Thursday, December 1, 2011

ஏமாற்று வேலை!

Posted on Dec 01,2011,By Muthukumar


ஏமாற்று வேலை!

நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும்தான் அதிகமான தோஷங்களை ஏற்படுத்துவார்கள்.

ஒரு ஜாதகனுக்குக் களத்திர தோஷம் அல்லது புத்திர தோஷம் இருக்கிறதா என்று
தெரிந்து கொள்ள, ஜாதகத்தில் அவர்கள் குடியிருக்கும் இடத்தைப் பார்த்தால் போதும்.

5ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் புத்திர தோஷம்.
7ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் களத்திர தோஷம்.
8ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் ஆயுளுக்குத் தோஷம்.
9ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தந்தைக்குத் தோஷம்.
4ஆம் வீட்டில் ராகு அல்லது கேது இருந்தால் தாய்க்குத் தோஷம்.

ராகு அல்லது கேது அமர்ந்திருக்கும் வீட்டிற்கு அதிபதியான கிரகம் வலிமையாக
இருந்தால் தோஷம் அடிபட்டுவிடும். வலிமையாக இல்லாவிட்டால் தோஷம் உண்டு.

அதென்ன சார் தோஷம்? சற்று எளிமைப் படுத்திச் சொல்லுங்கள்!

சொன்னால் போயிற்று!

களத்திரம் = திருமணம்
புத்திரம் = குழந்தைப்பேறு

திருமணம் தாமதமாவது அதாவது தள்ளிக்கொண்டே போகிறதென்றால், உரிய
காலத்தில் திருமணம் நடைபெறவில்லை என்றால் அதன் பின்னணியில் அவர்கள்
இருவரில் ஒருவர் இருப்பார்.

ஒரு பெண் மலர்ந்து வாசத்தை அள்ளித்தரும் காலம் எத்தனை ஆண்டுகள்?

36 ஆண்டுகள்

மலர்வதற்கு முன் அவள் குழந்தையாக இருக்கும் காலம் 13 அல்லது 14 ஆண்டுகள்

ஆக மொத்தம் 50 ஆண்டுகள்

அதோடு அவளுடைய பருவம் காலாவதியாகிவிடும். (expire ஆகிவிடும்)

பருவம் காலாவதியான பெண்ணை recondition செய்து பழைய நிலைக்கு - பார்ப்பவரை
மயங்க வைக்கும் நிலைக்குக் கொண்டுவர எந்தக் கொம்பனாலும் முடியாது.

போனது போனதுதான்.

விஷயம் அதுவல்ல!

ஒரு பெண்ணிற்கு அவள் மலந்து வாசம் வீசுகின்ற காலத்தில், உரிய நேரத்தில்
திருமணம் செய்து வைப்பதுதானே நல்லது

"அழகென்னும் விருந்தொன்று பரிமாறினேன்
பரிமாறும் நேரத்தில் சற்றுப் பசியாறினேன்"

என்று தன்னை மலராகவும், வந்த கணவனை வண்டாகவும் நினைத்து அவளால்
பாட முடியும். கணவனுக்குப் பரிமாறினவள் தன் பசியையும் போக்கிக் கொண்டதைச்
சொல்லும் அழகைப் பாருங்கள்.

திருமணம் தள்ளிக் கொண்டே போனால் அது தாமதக் கணக்கில் வரும்!

ஆகவே ஒரு பெண்ணிற்கு 18 வயதிலிருந்து 26 வயதிற்குள் (14 + 12) திருமணம்
நடைபெற வேண்டும். (அந்த 36ல் 2/3 பங்கை அவள் பசியாறுவதற்குக் கொடுங்கள்
சாமிகளா)


அதே போல திருமணமாகி மூன்று வருடங்களுக்குள் தம்பதியர்க்குக் குழந்தை
பிறந்து விட வேண்டும். இல்லையென்றால் அதுவும் தாமதக் கணக்கில் வரும்!

அந்தத் தாமதம் தோஷம் எனப்படும்.

அதீத தோஷமென்றால் என்ன ஆகும்?

அந்த வீட்டுக்குரியவன் நீசமாகி அல்லது களத்திரகாரகன் சுக்கிரன் நீசமாகி,
இந்த அமைப்பும் உடன் இருந்து கூட்டாகச் சொதப்புவது அதீத தோஷம் எனப்படும்

திருமணமே நடக்காது. திருமணம் நடந்தால் அல்லவா குழந்தையைப் பற்றிய பேச்சு!

தோஷத்திற்கு என்ன பரிகாரம்?

பிரார்த்தனை ஒன்றுதான் பரிகாரம்.

ராகு, கேதுவிற்குரிய தலங்களுக்குச் சென்று வழிபடுவது சாலச் சிறந்தது!

காசைவைத்துப் பரிகாரம் என்பதெல்லாம் ஏமாற்று வேலை!

No comments:

Post a Comment