Posted On March 1,By Muthukumar |
பிப். 26. திருச்செந்தூர் மாசித்திருவிழா ஆரம்பம்!
தமிழகத்திலுள்ள
முக்கிய முருகன் கோவில்களில், மாசித்திருவிழா மிகவும் விசேஷம்.
முருகனுக்குரிய மகோற்சவம் இதுவே. மாசி மாத அஸ்வினி நட்சத்திரத்தில்
தொடங்கி, மகம் வரை விழா நடக்கும். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி
கோவில் மாசித்திருவிழா பிரசித்தமானது.
திருச்செந்தூர் என்றதும், நம் கண்களில் முதலில் தெரிவது அங்கிருக்கும் அழகிய கடல். இந்தக் கடலில் நீராடி மகிழ்வதில், பக்தர்களுக்கு அலாதி ஆனந்தம். சுனாமி வந்த போதும் கூட, சுப்பிரமணியர் அருளால், கடல் உள் வாங்கியதே தவிர, மக்களுக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. சூரபத்மனுடன், முருகப்பெருமான் போரிட்ட போது, அவன் கடலுக்குள் சென்று மறைந்தான். உடனே, முருகன், தன் வேலாயுதத்தை கடலை நோக்கி வீசினார். வேலுக்கு பயந்த கடல், அப்படியே உள் வாங்கியது என்று கந்தபுராணத்தில் வாசிக்கிறோம். அதே நிலை, இந்த கலியுகத்திலும் ஏற்பட்டது என்பதை நினைத்தால் புல்லரிக்கிறது. சுனாமியை வென்ற சுப்பிரமணியராகத் திகழ்கிறார் செந்திலாண்டவன்.
இந்தக் கடலை, "வதனாரம்ப தீர்த்தம்' என்பர். பக்தர்களின் கொடிய பாவங்களையும் தீர்த்து வைக்கும் அற்புதக் கடல் இது. கனகசுந்தரி என்ற தேவலோகப் பெண், பெருமாளின் அம்சமான ஹயக்ரீவரின் குதிரை முகத்தைப் பார்த்து கேலி செய்தாள். ஒருவர் அழகில்லை என்றால், அவர்களைக் கேலி செய்வது மாபெரும் பாவம். அந்தத் தவறுக்கு தண்டனையாக, அவளது முகம் குதிரை முகமாக மாறும்படியும், பூலோகத்தில் பிறக்கும்படியும், ஹயக்ரீவர் சபித்தார். அந்தப் பெண், மதுரையை ஆண்ட உக்கிரபாண்டியனின் மகளாக, குதிரை முகத்துடன் பிறந்தாள். குதிரை முகம் நீங்கி அழகு பெற, வல்லுனர்களை ஆலோசித்தாள். "திருச்செந்தூர் வதனாரம்ப தீர்த்தத்தில் நீராடினால், உங்கள் வதனம் அழகு பெறும்...' என அவர்கள் கூறவே, அங்கு சென்று நீராடினாள். முருகப்பெருமான் அருளால் சாப விமோசனம் பெற்றாள்.
கோவிலில் மோசடி செய்தவர்கள், இறைவனைப் பழித்தவர்கள், பெற்றோருக்கு சேவை செய்யாமல், அவர்களது சாபத்தைப் பெற்று கஷ்டப்படுபவர்கள், பிதுர் கடமை செய்யாதவர்கள் ஆகியோரை, கொடிய பாவம் வந்தடையும். அவர்களெல்லாம், இனி இவ்வாறு பாவம் செய்வதில்லை என்று உறுதியெடுத்து, செந்தூர் கடலில் நீராடி வந்தால், அவர்களுக்கு விமோசனம் கிடைக்கும்.
முருகன் கோவில்கள் பல, குறிஞ்சி நிலமான மலையில் இருக்க, திருச்செந்தூர் மட்டும், நெய்தல் நிலமான கடற்கரையில் அமைந்தது எப்படி என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. புராணங்களில் சொல்லப்படும், "கந்தமாதனப் பர்வதம்' என்ற மலை இங்கு இருந்தது. அந்த மலையைக் குடைந்து தான் ஆரம்பத்தில் திருச்செந்தூர் கோவில் கட்டப்பட்டிருந்தது. காலவெள்ளத்தில் இந்த மலை அழிந்து போக, தற்போதைய கடற்கரை கோவில் உருவானது. அந்த மலையின் ஒரு பகுதியே, தற்போதைய வள்ளி குகை என்கின்றனர்.
திருச்செந்தூர் என்ற சொல்லுக்கு பொருளையும் தெரிந்து கொள்ள வேண்டும். இவ்வூர், "ஜெயந்திபுரம்' என அழைக்கப்பட்டு, "செந்தில்' என திரிந்தது. "ஜெயந்தி' என்ற சமஸ்கிருதச் சொல்லின் தமிழாக்கமே, "செந்தில்'. அதனால் தான், திருச்செந்தூர் முருகனை, "செந்தில்' என செல்லப் பெயரிட்டு அழைத்தனர். "ஜெயந்தி' என்பதற்கு, "புனிதம்', "வளம்' என்று பொருள். புனிதமும் வளமும் இணைந்த வெற்றி நகராக திருச்செந்தூர் விளங்குகிறது. சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து கிளம்பிய செந்தீயில் இருந்து புறப்பட்டவர் என்பதால் அவர், "செந்தில்' ஆனார் என்றும் சொல்வர். சிவந்த தீயில் இருந்து பிறந்ததால், அவர், "சிவந்தியப்பர்' என்ற பெயரும் பெறுகிறார். சூரனாகிய பகைவனுக்கும் முக்தி தந்த தலம் என்பதால், அழியும் உடலைக் கொண்ட நாம், செந்திலாண்டவரிடம் சரணடைந்து விட்டால், முக்தியை வழங்கி, நற்கதி தருவார்.
வாழும் காலத்தில் செல்வ வளத்தையும், வாழ்வுக்குப் பின் முக்திக்கான வரத்தையும் பெற, செந்தூருக்கு வாருங்கள்.

No comments:
Post a Comment