Posted on October 1, 2011
ஒரு பெண்ணுக்கு எத்தனை கைகள்? எல்லோருக்கும் தெரிந்தது, இரண்டு கைகள்தான். ஆனால் அவள் தினமும் எட்டு கைகள் பார்க்கக்கூடிய அளவுக்கு
கடுமையான வேலைகளை பார்க்க வே ண்டிய திருக்கிறது. அதை எடுத்துக்காட்டும்
விதத் தில்தான் பெண் தெய்வ மான காளி தேவியை எட் டுக்கைகளுடன் படைத்
தார்கள். அதைப் பார்த்து பெண்கள் பிரமிக்கிறார்க ளே தவிர, தங்களிடம் எட்டு
கரத்துடன் உழைக்கும் அளவிற்கு சக்தி இருக்கிறது என்பதை உண ரத்
தயங்குகிறார்கள்.. என்று புது விளக்கம் தருகிறார்கள், இன்றைய புதுமைப் பெண்கள்!
`இந்த விளக்கம் சூப்பராகத்தான் இருக்கிறது. இப்போது இந்தியாவே நவராத்திரி விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நவராத்திரி விழா பெண்களின்
சிறப்பை எப் படி எடுத்துரை க்கிறது என்ப தை சொல்லுங்க ளேன்..?’ என்று
கேட்டால், இவர்கள் தரும் பதில் சுவாரஸ்யமா னது. பெண்கள் பெருமைப்
படத்தக்கது.
“நவராத்திரி
விழா துர்க்கை அம்மனை சிறப்பிக்கும் விழா என்று அறிய ப்பட்டாலும்,
துர்க்கையின் பிரதிநிதிகளாக இந்த உலகில் வாழும் பெண்களை, பெண்மையை சிற
ப்பிக்கும் விழா அது என்பதுதான் உண்மை. அத னால்தான் இந்த விழா வில் சிறுமிகள் முதல் சுமங்கலி பெண்கள் வரை அத்தனை பேரும் கவுர வப்படுத்தப் படுகிறார்கள்.
அன்பு, கருணை, தாய்மை, தைரியம், எதிரி களை அழிக்கும் ஆற்றல், அழகுணர்வு, க லை உணர்வு, கர்வம், கனிவு போன்ற ஒன் பது விதமான குணங்கள்
எல்லா பெண்க ளிடமும் இருக்கவேண்டும். இத்தனை தன்மை களையும் கொண்ட
பெண்களால் தான் இந்த உலகில் சிறப்பாக வாழ முடி யும். அதை பிரதிபலிக்கும்
விதத்தில்தான் நவராத்திரியில் துர்க்கை அம்மனை ஒன் பது குணங்கள் கொண்டவளாக,
ஒன்பது விதமாக அல ங்காரம் செய் கிறோம். இந்த விழாவினை பெண்கள் கொண்டாட
தயாராகும் போதே இந்த ஒன்பது குணாதிசயங்களும் தங்களிடம் இருக் கிறதா என்று
ஆத்ம பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதாவது ஒன்று தங்களிடம் இல்லாவிட்டால்கூட
அதை உணர்ந்து, இந்த விழாக் காலத்தில் அந்த குணத்தையும் உரு வாக்கி முழுமை
நிறைந்த பெண் களாக தங் களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.
அன்பு,
பெண்மைக்கு பெருமை சேர்க்கும் மிகப் பெரிய சொத்து. பெண்களிடம் எப்போதும்
அன் பு வற்றாத ஜீவநதிபோல் பெருகிக்கொ ண்டே இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்
காட்ட த்தான் துர்க்கையை அன்பின் சின்ன மாக நவராத்திரியில் ஒருநாள்
அலங்காரம் செய்து வழிபட்டு மகிழ் கிறோம். கருணை என்றாலே நமக்கு கடவுளும்,
தாயும்தான் நினைவுக்கு வருவார்கள். இந்த உலகில் வாழு ம் ஒவ் வொரு பெண்ணும்
கருணையின் வடிவம்தான். பெண் எப்போதும் கரு ணைமிக்கவளாக இருக்கவேண்டும்
என்பதற்காகத்தான், துர்க்கை யை ஒருநாள் கருணை நிறைந்தவளாக உருவகப்படுத்தி,
அலங்காரப் படுத்தி நவராத்திரி வழிபாடு செய்கிறோம்.
தாய்மை பெண்களின் தனிப்பெரும் சொத்து. தாய்மை உணர்வால் பெண், எல்லா
உயிர்களையும் தன் உயிராக நினைக்கும் பக்குவ நிலைக்கு உயர் கிறாள். அதனால்
துர்க்கையை தாய் மையின் சின்னமாகவும், நவராத் திரியில் பெருமைப்படுத்தி,
பெண்க ளின் சிறப்பை மேம்படுத்திக்கொள் கிறோம்.
