Thursday, April 5, 2012

பூஜ்ஜியத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு அழைத்துச் செல்லும் திருக்குற்றாலநாதர் கோவிலில் சித்திரை 1 வழிபாடு

Posted On April 06,2012,By Muthukumar



முதன்மை சித்தர்கள் எனப்படும் பதினெண் சித்தர்கள் அடிக்கடி வருமிடமும்,ஏராளமான அரிய,அபூர்வமான மூலிகைகளும் நிரம்பியிருக்கும் இடம் திருக்குற்றாலம் ஆகும்.மனித குல வரலாறு வெறும் 20,00,000 ஆண்டுகளைக் கொண்டுள்ளது;அதற்கும் முன்பிருந்தே மனித குல நலனுக்காக இறைவனின் ஆணைப்படி சித்தர்களால் உருவாக்கப்பட்டுள்ள பல்வேறு மூலிகை மருந்துகளும்,பைரவரின் திருவிளையாடல்களும் நிகழ்ந்த இடம் திருக்குற்றாலம்.தன்னையும்,தனது பிரகாசமான ஆத்ம வாழ்க்கையையும்,சித்தராகும் ஆசையுள்ளவரையும் தன்பால் ஈர்த்துக்கொள்ளும் இடம் திருக்குற்றாலம்.தென்னாடுடைய சிவனே போற்றி என்ற வாக்கியத்தின் ஜீவ சிவ ரகசியத்தை தன்னுள் பொதித்து வைத்திருக்குமிடம் திருக்குற்றாலம்.இன்னும் பல நூற்றாண்டுகளுக்குப்  பின்னரே இந்த ரகசியத்தினை மனித குலம் உணரும்.அப்போது பூமியைத் தவிர,பிற கோள்களில் மனித குலம் குடியேறி பிரபஞ்சத்தைக் கைப்பற்றுமளவுக்கு முன்னேறியிருக்கும்.அப்போதும் மனித குலத்தின் பிரபஞ்ச வெற்றிக்கு திருக்குற்றால நாதரின் ஆசி மனித குலத்துக்குத் தேவைப்படும்.நம்பமுடியவில்லையா? நாம் மனித உருவில் இருந்து நாம் செய்யும் செயல்களும் தான் நம்பமுடியாமலிருக்கிறது.

உங்களின் வாழ்க்கையானது சோதனை,சிரமங்கள்,கஷ்டங்கள்,விரையங்கள்,அவமானங்கள்,தோல்விகள்,விரக்தி என்றே பல ஆண்டுகளாக ஓடிக்கொண்டிருக்கிறதா?


ஒரே ஒரு வழிபாட்டின் மூலமாக நீங்கள் தங்களின் அனைத்துக் கர்மவினைகளையும் கரைத்து,நிம்மதியும் செல்வ வளமும்,ஆத்மபலமும் கிடைக்க விருப்பமா?


பொருள் வளத்துடன் அருள்வளமும் ஒரே ஆண்டில் கிடைக்க வேண்டுமா?


நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்:


கர வருடம் நிறைவடைந்து,நந்தன வருடம் 13.4.2012 வெள்ளிக்கிழமை ஆரம்பமாக இருக்கிறது.இந்த தமிழ்ப்புத்தாண்டின் முதல் நாளான சித்திரை 1 ஆம் நாளான 13.4.2012 வெள்ளிக்கிழமை காலையில் நெல்லை மாவட்டத்தில் இருக்கும் திருக்குற்றாலத்துக்கு வந்து,இங்கிருக்கும் ஏதாவது ஒரு அருவியில் (ஐந்தருவி,செண்பகா தேவி அருவி,மெயின் அருவி) குளிக்க வேண்டும்;குளித்தபின்னர்,அணிந்திருக்கும் ஆடையில் ஏதாவது ஒன்றை அந்த அருவியில் விட்டுவிடவேண்டும்;

பிறகு,திருக்குற்றால நாதரின் கோவிலின் உள்பிரகாரத்தில் மனப்பூர்வமாக 16 சுற்றுக்கள் சுற்ற வேண்டும்.சுற்றியப்பின்னர், திருக்குற்றாலநாதர் கோவிலில் இருக்கும் அனைத்து இறை சக்திகளிடமும் புத்தாண்டு ஆசியைப் பெற வேண்டும்.சிவ வழிபாட்டுக்குரிய பொருட்களை  கொண்டு வந்து ஒவ்வொரு சன்னதியில் வழிபட வேண்டும்;பிறகு,கோவிலின் வாசலில் குறைந்தது 9 பேர்களுக்கு அன்னதானம் செய்ய வேண்டும்.பிறகு,காலை உணவு அருந்த வேண்டும்.
இவ்வாறு செய்துவிட்டு,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும்,வேறு யாருடைய வீட்டுக்கும் செல்லாமலும் நேராக நாம் நமது வீட்டுக்குச் சென்றுவிட்டால்,14.4.2013(ஞாயிறு)க்குள்ளாக நமது வாழ்க்கை ஒரு உச்சமான நிலைக்கு வந்துவிடும்!!!


மறக்காமல் 14.4.2013 ஞாயிறு அன்று நந்தன வருடத்துக்கு அடுத்த வருடமான விஜய வருட ஆரம்ப நாளன்றும் திருக்குற்றாலத்துக்கு வந்து,திருக்குற்றால நாதருக்கு நன்றிகளைத்  தெரிவிக்க வேண்டும்.இதுவும் இந்த தெய்வீகக் கடமைகளில் முக்கியமானது ஆகும்.((இது போல ஓவ்வொரு ஆண்டும் வருகை தரலாம்.)) இந்த தெய்வீக ரகசியத்தை நமக்காக அருளியவர் சிவகடாட்சம் திரு.மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்களின் மனசாட்சியும் & ஆயுட்கால சீடரும்,நமது ஆன்மீக குருவுமாகிய திரு.சிவமாரியப்பன் ஆவார்.அவருக்கு நாம் மானசீகமாக நன்றியை தெரிவித்து விட்டு,இந்த தமிழ்ப்புத்தாண்டுக்கு குற்றாலத்துக்குப் புறப்படுவோம்.

ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்
ஓம்சிவசிவஓம்

No comments:

Post a Comment