Posted On June 29,2012,By Muthukumar
தென்னாடுடைய சிவனே போற்றி: எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்ற தெய்வீக வாசகங்களுக்கான ஆதாரங்களை நமது ஆன்மீகக்கடலில் வெளியிட்டிருக்கிறோம்.
சிவபெருமானது
அருளை பெருமளவு பெறவும்,விரைவாக பெறவும் நாம் சிவபெருமானது அவதார
நட்சத்திரமான திருவாதிரையன்று அண்ணாமலைக்கு வருகை தர வேண்டும்;முடிந்தால்
விரதமிருந்து(சாப்பிடாமல்) திருவாதிரை நட்சத்திரம் நிற்கும் நேரத்திற்குள்
கிரிவலம் செல்ல வேண்டும்;
விரதமிருக்க இயலாதவர்கள்,சிறிது பால் மற்றும் பழங்கள் சாப்பிட்டுவிட்டு,கிரிவலம் செல்லலாம்.
அவ்வாறு
கிரிவலம் செல்லும்போது,மஞ்சள் நிற ஆடையை அணிந்திருக்க வேண்டும்;இரு
உள்ளங்கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்திருக்க வேண்டும்;கிரிவலத்தை கிழக்குக்
கோபுர வாசலுக்குள் இருக்கும் விநாயகரை முதலில் வழிபட வேண்டும்.பிறகு தேரடி
முனீஸ்வரரை வழிபட்டு, அண்ணாமலையாரை கிழக்குக் கோபுர வாசலில்
அமைந்திருக்கும் சாலையில் இருந்தவாறே அவரை நோக்கி வழிபட்டுவிட்டு, துவக்கிட
வேண்டும்.
அஷ்ட
லிங்கங்களும் 14 கிலோ மீட்டர்கள் தூரத்திற்குள் அமைந்திருக்கின்றன.இந்த
தூரத்தை கடக்க சராசரியாக 4 முதல் 6 மணி நேரம் வரை ஆகும்.இந்த 4 முதல் 6 மணி
நேரமானது நமக்கு அருணாச்சலேஸ்வரர் வழங்கிய ப்ளாட்டின நேரம் ஆகும்.இந்த
நேரத்தில் நாம் ஒவ்வொரு விநாடியும் ஓம்சிவசிவஓம் என்றவாறு ஜபித்தவாறே
கிரிவலம் செல்ல வேண்டும்.
நாம்
அணிந்திருக்கும் மஞ்சள் நிற ஆடையில் நமது ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம்
சேமிப்பாகிக்கொண்டே வரும்; (இதை துவைத்தால்,அதுவரையிலும் சேமிப்பாகியிருந்த
மந்திர அலைகள் நீரில் கரைந்து போய்விடும்;எனவே,அண்ணாமலை கிரிவலம் வரும்
போது மட்டும் அணியும் விதமாக ஒரு மஞ்சள் ஆடையை தனியாக தயார் செய்து
வைக்கவும்)
நமது
இரண்டு உள்ளங்கைகளில் இருக்கும் இரண்டு ருத்ராட்சங்களிலும் நமது
ஓம்சிவசிவஓம் மந்திர ஜபத்தின் சக்தி சேமிப்பாகிக் கொண்டே வரும்;(நமது ஆயுள்
முழுக்க இவ்வாறு ஜபித்த பின்னர்,நமது மூன்றாவது தலை முறை வரையிலும்
இவ்வாறு ஓம்சிவசிவஓம் ஜபிக்க வைத்துவிட்டால்,நமது நான்காவது தலைமுறையில்
சிவனது கடாட்சம் பெற்ற ஞானி பிறப்பார்.ஒரு குடும்பத்தில் ஞானி
பிறந்தால்,அவரோடு முடிவடையும் முந்தைய 71 தலைமுறையினருக்கு முக்தி
கிடைக்கும்)
ஒவ்வொரு
லிங்கத்தின் சன்னதியிலும் சில நிமிடங்கள் அமர்ந்தும்,ஓம்சிவசிவஓம் ஜபிக்க
வேண்டும்.இந்த அஷ்ட லிங்கங்களின் சன்னதியிலும்,அருணாச்சலேஸ்வரர்
கோவிலுக்குள்ளும் மஞ்சள் நிறத் துண்டு விரிக்காமலும்(விரித்தாலும்
தப்பில்லை) ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ஏனெனில்,மலையே சிவபெருமானாக
இருப்பதாலும்,அவரை நாம் வலம் வருவதே கிரிவலம் எனப்படுவதாலும்,இந்த
அண்ணாமலையில் மட்டும் ஓம்சிவசிவஓம் எந்த நேரமும் ஜபித்துக்கொண்டே
இருக்கலாம்;
நாம்
அண்ணாமலையில் கிரிவலம் செல்லும்போது நமது முந்தைய மனிதப்பிறவிகளும்
நம்முடன் சூட்சுமமாக கிரிவலம் வரும்.இந்த தெய்வீக ரகசியத்தை நமக்கு
அகஸ்தியர் கண்டறிந்து சொல்லியிருக்கிறார்.இதன் மூலமாக நமது கர்மவினைகள்
விரைவாக தீர்ந்துவிடும்.