பெண்களிடம்
கருணை, கனிவு, அன்பு போன்ற அனைத்தும் இருந்தாலும் அவர்கள் அநீதிகளைக்
கண்டால் சின ந்தெழுந்து அதர்மக்காரர்களை அழிக்க தயங்கக்கூடாது என்பதை
துர்க் கை வழிபாடு நமக்கு காட்டுகிறது. அநீதி நிகழ்ந்தபோது அந்த துர்க்கை
யே சினந்தெழுந்து அசுரர்களை அழித் தார் என்று கூறி, பெண்களிடம் எப்போதும்
போராட்டக்குணம் இருந்து கொண்டிருக்கவேண்டும் என்று உணர்த்தப்படுகிறது.
அதனால்தான் துர்க்கை மகிஷனை வதம் செய்ததை நினைவுகூர்ந்து,
அவளை மகிஷா சுரமர்த்தினி யாக வழிப டுகிறோம்…” என்று நீண்ட விளக்கம்
தருகிறார்கள், ஆன்மிக ஆர்வலர்களான பார்வதி பாலசுப்பிரமணியனும், ஸ்ரீ
ரஞ்சினி மோகன் குமாரும்!
“அலங்காரம்
என்பது பெண்மைக்கே உரிய விஷ யம். அழகுணர்ச்சி கொண்ட பெண், தான் நேசி
க்கும் எல்லாவற்றையும் அழகு படுத்திப்பார்ப் பாள். தனது குழந்தையையும்
அழகுபடுத்துவாள். தான் வழிபடும் கடவு ளையும் அலங்காரத்தால்
அழகுபடுத்துவாள். பெண்களிடம் இருக்கும் அழ குணர்ச்சி நாளுக்கு நாள் வளர
வேண்டும் என்ப தற்காகத்தான் நவராத்திரி விழாக்காலத்தில் ஒன்பது நாளும்,
ஒன்பது விதமாக துர்க்கையை பெண்கள் அலங்காரம் செய்கிறார்கள். அந்த அலங்காரம்
அவளது திறமையை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் மகிழ் ச்சியையும்,
மற்றவர்களிடம் இருந்து பாராட்டையும் பெற்றுத் தருகிறது. நாங்கள் நவ
ராத்திரியில் துர்க்கையை அலங்காரம் செய்வதில் எப் போதும்
தனிக் கவ னம் செலுத்து வோம். வருட த்திற்கு வருடம் அதில் புதுமைப டைத்து
எங்க ளுக்குள் இருக்கும் அழகு படுத்தும் திறமையை வள ர்த்துக்கொண்டிருக்கி
றோம்..” என்கிறார், சுஷ் மா.
நவராத்திரி பட்சணங்கள் பக்கம் தன் பேச்சை திருப்புகிறார், சுபாஷினி.
“மனிதர்கள்
உயிர்வாழ முக்கியமானது உணவு. சுவையும், குணமும், நிற மும், புதுமையும்
இருந்தால்தான் அதை நாம் விரும்பி உண்போம். பட்சணங்களில் சுவையைவிட
ஆரோக்கியம் மிக முக் கியம். பெண்கள் அனைவரும் சமை யலை
கற்றுக்கொள்ளவேண்டும். அவர் கள் சமைக் கும் உணவில் புதுமை, ருசி,
ஆரோக்கியம் போன்றவை இருக்க வேண்டும் என்பதை, நவராத்திரி போ ன்ற பண்டிகைகள்
மக்களுக்கு கற்றுத் தரு கின்றன. ஒன்பது நாளும் கடவுள் பெயரால்
வெவ்வேறுவிதமான உணவுகளை சமைத்து, கடவுளுக்கு படைத்து நாம் உண்ணுகிறோம்.
இப்போது டீன்ஏஜ் பெண்களில் பலர் தங்களுக்கு சமைக்கத் தெரியாது என்று
சொல்வதை பேஷனாகக் கொண் டிருக்கிறார்கள். அது சரியல்ல, எல் லோரும் சமைக்க
கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை பண்டிகை கா லங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன.
நான் ஒவ்வொரு பண்டிகை கால த்திலும், குறைந்தது நாலைந்து புதிய
உணவுவகைகளையாவது கற்றுக் கொ ள்வேன்” என்கிறார், அவர்.
கொலு வைப்பதன் தத்துவம் உணர்த்தும் விஷயங்களை புதுமையாக விளக்குகிறார், ஆகாங்ஷா.
