Posted On April 06,2012,By Muthukumar
நெல்லை
மாவட்டம் சங்கரன்கோவில் தாலுக்காவில் அமைந்திருக்கும் கிராமம்
பாம்புக்கோவில் சந்தை ஆகும்.இந்த கிராமம்
சங்கரன்கோவில்,புளியங்குடி,கடையநல்லூர் இந்த மூன்று ஊர்களுக்கும் நடுவே
அமைந்திருக்கிறது.இந்த கிராமம் மதுரை டூ செங்கோட்டை ரயில் பாதையில்
அமைந்திருக்கிறது.தினமும் மதுரையில் இருந்து செங்கோட்டைக்கு காலை 7
மணி,காலை 11 மணி,மாலை 5 மணிக்கு பயணிகள் ரயில் புறப்படுகிறது.சுமார் 2.45
மணி நேரத்துக்குள் அது பாம்புக்கோயில்சந்தையை வந்தடைகிறது.மதுரையிலிருந்து
புறப்படும் அந்த பயணிகள் ரயில்
திருமங்கலம்,சிவகாசி,ஸ்ரீவில்லிபுத்தூர்,ராஜபாளையம்,சங்கரன்கோவில்,பாம்புக்கோவில்சந்தை
என்று பயணிக்கிறது.பாம்புக்கோவில்சந்தை ரயில் நிலையத்திலிருந்து ஒரு
கி.மீ.தூரத்தில் மாதவானந்தசுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.
தமிழ்நாட்டில்
அமைந்திருக்கும் ஜீவசமாதிகளில் அளவற்ற சக்திவாய்ந்த ஜீவசமாதி இந்த
மாதவானந்த சுவாமிகளின் ஜீவசமாதி ஆகும்.இந்த ஜீவசமாதியோடு மாதவானந்த
சுவாமிகளின் ஆசிரமும் அமைந்திருக்கிறது.பாம்புக்கோவில் சந்தை ரயில்
நிலையத்திலிருந்து ரயில் தண்டவாளத்தின் வழியாக(செங்கோட்டை பாதையில்) சுமார்
1 கி.மீ.தூரத்துக்கு பயணிக்க வேண்டும்.பயணித்ததும்,ஒரு சிறிய சாலை
குறுக்கே செல்லும்.அந்த சாலையில் கண்ணுக்கெட்டிய தூரத்தில் ஒரு
ஆலமரமும்,அதன் எதிரே ஒரு குளமும் தென்படும்.அதுதான் மாதவானந்த சுவாமிகளின்
ஜீவசமாதி ஆகும்.
இங்கே
குறைந்தது ஒரு மணி நேரம் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்;அவ்வாறு
ஜபிக்கத் தேவையான மஞ்சள் துண்டு.இரு ருத்ராட்சங்களுடன் வருவோம்;இந்த
ஆசிரமத்தில் ஆண்களுக்கும்,பெண்களுக்கும் தனித்தனியே தங்கும்
இடங்களும்,அன்னதான வசதியும் இருக்கின்றன.
யார்
ஒவ்வொரு அமாவாசை அல்லது பவுர்ணமியன்றும் இங்கு இரவில் தங்கி இவரை
தியானிக்கிறார்களோ,அவர்களுக்கு மாதவானந்த சுவாமிகளின் ஆசி கண்டிப்பாக
கிடைக்கும்.இங்கு தங்குவோர் செய்ய வேண்டியது:
இரவு
ஒரு மணி நேரமும்,அதிகாலை ஒரு மணி நேரமும் மாதவானந்த சுவாமிகளின்
ஜீவசமாதியில் மஞ்சள்துண்டு விரித்து ஓம்சிவசிவஓம்/ஓம்ஹரிஹரிஓம் ஜபிக்க
வேண்டியது மட்டுமே!!
ஓம்சிவசிவஓம்
No comments:
Post a Comment