இனி திருவாதிரை நட்சத்திர நாட்கள்:
17.7.12 செவ்வாய் காலை 8.32 முதல் 18.7.12 புதன் காலை10.21 வரை;
13.8.12 திங்கள் மதியம் 3.48 முதல் 14.8.12 செவ்வாய் மாலை 5.42 வரை;
9.9.12
ஞாயிறு இரவு 11.01 முதல் 10.9.12 திங்கள் நள்ளிரவு 1.02 வரை( 10.9.12
சோமவாரம் + திருவாதிரை+ சூரியன் ஆட்சி பெறும் மாதமான ஆவணி மாதம்=மிக மிக
புனிதமான நாள்; சிவ கடாட்சம் பெருமளவு கிடைக்கக் கூடிய நாள் இது)
7.10.12 ஞாயிறு காலை 6.08 முதல் 8.10.12 திங்கள் காலை 9.54 வரை;
3.11.12 சனி மதியம் 1.14 முதல் 4.11.12 ஞாயிறு மதியம் 3.24 வரை;
30.11.12 வெள்ளி மாலை 5.19 முதல் 1.12.12 சனி இரவு 10.34 வரை;
27.12.12 வியாழன் நள்ளிரவு 3.24 முதல் 28.12.12 வெள்ளி நள்ளிரவு 5.45 வரை(திருவாதிரை பவுர்ணமி எனப்படும் ஆருத்ரா தரிசன நாள்!!!)
24.1.13 வியாழன் காலை 10.36 முதல் 25.1.13 வெள்ளி மதியம் 12.59 வரை;
20.2.13 புதன் மாலை 5.52 முதல் 21.2.13 வியாழன் இரவு 8.18 வரை;
19.3.13 செவ்வாய் நள்ளிரவு 1.11 முதல் 20.3.13 புதன் நள்ளிரவு 3.39 வரை;(20.3.13 முழுவதும் என கணக்கில் கொள்ளலாம்)
நந்தன ஆண்டின் சனிப்பிரதோஷங்கள்:
13.10.2012
27.10.2012
23.2.2013
9.3.2013
ஒரு
சனிப்பிரதோஷத்தன்று சிவாலயம் சென்றால்,ஐந்து ஆண்டுகள் தினமும்
சிவாலயத்திற்குச் சென்றதாக அர்த்தம்; இந்த நன்னாளில் அண்ணாமலைக்குச்
சென்று,பிரதோஷ நேரத்திற்குள் கிரிவலம் முடித்து,பிரதோஷத்தில் கலந்து
கொள்வது சிறப்பு;
அல்லது
நவகைலாசங்கள்
எனப்படும் நவக்கிரகங்களின் தன்மையோடு இருக்கும் சிவாலயங்கள்
நெல்லை,தூத்துக்குடி மாவட்டங்களில் இருக்கின்றன.இதில் சனிபகவானின் அம்சமான
சிவாலயமாக ஸ்ரீவைகுண்டம் இருக்கிறது.மிகச் சிறிய கோவில்;இந்த கோவிலுக்குள்
நுழைந்தாலே,மனதிற்குள் ஒருவித ஆழ்ந்த அமைதியை உணர முடியும்.இங்கு இந்த 6
சனிப்பிரதோஷங்களுக்கும் சென்று ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாமே?
திருநெல்வேலிக்கும் திருச்செந்தூருக்கும் இடையே ஸ்ரீவைகுண்டம் அமைந்திருக்கிறது.
No comments:
Post a Comment