Saturday, June 30, 2012

பிராண சக்தி விழிப்பு இரகசியம்


Posted On June 30,2012,By Muthukumar
பிராணாயாமம் என்பது யோகம் பழகுபவர்களிற்கு முக்கியமான ஒரு பயிற்சியாகும். இன்றைய நோக்கில் யோக பழகுங்கள் உடல் ஆரோக்கியம் வரும். பிராணாயாமம் பழகினால் உடல் ஆரோக்கியம் வரும் என்று யோகா நிலையங்கள் போதித்து வருகின்றன. இது உண்மையானாலும் இதை விட ஒரு அரிய விடயம் இதில் பொதிந்துள்ளது என்பதை விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம். 

முதலாவது பிராணன் என்பது மூச்சு அல்ல, மூச்சு பிராணனை உடலிலிருந்து கட்டுப்படுத்த உபயோகிக்கும் ஒருசாதனம் என்பதனை யோகம் பழக விரும்புபவர்கள் மனதில் இருத்த வேண்டும். மனிதன் பஞ்ச கோசங்களால் ஆனவன் என்பது யோக தத்துவம், சித்தர் தத்துவங்கள் படித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். இந்த பஞ்ச கோசங்களில் அன்னமய கோசம் என்பது எமது ஸ்தூல உடல், மனோமய கோசம் என்பது மனம் இவற்றை இரண்டையும் இணைக்கும், செயற்படுத்தும் சக்திதான் பிராணன், இந்த பிராணன் மேற்குறிப்பிட்ட அன்னமய, மனோமய கோசங்களில் பயணிப்பதற்கு உள்ள அமைப்புகள் தான் உடலில் உள்ள ஆதார சக்கரங்களும், 72000 நாடிகளும், ஆதாரங்கள் என்பன மொலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞ்சை, ஆறும் சகஸ்ரதளம் என்பது இந்த ஆறு ஆதாரங்களினது சேர்க்கையும் ஆகும். இவை ஒவ்வொரு சம்பிரதாயங்களுக்கு ஏற்ப மாறுபடும் (கோரக்கரின் வகைப்படுத்தல் பிரகாரம் எட்டு ), இவை உண்மையில் ஸ்துல உடலில் இருப்பவையல்ல, மனோமய கோசத்தில் பிராணனின் ஓட்ட ஒழுங்கிற்காக  சித்தர்களால் உருவாக்கப்பட்டவை, மன இயக்கத்தின் படி மூச்சு மாறும், மூச்சின் மாற்றத்தின் படி பிராணனின் ஓட்டம் மாறுபடும் என்பதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டதே உடலில் உள்ள சக்கரங்கள், இவை தற்போது போதிக்கப்படுவதுபோல் குறித்த இடத்தில் மாத்திரம் இருப்பவை அல்ல, இன்னும் பல சக்கரங்கள் உள்ளன, சித்தர்களால் வழங்கப்பட்டுள்ள சக்கர வரைபடம் ஒருவருடைய பிராணனை ஒழுங்கு படுத்தி பரிணாமத்தில் மேலே கொண்டு செல்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும். அதாவது முக்தி பாதையில் செல்வதற்கான வரைபடமாகும். 

அதாவது மஹா பிராணன் எனப்படு பிரபஞ்சச பிராணன் மூச்சு உள்ளிழுக்கும் பொது சகஸ்ராரம் உடாக வந்து ஒவ்வொரு ஆதார சக்கரங்களூடாக கிழிறக்கி மூலாதாரத்திற்கு சென்று பின் அங்கிருந்து இடகலை, பிங்கலை நாடிகலூடாகவும் உப நாடிகலூடாகவும் உடலிற்கு செலுத்தப்படுகிறது. இந்த பிராண சக்தியும் அன்னமய கோசம் ஏற்கும் உணவிலுள்ள சத்துகளும் சேர்ந்து உடலினதும், மனத்தினதும் இயக்கத்தினை சரிவர செய்கின்றது. உண்மையில் நோய்வந்து மருந்து உண்ணும் போது மருந்தும் உணவும் நோய்வந்த பகுதியினை மீளமைக்கவும் சரி செய்யவும் தேவையான மூலப்பொருளை வளங்குகின்றணவே தவிர குணப்படுத்துவதில்லை, அதனால் தான் ஆங்கிலத்தில் "Doctor treat; God cures" என்பார்கள், இந்த கடவுள் என்பது பிராண சக்தியே ஆகும். இந்த பிராண சக்தி உடலில் எவ்வளவு இருக்கின்றதோ அந்தளவிற்கு உடல் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். 

இந்த மஹா பிராணசக்தி ஒவ்வொருவருடைய பிராணமய கோசத்திலும் உறை நிலையில் வைக்கப்பட்டுள்ளது, ஏனெனில் மனிதன் கடவுளின் அமிசம், தான் கடவுள் என்பதனை மாயையினால் மறந்துவிட்ட கடவுள், அல்லது இப்படிசொல்லலாம் மஹா பிராண சக்தி எந்த விதத்திலும் கலப்பற்று சுயமாக இயங்கும் நிலை கடவுள் அல்லது பரா சக்தி, கட்டுப்பட்டு சுருண்ட நிலை மனிதன் அல்லது குண்டலினி. அதாவது இரண்டும் ஒன்றுதான் ஆனால் பிராணனின் விழிப்பு நிலை வித்தியாசம், இதுவே கடவிளிற்கும் மனிதனிற்கும் உள்ள வேறுபாடு. 

இதனை அறிந்த சித்தர்கள் பிராணமய கோசத்தில் உறங்கும் மகா பிராண சக்தியினை விழிப்படைய வைத்து ஒவ்வொரு மனிதனும் கடவுளாகும் நிலையினை அடைவதே யோக சாதனையின் குறிக்கோள். 

பிராணயாமத்தின் பயன்பாடு 
பிராணாயாமத்தின் போது உடலின் நாடிகள் மெதுவாக உஷ்ணமடைகின்றது, இது மெதுவாக மூலாதாரத்தில் உறைந்துள்ள மஹா பிரணனான குண்டலினியை உஷ்ணப்படுத்தி விழிப்படைய வைக்கிறது, இந்த வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது மஹா பிராணன் சுழுமுனை  நாடியினுடாக ஆக்ஞ்ச சக்கரத்தினை அடைந்து பின்னர் மூலாதாரத்திற்கு மீண்டு வருகிறது. இதுவே சுருக்கமான விளக்கம். ஆனால் சுழுமுனை விழிப்படையாத நிலையில் பிராணன் வேறு நாடிகளுடாகவும் செல்லும், இதனால் பல்வேறு வேண்டத்தகாத விளைவுகளும் ஏற்படலாம். 

எல்லாவித பிராணயாமங்களும் மகா பிராணனை விழிப்படைய செய்வதில்லை, சிலது பிராணன் பயணிக்கும் நாடிகளை சுத்தி செய்பவை, 

எப்படியாயினும் பிரணாயாம பயிற்சி தகுந்த குருவினை அண்டி செய்யவேண்டிய பயிற்சி என்பதனை பழக விரும்புபவர்கள் மனதில் இருத்துதல் அவசியம்.

No comments:

Post a Comment