“கொலுவைப்பது என்பது பொம்மைகளை வரிசையாக அடுக்கிவைத்து, அழகு
பார்ப்பது என்றுதான் பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வல்ல
உண்மை. கலைநயம், சேகரிப்பு திறன், அழகின் வெளிப்பாடு, பொறுமை, நிறங்களின்
தன்மையை புரிந்து கொ ள்ளல், படைத்தல், பாது காத்தல் போன்ற பல விஷயங்களை
கொலு நமக்கு சொ ல்லித் தருகிறது.
பொம்மை
தயாரிப்பது என்பது குடி சைத் தொழில்போல் லட்சக்கண க்கான குடும் பங்களுக்கு
வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. விழாக் களின் பெயரில் பொம்மைகளை வாங்கி,
அந்த குடிசை தொழிலா ளர்களை ஊக்குவிப்பது
நம் கடமையாகும். ஒரு பெண் பொம் மை களைவாங்க முன் வருகிறாள் என் றாலே, அவள்
அதை உருவாக்கும் கலை ஞர்களுக்கு வாழ் வளிக்கும் நல்ல மன தை
பெற்றிருக்கிறாள் என்று அர்த் தம். ஒரு பெண்ணிடம் எப்படிப்பட்ட கலை நயம்
இருக்கிறது என்பதை அவள் பொம் மைகளை தேர்ந்தெடுப்பதை வை த்து
கண்டுபிடித்துவிடலாம். வாங்குதல் , சேகரித்தல், அவைகளை அடுக்குதல்,
பாதுகாத்தல் போன்றவை களில் ஈடுபடும்போது அந்த பெண்ணிடம் நிதானம், பொறுமை
போன் றவை ஏற்பட்டுவிடுகிறது. பொம்மைகளை வாங்கும் விதத்திலும், அவைகளை
வரிசைப்படுத்தி கொலுவில் அடு க்கும்
விதத்திலும் நிறங்களை வகை ப்படுத்தும் அறிவு எந்த அளவுக்கு அந்த பெண்ணிடம்
இருக்கிறது என்பதை புரி ந்துகொள்ளலாம். அதனால் கொலு என்பது பார்த்து
ரசிக்கும் ஒரு விஷயம் அல்ல. பெண்களின் அழகுணர்ச்சி, உள் ளத்தின் உணர்வுகள்,
மகிழ்ச்சி, உதவும் தன்மை போன்ற பல விஷயங்களை யும் கொலு
வெளிப்படுத்துகிறது..” என் கிறார்.
“பெரும்பாலான விழாக்கள் பெண்களுக்கு வேலை சுமையை உருவாக் கிவிடும். வேலை சுமை உருவாகும்போது, பெண்களுக்கு ஓய்வற்ற உழைப்பும்,
சோர்வும் ஏற்பட்டு அந்த வி ழாவை மகிழ்ச்சியற்றதாக மாற்றிவி டும். ஆனால்
நவராத்திரி விழா பெண் களின் அழகு, ஆட்டம், மகிழ்ச்சிக்கு அதி க
முக்கியத்துவம் கொடுக்கிறது. பெண் கள் அழகழகாக உடை அணிந்து, ஆடிப் பாடி
மகிழ்வார்கள். வாழ்க்கையை சுவா ரஸ்யப்படுத்த நடனங்கள் மிக இன்றிய மையாதவை.
பெண்கள் சிறுவயதில் இருந்தே கலாசார நடனங்களை கற்றுக் கொள்ளவேண்டும்.
வாழ்க்கையின் எல்லா காலங்களிலும் அந்தந்த விழாக்களின்தன்மைக்கு தக்கபடி
அவர்கள் ஆடவேண்டும். மகிழ்ச்சியாக வாழவேண்டும். ஆடவேண்டும் என்றால்,
ஆரோக்கியமான உடல் தே
வை. அதனால் அழகு, ஆரோக் கியம், மகிழ்ச் சி போன்றவைகளை எல்லாம் பெண்களு
க்கு தரும் விதத்திலும், பெண்மையின் சிறப்புக ளை ஆண்கள் உணர்ந்து
அவர்களுக்கு மதி ப்பு தரும் விதத்திலும் நவராத்திரி பண்டிகை இருக்கிறது.
அது கடவுள் வழிபாட்டோடு இந் த உலகுக்கு உணர்த்தப்படுகிறது..” என்கி றார்,
சஞ்சனா.
பண்டிகைகளில்
பக்திக்கு அப்பால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா! நவராத்திரி விழா இன்றைய
பெண்களுக்கு இருக்கவேண்டிய ஒன்பது குணாதிசயங்களைக் கொண்ட வித்தி யாசமான
முகங்களை அழகாக எடுத்துக் காட்டுகிறது என்பது பெண்களுக்கு பெருமைதரும்
விஷயம் தான்!
நன்றி-தினத்தந்தி
No comments:
Post a Comment