்சரிக்கும்போது நமது பாவங்கள் எல்லாம்
வெளியேறிவிடுகின்றன என்றும், “ம” என உச்சரிக்க நம் உதடுகள் மூடும்போது அந்தப்பாவங்கள் மீண்டும் வராமல் தடுக்கப் படுவதாகவும் ஐதீகம்.
No comments:
Post a Comment